தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

11/30/2012

எது எப்படி இருந்தாலும் ஜெயிக்கணும்....!ஜெயிப்பேன்....!

நீ என்னவாக விரும்புகிறாய்...?  ஒரு செமினாரில் எழுப்பி கேட்ட கேள்வி இது. நான் திரு திரு வென்று முழித்துக் கொண்டு இருந்தேன்.....என்னை விட்டு விட்டு பக்கத்தில் இருப்பவரை எழுப்பி கேட்டார்.....வாட் டூ யூ வாண்ட் டூ பிக்கேம் அ? அவர் சொன்னார்.... நான் ஒரு தொழிலதிபர் ஆக விரும்புகிறேன்.......! விடவில்லை இப்போது நீங்கள் அதற்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்...?


இப்போது இருவருமே திரு திருவென்று முழித்தோம்.....

தொழிலதிபர் ஆக விரும்பியவரிடம் அதற்கான திட்டமிடல் இல்லை....என்னிடமோ குறிக்கோளே இல்லை...? இருவருமே எப்படி ஜெயிக்கப் போகிறீர்கள்....? மெளனமாய் நின்றிருந்தோம்.......

 குறிக்கோள் இல்லாமல் எங்கே பயணிக்கிறீர்கள்? புரிதலோடு வாழ்க்கையின் நிலையாமையை விளங்கிக் கொண்டிருக்கும் நாம் வாழும் வரை வாழ்ந்துதான் ஆக வேண்டும்......அதில் மாற்றமில்லை. இடைப்பட்ட இந்த நேரத்தில் எங்கு பயணிக்கிறோம்...என்று தெரியாமலேயே செல்வதை விட.... இன்னவாக ஆவேன்....என்ற எண்ணத்தோடு....அதற்கான செயல் திட்டத்தை அன்றாடத்தில் எப்படி கடைபிடிக்கிறோம் என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டாமா? முகத்தில் அறைந்தார்

புகழ் என்ற ஒன்றிலும் புகழ்ச்சி என்ற ஒன்றிலும் மட்டுப்பட்டு நின்றவர்கள் வாழ்வில் படுகேவலமாக தோற்று இருக்கிறார்கள். மேலும் ஒரு திறமைசாலியை 100பேர் கேவலப்படுத்தினாலும் திறமைசாலியின் திறமைகள் வெளிப்பட்டே தீரும். இந்த இடத்தில்தான் ஒரு விசயம் கவனமாக அறியப்படவேண்டும் செல்ப் எஸ்டீம் என்ற தன்னைப்பற்றிய சுய மதிப்பீடு சரியாக இருக்கிறதா என்பது உணரப்படவேண்டும். இதை சரியா புரிஞ்சுக்க தெரியலேன்னா.. ஓவர் கான்பிடென்ட் என்ற கிணத்துக்குள்ள போய் விழ வேண்டியதுதான்.

தெளிவான குறிக்கோள்கள் மேலும் அதற்கான திட்டமிடல்கள் அது நோக்கிய அன்றைய நகர்வு அதாவது.. எனது குறிக்கோளுக்காக ஒவ்வொரு தினமும் நான் என்ன செய்கிறேன்? என்பதும் முக்கியமாகிப் போகிறது. போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையில் தடைகள் ஓராயிரம் இருக்கத்தான் செய்கின்றன....

அந்த தடைகளும் சதையினை தாண்டி எலும்பினை குத்தும் வேதனையை கொடுக்கின்றது....இங்கே தானிருக்கிறது சூட்சுமம் ...சாதரணமாக இங்கே தான் துவண்டு விழுந்து சோர்ந்து விடுகிறோம்... ஆனால் மாறாக ஒரு வித திமிரும் கோபமும் இங்கேதான் வரவேண்டும்....!

எங்கே விழுகிறோமோ.. அங்கே விசுவரூபம் எடுத்தாக வேண்டும். நம்மை சிதைப்பதற்கென்றே எதிர்மறை சிந்தனையாளர்களும், சூழ் நிலைகளும் கூட விசுவரூபம் எடுக்கும்...ஆனால்....ஏய் வாழ்க்கையே.... நீ என்னை என்ன செய்து விடுவாய்...? கோடாணு கோடி மனிதர்கள் வந்தனர் சென்றனர்...! எம்மை சுற்றியிருக்கும் எல்லா உயிர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறதெனில் எனக்கான வாழ்க்கையை மறுத்து விடுமா ? இந்த பூமியின் சுழற்சி...

என் பாதச் சுவடுகளின்

வெறித்தனமான அழுத்த ஓட்டங்களின்

விளிம்பில்..காத்திருக்கிறது...

நான் கடக்கப் போகும்..இலக்குகள்

வெளிச்சமும் இருளும்

குழப்பி கிடைத்த

மங்கலான ஒரு அந்திமம்

தந்த இருட்டின் நுனியில்

வெடித்து சிதறும்

எனக்கான சூரியக் கதிர்கள்....!

திட்டமிடலும், செயலாக்காலும் மட்டுமல்ல....தோழா.. சரியான தேர்ந்தெடுத்த நட்புகளும் நமது வெற்றியின் காரணிகள். வாழ்வில் சில பொழுது போக்குக்காகவும், நம் மூளையை சுத்திகரித்துக் கொள்ளவும்தான்...அதுவே வாழ்க்கையாகக் கொண்டால் அது பெரும் அபத்தம்.

என்னிடம் நண்பர் ஒருவர் கேட்டார்.. தினமும் பதிவெழுதி விடுகிறீர்களே...அன்றாட வேலைகளுக்கு நடுவே உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று....! நண்பரின் கூற்று தவறு நான் தினமும் பதிவுகளை வெளியிடுகிறேன்... ஆனால் தினமும் எழுதுவது கிடையாது....ஒரு வார இறுதியின் கேளிக்கைகளுக்குப் பிறகான பின்னிரவில் பெரும்பாலும் விழித்திருப்பேன்...தோன்றுவதை எல்லாம்....அப்போதே எழுதுகிறேன்......மேலும் தனித்து இருக்கும் நேரங்கள் எல்லாம்.....ஏதாவது தோன்றிக் கொண்டேதானிருக்கிறது....!

என் எழுத்துக்கான கருவை நான் பெரும்பாலும் புறத்தில் தேடுவது மிகக் குறைவு........! அதனால் என்னோடு நானிருக்கும் நிமிடங்களை வடிப்பதற்கு அதிக பிராயத்தனம் செய்வது இல்லை. சொல்லி முடித்தவுடன்....ஏற இறங்க பார்த்து விட்டு போய்விட்டார் அவர்.

பாருங்க செமயா ட்ராக் மாறி போய்ட்டேன்...........

வாழ்வின் ஓட்டத்தில் வாள் வீசும் வீரனாய் போரடிக் கொண்டுதான் இருக்கிறோம்... ! இதில் வெற்றி பெற்றவர்கள் எல்லோருக்கும் ஒரே ஃபார்முலாதான் இருந்திருக்கிறது....

1) நேரம் தவறாமை

2) துல்லியமான இலக்கு

3) இலக்கு நோக்கிய பயணம்

4) செயல் திட்டங்களும் செயல்படுத்தலும்

5) தெளிவு

இப்படி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஆசியாவின் சூப்பர் தொழிலதிபர் கலாநிதி மாறன்.....இவரது வெற்றிக்குப் பின்னால்..அரசியலும், பணபலமும் இருப்பதாக மிகைப்பட்ட பேர்கள் நினைக்கிறார்கள்...அப்படியில்லை.....கலாநிதி மாறன் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தொழிலதிபராகி இருப்பார்......காரணம்....அவருடைய பார்வையும், இன்னோவேட்டிங் ஐடியாவும், அட்டிடியூட் என்னும் மனப்பாங்கும்தான் காரணம்...........

வெற்றிக்கான ஒரு வெரி சிம்பிளான சூத்திரம்: நமக்குள்ள பாஸிட்டிவ் எண்ணங்கள வளர்த்துகிறதோட, அடுத்தவங்கள பத்தின நெகட்டிவ் தாட்ஸ மைன்டல இருந்து ரிமூவ் பண்றது.....!

ஆமாம் சார்.....ரொம்பவும் மன உறுதியோட மனசு புல்லா நம்பிக்கையோ வாள் வீசிக் கொண்டிருக்கும் போராளிதான் நானும்...

எது எப்படி இருந்தாலும் ஜெயிக்கணும்....!ஜெயிப்பேன்....!

நீங்களும்தான் பாஸ்....ஜெயிக்கணும்...ஜெயிப்பீங்க...!

ஏன்னா நமக்குள்ளே இருக்குறது சாதாரண தில் இல்ல செம தில்லு.....!

11/29/2012

தமிழில் பேசினால் மதிப்பதே இல்லை




யாம் பிறந்து விழுந்த பொழுதினில் எம்மில் இருந்து தெரித்து விழுந்த ஒலியாய் வெளிப்பட்ட தாயே.....என் தமிழே...! மானிடரின் சப்தங்கள் மட்டுமே மொழியாய் போன ஒரு உலகத்தில் எம்மின் உணர்வுகளை எல்லாம் வெளிக் கொணர சப்தமாய் வெளிப்பட்டு உன்னை மொழியென்றும் எம் தாயென்றும் தமிழென்றும் கொண்டோம்.

உலகம் மொழியறியா காலத்தில் கவிசெய்தோம் நாம். இயல், இசை, நாடகம் என்று உன்னில் எத்தனை எத்தனை வித்தைகள் செய்தோம். உணர்வுகளை சரியாக வெளிப்படுத்த எம்மிடம் சப்தம் இருந்ததால், சப்தமென்ற தமிழிருந்தால் வலியையும், சந்தோசத்தையும், துக்கத்தையும், சரியான பாகத்தில் எம்மால் வெளிக்கொணர இயன்றதால் மானிடரின் உணர்வு விளங்கும் தெளிந்த நிலையை எய்தினோம். ஒப்பற்ற ஒரு இனமாய் உலகுக்கு அறிமுகமானோம்!

காலங்கள் தோறும் மனிதர்கள் வந்தனர். உம்மை கற்றுத் தெளிந்து தம்மை புலவர் என்று தாமெ தம்மையே விளித்துக் கொண்டனர். உன்னைக் கொண்டு கவிசெய்தனர், புதினம் செய்தனர், பாடல் செய்தனர் இசை செய்தனர். உன்னைக்கொண்டு ஒரு வாழ்வு உம்மால் ஒரு வாழ்வு...என்று காலங்கள் தோறும் நீ வளர்த்திருக்கிறாய் மனிதர்களை. எத்துனை சுவை கொண்டவள் நீ....அடுக்குத் தொடராய், இரட்டைக் கிளவியாய், உணர்வுகளை பிரதிபலிக்கும் அணி இலக்கணமாய், வார்த்தைகளை அளவிடும் மாத்திரைகளாய்....எம்மவரின் வாழ்வில் எத்தனை எத்தனை பங்கு கொண்டாய்....

காலங்கள் தோறும் உன்னைக் கொண்டு இம்மனிதரின் வயிற்றுப்பசி அடங்கியது தாயே....! உன்னை சிறப்பாக்க, உம்மை வாழவைக்க உனக்கு விழா எடுக்க, செம்மொழியாய் நீ சிறந்தவள் என்று உலகிற்கு கட்டியம் கூறி அறிவிக்க மறந்து அரசியலாய், சுய நோக்காய்..பகட்டாய் உன்னை பகடி விளையாடி இருக்கிறார்கள் அம்மா...!

தச்சு வேலை செய்யும் கோவிந்தனுக்கும், கட்டிட வேலை செய்யும் மாரியம்மாவிற்கும், அதோ அடுத்த தெருவில் மாம்பழம் வியாபாரம் செய்கிறாளே...பொன்னம்மா பாட்டி இவர்கள் என்ன வேற்று கிரகவாசிகளா? இவர்களுக்கு தமிழின் செம்மையை யார் விளக்குவார்கள்...?

கம்பனின் சொல்லாடலை அவர்களின் தன்மைக்கேற்ப எப்படி விளங்குவார்கள்? அப்படியே விளக்கினாலும்...வெற்று வயிறும், வெறுமையான எதிர்காலமும் தமிழின் செம்மையை இவர்களின் செவிகளுக்குள் செல்ல அனுமதிக்குமா? தெருக்குத்தெரு தமிழ்ச்சுவையூட்டும் நிகழ்ச்சிகள் நடை பெற்றிருக்க வேண்டாமா? பாமரனுக்குப் புகட்டாமால் அறிஞர்களே பேசி சிரித்து, மகிழ்ந்து கொள்ள தமிழ் என்ன தனிப்பட்ட சொத்தா? உங்களின் ஆய்வுகளை எல்லாம் எதோ ஒரு பல்கலைகழகத்தில் நிகழ்த்தி அதன் மூலம் நம் மொழியின் வளத்தை நிறுவ முடிவுகள் எடுத்து அரசு நடைமுறை படுத்தியிருக்கலாமே.....? இதற்கு எதுக்கு கோடிகளில் செலவு....? மாறாக தமிழனின் வாழ்க்கை மிளிர அதை செலவு செய்திருக்கலாமோ.....?

அந்தோ பரிதாபம் எம்மொழிக்கான விழா...அதற்கு ஒரு பாடல்....இதிலேயே தெரிந்து விட்டது தமிழனின் தமிழ்ப்பற்று. எம்மண்ணின் மணத்தை பாடலிலும் பாடல் வரிகளிலும் கொணரவுமில்லை, பட்டி தொட்டி எங்கும் பாடல்கள் ஒலிக்கவுமில்லை. தமிழ் என்பது ஒலி வடிவம் கொண்ட, எழுத்து வடிவம் கொண்ட..இலக்கணத்தில் சிறந்த...தொன்மையான மொழி மட்டுமல்ல..அது நமது கலாச்சாரத்தில் ஊறிய, வாழ்வில் அங்கமான உயிரோடு கலந்த ஒரு விசயம்.

செம்மொழியின் பாடலும், தமிழனுக்கு சம்பந்தம் இல்லாதது அதில் பயன்படுத்திய வரிகள் வேண்டுமானால் தமிழோடு தொடர்புகொண்டிருக்கலாம் ஆனால் இசையும், இசைத்த கருவிகளும் தமிழோடு தொடர்பற்றது. ஒரு தாய் தன் குழந்தையை தாலட்டும் இசையில் நாம் எந்த சிரத்தையும் எடுக்காமல் தமிழ்த்தாய் வெளிப்பட்டு ஒரு வித உற்சாக அமுது படைப்பாள். ஏற்றம் இறைக்கும் உழவனும், நாற்று நடும் பெண்களுகம், ஆண்களும் இசைக்கும் பண்ணில் ஒளிந்து நின்று எட்டி எட்டிப் பார்த்து நம்மை மகிழ்விப்பாள் எம் தமிழ்த்தாய். அவளுக்கென்று ஒரு கலச்சாரம் உண்டு அந்த கலாச்சாரத்தை மேற்கித்திய இசையின் மூலம் அழிக்க நினைத்திருப்பது ஒரு கொடூரமான செயல்
யூனிகோட் என்னும் அச்செழுத்தினை இனி அனைவரும் பயன்படுத்தவேண்டும்....சரி....

வலைப்பூக்களில் தமிழ் மிளிர்கிறது .....சரி

உலகெமெங்கும் இருந்து தமிழறிகள்......கட்டுரைகளை சமர்ப்பித்தனர்......சரி..

மக்கள் கூட்டம் கரை புரண்டது........சரி

தமிழில் கையெழுத்திட அனைவரும் முன் வரவேண்டும்...சரி...

இனி தொடர்ந்து செம்மொழி மாநாடு நடக்கும்.....சரி....

தனியார் தொலைக்காட்சி நிகழ்சிகளில் இயன்ற வரை தமிழ் புகுத்தப் பட வேண்டும் என்றும் லேகியம் விற்கும் விற்பன்னர்களுக்கும், ராசிக்கல் விற்கும் வியாபாரிகளுக்கும், தொடர் நாடகம் என்னும் ஒரு மனோதத்துவ தாக்குதல் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும் நேரம் ஒதுக்கும் இவர்கள்....அதிகபட்ச மக்கள் பார்க்கு நேரங்களில் செம்மொழியான எம் தாய்மொழியின் பெருமை சொல்ல நேரம் ஒதுக்க ஏதேனும் சட்டம் உள்ளதா?

எல்லா தமிழ் ஊடங்களும் தமிழின் சிறப்பினை கூற தனியே பக்கங்கள் ஒதுக்க வேண்டும் என்று கட்டளைகள் எதேனும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா? மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் மொழியின் வளமறியும் நிகழ்வுகள் ஏதேனும் உண்டா?

தமிழ் மொழி இல்லாத விண்ணப்ப படிவங்கள் எல்லாம் செல்லாது என்று அறிவிக்க முடியுமா?

தமிழரிடம் தமிழில் பேசுங்கள் என்று கண்டித்து சொல்லா ஏதேனும் வழிவகை உண்டா.....?

ஒரு அலுவல் விசயமாக வேறு அலுவலகத்திற்கு சென்ற நான் ...அங்கு நான் சந்திக்க வேண்டிய மனிதரும் தமிழர்தான் என்று அறிந்து ...தமிழா நீங்கள் என்று கேட்க யெஸ் என்று இறுக்கமாய் பதில் சொல்லி தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையாடிய போது உடையில்லாமல் நின்று பேசியது போல உணர்ந்தேன்.....

இன்னும் சில தமிழர்கள் நாம் தமிழில் பேசினால் மதிப்பதே இல்லை....ஆங்கிலத்தில் பேசினால் மரியாதை சரளமாக வரும்.....எதாவது வேலை ஆகவேண்டும் அல்லது புகார் கொடுக்க வேண்டும் என்றால் உரக்க ஆங்கிலத்தில் பேசினால் ...பயப்படுகிறார்களா இல்லையா....? மனோதத்துவ ரீதியாக மனதிலே ஒரு எண்ணம் எடுத்துக் கொண்டு ஆங்கிலத்தில் பேசினால் பயப்படும் நிலை மாற...ஏதாவது விளக்க வகுப்புகள் எடுக்கப் போகிறீர்களா....செம்மொழி விழா நடத்தியவர்கள்.....?

மொழிக்கான விழா எடுத்ததற்கு வாழ்த்துச் சொல்லும் அதே நேரத்தில் தமிழை மேம்படுத்தும் வேளையில்..........தமிழனை மேம்படுத்தவும் ஏதாவது செய்யுங்கள் பெரியவர்களே.....!

தமிழ்....பேச.....தமிழன் இருக்க வேண்டும்...முதலில் இல்லையெனில் ஆராய்ச்சி முடிவுகளையும் சிறப்புகளையும்....அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டிய நிலை வரும்...


போற்றுவார் போற்றட்டும்...

புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்...!

தொடர்ந்து செல்வேன்....

ஏற்றதொரு கருத்தை...

எனதுள்ளம் ஏற்றதால்..

எடுத்துரைப்பேன்....எவர்வரினும்....

நில்லேன்....! அஞ்சேன்...!

11/08/2012

DON'T WORRY BE HAPPY





நாம குழந்தையாக இருக்கும்போது நாம் பெரியவானாக வளர்ந்துவிட்டால் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். பெரியவனாகிவிட்டால், வேலைக்கிடைத்துவிட்டால் நம் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். வேலைக்கிடைத்துவிட்ட பிறகு நல்ல மனைவிகிடைத்தால் நம் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். நல்லமனைவி கிடைத்த பிறகு குழந்தையிருந்தால் நம் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். குழந்தை பிறந்த சிறிதுகாலத்திற்கு பிறகு அந்த குழந்தை வளர்ந்துவிட்ட பிறகு வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். அதன் பிறகு அந்த குழந்தை டீன் ஏஜ் பருவத்தை தாண்டிவிட்டால் கவலையில்லாமல் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். அந்த குழந்தைக்கும் கல்யாணமாகி நாமும் ரிட்டையர்டுயாகி நாம் பேரக்குழந்தைகளுடன் விளையாடும் போது வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம்.


ஆனால் வாழ்வின் உண்மையென்னவென்றால் இந்த நிமிஷத்தைவிட வாழ்வில் வரப்போகும் நிமிஷம் சந்தோஷமாக இருக்கும் என்று சொல்லமுடியாது. இப்போதுயில்லையென்றால் பின் எப்போது?

நம் வாழ்வில் எப்போழுதும் சாவால்கள் நிறைந்துள்ளன. நாம் அதைப் புரிந்து ஒத்துக்கொண்டு சந்தோஷமாக வாழக் கற்றுகொள்ள வேண்டும்.வாழ்க்கை இப்போதுதான் சந்தோசஷமாக ஆரம்பிக்கிறது என்று நாம் நினைக்கும் போது உடனே தடைக்கல் எதிர்படும். அந்த தடைக்கல்லையும் ஒரு படிக்கல்லாகமாற்றி வெல்ல வேண்டும். நிமிஷங்கள் தங்கப்புதையல் மாதிரி . அதன் முக்கியத்துவதை உணர்ந்து அதை நம் வாழ்வில் யாரை முக்கியமாக கருதுகின்றோமோ அவர்களுடன் பகிர்ந்து சந்தோஷமாக இருக்க வேண்டும். நிமிடம் யாருக்காகவும் காத்திருக்காது அதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

படித்து முடிக்கும்வரை , உடல் எடையை குறைக்கும்வரை, அல்லது கூட்டும் வரை, வேலைக் கிடைக்கும்வரை, இல்லை  இந்த நிமிஷத்தைவிட வேற எந்த நிமிஷமும் நாம் சந்தோஷமாக இருக்க முடியாது என்று நினைத்து வாழுங்கள்.

11/01/2012

மனதை உருக்குலையச் செய்தக் காட்சி

என் மனதை மிகவும் பாதித்த வீடியோ க்ளிப். மனது மட்டுமல்ல இதயம் இன்னும் அழுது கொண்டிருக்கிறது


தன் சுயநலத்தை மட்டுமே மனதில் கொண்டு தாய் நாட்டை சுரண்டும் மனிதர்களை சரித்திரங்களில் மட்டும் நாம் பார்க்கவில்லை

இப்போது நாம் கண் எதிரிலேயே காண்கிறோம். வானத்தில் இருக்கும் நட்சதிரங்களை போல லட்சமாய் கொட்டிக் கிடக்கும் சுயநலவாதிகள் மத்தியில்  லட்சிய இல்லா  /பொதுநல வாதிகள் வளர்வது அபூர்வம்..அப்படிபட்ட சுயநலமில்லாத ஒருவரின் வாழ்க்கை சம்பவமே கிழேயுள்ள வீடியோ க்ளிப். இதை இந்த கால மனிதர்களும், தங்களை மக்களின் தலைவன் என்று சொல்பவனும் ஒரு தடைவையாவது சுய அறிவோடு இதை பார்க்க வேண்டுகிறேன்.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=CjNovbdxZtc
இதை பார்த்த பின் உங்களின் கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணிர் வருமானால் இன்னும் உங்கள் இதயம் முற்றிலும் சுயநலத்தால் பாதிக்கபடவில்லை என்று கருதலாம்.

இனிவரும் காலத்திலாவது சுயநல அரசியல் ஜாம்பவான்களின் ஆசைப் பேச்சுக்களை நம்பி இளைஞர்களான நாம் சோரம் போகாமல், சிந்தித்து, செயற்பட்டு சமுதாயத்தின் விடிவுக்காக சுயநலமில்லாமல் பொதுநலத்திற்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்