தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4/05/2013

ஆண் மகனே ...



முப்பது வயதை கடந்து விட்டது

முன் நெற்றில் முடியும் கொட்டிவிட்டது

செல்லத் தொப்பையும் வந்து விட்டது.


கல்லூரிக் கனவுகளை கலைத்து விட்டு

கணிப்பொறியின் காதலனாய் காவல் பட்டோம். 

காசில்லா விட்டாலும் காதலுக்கு பஞ்சமில்லை

காதல் தோல்விகளும் கொஞ்சமில்லை.


ஓர் இலக்க குரோமொசோம் குளறுபடியால்

அடித்து வரப்பட்ட

ஆணாதிக்க வர்க்கத்தினர்.


இனிய இளமையை

இ.எம்.ஐ-லேயே இழந்து  விட்டு 

பணம் காய்க்கும் எந்திரமாக மாற்றப்பட்டோம்.




பொறுப்பற்ற பொறுக்கிகளா ஆண்கள்?


அப்பாவின் மருத்துவம்,

அம்மாவின் வளையல்,

என ஏதேனும் பொறுப்புகளை சுமக்கும் தியாகிகள்.


நண்பர்களுக்கு  இடையே

நட்பின் அடர்த்தி வேண்டுமானால், 

கூடக் குறைய இருக்கலாம். 

ஆனால்,

கடைசி காசு வரை 

நண்பர்களுக்காகச் செலவிடும் 

மனங்களுக்கு குறைவிருக்காது.


அன்பு நிறைந்த ஆணின் 

நல்மதிப்பை அளவிட 

புகையும், குடியும் மட்டுமே 

அளவுகோல்களாகக்கி விட வேண்டாம். 


ஆயிரம் சொல்லி விளக்கினாலும்
அப்பாவி  ஆண்களுக்கும் உண்டோ  கற்பு!

3/23/2013

தமிழர் வாழப் புறப்பட்டேன்!



ஈழம் வேண்டி  புறப்பட்டேன்!
தமிழ் தேசம் அமைக்கப் புறப்பட்டேன்!
இளைஞர்களின்  கைகள் கோர்த்து  புறப்பட்டேன்!
நாடு களத்தில் ஆடப் புறப்பட்டேன்!

தமிழ்  கொடியோன் ,என் தமிழனை ,

பாலகனை கொன்ற ராஜ பக்சேவை
கூண்டில் ஏற்ற  புறப்பட்டேன்!

எட்டுத் திசையும் தமிழ்ச்சாதி
எருமைச் சாதி போலாகிக்
கெட்டுக் கிடந்த நிலைகண்டு
கேடு தொலைக்கப் புறப்பட்டேன்!

வீசு குண்டால் எறிந்தாலும்
வெட்டி உடலும் பிளந்தாலும்
ஆசைக் கொருநாள் போராடி
ஆவி துறக்கப் புறப்பட்டேன்!

வெந்த நெஞ்சில் எழுந்தகனல்
விழியில் சிவப்பு நிறந்தீட்ட
சிந்து பாடி வெங்கொடுமைச்
செருவில் ஆடப் புறப்பட்டேன்!

மானம் இழந்து தலைசாய்ந்து
மாற்றார்க் கடிமைத் தொழில்செய்து
கூனல் விழுந்த தமிழ்வாழ்வின்
கொடுமை தீர்க்கப் புறப்பட்டேன்!

கட்டு நொறுங்கக் கை வீசிக்
களத்தில் ஆடும் வேகத்தில்
கொட்டும் வியர்வைத் துளியோடு
குருதி கொடுக்கப் புறப்பட்டேன்!

வானை இடிக்கும் போர்ப்பறையின்
வைர முழக்கம் வழிகாட்ட
தானை எடுத்துப் புறப்பட்டேன்!
தமிழர் வாழப் புறப்பட்டேன்!

3/02/2013

என்தாயைக் குறிக்க.

எதையெதையோ எழுதியவன்
என்னைப் படைத்த
தாய்க்கெனஒரு கவிதை 
எழுதமுனைந்தேன்.

எங்கெங்கோ படித்த
வார்த்தைக் கோர்வைகள்
அனைத்தும் என் கண் முன்னே 

உதிர்ந்திருக்கும்
ஒவ்வொரு எழுத்திலும் 
ஒவ்வொன்றும்  எழுத்தோவியங்கள்.

அனைத்தையும் சேர்த்து 
வார்த்தைகளாக்கினேன்.
எதுவும் பொருத்தமில்லாததாக 
தோன்றியது 
என் தாயைக் குறிக்க.

எனக்கென எரிதழல் சுமந்து
வண்ணநிழல் தந்தவளுக்கு
வார்த்தைச் சுழலிலும்
ஒருவாக்கியம் கிடைக்கவில்லை.

ஒருவேளை
ஆயுதஎழுத்தைப் போல
“தேவதை எழுத்து”
ஒன்று இருந்திருக்குமாயின்
பொருந்திப்போயிருக்கும்
என்தாயைக் குறிக்க.

1/17/2013

சம்மதம் சொல்வதற்கில்லை

 

 

 என் முகம் நீ பார்த்ததில்லையே என்றேன்
உன் அகம் பார்த்திறுக்கின்றேனே என்றாய்.

என் குரல் நீ கேட்டதில்லையே என்றேன்.

உன் குணம் தெரிந்திருக்கின்றேனே என்றாய்.

என் நிறம் நீ அறிந்ததில்லையே என்றேன்

உன் நினைவிலேயே அலைகிறேனே என்றாய்.

இறு தியாய்


என் விருப்பத்தை நீ விரும்பவில்லையா என்றாய்

உன் செவி சேர்ந்திட மௌனமே கொண்டுள்ளேன் என்றேன்.

ஆனால்


இம்மௌனம் சம்மதம் சொல்வதற்கில்லை!

உன் காதல் பயணத்தை முடித்திடவே!

12/31/2012



























முன்னேற்றங்களும் பின்னேற்றங்களும்


வாழ்வின் அடிப்படை தத்துவம்;


நாம் கடந்து வந்த

வாழ்க்கை புத்தகத்தில்,

வருடங்கள் மாதங்கள்

வாரங்கள் நாட்கள்

நிமிடங்கள் நொடிகளென

அனைத்து பக்கங்களை

புரட்டிப் பார்த்தால்,

நமக்கொன்று ஒன்று மட்டும் புரியும்

புத்தாண்டு என்பது

வருங்கால தேதிகளை மாற்றிவிடும்

ஒரு நாள்தான் என்று ;

கடந்து வந்த பாதைகள்

கடக்கவிருக்கும் பாதைகளில்

நமக்கு சந்திக்க போகும்

அனுபவங்கள் யாருக்கும் தெரியாது;

திசை திரும்பிவிட்ட

படகுமேலேரி பயணிக்கும் நம்மை

இந்த புத்தாண்டு

நம் கனவு கரையில் போய் சேர்க்கட்டும்;


மாற்றங்கள் அனைத்தும் பொதுவாயினும்

நம்மில் புதுப்புது மாற்றஙள் தோன்றி

நம் வாழ்வில் இன்பமும் அமைதியும்

என்றும் நிலைத்துவிட

இறைவனிடம் பிரார்த்தித்து

என் புத்தாண்டு வாழ்த்தினை சமர்ப்பிக்கிறேன்

12/13/2012

அவள் என்னை காதலிக்கிறாளா..?

அந்த கவிதையின் இறுதியில்


சூசகமாய் காதலைச் சொல்லியிருந்த

வரிகளை அவள் வாசித்துவிட்டு

என்னை காதலிக்கத் துவங்கியிருக்கலாம்;

வெறுக்கத் துவங்கியிருக்கலாம்

மெளனமாக இருக்கலாம்,

கோபமாக இருக்கலாம்,

சிரித்திருக்கலாம்;

புரியாமலேயே விழித்திருக்கலாம்;

எதிர்பார்த்திராமல் அழுதிருக்கலாம்;

மீண்டும் வேறு கவிதைக்காக காத்திருக்கலாம்;

அல்லது....

அந்த வரிகளை சாதாரணமாக

கடந்தும் போயிருக்கலாம்...;

ஆனால்...

நான் அவளுக்காக இன்னொரு

கவிதையை எழுதி விட்டு

மீண்டும் இறுதி வரியில்

அவள் என்னை காதலிக்கிறாளா..?

என்று அறிய முயலும்...

அர்த்தத்தோடு முடிக்க

முயன்று கொண்டிருக்கிறேன்...!

9/07/2012

பிரிவுடன்..........




நீரில்லா மீனாய் 

தவித்த போது 

நேரில் வந்தாள் 

வசந்தம் தந்தாள்! 

பார்க்கும் இடமெல்லாம் 
தேவதை அவள் முகம் பகலில் ! 

இரவில் அவளை தேடினேன் 
நிலவாய் வானில் ! 

விழிகளின் சயனத்தில் 
இவளுடன் பயணம் கனவில் ..! 

கனவுடன் கலைந்தது 
அவளின் நினைவுகள் 

அவள் பிரிவுடன் ..! 

8/28/2012

என் நினைவுகள்

 

நினைவாற்றலை வளர்க்க விரும்பினேன்

என் நினைவுகள் உன்னை சுற்றுவதால் !


ஆகாயத்தின் மேல் உன்னை வர்ணிக்க


விரும்பினேன் !


காகிதத்தின் நீளம் , அகலம் பத்தாததால் !


தேன் சுவையானது தான் :


இல்லை என்று யார் சொன்னது ?


உன் எச்சில் சுவைக்காத வரை !


பூக்களில் வரும் வாசனை அற்புதமாக


தோன்றவில்லை ;;;


உன் வாசம் கண்டதால் !


உன் சிரிப்பு உண்மையிலேயே அழகுதான்


இல்லை என்றால் அதை பார்க்க


இவ்வளவு ஆர்வம் வருவது ஏன் ?

8/09/2012

இதயத்தின் வலி






நான் விரும்பிய ஒரு இதயம் என்னை விரும்பாத போதுதான்,
என்னை விரும்பிய இதயத்தின் வலி புரிந்தது.....

என்னை விரும்பிய இதயத்தை நான் புரிந்த போதுதான் என்னை விரும்பிய இதயத்தை நான் தொலைத்தது புரிந்தது ..............

புரியாத பிரியம் பிரிந்த போதுதான் புரிந்தது .....

பிரிந்த பின் புரிந்த பிரியம் இதயத்தில் வலியை மட்டும்தான் தந்தது

6/17/2012

என் உறவே என் தம்பி





எனக்கென்று ஒரு தம்பி நீ



ஒருத்தன் இருக்கின்றாய்


என்கிற.... நினைப்பில்


இன்றுவரை ..... இருந்தேன்....!






என் நினைப்பில்.... நீ மட்டும்


இனி எப்போதும் வேண்டாம்


என்கிற அதிகபட்ச வெறுப்புகளோடு


வாய்விட்டு சொல்லி விட்டு போகிறாய்.....


இனி எந்த அன்பும்.... அரவணைப்பு எவரிடமும்


இருந்து வேண்டாம் என்று.....!!



தம்பி !


எப்படி புரியவைப்பேன் என் அன்பை


பேசும் வார்த்தைகளில் ...


உள்ளம் திறந்து சொல்கிறேன்


உடல் காயம்பட்டாலும் என்


உறவே என் தம்பி .....

6/12/2012

கண்ணீர்





ஏனோ ,கண்ணீர்


சில சமயம் மனசு அமைதியாக

இருந்தாலும் வருகிறது.....

அமைதியாக இல்லாவிட்டாலும் வருகிறது.....!



5/03/2012

என்னையே…! எனக்குக்…

பூமிக்கு சுழற்சியை…


கொடுத்தவள் நீதானே…!


பகலுக்கு ஒளியை…

அளித்தவள் நீதானே…!



இரவிற்கு நிலவை…

இரந்தவள் நீதானே….!

நதியையும் கடலையும்….

இணைத்தவள் நீதானே…!



காதலுக்குள் மோதலை…

சேர்த்தவள் நீதானே…!


காதலில் காமத்தை…

கருக்கியவள் நீதானே…!


நேர்மையை பொறுமையாய்…

எனக்குள்…!

புகுத்தியவள் நீதானே…!!


ஓய்வையும் உழைப்பாய்…

என்னுள்…!

மாற்றியவள் நீதானே…!!


என்னையே…! எனக்குக்…

காட்டியவள்…!! நீதானே…!!!

4/25/2012

மாற்றங்கள்

சில நொடி பார்த்தால்
பல நொடி வாழும் மனது
காதலை சொல்லும் முன்பு
சில நொடி பிரிந்தால்
பல நொடி அழுகும் மனது
காதலை சொன்ன பின்பு
ஒரு நொடி சுட்டால்
பல நொடி வலிக்கும் உயிர்
காதலில் தோற்ற பின்பு
ஆனால் முழு நொடியும்
வாழ்கிறேன் உன் முன்னாள்
உயிர் உள்ள பொம்மையாய்
  காதல் திருமணத்தில் ….!

3/05/2012

பெண்ணே

எதிரி என்பவன் யார் ?
நிம்மதி கெடுப்பவன்
சந்தோசம் பறிப்பவன்- தானே எதிரி

அப்படியானால் - பெண்ணே


நீ என் எதிரியா ?

எல்லாம் முடிந்து விட்டது

போதையிளே ஊரிக்கொண்டு


பெண்ணை என்னி வாடிக்கொண்டு

செல்வம் தேடி ஓடிக்கொண்டு

பேர் புகழ் நாடிக்கொண்டு


கற்பனையில் மிதந்துக்கொண்டு

கேடு கெட்டு நாறிக்கொண்டு

எதிர்காலம் தேடி

நிகழ் காலம் துளைத்தேன்

கனவைத் நாடி

நினைவை துறந்தேன்

இல்லாததை நினைத்து

இருப்பதை மறந்தேன்


கனவு களைந்து

கண் விழித்துப் பார்க்கும் பொழுது

எல்லாம் முடிந்து விட்டது

3/01/2012

இறைவா !

இறைவா !


நீ தந்த வரம் - எனக்கு

இப்பொழுதுதான் உணர்கிறேன்


தமிழ்ப் பேசத்தெரிவதே

பெரியக் குடுப்பினை - ஆனால்

எனக்கு எழுதப் படிக்கவும்

அருள்ப் புரிந்தாயே


இந்தப் பிறவிக்கு இதுபோதும்

அடுத்த ஜென்மம்- இருந்தால்


மீண்டும் தமிழனாய் !

தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த- தமிழனாய்

என்னை படைத்துவிடு

இல்லையேல்..

என்னைப் படைக்காமல் இருந்துவிடு !

1/21/2012

ஒர் ஏழை தமிழனாக ...!!!


தஞ்சை பெரிய கோயிலை - என்னுடன்
சுற்றினான் ஒரு வெள்ளையன்
அவன் எந்நாடு என்று நானறியா - இருந்தும்
என்னாட்டுக் கலை கண்டு வாய்ப்பிளந்த போது
எனக்குள் ஒரு இராஜராஜன் பெருமிதத்தோடு ...
வானுயர்ந்த கோபுரம் போல் என்னாடே உயர்ந்தது 
என்றுதலைநிமிர்ந்து திரும்பினேன் ...

கோயில் தலைவாசலில் - அந்த
அந்நியனைச் சுற்றி ஒரு கூட்டம்
இரு கைகள் எந்தி யாசகம் கேட்டு ...
சற்று முன்தலைக்கேறிய தலைக்கணத்தில்
தலைக் கவிழ்ந்து நடந்தேன் ...


ஒர் ஏழை தமிழனாக ...!!!

மின்னஞ்சலில் வந்தது .....

1/14/2012

புதுக் கவிதை

நமக்கு ஊக்கமளிக்கும் வகையில் புதுக் கவிதை ஒண்ணு தந்த எனது நண்பரும் , வலைதள ஆர்வலரும் ஆன திரு.ரஜினிகாந்த் –திருப்பூர் அவர்களுக்கு நன்றியுடன் ,தங்களின் மேலான ஆதரவை நாடும் தமிழ் உலகம்



அவர் சம்ர்பித்த புதுக் கவிதை உங்களுக்காக !!.....



அன்பை பரிமாறி கொள்வோம்
        ஆங்கில புத்தாண்டில்
நாம் யார் என்பதை அறிந்து கொள்ள
       கூடி கொண்டாடிடுவோம் !!!
தை முதல் நாள் -தமிழ் புத்தாண்டு


                                                            ரஜினிகாந்த்-

12/18/2011

ஒ மனமே!!!



யோசித்துப்பார்க்கையில்



அது உண்மை என்று தான்


தோணுகிறது


எப்போதும் வேண்டும் என்று கூறும் ஒன்று


எப்போதும் வேண்டாம் என்று கூறும் ஒன்று


பரவாயில்லை,


பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறும் ஒன்று


ஆக மூன்று மனதுகள்


சரிதானே ?


ஆம் சரிதான்


என்று கூறியது


நான்காவது மனது


11/25/2011

ஹைக்கூ

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நம்து வலைதளத்தில் மிகப்பெரிய வாக்கு பதிவும் அதற்கான எதிர்ப்பு கவிதைகளும் ,கருத்துக்களும் வந்துகொண்டு இருக்கிறது ,அதற்கு ஆதரவளித்த நல் உள்ளங்களுக்கு அன்புகலந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்



நமக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஹைக்கூ கவிதை ஒண்ணு தந்த எனது நண்பரும் , வலைதள ஆர்வலரும் ஆன திரு.ரஜினிகாந்த் –திருப்பூர் அவர்களுக்கு நன்றியுடன் ,தங்களின் மேலான ஆதரவை நாடும் தமிழ் உலகம்

அவர் சம்ர்பித்த கவிதை உங்களுக்காக !!.....

ஹைக்கூ


மக்கள் மீது பேருந்து ஏறாமலே மக்கள் மாண்டனர் !


                                                ஏறிய பேருந்து கட்டணத்தால் !!