தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................
நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

8/29/2013

அழகு என்பது
பெண்பால் என்றால்,
ரசனை என்பது நிச்சயம் ஆண்பால் ஆகத் தான் இருக்கும்.
அழகாய் இருப்பதால் அவன் என்னை
ரசிக்கவில்லை.
அவன் ரசிப்பதால் தான்
நான் அழகாகவே
இருக்கிறேன்

2/11/2013

இல்லைன்னு சொல்லிட்டேனே

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. நல்ல மனிதனுக்கு ஒரு சொல்: இல்லை. இருந்தால் நான் உங்களுக்குக் கொடுக்கலாம், கொடுக்காமலே கூட இருக்கலாம்: பிரச்சனை அது இல்லை. இல்லை என்பதுதான் பிரச்னை.

நீங்கள் கடந்த காலத்தில் எனக்கு செய்த நன்மைகளுக்கு மிக்க நன்றி. இனி செய்யப்போகிறவற்றுக்கும் நன்றி. ஆனால் உங்களுக்கு என் பதில் `இல்லை'தான். நீங்கள் எனக்கு நிறைய நன்மைகள் செய்தவராக இருந்தவராக இருப்பின் உங்களுக்கு ஒரு பதில்: என்னடா இவன் நன்றி கெட்டவனாக இருக்கிறானே என்று நினைப்பதற்கு முன் நீங்கள் எனக்கு இத்தனை தீமைகள் செய்திருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். நினைவில் எதுவும் அகப்படவில்லை என்னிடம் கேளுங்கள்.

உலகில் யாரும் யாருக்கும் பெரிதாக நன்மைகள் அதிகம் செய்துவிட முடியாது. அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். இவன் ஒரு தடவை இல்லை என்று சொல்லிவிட்டதால் இவன் நண்பன் என்று என்று முடிவு கட்டிவிடாதீர்கள். இல்லை என்று சொல்லுமுன்பே நான் உங்களுக்கு நண்பன் இல்லைதான்.

நீங்கள் யார், நான் யார் என்று யோசித்துப் பாருங்கள். நம்மைப் போல் இரண்டு பேர் நண்பர்களாக இருந்தால் உலகம் தாங்குமா? மூன்றாவது உலக நாடுகள் இதுவரை பட்டது போதாதா? நம்மால் வேறு இன்னும் படவேண்டுமா? உங்களோடு என்னைப் பார்த்தால் எனக்கு அசிங்கம். என்னோடு உங்களைப் பார்த்தால் உங்களுக்கு அசிங்கம்.

இல்லை என்று சொல்வதால் நான் உங்களை வெறுக்கிறேன் என்று அர்த்தமில்லை. மனதிற்குள் சபித்துக்கொண்டு கொடுப்பதை விட இல்லை என்று சொல்வதையே நீங்கள் விரும்புவீர்கள், . நான் அவ்வளவு மோசம் இல்லை. நான் அதுவரை போவதில்லை. என் எல்லை எனக்கத் தெரியும். பேலன்ஸ் தவறி உத்தமன் ஆகிவிடும் ரகம் இல்லை நான்.

உங்கள் தேவையைத் தற்காலிகமாக மறந்துவிட்டு இல்லை என்பதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். தேவை உங்களுக்குத்தானே தவிர எனக்கல்ல என்பதையும் உங்கள் பிரச்னைகள் என்னைத் துளி கூட பாதிப்பதில்லை என்பதையும் தயவு செய்து மறக்காதீர்கள்.

இல்லாதவன், இருப்பின் இன்மை என்கிற ஓல் பஜனை எல்லாம் என்னிடம் வேண்டாம். நான் என்ன சொன்னேன்? `இல்லை' என்றுதானே சொன்னேன்? அதற்குப் பிறகு எப்படி இல்லாதவன் பற்றியும் இருப்பின் இன்மை பற்றியும் பேச்சு வர முடியும்? இல்லை என்று சொன்னால் புரிந்துகொள்ள மண்டையில் மசாலா இல்லாதவர்கள் கேட்கவே தகுதி இல்லாதவர்கள். அவர்களுக்கு இல்லை என்ற பதிலே அதிகம். அவர்களிடம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருப்பதற்கு பதிலாக ஒரு அருப ஓவியத்தை வரைந்து காட்டலாம். அதற்கு `சுயத்தின் எச்சங்கள்' என்பது போன்றதொரு தலைப்பு வைக்கலாம். கேட்டவர்கள் மனம் நிறைந்து போகட்டும்.
நானும் உங்களைப் போன்ற டீசன்ட்டானவன்தான்.  நானும்தான் உங்களைப்போல 'லாஜிக் இடிக்கிறது' என்பதற்கு பதில் `தர்க்க இடிபாடுகளிடையே சிக்கி' என்று சொல்ல விரும்புகிறேன். நானும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வர முடியாதவன்தான். ஆனால் இதே போலொரு சூழ்நிலையில் நீங்கள் என்னிடம் `இல்லை' என்று சொன்னால் புரிந்து கொள்வேன். என்னவோ நீங்கள்தான் என்னிடம் கையேந்தி நிற்பது போல் நடந்து கொள்ள மாட்டேன்.

கடைசியாக ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அது முதலில் நான் உங்களுக்கு சொன்னதுதான்: இல்லை நான் சொல்வது புரிகிறதா? புரியவில்லை என்றால் அது என் பிரச்சனை இல்லை. இல்லை என்று நிறைய தடவை சொல்லிவிட்டேன். ஒரு விஷயத்தைப் பல தடவை சொன்னால் புரிந்துவிடாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் புரிந்து கொள்ள மிக எளிமையான ஒரு விஷயத்தைப் பல முறை சொன்னால் இன்னும் தெளிவாகவெல்லாம் புரிந்து விடாது என்பதும் எனக்குத் தெரியும். நான் திரும்பத் திரும்பச் சொல்லக் காரணம், நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனிதனுக்கு ஒரு சொல். உங்களுக்கு ஒரு சொல் போதவில்லை. அதனால்தான் இவ்வளவும்.


பார்த்தீர்களா, என்னைத் தவிர உங்களுக்கு எத்தனை பேர் இருக்கிறார்கள்! அவர்களைக் கேட்காமல் என்னிடம் மட்டும் கேட்பது ஏன்? என்பால் உள்ள அன்பினாலா? என்பால் உள்ள அன்பைக் காட்ட உங்களுக்கு இதுதானா சமயம்? அதான் இல்லைன்னு சொல்லிட்டேனே, 

12/15/2010

இதுவெல்லாம் ஏன் நண்பா ?

1. கூட்டமா படியில தொங்கிகிட்டு போற பஸ்ஸில/ட்ரெயின்ல கெஞ்சி கூத்தாடி நிக்க இடம் கிடைச்சதும் அடுத்து ஏற வர்றவங்களுக்கு இருந்தும், இடம் கொடுக்காம மறுக்கிறோமே... அது ஏன்?


2. சினிமா தியேட்டர்ல பாக்குற ஃபிரண்ட, 'சினிமாவுக்கு வந்தியா 'ன்னு
   கேக்குறது கேணத்தனம்னு தெரிஞ்சும் கேக்குறோமே... அது ஏன்?

3. அடுத்தவன் தங்கச்சிய லுக்கு விடுற நமக்கு, நம்ம தங்கச்சிய பாக்குறப்போ மட்டும் பத்திகிட்டு எரியுதே... அது ஏன்?

4. இந்த மாதிரி கேள்வி கேட்டு ஒருத்தர் நம்ம கிட்ட கேட்ட , பதிலுக்கு நாமும் பதிவு போடலாம்னு தோணுதே... அது ஏன்?

5. இங்கிலிஷ் படம் பார்க்குறப்போ எல்லோரும் சிரிச்சா, புரியன்னாலும் நாமும் விழுந்து விழுந்து சிரிக்கிறோமே... அது ஏன்?

6. யாராவது சின்னப்பசங்க நாட்டி பண்ணுனா, அவங்களவிட நாம அதிகம் பண்ணினோம்ங்கறத மறந்துட்டு அவங்க மேல சுள்ளுனு கோவம் வருதே... அது ஏன்?

7. பரிட்சை ஒழுங்க எழுதாம சத்தியமா பாஸ் பண்ணமாட்டோம்னு
    தெரிஞ்சும் ரிசல்ட் பாஸான்னு ஆர்வமா பாக்குறோமே... அது ஏன்?


8. மகன் புத்திசாலிதனமாக கேட்கும்போது, என்னமாய் கேள்விக்கேட்குறான் என வியக்குறோமே, நாமும் நம்ம அப்பாவாவை இதே மாதிரி கேட்டதை மறந்துட்டு... அது ஏன்?

9. ஃபிரண்ட்ஸ் கிட்ட பேசும்போது, பணம் கடன் கேக்குற விஷயமா பேசும்போது மட்டும் அங்கும்/இங்கும் சரிவர கேட்பதில்லையே... அது ஏன்?

10. ஏன் லேட் என்ற கேள்விக்கு பதிலாக பெரும்பாலும் லேட்டாயிடுச்சின்னே பதில் சொல்லப்படுதே அது ஏன்?

11. ஊருக்கு போறப்போ 'ஆளு இப்போ கலராயிட்டியே'ன்னு கூசாமல் பொய் சொல்லி அடுத்து காசுக்குத்தான் மேட்டர் போடுறாங்கன்னு தெரிஞ்சும் சந்தோஷிக்கிறோமே...அது ஏன்?
இன்னும் எத்தனை நண்பர்களே .........

12/06/2010

நண்பர்களின் பொன் மொழிகள் ....

 அவற்றில் ஒரு சிலவற்றை இங்கேப் பார்க்கலாம்….
           நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம். பு‌த்தக‌ங்க‌ள்தா‌ன் ந‌ம்முட‌ன் பேசு‌ம் மெளன ந‌ண்ப‌ர்க‌ள். எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
  • உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.
  • வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
  • உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.
  • உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.
  • பெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், பொறாமை‌க்கார‌ன் ந‌ண்பனை இழ‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன்.
  • நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.
  • வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.
  • ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.
  • சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும்.
  • உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.
  • ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
  • நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.
  • புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரு‌ம் வரை காத்திருக்க வேண்டும்.
  • புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.

12/02/2010

இப்படியா உன் நண்பர்கள் .........


'உடுக்கை இழ‌ந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு' என நட்பிற்கு இலக்கணம் வகுத்தவர்  வள்ளுவர்.


சில உறவுகள் இவ்வுலகில் என்றும் அழியாதவை.அந்த உறவுகள் தான் நண்பர்கள்.


நல்ல நண்பர்களை பெற்றவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவார்கள்.
நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.


புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.

உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.


ஒரே சிந்தனையுடன் இருக்கும் இரண்டு உயிர்கள்  தான் நட்பு.


நட்பு நீ நிற்கும் போது உன்னை உற்சாகப்படுத்தி இயக்க வைக்கும், தனிமையை இனிமையாக்கும், தேடும்போது வழிகாட்டியாகும், கவலையை போக்கி சிரிக்க வைக்கும், சந்தோஷத்தில் பா‌ட்டு‌ப் பாடும்.


பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்களை நண்பர்களுடன் மட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும்.


ஆண்-பெண், ஏழை-பணக்காரர் போன்ற வேறுபாடுகளை கடந்தது நட்பு.


வானமும் பூமியும் தொடுவது நட்பு
வயலும் மழையும் கலப்பதும் நட்பு
நிலமும் நெல்லும் வளர்வதும் நட்பு
வேராயும் விழுதாயும் படர்வதும் நட்பு
நாடு மொழிகளைத் தாண்டியது நட்பு
உலகளாவிய அமைதிக்கு வேண்டும் நட்பு
உன்னத வாழ்விற்கும் தேவை... நட்பு (நான் மிகவும் ரசித்தது )


கொள்கை, கருத்து, வாழ்நிலை அனைத்தையும் பொருட்படுத்தாத நட்பு, விலங்கிற்கும் மனிதனிற்கும் இடையே கூட வேர் விட்டு செழித்துள்ளது.


முதல் அறிமுகத்தில் புன்னகையாய் மலர்ந்து,புரிந்துணர்வில் வளர்ந்து,துன்பத்தையும் இன்பத்தையும் ஒன்றிணைந்து எதிர்கொண்டதால் வேரூன்றி, பலமாகவும் ஆழமாகவும் உள்ளேயும் வெளியேயும் ஆல மரமாய் வளர்வது நட்பு.

9/19/2010

நட்பூ

உங்களை
நட்பென்று சொல்வதை விட
நாளென்று சொல்லவே
விரும்புகிறேன்........

நட்பு காணாத நாட்கள் நகரும்
நாள் காணாது
நொடி ஒன்று
பிறக்குமோ?

ஆதலால் தான்
உங்களை நட்பென்று
சொல்வதை விட
நாள் என்று சொல்லவே
விரும்புகிறேன்........

8/05/2010

“நட்பிலும் விஷமும் உண்டு”

ஒரு மனிதன் உயர்வதற்கும் தாழ்வதற்கும் நட்பு ஒரு காரணம் ஆகின்றது.


நட்பு மிக சிறந்த பண்பு ஆனால் அதிலும் நாம் சிறிது கவனம் செலுத்த வேண்டும் . திருக்குறள் மிக தெளிவாக நட்பை பற்றி சொல்லிவிட்டது .


நகுதல் பொருட்டன்று நட்டல்: மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு


நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று; நண்பர் நெறி கடந்து சொல்லும்போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும். 784


நட்பு என்ற உயர்ந்த தத்துவத்தை நாம் இன்று சரியாக புரிந்து
கொள்ள வில்லை, இதன் காரணமாக நட்பினால் நாம் இன்று பல துன்பங்களுக்கும் ஆளாகிறோம் . அதை பற்றி இப்போது பார்ப்போம்.


மிக சிறந்த நட்பிற்கு பலர் உதாரணமாக உள்ளனர். நமது இதிகாசங்கள் நட்பை பற்றி அற்புதமாக கூறியுள்ளன. கர்ணன் தனக்கு திறமை இருந்தும் அவன் சத்ரியன் இல்லை என்று கூறி அதை வெளிகாட்ட விடாமல் தடுத்த பலருக்கு மத்தியில் துரியோதனன் அவனுக்கு ஒரு நாட்டை பரிசளித்து ஒரு அரசன் அக்கி அந்த போட்டியில் கலந்திட செய்தான். அதற்கு பிறகும் துரியோதனன் பல முறை தன் நட்பை கர்ணனுக்கு அற்புதமான முறையில் கட்டியுள்ளான். மகாபாரதத்தில் இவர்கள் நட்பு மிக அற்புதமாக சொல்லப்பட்டிருக்கிறது. இறுதியில் பாண்டவர்கள் தங்கள் சகோதர்கள் என்று தெரிந்த பிறகு நட்பிற்காக தீமையின் பக்கம் போரிடினான் தன் உயிரை விட்டான், அனால் அவனுக்கு தான் பகவான் கிருஷ்னர் விஸ்வரூபத்தை முதலில் காட்டினர்.


இன்று சமுகத்தில் மிக சிறந்து விளங்குபவர்கள் பலர் தங்கள் நண்பனின் உதவியால் தான் இவ்வாறு வந்தோம் என்பதை மறக்காமல் நினைவு கூறும்போது நட்பின் வலிமை நமக்கு அற்புதமாக புரியும்.இதை திரை துறையில் நீங்கள் அதிமாக பார்க்கலாம்.


இன்று உலகம் முழுவதிலும் உள்ள கணினிகளை இயக்கும் சிறந்த software மென்பொருளான விண்டோஸ் என்னும் ஆபரேடிங் சிஸ்டம் வடிவமைத்த மைக்ரோசாப்ட் (Microsoft) என்னும் உலகின் முன்னணி நிறுவனத்தின் ஸ்தாபகர் ஆன பில்கேட்ஸ் தன்னுடைய நண்பனான பால் ஆலென் ஆரம்ப காலத்தில் செய்த உதவிகளால் தான் உலகின் தலை சிறந்த மென்பொருள் (software) கம்பெனியை உருவாக்க முடிந்தது.

 இது தான் நட்பின் வலிமை.

இவ்வாறு நட்பினால் உயர்ந்த எத்தனயோபேரை நாம் உதாரணம் சொல்ல முடியும். ஆனால் அவை அனைத்தையும் நீங்கள் உற்று பார்த்தல் உண்மையான நட்பு என்றால் என்ன என்பது புரியும். இந்த திருக்குறளை படியுங்கள்


அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.


அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவு வந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும். 787


நண்பன் என்பவன் உங்களை கேடான பாதைக்கு எப்போதும் அழைத்து செல்ல மாட்டான். நீங்கள் அவனை எதாவது கேடான செயல் செயலாம் என்று சொல்லி அழைத்தாலும் அவன் உங்களுக்கு அவ்வாறு செய்ய கூடாது என்று அறிவுரை வழங்கி நல்வழி படுத்துவான். இவ்வாறு இன்றி நீங்கள் விரும்பாவிட்டாலும் கேடான பாதைக்கு அழைத்து செல்லும் ஒருவன் ஒரு காலமும் உங்கள் நண்பனாக இருக்க முடியாது.


பத்தாம் வகுப்பில் நன்றாக மதிப்பெண் எடுத்த ஒரு மாணவன் பனிரெண்டாம் வகுப்பில் மிக மோசமாக மதிப்பெண் எடுத்து சில சமயம் தோல்வி அடைவதையும் நாம் இப்போது காண்கின்றோம். இதற்கு தொண்ணூறு சதவிதம் காரணம் மோசமான நட்பாகத்தான் இருக்கும்.  எனவே பல மாணவர்கள் கூடா நட்பினால் தங்கள் வாழ்கையை இழக்கின்றனர். இரண்டு வருட தவறான நட்பு ஒரு நல்ல மாணவனின் முழு எதிர்காலத்தையும் 
வீனாகி  விடும்.

உண்மையான நண்பன் யார் என்பதை நீங்கள் அடையாளம் கண்டு கொள்வது எளிது. சிரிக்கும் பொது மட்டும் உடன் இருக்காமல் நீங்கள் அழும பொது ஆறுதல் கூறும் ஒருவனே உண்மையான நண்பன். ஒரு அழகிய ஆங்கில வழி சொல்லை பாருங்கள்


"A real friend is one who walks in when the rest of the world walks out."


அதாவது உலகம் உங்களை விட்டு விலகும் பொது எவன் ஒருவன் உங்களை விலகாமல் இருக்கிறானோ அவனே உண்மையான நண்பன்.


அரிஸ்டாடில் என்னும் கிரேக்க தத்துவ ஞானி நட்பை பற்றி ஒற்றை வரியில் சொல்லிவிட்டார், அது என்ன தெரியுமா?.


“துன்பங்களின் பொது பொய்யான நண்பர்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்”.


கார் என்னும் ஊர்தியை கண்டுபிடித்த ஹென்றி போர்ட் இவ்வாறு நட்பை பற்றி அழகாக கூறியுள்ளார்


"My best friend is the one who brings out the best in me."


எனது சிறந்த நண்பன் யார் என்றால், எவன் என்னுள் உள்ள சிறந்தவைகளை வெளியில் கொண்டு வருகின்றனோ அவனே அவன்.


இப்போது நாம் எவ்வாறு நட்பை தவறாக புரிந்து கொள்வதால் அவதி உருகிறோம் என்று பார்ப்போம்.

நம்மை சுற்றி இருப்பவர்கள் அல்லது நமக்கு தெரிந்தவர்கள் எல்லாம் நம் நண்பர்கள் ஆகி விட மாட்டார்கள். இதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.


நம் அலுவலகத்தில் இருப்பவர்கள் பலர் இருக்கலாம் ஆனால் அதில் சிலர் மட்டும் தான் நம் நண்பர்களாக இருக்க முடியும். இங்கே மிக முக்கியமான ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன். இப்போதெல்லாம் முக்கியமாக மிக சிறந்த கல்லூரியில் படித்து software துறைக்கு வரும் நல்ல மாணவர்கள் பலர் மது பழக்கம் இன்றி வந்து பிறகு அலுவலகத்தில் இவைகளுக்கு அடிமை ஆகின்றனர், அதற்கு காரணம் அவர்கள் உடன் இருக்கும்  சிலரே. அதாவது இப்போது பார்ட்டிகளில் மட்டும் குடிப்பதை “social drinking” என்று பெயர் வைத்து அழைகின்றனர், ஆனால் மது ஒரு போதை பொருள் அதை ஒரு முறை நீங்கள் சுவைத்து விட்டால் அது தன் வேலையை காட்டிவிடும், எனவே நீங்கள் சிறிது காலம் பார்ட்டிகளில் மட்டும் குடிக்கும் சோசியல் ட்ரின்கர் என்று சொல்லி கொண்டாலும் பின் ஒரு காலத்தில் நீங்கள் ஒரு குடிகாரர் அக போகிறேர்கள் என்பது உண்மையே. கசப்பாக இருந்தாலும் இது தான் நிஜம். எனவே IT துறையில் உள்ள திறமை மிக்க நண்பர்களே உங்களை கெடுக்கும் நண்பன் பேச்சை கேட்டு சோசியல் ட்ரின்கிங் என்னும் கேடான பழக்கத்திற்கு அடிமை ஆகி விடாதீர்கள்.  நட்பின் பெயர் சொல்லி உங்களை மோசமானவன் ஆக்கும் எல்லாறையும் ஒதுக்கி விடுங்கள், இதன் மூலம் பிற்காலத்தில் நீங்கள் சந்திக்க போகும் பல இன்னல்களில் இருந்து விடுபடலாம்.


மோசமான நண்பர்கள் பட்டாளத்தை காண வேண்டுமா? மோசமான நட்பு எப்படி இருக்கும் என்று நேரில் காண வேண்டுமா? அது மிக எளிது.


 மது கடைகளில் ஒன்றாக கட்டிபிடித்து உருளும் நபர்களும், சூதாட்ட திடலில் அன்பாக பேசி பழகும் அனைவரும், போதைக்கு அடிமை ஆகி சுற்றி திரியும் பலரும், இவர்கள் வாழ்கையில் நட்பினால் கெட்டு போனவர்களே, இவர்கள் நட்பும் கூட அவர்களை போன்று இழிவனதே. இது போன்றவர்களை உங்கள் நண்பர்கள் என்று மறந்தும் கூட வெளியே சொல்லிவிடாதீர்கள், அது உங்களுக்கு மிக பெரிய அவமானத்தை பின்னல் கொண்டு வந்து விடும். இம்மாதிரி பழக்கம் உடையவர்கள் உங்கள் உடன் பனி புரிந்தால் அவர்களிடம் பேசுங்கள் பழகுங்கள், அதாவது சக உழியர் என்ற முறையில், ஆனால் அவர்களுடன் நட்பு வைக்காதீர்கள். அலுவலகம் முடிந்ததும் அவர்கள் யாரோ நீங்கள் யாரோ என்று இருங்கள்... இது உங்களுக்கு படிக்கும் பொது சற்று கடினம் அக தான் இருக்கும் ஆனால் காய்ச்சலுக்கு வலிக்கும் ஊசி போடுவது எவ்வளவு நன்மை தருமோ அது போல இந்த கடின பழக்கம் உங்களை கேடுகளில் இருந்து காப்பாற்றும்.


மிண்டும் சொல்கிறேன் தெரிந்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை மிக சரியாக புரிந்து கொள்ளுங்கள். உங்களை யாரிடமும் பழக வேண்டாம் என்று நான் சொல்லவில்லை ஆனால் உங்கள் நலம் விரும்புவோர்களையும், நல்லோர்களையும் நண்பர்களாக ஏற்று கொள்ளுங்கள், மீதம் உள்ள அனைவரையும் தெரிந்தவர்கள், உறவினர்கள், சக ஊழியர் என்று பாகுபடுத்துங்கள்.

(இது நான் பட்ட அவஸ்தைகள்)


இன்று நட்பு என்னும் சொல் மிக இழிவாக பயன் படுத்தப்படுவது வருத்தம் தருகின்றது. ஒரு நண்பன் என்னுடன் இருக்கும் பொது நட்பு பாராட்டும் ஒரு நல்ல நண்பன்  அடுத்த நண்பனிடம் சென்றவுடன் இவ்வளவு நாள் யாரை நண்பன் என்று சொன்னானோ அவனே தற்போது இருக்கும் நட்புடன் என்னை  
இழிவாக  பேசுகிறான். ஆக அவன் காட்டியது உண்மையான நட்பு அன்று , இது போன்று  பணத்துக்காக, சொத்துக்காக உங்களுடன் சுற்றும் இழிவானவர்களை உங்கள் நண்பர் என்று தலை மேல் தூக்கி வைத்து ஆடாதீர்கள் உங்கள் பணம், பதவி, சொத்து போகும் பொது அவர்களும் சென்றிருப்பார்கள், உண்மையை சொல்ல போனால் அவ்வாறான மோசமான நண்பனே கூட உங்கள் பணத்தை எல்லாம் சுருட்டி சென்றிருப்பான். ஆக உங்களிடம் பணம் அதிகம் இருந்தால் நீங்கள் உங்கள் நண்பர்களை தேர்வு செய்வதில் மிக மிக கவனமாக இருங்கள். பணத்துக்காக நண்பனையும் கொலை செய்யும் மோசமான ஆட்கள் இன்று நிறைய உண்டு. நண்பர்கள் தேர்வில் நிதானம் தேவை.


உலகின் தலை சிறந்த மனிதர்கள் உருவாவதற்கு நட்பு மிக முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது, ஆனால் அது நுற்றில் பத்து. மீதம் தொண்ணூறு சதவிதம் நட்பினால் என்ன ஆகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. மீண்டும் சொல்கிறேன் யாரையும் விலக்காதீர்கள் ஆனால் சரியான நண்பனை விட்டு விடாதீர்கள் அவனை அடையாளம் காண்பது எளிதல்ல.


எல்லோருமே எனக்கு நண்பர்கள் தான் என்பவனுக்கு உண்மையில் யாரும் நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியாது, அவனுக்கு எல்லாரையும் தெரியும் அவ்வளவுதான். நெருங்கிய நண்பர்கள் என்றால் ஒருவனுக்கு மிக சிலர் தான் இருக்க முடியும் காரணம் ஒரு நண்பன் என்ற நிலையில் இருந்து நெருங்கிய நண்பன் என்ற நிலை வர பல வருடங்கள் ஆகும், ஆனால் எல்லா துன்பங்கிளிலும் தோள்    கொடுத்து, இன்பங்களில் பங்குபெற்று, தோல்வியில் தேற்றி விட்டு, வெற்றியை உற்சாக படுத்தி, சந்தோஷத்தை அதிகபடுத்தும் ஒருவனே உண்மையான நெருங்கிய நண்பன் .


கல்லூரியில் கட் அடிக்க உதபுவனும், பரிட்சையில் பிட் அடிக்க உதபுவனும், பணம் வரும் பொது வருபவனும், பதவிக்காக உடன் இருபவனும் நண்பன் இல்லை.


உண்மையன் நட்பு உங்கள் வாழ்கையை உயர்த்தும், பொய் மற்றும் கூடா நட்பு உங்களை அளித்து விடும்.


நட்பினால் "அமுதம் உண்டு விஷமும் உண்டு" .

உங்கள் கவனத்துக்கு : இதை என் நண்பன் என்னை ஏமாற்றும்  போது நான்(ஏமாறும்) எழுதியது ,  என் நிலைமை  வர வேண்டாம் . 
தொடரும் ....

7/31/2010

ஒரு நண்பனின் நண்பர்கள் தின வாழ்த்து கவிதை


உனக்கான காத்திருப்பின் இடைவெளிகளில்
நழுவிப்போன சந்திப்புகளை மீண்டும்
மெல்ல சிறை செய்கிறது
நம் நட்பின் ஞாபகங்கள் .




என் மௌனம் பற்றி நீயும்
உன் மௌனம் பற்றி நானுமாய்
சில நேரங்களில் பதில்களற்ற
கேள்விகள் மட்டும்


நம் இருவரின் புன்னகையிலும்
அவ்வப்பொழுது தோன்றி
தொலைந்து போகிறது.


"தா" என்று கேட்காமல் கொடுத்தலில் தொடங்கி,
"வலி" என்று சொல்லுமுன் விழிகள் அழுது

உனக்காக நானும், எனக்காக நீயுமாய்
உறவாடிய நட்பின் இனிய கணங்களில்
மகிழ்ச்சியாய் கடந்துபோனது காயப்படாமல்
நமது உறவின் முதல் வருடமும் .

உன்னுடன் பேசாத கணங்களின் நிசப்தத்திலும்
மௌனத்தின் மொழி இவ்வளவு
தெளிவாகக் கேட்கும் என்பதை
உன் நட்பில் தான் உணர்ந்துகொண்டேன் .


பாதி ஓவியம் தீட்டி
களைத்துப் போன
தூரிகையின் பெரு மூச்சாய்
எப்பொழுதும் நமது மறு
சந்திப்பை பற்றிய உடன்படிக்கைகள் .

எல்லோருக்கும் இல்லை என்ற போதும்
எனக்கு மட்டுமான தேவைகளை
நான் கேட்காமல் வாரி இறைத்துவிடுகிறது
நமது நட்பில் பிறக்கும் வார்த்தைகள் .

சந்தோசத்திலும் ஒரு சோகம்
சோகத்ததிலும் ஒரு சந்தோசமென
அனைத்தையும் ஒன்றாய் ரசிக்க வைக்கிறது
நம் இருவருக்கும் இடையிலான
நட்பென்ற உறவு .


தாய்மடி இல்லையென்றபோதும்
உன் தோழமையின் அரவணைப்பில்
உறங்கிப்போகிறேன் பல இரவுகளில்
மெய்மறந்து சிறு குழந்தையாய் .


ஆயிரம் உள்ளங்கள் அருகில் இருந்தும்
ஏனோ தனிமையில் இருப்பதாய்
தவிக்கும் இந்த உள்ளம் .

உன் நட்பு மட்டும் உடன் இருந்தால்
இந்த உலகமே அருகில் இருப்பதாய்
உள்ளுக்குள் துள்ளும்
தினமும் என்னைப் பற்றி நீயும்
உன்னைப் பற்றி நானும்


நலம் விசாரித்து சிதறிச்செல்லும்
புன்னகையின் மிச்சங்களில்தான் இன்னும்
சிரித்துக்கொண்டு இருக்கின்றன

சாலையோரப் பூக்கள் .
ஒவ்வொரு இரவின் இடைவெளிகளிலும்
உன்னை மீண்டும் சந்திக்கப்போகும்
அந்த நிமிடங்கள் எண்ணியே பசியின்றி ,


தாகமின்றி உடையாத நீர்குமிழியாய்
இங்கும் அங்கும் நகர்ந்துகொண்டே இருக்கிறது
உன் நட்பின் நினைவுகள் .
மீண்டும் நம் நட்பைக்கொண்டாட
எதற்க்கு இந்த வருடம் என்னும்


நீண்ட இடைவெளி..??

வா தோழா இன்றே தொலைத்துவிடுவோம்
நமது நட்பிற்குள் இந்த வருடத்தை
நிரந்தரமாக.

காதல் கொண்ட உள்ளத்தின்
எதிர்பார்ப்புககளைவிட ஆயிரமாயிரம்
கற்பனைகள் நிரம்பி வழிகிறது
இந்த நட்புக் கொண்ட இதயத்தில் .
நானும் நீயும் சுவாசிக்கும்


ஒவ்வொரு கணமும் நம் அனுமதியின்றியே
நம் இதயங்கள் உள்ளுக்குள்
நம் நட்பை கொண்டாடிக்கொண்டே இருக்கட்டும்
இனி வரும் நாட்களில்...

எழுத்து & இடுக்கை :அ.ராமநாதன்

4/22/2010

நண்பர்களை அறிந்து கொள்ளுங்கள்

நமது வாசகர் வேண்டுகோளின்படி எனது நண்பர்களின் மூலம் வகைபடுத்தியுள்ளேன்....நீங்களும் உங்களது நண்பர்களை தெரிந்து கொள்ளுங்கள்......

நண்பர்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.

முதல் வகையில் உள்ளவர்கள் பனை மரத்தை
போன்றவர்கள். பனை மரம் நடப்ப்படும்போது
மட்டும் தண்ணீர் விட்டால் போதும். பின்னர் விட
வேண்டியதில்லை. ஆனால் காலமெல்லாம் பலன்
தந்துகொண்டே இருக்கும். அது போல அந்தவகை நண்பர்கள்
இருப்பார்கள்.

இரண்டாவது வகை நண்பர்களை தென்னை
மரத்திற்கு ஒப்பிடலாம்.அடிக்கடி தண்ணீர்
பாய்ச்சினால் தன பலன் தரும். அதுபோல
இந்தவகை நண்பர்களுக்கு நாம் அடிக்கடி
உதவிகள் செய்தால் தான் இவர்கள் நட்பின்
பயன் நமக்கு கிடைக்கும்.

மூன்றாவது வகை நண்பர்களை பாக்கு மரத்திற்கு
ஒப்பிடலாம். தொடர்ந்து தினசரி தண்ணீர் ஊற்றினால்
தான் பலன் கிடைக்கும். அதுபோல இவ்வகை நண்பர்கள்
நாள்தோறும் நம்மிடமிருந்து பயன் கிடைக்குமா என்று
பார்ப்பார்கள். பயன் கிடைக்கவில்லை என்றால் நம்மிடமிருந்து
விலகி சென்று விடுவார்கள்.

நல்ல நட்பை தேர்ந்தெடுங்கள். பலன் பெறுங்கள்.
(நன்றி : வாழ்வியல் சிந்தனைகள்)

இடுக்கை :அ.ராமநாதன்

4/20/2010

நட்பு

“எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! “
என சிலிர்ப்புடன்
பெயர் சொல்லி அழைக்கும்
நண்பனுடன் பேசுகையில்
பயமாய் இருக்கிறது
“எம் பேரு ஞாபகமிருக்கா”
என கேட்டு விடுவானோ ?

அப்பப்போ
போன் பண்ணுடா…
எனும் சம்பிரதாய விசாரிப்புக்கு
“கண்டிப்பா”
என நகர்வான்,
நான் கொடுக்காத நம்பரை
அவன்
எழுதிக் கொள்ளாமலேயே.

பொய்கள் தான்
உண்மையாகவே
நட்பைக் காப்பாற்றுகின்றன.
“நேற்று கூட பேச நினைத்தேன்”
என யாரோ பேசிக் கடக்கிறார்கள்
செல்போனில்

அவளா இது ?
மீன் வாங்கிச் செல்லும்
பெண்ணிடம்
கொஞ்சமும் மிச்சமில்லை
கால் நூற்றாண்டுக்கு முன்
கண்களில் சிரித்த வசீகரம்.

நட்பு இருப்பதாய்
சொல்லிக் கொள்ளவேனும்
அடிக்கடி
தேவைப்படுகின்றன
வெள்ளிக்கிழமை பார்கள்.

கிராமத்து மௌன வீட்டின்
கம்பி அளியின் ஊடாக
நண்பனின்
புன்னகை முகம் தெரிகிறது.
இறந்து
வெகு நாட்களான பின்னும்.

“ஏழாயிரம் சம்பளம் டா மச்சி”
என குதூகலித்துச் சொல்லும் நண்பனிடம்
சொன்னதில்லை
பல மடங்கு வாங்கும் நான்.
அவனிடம் மிகுந்திருக்கிறது நட்பு.

1/12/2010

ஒ நண்பா

நண்பர்களாக பழக வேண்டிய கட்டாயம் இல்லை....

நட்புக்கு அது தேவையும் இல்லை...

எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்

இங்கே சந்தித்துக்கொண்டோம்....

காலங்கள் போடும் கோலத்தில் நாமும் ஒரு புள்ளியாக..

நம்மை இணைக்கும் (நட்பு)பாலமாத நாமே இருக்கிறோம்..

இறுதிவரை தொடருமா என்று நமக்கே தெரியாது...

இருந்தும் உறவாடினோம்...

பிரிந்தாலும் எங்கோ எப்போதோ சந்திதுகொள்வோம்...

அப்போ நலம் விசாரிக்க மட்டுமே நேரம் கிடைக்கும்..

அவரவர் பாதையில் அவரவர் பயணத்தை தொடருவோம்...

மனதில் ஒரு வலி மட்டும் இருக்கும்...ஏன் என்று தெரியாது...

இது நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை...(உங்களுக்கு தெரியுமா)

நட்பு

உன் அன்பை தேடி: நீயும்
என்னருகில் இல்லை..
நானும்
உன்னருகில் இல்லை...
நீயும்
என்னை பார்த்ததில்லை..
நானும்
உன்னை பார்த்ததில்லை...
நீயும்
என்னிடம் எதையும் பகிர்ந்ததில்லை..
நானும்
உன்னிடம் எதையும் பகிர்ந்ததில்லை...
நீயும்
என் சந்தோஷங்களை கண்டதில்லை..
நானும்
உன் சந்தோஷங்களை கொண்டாடியதில்லை...
நீயும்
என் வருத்தங்களில்
என் கைகளை பிடித்து கொண்டதில்லை..
நானும்
உன் வருத்தங்களில்
உன் கைகளை பிடித்து கொண்டதில்லை...
நீயும்
எந்த மழை நாளிலும்
என்னோடு நடந்ததில்லை..
நானும்
எந்த மழை நாளிலும்
உன்னோடு நடந்ததில்லை...
நம்மிடம்
இருப்பதெல்லாம்
நாம்
என்று நம்மை சொல்லவைக்கும்
ஒரு சின்ன நட்பு மட்டுமே..
அது
நான் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று
உன்னையும்,
நீ சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று
என்னையும்
நினைத்துக்கொள்ள செய்கிறது