மரணம்
மனு போட்டாலும் வராது !
மறுத்தாலும் விடாது !
மரணிக்கும் வரை
வாழ்வை வசமாக்கு!
மரணிக்கும் போது
வாழ்வு வரலாறு ஆகும்!
இவ்வாண்டின் மரணம்
வருமாண்டின் விடியலுக்கு
விட்டுச்செல்லும் வெளிச்சம் !
தனி மனித மரணம்
தன் சந்ததிக்கு
கற்றுத்தரும் பாடம்
ஒவ்வெரு நாளையும்
மரணமின்றி விடியலாக்கும்!
மரணத்தை கண்டு
மிரளாமல் மரணத்தின் கைகளில்
முத்தமிட்டுவாழ்வை வளமாக்குவோம்!
"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! கோவை அ.ராமநாதன்
8/07/2010
8/06/2010
மானிட உலகில் கவலை இல்லையா ?
உலகில் கவலை இல்லாத மனிதர்கள் என்று யாரேனும் இருக்கிறார்கள்.
அவரவர்களின் வயதுக்கு தகுந்து, அவரவர்களின் வசதி, வாய்ப்புக்கு தகுந்து சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ கவலைகள் உள்ளன. கவலைகளின் இன்னொரு பக்கத்தை பிரச்சனைகள் என்று சொல்லலாமா... அல்லது எல்லா கவலைகளும், பிரச்சனை என்கிற விதையில் இருந்து தான் முளைக்கிறது என்று சொல்லலாம்மா...
எது எப்படி என்றாலும்- கவலைகள் இன்றி மனிதர்கள் இல்லை. கவலைகள் அல்லது பிரச்சனைகள் இரண்டு வகை படுகின்றன. ஒன்று அவரவர்களுக்கு இயற்கையாக ஏற்படுவது. இதை நாம் ஏற்று கொண்டு தான், சகித்து கொண்டு தான் ஆக வேண்டும். மற்றொன்று பிறரால் நமக்கு ஏற்படுவது அல்லது ஏற்படுத்தப்படுவது. "பிறரின் வம்பு தும்புக்கு போகாதவனுக்கும்" பிரச்சனைகள் ஏற்படுகின்றன. முற்றும் துறந்தவனுக்கும் கவலைகள் இருக்கவே செய்கின்றன.
மனித நாகரீகம் வளர வளர கவலைகளுக்கான அளவுகளும் அதிகரித்து கொண்டு இருப்பதாகவே தோன்றுகிறது. பயம், சில நேரம் கவலையாக வடிவம் எடுக்கிறது. தாயின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையும், பூமியின் வயிற்றுக்குள் இருக்கும் பிணமும் தான் கவலையற்றவர்கள் என்று சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் அதுவும் தவறாகபடுகிறது. வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்காக தாய் கவலைப்படுகிறாள். குழந்தைக்கும் சேர்த்து தாய் கவலைப்படுகிறாள். இறந்து போனவர், இறந்து போய் தன் கவலைகளை மறந்தாலும், பிரச்சனை இல்லாமல் அவர் போய் இருந்தால் தான், இருப்பவர்களுக்கு கவலை இல்லை... இல்லையேல் இல்லாதவர்க்கும் சேர்த்து இருப்பவர்கள் கவலைப்பட வேண்டியது தான்.
பள்ளிக்கு செல்ல துவங்கும் நாட்களிலேயே, கவலை பட துவங்கும் காலமும் துவங்குகிறது. மிக மிக இயல்பாக, சிக்கலின்றி இருக்க வேண்டிய வாழ்க்கையை, நமது ஆசைகள் தான் கவலைக்குரியதாக்கி விடுகிறதோ... எது தேவை... எது தேவையில்லை என்பதை முடிவு செய்யாமலே ஒன்றின் மீது ஆசைப்படுகிறோம். அதுவே கவலைக்குகாரணமாகிறது.
கூட்ட வேண்டிய இடத்தில் கழிப்பதாலும், பெருக்க வேண்டிய இடத்தில் வகுப்பதாலும் பிரச்சனையாகிறது. அதுவே கவலைக்கு காரணமாகிறது.
அறிவாளியாக இல்லையே என்பது முட்டாளின் கவலை. அறிவாளிகள் எல்லாம் கவலையற்றவர்களாக இருக்கிறார்களா... ஏழைக்கு பணக்காரனாக நாம் இல்லையே என்று கவலை. பணம் படைத்தவர்கள் எல்லாம் கவலையற்றவர்களாக இருக்கிறார்களா... சொந்த வீடு வேண்டும் என்பதே வாடகை வீட்டுகாரனின் கவலையாக உள்ளது. சொந்த வீடு வைத்துள்ளவர்கள் எல்லாம் கவலையற்றவர்களா.ஒன்று கிடைத்தால் நம் கவலை தீரும் என்று நினைக்கிறோம். அந்த ஒன்று கிடைத்த பின்னால், வேறொன்றுக்காக கவலைப் படுகிறோம். அதிகமாய் சிந்திப்பவர்கள் தான் அதிகமாய் கவலைப்படுபவர்கள்.
நம் சிந்தனைகள்- நம் கவலைகள் தீருவதற்கு தான் இருக்க வேண்டுமே ஒழிய - நம் கவலைகளை அதிகப் படுத்த இருக்கக் கூடாது. கவலைகள் தீர வழி உள்ளதா... உள்ளது. தலைவரு படம் தீபாவளிக்கு வரலையே என்பது சிலர் கவலை... அவள் என்ன விரும்பலயே என்பது சிலர் கவலை,.. இந்தியா கிரிக்கெட்ல தோத்துட்டே இருக்கே என்பது சிலர் கவலை... யோசிக்கையில் நாம் கவலைகளாக நினைக்கிற பல விஷயங்கள் கவலைகளே கிடையாது.
பலவீனமான மனம் படைத்தவர்க்கு காற்றுல மரம் அசைந்தா கூட பயம்
தான். ஆனால் சிலருக்கோ மரமே சாயஞ்சு விழுந்தாலும் பயம் ஏற்படுறதில்லை. ஏன் இந்த வித்தியாசம். எல்லா கவலைகளுக்குமே முடிவு என்பது ஒன்று உண்டு. அந்த முடிவை யார் வேணுமானாலும் ஊகிக்கலாம். நல்லா யோசிங்க. எந்த கவலைக்கும், எந்த பிரச்சனைக்கும் மூணே மூணு முடிவு தான். ஒரு விளையாட்டு போட்டிய எடுங்க. அதற்கும் மூணு முடிவு தான். வெற்றி, தோல்வி அல்லது ஆட்டம் கைவிடப்பட்டது(டிரா ன்னு கூட வைச்சுக்கலாம்).
இதே போல் தான் ஒரு கவலைக்கும் மூன்று முடிவு. கவலை தீரும் அல்லது கவலை தீராது அல்லது அந்த கவலை பற்றின ப்ரக்ஜை நம்மை விட்டு போய் விடும். ஒரு அடிதடில இறங்க வேண்டிய சூழல் வருது. அதற்கும் மூணு முடிவு இருக்கு. ஒண்ணு அடிப்போம் இல்ல அடி வாங்குவோம் இல்ல யாராவது சண்டைய விலக்கி விடுவாங்க. அவ்வளவு தான்.
ஒரு மனிதரிடம் உதவி கேட்டு போறோம். செய்வாரா, மாட்டாரா என்பது நம் கவலை. மூணாவதா அங்கயும் ஒரு விஷயம் இருக்கு."பார்ப்போம்" என்றோ"யோசிச்சு சொல்றேன் " என்றோ சொல்லலாம் இல்லையா. இவ்வளவு தான் எல்லாமே. ஆக கவலைகளின் கடைசி பக்கத்தை உங்களால் யூகிக்க முடிந்தால், உங்களால் எந்த விஷயத்திற்குமே கவலைப்பட தோன்றாது. கவலை என்கிற வார்த்தை உங்கள் அகராதியில் இருக்காது. இருந்தால் கூட நீக்கி விடலாம்
குறிப்பு : இதைப்பற்றி நான் எழுதி கொண்டு இருக்கும் போது, என் நண்பர் மனித உலகில் இதுதான் கவலை என நினைக்காமல் நாம் சரியாக இருந்தால்
கவலை இல்லை என்கிறார். உங்கள் எண்ணம் பதிவு செய்யவும் ....

8/05/2010
“நட்பிலும் விஷமும் உண்டு”
ஒரு மனிதன் உயர்வதற்கும் தாழ்வதற்கும் நட்பு ஒரு காரணம் ஆகின்றது.
நட்பு மிக சிறந்த பண்பு ஆனால் அதிலும் நாம் சிறிது கவனம் செலுத்த வேண்டும் . திருக்குறள் மிக தெளிவாக நட்பை பற்றி சொல்லிவிட்டது .
நகுதல் பொருட்டன்று நட்டல்: மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு
நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று; நண்பர் நெறி கடந்து சொல்லும்போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும். 784
நட்பு என்ற உயர்ந்த தத்துவத்தை நாம் இன்று சரியாக புரிந்து
கொள்ள வில்லை, இதன் காரணமாக நட்பினால் நாம் இன்று பல துன்பங்களுக்கும் ஆளாகிறோம் . அதை பற்றி இப்போது பார்ப்போம்.
மிக சிறந்த நட்பிற்கு பலர் உதாரணமாக உள்ளனர். நமது இதிகாசங்கள் நட்பை பற்றி அற்புதமாக கூறியுள்ளன. கர்ணன் தனக்கு திறமை இருந்தும் அவன் சத்ரியன் இல்லை என்று கூறி அதை வெளிகாட்ட விடாமல் தடுத்த பலருக்கு மத்தியில் துரியோதனன் அவனுக்கு ஒரு நாட்டை பரிசளித்து ஒரு அரசன் அக்கி அந்த போட்டியில் கலந்திட செய்தான். அதற்கு பிறகும் துரியோதனன் பல முறை தன் நட்பை கர்ணனுக்கு அற்புதமான முறையில் கட்டியுள்ளான். மகாபாரதத்தில் இவர்கள் நட்பு மிக அற்புதமாக சொல்லப்பட்டிருக்கிறது. இறுதியில் பாண்டவர்கள் தங்கள் சகோதர்கள் என்று தெரிந்த பிறகு நட்பிற்காக தீமையின் பக்கம் போரிடினான் தன் உயிரை விட்டான், அனால் அவனுக்கு தான் பகவான் கிருஷ்னர் விஸ்வரூபத்தை முதலில் காட்டினர்.
இன்று சமுகத்தில் மிக சிறந்து விளங்குபவர்கள் பலர் தங்கள் நண்பனின் உதவியால் தான் இவ்வாறு வந்தோம் என்பதை மறக்காமல் நினைவு கூறும்போது நட்பின் வலிமை நமக்கு அற்புதமாக புரியும்.இதை திரை துறையில் நீங்கள் அதிமாக பார்க்கலாம்.
இன்று உலகம் முழுவதிலும் உள்ள கணினிகளை இயக்கும் சிறந்த software மென்பொருளான விண்டோஸ் என்னும் ஆபரேடிங் சிஸ்டம் வடிவமைத்த மைக்ரோசாப்ட் (Microsoft) என்னும் உலகின் முன்னணி நிறுவனத்தின் ஸ்தாபகர் ஆன பில்கேட்ஸ் தன்னுடைய நண்பனான பால் ஆலென் ஆரம்ப காலத்தில் செய்த உதவிகளால் தான் உலகின் தலை சிறந்த மென்பொருள் (software) கம்பெனியை உருவாக்க முடிந்தது.
இது தான் நட்பின் வலிமை.
இவ்வாறு நட்பினால் உயர்ந்த எத்தனயோபேரை நாம் உதாரணம் சொல்ல முடியும். ஆனால் அவை அனைத்தையும் நீங்கள் உற்று பார்த்தல் உண்மையான நட்பு என்றால் என்ன என்பது புரியும். இந்த திருக்குறளை படியுங்கள்
அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவு வந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும். 787
நண்பன் என்பவன் உங்களை கேடான பாதைக்கு எப்போதும் அழைத்து செல்ல மாட்டான். நீங்கள் அவனை எதாவது கேடான செயல் செயலாம் என்று சொல்லி அழைத்தாலும் அவன் உங்களுக்கு அவ்வாறு செய்ய கூடாது என்று அறிவுரை வழங்கி நல்வழி படுத்துவான். இவ்வாறு இன்றி நீங்கள் விரும்பாவிட்டாலும் கேடான பாதைக்கு அழைத்து செல்லும் ஒருவன் ஒரு காலமும் உங்கள் நண்பனாக இருக்க முடியாது.
பத்தாம் வகுப்பில் நன்றாக மதிப்பெண் எடுத்த ஒரு மாணவன் பனிரெண்டாம் வகுப்பில் மிக மோசமாக மதிப்பெண் எடுத்து சில சமயம் தோல்வி அடைவதையும் நாம் இப்போது காண்கின்றோம். இதற்கு தொண்ணூறு சதவிதம் காரணம் மோசமான நட்பாகத்தான் இருக்கும். எனவே பல மாணவர்கள் கூடா நட்பினால் தங்கள் வாழ்கையை இழக்கின்றனர். இரண்டு வருட தவறான நட்பு ஒரு நல்ல மாணவனின் முழு எதிர்காலத்தையும்
வீனாகி விடும்.
உண்மையான நண்பன் யார் என்பதை நீங்கள் அடையாளம் கண்டு கொள்வது எளிது. சிரிக்கும் பொது மட்டும் உடன் இருக்காமல் நீங்கள் அழும பொது ஆறுதல் கூறும் ஒருவனே உண்மையான நண்பன். ஒரு அழகிய ஆங்கில வழி சொல்லை பாருங்கள்
"A real friend is one who walks in when the rest of the world walks out."
அதாவது உலகம் உங்களை விட்டு விலகும் பொது எவன் ஒருவன் உங்களை விலகாமல் இருக்கிறானோ அவனே உண்மையான நண்பன்.
அரிஸ்டாடில் என்னும் கிரேக்க தத்துவ ஞானி நட்பை பற்றி ஒற்றை வரியில் சொல்லிவிட்டார், அது என்ன தெரியுமா?.
“துன்பங்களின் பொது பொய்யான நண்பர்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்”.
கார் என்னும் ஊர்தியை கண்டுபிடித்த ஹென்றி போர்ட் இவ்வாறு நட்பை பற்றி அழகாக கூறியுள்ளார்
"My best friend is the one who brings out the best in me."
எனது சிறந்த நண்பன் யார் என்றால், எவன் என்னுள் உள்ள சிறந்தவைகளை வெளியில் கொண்டு வருகின்றனோ அவனே அவன்.
இப்போது நாம் எவ்வாறு நட்பை தவறாக புரிந்து கொள்வதால் அவதி உருகிறோம் என்று பார்ப்போம்.
நம்மை சுற்றி இருப்பவர்கள் அல்லது நமக்கு தெரிந்தவர்கள் எல்லாம் நம் நண்பர்கள் ஆகி விட மாட்டார்கள். இதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
நம் அலுவலகத்தில் இருப்பவர்கள் பலர் இருக்கலாம் ஆனால் அதில் சிலர் மட்டும் தான் நம் நண்பர்களாக இருக்க முடியும். இங்கே மிக முக்கியமான ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன். இப்போதெல்லாம் முக்கியமாக மிக சிறந்த கல்லூரியில் படித்து software துறைக்கு வரும் நல்ல மாணவர்கள் பலர் மது பழக்கம் இன்றி வந்து பிறகு அலுவலகத்தில் இவைகளுக்கு அடிமை ஆகின்றனர், அதற்கு காரணம் அவர்கள் உடன் இருக்கும் சிலரே. அதாவது இப்போது பார்ட்டிகளில் மட்டும் குடிப்பதை “social drinking” என்று பெயர் வைத்து அழைகின்றனர், ஆனால் மது ஒரு போதை பொருள் அதை ஒரு முறை நீங்கள் சுவைத்து விட்டால் அது தன் வேலையை காட்டிவிடும், எனவே நீங்கள் சிறிது காலம் பார்ட்டிகளில் மட்டும் குடிக்கும் சோசியல் ட்ரின்கர் என்று சொல்லி கொண்டாலும் பின் ஒரு காலத்தில் நீங்கள் ஒரு குடிகாரர் அக போகிறேர்கள் என்பது உண்மையே. கசப்பாக இருந்தாலும் இது தான் நிஜம். எனவே IT துறையில் உள்ள திறமை மிக்க நண்பர்களே உங்களை கெடுக்கும் நண்பன் பேச்சை கேட்டு சோசியல் ட்ரின்கிங் என்னும் கேடான பழக்கத்திற்கு அடிமை ஆகி விடாதீர்கள். நட்பின் பெயர் சொல்லி உங்களை மோசமானவன் ஆக்கும் எல்லாறையும் ஒதுக்கி விடுங்கள், இதன் மூலம் பிற்காலத்தில் நீங்கள் சந்திக்க போகும் பல இன்னல்களில் இருந்து விடுபடலாம்.
மோசமான நண்பர்கள் பட்டாளத்தை காண வேண்டுமா? மோசமான நட்பு எப்படி இருக்கும் என்று நேரில் காண வேண்டுமா? அது மிக எளிது.
மது கடைகளில் ஒன்றாக கட்டிபிடித்து உருளும் நபர்களும், சூதாட்ட திடலில் அன்பாக பேசி பழகும் அனைவரும், போதைக்கு அடிமை ஆகி சுற்றி திரியும் பலரும், இவர்கள் வாழ்கையில் நட்பினால் கெட்டு போனவர்களே, இவர்கள் நட்பும் கூட அவர்களை போன்று இழிவனதே. இது போன்றவர்களை உங்கள் நண்பர்கள் என்று மறந்தும் கூட வெளியே சொல்லிவிடாதீர்கள், அது உங்களுக்கு மிக பெரிய அவமானத்தை பின்னல் கொண்டு வந்து விடும். இம்மாதிரி பழக்கம் உடையவர்கள் உங்கள் உடன் பனி புரிந்தால் அவர்களிடம் பேசுங்கள் பழகுங்கள், அதாவது சக உழியர் என்ற முறையில், ஆனால் அவர்களுடன் நட்பு வைக்காதீர்கள். அலுவலகம் முடிந்ததும் அவர்கள் யாரோ நீங்கள் யாரோ என்று இருங்கள்... இது உங்களுக்கு படிக்கும் பொது சற்று கடினம் அக தான் இருக்கும் ஆனால் காய்ச்சலுக்கு வலிக்கும் ஊசி போடுவது எவ்வளவு நன்மை தருமோ அது போல இந்த கடின பழக்கம் உங்களை கேடுகளில் இருந்து காப்பாற்றும்.
மிண்டும் சொல்கிறேன் தெரிந்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை மிக சரியாக புரிந்து கொள்ளுங்கள். உங்களை யாரிடமும் பழக வேண்டாம் என்று நான் சொல்லவில்லை ஆனால் உங்கள் நலம் விரும்புவோர்களையும், நல்லோர்களையும் நண்பர்களாக ஏற்று கொள்ளுங்கள், மீதம் உள்ள அனைவரையும் தெரிந்தவர்கள், உறவினர்கள், சக ஊழியர் என்று பாகுபடுத்துங்கள்.
(இது நான் பட்ட அவஸ்தைகள்)
இன்று நட்பு என்னும் சொல் மிக இழிவாக பயன் படுத்தப்படுவது வருத்தம் தருகின்றது. ஒரு நண்பன் என்னுடன் இருக்கும் பொது நட்பு பாராட்டும் ஒரு நல்ல நண்பன் அடுத்த நண்பனிடம் சென்றவுடன் இவ்வளவு நாள் யாரை நண்பன் என்று சொன்னானோ அவனே தற்போது இருக்கும் நட்புடன் என்னை
இழிவாக பேசுகிறான். ஆக அவன் காட்டியது உண்மையான நட்பு அன்று , இது போன்று பணத்துக்காக, சொத்துக்காக உங்களுடன் சுற்றும் இழிவானவர்களை உங்கள் நண்பர் என்று தலை மேல் தூக்கி வைத்து ஆடாதீர்கள் உங்கள் பணம், பதவி, சொத்து போகும் பொது அவர்களும் சென்றிருப்பார்கள், உண்மையை சொல்ல போனால் அவ்வாறான மோசமான நண்பனே கூட உங்கள் பணத்தை எல்லாம் சுருட்டி சென்றிருப்பான். ஆக உங்களிடம் பணம் அதிகம் இருந்தால் நீங்கள் உங்கள் நண்பர்களை தேர்வு செய்வதில் மிக மிக கவனமாக இருங்கள். பணத்துக்காக நண்பனையும் கொலை செய்யும் மோசமான ஆட்கள் இன்று நிறைய உண்டு. நண்பர்கள் தேர்வில் நிதானம் தேவை.
உலகின் தலை சிறந்த மனிதர்கள் உருவாவதற்கு நட்பு மிக முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது, ஆனால் அது நுற்றில் பத்து. மீதம் தொண்ணூறு சதவிதம் நட்பினால் என்ன ஆகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. மீண்டும் சொல்கிறேன் யாரையும் விலக்காதீர்கள் ஆனால் சரியான நண்பனை விட்டு விடாதீர்கள் அவனை அடையாளம் காண்பது எளிதல்ல.
எல்லோருமே எனக்கு நண்பர்கள் தான் என்பவனுக்கு உண்மையில் யாரும் நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியாது, அவனுக்கு எல்லாரையும் தெரியும் அவ்வளவுதான். நெருங்கிய நண்பர்கள் என்றால் ஒருவனுக்கு மிக சிலர் தான் இருக்க முடியும் காரணம் ஒரு நண்பன் என்ற நிலையில் இருந்து நெருங்கிய நண்பன் என்ற நிலை வர பல வருடங்கள் ஆகும், ஆனால் எல்லா துன்பங்கிளிலும் தோள் கொடுத்து, இன்பங்களில் பங்குபெற்று, தோல்வியில் தேற்றி விட்டு, வெற்றியை உற்சாக படுத்தி, சந்தோஷத்தை அதிகபடுத்தும் ஒருவனே உண்மையான நெருங்கிய நண்பன் .
கல்லூரியில் கட் அடிக்க உதபுவனும், பரிட்சையில் பிட் அடிக்க உதபுவனும், பணம் வரும் பொது வருபவனும், பதவிக்காக உடன் இருபவனும் நண்பன் இல்லை.
உண்மையன் நட்பு உங்கள் வாழ்கையை உயர்த்தும், பொய் மற்றும் கூடா நட்பு உங்களை அளித்து விடும்.
நட்பினால் "அமுதம் உண்டு விஷமும் உண்டு" .
உங்கள் கவனத்துக்கு : இதை என் நண்பன் என்னை ஏமாற்றும் போது நான்(ஏமாறும்) எழுதியது , என் நிலைமை வர வேண்டாம் .
தொடரும் ....

8/04/2010
நம்மை பண்படுத்துவது பழக்க வழக்கங்கள்...
ஒவ்வொரு தனி மனிதனின் வெற்றி, தோல்விக்கும்- அவனது பழக்க, வழக்கங்கள் மிக முக்கிய காரணங்களாக உள்ளன. நமது பழக்க வழக்கங்கள்- நம்மை மேன்மை அடைய செய்ய வேண்டுமே ஒழிய, அவை நம்மை படுகுழிக்கு தள்ளி விடக்கூடாது. ஆனால் அனேகரின் பழக்க வழக்கங்கள் அந்த காரியங்களையே செய்கின்றன. தெரிந்தோ,தெரியாமலோ நம் பழக்க
வழக்கங்கள் நம் செயல்களோடு பின்னி பிணைந்து உள்ளன.
சில பழக்க வழக்கங்கள் நம்மை அடையாளம் காட்டும் வல்லமை படைத்தவை. "அவனா நீ" என்பது போல... பழக்க, வழக்கங்கள் என்றால் அவை ஏதோ கெட்டதாக அறியப்படும், போதை பழக்க வழக்கங்களாக தான் இருக்க வேண்டும் என்று கண் முடித்தனமாக நம்பி கொண்டு இருக்கிறோம். பழக்க வழக்கங்கள் என்பது அவை மட்டுமல்ல. மாற்றி கொள்ள வேண்டிய அல்லது திருத்தி கொள்ள வேண்டிய கெட்ட பழக்க வழக்கங்கள் நிறைய உள்ளன. போதை பழக்கங்களை கூட மறக்கடித்து விடலாம்.
ஆனால் ரத்தத்தோடு, ஊறிவிட்ட பிறவி குணங்களாக அறியப் படுகிற பழக்க வழக்கங்களை மாற்றுவது மிக மிக கடினம். ஒருவருக்கு பிறரை ஒயாமல் குறை சொல்லும் பழக்கம் இருந்தது. குறை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி... குறை சொல்வார். அதனால் சிலருக்கு வேதனை, சிலருக்கு எரிச்சல் தான் மிஞ்சும். நமது பழக்க வழக்கங்கள் நம்மை பாதித்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் பிறரை என்று வந்தால் நம் பழக்க வழக்கங்களை அவசியம் மறு ஆய்வு செய்யவே வேண்டும்.
பிறரை கேலி பேசுவது சிலருக்கு பழக்கம். "அப்படி நா என்ன பெரிசா சொல்லிட்டேன்" என்று தங்கள் பேச்சுக்கு நியாயம் கற்பிக்கவும் செய்வார்கள். சில பழக்க வழக்கங்கள் தன்னை தானே பரிகாசிக்கும் விதமாகவும் இருக்கும். அது... சிலர் எந்நேரமும் தங்கள் கை, கால்களை கழுவி கொண்டே இருப்பார்கள். ஒரு நாளைக்கு பத்து, இருபது முறை என்று... மற்றவர்களுக்கு
வேடிக்கையாக இருக்கும். மருத்துவர்கள் சொல்லுகிறார்கள்-
இதை ஒரு மன வியாதி என்று.
அதீத கோபம் கூட மாற்றி கொள்ள வேண்டிய ஒரு பழக்க வழக்கம் தான். ஒரு நபர் இருந்தார். நம்மோடு பேசுவார். தான் பேச வேண்டிய விஷயங்களை எல்லாம் முழுமையாக பேசின பிற்பாடு, நாம் அவருக்கு பதில் சொல்லவோ அல்லது நம் தரப்பு விஷயங்களை சொல்ல துவங்கும் போது, வேறு பக்கம்
திரும்பி வேடிக்கை பார்ப்பார் அல்லது செல்பேசியை பார்த்து கொண்டிருப்பார்.
இது எதிரே இருப்பவனை ஏளனப்படுத்தும் ஒரு செயல் என்பதை அவர் உணரவே இல்லை. ஒரு நாள் அவரை ஒருவர் சற்று கடுமையாக பேசிஉணரச் செய்யார். இப்போது ஒரளவுக்கு தன்னை மாற்றி கொண்டு இருக்கிறார்.
இவர் போலவே இன்னும் சிலர் இருக்கிறார்கள். பிறர் எது சொன்னாலும் காது கொடுத்து கேட்காத ரகங்களாய்... அப்படி இருப்பதில் சில நன்மைகளும் உள்ளன... சில தீமைகளும் உள்ளன. யாராவது, அவர்களிடம் ஒரு முக்கியமான தகவல் சொல்லி இருப்பார். அவர்களுக்கு அவை முக்கியமில்லாத பட்சத்தில், "நா சரியா கவனிக்கல" என்று தப்பி விடுவார்கள். அது அவர்கள் அடையும் நன்மை. அதே நேரம் வேறு ஒருவர், அவர்களிடம் சொல்லாத ஒரு விஷயத்தை சொன்னதாக அடித்து சொல்வார்.
"நீங்க தான் சார் சரியா காது கொடுத்து கேட்கல. நீங்க என்னிக்கு எதையும் உருப்படியா கேட்டு இருக்கீங்க" என்பார். இது அவர்கள் அடையும் தீமை.
நல்ல விஷயங்களை பாராட்டுவதே சிலரின் பழக்கமாக இருக்கும். இவர்
தெரிந்தவரா, தெரியாதவரா... நமக்கு வேண்டியவரா, வேண்டாதவரா என்கிற பாகுபாடெல்லாம் பார்க்காமல், நல்லதை பாராட்டவேண்டும் என்பதே, அவரின் பழக்கமாக, நோக்கமாக இருக்கும். சிலர் எவரிடமும் சாந்தத்துடன், மிக கண்ணியமாக பேசுவதையே பழக்கமாக கொண்டிருப்பார்கள். வயது வித்தியாசம் பாராமல் மரியாதையாகவே பேசுவார்கள். வசீகரிக்கும் குரலுக்கு சொந்தக்காரர்களாய் இருப்பார்கள். கோபப்படவும் மாட்டார்கள்.
கோபப்படுத்தவும் மாட்டார்கள்.
இதற்கு எதிர்மறையான பழக்க வழக்கத்துடன் சிலர், சத்தமாய் பேசும் பழக்கம் கொண்டவர்களாய் இருப்பார்கள். இதை தவறென்று சொல்ல முடியாது. அதுவொரு பழக்கம். அவ்வளவே. சிலர் இருக்கிறார்கள். யாரையும் மரியாதை குறைவாய் பேசுபவர்களாக இருப்பார்கள். பொது இடங்களில், மனைவியரை டி போட்டு பேசும் பழக்கம் கொண்டவர்களாக... அவரது கேரகடரே- அப்படி பேசுவதனால் அடிபட்டு போகும். நம் பழக்க வழக்கங்கள்,
இவனை நம்புவதா, வேண்டாம்மா என்று பிறருக்கு காட்டி கொடுத்துவிடும்.
வெற்றி பெற்ற அனைவரும் நல்ல பழக்க வழக்கங்கள் கொண்டவர்களாகவே இருப்பார்கள். அதே நேரம், நல்ல பழக்கங்கள் கொண்ட எல்லோரும் நல்லவர்களாக தான் இருக்க வேண்டும் என்ற அர்த்தம் இல்லை. ஒரு உதாரணம். நான் படித்த காலத்தில் கிளாஸ்க்கு வரும் முதல் மாணவன் என் நண்பன் தான்... ஆனால் படிப்பில் கடைசி. கிளாஸ்க்கே ஒழுங்காக வராத மாணவன் நன்றாக படிப்பான். வழக்கமான முரண்களில் இதுவும் ஒன்று.
நேரந்தவறாமை சிலரது பழக்க வழக்கமாக இருக்கும். நேரம் தவறுவதே சிலரின் பழக்க வழக்கமாக இருக்கும். நேரந் தவறுபவர்கள், வாழ்க்கையில் எல்லா விஷயத்தையும் தவற விடுபவர்களாகவே இருப்பர். ஒரு சமயம், ஒரு நண்பரை வைத்து சில காரியம் ஆக வேண்டியிருந்தது. அவர் வீட்டுக்கு சென்ற போது, "நீங்க முன்னாடி போய் சார் வீட்டுல வெயிட் பண்ணுங்க. பத்து நிமிஷத்துல வர்றேன்" என்றார். சம்பந்தப்பட்ட மூன்றாம் நபர் வீட்டிற்கு சென்று காத்து இருந்தேன். பத்து நிமிஷத்தில் வருவதாக சொன்ன நபர், அரைமணியாகியும் வரவில்லை, திரும்ப அவரை தேடி போனால் தூங்கி கொண்டிருந்தார். (சில நேரங்களில் நானும் இந்த தவறை செய்தேன்.ஆனால் மாற்றி வருகிறேன் )
இது மாதிரி நிறைய பேர்,,, நம்மை ஒரு வேலைக்கு வரச் சொல்லிவிட்டு, அவர்கள் தங்கள் வீட்டில் தூங்கி கொண்டிருப்பார்கள். இது மாற்றி கொள்ள வேண்டிய பழக்க வழக்கம். இந்த பழக்கம் அவர்களுக்கே ஒரு நாளைக்கு எதிர் வினையை தரும். பொய் பேசுவதே சிலரின் பழக்கமாக இருக்கும். அதனால் அவர்களால் பெரிதாய் எதையுமே சாதிக்க இயலாது. அவர்கள் உண்மை பேசினாலும், அதையும் பொய்யாக தான் உலகம் பார்க்கும்.
மாற்றிக் கொள்ள வேண்டிய பழக்க வழக்கங்கள் நம்மிடம் இருந்தால் மாற்றிக் கொண்டே ஆக வேண்டும். நல்ல பழக்க வழக்கங்களுக்கு நாம்
நிறைய முக்கியதுவம் தருகிறோம். அது சரியே. "உன் பழக்க வழக்கமே சரியில்ல" என்று அப்பா, பிள்ளையிடம் கேட்க ஆரம்பித்து, பிறகு ஆசிரியர்கள், பிறகு நண்பர்கள் என்று தொடர்ந்து மனைவி, பிள்ளைகள் வரை சொல்ல ஆரம்பிப்பார்கள்.
நல்ல பழக்க வழக்கங்கள் ஏதோ நமக்கு மட்டும் உரித்தானதல்ல. அது நம்மை கடந்து நம் சந்ததியினரையும் சிறப்பாக வழி நடத்த கூடிய ஒரு பாதை. நல்ல பழக்க வழக்கங்கள் நம்மை ஏற்றம் பெறச் செய்யட்டும்.
8/03/2010
அன்றோ எழுதிய கவிதை -முழு நிலவே
என் காதல் வானில் ஒரு வெண்ணிலவே
அது வளர்ந்து வந்தது என் நெஞ்சிலே
தாயின் கனிவை கண்டதுன் உறவிலே
அது சேயாய் வளர்ந்த்துன் கருவிலே
ஊடல் மேகம் வந்ததென் சொல்லிலே
கூடல் மழையாய் பொழிந்ததுன் கண்ணிலே
காதல் பசலையும் உன் பிரிவிலே
அது தீரும் நேரமோ நான் உன் அருகிலே
உன்னால் வந்த காதல் நோயிலே
தேய்பிறையாய் தேய்ந்தேனடி பெண்ணிலவே
நோயே மருந்தாம் வள்ளுவன் சொல்லிலே
உன்னில் நான் தெளிந்தேனடி பொன்னிலவே
என் இரவின் இருள் நீக்கும் வெண்ணிலவே
பகலிலும் தஞ்சம் புகுந்தது என் வீட்டினிலே
வானில் தேய்ந்து வளரும் வெண்ணிலவே
என்னோடு இருக்கையிலே என்றும் முழுநிலவே…
இடுக்கை :அ.ராமநாதன்
8/02/2010
தாய்த்தமிழ் பிறந்திருக்கிறது... 2
தொலைக்காட்சியைத் தொடர்ந்து ஊடகங்களில் அடுத்து இடம் வகிப்பதுசெய்தித்தாள்கள். ஒரு பிரபலமான தமிழ் செய்தித்தாளின் விளம்பரத்தைக் கூடஅவர்களால் ஆங்கிலம் கலக்காமல் எடுக்க முடியவில்லை. "நம்பர் ஒன் நம்பர்ஒன் தமிழில்..........நம்பர் ஒன்" என்றுதான் எடுத்துள்ளனர்.
பல தமிழ் நாளிதழ்கள் இன்று வியாபார நோக்கத்தில்மட்டுமே வெளி வருகின்றன. இன்று நகர்ப் புறங்களில்வசிக்கும் தமிழர்களில் எத்தனை பேர் தமிழ் நாளிதழ்வாங்கிப் படிக்கிறோம். ஏன் நான் பணிபுரிந்த அலுவலகத்தில் கூட
ஆங்கில நாளிதழ் தான். தமிழ் நாளிதழை தேனீர்அருந்தகங்களில்தான் பெரும்பாலும் காணமுடிகிறது.
தேனீர் அருந்தக உரிமையாளர்கள் அவர்களுக்கேத் தெரியாமல் தமிழ்வளர்க்கிறார்களே என்று ஒரு மகிழ்ச்சி. அதற்காக அனைவரும் புராணகால தமிழ்பேச வேண்டும் என்று அர்த்தமல்ல. நம்மிடையே உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தமிழை இறவாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமைநமக்கிருக்கிறது.
நமக்குத் தெரிந்த நல்ல தமிழில் தொடர்ந்து பேசினால்உயிர்வலியில் துடிக்கும் தமிழுக்கு குருதிகொடுத்ததற்குச் சமம். இன்றைய காலகட்டத்தில்தமிழுக்கு குருதி கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. ஆம்முதன் முதலில் தமிழுக்காக மட்டும் ஒருதொலைக்காட்சி ஒளிபரப்பு (இரண்டரை ஆண்டுகாலமாக). ஆனால் அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும்தொடர்ந்து பார்க்க நம்மில் யாருக்கும் ஆர்வமில்லை.
காரணம் அதில் திரைப்பட நிகழ்ச்சிகளோ, பொழுதுபோக்கு அம்சங்களோஇல்லை. இதில் பலரால் விரும்பப் படும் நிகழ்ச்சி "சொல் விளையாட்டு". அதன்தொகுப்பாளர்கள் பேசும் தமிழ் இனிமையாகத்தான் இருக்கிறது. அந்ததொலைக்காட்சி வேற்று மொழி கலக்காத பொழுதுபோக்கு அம்சங்களை சேர்த்துதமிழுக்கு உயிர் கொடுக்க முயற்சிக்கலாம் (மக்கள் தொலைக்காட்சிக்குநன்றிகள்).
அடுத்து விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியானதமிழ் பேச்சு எங்கள் மூச்சு". என்ன ஒரு அருமையானநிகழ்ச்சி அந்த நிகழ்ச்சியின் மூலம் கூட நம்மால் தமிழ்கற்று கொள்ள முடியும் என்று தோன்றுகிறது. தமிழைப்பற்றி மழலைகள் சொல்லும் விடயங்கள் நம்மில்பலருக்குத் தெரியாமலிருக்கிறது.
அந்த மழலைகளின் தமிழ் உச்சரிப்புகளை கேட்கும்ஒவ்வொருவருக்கும் நாம் ஏன் தமிழை விடுத்து வேற்று மொழியை தேவையற்றஇடங்களில் பேச வெண்டும்? என்ற உணர்வு நிச்சயம் வரும். இது போன்றநிகழ்வுகளும் தமிழார்வம் மிக்க குழந்தைகளும் கொடுத்த மருத்துவ உதவிகளால்தமிழ் உயிர்ப் பிழைத்து மறுபிறவி எடுத்திருக்கிறது. ஆம் "தமிழ் பிறந்திருக்கிறது". அந்த தமிழை குழந்தை போல் பாவித்து வளர்க்க வேண்டிய கடமை ஒவ்வொருதமிழனுக்கும் இருக்கிறது.
எனவே இன்று உலகின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.ஆனால் உலகளாவிய ரீதியில் தமிழ் மொழியின் ஆதிக்கம் குறைந்து வருவது கண்கூடு.எனவே எம் உயிரினும் மேலான எம் தாய் மொழியை கட்டிக்காப்பது எமக்கு தலையாய பொறுப்பு. எனவே தழிழர்களாகிய நாம் அனைவரும் தமிழ்ர்களிடம் தமிழில் கதைப்போம், எமது இளம் சந்ததியினருக்கும் தமிழ் பற்றை ஊட்டுவோம்.
கோவை அ.ராமநாதன்
பி.கு:
இந்தப் பதிவில் நானே எத்தனை இடங்களில் தமிழ்க் கொலை செய்திருக்கிறேன்எனத் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.
8/01/2010
தாய்த்தமிழ் பிறந்திருக்கிறது...
உலகின் பழமையான மொழிகளில் நம் தமிழ் மொழியும் ஒன்று என்பதில் நம் அனைவருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு ஆங்கிலம் அல்லது சமசுகிருதம் கலக்காமல் நல்ல தமிழ் பேச அல்லது எழுதத் தெரியும்?
எவனோ ஒரு மடந்தை சொன்னதாக பாரதி சொன்னது போல் "தமிழ் இனி மெல்லச் சாகும்" என்ற சொல் பலித்து விட்டது. இன்றைய நிலையில் தமிழ் விபத்துக்குள்ளாகி உயிருக்குப் போரடுபவன் போல "அவசர சிகிச்சைப் பிரிவில்" சேர்க்கப்பட்டுப் பல வருடமாகிறது. இன்னும் சுயநினைவில்லாமல் தான் கிடக்கிறது.
இக்காலக் குழந்தைகளில் எத்தனை குழந்தைகள் தமிழின் மிக அழகான, ஒவ்வொரு தமிழரின் முதல் வார்த்தையான "அம்மா" என்ற சொல்லை உச்சரிக்கின்றன. இப்போதெல்லாம் "மம்மி" தான்.
5 வயதில் பாலர் பள்ளி சென்று சத்துமாவு உருண்டை, முட்டை எனச் சத்தான உணவுண்டு தமிழில் கற்று, பலருடன் சாதி, மதம், பணக்காரன், ஏழை என வித்தியாசமில்லாமல் கூடிவிளையாடும் போது கிடைக்கும் ஆரோக்கியமும், ஒற்றுமையும் 3 வயதில் முன்கல்வி (PreKG) கற்கும் குழந்தைகளிடம் இல்லை.
தமிழ் மொழியை அழிப்பதில் ஊடகங்களில் முதன்மையான தொலைக்காட்சிக்கு முதன்மையானப் பங்கு இருக்கிறது. தொலைபேசியில் உரையாடும் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்கள் பேசுவதெல்லாம் தமிழ் தானா? அவர்களில் பலருக்கு "ழ" என்னும் எழுத்தை உச்சரிக்கத் தெரியவில்லை. அவர்கள் நிகழ்ச்சியின் போது பெரும்பாலும் உபயோகிக்கும் வார்த்தைகளில் சில கீழே...
"ஹலோ"
"வெல்கம் பேக் டூ ஆப்டர் எ பிரேக்"
"ஒரு சின்ன கமர்சியல் பிரேக்", "ஐ வில் கேட்ச் யூ அதர் எந்த் ஆப் த பிரேக்"
"அன் டில் தென் பை பை ப்ரம்"
"உங்க டி.வி வால்யூம் கம்மிப் பண்ணுங்க"
"எங்கிருந்து கால் பண்றீங்க"
"நீங்க யார லவ் பண்றீங்க"
"நம்ம ரெகுலர் காலர்"
இதே வாக்கியங்களைத் தமிழில் உச்சரிக்கும் போது எவ்வளவு அழகு என்பதைப் பாருங்கள்..
"வணக்கம்"
"ஒரு விளம்பர இடைவேளை முடிந்து மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி"
"சிறிய விளம்பர இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம்"
"மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது"
"உங்கள் தொலைக்காட்சியின் ஒலியைக் குறைத்து விட்டுப் பேசுங்கள்"
"எங்கிருந்து அழைக்கிறீர்கள்"
"நீங்கள் யாரைக் காதலிக்கிறீர்கள்"
"நமது தொடர் அழைப்பாளர்"
இடுக்கை : அ.ராமநாதன்
பி.கு: என்னடா இவன் "தமிழ் பிறந்திருக்கிறது" என்று தலைப்பு வைத்து விட்டு அழிவைப் பற்றி எழுதுறானேன்னு குழப்பம் வேண்டாம். அடுத்த தொடரில் இது பற்றி பார்க்கலாம். இந்தப் பதிவில் நானே எத்தனை இடங்களில் தமிழ்க் கொலை செய்திருக்கிறேன் எனத் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)