தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

11/07/2010

ரசிக்கும் சீமானே............

உன் மனசு எப்படி
அப்படியே உன் வாழ்க்கை
உன் உழைப்பு எப்படி  
அதுவே   உன் வெற்றி
உன் பேச்சு எப்படி  
அவ்வாறே உன் கெளரவம்.
உன் சிந்தனை எவ்விதம்
அவ்விதமே உன் பயணம்.


(கவியரசு வைரமுத்து எழுதிய உன்னால் முடியும் என பாடல் மூலம் தோன்றியவை ) 

ஒவ்வொரு நிமிடமும்
செய்ய எவ்வளவோ
வேலைகள் உண்டு.


ஒவ்வொரு இடத்திலும்
ரசிக்க எவ்வளவோ
விஷயங்கள் உண்டு.


வேலையை செய் அல்லது
அழகை ரசி...


சும்மா இருந்து
துரோகம் செய்யாதே


உனக்கும் .. வாழ்வுக்கும்...

11/06/2010

முயற்சி திருவினை ஆக்கும்

வெற்றிக்கு மிக முக்கிய தேவைகளில் ஒன்று முயற்சி. உலகத்து மனிதர்களை இரு வகையாக பிரிக்கலாம். முயற்சி செய்பவர்கள்; முயற்சி செய்யாதவர்கள். சற்று யோசித்தால் முதல் வகை மனிதர்கள் வெற்றியாளர்களாகவும், அடுத்த வகை மனிதர்கள் சாதாரண மனிதர்களாகவும் இருப்பதை உணரலாம்


திருக்குறளில் வள்ளுவர் முயற்சி, சோம்பேறித்தனம் இவை பற்றி பொருட் பாலில் மீண்டும் மீண்டும் எழுதி உள்ளார்.


முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.


“முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்”.


எடிசன் பற்றி வாசித்துள்ளீர்களா? வாழ்க்கை முழுதுமே ஆராய்ச்சி, ஆராய்ச்சி என செலவிட்டு இவர் கண்டுபிடித்த விஷயங்கள் தான் எத்தனை.. எத்தனை.. ? எவ்வளவு முயற்சி அதற்கு அவர் எடுத்திருக்க வேண்டும்? அநேகமாய் அவர் கண்டு பிடித்தவற்றை விட பல மடங்கு அதிகமாக அவர் அந்த முயற்சிகளில் தோற்றிருக்க கூடும்.

CA, ACS, ICWA போன்ற கோர்சுகள் படிப்பவர்களை கவனித்து பாருங்கள். இந்த தேர்வுகளில் ஒரு குருப்பிற்கு மூன்று அல்லது நான்கு தேர்வுகள் இருக்கும். இவற்றில் ஒன்றில் பெயில் ஆனாலும் அனைத்து பேப்பர்களும் எழுத வேண்டும். இந்த கோர்சுகள் படிப்பவர்களில் ஒரு முறையாவது இப்படி பெயில் ஆகி அனைத்து பேப்பர்களையும் மறுபடி எழுதாதவர்கள் மிக சில பேர் தான். இப்படி மறு படி மறு படி எழுதி பாஸ் ஆகின்றனர் சிலர். பலரோ தொடர்ந்து முயற்சி செய்ய மனமின்றி வேறு படிப்புகள் பக்கம் திரும்பி விடுகின்றனர். முயன்றவர் வெல்கின்றனர்.. முயல மனமில்லாதோர் சிறு வேலைகளில் சேர்ந்து தங்களை திருப்தி செய்ய முயல்கின்றனர்.

எனக்கு தெரிந்த இரு குடும்பங்களின் கதை சுருக்கமாக சொல்கிறேன்.


முதல் குடும்பத்தில் ஆறு பெண்கள். கணவர் சாதாரண வேலை தான். ஆனால் அதன் பின் மாலையில் பார்ட் டைம் வேலை பார்த்தார். மனைவி இவருக்கு பெரும் உறுதுணை. சிறுக சிறுக சேர்த்து அனைத்து பெண்களையும் படிக்க வைத்தனர். அனைவருக்கும் சென்னையில் சொந்தமாய் வீடு வாங்கினர். ஒவ்வொருத்தருக்கும் 25 பவுன் நகை போட்டு திருமணம் செய்து தந்தார்கள். பெண்கள் அனைவரும் வேலை பார்க்கின்றனர். மிக சாதாரண குடும்பமான அவர்கள் அடுத்த generation-ல் சற்று மேலே வந்துள்ளனர். அந்த தந்தையின் உழைப்பை நினைத்து பாருங்கள்!! இன்றைக்கும் அவர் உழைத்து பேரன் பேத்திகளுக்கு நகை போன்றவை வாங்கி தருகிறார்!! உழைப்பு!!


அடுத்த குடும்பம்: இவர்களுக்கு ஒரே பெண். கணவர் சொந்தத்தில், சிறு வயதிலேயே ஒரு பெண் அனாதையாய் நின்றது. அந்த பெண்ணை எடுத்து வளர்த்து படிக்க வைத்தார். மனைவி உள்ளிட்ட மற்ற உறவினருக்கு விருப்பம் இல்லா விடினும் அந்த பெண்ணை நன்கு படிக்க வைத்து வேலை வாங்கி தந்து திருமணம் செய்து தர வேண்டும் என உறுதியாய் இருந்தார். அவ்வாறே செய்தும் முடித்தார். இந்த திருமணம் சென்ற போது நான் நெகிழ்ந்து போயிருந்தேன். இப்படியும் மனிதர்கள் உள்ளனரா என!!


"கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்க படும்; தேடுங்கள் கண்டடைவீர்கள்" இவை இந்து, இஸ்லாம், கிறித்துவ மத புனித நூல்கள் அனைத்தும் சொல்கிற விஷயம்.


ஒரு புத்தகத்தில் படித்த விஷயம் ,அந்த ஆசிரியர் ஒன்று சொல்வாராம். " ஒரு விஷயத்தை சரியாக செய்து முடிப்பது தான் நம் வேலை; நமக்கு பிடித்தமான ரிசல்ட் வந்தால் அது ஒரு போனஸ் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்!”. எத்தனை உண்மையான வார்த்தைகள்!!


நமக்கு ஒரு பெரிய இலக்கு நிர்ணயம் செய்த பிறகு அதனை அடையும் வழியில் சின்ன சின்ன விஷயங்கள் கூட நாம் நினைத்த படி தான் நடக்க வேண்டும் என எண்ண முடியாது. சில விஷயங்கள் நாம் நினைத்ததற்கு மாறாகவும் நடக்கலாம். ஆனால் நாம் நினைத்த final objective நிறைவேறும் வரை நாம் பல்வேறு வழிகளில் முயல வேண்டும்.


இன்னும் சொல்ல வேண்டுமெனில் எந்தவொரு விஷயத்திலும் நமது பங்கை நாம் சரியாக செய்து விட வேண்டும்; அது மட்டும் தான் நம்மிடம் உள்ளது; மற்றவர்கள அதை பார்த்து என்ன விதமாக react செய்வார்கள், அதற்கு என்ன வித பலன் கிடைக்கும் இவை எல்லாம் நம் கையில் இல்லை; நம் பங்கை முடித்து விட்டு, பிறகு எது நடந்தாலும் நாமும் spectaror மாதிரி ரசிக்க வேண்டியது தான்.




தேர்வுக்கு
முந்தைய வாரத்தில்
தலையணை நனைய
பயந்து அழுதிருக்கிறேன்..


பிரச்னைகள்
விஸ்வரூபம் எடுக்கையில் எல்லாம்
விக்கித்து நின்றிருக்கிறேன்..


என்றாலும் கூட
நான் நீந்துகிறேன்..
தேர்வுகளை வெல்கிறேன்


முயற்சி தரும் சுகத்தில்
மறந்து  வாழ்கிறேன்...


இது எனது  எழுத்து மட்டுமல்ல என் வாழ்க்கையும் கூட

தொடங்கிய எந்த விஷயமும் முடிகிற வரை முயற்சி என்பது தொடர வேண்டும். அலுவல் வேலையாகட்டும்,சொந்த வேலையாகட்டும் முடிக்காத விஷயம் ஒரு தீயை அணைக்காமல் விடுவது போல் தான். அது மிகுந்த கெடுதலே செய்யும்.


போலவே ஒரு விஷயத்தை முடிக்காமல் வைத்திருப்பது மனதில் ஓரத்தில் எப்போதும் தங்கி உறுத்தி கொண்டே இருக்கும். இது நமது energy -யை drain செய்து விடும். இதற்கு ஒரே மருந்து அந்த விஷயத்தை தொடர்ந்து, இறுதி வரை எடுத்து சென்று முடிப்பது தான்!!

11/05/2010

மைனா - தவிர்க்க முடியாத தமிழ் சினிமாக்களில் இதுவும் ஒன்று

           
இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்கள் பட்டியலில் பிரபு சாலமோனும் இணைந்திருக்கிறார். காதலனும் காதலியும் உயிருக்கு உயிராக காதலித்து கடைசியில் காதலுக்காக உயிரைவிடுகிற உருக்கமான காதல் கதை தான் என்றாலும், இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத கதைக் களம் மைனா.


மேக்கப் இல்லாத முகங்கள், புதுமையான லொகேஷன், வித்தியாசம் என்கிற வார்த்தைக்கு மரியாதை செய்கிற வகையில் ஒரு க்ளைமாக்ஸ் என மைனா தமிழ் சினிமாவின் புது முயற்சிகளில் முக்கியமான படைப்பாக விளங்குகிறது.

தீபாவளிக்கு முன் தினம்... போலிஸ் அதிகாரிகள் பாஸ்கர், ராமைய்யா இருவரும் தப்பி ஓடிய கைதி சுருளியை தேடி தேனி அருகில் மூணாறு மலை அடிவாரத்தில் இருக்கும் குரங்கணி மலைக் கிராமத்துக்கு போகிறார்கள். தப்பி ஓடிய சுருளி யாரு?


சுருளி சின்ன வயசுல பள்ளிக்கூடம் போகாமல் ரவுடித்தனம் செய்கிறார். தன் அம்மாவுடன் மைனா நடுத்தெருவில் அழுதுகொண்டிருக்க, அவர்களை கூட்டி வந்து அடைக்கலம் கொடுக்கிறார். மைனாவும் சுருளியும் காதல் பறவைகளாய் குரங்கணி மலையில் வளம் வருகிறார்கள். மைனாவுக்கு கல்யாண வயசு வருகிறது. மைனாவும் சுருளியும் காதலிக்கிற விஷயம் மைனாவின் அம்மாவிற்கு தெரியவர, மைனாவிற்கு வேறொரு மாப்பிளை பார்க்கிறார்.சுருளியும் பணியாரக் கடைக்காரி மைனாவின் அம்மாவும் முடியைப்பிடித்து சண்டைப் போடும் அளவற்கு பெரிய ரகளை நடக்கிறது.

இந்தப் பிரச்சனையில் சுருளி சிறையில் அடைக்கப்படுகிறார். மைனாவிற்கு கல்யாண வேலைகள் நடந்து கொண்டிருக்க, செய்தி அறிந்ததும் சுருளி சிறையில் இருந்து தப்பி வருகிறார். தலை தீபாவளி கூட கொண்டாடாத கடுப்பில் ஜெயில் அதிகாரி பாஸ்கரும், ராமையாவும் சுருளியைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற நிலையில் குரங்கணி கிராமத்திற்கு போக மலை ஏறுகிறார்கள். ரத்திரியாகிவிட மலையில் வழி தெரியாமல் அலைந்து திரிந்து பல சிரமங்களுடன் ஒரு வழியாக அடுத்த நாள் காலை சுருளியை கைபற்றுகிறது போலிஸ். சுருளி போலிசுடன் வரும்போது மைனாவும் சுருளியுடன் வந்துவிடுகிறார். இன்னும் கொஞ்ச நேரத்தில் சுருளி ஜெயிலுக்கு போய்விடுவார், அப்போ மைனா? இந்த இடத்தில் இடைவேளை...

மீண்டும் மலையில் பாதை தெரியாமல் போய்விடுகிறார்கள், ஒரு கட்டத்தில் போலிஸ் அதிகாரிகள் பாஸ்கரையும் ராமையாவையும் பஸ் விபத்தில் இருந்து காப்பாற்றுகிறார் சுருளி. உயிரைக் காப்பாற்றிய அக்யூஸ்ட் சுருளி போலிசுக்கு கடவுளாக தெரிகிறார். சுருளி விடுதலையானதும் தானே கல்யாணம் செய்து வைப்பதாக சொல்கிறார் போலிஸ் பாஸ்கர். நிறைவான சந்தோஷத்தோடு தேனி வந்தடைய... ஒரு கொடுமையான க்ளைமாக்ஸ்! நீங்கள் எதிர்பார்ப்பது எதுவுவே கிளைமாக்ஸாக இருக்க முடியாது. அந்த அளவிற்கு சஸ்பென்ஸ்.


படம் பார்த்த ராத்திரி தூங்கவிடாத க்ளைமாக்ஸ்களில் இதுவும் ஒன்று. படத்தின் ஒரு காட்சிக் கூட காரணம் இல்லாமல் காட்டப் படவில்லை. படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் ஒரு காரணத்தோடவே காட்டப்படுகிறது.

சுருளியாக வரும் வித்தார்த், மைனாவாக வரும் அமலா பால் என எல்லோரும் கதா பாத்திரமாகவே வாழ்ந்திருகிறார்கள். ராமைய்யாவாக வரும் தம்பி ராமைய்யாவிற்கு ஒரு தனி பாராட்டு. காமெடி, வில்லத்தனம், கண்ணீர் என எல்லாம் கலந்த குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் முத்திரைப் பதித்திருகிறார். போலிசாக வரும் சேது, புதுமுகமாக இருந்தாலும் நூறு படத்தில் நடித்தது மாதிரி நடிப்பில் அப்படி ஒரு முழுமை.


படத்தின் முக்கியமான ஒருவர்களில் டி.இமான் ஒருவர். டி.இமான் இசையமைத்த படங்களில் தி பெஸ்ட் என்று சொல்லும் அளவிற்கு தூள். இன்று முதல் முக்கியமான இசையமைப்பாளர்கள் பட்டியலில் டி.இமானும் ஒருவர். இவரின் மைனா இசை எல்லாருடைய நெஞ்சுக்குள்ள போகுது என்பதில்  சந்தேகமும் இல்லை.


மலையில் இருந்து பஸ் விழும் காட்சி! படத்தின் உச்சக்கட்ட காட்சி இதுதான். படத்தைப் பார்க்கும் நாமே மலையில் தொங்கும் ஒரு உணர்வு. ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கு இந்த ‘மைனா’ உலகத்தை காண்பித்ததற்காக ஒரு சபாஷ் சொல்லியே ஆகவேண்டும்.


சமீபமாய் தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் சொந்தப் படம் எடுத்தால் தான் நல்ல படைப்புகள் உருவாகும் நிலை உள்ளது. ஆனாலும் இந்தப் படத்தை வாங்கி விநியோகம் செய்திருக்கும் தயாரிப்பாளர்களை மறந்துவிட முடியாது. மைனாவை இன்னும் உயரப் பறக்கச் செய்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஏ.ஜி.எஸ். சகோதரர்களுக்கு ஒரு சல்யூட்.

இனி வரும் படங்களிலும் தன் தரத்தைத் தக்கவைத்துக் கொள்ள பிரபு சாலமோனுக்கு வாழ்த்துகள்.

11/04/2010

தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..........


வாழ்த்தும்போது வாழ்வை வாழ்த்துவோம் – இனிப்பு
வழங்கும்போது நட்பை வழங்குவோம்
வெடிக்கும்பேது வெறுப்பை வெடிப்போம் – இன்று
ஒருநாளேனும் ஒழுங்காய் குளிப்போம்.


தெய்வங்கள் என்றும் காத்திருக்கும் சிலைகளாக
மனிதன்தான் கண்ணிமைக்கும் முன் மறைந்து போகிறான்
ஏழையின் வயிறும் கோயில் உண்டியல்தான்
புண்ணியம் சேர்ப்பதில்


பகிர்வோம்.
பதார்த்தம் பகிர்வோம்,
பண்டிகையைப் பகிர்வோம்.


கண்களை மூடிக்கொண்டு இருட்டென்கிறோமாயின்
கண்களில் விளக்கேற்றுவோம் – குறைந்தபட்சம்
கண்களை திறப்போம்.


காற்றில் பொருட்டென்றில்லாமல்
மிதக்கும் தூசிபோல
இயற்கையில் நாம் என உணர்வோம்


அகந்தைஎனும் அரக்கனை அழிப்போம்,
அன்பை மட்டுமே விதைப்போம்.


பண்டிகைகள் Funடிகைகளாக
அந்த டி.வி channelகளை அணைப்போம் -அன்பில்
குடும்பம் நண்ர்களை இணைப்போம்
அரவணைப்போம்.

நம் தமிழை போற்றுவோம் ...
தமிழனாய் இருப்போம் ...
எனது மனமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்
கோவைராமநாதன் ... 

11/03/2010

தீபாவளி என்பது என்ன ?


       ஐப்பசி அமாவாசை அன்று கொண்டாடும் ஓர் இந்து பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். தமிழர்கள் இப்பண்டிகையை முக்கியப் பண்டிகையாக கருதுவதில்லை. இருப்பினும் மலேசியா, சிங்கையில் வாழும் தமிழர்கள் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடச் செய்கின்றனர்.

பெயர் வர காரணம்

             'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.

 மரபு

இந்துக்களின் தீபாவளி
  • இந்துக்கள் திபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.
  • இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்.
  • புராணக் கதைகளின் படி, கிருசுணனின் இரு மனைவியருள் ஒருவளான நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன் . அப்போது கிருசுணன் வராக(பன்றி) அவதாரம் எடுத்திருந்தான். பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்நரகன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருசுணன் தனதுத்திறமையால் அந்நரகாசுரனை இறக்க வைக்கிறான்.
  • கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.
  • இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது.
  • ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதார விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்' உருவமெடுத்தார்.
சீக்கியர்களின் தீபாவளி
  • 1577-இல் இத்தினத்தில், தங்கக் கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.
சமணர்களின் தீமாவளி
  • மகாவீரா நிர்வானம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தை சமணர்கள் கொண்டாடுகின்றனர்.
கொண்டாடும் முறை

  • தீபாவளி பட்டாசுதீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.
  • பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.
  • தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும், அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும். அந்த நீராடலைத்தான் "கங்கா ஸ்நானம் ஆச்சா" என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.
பிற நாடுகளில் தீபாவளி
இலங்கைத் தீபாவளி
  • இலங்கையில் இந்தியா போன்று பெருமளவு தீபங்கள் ஏற்றுவது கிடையாது. இதனை விளக்கீடு என்ற திருவிழாக்காலத்திலேயே செய்கின்றார்கள்.
 மேற்குநாடுகளில் தீபாவளி
  • மேற்குநாடுகளில் தீபாவளிக்கு முக்கியத்துவம் உண்டு. மற்றபல இந்து விழாக்கள் போல் அல்லாமல் அனைத்து இந்துக்களும் எதோ ஒரு வழியில் தீபாவளியை கொண்டாடுவதாலும், கிறிஸ்துமஸ், இட் போன்ற கொண்டாட்ட காலங்களில் வருவதாலும், வட இந்திய இந்துக்களுக்கு இப்பண்டிகை அதிமுக்கியத்துவம் கொண்டதாக அமைவதாலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இங்கு இது Festival of Lights என்று அறியப்படுகின்றது. தீபாவளி பல்லினப் பண்பாட்டின் கொண்டாட்டங்களில் ஒன்றாக மருவி வருகின்றது.
"ஒளி கண்டகலும் இருள் அரக்கன் போல் ,உள்ளங்கள் கொண்ட ஆணவமும் 
அகந்தையும் அகல ஞானமும் ,கருணையும் ஒளி வீச" ...  நமது பண்பாட்டின்
தீபத் திருநாளாம் தீபாவளியை கொண்டாடுவோம்

11/02/2010

கணினி வாசிக்கும் தமிழ் ....


        கணினியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதை வாசித்துக் காட்டும் மென்பொருள்களை நாம் அறிவோம். நம்மில் சிலர் அதனைப் பயன்படுத்தியிருக்கவும் கூடும்.


       கணினியில் தமிழில் தட்டச்சு செய்வதைக் கணினி தமிழிலேயே வாசித்துக் காட்டும்!. இதற்குரிய ஒரு மென்பொருளை (engine) பெங்களுரூவில் உள்ள இந்த அறிவியல் கழகத்தின் (Indian Institute of science) பேராசிரியர்.ஏ.ஜி.ராமகிருஷ்ணன் உருவாகியிருகிறார். இதன் வெள்ளோட்ட வடிவத்தை

http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo

என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.


நான் இதில் இரண்டுவித பிரதிகளை இட்டு சோதனை செய்து பார்த்தேன்:


1. பாரதியின் 'எடுத்த காரியம் யாவினும் வெற்றி' என்ற கவிதை
2. ஜெர்மனியில் நடைபெற உள்ள தமிழிணைய மாநாடு பற்றி நான் எழுதிய செய்திக் குறிப்பு
இந்தப் பொறி நன்றாகவே வேலை செய்கிறது. நீங்களும் சோதனை செய்து பார்க்கலாம். உங்கள் கருத்தை ramkiag@ee.iisc.ernet.in என்ற மின்னஞ்சல் மூலம் பேராசிரியருக்குத் தெரிவிக்கலாம்.

நன்றாக வேலை செய்கிறது எனினும் சிற்சில மேம்படுத்தல்கள் தேவை.


ஆங்கிலம் கலந்து எழுதினால் ஆங்கிலப் பகுதிக்ளை அது வாசிப்பதில்லை. எண்களில் அதற்குப் பிரசினைகள் இருக்கிறது.


பேராசிரியர் ஏ.ஜி.ஆர். கணினி/இணையத்தில் தமிழைச் செழுமைப்படுத்த உழைத்து வருபவர்களில் ஒருவர். உத்தமத்தின் தமிழிணைய மாநாடுகளில் கலந்து கொண்டு பங்களிப்பு செய்தவர்.


இது அவர் தமிழுக்கு அளித்துள்ள மிகப் பெரிய கொடை.


விழியிழந்தவர்களை மட்டுமல்ல, மொழி இழந்த ஒரு தலைமுறைக்கும் தமிழைக் கொண்டு செல்ல இது உதவும் என்பதால் இது இன்று அவசியம் தேவைப்படும் ஒரு தொழில்நுட்பம், அதை உங்களுக்கு தருவதில் நான் 
மகிழ்ச்சி அடைகிறேன்  .

இதை முன்பே நீங்கள் படித்து இருந்தாலும் ,இப்போது படித்திருந்தாலும் உங்கள் நண்பருக்கு தமிழின் பெருமையை உணர்த்தவும் ...

 

11/01/2010

உயர்வான இருக்கைகள் ...


எப்போதும்
சுகமாயிருப்பதில்லை
உட்கார்ந்திருத்தல்...


எழுந்தால் போதும்
என்னுமளவு
சிரமமாகியும் போவதுண்டு...


நின்று கொண்டிருப்பது கூட
நிறையவே சிரமமாய்தெரிகிறது
இடம் கிடைக்காத
ஏமாற்றத்தில்...


எழுந்து வழி விட்டவர்கள்
ஏமாளிகள் ஆவதுண்டு
உட்கார்வதற்கான
போட்டியே
வலிமையுணர்த்தும்
வழியென்றான பின்...


உட்கார்ந்திருக்கும்
வரை தான்
உத்திரவாதம்
என்றுணராமல்
உட்கார்ந்திருப்பவரைக்
காட்டிலும்
உயர்வாகத் தெரிகிறது...

உட்கார்வது யாராயினும்மாறாமல்
உட்கார்ந்திருக்கும்
இருக்கைகள்...