தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/25/2010

எஸ் எம் எஸ் ஆபத்துக்கள்.




என்னுடைய இரண்டு அலைபேசி எண்களுக்கு, ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஐந்து எஸ் எம் எஸ், அதிகபட்சம் இருபது எஸ் எம் எஸ் என்கிற எண்ணிக்கையில் குறுஞ்செய்திகள் வந்து குவிகின்றன. இந்தக் குறுஞ்செய்திகளில் அரும் செய்திகள் என்று பார்த்தால், ஒரு வாரத்தில் மூன்றோ நான்கோ தேறலாம். மற்றவை உபயோகமில்லாத செய்திகள். சில குறுஞ்செய்திகள் நாம் எப்பொழுதோ வெப் சைட்டில் பதிந்துகொண்டதால் வருபவை. அவைகளுக்கு எஸ் எஸ் எஸ் என்று பெயர் இடலாம் (சொந்த செலவில் சூனியம்)
என் உறவினர் ஒருவர் தவறாமல் (அவர்) விழித்திருக்கும் நேரங்களில் இரண்டு மணிக்கு ஒரு எஸ் எம் எஸ் என்று அனுப்புவார். எஸ் எம் எஸ் செய்திகளை, பொதுவாக கீழ்க்கண்ட வகைகளில் பிரிக்கலாம்.

# காதல் நட்பு - இவற்றின் மேன்மை உயர்வு குறித்து.
# புதிர்க் கேள்விகள்.
# புதிர்க் கணக்குகள்.
# பொது அறிவுத் துகள்கள்.
# ஜோக்குகள். (A + B + C)
# அறிஞர்கள் அன்று கூறியவை.
# நடப்பு செய்திகள்.
சில எஸ் எம் எஸ் மிகவும் பயனுள்ளவை - என் தம்பியிடமிருந்து முன்பு ஒருநாள் வாட்ச் என் டி டி வி என்று எஸ் எம் எஸ் வந்தது. அப்பொழுதுதான் நான் உடனே டீ வி பார்த்து, மும்பை தாக்குதல் தொடர்பான நேரடி கவரஜே பார்த்தேன். சில சமயங்களில் முக்கியமான இசை நிகழ்ச்சி டி வி இல் ஒளிபரப்பாகும்போது கூட, சகோதரர் எஸ் எம் எஸ் அனுப்பியது உண்டு.

நான் எஸ் எம் எஸ் அனுப்பியது என்று பார்த்தால் ஒரு மாதத்தில் இருபது
இருந்தால் அதிகம். ஆனால் ஜிமெயில் அல்லது யாஹூ மெசெஞ்சரில் உள்ள எஸ் எம் எஸ் அனுப்பும் வசதியை அடிக்கடிப் பயன்படுத்திக்கொள்வேன்.

ஒருமுறை எனக்கு எஸ் எம் எஸ் செய்த உறவினரை, தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவர் அனுப்பிய குறுஞ்செய்தி குறித்து பேச ஆரம்பித்தேன். அவர் அப்படியா, அப்படியா எனத் தொடர்ந்து ஆச்சரியமாக விசாரித்துவிட்டு, இறுதியில் ஓர் உண்மையைக் கூறினார். அவருக்கு வேறு யாரோ அனுப்பிய செய்தியாம். அதைப் படித்துவிட்டு ஒன்றும் புரியாததால் (அந்த உறவினருக்கு ஆங்கிலம் கொஞ்சம் அரைகுறை) அதை வழக்கம்போல் எல்லோருக்கும் பார்வார்ட் பண்ணினாராம்.

உபயோகமில்லாத செய்திகளை அனுப்புபவர்களை நான் வேண்டிக்கொள்வதெல்லாம் காசு செலவழித்து எனக்கு எஸ் எம் எஸ் அனுப்பாதீர்கள். அதற்கு பதில் எல்லோரும், அதற்காகும் செலவை, ஓர் உண்டியலில் போட்டு வைத்திருங்கள். என்னை எப்பொழுதாவது நேரில் பார்க்கும்பொழுது, சேர்த்துவைத்திருக்கும் பைசாவை என்னிடம் காட்டுங்கள். நான் மேற்கொண்டு அதே அளவுக்கு பைசா உங்களுக்குக் கொடுக்கிறேன். இவ்வாறு செய்வதால், அனாவசியமாக ஏதோ ஒரு செல் கம்பெனி சம்பாதிக்கின்ற பைசா, உங்க நேரம், என்னுடைய நேரம் எல்லாமே நிறைய மிச்சமாகும். மேலும் எஸ் எம் எஸ் அனுப்பியே ஆகவேண்டும் என்னும் உந்துதல் உள்ளவர்கள் இரண்டு மொபைல் போன் வாங்கி வைத்துக்கொண்டு - இதிலிருந்து அதற்கும், அதிலிருந்து இதற்கும் மாற்றி மாற்றி எஸ் எம் எஸ் அனுப்பி - அதைப் படித்து ஆனந்தம் அடையலாம் என்றும் எனக்குத் தோன்றுகிறது.

நம் வாசகர்கள் எல்லோருக்கும் ஒரு செய்தி சொல்கின்றேன். ஒருவர் நேற்று எனக்கு அனுப்பியிருந்த செய்தி ஒன்றில், தெருவில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள் யாரையாவது பார்த்தால், உடனே ------- என்ற செல்லுக்கு சொல்லுங்கள். அவர்கள் அந்த சிறுவரின் படிப்புக்கு ஏற்பாடு செய்வார்கள். என்று இருந்தது. சும்மா இதைப் பற்றி கொஞ்சம் கூகிளிட்டுப் பார்ப்போமே என்று பார்க்கும் பொழுது, இந்த செல் எண்ணை தொடர்பு கொள்ளச் சொல்லி - ஒரு பிரபல இரண்டாம் கட்ட நடிகரின் இரசிகர் என்று கூறிக்கொண்டு, ஒருவர் இரண்டாயிரத்து ஏழாம் வருடம் - அந்த நடிகரின் இரசிகர் மன்ற பெயர் கொண்ட டாட் காம் வலைப் பதிவில் தன பெயரைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார். அந்த எண்ணைத் தொடர்புகொண்டு எதுவும் விசாரிக்க முடியவில்லை. வேறு எங்கோ ரி-டைரக்ட் ஆகிறது. இதில் மேற்கொண்டு மர்மங்கள் ஏதாவது இருக்குமா அல்லது இருக்காதா என்று தெரியவில்லை. பெயர் குறிப்பிடாமல், ஏதாவது செல் எண் மட்டும் குறிப்பிடப்பட்டு வருகின்ற எண்களை யாரும் தொடர்புகொள்ளாமல் இருப்பது (குறிப்பாக பெண்கள்) மிகவும் நல்லது.

சென்ற வருடம் எனக்கு வந்த போலீஸ் கமிசனர் ஆபீஸ் எஸ் எம் எஸ் ஒன்று, சென்னை நகர போலீஸ் மொபைல் எண் 9500099100 என்பதைத் தொடர்புகொண்டு புகார் எதுவும் கொடுக்கலாம் என்று கூறியிருந்தது. நமக்குத் தெரிந்த யாராவது இந்த எண்ணைப் பயன்படுத்தி இருப்பார்களா என்று அறிய ஆவலாக உள்ளது.

இறுதியாக நான் கூறுவது இவைகள்தாம்:
$ அனாவசிய எஸ் எம் எஸ் யாருக்கும் அனுப்பாதீர்கள். நேரமும், செலவும் மிச்சமாகும்.
$ பெயர் இல்லாத செல் எண் மட்டும் எங்கேயாவது பார்த்தால் அதைத் தொடர்பு கொள்ளாதீர்கள்.
$ உள்ளூர் போலீஸ் மொபைல் எண் எப்பொழுதும் கை(பேசி) வசம் வைத்திருங்கள்.
$ பெண்கள் உங்கள் கைபேசி எண்ணை, யாருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் கொடுக்காதீர்கள்.

முடிக்கும் முன்பு வாசகர்களுக்கு ஒரு பொது அறிவு கேள்வியோடு முடிக்கிறேன். பெரும்பாலான அலை பேசிகளில், குறுஞ்செய்தி வரும்பொழுது, கீழ்க்கண்டவகையில் சத்தம் (டிஃபால்ட்) செட்டிங் இருக்கும்.
மூன்று குறுகிய சத்தம் (பிப் பிப் பிப்)
இரண்டு நீண்ட சத்தம் (பீப் பீப்)
திரும்பவும் மூன்று குறுகிய சத்தம் (பிப் பிப் பிப்)
இப்படி கேட்கும் : " பிப் பிப் பிப் --- பீப் பீப் --- பிப் பிப் பிப்."
இதன் விளக்கம் என்ன? யாருக்காவது தெரியுமா?

2/24/2010

கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னர் சச்சின்!





















குவாலியரில் சச்சின் டெண்டுல்கர் 147 பந்துகளில் 25 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் முதன் முதலாக 200 ரன்களை எட்டி வரலாறு படைத்தார்.

இதற்கு முன் இந்த சாதனையை வைத்திருந்த சயீத் அன்வர் இந்தியாவிற்கு எதிராக சுதந்திரக் கோப்பை போட்டியில் சென்னையில் 194 ரன்கள் எடுத்ததும், ஜிம்பாப்வே வீரர் 2009ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக எடுத்த 194 ரன்களும் உலக சாதனையாக இருந்து வந்தது.

இன்று அந்த சாதனைகளை சச்சின் முறியடித்தார். 40 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 3 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 60 ஓவர்களாக இருந்தபோதும் இந்த சாதனை நிகழ்த்தப்படவில்லை.

இங்கிலாந்தில் 55 ஓவர்கள் கிரிக்கெட் நடைமுறையில் இருந்தபோதும் ஒருவரும் இந்த மைல்கல்லை எட்டவில்லை. ஆனால் 50 ஓவர் கிரிக்கெட்டில் அதுவும் 36 வயதான டெண்டுல்கர் மீதம் வைத்திருந்த இந்த சாதனையையும் நிகழ்த்தி கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னராக இன்று ஆனார்.

அதிகபட்ச தனிப்பட்ட ரன் எண்ணிக்கைகள்:

1. சச்சின் டெண்டுல்கர் 200 நாட் அவுட் - 147 பந்துகள் 25 பவுண்டரிகள் 3 சிக்சர்கள்

2. கோவென்ட்ர்ய் 194 நாட் அவுட் - 156 பந்துகள் 16 பவுண்டரிகள் 7 சிக்சர்கள்

3. சயீத் அன்வர் 194 அவுட் - 146 பந்துகள் 22 பவுண்டரிகள் 5 சிக்சர்கள்

4. விவியன் ரிச்சர்ட்ஸ் 189 நாட் அவுட் - 170 பந்துகள் 21 பவுண்டரிகள் 5 சிக்சர்கள்

5. சனத் ஜெயசூரியா 189 அவுட் - 161 பந்துகள் 21 பவுண்டரிகள் 4 சிக்சர்கள்.

2/23/2010

எப்ப வருவ....?

கர்ப்பந்தான் பத்து மாசம்..
உன்னைக் காணவுமே பத்து மாசம்..
வருடத்தில் இரண்டு மாசம்..
வந்து செல்லும் என் வசந்தம்..
நீ இட்ட முத்தம்., பட்ட எச்சில்
எதுவுமே காயலயே..
டிக்கெட்டுப் போட்டாச்சு என்றதுமே
இருண்டதய்யா என் கண்ணு ...
குழம்புதான் வைக்கிறேன்
பொடியும் புளியுமில்லாம..
குழம்புதய்யா என் மனசு..
சிறப்பாய்த்தான் வாழுகிறேன்...
நீ சென்ற பின்னே சிரிப்பில்லாம..
வயிற்றில் தங்கிய கரு கூட
வருத்தத்தில் வலுவிழந்து
விடை பெற்று போச்சுதய்யா...
வந்து செல்லும் வாழ்க்கையே
என்னை வாரிச்செல்ல எப்ப வாரே..?
வெளி வேலை., வங்கி வேலை .,
பள்ளிவேலை., பாட வேலை
எந்த வேலை செய்தாலும்
எந்துணையே நீ இல்லை........
கை கொடுத்த தெய்வமே...
என்னை கையோட அழைச்சுப்போ...
கஷ்டப்பட்டு நீ உழைக்க
உன் கால் மிதியாய்க் கிடப்பேனே ...
சொந்த வீடு., காரினிலே
என்னை சுகமாக இருக்க வச்சே..
உலகத்து வசதியெல்லாம்
பிள்ளைகளுக்கு செஞ்சு வச்சே...
அம்மா., அப்பா .,அண்ணன் .,தம்பி .,
மாமா., மாமி எல்லோரும் என்னோட...
என்னைக் கைப்பிடித்த கருணையே
என் கைபிடிக்குள் எப்ப வருவ........???

2/19/2010

புயலானவள்...

நான் புயலை ரசிப்பவன்..
ஊடலினூடே வரும்
என்னவளின்
சுவாசம்தானே எனக்குப் புயல் !?
ரசிக்கவே அவளை
ஊடலாய் சீண்டுபவன் நான்..

நான் தென்றலையும் ரசிப்பவன்..
என்னவளின்
சந்தோஷ சுவாசம்தான் அது !?
அதை ரசிக்க
ஊடலில்
தோற்பவனும் நானே...

என்னவளை
தென்றலாய்
நேசிக்கப் பலருண்டு
பாசத்திலும் நட்பிலும்..
புயலாயினும்
அவளை நேசிப்பது
நான் மட்டுமே
காதலில்..

தென்றலானவள் புயலாக
காரணமாயிரம்..
அப்புயலை
தென்றலாய் வீழ்த்தும்
காதலாயிரம்
புரியும் உரிமை
எனக்கு மட்டுமே...

என்னால்
காதலிக்கப்பட்டு
தென்றலாய் வீழவே
புயலாவாள் என்னவள்..

நீ!

நான் விருப்பப்பட்டது
என்றும் தொலைவில் தான்..
அன்று நிலவு!
இன்று நீ!
**
உன் அழைப்புக்கள் நிராகரிப்பு,
மின்னஞ்சல்கள் அவமதிப்பு,
குறுந்தகவல் புறந்தள்ளுதல்,
ஓரப்பார்வைகள் ஒதுக்குதல்
இப்படி
என்னவாயினும் செய்வேன்
உன் செல்லக்கோபத்தைப் பெற!
**
உன் நினைவுகளே
வாழ்க்கை
என்றான பிறகு
நீ
தொடுதூரத்தில்
இருந்தாலென்ன?
தொலை தூரத்தில்
இருந்தால் என்ன ?
**
குட்டி போடும்
என்று நினைத்து
குழந்தைகள்
புத்தகத்தில் வைத்திருக்கும்
மயிலிறகு போல்
உன் நினைவுகள்
பத்திரமாய்..
**
செடி கொடி மரத்தில்
மட்டும்தான்
பூ பூக்குமென
யார் சொன்னது??
உன் பெயர் சொல்லி
எல்லோரையும்
என் முகம் பார்க்கச் சொல்!!
**
என்ன எழுதினாலும்,
உன்னுடைய
“அச்சச்சோ!”
“ஊஹூம்…”
“ம்க்கும்!”
“ப்ச்..ப்ச்..”
“ஹேய்…”
…க்களுக்கு முன்னால்
என் கவிதைகள்
தோற்று விடுகின்றன!
**
யாழினிது குழழினிது
மழலை சொல் இனிது
என்றேன்
தோழி, நீ அழைக்கும்
தொலைபேசி மணி
ஓசை கேட்கும் வரை..
**
என் கற்பனை வளத்தை
கொன்றவள் நீ..
என் கற்பனைகள்
உன்னைத் தாண்டிச்
செல்ல மறுக்கின்றன...
**
அத்தி பூத்தது...
உன்னை பார்த்தது
பார்த்த நாள் முதல் -
தினமும் பூத்தது!
**
உன்னிடம் பேச
எவ்வளவு
ஆசைப்படுகிறேனோ
அவ்வளவு ஆசை
உன்னிடம் பேசுபவர்களிடமும்
பேசவேண்டும் என்பதில் .
**
என்னை கொல்ல
வாள் வேண்டாமடி
உன் ஒரு நொடி
மவுனம் போதும்…
**
மன்னித்து விடு!
நான் உன்னை
மறக்க
மறந்துவிட்டேன்….
**
செடியில் பூத்துக்கொண்டே
உன் முகத்திலும்
பூக்க
எப்படி முடிகிறது
இந்தப் பூக்களால்??

ஆயகலைகள் அறுபத்து நான்கு ..

இன்று விஞ்ஞானம் எத்தனையோ புதிய புதிய விஷயங்களை தந்து கொண்டிருக்கிறது. அத்தனையும் ஆச்சரியப்படுத்தும் விஷயங்களாக இருக்கின்றன.
ஆனால் அந்தக் காலத்தில் ஆயகலைகள் அறுபத்து நான்கும் தெரிந்திருந்தால் அத்தனையும் அறிந்த அறிவாளி என்று அர்த்தம் என்று இந்து மத புராணங்கள் சொல்கின்றன.
அந்த ஆயகலைகள் அறுபத்து நான்கு எது என்று உங்களுக்குத் தெரியுமா?
1. அக்கரவிலக்கணம்
2. இலிகிதம்
3. கணிதம்
4. வேதம்
5. புராணம்
6. வியாகரணம்
7. நீதி சாஸ்திரம்
8. ஜோதிடம்
9. தர்ம சாஸ்திரம்
10. யோக சாஸ்திரம்
11. மந்திர சாஸ்திரம்
12. சகுன சாஸ்திரம்
13. சிற்ப சாஸ்திரம்
14. வைத்திய சாஸ்திரம்
15. உருவ சாஸ்திரம்
16. இதிகாசம்
17. காவியம்
18. அலங்காரம்
19. மதுர பாடனம்
20. நாடகம்
21. நிருத்தம்
22. சத்தப்பிரும்மம்
23. வீணை
24. வேணு (புல்லாங்குழல்)
25. மிருதங்கம் (மத்தளம்)
26. தாளம்
27. அத்திரப் பரிட்சை
28. கனகப் பரிட்சை (பொன் மாற்று பார்த்தல்)
29. இரதப் பரிட்சை (தேர் ஏற்றம்)
30. கஜப் பரிட்சை (யானை எற்றம்)
31. அசுவப் பரிட்சை (குதிரை ஏற்றம்)
32. இரத்தினப் பரிட்சை
33. பூமிப் பரிட்சை
34. சங்கிராம விலக்கணம்
35. மல்யுத்தம்
36. ஆகருடனம்
37. உச்சாடனம்
38. வித்து வேடனம் (ஏவல்)
39. மதன சாஸ்திரம்
40. மோகனம்
41. வசீகரணம்
42. இரசவாதம்
43. காந்தருவ வாதம் (சங்கீத வித்தை)
44. பைபீலவாதம் (மிருக பாஷை)
45. கவுத்துவ வாதம்
46. தாதுவாதம் ( நாடி சாஸ்திரம்)
47. காருடம்
48. நட்டம் (காணாமற்போன பொருளைக் கண்டுபிடித்தல் அல்லது நாட்டியம் பழகுவித்தல்)
49. மூட்டி (கைக்குள் மூடியிருக்கும் பொருளைச் சொல்லுதல்)
50. ஆகாய கமனம் (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்)
51. பரகாய பிரவேஷம் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்)
52. ஆகாயப் பிரவேஷம் ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது)
53. அதிரிசியம்
54. இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை)
55. மகேந்திர ஜாலம்
56. அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச் சுடாமல் கட்டல்)
57. ஜலஸ்தம்பம் (நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல், நீரில் படுத்திருத்தல்)
58. வாயுஸ்தம்பம்
59. திட்டி ஸ்தம்பம்
60. வாக்கு ஸ்தம்பம்
61. சுக்கில ஸ்தம்பம் (விந்தையடக்கல்)
62. கன்னத்தம்பம்
63. கட்கத்தம்பம்
64. அவத்தைப் பிரயோகம்

காதல் ஆத்திச்சூடி...

நான் படித்ததில் சிறந்தது
அ
அவளிடம் மதி மயங்கு!
உனக்காகப் பிறந்தவள், உனக்கென்று ஒதுக்கப்பட்ட காதல் கணத்தில்... சட்டென்று உன் கண் முன்னே தோன்றுவாள்.அந்த தேவ நிமிஷத்தில் நீ தொலைந்துபோவாய்!
உன் நண்பர்கள், அவளது வீதியில் தொலைந்துகிடக்கும் உன்னைக் கண்டெடுத்து வந்து உன்னிடம் கொடுப்பார்கள்.
அது அவர்கள் நட்பின் கடமை.
உன் காதலின் கடமை என்ன தெரியுமா?
உன் நண்பர்கள் கொடுத்த உன்னை எடுத்துக்கொண்டு உடனே அவளிடம் ஓட வேண்டும்.
மீண்டும் தொலைப்பதற்காக!
ஆ
ஆயிரம் முறை அவள் கண்ணில் படு!
அவள் திரும்பிப் பார்க்கும் இடத்தில் எல்லாம் நீ அவள் கண்ணில் பட வேண்டும்.
அதிசயமாய் அதிகாலை வாசல் தெளிக்க அவள் வரும் நாளில் பனித் துளி மாதிரி பார்வையில் படு.
குடும்பத்தோடு அவள் இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டுத் திரும்பும் நள்ளிரவிலும் அவள் கண்ணில் படு.
எங்கெங்கும் அவள் உன்னைப் பார்க்க வேண்டும்.
இவன் ஒருத்தனா... இல்லை ஏழு பேரா என அவள் குழம்ப வேண்டும்.
குட்டையைக் குழப்பி மீன் பிடிப் பதைப் போல, அவள் மனதைக் குழப்பி மனதைப் பிடிக்கும் வித்தை இது!
இ
இதயத்தை அலங்கரி!
ஒருத்தி நுழையப் போகிறாள் என்பது தெரிந்த நொடியிலேயே, உள்ளங்கை அளவிலிருந்து உலக அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துவிடும் இதயம்!
ஆகவே இதயத்தை அலங்கரி.இனி அவளுக்கும் உனக்கும் ஏற்படப் போகும் நிகழ்வுகளின் ஆல்பங்களை அடுக்கிவைக்க, அதன் சுவர் முழுவதும் அலமாரிகளை அடி.
அவளை வரவேற்க வளைவுகளும், விளையாட ஊஞ்சலும், நீராடத் தடாகமும், துயில்வதற்கு மெத்தையும், முக்கியமாய் அவள் தன்னை அடிக்கடி அழகு பார்த்துக்கொள்ள அவளுயரக் கண்ணாடியும் அமை.
அவள் கேட்க, துடிப்புகளில் இனிய இசையை உண்டாக்கு. சீக்கிரம்...
அதோ அவள் வந்துகொண்டு இருக்கிறாள்!
ஈ
ஈர்க்கும் படி நட!
இது கொஞ்சம் கஷ்டம்தான்.
ஆனால், அவளை ஈர்ப்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்படலாம்.
ஏன் என்றால், அவ்வளவு கஷ்டத் துக்கும் பரிசாகக் கிடைக்கப்போவது அவளின் அழகான இதயம். முதன்முதலாய் உன் கண்களை அவள் கண்கள் சந்திக்கிறபோதுதான் உன் காதல் பரிபூரணமாய் ஆசீர்வதிக்கப் படுகிறது.கண்ணியம் என்பது அரசியலில் இருக்கிறதோ இல்லையோ, அவளை ஈர்க்கும் உன் முயற்சியில் அது இருந்தால், வெகு சீக்கிரமே அவள் மனதில் பட்டொளி வீசிப் பறக்கும் உன் கொடி!
உ
உறுத்தாமல் பார்!
காதலிப்பதால் கிடைக்கும் சுகத்தில் பாதி சுகம் பார்த்துக் கொண்டு இருப்பதில்தான் இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.
பார்வைகள் ஒருபோதும் பார்ப்பதால் தீர்வதில்லை. மாறாக வளர்ந்துகொண்டே இருக்கிறது.
உன் பார்வை அவள் அழகைத் தின்னக் கூடியதாக இருக்கக் கூடாது. அவள் அழகுக்கு மகுடம் சூட்டுவதாக இருக்க வேண்டும்.
உன் பார்வையால் தனது அழகு வளர்வதாக அவள் உணர வேண்டும்.
இப்படி எல்லாம் எப்படிப் பார்ப்பதென்று நீ எங்கேயும் கற்றுக்கொள்ளத் தேவை இல்லை.
மனதில் காதலை மட்டும் வைத்து, ஒரு மலரைப் பார்ப்பதைப் போல் அவளைப்பார்.உனது கண்களால் உன் உள்ளத்தில் உள்ள காதலுக்கு ஓராயிரம் ஊற்றுக்கண்கள் திறக்கும்!
ஊ
ஊதியமின்றிக் காவல் செய்!
உலகத்திலேயே அழகான வேலை, உன் காதலியைக் காவல் காக்கும் கருப்பண்ணசாமி வேலைதான்.
நீ அவளைப் பின்தொடர்வதை அவள் தெரிந்துகொண்டால், எங்குவேண்டு மானாலும் துணிச்சலுடன் போவாள்.
அவள் அப்பா மாதிரியோ அண்ணன் மாதிரியோ 'எங்க போற' என்று நீ கேள்வியும் கேட்க மாட்டாய்.
அவளுக்கு ஏதாவது ஆபத்தென்றால் நீ பொங்குவாய் என்கிற மதர்ப்பே அதற்குக் காரணம்.என்றாவது ஒரு நாள். குரைக்கும் நாய்க்குப் பயந்தோ, பாய்ந்து வரும் மாட்டைக் கண்டோ அத்தனை பேரையும் விட்டுவிட்டு உன் பின்னால் ஓடி வந்து ஒளிவாள்.
அதுதான் உன் காவலுக்கும் காதலுக்கும் அவள் தரும் மரியாதை!
எ
எதற்கும் வழியாதே!
தவறுதலாய் அவள் கைக்குட்டை கீழே விழுவதைப் பார்த்துவிட்டால் ஓடிப்போய் சிதறு தேங்காய்ப் பொறுக்கு பவனைப் போல் பொறுக்காதே.
செடிக்கு அடியில் கிடக்கும் மலரைப் போல் நிதானமாய் எடு.
அதை அவளிடம் தருகையில் 'உங்க கர்ச்சீப். மிஸ் பண்ணிட்டீங்க' என்று வழியாதே.
''இது உன் கர்ச்சீப்பா' என்று பந்தாவாகக் கேள்.
இன்னொரு தெய்வாதீனத் தருணத்தில் நீயும் அவளும் அருகருகே நிற்க வேண்டிய வாய்ப்பு கிடைக்கலாம்.அப்படி அவள் அருகில் நிற்கையில் உனக்குக் கைகால்கள் உதறலாம். அல்லது சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு வானத்தைப் பார்த்து ஏகாந்தமாய் நமட்டுச்சிரிப்பு சிரிக்கத் தோன்றலாம்.இதில் நீ எதைச் செய்தாலும், உனக்கு அவள் போட்டுவைத்திருக்கும் மதிப்பெண் அம்பேல் ஆகிவிடும்.
ஒன்றும் தெரியாத பையனைப் போல அமைதியாய் நில்.
அமைதி ஓர் அற்புதமான வசிய மருந்து!
ஏ
ஏகலைவனாய் இரு!
நீ எத்தனையோ காதல் காவியங் களைப் பார்த்திருக்கலாம்.
எத்தனையோ காதல் படங்களைப் பார்த்திருக்கலாம். ஆனால், அவை எதிலிருந்தும் உனக்கான காதலை நீ எடுத்திருக்க முடியாது.
அது அவளிடம் மட்டுமே கொடுத்தனுப்பப்பட்டு இருக்கிறது.
அதை, அவளை நீ பார்த்த நொடியி லேயே உன்னிடம் சேர்த்துவிட்டாள்.ஆகையால், காதலில் அவளே உனக்கு குரு.
அதற்கான குருதட்சணையாக, அவள் உன் உயிரைக் கேட்டாலும், ஏகலைவன் போல் யோசிக்காமல் கொய்து தரத் தயராய் இருக்க வேண்டும் நீ. ஆனால், அப்படிக் கேட்க அவள் ஒன்றும் துரோணர் இல்லை. என்றாலும் அவள் எப்போது எது கேட்டாலும் தருவதற்குத் தயராய் நீ ஏகலைவனாகவே இரு!

ஐ
ஐம்புலனிலும் அவளை வை!
கண்டும் கேட்டும் உண்டும் நுகர்ந்தும் தொட்டும் இன்புறும் ஐம்புலன்களின் இன்பமும் ஒன்றாய் இருப்பது பெண்ணிடம் மட்டுமே என்று அடித்துச் சொல்கிறது திருக்குறள்.
உன் காதலியும் இப்படித்தான் உன் ஐம்புலன்களையும் சொக்கவைக்கப் போகிறாள்.ஆனால், அதற்கு முன்... உன் ஐம்புல னாலும் அவளை நீ காதலி.கண்களில் அவள் உருவத்தை வைகாதுகளில் அவள் குரலை வைசுவாசத்தில் அவள் வாசம் வை உதடுகளில் அவள் பெயரை வைஉணர்வில் அவள் உயிரை வை!
ஒ
ஒரு நாள் காதலைச் சொல்!
அவள் மகிழ்வாய் இருக்கும் நேரம் பார்த்து, ''நான் ரொம்ப நாளாய் ஒருத்தியைக் காதலிக்கிறேன் அவள் நீயா?' என்று கேள்.
புன்னகையை அடக்கிக்கொண்டு 'ஏன்... அவள் யாரென்று உனக்குத் தெரியாதா?' என்பாள்.
'அவளை நினைக்க ஆரம்பித்த பிறகு என்னையே நான் மறந்துவிட்ட தால், அவள் யார் என்பது தெரியாமல் போய்விட்டது' என்று சொல்.'
உன்னை ஞாபகப்படுத்திக்கொள். அவள் யாரென்பது தெரிந்துவிடும்' என்பாள்.
'அவளை நான் மறந்தால்தானே என் ஞாபகம் எனக்கு வரும்' என்று கேள். 'அவளை மறந்துவிட வேண்டியது தானே' என்பாள்.
'என் ஆயுள் காலம் வரை அவளை ஞாபகம் வைத்திருப்பேன்' என்பது நிஜமில்லைதான்.ஆனால், அவளை நான் ஞாபகம் வைத்திருக்கும்வரைதான்...'நான் உயிரோடு இருப்பேன் என்பது மட்டும் கண்டிப்பாய் நிஜம்' என்று சொல்.
'அப்படியானால் நீ காதலிக்கும் பெண் நான்தான்' என்பாள் தலையைக் குனிந்து.
'எனக்குத் தெரியும்' என்று சொல்.
செல்லமாய் கோபிப்பாள்.
பிறகு கண்டிப்பாய் கிடைக்கும் அழகான பிகு முத்தம்!
ஓ
ஓர் உலகம் செய்!
அந்த உலகம் அற்புதமானது.அங்கே கடற்கரை, திரையரங்குகள் எல்லாம் உண்டு. ஆனால் உங்களைத் தவிர வேற யாருமே இல்லை. அங்கே சில்லென சூரியன் உதிக்கும்... கதகதப்பாய் மழை பெய்யும்.அந்த உலகம் எங்கே இருக்கிறது என்று கத்தாதே.நீ உன் காதலியோடு எங்கெல்லாம் செல்கிறாயோ அங்கெல்லாம் அந்த உலகம் இருக்கும்.ஆனால், நீங்கள் போகும் இடமெல்லாம் உங்கள் பின்னாலேயே வரும் ஒரு ஆப்பிள் மரம். அவசரப்பட்டு அந்த மரக்கனியைத் தின்றுவிடாதீர்கள்.அதற்கின்னும் காலமும் கனிய வில்லை. ஆப்பிளும் கனியவில்லை!

ஒள
ஒளவியும் ஒளவாமலும் பழகு!
இது என்ன வார்த்தை என்று முழிக்காதே.
தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும், அணைத்தும் அணைக்காமலும் என்ற வார்த்தைகள் எல்லாம் கலந்தெடுத்த, காதலுக்கென்றே கண்டுபிடிக்கப்பட்ட அழகான வார்த்தை இது.தொடுவானம் எப்போதும் பூமியைத் தொட்டுக்கொண்டு இருப்பது மாதிரித்தான் தெரியும். ஆனால் தொடாது.அதற்காக வானமும் பூமியும் தொட்டுக்கொள்வதே இல்லை என்று அர்த்தம் அல்ல.மாபெரும் வானத்துக்குள்தான் இருக்கிறது இந்த பூமி. அப்படித்தான் நீயும் அவளும் பழக வேண்டும். அவள் வானமாய்... நீ பூமியாய்! காதல் காலம் என்பது, பார்ப்பதற்கும் பேசுவதற்குமே போதாது.ஆகையால் இப்போதைக்கு அவளைப் பார்த்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இரு.தொடுதலையும் படுதலையும் அவ்வப்போது அனிச்சையாய் காதலே அரங்கேற்றிக்கொள்ளும்!