*அழகனோ அழகியோ இல்லை
காதல் மட்டும்அழகியல் கூறுகளோடு..
* காதலிப்பவரை கைபேசியுடன்
அலைபவரை வெறுக்கிறோம்
நாம் காதலிக்கும்வரை ....
* நெஞ்சம் நிறைகிறது பால் மணத்தால்
விடுதியில் இருக்கும் என் மகன்
உணவு பிடிக்காமல் பசித்த வயிற்றோடு ...
* விஷேச தினங்களில்
அநேக பலகாரங்கள் ஒருபோதும்
உண்ணக்கேட்காத சாமிக்காய்...
* தொட்டாற்சிணுங்கியின்
செல்லச் சிணுங்களில்
உயரப் பறக்கும் தட்டான்கள் ....
* வார்த்தைக் கல்லில் அடிபட்ட
மௌனச்சிறகாய் மனசு.....
* எல்லாவற்றையும் கடைந்து., கடந்து
எது விஷம் .,? எது அமிர்தம்.,?
யார் தேவர்.,? யார் அரக்கர் .,?
* அது அதுவாய் வரும்வரை
அததனோடு போராட்டம்....
* சொல்லப்படாத பாசம்
பிரமிடுக்குள் மம்மியாய்
தலைமுறைகடந்தும்.....
* வாசிப்புக்குப்பின் ஓட்டு மட்டும் போடுவதோ.,
பின்னூட்டம் மட்டும் இடுவதோ .,
பாதி சாக்லேட் மட்டும் தருவதாய்....
"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! கோவை அ.ராமநாதன்
9/02/2010
9/01/2010
தமிழ்ப்பேறு
ஏடெடுத் தேன்கவி ஒன்று வரைந்திட
“என்னை எழு”தென்று சொன்னதுவான்!
ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின்
ஓவியந் தீட்டுக, என்றுரைக்கும்!
காடும் கழனியும் கார்முகிலும் வந்து
கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்!
ஆடும் மயில்நிகர்ப் பெண்களெல்லாம் உயிர்
அன்பினைச் சித்திரம் செய்க,என்றார்!
சோலைக் குளிர்தரு தென்றல்வரும், பசுந்
தோகை மயில்வரும் அன்னம்வரும்,
மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்
மாணிக்கப் பரிதி காட்சிதரும்
யுவேலைச் சுமந்திடும் வீரரின் தோள்உயர்
வெற்பென்று சொல்லி வரைகருஎனும்
கோலங்கள் யாவும் மலைமலையாய் வந்து
கூவின என்னை! – இவற்றிடையே,
இன்னலிலே, தமிழ் நாட்டினி லேயுள்ள
என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்.
அன்னதோர் காட்சி இரக்கமுண் டாக்கியென்
ஆவியில் வந்து கலந்ததுவே!
“இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்
துன்பங்கள் நீங்கும், சுகம்வரும், நெஞ்சினில்
தூய்மை யுண்டாகிடும், வீரம் வரும்.”
-பாரதிதாசன் கவிதைகள்-
8/31/2010
யாருக்கு இந்த புரளி ,எதற்காக ? - 2
எதை நாம் வளர்ச்சி என்று மார்தட்டிக் கொள்வது? ஒருபுறம் உணவுப் பொருள்களின் விலைவாசியும், உறைவிடமும் பெரும் பான்மையான குடிமக்களுக்கு எட்டவே எட்டாத இடத்தில் இருக்கிறது. இன்னொருபுறம், மோட்டார் வாகனங்களின் விலை குறைந்து விட்டது என்று மகிழ்ச்சி அடைகிறோம்.
கடந்த இருபது ஆண்டுகளில், குடிசைகளின் எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்றோ, நடைபாதை வாசிகளின் எண்ணிக்கை நகர்ப்புறங்களில் நாளும்பொழுதுமாக அதிகரித்து வருவது குறித்தோ எந்தவிதப் புள்ளி விவரங்களும் சேகரிக்கப் பட்டதாகத் தெரியவில்லை. இவர்களுக்கு நாம் வேலைக்கு உத்தரவாதமும், உணவுக்கு உத்தரவாதமும், கல்விக்கு உத்தரவாதமும் ஏட்டளவில் சட்டமாக்கி வைத்திருக்கிறோமே தவிர, அவர்களை இந்தியத் திருநாட்டின் பிரஜைகளாகக்கூட நாம் கணக்கிடுகிறோமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.
இந்தியாவின் தனிநபர் வருமானம் உயர்ந்திருக்கிறது என்று பெருமை பேசுகிறோம். 1,000 குடும்பங்கள் குடிசைகளில் வாழும் கிராமத்தில், ஓர் அம்பானியோ, ஒரு ரத்தன் டாடாவோ, ஓர் இன்போசிஸ் நாராயணமூர்த்தியோ அல்லது நமது கோடீஸ்வர நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒருவரோ பங்களா கட்டிக் கொண்டு வாழ்ந்தால், அந்தக் கிராமத்தில் தனிமனித வருமானம்கூட பல லட்சங்களாக இருக்கும். அதுவா கணக்கு?
தீவிரவாத இயக்கங்கள் பெருகுவதும், அரசின் நிர்வாக இயந்திரத்துக்குக் கட்டுப்படாத மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், மக்களில் பாதி பேர் வறுமையிலும், கடனிலும் வாழ்வதும் வளர்ச்சிக்கான அறிகுறியாக இருக்க முடியுமா?
ஒன்று, "நானே நடந்து வருவேன், நடைவண்டி தேவையில்லை' என்று சொல்லும் தன்னம்பிக்கை வேண்டும். அல்லது இன்னமும் நடைபழகி முடியவில்லை என்று துணிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஊர் உலகத்துக்காக கோட் சூட் போட்டுக்கொண்டு, அடுத்தவரிடம் பணம் எதிர்பார்த்து நிற்பது தேவையில்லாத போலித்தனம் அல்லவா!
இந்தத் தலையங்கத்தின் ஒவ்வொரு எழுத்தும் பத்தியும் சொல்வதைப் புரிந்து கொண்டால் .....
மீன்களைக் காப்பாற்ற வேண்டுமென்றோ, காதல் கொண்டோ எவரும் தூண்டிலில் புழுவை வைத்துக் காத்திருப்பதில்லை!
இயேசு அழைக்கிறார் என்று கூவுகிறவன் கோடிகளில் மிதக்கிறான்! அழைப்பைக் கேட்டுப் போனவன், அவனிடம் தசம பாகத்தைக் கொடுத்து விட்டு, என் ஆண்டவர் மிகவும் நல்லவர், அவர் என்னை என்றும் ரட்சிப்பார் என்று பாடிக் கொண்டு வெறும் கையோடு திரும்புகிறான்!
அதே மாதிரித் தான்!
சமூக நீதி காக்கிறேன், சமத்துவம் தருகிறேன் என்று இலவசங்களைத் தருகிறவன் என்ன நிலையில் இருக்கிறான், அதை நம்பிப் போகிறவன் என்ன நிலையில் இருக்கிறான் என்பதைக் கொஞ்சம் கண்திறந்து பார்த்தாலே புரிந்து விடும்!
சுதந்திரம் என்பது இவர்கள் பாடப் புத்தகங்களில் எழுதி வைத்தது போல, காந்தித் தாத்தாவும், நேரு மாமாவும் கடைக்குப் போய் வாங்கி வந்து கொடுத்ததல்ல!
எப்போது நமது பொறுப்பை உணரப் போகிறோம்?
இப்போதாவது........
இலவசங்களில் ஏமாறுவது இல்லை என்ற உறுதியோடு !
உலகத் தொல்லைக் காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக என்று கூவும் பெட்டிகள் முன்னால் அமர்ந்து நேரத்தை வீணடிக்காமல்,
சக மனிதர்களிடம் கொஞ்சம் அக்கறையோடு, பரிவோடு
நன்றி : தினமணி
இருக்க முயற்சியை ஆரம்பிப்போமா!
8/30/2010
யாருக்கு இந்த புரளி ,எதற்காக ?
சிறுவயது முதலே நாளிதழ்களைப் படிப்பது, குறிப்பாக அந்த நாளிதழின் அன்றைய தலையங்கம் என்ன சொல்கிறது என்பதை எல்லாம் கவனமாக உள்வாங்கிக் கொண்டு யோசிக்கும் வழக்கம் எப்படியோ இன்றைக்கும் என்னிடம் நீடித்துவருகிறது. விஷயங்களைத் தேடித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டிய ஆசிரியர்கள், நண்பர்கள், பெரியவர்கள், புத்தகங்கள் என்று ஒரு பெரிய பட்டியலையே காரணமாகச் சொல்ல முடியும். என்னைப் பற்றி இப்படிச் சொல்லிக் கொள்ளும்போது, என்னை மாதிரியே எத்தனைபேர் ஒரு நாளிதழில் வெளி வரும் தலையங்கத்தைப் படிக்கிறார்கள், அப்புறம் அதைப் பற்றி எப்படி சிந்திக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பினால் தெளிவான விடை தெரிவதில்லை. முதலில் சமூகப் பொறுப்புடன் எத்தனை நாளிதழ்கள் தலையங்கத்தைத் தொடர்ந்து எழுதிவருகின்றன என்று கேட்டால், அதற்கும் விடை எத்தனைபேருக்குத் தெரியும் என்பது கூட என்னால் ஒரு குத்துமதிப்பாகச் சொல்ல முடிவதில்லை.
தமிழகத்தில் பெரும்பாலான நாளிதழ்கள் தலையங்கம் என்ற ஒன்றையே மறந்து விட்டன. அல்லது, தங்கள் சௌகரியத்துக்கேற்றபடி எழுதுவது மட்டுமே தலையங்கமாக வருகிறது. இந்த மாதிரி இல்லாமல், பொது விஷயங்களில், ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும் விதத்தில், ஒரு தெளிவான பார்வையோடு பிரச்சினையை அணுகுகிற விதத்தில் தலையங்கங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நாளிதழ்களாக, ஹிந்து, இந்தியன் எக்ஸ்ப்ரெஸ், என்று ஆங்கிலத்தில் பல நாளிதழ்கள் இருந்தாலும், தமிழில் ஒரே ஒரு நாளிதழ் தான், ஆரம்பகாலம் முதல், ஒரு நாளிதழின் கடமையாக இன்றைக்கும் தலையங்கத்தை வெளியிட்டு வருவதாக இருக்கிறது! அது தினமணி! அன்றைய காலங்களில் இருந்து தினமணி தலையங்கங்களைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன்.
இப்படிச் சொல்லும்போது, வேறு சில இதழ்களிலும் தலையங்கங்கள் அவ்வப்போது வருகிறதே, பார்ப்பதில்லையா என்று கேட்கிறீர்களா? தலையங்கம் என்ற பெயரில் வருவதெல்லாம் தலையோடு இருப்பதாக எண்ண முடியவில்லை! நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த சிந்தனையும் கொண்டு ஒரு பிரச்சினையை எதிர்கொள்ள தைரியமில்லாத, தலை இல்லாத முண்டங்களாகத் தான், சில நாளிதழ்களின் ஆசிரியர் பக்கம் அல்லது தலையங்கங்களைப் பார்க்க முடிகிறது. அரசியல் கட்சி சார்புடைய நாளிதழ்கள் என்றால் கேட்கவே வேண்டாம்! குதிரைக்குக் கண்ணைக் கட்டிய மாதிரிக் குருட்டாம்போக்கில், ஒருபக்கச் சார்புடையரை திட்டித் தீர்ப்பதற்காகத் தான் தலையங்கமே என்ற அளவுக்குத் தரம் தாழ்ந்துபோனவைகளாக மட்டுமே இருப்பதை இங்கே கணக்கில் சேர்த்தி இல்லை!
இந்தத் தலையங்கம் சென்ற தினமணி நாளிதழில் வெளியானது. "போதுமே இந்தப் போலித் தனம்!" என்ற தலைப்பில் எழுதப்பட்டது. கொஞ்சம் கவனமாகப் படித்தீர்களானால், சொல்லப் பட்டிருக்கும் வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை, இந்தப் போலித் தனத்தை உதறினால் எந்த அளவுக்கு நன்மை உண்டு என்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியும்!
போதுமே இந்தப் போலித்தனம்..!
இந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்துவரும் வளர்ச்சி நிதி உதவியை (250 மில்லியன் அமெரிக்க டாலர்) நிறுத்திக் கொள்ளலாமா என்று ஆலோசித்து வருவதாக அந்நாட்டு அரசு சென்ற மாதம் அறிவித்தது. பிரிட்டனிடமிருந்து அதிகமாக நிதியுதவியைப் பெறும் நாடுகளில் முதலிடம் வகிப்பது இந்தியாதான். ஒருவேளை, முந்நூறு ஆண்டுகளாக இந்தியாவிடம் பெற்றதை பிரிட்டன் நினைத்துப் பார்ப்பதாலும் இந்தத் தாராள மனது இருக்கக்கூடும்.
அணுமின் திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி செலவிடுகிற இந்தியாவுக்கு, அதிலும் வளர்ந்து வரும் நாடு என்கிற நிலையில் உள்ள நாட்டுக்கு நாம் தொடர்ந்து உதவி அளிக்கத்தான் வேண்டுமா என்பது இங்கிலாந்தின் இப்போதைய நியாயமான கேள்வி. மேலும், 2009 உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, தனது பொருளாதாரமே தள்ளாட்டம் போடும் நிலையில் அடுத்தவருக்குச் செலவழிக்க வேண்டுமா என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு. இந்தியாவுக்கு உதவியை நிறுத்துவது பற்றி யோசிக்கும்போதே சீனாவுக்கும் ரஷியாவுக்கு வளர்ச்சிநிதியை நிறுத்திவிட்டார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
இத்தகைய வளர்ச்சி நிதி என்பது ஐக்கிய நாடுகள் மன்றத்தில் 1970-ல் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம். இதன்படி, வசதியான நாடுகள் தங்கள் மொத்த வருமானத்தில் 0.7 விழுக்காட்டினை இத்தகைய வளர்ச்சி நிதிக்காக (டெவலப்மென்ட் அசிஸ்டன்ஸ்) வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்குக் கட்டுப்பட்டு, 0.7 விழுக்காடு நிதி வழங்கும் நாடுகள். சுவீடன், நார்வே, லக்ஸம்பர்க், டென்மார்க், நெதர்லாந்து போன்றவைதான்.
உலகில் மிக அதிக அளவு வளர்ச்சி நிதி வழங்குவது அமெரிக்கா. 2009-ம் ஆண்டு 28 பில்லியன் டாலர் வழங்கியிருக்கிறது. என்றாலும், இது நாட்டின் மொத்த வருவாயில் 0.3 விழுக்காடு மட்டுமே! இங்கிலாந்து இரண்டாம் இடத்தில் (13 பில்லியன் அமெரிக்க டாலர்) இருப்பினும் இது நாட்டின் மொத்த வருவாயில் 0.5 விழுக்காடு ஆகும்.
இந்த நிதியுதவியை இந்தியாவுக்கு அளிப்பதில் தயக்கம் காட்டுவதற்குக் காரணம், மேலே சொன்னதைப்போல, இந்தியா வளர்ந்துவரும் நாடு என்பதுதான். இந்த வளர்ச்சி நிதியை மற்ற ஏழை நாடுகளுக்குக் கொடுப்பது குறித்து இந்த "கொடைநாடு'களுக்கு எந்த மனத்தடையும் இல்லை. மேலும், கொடைநாடுகள் தரும் வளர்ச்சி நிதியுதவியில் 5 விழுக்காடுதான் வளரும் நாடுகளுக்கு அளிக்கப் படுகிறது. இந்தப் பட்டியலில் முதல் முக்கியமான 10 நாடுகளில் இந்தியா ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. நாம் ஆண்டுக்கு சுமார் 2,650 மில்லியன் அமெரிக்க டாலர்களை வளர்ச்சி நிதியாகப் பெறுகிறோம்.
இவர்கள் தரும் நிதியுதவி உண்மையாகவே வளர்ச்சிக்குப் பயன் படுகிறதா என்பதே கேள்விக்கு உட்படுத்தப்படும் விஷயம். இவர்கள் நிதியைக் கொடுத்துவிட்டு, வளர்ச்சிப் பணிக்கான பொருள்களை தங்கள் நாட்டிலிருந்து வாங்க வேண்டும் என்று வலியுறுத்துவதால் அவர்களுக்கு வியாபாரம் நடக்கிறது; பணம் தருகிறோமே என்கிற உரிமையில் நம் நாட்டில் கடைவிரிக்கிறார்கள்; நிதியின் பெரும்பகுதி அரசியல்வாதிகளின் ஊழலுக்கே போகிறது என்பதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், இப்போது நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி- நாம் வளர்ந்து வரும் நாடா, வல்லரசாக மாறப்போகும் நாடா, அல்லது ஏழை நாடா?
ஒரு பக்கம் பல ஆயிரம் கோடியில் திட்டங்கள். 8 விழுக்காடு வளர்ச்சி என்கிறோம். நிறைய வசதி வாய்ப்புகள் உருவாகிவிட்டன. வானத்தில் விமானங்களின் நெரிசல் அதிகமாகிவிட்டது. ஏற்றுமதி ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வணிக வாசல்களை எல்லோருக்குமாக தாராளமாகத் திறந்துவிட்டாகிவிட்டது.
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் 42 விழுக்காட்டினர் வறுமையில் வாழ்க்கிறார்கள். அதாவது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமையில் வாழ்வது இந்தியாவில்தான். இதை வளர்ச்சி என்று சொல்லிவிட முடியுமா?
காத்திருங்கள் .......
8/28/2010
ரசித்தது
உறக்கமில்லை உன் கண்கள் ஏன் மின்னுதடி,
என் மூன்று கண்களும் இருட்டுதடி..
குளிருக்கே குளிருதடி, ஆனால்
உன் மூச்சுகாற்றால் எனக்கு வெப்பம்மடி..
உன் உதட்டில் தேன் ஏன் வடியுதடி.
என்னை தேனிக கூட்டம் கொட்டுதடி..
உன் காதில் தொங்கும் தோடு கூட,
அதன் சுகத்தை அசையாமல் எனக்கு சொல்லுதடி..
நீ எங்கே இருக்கயடி, நானும் அங்கே இருப்பனடி..
காலம் !!
காலம் சில
வலிகளையும் கொடுக்கும்
என்பதால் தான்
கடிகாரத்தில் முட்கள் ..!
-கவிப்புயல் வைர பாரதி..
வாழ்கை பயணம் !!
என் பயணத்தை நான்
முடிவு செய்வதில்லை..
என் பயணம் தான்
முடிவு செய்கிறது..
என் மூன்று கண்களும் இருட்டுதடி..
குளிருக்கே குளிருதடி, ஆனால்
உன் மூச்சுகாற்றால் எனக்கு வெப்பம்மடி..
உன் உதட்டில் தேன் ஏன் வடியுதடி.
என்னை தேனிக கூட்டம் கொட்டுதடி..
உன் காதில் தொங்கும் தோடு கூட,
அதன் சுகத்தை அசையாமல் எனக்கு சொல்லுதடி..
நீ எங்கே இருக்கயடி, நானும் அங்கே இருப்பனடி..
காலம் !!
காலம் சில
வலிகளையும் கொடுக்கும்
என்பதால் தான்
கடிகாரத்தில் முட்கள் ..!
-கவிப்புயல் வைர பாரதி..
வாழ்கை பயணம் !!
என் பயணத்தை நான்
முடிவு செய்வதில்லை..
என் பயணம் தான்
முடிவு செய்கிறது..
8/27/2010
அபத்தமான தமிழனின் வாழ்க்கை
ஒரு விஷயத்தை ஒதுங்கி நின்று பார்க்கும் போது அதுவரை அது பற்றி நமக்குத் தென்பட்டிராத பல்வேறு புதிய விஷயங்கள் காணக் கிடைக்கும். அல்லது இப்படிச் சொல்லலாம். ஒரு விஷயத்தை அதன் உள்ளே இருக்கும் போது அதற்குள் ஓடும் உணர்ச்சிப் பிரவாகத்தில் நாமும் அடித்துக் கொண்டு போய் விடுகிறோம். அதனால் அதை நாம் விஞ்ஞானக் கண்ணோட்டத்துடன் நுண்ணிய முறையில் பார்க்க முடியாமல் போய் விடுகிறது. அதேபோல், தமிழர்களின் வாழ்க்கையை சற்று வெளியே நின்று பார்க்கும் போது அதுவரை நமக்குப் புலப்பட்டிராத ஏராளமான காட்சிகள் கிடைக்கின்றன. உலகின் எந்த நிலப்பரப்பிலும், எந்தக் கலாச்சாரத்திலும் காணக் கிடைக்காத காட்சிகள் அவை.
ஒரு கட்சி தேர்தலில் தோல்வி அடைந்தால் உடனே அந்தக் கட்சித் தொண்டர் தன் விரலை வெட்டி கோவில் உண்டியலில் போடுவார். கட்சித் தலைவரும் அந்தத் தொண்டருக்கு ஆயிரக் கணக்கில் பண உதவி செய்வார். இதெல்லாம் ப்ளாக் ஹ்யூமரில் சேர்க்கப்பட வேண்டியவை என்றால் நேரடி ஹ்யூமரும் எக்கச்சக்கமாக உண்டு. மாநில முதல்வர் இருந்த நான்கு மணி நேர உண்ணாவிரதத்தை உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் சமயங்களில் இந்த நகைச்சுவைக் காட்சிகள் பயங்கரமான வன்முறைக் காட்சிகளாகவும் மாறுவதுண்டு. ஒரு அரசியல் தலைவர் கைது செய்யப்பட்ட போது மாணவிகளோடு சேர்த்து பஸ்ஸைக் கொளுத்திய சம்பவத்தை நினைவு கொள்ளலாம்.
பஸ்ஸைக் கொளுத்துவது போல் தன்னையும் கொளுத்திக் கொள்வது இன்னொரு விசேஷ குணம். எந்த ஒரு அரசியல் பிரச்சினைக்கும் கட்சித் தொண்டர்கள் தங்களைத் தீயிட்டுக் கொளுத்திக் கொள்வதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். தொண்டர்கள் என்று இல்லாமல் மாணவர்களும் இதைச் செய்கிறார்கள். அரசியல்வாதிகள் இதை ‘தியாகம்’ என்று சொல்லி தமிழர்களின் உணர்ச்சிவசப்படும் தன்மையைத் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
திருவள்ளுவர் திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்று மூன்றாகப் பிரித்தார் அல்லவா? அதை இப்போது சாமியார் (அறம்), அரசியல் (பொருள்), சினிமா (இன்பம்) என்று மூன்றாகப் பிரிக்கலாம். ஒரு சாமியார் ஒரு நடிகையுடன் மன்மத லீலையில் ஈடுபட்டதை தொலைக்காட்சியில் பார்த்த பிறகும் அவருக்கு கூட்டம் கூடுகிறது என்றால் அதை என்னவென்று சொல்வது?
எந்த ஒரு புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பு கையில் கிடைத்தாலும் அது எந்த உபயோகத்துக்காகக் கண்டு பிடிக்கப்பட்டதோ அதை விட்டுவிட்டு அதை ஒரு மட்டமான கேளிக்கைப் பொருளாக மாற்றி விடுவதில் தமிழர்கள் சமர்த்தர்கள். கணினியுன் செல்போனும் உதாரணம். கொடுமை என்னவென்றால், வாகனங்களை ஓட்டும் போது, ரயில் பாதையைக் கடக்கும் போது, சமையலில் ஈடுபடும்போது என்று ஆபத்தான வேலை செய்யும் போதும் செல்போனில் பேசி உயிரை விடும் தருணங்களும் இங்கே அதிகம். ஓசியில் எது கிடைத்தாலும் அதை வாங்கிக் கொள்ள ஆசைப்படுவது மற்றொரு சமூக மனோபாவமாக மாறியிருக்கிறது. எந்த வர்க்க பேதமும் இல்லாமல் நீக்கமற நிறைந்திருக்கும் குணாதிசயம் இது.
ஒரு பதிவாளன் என்ற முறையில் தமிழர்கள் இலக்கியத்துக்குக் கொடுக்கும் மரியாதை பற்றியும் கொஞ்சம் சொன்னால்தான் இந்தக் கட்டுரை முழுமை அடையும். புத்தக விழாக்களில் அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள், ஆன்மீகம் மற்றும் சமையல் சம்பந்தப்பட்டவை. மற்றபடி அதிகம் விற்பவை, ’எப்படி’ புத்தகங்கள். பணம் சம்பாதிப்பது எப்படி? தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி? புத்தக விழாக்களில் காணக்கூடிய மற்றொரு காமெடி காட்சி, எல்லா ஸ்டால்களிலிருந்தும் புத்தக விலைப் பட்டியலை சேகரித்து மூட்டை மூட்டையாகத் தூக்கிக் கொண்டு செல்வது. ’ஆகா, எக்கச்சக்கமாக புத்தகங்கள் வாங்கி விட்டார் போலிருக்கிறதே’ என்று பார்த்தால் எல்லாம் ஒரே கேட்லாகாக இருக்கும்; பதிப்பகங்கள் இலவசமாகக் கொடுப்பவை.
ஆனால் இதுபோல் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் தமிழர்களிடம் எனக்குப் பிடித்த ஒரு குணம், நன்றி மறவாமை. தேர்தலில் தனக்கு ஓட்டுப் போடச் சொல்லி ஒருவர் 1000 ரூ. கொடுத்தால் அவருக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள்; எந்தக் காரணம் கொண்டும் மாற்றிப் போட மாட்டார்கள்; அந்த ஆள் எட்டு கொலை செய்திருந்தாலும் பரவாயில்லை.
நன்றி: இந்தியா டுடே
முதலில் நம் கவனத்தைக் கவருபவை சினிமா போஸ்டர்கள். கிட்டத்தட்ட தமிழர்களின் கலாச்சார அடையாளமாகவே ஆகி விட்ட இந்த விளம்பர சுவரொட்டிகளின் பின்னே தமிழக அரசியல் வரலாறே அடங்கியிருக்கிறது என்று சொல்லலாம். சினிமாவுக்கு போஸ்டர் என்றால் அரசியலுக்கு கட் அவுட். இது எத்தனை அடி உயரத்துக்கு எழுப்பப்படுகிறதோ அத்தனை அடி உயரத்துக்கு அந்தக் கட் அவுட்டை வைத்தவரின் வாழ்க்கைத் தரமும் உயரும் என்பது அரசியல் கணிதச் சமன்பாடு. தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் வெவ்வேறாகப் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்திருப்பதால் போஸ்டரும் கட் அவுட்டும் கூட அரசியல்வாதி, சினிமாக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் கலந்து கலந்து ஊடாடுகின்றன. இதில் சில சமயம் அரசியலை சினிமா முந்தும். உதாரணமாக, ஒரு ஹீரோவின் சினிமா வெளியாகும் அன்று அவருக்கு ஐம்பது அடியில் கட் அவுட் வைத்து அதற்கு பீர் (பால் ) அபிஷேகம் செய்யப்படும். இந்த அரிய வாய்ப்பு அரசியல்வாதிக்குக் கிடைப்பதில்லை
8/26/2010
இன்றே மாறுங்கள்
"இன்று" என்பது மிகப் பலமுடையது
"இன்று" எல்லாவற்றையும் மாற்றக் கூடியது
"இன்று" புதியதாகப் பிறந்துள்ளது
"இன்று" மிகவும் விசேஷமானது
இன்று என்பது நேற்றைய மிச்சம் அல்ல
இன்று என்பது நாளைய தொடக்கம்
இன்று எத்தனையோ மாறலாம்
இப்படி யோசித்துப் பார்
நேற்றைய விரோதங்கள் இன்று மாறலாம்
நேற்றைய தோல்விகள் இன்று மாறலாம்
நேற்றைய அவமானங்கள் இன்று மாறலாம்
நேற்றைய சண்டைகள் இன்று மாறலாம்
நேற்றைய பிரச்சனைகள் இன்று மாறலாம்
நேற்றைய குழப்பங்கள் இன்று மாறலாம்
நேற்றைய பொறாமை இன்று மாறலாம்
நேற்றைய நஷ்டங்கள் இன்று மாறலாம்
நேற்றைய வியாதிகள் இன்று மாறலாம்
நேற்றைய பலவீனங்கள் இன்று மாறலாம்
நேற்றைய மனோபாரங்கள் இன்று மாறலாம்
நேற்றைய பகைகள் இன்று மாறலாம்
நேற்றைய ஏமாற்றங்கள் இன்று மாறலாம்
நேற்றைய ஜன்ம கர்ம வினைகள் இன்று மாறலாம்
நேற்றைய தொந்தரவுகள் இன்று மாறலாம்
நேற்றைய காமம் இன்று மாறலாம்
நேற்றைய பாவங்கள் இன்று மாறலாம்
நேற்றைய தோல்வி மனப்பான்மை இன்று மாறலாம்
நேற்றைய கெட்ட பழக்கங்கள் இன்று மாறலாம்
நேற்றைய காயங்கள் இன்று மாறலாம்
நேற்றைய பிரிவு இன்று மாறலாம்
நேற்றைய மனக்கசப்புகள் இன்று மாறலாம்
நேற்றைய அழிவுகள் இன்று மாறலாம்
நேற்றைய விரோதி இன்று மாறலாம்
நேற்றைய கனவுகள் இன்று மாறலாம்
நேற்றைய கற்பனைகள் இன்று மாறலாம்
நேற்றைய எதிர்ப்பார்ப்புகள் இன்று மாறலாம்
நேற்றைய உலகம் இன்று மாறலாம்
நேற்றைய மாற்றம் இன்று மாறலாம்
நேற்றைய பழையது இன்று மாறலாம்
நேற்றைய புதியது இன்று மாறலாம்
நேற்றைய சிந்தனை இன்று மாறலாம்
நேற்றைய பயம் இன்று மாறலாம்
நேற்றைய எண்ணங்கள் இன்று மாறலாம்
நேற்றைய கோபம் இன்று மாறலாம்
நேற்றைய மௌனம் இன்று மாறலாம்
நேற்றைய சோம்பேறித்தனம் இன்று மாறலாம்
நேற்றைய இழப்பு இன்று மாறலாம்
நேற்றைய துன்பம் இன்று மாறலாம்
நேற்றைய துரதிஷ்டம் இன்று மாறலாம்
நேற்றைய நாஸ்திகம் இன்று மாறலாம்
நேற்றைய கேள்வி இன்று மாறலாம்
நேற்றைய தேடல் இன்று மாறலாம்
நேற்றைய முட்டாள் இன்று மாறலாம்
நேற்றைய பைத்தியம் இன்று மாறலாம்
நேற்றைய தீவிரவாதி இன்று மாறலாம்
நேற்றைய தீவிரவாதம் இன்று மாறலாம்
நேற்றைய பிரிவினை இன்று மாறலாம்
நேற்றைய கெடுதல்கள் இன்று மாறலாம்
மாறட்டுமே எல்லா கெட்டவைகளுமே இன்று மாறட்டுமே
எல்லா கெட்டவர்களும் இன்று மாறட்டுமே
எல்லா குழப்பங்களும் இன்று மாறட்டுமே
எல்லா பைதியகாரத்தனங்களும் இன்று மாறட்டுமே
நீ உன் புத்தியினால் நல்ல மாற்றங்களை கெடுக்கிறாய்
இன்று எல்லாம் மாறுவதற்கு பல கோடி சந்தர்பங்கள் உண்டு
இதுவரை நேற்றைய எச்சத்தில் வாழ்ந்து வீண் ஆனாய்
இதுவரை நாளைய கற்பனையில் சிறகடித்து
தோற்றுப் போனாய் இன்று முதல்
இன்று வாழ் இன்று முதல்
இன்று அன்பு செய் இன்று முதல்
இன்று உண்மையாக இரு இன்று முதல்
இன்று உழை இன்று முதல்
இன்று பணிவோடு இரு இன்று முதல்
இன்று கோபப்படாமல் இரு இன்று முதல்
இன்று சோம்பேறித்தனத்தை விடு இன்று முதல்
இன்று கெட்ட பழக்கங்களை விடு இன்று முதல்
இன்று பக்தி செய் இன்று
வாழ்க்கையின் நாள் இன்று மாறுதல்
ஆரம்பம் இன்றிலிருந்து மாறுதல் உண்டு
இன்றே உன் பலம் இன்றே உன் வாழ்க்கை
இன்றே உன் நம்பிக்கை இன்றே உன் தேவை
இன்றே உன் வெற்றி இனி
நேற்றில்லை;நாளையில்லை;
இன்று மட்டுமே!
Read more...
"இன்று" எல்லாவற்றையும் மாற்றக் கூடியது
"இன்று" புதியதாகப் பிறந்துள்ளது
"இன்று" மிகவும் விசேஷமானது
இன்று என்பது நேற்றைய மிச்சம் அல்ல
இன்று என்பது நாளைய தொடக்கம்
இன்று எத்தனையோ மாறலாம்
இப்படி யோசித்துப் பார்
நேற்றைய விரோதங்கள் இன்று மாறலாம்
நேற்றைய தோல்விகள் இன்று மாறலாம்
நேற்றைய அவமானங்கள் இன்று மாறலாம்
நேற்றைய சண்டைகள் இன்று மாறலாம்
நேற்றைய பிரச்சனைகள் இன்று மாறலாம்
நேற்றைய குழப்பங்கள் இன்று மாறலாம்
நேற்றைய பொறாமை இன்று மாறலாம்
நேற்றைய நஷ்டங்கள் இன்று மாறலாம்
நேற்றைய வியாதிகள் இன்று மாறலாம்
நேற்றைய பலவீனங்கள் இன்று மாறலாம்
நேற்றைய மனோபாரங்கள் இன்று மாறலாம்
நேற்றைய பகைகள் இன்று மாறலாம்
நேற்றைய ஏமாற்றங்கள் இன்று மாறலாம்
நேற்றைய ஜன்ம கர்ம வினைகள் இன்று மாறலாம்
நேற்றைய தொந்தரவுகள் இன்று மாறலாம்
நேற்றைய காமம் இன்று மாறலாம்
நேற்றைய பாவங்கள் இன்று மாறலாம்
நேற்றைய தோல்வி மனப்பான்மை இன்று மாறலாம்
நேற்றைய கெட்ட பழக்கங்கள் இன்று மாறலாம்
நேற்றைய காயங்கள் இன்று மாறலாம்
நேற்றைய பிரிவு இன்று மாறலாம்
நேற்றைய மனக்கசப்புகள் இன்று மாறலாம்
நேற்றைய அழிவுகள் இன்று மாறலாம்
நேற்றைய விரோதி இன்று மாறலாம்
நேற்றைய கனவுகள் இன்று மாறலாம்
நேற்றைய கற்பனைகள் இன்று மாறலாம்
நேற்றைய எதிர்ப்பார்ப்புகள் இன்று மாறலாம்
நேற்றைய உலகம் இன்று மாறலாம்
நேற்றைய மாற்றம் இன்று மாறலாம்
நேற்றைய பழையது இன்று மாறலாம்
நேற்றைய புதியது இன்று மாறலாம்
நேற்றைய சிந்தனை இன்று மாறலாம்
நேற்றைய பயம் இன்று மாறலாம்
நேற்றைய எண்ணங்கள் இன்று மாறலாம்
நேற்றைய கோபம் இன்று மாறலாம்
நேற்றைய மௌனம் இன்று மாறலாம்
நேற்றைய சோம்பேறித்தனம் இன்று மாறலாம்
நேற்றைய இழப்பு இன்று மாறலாம்
நேற்றைய துன்பம் இன்று மாறலாம்
நேற்றைய துரதிஷ்டம் இன்று மாறலாம்
நேற்றைய நாஸ்திகம் இன்று மாறலாம்
நேற்றைய கேள்வி இன்று மாறலாம்
நேற்றைய தேடல் இன்று மாறலாம்
நேற்றைய முட்டாள் இன்று மாறலாம்
நேற்றைய பைத்தியம் இன்று மாறலாம்
நேற்றைய தீவிரவாதி இன்று மாறலாம்
நேற்றைய தீவிரவாதம் இன்று மாறலாம்
நேற்றைய பிரிவினை இன்று மாறலாம்
நேற்றைய கெடுதல்கள் இன்று மாறலாம்
மாறட்டுமே எல்லா கெட்டவைகளுமே இன்று மாறட்டுமே
எல்லா கெட்டவர்களும் இன்று மாறட்டுமே
எல்லா குழப்பங்களும் இன்று மாறட்டுமே
எல்லா பைதியகாரத்தனங்களும் இன்று மாறட்டுமே
நீ உன் புத்தியினால் நல்ல மாற்றங்களை கெடுக்கிறாய்
இன்று எல்லாம் மாறுவதற்கு பல கோடி சந்தர்பங்கள் உண்டு
இதுவரை நேற்றைய எச்சத்தில் வாழ்ந்து வீண் ஆனாய்
இதுவரை நாளைய கற்பனையில் சிறகடித்து
தோற்றுப் போனாய் இன்று முதல்
இன்று வாழ் இன்று முதல்
இன்று அன்பு செய் இன்று முதல்
இன்று உண்மையாக இரு இன்று முதல்
இன்று உழை இன்று முதல்
இன்று பணிவோடு இரு இன்று முதல்
இன்று கோபப்படாமல் இரு இன்று முதல்
இன்று சோம்பேறித்தனத்தை விடு இன்று முதல்
இன்று கெட்ட பழக்கங்களை விடு இன்று முதல்
இன்று பக்தி செய் இன்று
வாழ்க்கையின் நாள் இன்று மாறுதல்
ஆரம்பம் இன்றிலிருந்து மாறுதல் உண்டு
இன்றே உன் பலம் இன்றே உன் வாழ்க்கை
இன்றே உன் நம்பிக்கை இன்றே உன் தேவை
இன்றே உன் வெற்றி இனி
நேற்றில்லை;நாளையில்லை;
இன்று மட்டுமே!
Read more...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
