தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

10/15/2012

வியப்பான உலகமிது......

சூப்பர் சிங்கர் பார்த்து 


ஒட்டு போடும் நாம் 

சிங்கள தமிழன் சாகும் போது

தந்தி அனுப்ப தேடிய போது 

காணாமல் போய்விடுவோம்.....


தொலைகாட்சி நெடுந்தொடரை

தொய்வின்றி பார்த்துவிட்டு

தொற்றுநோய்(டெங்கு ) விழிப்புதொகுப்பை

தொல்லை என தள்ளிவைப்போம் ...


அணுமின் நிலையம் பற்றி

அலை அலையாய் செய்தி வர

அடுத்த வீட்டு சண்டையை ஆசை 

அதீர ரசித்து பேசிடுவோம்

விலைவாசி உயர்வு இங்கே

விறுவிறுவென உயர்ந்து நிற்க

சசிகுமாரின் "சுந்தர பாண்டியனில் "

மூழ்கிவிட்டோம்.......


மின்சாரம் இல்லை ....

வேலையும் இல்லை


தண்ணீர்பஞ்சம் தலைவிரிக்க

தண்ணீர் தர ஆளும் இல்லை- மது

தண்ணியிலே மூழ்கிவிட்டு

தள்ளாடும் மனிதரினம்........


அரசியல் தலைவர்களால் இன்று

ஆதாயம் ஏதுமில்லை

வாக்குரிமை என்று என்றே நம்

வரிப்பணத்தை இழந்துவிட்டோம்.....


பொழுது போக்குக்கும் ,போதைக்கு மயங்கி

வாழும் விந்தையிலும் விந்தையான

வியப்பான உலகமிது......



10/10/2012

அன்பு தோழி



தென்றல் தீண்டியும்


சிமிட்டதா கண் இமைகள்

இருக்கையில் அமர்ந்து

என்னையும் கண்ணையும்  ரசித்தது...

அளவுக்கு அதிகமான நெரிசலிலும்

என்னை தேடும் அவள் மனம்....

நான் தினசரி பயணிக்கும் பேருந்து...


வேண்டாம் ...அன்பு தோழி

நான் காதலை மறந்து ,கடமையை

நோக்கி  பயணிப்பவன் ...

10/03/2012

மாறுதல் நிச்சயம்.....







ஆழ்மனதின் ஆற்றல் பற்றி எவ்வளவோ படித்திருப்பீர்கள். அந்த ஆற்றல் நம் வாழ்க்கையை

ஆக்கவும்; உதவும் அழிக்கவும் செய்யும். ஆழ்மனதின் நம்பிக்கைகளை ஒட்டியே நம் வாழ்க்கை

அமைகிறது. உங்கள் குறிக்கோளை நீங்கள் அடையமுடியவில்லை என்றால் அதற்கு உங்கள்

ஆழ்மனதிலுள்ள குறுக்கும் நம்பிக்கைகளே காரணமாக இருக்கும்.


'என் ஆசைகள் எப்போதுமே நிறைவேறுவதில்லை'

'நான் மிகவும் துரதிர்ஷ்டசாலி'

'வாழ்க்கையில் முன்னேற அதிர்ஷ்டம் தேவை'

போன்ற நம்பிக்கைகள் ஆழ்மனதில் இருக்கும் பட்சத்தில் எதிர்மறையான எண்ணங்களே

தோன்றும்.

நம்பிக்கைகள் எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றன. எண்ணங்கள் விளைவுகளைத்

தோற்றுவிக்கின்றன. எண்ணங்கள் எதிர்மறையாக இருந்தால் நீங்கள் விரும்புவதற்கு

நேர்மாறாகவே விளைவுகள் இருக்கும்.


ஆழ்மன நம்பிக்கைகளை ஆராய்ந்து அவற்றை மாற்றுவதற்கு மிகுந்த பொறுமையும்

விடாமுயற்சியும் தேவை.

ஆனால், அதற்கான குறுக்கு வழி ஒன்று உண்டு. தகுந்த விளைவுகளை வலிந்து உருவாக்குவதன்

மூலம் எண்ணங்களை மாற்றலாம். எண்ணங்கள் மாறினால் நம்பிக்கைகள் மாறும். இந்தப்

பாஸிடிவ் அதிர்வுகள் மேலும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். அதாவது உங்கள் இலக்கு

சுலபமாக எட்டக் கூடியதே என்று உங்கள் ஆழ்மனம் நம்பிவிட்டால், உங்கள் விருப்பத்தை

நிறைவேற்றுவதற்கான வழிகளை அது தானாகவே கண்டுபிடிக்கும். அதற்கு என்ன செய்ய

வேண்டுமெனெப் பார்ப்போம்.

1. முதலில் உங்களது இலக்கு என்ன என்பதைத் தெளிவாக எழுதுங்கள்

2. உங்கள் இலக்கினை நீங்கள் எட்டிவிட்டால் உங்கள் வாழ்க்கை முறையில் எப்படிப்பட்ட

மாற்றங்கள் இருக்கும் என்பதைப் பட்டியலிடுங்கள்



3. இந்தப் பட்டியலிலிருக்கும் மாற்றங்களை தற்போதைய நிலையில் எவ்வளவு சுலபமாக

உங்களால் செய்யமுடியும் என மதிப்பிடுங்கள். (10 - வெகு சுலபம்; 1 - மிகக் கடினம்).



4. நீங்கள் எளிதாக செய்யக் கூடிய மாற்றங்களை அடையாளம் கொண்டுவிட்டீர்கள். நேரம்

கடத்தாமல் அவற்றை செயல்படுத்த ஆரம்பியுங்கள்.



இப்படி உங்கள் இலக்கினை எட்டியபிறகு இருக்கும் வாழ்க்கை சூழலை நீங்கள் கொஞ்ச

கொஞ்சமாய் ஏற்படுத்த ஆரம்பித்தீர்களானால், உங்கள் எண்ணங்களில் மாற்றம் ஏற்படுவதை

உணர்வீர்கள். முன்பு தொழில் தொடங்குவதை நினைத்தவுடன் 'அந்த வாய்ப்பு எனக்கு இந்த

ஜென்மத்தில் கிடைக்குமா தெரியவில்லை' என்ற எண்ணம் ஏற்பட்டிருக்குமாயின் இப்போது

'அதொன்றும் பெரிய காரியமில்லை. கொஞ்சம் தாமதமாகிறது. அவ்வளவுதான்' என்று எண்ணத்

தோன்றும்.

இப்படிப்பட்ட எண்ணங்கள் எழுமாயின் ஆழ்மனதுக்கு உங்கள் இலக்கு மலைப்பாகத் தெரியாது.

விருப்பங்கள் நிறைவேறும் வழிகள் தானாகத் திறப்பதைக் காண்பீர்கள்.


அதற்காக கடன் வாங்கி பட்டியலிலிருக்கும் எல்லாவற்றையும் உடனேயே செயல்படுத்த   நினைப்பது சரியல்ல; அது ஆழ்மனத்தில் அபாயமணியை எழுப்புமே தவிர நம்பிக்கையை   ஏற்படுத்தாது. எனவே சின்னச் சின்ன மாற்றங்களை ஒன்றன் பின் ஒன்றாக செயல்படுத்துங்கள்.   மாறுதல்களை நிச்சயம் காண்பீர்கள்

10/01/2012

நாள்முதலாய்

பட்ட வலியெல்லாம்  போதும்

என்று.... தோணுது

உன்னை  விரும்பிய

நாள்முதலாய்....!!


என் வாழ்க்கையை

நல்லவள்  என்று நம்பி......

கெடுத்துவிட்டேன்...... என்

தொழில் ,மரியாதையும்

கெடுத்துக்கொண்டேன்...!


அதன் தண்டனையை

நான் தனியே..... மட்டும்

அனுபவித்து விட்டுப்

போகிறேன்.....

என்னை சார்ந்தவர்களுக்கும்

 தெரியாமல்.....!!  

9/30/2012

உன்னிலிருந்து பிறப்பதால்!!





பலமுறை  முயன்றும் முடியவில்லை!

இதயம்  'தாடி' என கேட்பது ...

ஆதலால்  தாடையில் வளர்த்தேன் 'தாடி'...!

பூக்களைத் தேடி வந்த வண்டுக்கு...

முட்களால் காயம்!  அவள் பார்வை!!

அவளைப் பார்த்தும் துடிதுடித்தது இதயம்!

எங்கே தாம்  இல்லாமல் போயிவிடுவோமோ என்று...!

கவிதை மனதின் உள்ளிருந்து பிறக்குமாம்! ஆம்!

ஒத்துக்கொண்டேன்.  உன்னிலிருந்து பிறப்பதால்!!

நேர்மாறான சிந்தனை


சமீபத்தில்  பல விதமான நேர்மாறான சிந்தனைக்கு உட்கொள்ளும்போது படிக்க நேர்ந்தது

அதை உங்களுடன்




* உன்னுடைய குறிக்கோளை அடைய முயற்சிக்க வேண்டும். தோல்வி கண்டு துவளக்கூடாது.

தோல்வியின் மூலமே நாம் புத்திசாலிகளாகிறோம்.

* உனக்குள் இருக்கும் ஆற்றல் புறத்தில் வெளிப்படும் வகையில் நீ வளர வேண்டும். வேறு

எவரும் உனக்குக் கற்பிக்கவும் முடியாது. உன்னை ஆன்மிகவாதி ஆக்கிவிடவும் முடியாது.

உனது சொந்த ஆன்மாவைத் தவிர வேறு ஆசிரியர் யாருமில்லை.

* இடையறாத பயிற்சியின் மூலம் கஷ்டங்களை நாம் வெல்ல முடியும். எளிதில் பாதிக்கப்படும்

வகையில் நம்மை நாமே விட்டுவைத்தாலன்றி, நமக்கு எதுவும் நேர்ந்துவிட முடியாது என்பதை

நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

* தொடர்ந்து புனிதமான எண்ணங்களையே சிந்தித்தபடி நன்மையைச் செய்து கொண்டிருந்தால்

தீய செயல்கள் தலைகாட்ட வழி ஏற்படாது.

                                                                                                                                   - விவேகானந்தர்

9/29/2012

சுந்தர பாண்டியன் - சினிமா விமர்சனம்




நான் படம் பார்க்க போனதையே ஒரு படமா எடுக்கலாம் போல. இன்னைக்கு பாத்து என்னை

படம் பாக்க விடாம விதி இடைஞ்சல் செய்ய அதை தாண்டி வந்து சிறிது குறைபாடோட

படத்தை பார்த்தேன்.


படத்திற்குள் வருவோம். இந்தப் படமும் சுப்ரமணியபுரம், நாடோடிகள், போராளி வரிசையில்

நண்பர்களைப் பற்றியது தான். இந்த ஆண்டு இதுவரை காமெடி படங்கள் ஹிட்டாகி வந்த போது

நல்ல பரபரப்பான இந்தபடம் சிறந்த என்டர்டெயின்மண்ட் படமாக அமைந்துள்ளது. விளம்பரம்

குறைவு என்பது திரையரங்கிலேயே தெரிந்தது. (இப்போ பண்ணரங்கா)

எல்லோரையும் எல்லாத்தையும் பாசிட்டிவாகவே நினைக்கும், நண்பர்களுக்காக எதுவும் செய்யத்

துணிந்த ஹீரோவின் கதை இது. நண்பனின் காதலுக்காக ஹீரோயினிடம் தூது போகிறார்

சசிகுமார். போன இடத்தில் ஹீரோயின் சசியையே காதலிப்பதாக சொல்ல அவரும் ஏற்றுக்

கொள்கிறார்.

ஹீரோயினுக்காக சண்டை போடப் போய் விபத்தாக ஒரு கொலை நடந்து விடுகிறது.

கொலைப்பழி சசியின் மேல். காதல் விவகாரம் ஹீரோயின் வீட்டுக்கு தெரிந்து அவசர

அவசரமாக மற்றொருவருடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. இவ்வளவையும் சமாளித்து

ஹீரோவும் ஹீரோயினும் இணைந்தார்களா என்பதே படத்தின் தோராயமான கதை.

நண்பனின் காதலுக்கு ஜடியா கொடுத்து அதற்காக விதவிதமான முறையில் பேருந்தில் ஏறும்

போது தியேட்டர் கலகலக்கிறது.

ஹீரோயின் கும்கி படத்திற்கான ஆடியோ வெளியீட்டில் பார்த்த போது சுமாரான பெண்ணாகவே

தெரிந்தார். ஆனால் ஸ்கிரீன் பிரசன்ஸ் அருமையாக இருக்கிறது. அந்த அம்மை தழும்பை

இயல்பாக விட்டிருப்பதும் ரசிக்க வைக்கிறது. நல்ல எதிர்காலம் இருக்கிறது. பக்கத்து வீட்டு

பெண்ணைப் போன்ற அழகு தான் கவர்கிறது.

சூரி படத்தில் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். இடைவேளைக்கு பிறகு திரைக்கதையின்

தேவை கருதி இவரின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது. ஆனால் முன்பாதியை குத்தகைக்கு

எடுத்து கலாய்க்கிறார்.

விஜய் சேதுபதி தனியாக பல படங்களில் கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கும் போது இதில்

எப்படி ஒரு சாதாரண கதாபாத்திரத்தில் நடித்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

படத்தின் வெற்றி முக்கியமான விஷயங்களில் ஒன்று படத்தின் வசனம் தான். இறுதியில்

நண்பன் குத்தினால் சாகும் போது கூட காட்டி கொடுக்காதது தான் நட்பு, இது போல் பல.

பாடல்களில் ஏற்கனவே கேட்காததால் வரிகள் நினைவுக்கு வரவில்லை. ஆனால் படத்தில் வரும்

இரண்டு மாண்டேஜ் பாடல்கள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இனிமேல் தான் ஹிட்டாகும்

என்று நினைக்கிறேன்.

சுப்ரமணியபுரத்திலிருந்து நண்பனின் துரோகம், நாடோடிகளில் இருந்து நண்பனின் நண்பன்

எனக்கும் நண்பனே என்ற கான்செப்ட், தூங்கா நகரத்திலிருந்து கிளைமாக்ஸ் என பல

படங்களிலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும் பார்ப்பதற்கு வலிந்து திணித்தது போல் இல்லாமல்

இயல்பாக இருக்கிறது.

படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம்.  சில குறைகள் படத்தில் இருந்தாலும் அவற்றை

குறிப்பிட்டு சொல்வது எல்லாம் தேவையில்லாத ஒன்று.