தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

8/17/2010

உங்களுக்கு ஏன் இவரைப்பற்றி கவலை ?


இந்த பதிவு எழுதும் போது எனக்கு இவர் நான் ரசிக்கும் நல்ல மனிதர்களில் இவரும் ஒருவர் என்பதனால்  தான்,ஆனால் இவரை பத்தி தவறாக நினைக்கும் வெட்டி பசங்களுக்கு பதிலுடன் இங்கு பதிவு செய்கிறேன்........

 

        ரஜினிபற்றிய ஒரு சாதாரண விடயமென்றாலே சிலர் எதிர்மறையான கருத்து சொல்லி தங்களை உலகிற்கு வெளிக்காட்டிக்கொள்வது ஒன்றும் இங்கு புதிதல்ல. இவர்கள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ள அல்லது பிரபலப்படுத்திக்கொள்ள அல்லது பொறாமையை, இயலாமையை வெளிக்கொணர்வதற்க்கு ரஜினியை விமர்சிப்பது கூட ரஜினிக்கு ஒருவகை பப்ளிசிட்டிதான். இதைதான் விவேக் எந்திரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் "ரஜினி ஹச் என்று தும்மினாலே பப்ளிசிட்டிதான்" என்று கூறினார். ரஜினியை விமர்சிக்கிறேன் பேர்வழி என்று கிளம்பியவர்கள் யாரையும் ரஜினி இதுவரை கண்டுகொண்டதே இல்லை, இவர்களால் ரஜினிக்கு இதுவரை எதுவும் ஆகியதில்லை. 60 வயது தாண்டியும் 35 வருடமாக ஒரு துறையில் முதல்வனாக ரஜினி இருக்கின்றாரென்றால் அவருக்கு  kidaitha viruthu

இப்போதெல்லாம் பல இடங்களில் எந்திரனையோ, ரஜினியையோ விமர்சிக்கும் சமுதாய புரட்சிக்காரர்களுக்கு (அப்பிடித்தான் நினைப்பு) இருக்கும் முக்கியமான கவலைகள் மற்றும் கேள்விகள்சில......


1) அடுத்த நேர சோற்றுக்கே வழியில்லாத நிலையில் 150 கோடி பட்ஜெட்டில் ஒரு படம் தேவையா?


2) 60 வயதில் ரஜினிக்கு ஹீரோ வேடம், ஜோடிக்கு ஐஸ்வர்யா, என்ன கொடுமையடா சாமி.


3) எந்திரன் என்னும் பிரம்மாண்டத்துக்கு முன்னால் லோ பட்ஜெட்டில் வெளிவரும் நல்ல படங்கள் காணாமல் போகப்போகின்றன.


4) ரஜினி மக்களை ஏமாற்றுகிறார், அவர் நடித்துவிட்டு கோடி கோடியாக பணத்தை கொண்டு போய்விடுவார், அவர் படத்தை பார்ப்பதால் மக்களுக்கு என்ன வந்துவிடப்போகிறது?
இவர்களது இந்தமாதிரியான லூசுத்தனமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் தேவையோ கட்டாயமோ ரஜினி ரசிகர்களாகிய எங்களுக்கில்லாவிட்டாலும் சாதாரண மக்களுக்கு இவர்களது கேள்விகளிலும் கவலைகளிலுமுள்ள மாயையை உடைக்க வேண்டியது அவசியமானது. அந்த வகையில் ....

அடுத்த நேர சோற்றுக்கே வழியில்லாத நிலையில் 150 கோடி பட்ஜெட்டில் ஒரு படம் தேவையா? என்ற கேள்வியை எடுத்துக்கொண்டால்..


இந்த கேள்வியே தவறானது, அடுத்த நேர சோற்றுக்கே வழியில்லாமல் ஒருவன் இருக்கும்போது 150 கோடி என்ன ஒரு கோடியில் படமெடுத்தாலே அது தேவை இல்லாததே. அப்படி பார்த்தால் பணத்தை போட்டு எந்த சினிமாவுமே எடுக்கக் கூடாது. சினிமா என்ன சினிமா; யாருமே பெரிய முதல்போட்டு எந்த தொழிலுமே செய்யக்கூடாது. இவர்களது பினாத்தல்ப்படி சாதாரண பெட்டிக்கடை வைத்திருப்பவனும் 1000 ரூபா முதலில்தான் தொழில் பண்ணனும், பெரிய மொத்தவியாபாரியும் 1000 ரூபா முதலில்த்தான் தொழில் பண்ணனும், நாளைக்கு பெட்டிக்கடை வைத்திருப்பவன் உழைப்பால் முன்னுக்குவந்து பெரியளவில் மொத்தவியாபாரம் செய்யவேண்டுமென்றாலும் 1000 ரூபா முதலில்த்தான் தொழில் ஆரம்பிக்கணும்.


ஒரு படத்தின் தேவையை பொறுத்துத்தான் அதனது பட்ஜெட் அமையும், அதை தீர்மானிப்பது இயக்குனர். போட்ட பணத்தை திருப்பி எடுக்க முடியுமா? முடியாதா என்கிற கவலை தயாரிப்பாளருக்கு? தயாநிதிமாறன் பணம் மக்கள் பணமாகவே (மறைமுகமான) இருக்கட்டும், அதை எந்திரனில் முதலிடாவிட்டால் அவர் வேறொரிடத்தில் முதலிடத்தான் போகிறார், இதற்க்கு முன்னரும் எத்தனையோ இடங்களில் முதலிட்டுள்ளார், இல்லாவிடால் 20 இலட்சத்துக்கு ஆரம்பித்த சண் நேர்வேர்க்கின் இன்றைய பெறுமதியை 8000 கோடியாக எப்படி மாற்றியிருக்கமுடியும்? அப்பவெல்லாம் எங்க இருந்தாங்க இந்த புரட்சிக்காரங்கள் எல்லாம்? ரஜினி படத்துக்கு தயாநிதிமாறன் பணம் போடும்போதுதான் ஒருநேர சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் மக்கள் கண்ணுக்கு தெரிகிறார்களா? புதுமுக இயக்குனர்களும், நடிகர்களும் புதிய முயற்சிகளை செய்தால் வரவேற்கும் இந்த புரட்சிகரகூட்டம் எதற்க்காக ஷங்கரோ ரஜினியோ புதுமை செய்தால் வரவேற்கிறார்கள் இல்லை? புதியவர்களை பாராட்டினால் நல்லவர்கள்; பிரபலங்களை விமர்சித்தால் வல்லவர்கள், என்கிற தவறான சுயநல எண்ணம்தான் காரணம்.

அப்புறம் 60 வயதில் ரஜினிக்கு ஹீரோ வேடம், ஜோடிக்கு ஐஸ்வர்யா, என்ன கொடுமையடா சாமி? என்று காரணமே இல்லாமல் கவலைப்படுபவர்களே.....


முதலில் ஒரு விடயத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், 60 வயதில் ரஜினி நாயகனாக நடிக்கும் படங்களை உங்களையோ அல்லது மக்களையோ வந்து பார்க்கும்படி ரஜினி கட்டாயப்படுத்தவில்லை. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பார்க்காமல் விடுங்கள், அதே போல மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்கள் பார்க்காமல் விடுகிறார்கள். அதேபோல மக்கள் வரவேற்க்குமட்டும் ரஜினி விஞ்ஞானியாக என்ன கல்லூரி மாணவனாக கூட நடிப்பார். உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக ரஜினி நடிப்பதை நிறுத்தமுடியாது, ரஜினி எப்படி நடிப்பது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.


மக்களைவிட இந்த வெத்துவேட்டுகள் ஒன்றும் புத்திசாலிகள் இல்லை. எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்கள் இருக்கும்போதே ஸ்ரீதர், பாலச்சந்தரை வரவேற்ற மக்கள் தொடர்ந்து இன்றுவரை பாரதிராஜா, பாக்கியராஜ், மகேந்திரன், பாலுமகேந்திரா, மணிரத்தினம், பாலா, அமீர், வசந்தபாலன், சசிகுமார் என வித்தியாசங்கள் அனைத்தையும் வரவேற்க தவறவில்லை. அதே மக்களுக்கு 60 வயதில் நாயகனாக நடிக்கும் ரஜினியை வரவேற்பதா? இல்லையா? என்பதை இந்த கத்துக்குட்டிகள் சொல்லி தெரியவேண்டியதில்லை, மக்கள் எப்பவுமே புத்திசாலிகள்தான்.


அடேய் வெண்ணைகளா ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிப்பதற்கு அமிதாப், அபிசேக், ஜெயா பஜ்சன்களே ஒன்னும் சொல்லல, இதில உங்களுக்கு என்ன வந்திச்சு? பொறாமை..... (லைட்டா இல்ல,ரொம்பவுமே). அப்புறம் கண்ணுகளா 150 கோடி பட்ஜெட்டை தாங்கிறதுக்கு இந்தியாவிலேயே இந்த 60 வயசு இளைஞரால மட்டும்தான் முடியும்.


எந்திரன் என்னும் பிரம்மாண்டத்துக்கு முன்னால் லோ பட்ஜெட்டில் வெளிவரும் நல்ல படங்கள் காணாமல் போகப்போகின்றனவென லோ பட்ஜெட் படங்களுக்காக கவலைப்படும் சீர்திருத்தவாதிகளுக்கு(நினைப்புத்தான் பிழைப்பை கெடுக்கிறது).....


இவர்களுக்கு வணிக சினிமா இல்லாவிட்டால் வித்தியாசமான முயற்ச்சிகளுக்கு பணம் எப்படி கிடைக்குமென்கின்ற அடிப்படை சினிமா அறிவேயில்லையென்று கூறினால் அதில் தவறில்லை. கமர்சியல் படங்கள் கொடுக்கும் பணத்தில்த்தான் வித்தியாசமான முயற்ச்சிகளுக்கு பணம் கிடைக்கின்றது என்பதற்கு தற்போதைய உதாரணம் ஷாங்கர், பிரகாஷ்ராஜ் போன்றவர்கள்தான். இவர்கள் தயாரிக்கும் வித்தியாசமான சினிமாக்களுக்கான பணம் எங்கிருந்து பெறப்பட்டது? பெரும்பாலான வித்தியாசமான முயற்சிகளுக்கு ஆரம்பகாலம் முதல் இன்றுவரை பணத்தை போட்ட தயாரிப்பாளர்கள் வணிக சினிமாவோடு தொடர்புடையவர்களே.


இதிலே காமடி என்னவென்றால் பிரம்மாண்டத்துக்கு முன்னாடி லோ பட்ஜெட் காணாமல் போய்விடுமாம், அப்படிபார்த்தால் தசாவதாரம் என்ற பிரம்மாண்டத்திற்கு முன்னால் சுப்ரமணியபுரம் காணாமலா போனது? சுப்ரமணியபுரம் வரிசையில் வெளிவந்த பசங்க, ரேணிகுண்டா, அங்காடித்தெரு, களவாணி போன்ற லோ பட்ஜெட்டில் உருவாக்கி வணிக ரீதியாகவும் சிறந்த படைப்புக்களாகவும் பேசப்பட்ட படங்கள் சிவாஜி, தசாவதாரம் போன்ற பிரம்மாண்டங்களினால் காணமலா போயின?


ரஜினி மக்களை ஏமாற்றுகிறார், அவர் நடித்துவிட்டு கோடி கோடியாக பணத்தை கொண்டு போய்விடுவார், அவர் படத்தை பார்ப்பதால் மக்களுக்கு என்ன வந்துவிடப்போகிறது? என்கின்ற சமுதாய விளிப்பு(ண்ணாக்கு)ணர்வு கேள்வியைகேட்பவர்கள்....


முதலில் ஒரு கேள்விகளுக்கு பதிலை அளிக்கட்டும். ஒரு வேலையில் புதிதாக சேர்ந்ததில் இருந்து ஓய்வு பெறும் காலம்வரை கிடைக்கும் ஊதிய உயர்வை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பார்களா? ரஜினி என்ன எடுத்த எடுப்பிலேயே கோடிகளில் பணம் கேட்கிறாரா? கையில் ஒன்றுமே இல்லாமல் சினிமாவை தேடி சென்னை வந்த ரஜினி சினிமாவில் முதல் காட்சியில் தலைகாட்டும் வரை பட்டபாடு இவர்களுக்கு தெரியுமா? அதன் பின்னர் 35 வருட கடினஉழைப்பு, அதில் ஏற்ப்பட்ட அவமானங்கள், தோல்விகள், விரக்தி, மனநிலை பாதிப்பு என படிப்படியாக முன்னேறிய ரஜினி 35 வருட சினிமா வாழ்க்கயில் ஆயிரங்கள், லட்சங்கள், கடந்த பின்னர்தான் கோடிகளை தொட்டார்.


தனக்கு கிடைக்கவேண்டிய நியாயமான தொகைதான் ரஜினி இதுவரை பெற்றிருக்கிறார், இல்லாவிட்டால் எதற்க்காக ரஜினிக்கு சம்பளம் கொடுத்து அவரை நடிக்கவைக்க தயாரிப்ப்பாளர்கள் காத்திருக்கிறார்கள்? 1000 ரூபாய் லாபம் வரும்போது 100 ரூபாய் ஊதியம் பெற்ற ஒருவன் 100,000 ரூபாய் லாபமாக வரும்போது 10,000 ரூபாய் ஊதியம் பெறுவது குற்றமா? இதில் மக்கள் பணம் எங்கிருந்து கொள்ளை அடிக்கப்படுகின்றது? தங்கள் மூன்றுமணிநேர பொழுது போக்கிற்காக, மகிழ்ச்சிக்காக, ரிலாக்சிற்காக மக்கள் கொடுக்கும் பணத்தின் ஒருபகுதிதான் நடிகர்களுக்கு கிடைக்கின்றது. அதிகளவு மக்கள் ரஜினி படங்களை விரும்பி பார்ப்பதால் ரஜினிக்கு அந்த தொகை அதிகமாக கிடைக்கின்றது. இதில் என்ன தவறு இருக்கின்றது என்றுதான் புரியவில்லை!


சுறா  திரைப்படத்தில் விஜய் 'பப்ளிசிட்டி' தேடுவதுபோல இவர்கள் தங்களுக்கு தாங்களே பப்ளிசிட்டி தேடுகிறார்கள்  என்பது தெரிந்தாலும் சில நேரங்களில் கோபம் வருவதை தவிர்க்கமுடியாமல் இருக்கும். இவர்களை சமாளிப்பதற்கான வழி  ரஜினி சொன்ன தவளைகள் மலையேறும் கதையில் உள்ளது.  அதிலே தலைவர் சொன்னது போல நாங்களும் காது கேட்காதவர்கள்போல இருந்தால் இந்த தெருநாய்கள் குரைப்பது எங்கள் காதில் விழாமல் இருக்கும்.(உண்மையான தெரு நாய்களே " இந்தப் போலி சந்தர்ப்பவாத புரட்சியாளர்களுக்கு உங்கள் பெயரை உவமானமாக பயன்படுத்தி உங்களை அவமானப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்").

குறிப்பு : நான் அவரின் விசுவாசி அல்ல , நான் மதிக்கும் நல்ல மனிதர்களை இவரும் ஒருவர் என்பதனால் இந்த பதிவு என்பதை மீண்டும் நினைவு கொள்கிறேன் .

1 கருத்து:

siva சொன்னது…

கல்க்கிட்டீங்க பாஸ்
தலைவர் வாழ்க......
ரஜினி சிவா