முப்பது வயதை கடந்து விட்டது
முன் நெற்றில் முடியும் கொட்டிவிட்டது
செல்லத் தொப்பையும் வந்து விட்டது.
கல்லூரிக் கனவுகளை கலைத்து விட்டு
கணிப்பொறியின் காதலனாய் காவல் பட்டோம்.
காசில்லா விட்டாலும் காதலுக்கு பஞ்சமில்லை
காதல் தோல்விகளும் கொஞ்சமில்லை.
ஓர் இலக்க குரோமொசோம் குளறுபடியால்
அடித்து வரப்பட்ட
ஆணாதிக்க வர்க்கத்தினர்.
இனிய இளமையை
இ.எம்.ஐ-லேயே இழந்து விட்டு
பணம் காய்க்கும் எந்திரமாக மாற்றப்பட்டோம்.
பொறுப்பற்ற பொறுக்கிகளா ஆண்கள்?
அப்பாவின் மருத்துவம்,
அம்மாவின் வளையல்,
என ஏதேனும் பொறுப்புகளை சுமக்கும் தியாகிகள்.
நண்பர்களுக்கு இடையே
நட்பின் அடர்த்தி வேண்டுமானால்,
கூடக் குறைய இருக்கலாம்.
ஆனால்,
கடைசி காசு வரை
நண்பர்களுக்காகச் செலவிடும்
மனங்களுக்கு குறைவிருக்காது.
அன்பு நிறைந்த ஆணின்
நல்மதிப்பை அளவிட
புகையும், குடியும் மட்டுமே
அளவுகோல்களாகக்கி விட வேண்டாம்.
ஆயிரம் சொல்லி விளக்கினாலும்
அப்பாவி ஆண்களுக்கும் உண்டோ கற்பு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக