இங்கே நிம்மதி கிடைக்கும்
சின்ன விஷயங்களுக்குக்கூடப் பெரிதாய் அலட்டிக் கொள்ளும்
பிரச்சினையிலிருந்து மீள மனவியல் நிபுணரை சந்திக்கச் சென்றார் ஒரு மனிதர்.
சிறிது நேரம் கண்களை மூடச் செய்துவிட்டு பெரிய கண்ணாடித் தடுப்புக்கு
மறுபுறம் இருந்த பழத்தைக் காண்பித்து
“இது என்ன பழம்” என்றார்.
“சாத்துக்குடி” என்று பதில் வந்தது. கண்ணாடிச் சட்டத்தை அகற்றிவிட்டு
“இப்போது சொல்லுங்கள்” என்றதும் “எலுமிச்சை” என்றார்.
“இடையில் வைக்கப்பட்டிருக்கும் லென்ஸ்தான் உங்கள் மனம். எல்லாவற்றையும்
பெரிதாக்கிக் காட்டுகிறது.
பிரச்சினைகளை அவற்றின் சரியான அளவிலேயே சந்தியுங்கள்” என்று அறிவுரை
சொன்னார் மருத்துவர்
1 கருத்து:
"இதுவும் கடந்து போகும்" -என்று இன்ப துன்பங்களை ஒன்றுபோல் அனுபவித்துப்பார்க்கும் பழக்கம் வழக்கமாகிவிட்டால் என்றுமே துன்பம் வராது. இது புத்தர் காட்டிய வழியும் கூட!
கருத்துரையிடுக