"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! கோவை அ.ராமநாதன்
1/19/2011
என்னவள் எனக்கு சொர்க்கம்தான்
உன்னுடன் என்ன என்ன பேச வேண்டும் என
இரவு முழுவதும் யோசித்து வந்தேன்..
உன்னை பார்த்த நொடியில் அத்தனையும்
மறந்து ஒன்றும் தெரியாதவனாய் நிற்கிறேன்..
உனக்காக நான் எழுதிய காதல் கடிதம் கூட
என்னை பார்த்து சிரிக்கிறது.. இதையாவது
அவளிடம் கொடுப்பாயா என்று..
எனக்கு வரும் ஒவ்வொரு அழைப்பும்
நீயாக இருக்க கூடாதா என என்னை விட
அதிகமாக ஏங்கியது என் தொலைபேசி..
உன் குரல் அதுக்கும் பிடித்துள்ளது
பூமியிலும் தேவதைகள் இருக்கிறார்கள்
உன்னை கண்ட பின்தான் அறிந்தேன்...
என்னவளே..
தொலைபேசியில் நான் "ஹலோ" என்றதும்
சிறிது அமைதி காத்து பேசுகிறாயே..
அதுக்கு என்ன அர்த்தமடி..நீயும்
காதலிக்க கற்றுக்கொண்டாயோ..
தேவதையே...உன்னை காண
பேருந்து நிலையத்தில் நிற்கும்
ஒவ்வொரு நிமிடமும் எனக்கு சொர்க்கம்தான்..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக