இலங்கையின் கடற்பகுதியில் வெகு தூரம் சென்று, யாழ்ப்பாண கடற்பகுதியில் மீன் பிடிக்க முயன்ற தமிழக மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சுற்று வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதும், அதற்குப் பிறகு புதுக்கோட்டை மீனவர்கள் மேலும் 24 பேர் கைது செய்யப்பட்டு, பிறகு இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருப்பதும் தமிழக மீனவர்கள் பிரச்சனையில் ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது.
ஒரு வாரத்திற்கு முன் நிகழ்ந்த இவ்விரு நிகழ்வுகளும் மிக ஆழமாக பரிசீலிக்கப்பட வேண்டிய முக்கிய நிகழ்வுகளாகும். இலங்கையின் வட பகுதியிலுள்ள (தமிழீழப் பகுதி) பருத்தித் துறை கடற்பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 18 இழுவைப் படகுகளை (Trawlers) ஈழத்து மீனவர்கள் சுற்றி வளைத்து, அவர்கள் தங்கள் படகுகளில் இறக்கிக் கொண்டு வந்து சிறிலங்க காவல் துறையினரிடம் ஒப்படைத்ததாக ஈழத்துச் செய்திகள் கூறின. அததோடு, கைப்பற்றப்பட்ட இழுவைப் படகுகளின் படங்களும், அதிலிருந்த மீனவர்களின் படங்களும் வெளியாகி இருந்தது. எமக்கும் அந்த விவரங்கள் முழுமையாக மின்னஞ்சலில் வந்தது.
18 இழுவைப் படகுகளில் இருந்த 106 மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்ற செய்தி தமிழ்நாட்டை எட்டிய சில நிமிடங்களில், அதனைக் கண்டித்து மறுநாள் ஆளும் தி.மு.க. சார்பில் சென்னையில் உள்ள துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது!
தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லைப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தாலே அங்கு சிறிலங்க கடற்படைக் கப்பல்கள் வந்து மீது தாக்குதல் நடத்தும், அப்படிப்பட்டத் தாக்குதல்கள் 1979 முதல் நடைபெற்றும் வந்துள்ளது. 500க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டும் உள்ளனர். நேற்று கூட கச்சத் தீவிற்கு அருகே - அதாவது இந்தியாவின் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் - 700 படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, 4 வேகப் படகுகளில் வந்த சிறிலங்க கடற்படையினர் விரட்டியடித்தனர் என்று செய்தி இன்று மிக விரிவாக வெளியானது. “இதற்கு மேலும் இங்கு வந்த மீன் பிடித்தால் சுடுவோம்” என்று சிறிலங்க கடற்படையினர் மிரட்டியதாகவும் சில செய்திகள் கூறுகின்றன.
இந்தச் செய்தியை, அப்படியே கடந்த ஒரு வாரத்திற்கு முன்னால் வந்த செய்தியுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக