தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/13/2011

காத்திருக்கலாமே ...


காதல் பிரச்சனை வீட்டில் தெரியவந்தவுடன் கண்டிப்பாக பிரச்சனைகள் வரவே செய்யும்.


குழந்தையாக பாவித்துக் கொண்டிருப்பவர்கள் திடீரென மிகப்பெரிய முடிவினை அவர்களாகவே எடுக்கும் பொழுது கோபம், ஆத்திரம் எல்லாம் பெற்றவர்களுக்கு ஏற்படுவது நியாயமே.


'ஏன் நமது நியாயமான காதல் ஆசையை, ஆர்வத்தைப் புரிந்து கொள்ளாமல் பெற்றவர்கள் கோபத்தில் இருக்கிறார்கள்?' என சிந்திக்காமல், அவர்களது கோபம் நியாயமே, அது தீர்வதற்கு சிறிது நேரம் கொடுக்கலாம் என காத்திருங்கள்.


இந்திரா காந்தி படிக்கும் காலத்தல் பெரோஸ் காந்தியைக் காதலித்தார். விஷயம் பிரதமராக இருந்த நேருவின் காதுகளுக்குப் போனது. 'நான்கு வருட காலம் இருவரும் சந்திக்காமல், பேசிக்கொள்ளாமல், கடிதம் எழுதாமல் இருங்கள். அதற்குப் பின்னர் இருவருக்கும் காதல் இருப்பதாகத் தெரிந்தால் திருமணம் முடித்து வைக்கிறேன்' என்று நிபந்தனை விதித்தார்.


இருவரும் காதலுக்காக சொன்ன சொல்லைக் காப்பாற்றிக் கிடந்தார்கள். அவர்கள் இருவரும் அன்போடு காதலில் காத்துக் கிடந்திருப்பதைப் பார்த்த நேரு, விரைவிலேயே இருவருக்கும் திருமணம் முடித்து வைத்தார். பெற்றோர்களது கோபம் தீரும் வரை காத்திருங்கள். காத்திருந்தால் கண்டிப்பாக நல்லதே நடக்கும்.


பெற்றோர், காதல் இரண்டும் மனிதனுக்கு இரு கண்களைப் போன்றது என ஏற்கனவே பார்த்தோம். அதனால் இரண்டுடனும் சேர்ந்து வாழ்வதற்காக முடிந்தவரை கஷ்டப்பட்டு சம்மதம் பெறுதலே நல்லது.


சில பெற்றோர்கள் காதலுக்கு ஆதரவாகவே இருப்பார்கள். ஆனால், இந்த காதலுக்கு இசைவு தெரிவித்தால் அடுத்ததாக தம்பி, தங்கைக்கு திருமணம் முடிப்பதில் சிக்கல் ஏற்படும் என பயப்படுவார்கள். அவர்களது சந்தேகம், பயம் நியாயமானதே. அதனால் உங்களது காதலால் குடும்பத்தில் மற்றவர்களது எதிர்காலத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என உறுதியளிக்க வேண்டியது உங்கள் கடமை.


காதல் திருமணங்கள் என்பது இப்பொழுது வெகு சகஜமாக நடைபெறுகின்றன. இது சமூக குற்றம் அல்ல என்பதை எடுத்துச் சொல்லி அவர்களது அன்பினைப் பெற்று அதன் பின்னர் திருமணம் முடிப்பதே நல்லது.


காதல் என்ற கனவுக் கோட்டையினைப் பிடிக்க ஏழு மலை, எட்டு கடல் கடந்து போகும் பொறுமை இருவருக்கும் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் இருவரும் உண்மைக் காதல் செய்கிறார்கள் என அர்த்தமாகும்.

கருத்துகள் இல்லை: