தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

4/29/2011

அரசு விளம்பரங்கள் .....




கலைஞர் டிவி க்கு தமிழக அரசு பணம் கொடுக்கப்படும் விகிதம் - 10 விநாடிக்கு ரூ.9700/- சன் டிவி க்கு – ரூ.23,474- தமிழக அரசு சம்பந்தப்பட்ட பல விளம்பரங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் வருவதைக் காண்கிறோம். சில விளம்பரங்கள் 3-4 நிமிடங்கள் அளவிற்கு கூடப் போகின்றன. இவை எல்லாம் சமூக நலன் கருதி வெளியிடப்படும் இலவச அரசு விளம்பரங்கள் என்றே பலரும் எண்ணி வந்தனர். அண்மைக் காலங்களில் அடிக்கடி வெளியிடப்படும் குடிசை வீடுகளை கான்க்ரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தின் விளம்பரங்களில் கலைஞரும், ஸ்டாலினும் பல நிமிடங்களுக்கு தொடர்ந்து காட்சி அளிக்கிறார்கள். அவர்களுக்கு புகழ்மாலைகள் சூட்டப்படுகின்றன. அரசு செலவில் இப்படி முதல்வரும், துணைமுதல்வரும் தற்புகழ்ச்சி செய்து கொள்வதே அருவருப்பாக இருக்கிறது. இத்தகைய விளம்பரங்களை திமுக தன் கட்சி செலவில் தயாரித்து வெளியிட்டால் யாரும் கேட்கப்போவதில்லை. அரசு செலவில் இத்தகைய விளம்பரங்கள் தயாரிக்கப்படுவதே அருவருப்பாக இருக்கிற நேரத்தில், இவை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தமிழக அரசால் காசு வேறு கொடுத்து ஒளிபரப்பப்படுகின்றன என்கிற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இது குறித்து செய்தி ஒன்று – சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டிசம்பர் 30-ம் தேதி இ.எம்.ஆர்.ஐ.தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி- பதில்களின் விவரம் இன்று வெளியாகி இருக்கிறது. கேள்வி:— 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான விளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. இது இலவச விளம்பரமா? அல்லது கட்டண விளம்பரமா? கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்? பதில்:— 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம் இலவச விளம்பரம் அல்ல. கட்டண விளம்பரம்தான். ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு சன் டிவியில் ரூ.23,474-ம், கலைஞர் டிவியில் ரூ.9,700-ம் செலுத்த வேண்டும் !!! சன் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் - முதல்வரின் பேரன், அவர் மனைவி மற்றும் அவரது குடும்பத்து உறுப்பினர்கள். கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களில் - முதல்வரின் மகளும், சில அமைச்சர்கள் குடும்பத்தினரும் அடங்குவர். அரசாங்க விளம்பரங்கள் எந்த அடிப்படையில் இந்த தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கக்ப்படுகின்றன ? சன் தொலைக்காட்சி அதிகம் பேரால் பார்க்கப்படுவதால் விளம்பரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லலாம். சரி - கலைஞர் தொலைக்காட்சியை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள் ? அதற்கு எப்படி அரசு விளம்பரத்தைக் கொடுத்தார்கள் ? இதில் விநோதம் என்னவென்றால் - அரசு தொலைக்காட்சியான பொதிகையில் இத்தகைய அரசு விளம்பரங்கள் வெளியாவதே இல்லை ! (அங்கு காசு கொடுத்தால் அது தன் குடும்பத்திற்கு எப்படி போகும் ?) அரசாங்க பணத்தில் முதல்வர் குடும்பத்து தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் கொடுப்பது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா ? எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்கிற போக்கில் செயல்படுவது சரியா? மிகுந்த சிரமத்திற்கிடையே இத்தகைய தகவல்களை வெளிக்கொண்டு வந்த திரு வி.சந்தானம் அவர்களைப் பாராட்டுவதும், இவற்றை அதிக அளவில் பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு போவதும் நம் கடமை.

இதுபோல் தான் அனைத்து கட்சியினரும் செய்கின்றனர் ,யோசியுங்கள் 
இனி கட்சி நிதி கேட்டு வரும் யாருக்கும் தரமாட்டோம் என கொள்கையுடன் வாழ பழகுவோம்  


மீண்டும் சந்திப்போம் (எதிர்ப்பு வரவே முடிக்கறேன் )

4/27/2011

என் பார்வையில் ' கோ '



தமிழ் சினிமாவின் சமீபத்திய தியேட்டர் கூட்ட வறட்சியை போக்க வந்திருக்கும் முதல் கோடைக்காலப் படம் “கோ”. ஓளிப்பதிவாளர் இயக்குனர் கே.வி.ஆனந்தின் மூன்றாவது படம். முதல் படத்தில் டீசண்டாய் இருந்து கொண்டு கந்துவட்டி மேட்டர், இரண்டாவது படத்தில் கள்ளக்கடத்தல் பின்னணி. இதில் அரசியலும், பத்திரிக்கை போட்டோகிராபரின் வாழ்க்கையை ஒட்டிய பின்னணி. மூன்றிலும் ஒவ்வொரு கதை களன். முந்தைய படமான அயனின் வெற்றியும், ஹாரிஸின் என்னவோ ஏதோவும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம்.ஒரு தின இதழின் போட்டோகிராபரான ஜீவாவையும், அதன் ரிப்போர்டர்களான கார்த்திகா, பியாவை சுற்றி நடக்கும் கதை. இவர்களின் செய்லால் தமிழ் நாட்டின் ஆட்சியையே மாற்றி அமைக்க எப்படி முடிகிறது? என்பதை முடிந்த வரை சுறுசுறுப்பான திரைக்கதையில் சொல்ல நினைத்ததை வெற்றிகரமாக சொல்லி இருக்கின்ற்னர்.படத்தில் வரும் டைட்டிலை பார்க்கும்போது மிகவும் வித்தியாசமான கிரியேட்டிவிட்டி தெரிகிறது


படத்தின் முதல் காட்சியான பேங்க் கொள்ளைக்காட்சியில் பற்றிக் கொள்ளும் திரைக்கதை, மெல்ல சூடு பரவி, எதிர்கட்சி தலைவர் கோட்டாவிடம் பற்றி எரிய ஆரம்பித்து, ப்ரகாஷ்ராஜிடம் வந்து நின்று எரிய ஆரம்பித்து சட்டென அணைந்துவிடுகிறது. நடுவே கொஞ்சம் நேரம் என்ன ஏது என்று புரியாமல் அலைபாய்ந்துவிட்டு, அஜ்மல் கட்சி மீட்டிங்கில் வெடித்தெழுகிறது. அஜ்மல் கேரக்டரின் அதீத முக்யத்துவமும், ஜீவாவின் ந்டிப்பும் சபாஷ் சொல்ல வேண்டியவைதான்.
முக்கியமாய் பத்திரிக்கையாளர்களான சுபா, கே.வி.ஆனந்த் ஆகியோருக்கு ஒரு பத்திரிக்கை அலுவலகத்தின் பின்னணி நன்றாகவே தெரிந்திருக்கிறவே படம் வெற்றிக்கு பக்க பல்ம்.


ஜீவாவுக்கு மிக இயல்பாய் பொருந்துகிறது இந்த போட்டோகிராபர் கேரக்டர். சம்பவங்கள் நடக்கும் போது சடாலென கேமராவை தூக்கிக் கொண்டு ஒடும் பரபரப்பும், போட்டோ எடுக்கும் லாவகமும் படு இயல்பு. கார்த்திகாவிடம் இவருக்கு இருக்கும் நெருக்கத்திற்கும், பியாவிடம் இருக்கும் நெருக்கத்திற்குமிடையே இவரிடம் தெரியும் பாடி லேங்குவேஜ் ரசிக்க வைக்கிறது.
கார்த்திகாவின் கண்கள் பல பேரை தூக்கமிழக்க செய்யப் போகிறது. நல்ல வாளிப்பான உயரம். ஆனால் நடிப்பதற்கு பெரியதாய் ஏதும் வாய்ப்பில்லை என்றாலும், பியாவின் காதலுக்காக தன் காதலை கட்டுப்படுத்திக் கொள்ளும் காட்சிகளில் ரசனை.
பியா அவுட் ஸ்போக்கன் சென்னைப் பெண். பரபரவென காதலை கொட்டிக் கவிழ்த்து, மடிந்து போகிறார். இவரிடமிருக்கும் துள்ளல் இவர் போனதும் போய்விடுவது குறையே.
ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு தரம். முக்கியமாய் அந்த ஓப்பனிங் சண்டை சேசிங் காட்சிகளும், ஹசிலி பிசிலி பாடல் காட்சிகளின் லொக்கேஷன்களும் இன்னமும் கண்ணில் நிற்கிறது. க்ளைமாக்ஸ் ஆக்‌ஷன் காட்சிகளில் அந்த மொட்டை மாடி ஜியாக்கிரபியும், அதை படமெடுத்த விதமும், விறுவிறுப்பு. அதற்கு இணையாய் ஆண்டனியின் எடிட்டிங்கையும் குறிப்பிட வேண்டும்.
ஹாரிஸின் பாடல்களில் மூன்று ஏற்கனவே ஹிட்லிஸ்டில் ஓடிக் கொண்டிருக்கிறது. முக்கியமாய் அந்த என்னவோ ஏதோ க்யூட் மெலடி. ஆனால் அந்த பாடலின் படமாக்கம் மிகவும் சொதப்பிவிட்டதாய் தான் தோன்றுகிறது. அந்த ஹசிலி பிஸிலியின் மெனக்கெட்டதை இந்த பாடலுக்கு மெனக்கெட்டிருக்கலாம். பின்னணியிசை வழக்கப்படி ஆங்காங்கே சுட்டுத் தெளித்திருக்கிறார்.


கதை திரைக்கதையை எழுத்தாளர்கள் சுபாவுடன் இணைந்து எழுதி, இயக்கியிருக்கிறார் கே.வி.ஆனந்த். பரபரவென ஓடும் படத்திற்கு பெரிய பலமே திரைக்கதைதான். . படம் பார்ப்பவர்களை திசை திருப்ப, எதிர்கட்சி தலைவர், முதலமைச்சர், அஜ்மல் என்று மூன்று பக்கமும் திரைக்கதை ஓடுவதால், விறுவிறுப்பு கூடுவதை தவிர்க்க முடியவில்லை. . நக நக பாடலில் ஜெயம்ரவி, ஹாரிஸ், சூர்யா, கார்த்தி, ஜீவா என்று நட்சத்திர பட்டாளங்களை ஆடவிட்டிருப்பது இண்ட்ரஸ்டிங். முக்கியமாய் அதில் கல்யாணராமன் கெட்டப் சிம்பு போல ஒரு கேரக்டரை உலவ விட்டிருப்பதில் ஏதேனும் உள்குத்திருக்குமோ என்று தோன்றுகிறது. இப்படத்தின் கதையை தெரிந்து கொண்டு ரெட் ஜெயண்ட் வாங்கி வெளியிட்டதை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அதே வேலையில் எலக்‌ஷனுக்கு பிறகு வெளியிட்டதில் இருக்கும் புத்திசாலித்தனத்தையும் பாராட்டத்தான் வேண்டும். இன்னொரு அயனை எதிர்பார்த்தவர்களுக்கு சரியான ப்டம் ,இளைஞர்களுக்கு சரியான பாடம் .

பெரியள்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்....

4/23/2011

உலகப் புத்தக நாள்.....

கற்க கசடற கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக.'- குறள் எண்: 391.

நல்ல புத்தகத்தை வாசிப்பதும் , நல்ல படங்களை நேசிப்பதும் கவுரவமான விடயமாக மாற வேண்டும் – வெ . இறையன்பு

இன்று உலக புத்தக தினம். உலகப் புத்தக நாள் என்பது யுனெஸ்கோ நிறுவனத்தின் தீர்மானத்தின்படி ஆண்டுதோறும் ஏப்ரல் 23 அன்று புத்தகம் தொடர்பான விழிப்புணர்வுகளுக்காகக் கடைப்பிடிக்கப்படும் சிறப்பு நாளாகும்.

பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது. அத்தீர்மானம் வருமாறு,

"அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்"

ஷேக்ஸ்பியரின் பிறந்ததினமான ஏப்ரல் 23 அன்று உலகப்புத்தக தினம் கடைப்பிடிக்கப்படுவதை பொருத்தமானதாகக் யுனெஸ்கோ மாநாடு கருதியது. ஷேக்ஸ்பியர் மறைந்த தினமும், செர்வான்டிஸ், இன்கா போன்ற இலக்கியவாதிகள் மறைந்த தினமும் இதுதான்.

உலகப் புத்தக தினம் என்று ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து சர்வதேச பதிப்பாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டு ஸ்பெயின் நாட்டு அரசால் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. ரஷ்யப் படைப்பாளிகள் புத்தக உரிமைக்கும் (காப்புரிமை) முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கருதியதால் ஏப்ரல் 23 உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
புத்தகம்தான் என் முதல் நண்பன். எனக்கு நூல்கள் தந்தவர்களுக்கு தான் நன்றி சொல்லவேண்டும் . மனமுடைந்த நேரங்களுக்களிலும் , அறியாததை அறிய , தெரியாத என் மொழியில் தெரிந்து கொள்ளவும் , எனக்கு ஆறுதல் தந்ததும் புத்தகங்கள் தான்

“மனித மனம் ஒரு நாய் போல , அதற்க்கு சரியான உணவை நாம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் இல்லையென்றால் அந்த நாய் மலம் திண்ண சென்றுவிடும்” – புத்தகங்கள்தான் சரியான உணவு

இன்று புத்தக தினம் ,முடிந்தவரை நல்லதொரு புத்தகம் வாங்கி இன்றைய தினத்தை பொற்றுங்கள்……

கோவை ராமநாதன் .

4/18/2011

யோசிக்கும் நேரமிது ....

உணரும் நேரமிது



பேய் பிடித்ததா?


நோய் பிடித்ததா?

வியாபார வளர்ச்சியா?


வெளிநாட்டில் வேலையா?
மணத்தடையா?


குழந்தை வரமா?










எல்லாவற்றிற்கும் தீர்விருந்தது –


லோக ரட்சகனிடம்










காற்றிலிருந்து எடுத்த விபூதியிலும்


வாயிலிருந்து எடுத்த லிங்கத்திலும்










அந்த லோக ரட்சகன் –


இன்று நோயின் பிடியில்










இவரை ரட்சிக்க –


விபூதி யார் கொடுப்பது?










அன்று –


அவருக்கு செய்தனர் பூஜை


இன்று -


அவருக்காகச் செய்கின்றனர் பூஜை










மரணப்படுக்கை மனிதனுக்கல்லவா?


ஆண்டவன் ஆத்துமா அவதிப்படுமா?










சாயி பாபா சாயும் நேரமாவது -


புரிந்துகொள்ளுஙள்










அவர் கடவுளல்ல -










நம்மைப்போல் -










மரணக்குழிக்குள் புதையப்போகும்


சாதாரண மனிதன் தான் என்று!










ஒரு வித்யாசம் -










ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்










இக் கலியுகத்திலும்-


காவியுடை தரித்து










கல்வியில் சிறந்தோரையும்


கடவுள்நானெனச் சொல்லி










தன்வசப்படுத்திய-


ஓர் திறமைசாலி என்பதை !

4/08/2011

காந்தியவழியில் ஒரு மனிதர் ......



இதுநாள் வரை மகாராஷ்ட்ரா ஊழல் அரசியல்வாதிகளின் கண்களில் விரலைவிட்டு ஆட்டி வந்த அண்ணா ஹசாரே, தற்போது டெல்லியில் மையம் கொண்டிருப்பதை பார்த்து மத்திய அரசு கிலி பிடித்து போய் உள்ளது.


ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா வரைவு குழுவில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டுமல்லாது, குடிமக்கள் பிரதிநிதிகளையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் இன்று தொடர்ந்து 3 ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் ஹசாரேவுக்கு நாடு முழுவதும் இருந்து ஆதரவு பெருகுகிறது.


அதிலும் ஸ்பெக்ட்ரம் ஊழலின் முடை நாற்றம் காரணமாக ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்துபோய் இருக்கும் இந்த தருணத்தில், ஹசாரே சரியான சமயத்தில் சாட்டையை சுழற்றி உள்ளார்.


சரி இப்படி பிரதமர் அலுவலகத்தையே மிரள வைத்திருக்கும் இந்த அண்ணா ஹசாரே யார்?


அண்ணா ஹசாரே என்றழைக்கப்படும் முனைவர் கிசான் பாபுராவ் ஹசாரே, 1938 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதியன்று மகராஷ்ட்ரா மாநிலத்தில் பிறந்தவர்.


தன்னை ஒரு 'ஃபக்கிரி'என்றழைத்துக் கொள்ளும் அண்ணா ஹசாரேவின் ஆரம்பக் கால வாழ்க்கை துயரம் மிகுந்ததாகவே இருந்தது.


நான் ஏன் வாழ வேண்டும், ஏன் இந்த வாழ்க்கை என வெறுப்பின் உச்சத்தில் ஒருமுறை தற்கொலை செய்யும் முடிவில் இரண்டுப் பக்கத்துக்கு தான் ஏன் தற்கொலை செய்யப் போகின்றேன் என எழுதி வைத்து விட்டு தற்கொலைக்கு கூட முயன்றுள்ளார்.ஆனால் அம்முயற்சி கைக்கூடவில்லை.


பின்னர் ஒரு முறை டெல்லி ரயில் நிலையத்துக்கு சென்றிருந்தபோது அவர் படித்த சுவாமி விவேகானந்தரின் புத்தகம்தான் அவரது வாழ்க்கையை புரட்டிப்போட்டது.


போராடுவது அவருக்குப் புதிதல்ல.இந்திய இராணுவத்தில் 15 ஆண்டு காலம் எல்லையில் நின்றுப் போராடியவர் தான் அண்ணா ஹசாரே. 1962 ல் இந்தோ - சீன யுத்தத்தில் இளைஞர்கள் பங்கேற்கும் படி அரசு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி தம்மை இராணுவத்தில் இணைத்துக் கொண்டவர் அண்ணா ஹசாரே.


ஆனால் இராணுவத்தில் அவர் மனம் முழுமையாக ஈடுபடவில்லை. தமது வாழ்வின் நோக்கம் என்ன் என்பதே தெரியாமல் இருந்த நிலையில், தானாகவே தமது இராணுவப் பணிக்கு விடை சொல்லிவிட்டு மகாராஷ்ட்ராவில் உள்ள தமது சொந்த ஊரான ராலேகாவன் சித்திக்கு 1978 ஆம் ஆண்டு தனது 39 ஆவது வயதில் திரும்பினார். அப்போது தான் தமது கிராம மக்கள் தமது வாழ்க்கையை வாழவே துன்பப்படுகின்றார்கள் என்பதை பார்த்து மனம் பதைபதைத்தார்.


அவர்களின் வாழ்வை மாற்ற, துன்பத்தைத் துடைக்க உலகிலேயே முன்மாதிரியான மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி பெரும் சாதனை புரிந்தார்.


அதனைத் தொடர்ந்து தமது கிராமத்து மக்களுக்காக அடிப்படை வசதிகளையும் அரசிடம் பெற்றுத்தர முயன்றார். ஆனால் ஆரம்பத்தில் அது அவ்வளாவு எளிதாக இருக்கவில்லை. லஞ்சமும், ஊழலும் ஏழை எளியவர்களை துரத்தியது. அரசுக் கொடுக்கும் குறைந்தப் பட்ச உதவிகள் கூட மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது கண்டு வெகுண்டு எழுந்தார் ஹசாரே.


இப்போது தான் முதன் முறையாக லஞ்சத்துக்கு எதிரான போராட்டத்தை ஹசாரே தொடங்கினார். இந்த லஞ்சம் தான் கிராமப்புற இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருந்தது என்பதை உணர்ந்த அவர் ஊழலுக்கு எதிரான மக்கள் போராட்டம் என்ற அமைப்பை நிறுவி போராட ஆரம்பித்தார். காந்திய வழிகளிலான அவரதுப் போராட்டம் உண்ணாவிரதம் இருப்பதும், அரசியல் வாதிகளை குறிவைப்பதுமாகவே இருந்தது.


மகாராஷ்ட்ராவில் அவரது போராட்டத்தைக் கண்டு மிரண்ட அப்போது ஆட்சியில் இருந்த சிவசேனா- பா.ஜனதா கூட்டணி அரசு, அவருக்கு கடும் நெருக்கடிகளை கொடுத்தன.


ஆனாலும் அசாரத அவரது போராட்டத்தின் உக்கிரம் தாங்க முடியாமல், 1995-1996 ஆம் ஆண்டுகளில் ஊழல் செய்த சிவசேனா - பா.ஜனதா அமைச்சர்களை பதவி இறங்க வைத்தார்.


அத்தோடு நிற்காமல் 2003 ஆம் ஆண்டு காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் அரசின் நான்கு அமைச்சர்கள் செய்த ஊழலுக்கு எதிராக மாநில அரசை வைத்தே விசாரணைக் குழு ஒன்றை ஏற்பாடு செய்ய வைத்தார்.


இவரைக் கண்டு சிவசேனா தலைவர் பால்தாக்கரே மற்றும் மகாராஷ்ட்ராவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஷரத் பவார் போன்ற தலைவர்களே மிரண்டுபோனதுண்டு.


அவ்வளவு ஏன் தற்போது லோபால் மசோதா வரைவு குழுவுக்கான மத்திய அமைச்சர்கள் குழுவில், மகாராஷ்ட்ராவில் ஏகப்பட்ட நிலங்களை குவித்து வைத்திருக்கும் ஷரத் பவார் இடம்பெறக் கூடாது என்று ஹசாரே தெரிவித்த எதிர்ப்பு காரணமாக, பவார் அமைச்சர் குழுவிலிருந்தே ஓட்டம்பிடித்துவிட்டார்.


ஊழலால் இந்திய மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹசாரேவுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு கரம் அவசியமான ஒன்று!
எனது கோவை மண்ணை சார்ந்தவர்கள் இன்று உண்ணாவிரதம் இருந்து தமிழகத்தையே திரும்பி பார்க்க வைக்கின்றனர்.


ஆக்கம் & எழுத்துடன் : கோவை ராமநாதன் நன்றி : ஆங்கில நாளிதழ்

4/07/2011

முதலாளிகளின் கேவல விளையாட்டு.....

இந்தியா பத்தாகப் பிரிக்கப் படும்.
தேசத்திற்காக ஆடும் போது இல்லாத ஆர்வம்
முதலாளிகளுக்காக ஆடும் போது வரும்.
ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு முதலாளியின் கையில்
வீரர்கள் அணியும் ஜட்டி முதல்
முதலாளிகளின் விளம்பரங்கள்.
அவன் விளம்பரத்தைக் காண,
அவனுக்கு பணம் கொடுத்து
கைத் தட்டி வரவேற்க ரசிகர்கள்.
நாட்டில் நடக்கும் வேறெந்த பிரச்சினைகளிலும்
கவனம் செலுத்தாமல் தொலைக் காட்சியில்
புகுந்து களிப்புறும் நம் மக்கள்.
அதைப் பயன் படுத்தி மற்றப்
பிரச்சினைகளை மூடி மறைத்து
நீர்த்து போக செய்யும் நம் அரசு
அவன் கோடிக் கணக்கில் ஊழல்
செய்யவும் தனது வருமானத்தைப்
பெருக்கிக் கொள்ளவும்
மக்களை மடையர்களாக்கி செவ்வனே
அரசியல் செய்யும் ஒரு சித்து
விளையாட்டு இந்த ஐ.பி.எல்
சோற்றுக்கு வழியில்லாத தேசத்தில்
எதற்கடா இந்த கொழுத்த
முதலாளிகளின் கேவல விளையாட்டு(!?)

4/05/2011

கனாக்கண்டேன் தோழா

கனவது கண்டேன் நினைவதாக



நினைவது மெய்க்கக் கனாக்கண்டேன்!


நடப்பதெல்லாம் கனவதாக இருக்க


கனவது மெய்க்கக் கனாக்கண்டேன்!


கனவது கனவாய்ப் போவதால்


கனவது மெய்க்கக் கனாக்கண்டேன்!


இருப்பது விட்டு பறப்பதைப் பிடிக்க


இருப்பது மட்டும் மெய்க்கக் கனாக்கண்டேன்!


மக்களெல்லாம் உண்மை மக்களாக


நம்மினம் மனிதரென கனாக்கண்டேன்!


நீரது பிரியாது உறவது நிலையாது


உறவது நிலைக்கக் கனாக்கண்டேன்!


காதலெனக் கூறி காமம் விலக்கி


காதலர் வாழக் கனாக்கண்டேன்!


இல்லையென சொல்லி இருப்பது மறைத்து


மறைக்க ஒன்றுமில்லாதவர் இருக்கக் கனாக்கண்டேன்!


பெற்றோரென்பவர் பெற்றதால் கடைமை


பெறாத பெற்றோருக்கும் கடைமை அமையக் கனாக்கண்டேன்!


உண்மையென்பது பொய்யில் பிறக்க


பொய்யென்பது உண்மையில் மறையக் கனாக்கண்டேன்!


கல்லில் அரிசி கிடக்கக் கண்டு


அரிசியில் கல்லில்லாமல் விற்கக் கனாக்கண்டேன்!


கொழிக்கும் வர்க்கம் செழித்து வளர


உழைக்கும் வர்க்கம் செழிக்கக் கனாக்கண்டேன்!


கல்வியென்பது பணத்தில் விளைய


பணமது கல்விக்கடிமையாகக் கனாக்கண்டேன்!


கலைகள் யாவும் அழிவது கண்டு


வளருதல் வேண்டும் கலைகள் யாவுமெனக் கனாக்கண்டேன்!


மனிதனொருவன் கிழிந்த ஆடைக்குள்ளிருக்க


ஆடைகள் மனிதன்மேலணியக் கனாக்கண்டேன்!


கலங்கும் மனங்கள் பெருகுவது கண்டு


மனங்களெல்லாம் மகிழ வழிகானக் கனாக்கண்டேன்!


மிருகமென மனிதன் மாறாமிலிருக்க


மனிதனெப்படி மனிதனாகக் கனாக்கண்டேன்!


பசியில் வாடும் உள்ளம் கண்டு


உள்ளத்தில் நல்லெண்ணம் பிறக்கக் கனாக்கண்டேன்!


என்கனவது பொய்க்காதுவெனக் கருதி


எல்லோரும் வாழும் நிலையெதுவெனக் கனாக்கண்டேன


4/03/2011

ஒற்றுமைக்கு போராட கட்சிகள் வேண்டாம்,



கொள்கைகள் கொண்ட தலைவன் வேண்டாம்,


சாதி,மத,மொழி பேதமில்லை,


இந்தியன் என்ற உணர்வு


ஊற்றெடுக்கிறது.


வேற்றுமையில் ஒற்றுமை,


ஒற்றுமையில் வேற்றுமை இல்லை


வெற்றியில் சந்தோஷ்ப்படுவதில் ஆச்சர்யமில்லை


தோல்வியென்றாலும் சிறியவர் முதல்


பெரியவர் வரை ஒரே கண்ணீர் அல்லது ஆனந்த கண்ணீர்


அது தான் கிரிக்கெட்


கிரிக்கெட் நடைபெறும் மைதானத்திற்கு சென்று பார்க்கனும்னு அவசியமில்லை,நாம் விளையாட கூட வேண்டாம்,க்ரிக்கெட் விளையாட்டு முறைகளை தெரிந்து கொண்டு தொலைக்காட்சியில் பார்த்தாலே போதும்.மைதானத்தில் பார்ப்பதைவிட அருகேவும்,துல்லியமாகவும் பார்க்கலாம்.( யாருக்குமே தெரியாத ரொம்ப புது விசயம்னு சொல்ல வந்துட்டியானு கேட்கப்பிடாது).


தொலைக்காட்சியில் பார்த்துதான் நிறைய பேர் கத்துக்கிட்டாங்க.


சரி இதெல்லாம் தெரிந்த விசியம்தான்.


சிலவற்றை கேளுங்க:


எனக்குத் தெரிந்த ஒருவர் தான் டீ.வியில் மேச் பார்த்தால் இந்தியா தோற்றுப் போய்டும்னு. வெற்றியோ தோல்வியோ மேச் முடிந்த பிறகு ரிசல்ட் தெரிந்து கொள்கிறேன் என்பார்.


சிலருக்கு சிலருடன் அமர்ந்து மேச் பார்த்தால் இந்தியா தோற்று போய்டும்னு பயம்,சந்தேகம்.


பலருக்கு இந்தியா ஜெயித்து விட்டால் இமாலய சந்தோஷம்,தோல்வியடைந்தால் அதேயளவு துக்கம்.


சிறு வயதில் என் நண்பரின் மாமா ஒருத்தர் இந்தியா விளையாடும்போது வீட்டில் டீ,வீ யில் கிரிக்கெட் மேச் பார்ப்பார்.அவர் பார்த்தால் ஒன்னும் பிரச்சனை இல்லைங்க,என் நண்பன் கிட்ட காசு கொடுத்து பக்கத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று இந்தியா ஜெயிக்கனும்னு சாமி பேருக்கு அர்ச்சனை செய்திட்டு வர சொல்லுவார்.பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்கு போய் விளக்கு போடச் சொல்வார்.இந்தியா தோல்வியடைந்தால்  திட்டு வேற விழும்.கோவிலுக்கு போகும்போது அசகுணமா யாராவது தென்பட்டாங்களானும் கேப்பார். சில வருடங்களுக்குப் பின் அவனுக்கு  பதில் கோவிலுக்கு போக வேற ஆள நியமிச்சிட்டாரு.(ராசி சரியில்லைனுதான்)


பார்த்த/பாக்கத மேச்சுகளை டிவிடி/சிடி யில் போட்டு பார்ப்பது சிலருக்கு பழக்கமாம், கேள்விப்பட்டேன்.


இந்தியாவின் வெற்றி / தோல்விக்கு நாட்டுப்பற்றுக் கொண்டு பெட்டுக் கட்டுவது, அதாவது பந்தையம் அதாவது வெற்றி என்றால் நான் அத செய்வேன்,தோல்வி என்றால் நீ இத செய்.


இதெல்லாம் ஒரு பக்கமிருக்கட்டும்,நேற்று நடந்த மேச்சில் இந்தியா ஜெயிச்சாதான் வாங்கி வச்சிருக்க பால் குடிப்பேன் இல்லைனா நண்பர்கள் குடிக்கட்டும் என நான் இருந்தேன் ,
அது எப்படியோ என் ஆசை நிறைவேறிட்டுங்க.