கற்க கசடற கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக.'- குறள் எண்: 391.
நல்ல புத்தகத்தை வாசிப்பதும் , நல்ல படங்களை நேசிப்பதும் கவுரவமான விடயமாக மாற வேண்டும் – வெ . இறையன்பு
இன்று உலக புத்தக தினம். உலகப் புத்தக நாள் என்பது யுனெஸ்கோ நிறுவனத்தின் தீர்மானத்தின்படி ஆண்டுதோறும் ஏப்ரல் 23 அன்று புத்தகம் தொடர்பான விழிப்புணர்வுகளுக்காகக் கடைப்பிடிக்கப்படும் சிறப்பு நாளாகும்.
பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது. அத்தீர்மானம் வருமாறு,
"அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்"
ஷேக்ஸ்பியரின் பிறந்ததினமான ஏப்ரல் 23 அன்று உலகப்புத்தக தினம் கடைப்பிடிக்கப்படுவதை பொருத்தமானதாகக் யுனெஸ்கோ மாநாடு கருதியது. ஷேக்ஸ்பியர் மறைந்த தினமும், செர்வான்டிஸ், இன்கா போன்ற இலக்கியவாதிகள் மறைந்த தினமும் இதுதான்.
உலகப் புத்தக தினம் என்று ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து சர்வதேச பதிப்பாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டு ஸ்பெயின் நாட்டு அரசால் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. ரஷ்யப் படைப்பாளிகள் புத்தக உரிமைக்கும் (காப்புரிமை) முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கருதியதால் ஏப்ரல் 23 உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
புத்தகம்தான் என் முதல் நண்பன். எனக்கு நூல்கள் தந்தவர்களுக்கு தான் நன்றி சொல்லவேண்டும் . மனமுடைந்த நேரங்களுக்களிலும் , அறியாததை அறிய , தெரியாத என் மொழியில் தெரிந்து கொள்ளவும் , எனக்கு ஆறுதல் தந்ததும் புத்தகங்கள் தான்
“மனித மனம் ஒரு நாய் போல , அதற்க்கு சரியான உணவை நாம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் இல்லையென்றால் அந்த நாய் மலம் திண்ண சென்றுவிடும்” – புத்தகங்கள்தான் சரியான உணவு
இன்று புத்தக தினம் ,முடிந்தவரை நல்லதொரு புத்தகம் வாங்கி இன்றைய தினத்தை பொற்றுங்கள்……
கோவை ராமநாதன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக