"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! கோவை அ.ராமநாதன்
12/03/2010
அனுபவம் தானே வாழ்க்கை........... (சட்டம் ஒரு இருட்டறை )
"சட்டம் ஒரு இருட்டறை"..அதில் வக்கீல்களின் வாதம் விளக்கு ..
என்றார் அண்ணா..
உண்மையில்..இந்த சட்டங்களை நினைத்தால் சில சமயம் எரிச்சலும் ,
சிரிப்பும் வருகிறது.
உதாரணமாக..ஒருவர் பணத்தால் ஏமாற்றம் நடக்கிறது..ஏமாற்றியவர் என காவல்துறை ஒருவரை கைதி செய்கிறது.அவர்மேல் வழக்குப் பதிவு செய்து..நீதிமன்றத்தில் வழக்கு போடப் படுகிறது.குற்றவாளி ஜாமீனில் வெளிவருகிறார்..வழக்கு..குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் வாய்தா..வாய்தா..என வருடக்கணக்கில் நடக்கிறது.இதற்கிடையே..குற்றம் சாட்டப்பட்டவர்..தன் மீதுள்ள குற்றப் பத்திரிகையின் நகல் ஆங்கிலத்தில் உள்ளது..அதை தனக்குத் தெரிந்த தமிழில் தர வேண்டும் என்கிறார்.
நீதிமன்றமும் அதற்கான உத்தரவை பிறப்பிக்கிறது. ஆயிரக்கணக்கான பக்கங்களை மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப் படுகின்றனர்.(இவர்களது வக்கீல்களுக்கும் ஆங்கிலம் தெரியாதா? இது நாம்) அதற்கு ஆறுமாதங்கள் குறைந்தது ஆகிறது.
இதற்கிடையே..இந்த மாநிலத்தில் வழக்கு நடந்தால்..எனக்கு நேர்மையான தீர்ப்பு கிடைக்காது..ஆகவே..வேறு மாநிலத்திற்கு என் வழக்கை மாற்ற வேண்டும் என மனு கொடுக்கப் படுகிறது.(இங்கு எனக்குப் புரியாதது..வேறு மாநிலத்திற்கு மாற்றினாலும்..வாதியின் வக்கீல் வாதிக்காகவும்..பிரதிவாதியின் வக்கீல் பிரதிவாதிக்காகவும் தானே பேசப் போகிறார்கள்.)பின் நியாயம் கிடைக்காது என ஏன் சொல்லப் படுகிறது? இவர்களுக்கு அப்போது சம்பந்தப்பட்ட மாநில நீதிபதியின் மீது நம்பிக்கையில்லையா? அப்படியானால் அது condemn of court இல்லையா?
அதற்கேற்றாற் போல மாற்றப்பட்ட வழக்கு..அந்த மாநில மொழியில் மீண்டும் மொழி பெயர்க்கப் படுகிறது..ஆரம்பித்த இடத்திலேயே மீண்டும்..
இதுதான் இப்படி என்றால்..ஒரு வழக்கு மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப் பட்டதும்..உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு..பின் உயர் நீதி மன்ற பென்ச், பின் உச்ச நீதி மன்றம், பின் உச்ச நீதி மன்ற பென்ச்....தவறு செய்பவரை இதற்குள் இயற்கை அழைத்துக் கொள்கிறது.
மேல்..மேல் நீதிமன்றம் என்றால்..நீதிபதிகள் தீர்ப்புகள் ஒரே மாதிரி இருப்பதில்லையா?
கொலை வழக்குதான் என்றில்லை..அரசியல்வாதிகள் மீது போடப்படும்..சொத்துக் குவிப்பு வழக்குகளும் இப்படியே..
இதையெல்லாம் பார்த்தால்..பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை..அப்படியே கிடைத்தாலும் அது காலம் கடந்த தீர்ப்பாய் தான் இருக்கும்..
ஏன் இப்படி..தவறு எங்கே..
சட்டம் கூட வளையும் தன்மை போலும்..படை பலமும்..பண பலமும் இருந்தால்..என்ன விலை..என்று கூட கேட்கலாம் போல ..
குறிப்பு :
என் அனுபவம் தான் இது, அதை மாற்றியவை தான் ஆனால் உண்மை அந்த கடவுளுக்கும் ,என்னை ஏமாற்றியவருக்கும் தான் வெளிச்சம் ..............
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக