லண்டனில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இலங்கையின் எதிர்காலம் குறித்து ராஜபக்சே சிறப்புரை ஆற்ற இருந்தார்.
அதற்காக லண்டன் சென்றவரை எதிர்த்து லண்டன் விமான நிலையத்திலேயே லண்டன் வாழ் தமிழர்கள் ஆயிரக் கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர் இருந்த ஓட்டலைச் சுற்றி தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள். மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகம் முன்னும் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு..
ராஜபக்சேயின் நிகழ்ச்சியை பல்கலைக் கழகம் ரத்து செய்தது.தவிர்த்து அவர் கைது செய்யப்பட வேண்டும் என இங்கிலாந்து பிரதமரிடம் அந்நாட்டு எம்.பி., க்கள் வலியுறுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் போர் நடந்த போது அந் நாட்டு ராணுவத்தினர் தமிழ் பெண்கள் மீது நடத்திய பாலியல் கொடுமையை..அதன் வீடியோ காட்சிகளை அந்நாட்டு சேனல்4 என்ற தொலைக்காட்சி ஒளிபரப்பியது.அவை முழுமையான அளவு ஒளிபரப்பமுடியா அளவு கொடூரமாய் உள்ளது எனவும் தனியார் சேனல் தெரிவித்துள்ளது.
அந்த வீடியோவில் காணப்பட்ட பெண்கள் உடல்களில் ஒன்று விடுதலைப்புலிகளுக்காகப் பணியாற்றிய இசைப்பிரியா என்னும் பத்திரிகையாளப் பெண் என கண்டுபிடித்ததாகத் தெரிகிறது.
லண்டன் தமிழர்களே..உங்களது தாயகமான இந்தியத் தமிழர்களிடையே காணமுடியாத ஒற்றுமையை உங்களிடம் கண்டு மனம் பூரிப்படைகிறது.
எங்களை எல்லாம் வெட்கபட்டு தலைக்குனிய வைத்து விட்டீர்கள்.
உங்களது செயலுக்கு நான் எனது தமிழர்களின் சார்பில் வாழ்த்து சொல்ல கடமைபட்டுள்ளேன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக