"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! கோவை அ.ராமநாதன்
12/17/2010
காதல் சுகமானது .....
வாழ்க்கையில் காதலை சந்திக்காதவர்கள், அறியாதவர்கள் என்று யாரும் இல்லை. 'என் பார்வையில் காதல்' என்பதை பற்றி எழுத வேண்டும் என்று நீண்டநாளாய் ஒரு எண்ணம். அதற்கு நேரம் சரியாக அமையாததால் தான் கவிதையாக காதலை எழுதிக் கொண்டிருந்தேன்.....!!?
மனதிற்கு சுகமான, அதே நேரம் நினைக்கும் போதெல்லாம் மனதில் உற்சாகம் கொப்பளிக்கும் அற்புத உணர்வை வார்த்தைகளில் கொண்டு வர இயலுமா என்ற ஒரு தயக்கம் இருந்ததால் தான் இதுவரை எழுதவில்லை. இனியும் தாமதித்தால் என் மனதில் இருக்கும் காதல் 'கசங்கிவிடுமோ'
என்று தான் எழுத தொடங்கிவிட்டேன். காதல் என்றாலே அபத்தமும் அவஸ்தையும் நிறைந்ததுதான் என்று சொல்வாங்க...அது மாதிரி இந்த தொடரிலும் ஏதும் அபத்தம் இருந்தால் அழகாய் சுட்டிகாட்டுங்கள்....!
" என் கை விரல்களுக்கு இடையே இருக்கும் இடைவெளி, உன் கை விரல்கள் கொண்டு கோர்க்க வேண்டும் என்பதுதான் " 'காதல்'
இந்த ஒரு வார்த்தையில் தான் இந்த உலகம் இன்னும் அழகாய், இளமையாய் உயிர்ப்புடன் இருக்கிறது. இன்னொரு நிலவாய் காதலியை வருணிக்க முடிகிறது........!வானமாய் மாறி அந்த நிலவை கையில் ஏந்திக்கொள்ள செய்கிறது......! காதல் வந்த பின் தான் நிலா என்ற ஒன்று வானில் இருப்பதே தெரிகிறது.....! பார்க்கும் எல்லாம் புதிதாய் , அழகாய் மாறிவிடுகிறது......
பரீட்சையில் தமிழை சொதப்பியவர்கள் கூட காதல் வந்த பின் இலக்கிய நயத்துடன் கவிதை எழுதுகிறார்கள்....பார்க்கும் அத்தனையிலும் தன் காதலி/காதலன் முகம் தேடுகிறார்கள்......!!
உடல் ரீதியாக பார்த்தால், காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற இயல்பான ஒரு உணர்வு. அறிவியல் ரீதியாக பார்த்தால் காதல் என்பது சுரப்பிகளின் விளையாட்டு. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் அட்ரினலின் போன்ற சுரப்பிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள். பருவம் வந்த அனைவருமே காதல் வயபடுவார்கள் என்றாலும் சிலர் ரொம்ப பிடிவாதமாக விலகி இருப்பார்கள்....
சிலர் நினைக்கலாம் புத்திசாலி ஆண்கள் / பெண்கள் காதலில் ஈடுபட மாட்டார்கள் என்று...!? ஆனால் காதல் உணர்வு சம்பந்த பட்டது. பகுத்தறிவு இங்கே வேலை செய்வது இல்லை.
அதாவது நடப்பதை Cerebral cortex (பகுத்தறிவு மூளை ) வேடிக்கை தான் பார்க்கும். காதல் வயப்படும் ஆணும், பெண்ணும் ஒரு வேதிப்பொருள்களே .
அவை ஈர்க்கப்படும் போது நிகழும் மாற்றங்களை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அப்போது உருவாகும் PEA (பெனைலிதிலேமைன்) என்கிற மாலிக்யூல்கள் மூளைக்குள் ஏற்படுத்துகிற சிலிர்ப்பையும் , பரவசத்தையும் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது.......இந்த நிலை ஏற்பட்டு விட்டால் புத்திசாலித்தனம் எல்லாம் காற்றில் பறந்து விடும்.
காதல் என்பது அப்பட்டமான 'சுயநலத்தின் வெளிபாடு' என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். இது உண்மையும் கூட இந்த சுய நலம் தனக்குரியவன் தன்னிடம் மட்டும் தான் பேச வேண்டும் தன்னை முக்கியமானவராக
கருத வேண்டும் என்பதை போன்றது தான். தன் காதலனை தனக்குள் முழுதும் இழுத்து வைத்து கொள்வதை போன்ற அழகான சுயநலம்.....!!
இந்த காதலில் மூழ்கியவர்களுக்கு வெளி உலகத்தில் நடப்பதே தெரியாது. அடிக்கடி சின்ன சின்ன சண்டைகள், கோபங்கள் எல்லாமே இனிமைதான். ஊடல் மெதுவாய் விலகும் அந்த அற்புத தருணம்.... வார்த்தையில் வடிக்க இயலாது..அனுபவித்து பார்க்கவேண்டும்.....அந்த இனிமையை அனுபவிக்காதவர்கள் பாவம், கொடுத்து வைக்காதவர்கள்.....!?
காதல் இருந்தால் கண்ணுக்கும் இமைக்கும் நடுவில் கூட வசிக்க முடியும் என்பார்கள் காதலர்கள்.....!!
உணர்வுகள் தொடரும்.....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
eppudinga ippadi ellam
கருத்துரையிடுக