ஊழலை பற்றி எல்லாரும் அவர்கள் பங்குக்கு பேசி விட்டனர் ,ஏதோ என்னால் "இந்தியன்" பட பாடல் ரீமிக்ஸ் கவிதை .....
டெலிகாம் துறையில் "மணி" யை அடித்தவன் இவனா
முதல்வரின் மருமகனும் இவன் தானா
ராடியாவிடம் சிக்கியது இவன் குரலா
கனிமொழியின் கணவனும் இவன் தானா
ராஜா ராஜா இவன் ஊழல் மந்திரி தானா
ராஜா ராஜா இவனிடம் BSNl துறை தானா
ஸ்பெக்ராம் கொண்டு வர இவன் பணம் அடித்தானா
நீயில்லை என்றால் ஊழல் தெரியாது,எடுத்த பணமும் தெரியாது
நீயில்லை என்றால் கவிதை எனக்கேது ,இந்த எழுத்தும் இருக்காது
உன் பேரைச் சொன்னால் உலகம் முழுவதும் தெரியுது இப்போ
உன்னை போல ஊழல் செய்ய இனி யாருமேன தெரியாது இனி
யாரையும் இந்த தவறை செய்யவும் விட மாட்டோம் ,எடுத்த
பணத்தை திருப்பி தரமால் விடவும் மாட்டோம்......
ராஜா ராஜா இவன் ஊழல் மந்திரி தானா
ராஜா ராஜா இவனிடம் BSNl துறை தானா
குறிப்பு :1 ,60,000 கோடி ரூபாயைக் கமுக்கமாக அடித்துவிட்டு இந்த ஊழல் பெருச்சாளிகள் கவுரவமாக உலா வருகின்றன என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மக்கள் ஒரு ரூபாய்க்கு பேசும் ஒரு உள்ளூர் அழைப்புக்குப் பயன்படும் செல்பேசி சேவையில் இத்தகைய ஊழலும் கொள்ளையும் கலந்திருக்கிறது என்பதை அறிய வேண்டும். செல்பேசி சேவை மலிவாகக் கிடைக்கிறது என்று மூடநம்பிக்கை நிறைந்திருக்கும் நாட்டில்தான், இந்த மலைமுழுங்கி மகாதேவன்களது சாம்ராஜ்ஜியம் நடந்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக