நாம குழந்தையாக இருக்கும்போது நாம் பெரியவானாக வளர்ந்துவிட்டால் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். பெரியவனாகிவிட்டால், வேலைக்கிடைத்துவிட்டால் நம் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். வேலைக்கிடைத்துவிட்ட பிறகு நல்ல மனைவிகிடைத்தால் நம் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். நல்லமனைவி கிடைத்த பிறகு குழந்தையிருந்தால் நம் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். குழந்தை பிறந்த சிறிதுகாலத்திற்கு பிறகு அந்த குழந்தை வளர்ந்துவிட்ட பிறகு வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். அதன் பிறகு அந்த குழந்தை டீன் ஏஜ் பருவத்தை தாண்டிவிட்டால் கவலையில்லாமல் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். அந்த குழந்தைக்கும் கல்யாணமாகி நாமும் ரிட்டையர்டுயாகி நாம் பேரக்குழந்தைகளுடன் விளையாடும் போது வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம்.
ஆனால் வாழ்வின் உண்மையென்னவென்றால் இந்த நிமிஷத்தைவிட வாழ்வில் வரப்போகும் நிமிஷம் சந்தோஷமாக இருக்கும் என்று சொல்லமுடியாது. இப்போதுயில்லையென்றால் பின் எப்போது?
நம் வாழ்வில் எப்போழுதும் சாவால்கள் நிறைந்துள்ளன. நாம் அதைப் புரிந்து ஒத்துக்கொண்டு சந்தோஷமாக வாழக் கற்றுகொள்ள வேண்டும்.வாழ்க்கை இப்போதுதான் சந்தோசஷமாக ஆரம்பிக்கிறது என்று நாம் நினைக்கும் போது உடனே தடைக்கல் எதிர்படும். அந்த தடைக்கல்லையும் ஒரு படிக்கல்லாகமாற்றி வெல்ல வேண்டும். நிமிஷங்கள் தங்கப்புதையல் மாதிரி . அதன் முக்கியத்துவதை உணர்ந்து அதை நம் வாழ்வில் யாரை முக்கியமாக கருதுகின்றோமோ அவர்களுடன் பகிர்ந்து சந்தோஷமாக இருக்க வேண்டும். நிமிடம் யாருக்காகவும் காத்திருக்காது அதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
படித்து முடிக்கும்வரை , உடல் எடையை குறைக்கும்வரை, அல்லது கூட்டும் வரை, வேலைக் கிடைக்கும்வரை, இல்லை இந்த நிமிஷத்தைவிட வேற எந்த நிமிஷமும் நாம் சந்தோஷமாக இருக்க முடியாது என்று நினைத்து வாழுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக