தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

9/30/2011

‘ஒரு தோசை இரண்டானது ’
மூட நம்பிக்கைகள் நமக்கு ஒன்றும் புதியவை அல்ல. சமூகத்தில் பரவியிருக்கும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட மூடநம்பிக்கைகள் பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம். இதன் ஒருவகை வெளிப்பாடு தான் ‘ஒரு தோசை இரண்டானது ’ ஊர்மக்கள் நம்பிய நிகழ்வுமாகும்.
கடந்த இருவாரங்களாக எங்கள் ஊரில் உள்ள பொது மக்களிடம் ஒரு செய்தி அவர்கள் இல்லத்திற்கு இனிப்பாக மாறி இன்றுவரை பரபரப்பு கிளம்பி வேகமாக பக்கத்து ஊர்கள் வரை ஏன், சில மாநிலங்களில் இப்போது இந்த பரபரப்பு கிளம்பி இருக்கிறது.

இந்த செய்தி பரவியபோது ஒவ்வொரு வீடாக சென்று விடாமல் துரத்தி அவர்களிடம் இந்த விஷய்த்தை கேட்டு வருகிறேன்.ஒரு பதிவாளன் என்ற முறையில் தான். நான்கூட ஒரு ஆன்மீகவாதியாக இருக்கலாம் என நீங்கள் எண்ணினால் இன்றுவரை, நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது, அதன் பெயர் இறைவன் என்று நினைப்பவன். இஸ்லாமியர்களுக்கு அவன் பெயர் அல்லா, கிறிஸ்துவர்களுக்கு அவன் ஏசு, இந்துவுக்கோ பல பெயர்கள் என்று நினைப்பவன். அவ்வளவுதான் எனது ஆன்மீக அறிவு. அலகு குத்துதல், மொட்டையடித்தல், காவடி எடுத்தல், நான் இதைத் தருகிறேன்.. நீ அதைத்தருகிறாயா என்று கடவுளிடம் பேரம் பேசுவது எனக்குப் பிடிக்காத விஷயங்கள். சாமியின் பெயரைச் சொல்லி இந்த மனிதர்கள் தமக்குள் கத்தியை எடுத்து வெட்டிக் கொல்வதும்... பாபர் செத்த இடமா.. இல்லை ராமர் பிறந்த இடமா என்று அடித்துக் கொள்வதும் எனக்கு சுத்தமாகப் பிடிக்காத விஷயங்கள்.

பார்ப்பனர்களின் சூழ்ச்சியாலும், அறியாமையாலும், பத்(க்)தி முத்திப்போய் மூட நம்பிக்கையை நம்பியிருக்கும் மக்களிடம் போய் நமக்குத் தெரிந்த கொஞ்ச நஞ்ச அறிவியல் விஷயங்களைச் சொன்னால் அவர்கள் ஏற்று கொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லை !
ஆனால் என்னால் நான் கண்ட செயலை சொல்லாமலும் இருக்க முடியவில்லை!
இதைப்போன்று கீழே உள்ள எளிமையான (அவர்கள்) செய்(த) முறைகளைச் செய்து பார்த்து கொள்ளுங்கள்....
1. ஒரு HOT BOX (ஆறாமல் வைத்திருக்கும் பாத்திரம்) -ல் சிறுதளவு சர்க்கரை தண்ணீரில் ஒரு தோசையை மிதக்க வைத்திருக்கிறார்கள்.
2. தொடர்ந்து எட்டு நாட்கள் மிதக்க விடவேண்டும், (மூடியபடி)
3. காலை, மாலை இரு வேளைகளிலும் இறைவனுக்கு தீபமேற்றி சாமி கும்பிட வேண்டும்.
4. இதைப் பற்றி யாரிடமும் எக்காரணம் கொண்டு சொல்லாமல் இருக்க வேண்டுமாம்
5. இடையில் திறந்து பார்க்கவே கூடாதாம்.
6. நமது இல்லத்திற்கு நல்ல விஷயம் ஒன்று நடக்க போகிற்து என்ற நம்பிக்கையுடன் வழிபாட வேண்டுமாம்
7. எட்டு நாட்கள் கழித்து அந்த் ஒரு தோசை இரண்டாக தனிதனியாக மாறியுள்ளது. (அவர்கள் கண்ட உண்மை)
8. அந்த இரண்டு தோசைகளை ஒவ்வொன்றாக இரண்டு வீட்டிற்கு பிரித்து கொடுத்தால் நம்க்கு நல்ல செய்தி ஒன்று வீடு தேடி வருகிறதாம்.


இதை அவர்கள் செய்து நல்ல செய்தி வரவிருக்கிறதாம், என காத்து கொண்டிருக்கிறார்கள் .
இது மூடநம்பிக்கையில்லை என எண்ணி அவர்கள் நம்பி செய்து வருகின்றனர். எது எப்படியோ நாமும் முயற்சிசெய்து பார்ப்போம்..

புராணக்கதையில் படித்ததைப்போல பாம்பு வில்வதலைக் கொண்டு சிவனுக்கு அர்ச்சனை செய்ததையும்,கோமாதா சிவனுக்கு பாலபிஷேகம் செய்தததையும் ந்ம்பிய நாம் இவற்றையும் நம்பி முயற்சிப்போம்.

இறைவனால் நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் நல்லது நடக்குமானால் ,நம் சமுதாய்ம் நல்ல இருக்குமானால் கண்டிப்பாக இதை செய்து பார்ப்போம் என்பதே எனது பதிவின் நோக்கம்...
இறைவனுக்கு நன்றி, நன்றி,

எண்ணங்களுடன் : கோவை அ. ராமநாதன்

9/24/2011

இன்றைய ஆங்கிலம்

நாமெல்லாம் ஆங்கிலம் கற்க ஆரம்பிக்கும்போது A for  APPLE, B for BALL, என்றுதான் சொல்லித் தந்தார்கள். ஆனால் இப்போது இளைஞர்களிடம்  இணையதளங்களின் மோகம் பெருகி விட்டதினால் இனி ஆங்கிலம் இப்படித்தான் சொல்லித் தருவார்களோ?

A: ANTI VIRUS
B: BLOG
C: CHAT
D: DOWNLOAD
E: EMAIL
F: FACEBOOK
G: GOOGLE
H: HEWLETT PACKARD(HP)
I: I PHONE
J: JAVA
K: KINGSTON
L: LAPTOP
M: MESSAGE
N: NERO
O: ORKUT
P: PICASSA
Q: QUICK HEAL
R: REAL PLAYER
S: SERVER
T: TWITTER
U: USB
V: VISTA
W: WINDOWS
X: XP
Y: YOU TUBE
Z: ZORPIA

9/22/2011

தமிழ் அளவைகள்

 
ஏறுமுக இலக்கங்கள்
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thousand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -????????????????

இறங்குமுக இலக்கங்கள்
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

அளவைகள்

நீட்டலளவு

10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை

பொன்நிறுத்தல்

4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்

32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

முகத்தல் அளவு

5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

பெய்தல் அளவு

300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி

9/20/2011

உண்மையும் பொய்யாகும்

வாழ்கையின் நெளிவு சுளிவுகளுக்கு ஏற்றவாறு முடிந்தவரை நாமும் வளைந்து செல்லவேண்டி இருக்கிறது.......அதுவும் உண்மை மட்டுமே பேசவேண்டும் என்று சொல்லிக்கொடுத்த முன்னோர்கள்...........காலம் மாறும், காட்சி மாறும்........உலக நடைமுறைகளுக்கு ஏற்றவாறு எவ்வாறு உண்மை  பொய்யாகும் என்பதை சொல்லவில்லையோ என்று ஒரு சிந்தனை அதுதான் இந்த பதிவுக்கு காரணம்.......

நம்மில் பலர் இந்த விஷயத்தினால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்.......
.உதாரணமாக.......உண்மை பேசுபவனிடம் "தான்" என்ற சிறு அகந்தை இருக்கும்.......அவனுக்கு நடிக்க தெரியாது..........அதனால் பார்ப்பவர்கள் இவனுக்கு என்ன ஒரு திமிர் என்று கூற வாய்ப்பு அதிகம்.......ஏனெனில், உண்மைக்கு ஒரு பழக்கமுண்டு அது வீரம்............

அதாவது யாருக்கும் பயப்படாமலும் தன் மனசாட்சிக்கு மட்டும் நேர்மையாக வாழ்பவரில் நிறய பேர் அவப்பெயர் மட்டுமே கிடைக்கபெறுகிறார்கள்..........

உதாரணமாக...........

ஒரு நிறுவனத்தில்  வேலை செய்யாரவா ங்கல்ல யாரு உண்மை பேசுவாங்கன்னு மேலதிகாரிக்கு தெரியும். அந்த நல்லவன மட்டுமே பல  சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு கூடவே வச்சி இருப்பாங்க.......அதே நேரம் வியாபார விஷயம் பேசும் போது கிட்ட சேக்கறது அதிகமா இருக்காது.....அப்படியே சேத்தாலும்.....அவர்கிட்ட சொல்லி இருப்பாங்க........ஏதும் பேசக்கூடாதுன்னு..........

என் நண்பர் ஒருவர் உண்மை மட்டுமே பேசுவேன்னு தீர்க்கமா இருந்து வர்றார்......இது வரை 20 வேலை மாத்தி உள்ளார்.......என்னிடம் கடந்த வாரம் வேலை நிமித்தமாக உதவி கேட்டார்..........

மாப்ள.......உனக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு நான் பெரிய ஆளு கிடையாது.......

இல்ல சொல்லுடா கேட்டுக்கறேன்.......

இப்போ உன்ன நம்பி ஒரு குடும்பம் இருக்கு...........

அதனால............

மனசாட்சிக்கு பயந்து வேலை  செய்.........ஆனா உண்மைய சொல்றேன்னு உன் வாழ்கைய நீயே கெடுத்துக்காத...........

அப்போ என்னை விளங்காதவன்னு சொல்ற.....இத நீ சொல்றது தான்டா கஷ்டமா இருக்கு............

இல்லடா.......என்ன பண்றது சில நேரத்துல........எனக்கும் இந்த மாதிரி பிரச்சனைகள் வரும்......பல மொள்ளமாரிகள் கூட வேல செய்ய வேண்டிய நிர்பந்தம் வரும்..........அப்போ நான் அமைதியா இருந்திடுவேன்.....நீ என்னை சந்தர்ப்பவாதின்னு கூட நெனச்சிக்க..........

நான் பொய் சொல்ல மாட்டேன்......எந்த நிலைமையிலும்.......!..எனக்கு உன்னால வேலை வங்கி தர முடியுமா முடியாதா................

என்னால முடியும்..........ஆனா..அது வியாபாரம்........அதுவும் பெரிய அளவுல நடக்குற தொழிலுக்கு ஆள் தேவை..........நீ அங்க சில நேரம் வளைந்து கொடுத்து ஆகணும்.......

அது முடியாது.............

டேய்..........உன் பொண்டாட்டி ரொம்ப கஷ்டப்படுராடா...........பாவம்டா உன்ன நம்பி வந்ததுக்கு அவ வேலைக்கு போயி உனக்கு சாப்பாடு போட்டுட்டு இருக்கா.....ஏன்டா இப்படி இருக்க.......கொஞ்சம் வளைஞ்சி கொடுத்து போ......அதுதான் வாழ்க்கை ..........

நான் படிச்ச படிப்புக்கு........என் உண்மைக்கு கிடைக்காத வேலை.......வளைஞ்சி கொடுத்தாத்தான் கிடைக்கும்னு இருந்தா அது வேணாம்..........

நண்பா ...இதெல்லாம் நீ தனியா இருந்தா ஓகே..........இப்போ உன்ன நம்பி ஒரு பொண்ணு இருக்கு........ஒரு குழந்த இருக்கு..........மவனே இப்படி பேசிட்டு இருந்தா......இதுக்கு பேரு விதண்டா வாதம்...........

என் நல்ல குணங்களை பார்த்து தான் என் பொண்டாட்டி என்னை கல்யாணம் பண்ணிகிட்டா.......இன்னிக்கி வரைக்கும் அவள் எதுவும் சொல்லல.......

.அதான்டா நீ இப்படி இருக்க.....காதலிக்கும்போது நீ நல்ல ஆண்மகனா இருந்தா போதும்.......ஆனா திருமணம் ஆனா நல்ல குடும்பஸ்தனா இருக்கணும்.......
உன்கிட்ட எந்த கெட்ட பழக்கமும் கிடையாது..........அதான் உன் பொண்டாட்டி அமைதியா இருக்கா.........அவ சம்பாதிக்கற துட்டுல எத்தன நாளு இப்படியே ஓட்டுவ வாழ்கைய......நமக்காக இல்லாட்டியும் குடும்பத்துக்காக சில நேரங்களில் வளைஞ்சி போகுறது தப்பு இல்லடா மாப்ள..........

சரி முடிவா என்னை என்ன செய்ய சொல்ற..........

குறிப்பு : நான் என்ன சொல்லி இருப்பேன்...........ஒரு நேர்மையான, உண்மை மட்டுமே பேசும் ஒரு குடும்பஸ்தனை........வாழ்கையின் கொடிய பயணத்தை காட்டி.........நான் பாதை மாற்ற நினைத்தது..........சரியா தவறா..............!

9/15/2011

மறைமலை அடிகள்


   
                    மறைமலை அடிகள் (ஜூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள். சாதிசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுட்பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்து தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர்.

மறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம். இவர் 1876 சூலை 15 ஆம் நாள் மாலை 6.35க்குப் திருக்கழுக்குன்றத்திலே பிறந்தார். இவர் தந்தையார் சொக்கநாதர், தாயார் சின்னம்மையார். தந்தையார் நாகப்பட்டினத்தில் அறுவை மருத்துவராய் பணியாற்றி வந்தார். பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்து திருக்கழுக்குன்றம் சிவன் வேதாசலரையும் , அம்மை சொக்கம்மையையும் வேண்டி நோன்பிருந்து பிள்ளைப்பேறு பெற்றதால், தம் பிள்ளைக்கு வேதாசலம் என்று பெயரிட்டார். பின்னர்த் தனித்தமிழ்ப்பற்று காரணமாக 1916-ல் தம் பெயரை மறைமலை (வேதம் = மறை, அசலம் = மலை) என்று மாற்றிக்கொண்டார். அவருக்குப் பின் 4 தம்பிமாரும் (திருஞான சம்பந்தம், மாணிக்க வாசகம், திருநாவுக்கரசு, சுந்தரமூர்த்தி ஆகியோர்) 2 தங்கைமாரும் (நீலாம்பிகை, திரிபுரசுந்தரி ஆகியோர்) பிறந்தனர்.

மறைமலைஅடிகள், நாகையில் வெஸ்லியன் மிஷன் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளியில் நான்காம் படிவம் வரை படித்தார். அவருடைய தந்தையாரின் மறைவு காரணமாக அவரால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியவில்லை. ஆனால், தமிழ்ப்புலமை மிகுந்த நாராயணசாமி பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். 'சைவ சித்தாந்த சண்டமாருதம்' என்று புகழ் பெற்றிருந்த சோமசுந்தர நாயக்கரிடம் சைவ சித்தாந்தம் கற்றார்.

சென்னைக்கு வந்த பின்னர்க் கிறித்தவக் கல்லூரியில் வீ.கோ.சூரியநாராயண சாத்திரியாருடன் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பல ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியபின், பல்லாவரத்தில் இராமலிங்கரின் கொள்கைப்படி 1905 இல் சைவ சித்தாந்த மகா சமாஜம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் மாநாட்டுத் தலைமையையும் ஏற்றார். திருமுருகன் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திப் பல நூல்களை வெளியிட்டார். மணிமொழி நூல்நிலையம் என்னும் நூல்நிலையத்தை உருவாக்கினார்.

இவர் காலத்தில் பல புகழ் பெற்ற தமிழறிஞர்கள் வாழ்ந்தனர். மனோன்மணீயம் இயற்றிய சுந்தரனார், பெரும்புலவர் கதிரைவேலர், திரு. வி. கலியாணசுந்தரனார், நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், தணிகைமணி வ.சு.செங்கல்வராயர், ரசிகமணி டி. கே. சிதம்பரநாதர், பேராசிரியர் ச. வையபுரியார், கோவை இராமலிங்கம், சுப்பிரமணிய பாரதியார், மீனாட்சி சுந்தரனார், பொத்தக வணிகரும் மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரனாரின் ஆசிரியரும் ஆன நாராயணசாமி, 'சைவசித்தாந்த சண்டமாருதம்' என்று புகழப்பட்ட சோமசுந்தர நாயகர், என்று பலர் வாழ்ந்த காலம்.

தனித்தமிழ் ஆர்வம்

அருட்பா-மருட்பா போர்
சமயத்தொண்டுகள்
இந்தி எதிர்ப்பு

 நூல்கள்

பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் (1921)
மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை, இரு தொகுதிகள் (1933)
மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி (1927)
யோக நித்திரை: அறிதுயில் (1922)
தொலைவில் உணர்தல் (1935)
மரனத்தின்பின் மனிதர் நிலை (1911)
சாகுந்தல நாடகம் (சமசுகிருதத்தில் இருந்து மொழி பெயர்த்தது) (1907)
சாகுந்தல நாடக ஆராய்ச்சி (1934)
ஞானசாகரம் மாதிகை (1902)


9/14/2011

கவிதையே தெரியுமா?


யாரோ வீசி ஏறிந்து
என் கைகளுக்குள்
சிக்கிய காகிதம்
காலியாகவே இருந்தது


அருகில் இருந்தவரிடம்
பேனா வாங்கினேன்
சில கவிதைகளாவது
எழுதி விடலாமே என்று.


அருகில் இருந்தவன்
முறைத்துப் பார்த்தான்
கவிதையாகவே மதிக்கவில்லை
என் கவிதையை.


ஏனென அதட்டிய, என்
கைகள் முழுவதிலும்நடுக்கங்கள்.
என் பார்வையிலும்
அவன் முகத்திலும்
மலர்ந்த கோபங்கள்.


கற்பனைதான் என்று
நினைக்கையில்-அவன்
காறி துப்ப நினைத்த எச்சில்,
உதிர்ந்தது என் காகிதத்தில்


கோபமாய் இருந்தாலும்
கவிதையே
எழுத முடியவில்லை


எனினும் மனதில் ஒரு
வருத்தம்.
அவன் போலவே,நாளை
உலகம் முழுவதும்
உமிழப்போகும் எச்சிலின்
நிலை குறித்து!

9/09/2011

ஆடைகளில் மஞ்சள் தடவி அணிவது ஏன்?

மஞ்சள் - தீமைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றக்கூடிய ஆற்றல் உடையது. புதிய ஆடைகள் அணிந்திருக்கும்போது, எவரேனும் தவறான எண்ணங்களுடனும் பொறாமையுடனும் நம்மைப் பார்த்தார்களேயானால், இந்த மஞ்சளானது நம்மைக் காப்பாற்றும் என்பது நமது நம்பிக்கை. இதுமட்டுமல்லாமல், மஞ்சள் என்பது மங்களத்தின் அடையாளம் !
எனவே, ஒருவர் மஞ்சள் தடவிய ஆடையை உடுத்தியிருப்பார் ஆயின், அவர் ஏதேனும் மங்கள காரியத்தில் பங்கேற்றியிருப்பார் என்பதை நாம் அறியலாம். புத்தாடை என்பது கஞ்சி முதலானவையின் சம்பந்தம் உடையதனால், மஞ்சளை அதன்மேல் தடவுவதன் மூலம் அனைத்துவித தீயவையும் விலகி நன்மைகள் அடையக் காரணமாக அமைகின்றது.

நன்றி : தினமலர்

9/07/2011

பெண்களைக் கண்டால்...

குரங்குகள் ஆண்களைக் கண்டால் ஒன்றும் செய்யாது. ஆனால், பெண்களைக் கண்டால் "உர்"ரென்று கொஞ்சம் முறைத்துப் பார்க்கும்.
காரணம், சீதையைத் தேடி வந்த வம்சாவழி குரங்குகள் என்பதால், "இவள் சீதையாக இருப்பாளோ?" என்று இன்றும் பெண்களைக் கண்டால் உற்றுப் பார்க்கிறது.
ராவணனிடமிருந்து சீதை மீட்கப்பட்ட விவரமும், ராமாயணம் முடிந்து போன விவரமும் இவைகளுக்குத் தெரியாது.
அதனால் இப்போதும் குரங்குகள் சீதையைத் தேடிக் கொண்டிருக்கின்றன.

இந்த குரங்குகளின் வேலையை இப்பொழுது சாமியார் போர்வையில் இருக்கும் கயவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பதற்கு இதை விட என்ன சான்று வேண்டும்.....

9/01/2011

விநாயகர் சதுர்த்தி
வினைய்களை கலைவான் விநாயகன் என்பார்கள் !!! நம் முன்னோர்கள் அதனால் தான் விநாயகர் சதுர்த்தி அன்று நாம் நம் வீட்டில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகருக்கு அருகம்புள்ளும் ,அச்சு வெள்ளமும் வெள்ளை எருக்கம் பூவும் சாத்தி கொழுக்கட்டை ,மோதகம் மற்றும் அவள் பாயசம் போன்ற பலகாரங்களை படைத்து ஒளவையார் இயற்றிய விநாயர் அகவல் மற்றும் திருமூலர், போன்ற பெரியவர்கள் பாடிய பாடல்களை படித்தும் பாடியும் கணபதியை வழிபட்டு அக்கம் பக்கத்தில் உள்ள அனைவருக்கும் பிரசாதங்களை கொடுத்து எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்ந்து வந்தோம். ஆனால் இப்போது காலபோக்கில் விநாயகர் சதுர்த்தி என்றால் அரசு விடுமுறை பள்ளி, கல்லுரி, தனியார் நிறுவனங்கள் என்று அனைத்தும் விடுமுறை இந்த நாளில் தொலைக்காட்சியிலும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு திரைக்கு வந்து சில வாரங்களே ஆன என்று ஆரம்பித்து அனைத்து தொலைகாட்சியிலும் சிறப்பு நிகழ்ச்சி என்று நம் மக்களை வேறு எந்த பக்கமும் திரும்ப விடாமல் வீட்டினுள் பூட்டிவிடுகின்றனர் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் இதிலே மூழ்கிவிடுகின்றனர். எது எப்படியோ அது அது அவரவர் வச(வி)தி என்போம். நாம் இன்று(நாளை) காலை விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் கோவில்களில் நடக்கும் ஆராதனைகளில் நாமும் கலந்து கொள்வோம் அர்ச்சனை செய்து வழிபடுவோம் நம்மால் முடிந்த நற் காரியங்களை பல செய்வோம். நம் வாழ்வில் ஏற்படும் தடைகளும் துயரங்களும் போக தும்பிக்கை உடையோனை நம்பிக்கையுடன் பிரத்திப்போம்
கர்ம வினைகளாலும் காரிய தடைகளும் அகள ஒளவையார் இயற்றிய இவ் விநாயகர் அகவலை தினமும் காலை மாலை இரு வேளையிலும் படித்து அருள் பெறுங்கள்.
விநாயகர் அகவல்
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந்தா
-ஒளவையார்
ஐந்து கரத்தனை ஆனைமு கத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே
-திருமூலர்

எண்ணம் :கோவை ராமநாதன்