தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

8/31/2010

யாருக்கு இந்த புரளி ,எதற்காக ? - 2

எதை நாம் வளர்ச்சி என்று மார்தட்டிக் கொள்வது? ஒருபுறம் உணவுப் பொருள்களின் விலைவாசியும், உறைவிடமும் பெரும் பான்மையான குடிமக்களுக்கு எட்டவே எட்டாத இடத்தில் இருக்கிறது. இன்னொருபுறம், மோட்டார் வாகனங்களின் விலை குறைந்து விட்டது என்று மகிழ்ச்சி அடைகிறோம்.கடந்த இருபது ஆண்டுகளில், குடிசைகளின் எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்றோ, நடைபாதை வாசிகளின் எண்ணிக்கை நகர்ப்புறங்களில் நாளும்பொழுதுமாக அதிகரித்து வருவது குறித்தோ எந்தவிதப் புள்ளி விவரங்களும் சேகரிக்கப் பட்டதாகத் தெரியவில்லை. இவர்களுக்கு நாம் வேலைக்கு உத்தரவாதமும், உணவுக்கு உத்தரவாதமும், கல்விக்கு உத்தரவாதமும் ஏட்டளவில் சட்டமாக்கி வைத்திருக்கிறோமே தவிர, அவர்களை இந்தியத் திருநாட்டின் பிரஜைகளாகக்கூட நாம் கணக்கிடுகிறோமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.இந்தியாவின் தனிநபர் வருமானம் உயர்ந்திருக்கிறது என்று பெருமை பேசுகிறோம். 1,000 குடும்பங்கள் குடிசைகளில் வாழும் கிராமத்தில், ஓர்  அம்பானியோ, ஒரு ரத்தன் டாடாவோ, ஓர் இன்போசிஸ் நாராயணமூர்த்தியோ அல்லது நமது கோடீஸ்வர நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒருவரோ பங்களா கட்டிக் கொண்டு வாழ்ந்தால், அந்தக் கிராமத்தில் தனிமனித வருமானம்கூட பல லட்சங்களாக இருக்கும். அதுவா கணக்கு?தீவிரவாத இயக்கங்கள் பெருகுவதும், அரசின் நிர்வாக இயந்திரத்துக்குக் கட்டுப்படாத மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், மக்களில் பாதி பேர் வறுமையிலும், கடனிலும் வாழ்வதும் வளர்ச்சிக்கான அறிகுறியாக இருக்க முடியுமா?ஒன்று, "நானே நடந்து வருவேன், நடைவண்டி தேவையில்லை' என்று சொல்லும் தன்னம்பிக்கை வேண்டும். அல்லது இன்னமும் நடைபழகி முடியவில்லை என்று துணிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஊர் உலகத்துக்காக கோட் சூட் போட்டுக்கொண்டு, அடுத்தவரிடம் பணம் எதிர்பார்த்து நிற்பது தேவையில்லாத போலித்தனம் அல்லவா!இந்தத் தலையங்கத்தின் ஒவ்வொரு எழுத்தும் பத்தியும் சொல்வதைப் புரிந்து கொண்டால் .....மீன்களைக் காப்பாற்ற வேண்டுமென்றோ, காதல் கொண்டோ எவரும் தூண்டிலில் புழுவை வைத்துக் காத்திருப்பதில்லை!


இயேசு அழைக்கிறார் என்று கூவுகிறவன் கோடிகளில் மிதக்கிறான்! அழைப்பைக் கேட்டுப் போனவன், அவனிடம் தசம பாகத்தைக் கொடுத்து விட்டு, என் ஆண்டவர் மிகவும் நல்லவர், அவர் என்னை என்றும் ரட்சிப்பார் என்று பாடிக் கொண்டு வெறும் கையோடு திரும்புகிறான்!
அதே மாதிரித் தான்!

சமூக நீதி காக்கிறேன், சமத்துவம் தருகிறேன் என்று இலவசங்களைத் தருகிறவன் என்ன நிலையில் இருக்கிறான், அதை நம்பிப் போகிறவன் என்ன நிலையில் இருக்கிறான் என்பதைக் கொஞ்சம் கண்திறந்து பார்த்தாலே புரிந்து விடும்!
சுதந்திரம் என்பது இவர்கள் பாடப் புத்தகங்களில் எழுதி வைத்தது போல, காந்தித் தாத்தாவும், நேரு மாமாவும் கடைக்குப் போய் வாங்கி வந்து கொடுத்ததல்ல!
எப்போது நமது பொறுப்பை உணரப் போகிறோம்?
இப்போதாவது........
இலவசங்களில் ஏமாறுவது இல்லை என்ற உறுதியோடு !
உலகத் தொல்லைக் காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக என்று கூவும் பெட்டிகள் முன்னால் அமர்ந்து நேரத்தை வீணடிக்காமல்,


சக மனிதர்களிடம் கொஞ்சம் அக்கறையோடு, பரிவோடு
இருக்க முயற்சியை ஆரம்பிப்போமா!


நன்றி  : தினமணி

8/30/2010

யாருக்கு இந்த புரளி ,எதற்காக ?சிறுவயது முதலே நாளிதழ்களைப் படிப்பது, குறிப்பாக அந்த நாளிதழின் அன்றைய தலையங்கம் என்ன சொல்கிறது என்பதை எல்லாம் கவனமாக உள்வாங்கிக் கொண்டு யோசிக்கும் வழக்கம் எப்படியோ இன்றைக்கும் என்னிடம் நீடித்துவருகிறது. விஷயங்களைத் தேடித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டிய ஆசிரியர்கள், நண்பர்கள், பெரியவர்கள், புத்தகங்கள் என்று ஒரு பெரிய பட்டியலையே காரணமாகச் சொல்ல முடியும். என்னைப் பற்றி இப்படிச் சொல்லிக் கொள்ளும்போது, என்னை மாதிரியே எத்தனைபேர் ஒரு நாளிதழில் வெளி வரும் தலையங்கத்தைப் படிக்கிறார்கள், அப்புறம் அதைப் பற்றி எப்படி சிந்திக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பினால் தெளிவான விடை தெரிவதில்லை. முதலில் சமூகப் பொறுப்புடன் எத்தனை நாளிதழ்கள் தலையங்கத்தைத் தொடர்ந்து எழுதிவருகின்றன என்று கேட்டால், அதற்கும் விடை எத்தனைபேருக்குத் தெரியும் என்பது கூட என்னால் ஒரு குத்துமதிப்பாகச் சொல்ல முடிவதில்லை.


தமிழகத்தில் பெரும்பாலான நாளிதழ்கள் தலையங்கம் என்ற ஒன்றையே மறந்து விட்டன. அல்லது, தங்கள் சௌகரியத்துக்கேற்றபடி எழுதுவது மட்டுமே தலையங்கமாக வருகிறது. இந்த மாதிரி இல்லாமல், பொது விஷயங்களில், ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும் விதத்தில், ஒரு தெளிவான பார்வையோடு பிரச்சினையை அணுகுகிற விதத்தில் தலையங்கங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நாளிதழ்களாக, ஹிந்து, இந்தியன் எக்ஸ்ப்ரெஸ், என்று ஆங்கிலத்தில் பல நாளிதழ்கள் இருந்தாலும், தமிழில் ஒரே ஒரு நாளிதழ் தான், ஆரம்பகாலம் முதல், ஒரு நாளிதழின் கடமையாக இன்றைக்கும் தலையங்கத்தை வெளியிட்டு வருவதாக இருக்கிறது! அது தினமணி!  அன்றைய காலங்களில் இருந்து தினமணி தலையங்கங்களைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன்.

இப்படிச் சொல்லும்போது, வேறு சில இதழ்களிலும் தலையங்கங்கள் அவ்வப்போது வருகிறதே, பார்ப்பதில்லையா என்று கேட்கிறீர்களா? தலையங்கம் என்ற பெயரில் வருவதெல்லாம் தலையோடு இருப்பதாக எண்ண முடியவில்லை! நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த சிந்தனையும் கொண்டு ஒரு பிரச்சினையை எதிர்கொள்ள தைரியமில்லாத, தலை இல்லாத முண்டங்களாகத் தான், சில நாளிதழ்களின் ஆசிரியர் பக்கம் அல்லது தலையங்கங்களைப் பார்க்க முடிகிறது. அரசியல் கட்சி சார்புடைய நாளிதழ்கள் என்றால் கேட்கவே வேண்டாம்! குதிரைக்குக் கண்ணைக் கட்டிய மாதிரிக் குருட்டாம்போக்கில், ஒருபக்கச் சார்புடையரை  திட்டித் தீர்ப்பதற்காகத் தான் தலையங்கமே என்ற அளவுக்குத் தரம் தாழ்ந்துபோனவைகளாக மட்டுமே இருப்பதை இங்கே கணக்கில் சேர்த்தி இல்லை!

இந்தத் தலையங்கம் சென்ற  தினமணி நாளிதழில் வெளியானது. "போதுமே இந்தப் போலித் தனம்!" என்ற தலைப்பில் எழுதப்பட்டது. கொஞ்சம் கவனமாகப் படித்தீர்களானால், சொல்லப் பட்டிருக்கும் வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை, இந்தப் போலித் தனத்தை உதறினால் எந்த அளவுக்கு நன்மை உண்டு என்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியும்!
போதுமே இந்தப் போலித்தனம்..!


இந்தியாவுக்கு இங்கிலாந்து அளித்துவரும் வளர்ச்சி நிதி உதவியை (250 மில்லியன் அமெரிக்க டாலர்) நிறுத்திக் கொள்ளலாமா என்று ஆலோசித்து வருவதாக அந்நாட்டு அரசு சென்ற மாதம் அறிவித்தது. பிரிட்டனிடமிருந்து அதிகமாக நிதியுதவியைப் பெறும் நாடுகளில் முதலிடம் வகிப்பது இந்தியாதான். ஒருவேளை, முந்நூறு ஆண்டுகளாக இந்தியாவிடம் பெற்றதை பிரிட்டன் நினைத்துப் பார்ப்பதாலும் இந்தத் தாராள மனது இருக்கக்கூடும்.
அணுமின் திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி செலவிடுகிற இந்தியாவுக்கு, அதிலும் வளர்ந்து வரும் நாடு என்கிற நிலையில் உள்ள நாட்டுக்கு நாம் தொடர்ந்து உதவி அளிக்கத்தான் வேண்டுமா என்பது இங்கிலாந்தின் இப்போதைய நியாயமான கேள்வி. மேலும், 2009 உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, தனது பொருளாதாரமே தள்ளாட்டம் போடும் நிலையில் அடுத்தவருக்குச் செலவழிக்க வேண்டுமா என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு. இந்தியாவுக்கு உதவியை நிறுத்துவது பற்றி யோசிக்கும்போதே சீனாவுக்கும் ரஷியாவுக்கு வளர்ச்சிநிதியை நிறுத்திவிட்டார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.


இத்தகைய வளர்ச்சி நிதி என்பது ஐக்கிய நாடுகள் மன்றத்தில் 1970-ல் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம். இதன்படி, வசதியான நாடுகள் தங்கள் மொத்த வருமானத்தில் 0.7 விழுக்காட்டினை இத்தகைய வளர்ச்சி நிதிக்காக (டெவலப்மென்ட் அசிஸ்டன்ஸ்) வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்குக் கட்டுப்பட்டு, 0.7 விழுக்காடு நிதி வழங்கும் நாடுகள். சுவீடன், நார்வே, லக்ஸம்பர்க், டென்மார்க், நெதர்லாந்து போன்றவைதான்.


உலகில் மிக அதிக அளவு வளர்ச்சி நிதி வழங்குவது அமெரிக்கா. 2009-ம் ஆண்டு 28 பில்லியன் டாலர் வழங்கியிருக்கிறது. என்றாலும், இது நாட்டின் மொத்த வருவாயில் 0.3 விழுக்காடு மட்டுமே! இங்கிலாந்து இரண்டாம் இடத்தில் (13 பில்லியன் அமெரிக்க டாலர்) இருப்பினும் இது நாட்டின் மொத்த வருவாயில் 0.5 விழுக்காடு ஆகும்.


இந்த நிதியுதவியை இந்தியாவுக்கு அளிப்பதில் தயக்கம் காட்டுவதற்குக் காரணம், மேலே சொன்னதைப்போல, இந்தியா வளர்ந்துவரும் நாடு என்பதுதான். இந்த வளர்ச்சி நிதியை மற்ற ஏழை நாடுகளுக்குக் கொடுப்பது குறித்து இந்த "கொடைநாடு'களுக்கு எந்த மனத்தடையும் இல்லை. மேலும், கொடைநாடுகள் தரும் வளர்ச்சி நிதியுதவியில் 5 விழுக்காடுதான் வளரும் நாடுகளுக்கு அளிக்கப் படுகிறது. இந்தப் பட்டியலில் முதல் முக்கியமான 10 நாடுகளில் இந்தியா ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. நாம் ஆண்டுக்கு சுமார் 2,650 மில்லியன் அமெரிக்க டாலர்களை வளர்ச்சி நிதியாகப் பெறுகிறோம்.


இவர்கள் தரும் நிதியுதவி உண்மையாகவே வளர்ச்சிக்குப் பயன் படுகிறதா என்பதே கேள்விக்கு உட்படுத்தப்படும் விஷயம். இவர்கள் நிதியைக் கொடுத்துவிட்டு, வளர்ச்சிப் பணிக்கான பொருள்களை தங்கள் நாட்டிலிருந்து வாங்க வேண்டும் என்று வலியுறுத்துவதால் அவர்களுக்கு வியாபாரம் நடக்கிறது; பணம் தருகிறோமே என்கிற உரிமையில் நம் நாட்டில் கடைவிரிக்கிறார்கள்; நிதியின் பெரும்பகுதி அரசியல்வாதிகளின் ஊழலுக்கே போகிறது என்பதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், இப்போது நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி- நாம் வளர்ந்து வரும் நாடா, வல்லரசாக மாறப்போகும் நாடா, அல்லது ஏழை நாடா?


ஒரு பக்கம் பல ஆயிரம் கோடியில் திட்டங்கள். 8 விழுக்காடு வளர்ச்சி என்கிறோம். நிறைய வசதி வாய்ப்புகள் உருவாகிவிட்டன. வானத்தில் விமானங்களின் நெரிசல் அதிகமாகிவிட்டது. ஏற்றுமதி ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வணிக வாசல்களை எல்லோருக்குமாக தாராளமாகத் திறந்துவிட்டாகிவிட்டது.


சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் 42 விழுக்காட்டினர் வறுமையில் வாழ்க்கிறார்கள். அதாவது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமையில் வாழ்வது இந்தியாவில்தான். இதை வளர்ச்சி என்று சொல்லிவிட முடியுமா?


காத்திருங்கள் .......

8/28/2010

ரசித்தது

உறக்கமில்லை உன் கண்கள் ஏன் மின்னுதடி,
என் மூன்று கண்களும் இருட்டுதடி..
குளிருக்கே குளிருதடி, ஆனால்
உன் மூச்சுகாற்றால் எனக்கு வெப்பம்மடி..
உன் உதட்டில் தேன் ஏன் வடியுதடி.
என்னை தேனிக கூட்டம் கொட்டுதடி..
உன் காதில் தொங்கும் தோடு கூட,
அதன் சுகத்தை அசையாமல் எனக்கு சொல்லுதடி..
நீ எங்கே இருக்கயடி, நானும் அங்கே இருப்பனடி..


காலம் !!
காலம் சில
வலிகளையும் கொடுக்கும்
என்பதால் தான்
கடிகாரத்தில் முட்கள் ..!
                 -கவிப்புயல் வைர பாரதி..

வாழ்கை பயணம் !!
என் பயணத்தை நான்
முடிவு செய்வதில்லை..
என் பயணம் தான்
முடிவு செய்கிறது..8/27/2010

அபத்தமான தமிழனின் வாழ்க்கைஒரு விஷயத்தை ஒதுங்கி நின்று பார்க்கும் போது அதுவரை அது பற்றி நமக்குத் தென்பட்டிராத பல்வேறு புதிய விஷயங்கள் காணக் கிடைக்கும். அல்லது இப்படிச் சொல்லலாம். ஒரு விஷயத்தை அதன் உள்ளே இருக்கும் போது அதற்குள் ஓடும் உணர்ச்சிப் பிரவாகத்தில் நாமும் அடித்துக் கொண்டு போய் விடுகிறோம். அதனால் அதை நாம் விஞ்ஞானக் கண்ணோட்டத்துடன் நுண்ணிய முறையில் பார்க்க முடியாமல் போய் விடுகிறது. அதேபோல், தமிழர்களின் வாழ்க்கையை சற்று வெளியே நின்று பார்க்கும் போது அதுவரை நமக்குப் புலப்பட்டிராத ஏராளமான காட்சிகள் கிடைக்கின்றன. உலகின் எந்த நிலப்பரப்பிலும், எந்தக் கலாச்சாரத்திலும் காணக் கிடைக்காத காட்சிகள் அவை.
          
            ஒரு கட்சி தேர்தலில் தோல்வி அடைந்தால் உடனே அந்தக் கட்சித் தொண்டர் தன் விரலை வெட்டி கோவில் உண்டியலில் போடுவார். கட்சித் தலைவரும் அந்தத் தொண்டருக்கு ஆயிரக் கணக்கில் பண உதவி செய்வார். இதெல்லாம் ப்ளாக் ஹ்யூமரில் சேர்க்கப்பட வேண்டியவை என்றால் நேரடி ஹ்யூமரும் எக்கச்சக்கமாக உண்டு. மாநில முதல்வர் இருந்த நான்கு மணி நேர உண்ணாவிரதத்தை உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் சமயங்களில் இந்த நகைச்சுவைக் காட்சிகள் பயங்கரமான வன்முறைக் காட்சிகளாகவும் மாறுவதுண்டு. ஒரு அரசியல் தலைவர் கைது செய்யப்பட்ட போது மாணவிகளோடு சேர்த்து பஸ்ஸைக் கொளுத்திய சம்பவத்தை நினைவு கொள்ளலாம்.
          பஸ்ஸைக் கொளுத்துவது போல் தன்னையும் கொளுத்திக் கொள்வது இன்னொரு விசேஷ குணம். எந்த ஒரு அரசியல் பிரச்சினைக்கும் கட்சித் தொண்டர்கள் தங்களைத் தீயிட்டுக் கொளுத்திக் கொள்வதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். தொண்டர்கள் என்று இல்லாமல் மாணவர்களும் இதைச் செய்கிறார்கள். அரசியல்வாதிகள் இதை ‘தியாகம்’ என்று சொல்லி தமிழர்களின் உணர்ச்சிவசப்படும் தன்மையைத் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
          திருவள்ளுவர் திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்று மூன்றாகப் பிரித்தார் அல்லவா? அதை இப்போது சாமியார் (அறம்), அரசியல் (பொருள்), சினிமா (இன்பம்) என்று மூன்றாகப் பிரிக்கலாம். ஒரு சாமியார் ஒரு நடிகையுடன் மன்மத லீலையில் ஈடுபட்டதை தொலைக்காட்சியில் பார்த்த பிறகும் அவருக்கு கூட்டம் கூடுகிறது என்றால் அதை என்னவென்று சொல்வது?
        எந்த ஒரு புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பு கையில் கிடைத்தாலும் அது எந்த உபயோகத்துக்காகக் கண்டு பிடிக்கப்பட்டதோ அதை விட்டுவிட்டு அதை ஒரு மட்டமான கேளிக்கைப் பொருளாக மாற்றி விடுவதில் தமிழர்கள் சமர்த்தர்கள். கணினியுன் செல்போனும் உதாரணம். கொடுமை என்னவென்றால், வாகனங்களை ஓட்டும் போது, ரயில் பாதையைக் கடக்கும் போது, சமையலில் ஈடுபடும்போது என்று ஆபத்தான வேலை செய்யும் போதும் செல்போனில் பேசி உயிரை விடும் தருணங்களும் இங்கே அதிகம். ஓசியில் எது கிடைத்தாலும் அதை வாங்கிக் கொள்ள ஆசைப்படுவது மற்றொரு சமூக மனோபாவமாக மாறியிருக்கிறது. எந்த வர்க்க பேதமும் இல்லாமல் நீக்கமற நிறைந்திருக்கும் குணாதிசயம் இது.
            ஒரு பதிவாளன்  என்ற முறையில் தமிழர்கள் இலக்கியத்துக்குக் கொடுக்கும் மரியாதை பற்றியும் கொஞ்சம் சொன்னால்தான் இந்தக் கட்டுரை முழுமை அடையும். புத்தக விழாக்களில் அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள், ஆன்மீகம் மற்றும் சமையல் சம்பந்தப்பட்டவை. மற்றபடி அதிகம் விற்பவை, ’எப்படி’ புத்தகங்கள். பணம் சம்பாதிப்பது எப்படி? தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி? புத்தக விழாக்களில் காணக்கூடிய மற்றொரு காமெடி காட்சி, எல்லா ஸ்டால்களிலிருந்தும் புத்தக விலைப் பட்டியலை சேகரித்து மூட்டை மூட்டையாகத் தூக்கிக் கொண்டு செல்வது. ’ஆகா, எக்கச்சக்கமாக புத்தகங்கள் வாங்கி விட்டார் போலிருக்கிறதே’ என்று பார்த்தால் எல்லாம் ஒரே கேட்லாகாக இருக்கும்; பதிப்பகங்கள் இலவசமாகக் கொடுப்பவை.
ஆனால் இதுபோல் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் தமிழர்களிடம் எனக்குப் பிடித்த ஒரு குணம், நன்றி மறவாமை. தேர்தலில் தனக்கு ஓட்டுப் போடச் சொல்லி ஒருவர் 1000 ரூ. கொடுத்தால் அவருக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள்; எந்தக் காரணம் கொண்டும் மாற்றிப் போட மாட்டார்கள்; அந்த ஆள் எட்டு கொலை செய்திருந்தாலும் பரவாயில்லை.

நன்றி: இந்தியா டுடே            
முதலில் நம் கவனத்தைக் கவருபவை சினிமா போஸ்டர்கள். கிட்டத்தட்ட தமிழர்களின் கலாச்சார அடையாளமாகவே ஆகி விட்ட இந்த விளம்பர சுவரொட்டிகளின் பின்னே தமிழக அரசியல் வரலாறே அடங்கியிருக்கிறது என்று சொல்லலாம். சினிமாவுக்கு போஸ்டர் என்றால் அரசியலுக்கு கட் அவுட். இது எத்தனை அடி உயரத்துக்கு எழுப்பப்படுகிறதோ அத்தனை அடி உயரத்துக்கு அந்தக் கட் அவுட்டை வைத்தவரின் வாழ்க்கைத் தரமும் உயரும் என்பது அரசியல் கணிதச் சமன்பாடு. தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் வெவ்வேறாகப் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்திருப்பதால் போஸ்டரும் கட் அவுட்டும் கூட அரசியல்வாதி, சினிமாக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் கலந்து கலந்து ஊடாடுகின்றன. இதில் சில சமயம் அரசியலை சினிமா முந்தும். உதாரணமாக, ஒரு ஹீரோவின் சினிமா வெளியாகும் அன்று அவருக்கு ஐம்பது அடியில் கட் அவுட் வைத்து அதற்கு பீர் (பால் ) அபிஷேகம் செய்யப்படும். இந்த அரிய வாய்ப்பு அரசியல்வாதிக்குக் கிடைப்பதில்லை

8/26/2010

இன்றே மாறுங்கள்

"இன்று" என்பது மிகப் பலமுடையது
"இன்று" எல்லாவற்றையும் மாற்றக் கூடியது
"இன்று" புதியதாகப் பிறந்துள்ளது
"இன்று" மிகவும் விசேஷமானது
இன்று என்பது நேற்றைய மிச்சம் அல்ல
இன்று என்பது நாளைய தொடக்கம்
இன்று எத்தனையோ மாறலாம்

இப்படி யோசித்துப் பார்


நேற்றைய விரோதங்கள் இன்று மாறலாம்
நேற்றைய தோல்விகள் இன்று மாறலாம்
நேற்றைய அவமானங்கள் இன்று மாறலாம்
நேற்றைய சண்டைகள் இன்று மாறலாம்
நேற்றைய பிரச்சனைகள் இன்று மாறலாம்
நேற்றைய குழப்பங்கள் இன்று மாறலாம்
நேற்றைய பொறாமை இன்று மாறலாம்
நேற்றைய நஷ்டங்கள் இன்று மாறலாம்
நேற்றைய வியாதிகள் இன்று மாறலாம்
நேற்றைய பலவீனங்கள் இன்று மாறலாம்
நேற்றைய மனோபாரங்கள் இன்று மாறலாம்
நேற்றைய பகைகள் இன்று மாறலாம்
நேற்றைய ஏமாற்றங்கள் இன்று மாறலாம்
நேற்றைய ஜன்ம கர்ம வினைகள் இன்று மாறலாம்
நேற்றைய தொந்தரவுகள் இன்று மாறலாம்
நேற்றைய காமம் இன்று மாறலாம்
நேற்றைய பாவங்கள் இன்று மாறலாம்
நேற்றைய தோல்வி மனப்பான்மை இன்று மாறலாம்
நேற்றைய கெட்ட பழக்கங்கள் இன்று மாறலாம்
நேற்றைய காயங்கள் இன்று மாறலாம்
நேற்றைய பிரிவு இன்று மாறலாம்
நேற்றைய மனக்கசப்புகள் இன்று மாறலாம்
நேற்றைய அழிவுகள் இன்று மாறலாம்
நேற்றைய விரோதி இன்று மாறலாம்
நேற்றைய கனவுகள் இன்று மாறலாம்
நேற்றைய கற்பனைகள் இன்று மாறலாம்
நேற்றைய எதிர்ப்பார்ப்புகள் இன்று மாறலாம்
நேற்றைய உலகம் இன்று மாறலாம்
நேற்றைய மாற்றம் இன்று மாறலாம்
நேற்றைய பழையது இன்று மாறலாம்
நேற்றைய புதியது இன்று மாறலாம்
நேற்றைய சிந்தனை இன்று மாறலாம்
நேற்றைய பயம் இன்று மாறலாம்
நேற்றைய எண்ணங்கள் இன்று மாறலாம்
நேற்றைய கோபம் இன்று மாறலாம்
நேற்றைய மௌனம் இன்று மாறலாம்
நேற்றைய சோம்பேறித்தனம் இன்று மாறலாம்
நேற்றைய இழப்பு இன்று மாறலாம்
நேற்றைய துன்பம் இன்று மாறலாம்
நேற்றைய துரதிஷ்டம் இன்று மாறலாம்
நேற்றைய நாஸ்திகம் இன்று மாறலாம்
நேற்றைய கேள்வி இன்று மாறலாம்
நேற்றைய தேடல் இன்று மாறலாம்
நேற்றைய முட்டாள் இன்று மாறலாம்
நேற்றைய பைத்தியம் இன்று மாறலாம்
நேற்றைய தீவிரவாதி இன்று மாறலாம்
நேற்றைய தீவிரவாதம் இன்று மாறலாம்
நேற்றைய பிரிவினை இன்று மாறலாம்
நேற்றைய கெடுதல்கள் இன்று மாறலாம்
மாறட்டுமே எல்லா கெட்டவைகளுமே இன்று மாறட்டுமே
எல்லா கெட்டவர்களும் இன்று மாறட்டுமே
எல்லா குழப்பங்களும் இன்று மாறட்டுமே
எல்லா பைதியகாரத்தனங்களும் இன்று மாறட்டுமே
நீ உன் புத்தியினால் நல்ல மாற்றங்களை கெடுக்கிறாய்
இன்று எல்லாம் மாறுவதற்கு பல கோடி சந்தர்பங்கள் உண்டு
இதுவரை நேற்றைய எச்சத்தில் வாழ்ந்து வீண் ஆனாய்
இதுவரை நாளைய கற்பனையில் சிறகடித்து
 தோற்றுப் போனாய் இன்று முதல்
இன்று வாழ் இன்று முதல்
இன்று அன்பு செய் இன்று முதல்
இன்று உண்மையாக இரு இன்று முதல்
இன்று உழை இன்று முதல்
இன்று பணிவோடு இரு இன்று முதல்
இன்று கோபப்படாமல் இரு இன்று முதல்
இன்று சோம்பேறித்தனத்தை விடு இன்று முதல்
இன்று கெட்ட பழக்கங்களை விடு இன்று முதல் 
இன்று பக்தி செய் இன்று
வாழ்க்கையின் நாள் இன்று மாறுதல்
ஆரம்பம் இன்றிலிருந்து மாறுதல் உண்டு
இன்றே உன் பலம் இன்றே உன் வாழ்க்கை
இன்றே உன் நம்பிக்கை இன்றே உன் தேவை
இன்றே உன் வெற்றி இனி
நேற்றில்லை;நாளையில்லை;
இன்று மட்டுமே!


Read more...

8/25/2010

ஒரு வார்த்தை

உலகில் எல்லோருக்கும் தினமும் பலமுறை
சொல்லும் அற்புதமான வார்த்தை
எத்தனையோ பேருக்கு தினமும்
நாம் சொல்லும் வார்த்தை..
நம்முடைய மனதில் சந்தோஷத்தை
வெளிப்படுத்தும் ஒரு வார்த்தை
கடைசி வரை சொல்லியே ஆக வேண்டிய ஒரு வார்த்தை
உலகம் முழுவதிலும் எல்லா மொழிகளிலும் மிகச் சிறந்த ஒரு வார்த்தை
எத்தனையோ பேருக்கு சொல்லும் வார்த்தை
சில விஷயங்களுக்கும் சிலருக்கும்
சொல்ல மறந்த ஒரு வார்த்தை


அந்த வார்த்தை... நன்றி
இனி சொல்வாய்....
இன்றிலிருந்து சொல்வாய்...
இப்பொழுதிலிருந்து சொல்வாய்...
சொல்லிப் பார்..


கண்களே உன்னால் நான்
உலகைப் பார்க்கிறேன் உங்களுக்கு நன்றி
காதுகளே உங்களால் நான் கேட்கிறேன்
உங்களுக்கு நன்றி
மூக்கே உன்னால் நான் சுவாசிக்கிறேன்
உனக்கு நன்றி
வாயே உன்னால் நான் பேசுகிறேன்
உனக்கு நன்றி
கைகளே உன்னால் நான்
வேலை செய்கிறேன்
உங்களுக்கு நன்றி
கால்களே உங்களால் நான் நடக்கிறேன்
உங்களுக்கு நன்றி
பூமியே உன் மடி மீது வாழ்கின்றேன்
உனக்கு நன்றி
மேகமே உன்னால் மழையை
அனுபவிக்கின்றேன் உனக்கு நன்றி
சூரியனே உன்னால்
வெளிச்சத்தை உணர்கின்றேன்
உனக்கு நன்றி
சந்திரனே உன்னால் இருளும்
அழகாகின்றது உனக்கு நன்றி
ஆகாரமே உன்னால் பலமடைகின்றேன்
உனக்கு நன்றி
எழுதுகோலே உன்னால் எழுதுகிறேன்
உனக்கு நன்றி
தாயே உன்னால் உலகில் பிறந்தேன்
உனக்கு நன்றி
தந்தையே உன்னால் உற்பத்தி ஆனேன்
உனக்கு நன்றி
வயதானவர்களே உங்களின் அனுபவத்தில்
பல கற்றுக்கொண்டேன் உங்களுக்கு நன்றி
தோழர்களே/தோழிகளே உங்களால்
நட்பை அனுபவிக்கிறேன்
உங்களுக்கு நன்றி
சகோதரர்களே/சகோதரிகளே உங்களால்
சகோதரத்துவத்தை ரசிக்கிறேன்
உங்களுக்கு நன்றி
ஆசிரியர்களே உங்களால் அறிவு
பெறுகிறேன் உங்களுக்கு நன்றி
புத்தகமே உன்னால் படிக்கிறேன்
உனக்கு நன்றி
மொழிகளே உங்களால் என் மனதை
வெளிப்படுத்துகின்றேன்
உங்களுக்கு நன்றி


இது போல் இன்னும் கோடி பேருக்கு
கோடி விஷயங்களுக்கு நன்றி
சொல்ல மறந்து விட்டோம்

இனி மறக்காமல் சொல்
சொல்ல சொல்ல சுகமாய் இரு

இன்னும் சில நன்றிகளும்
மறக்காமல் சொல்ல வேண்டும்
கடவுளே  உன்னால் நானும்
சுத்தமாகிறேன் உனக்கு நன்றி
பக்தர்களே உங்களால் நானும்
பக்தி செய்கிறேன் உங்களுக்கு நன்றி
பக்தியே உன்னால் நான் பகவானை
உணர்கின்றேன் உனக்கு நன்றி
ஞானிகளே உங்களால் ஞானத்தை
தெரிந்து கொள்கிறேன் உங்களுக்கு நன்றி

கடவுளே  உன்னால் தான்
இவை எல்லாவற்றையும் நான்
அனுபவிக்கின்றேன் உனக்கு நன்றி


8/24/2010

வாழ்க்கை பாடம் படி........

அன்பாய் இரு ஆனால்,
அன்பிற்கு அடிமை ஆகி விடாதே!!!
விட்டுகொடு ஆனால்,
கொள்கையை விடாதே!!!
கவலையை மறந்து விட
ஆனால்,கடந்து வந்த
பாதையை மறந்து விடாதே!!!

8/23/2010

சோகம் தந்த காதல்காதலித்து பார் இன்பம் வரும்.......அதையே
தொடர்ந்து பார் மிக பெரிய துன்பம் வரும்................


காதல் தோல்வியை பற்றி பல இடங்களில் பார்திருப்போம்,
கேட்டிருப்போம்.அது நம்மை பெரிதாக பாதிக்காது.ஆனால்
நம் வாழ்க்கையிலே அது நடந்தால் நம்மை வாட்டி வசக்கி
விடும் என்பது தான் உண்மை.


பெண்ணே,
நீ தான் என் உயிர் என்றேன்!
நீ தான் என் வாழ்கை என்றேன்!
நீ தான் என் சொந்தம் என்றேன்!


ஆனால் இறுதியில்........
என் தாய் தான் உயிர் என்றாய்!
என் தந்தை தான் என் வாழ்கை என்றாய்!
என் தனயன் தான் என் சொந்தம் என்றாய்!


உன் கரம் பிடிக்க நான் வழி என்னவென்றேன்............
ஆனால்,
உன்னை விட்டு பிரிய வழி சொன்னாய்.............


வீட்டார் எதிர்த்தாலும்,
உற்றார் வெறுத்தாலும்,
நான் உனக்கு தான்,என்று சொன்னது
வெறும் உதடு தானோ?


கண்ணால் பேசினாய்.............ரசித்தேன்..........
கடிதத்தில் பேசினாய்.............மகிழ்ந்தேன்............
பாசம் காட்டினாய்..............உணர்ந்தேன்............


ஆனால் இப்போது...................


வெறுப்பை ஏன் கொட்டுகிறாய்??????????
நான் அழ வேண்டும் என்றா???????????


உனக்காக எத்தனையோ செய்தேன்...........ஆனால்,


நான் அழுவதில் தான் உனக்கு இன்பம் என்றால்..........
அதையும் செய்கிறேன்,என் வாழ்நாள் முழுதும்.............


நான் உன்னை பிரிந்தாலும் உன் ஞாபகங்களுடனே வாழ்வேன்
இறுதி வரை..........

8/21/2010

சிறந்த சிந்தனைகள் -2

* உணர்வுகள் மாறலாம், நினைவுகள் மாறுவதில்லை - ஜோயல் அலெக்சாண்டர்


* அறிவாளிகள் சிறந்த எண்ணங்களை விவாதிக்கின்றனர், நடுத்தரமானோர் நிகழ்ச்சிகளை விவாதிக்கின்றனர், சாதாரணமானோர் மக்களை விவாதிக்கின்றனர்


* சொற்ப இரண்டு நாட்களிலேயே, நாளை என்பது நேற்று என்றாகி விடுகிறது.


* அனைத்துமே பூர்த்தியாகியிருக்க வேண்டும் முடிவில். அவ்வாறு இல்லையெனில் அது முடிவல்ல.


* நட்பு என்பது ஈரமான சிமெண்ட் கலவையில் கால் பதிப்பது போன்றது. சிறிது நேரம் நின்றால் (காலடிச்) சுவடுகளை விட்டுச் செல்வோம், அதிக நேரம் இருந்தால் விட்டுச் செல்ல இயலாது.


* சிந்தனை செய்யா மூளை, தேங்கிய சாக்கடை - யாரோ


* உலகத்திற்கு வேண்டுமென்றால் நீங்கள் ஒரு ஆளாக இருக்கலாம்; ஆனால் யாராவது ஒருவருக்கு நீங்களே உலகமாக இருக்கலாம்.


* நம்பிக்கைக்குரிய நணபருக்கு ஈடு இணையான செல்வம் ஏதுமில்லை


* இளமை என்பது வயதால் அல்ல, எண்ணங்களாலே அறியப்படுகிறது


* உலகிற்கு ஏற்றாற் போல் தன்னை மாற்றிக்கொள்கின்றனர் பலர்; ஆனால் தனக்கு ஏற்றாற் போல், உலகையே மாற்றிக்கொள்கின்றனர் சிலர்- கலாம்


* அடுத்த விளக்கிற்கு ஒளி ஏற்ற உதவுவதால், விளக்கின் ஒளி எவ்வகையிலும் குறைவதேயில்லை - எரின் மேஜர்ஸ்


* நான் தோல்வியுறவில்லை; மாறாக நான் கண்டுபிடித்த 10,000 வழிமுறைகளில் எதுவும் சரியில்லை - தாமஸ் ஆல்வா எடிசன்


* வாயைத் திறந்து பேசாத வரை ஒவ்வொரு மனிதரும் அறிவாளிகளே - ஆனென்

8/19/2010

அவர்கள் தான் சாதனையாளர்களா ?

சாதனையாளர்களான - அவர்கள்
தோல்வி படிக்கட்டுகளை மிதித்தே
சாதனை மேடைகளிலும்..
சரித்திர பாடங்களிலும் இடம்பெற்றனர்.
இவ்வுலகத்தில் எவராலும் முடியாதது
இவரால் முடியும்! - ஆனால்
இவரால் முடியாதது,
எவராலும் முடியாது!
அவரின் விலகாத விடாமுயற்சி,
தளராத தன்னம்பிக்கை,
அயராத கடின உழைப்பு,
இம்மூன்றால் அசைக்க முடியாத
வெற்றியை எளிதாக பெற்றிடும்
அவர்களே சாதனையாளர்களாய்....
தொடர்கின்றனர்.....!
ஏன் அந்த அவர்களாய்
நாம் இருக்கக்கூடாது
நண்பர்களே? சிந்தியுங்கள் ............

8/18/2010

சிறந்த தத்துவங்கள் இதோ........

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ
அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.
=========================
வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
=========================
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
=========================
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,
ஒரு நல்ல நண்பனின் மவுனம்
இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.
=========================
நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து
கிடைக்கிறது. - பில் கேட்ஸ்
=========================
சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!
=========================
விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.
=========================
அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க
மனசு சொல்வதை மட்டும்கேளுங்கள்.
=========================
30 மாநிலங்கள்
1618 மொழிகள்
6400 சாதிகள்
6 மதங்கள்
6 இனங்கள்
29 பெரிய பண்டிகைகள்
ஒரு நாடு! அது தான் நம் இந்தியா
இந்தியனாக இருப்பதற்காகப் பெருமைப்படுங்கள்!
=========================
உதவும் கரங்கள்
ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
- அன்னை தெரஸா.
=========================
வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
அதனால்,
வெற்றிக்குப் பிறகு
தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;
தோல்விக்குப் பிறகு
தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!
=========================
எல்லாம் சில காலமே - ரமண மகரிஷி
=========================
கண்களைத் திறந்து பார்
அனைவரும் தெரிவார்கள்.
கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்!
=========================
தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!
=========================
கையில் 10 ரோஜாக்களோடு
கண்ணாடி முன் நில்லுங்கள்!
இப்போது நீங்கள் 11 ரோஜாக்களைக் காண்பீர்கள்!
அந்த 11ஆவது ரோஜா,
உங்கள் புன்னகை!
நீங்ள் இப்போது புன்னைப்பதை நான் அறிவேன்!
=========================
வெற்றியை விரும்பும் நமக்குத் தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை;
தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.
=========================
உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
பிரச்சினைகள் வரும்போது அல்ல;
பிரச்சினைகளைக் கண்டு நீங்கள்
பயந்து விலகும்போது. - பாரதியார்
=========================
எவையெல்லாம் அழகாக இருக்கின்றனவோ
எவையெல்லாம் அர்த்தத்துடன் இருக்கின்றனவோ
எவையெல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமோ
அவை அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கட்டும்!
இன்றும் நாளையும் என்றும்.
=========================
இதை மெதுவாகப் படியுங்கள்:
LIFEISNOWHERE
இதை எப்படிப் படித்தீர்கள்?
LIFE IS NO WHERE என்றா?
LIFE IS NOW HERE என்றா?
நாம் பார்க்கிற விதத்தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த ஒற்றை வரிஉணர்த்திவிடுகிறது!
=========================
மின்தடை ஏற்படும்போதுதான்
நமக்கு மெழுதுவர்த்தி ஞாபகம் வருகிறது.
அப்படித்தான் பிரச்சினைகளின் போது
ஒரு நண்பர், தீர்வு என்னும் விளக்கேந்தி வருகிறார்.
நான் உனக்கொரு மெழுகுவர்த்தியாக இருப்பேன்
என்ற நம்பிக்கை எனக்குண்டு.
=========================
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!
=========================
நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்
பிறந்திருக்கிறாய்.
ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்
தேடிக் கொண்டிருக்கிறாய்?
இந்த உலகம்
உன் வெற்றிக் கதையைப் படிக்கக்
காத்துக்கொண்டிருக்கிறது.
=========================
பிறக்கும்போது தாயை அழவைக்கிறோம்
இறக்கும்போது எல்லோரையுமே அழவைக்கிறோம்
வாழும்போதாவது
எல்லோரிடமும் சிரிக்கப் பழகுவோம்.
=========================
வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும்
உப்பாக இருக்கலாம்.
ஆனால், அவைதான்
வாழ்வை இனிமையாக மாற்றும்.
=========================
நாம் அனைவரும் ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லை
ஆனால், நம் திறமையை வளர்த்துக்கொள்ள
ஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்.
- அப்துல்கலாம்.
=========================
ஓர் உண்மை:
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது,
நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்!


நீ துயரத்தில் இருக்கும்போது,
உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்!
=========================
ஒரு சிறிய கையசைப்பு, நம்மை அழவைக்கலாம்!
ஒரு சிறிய நகைச்சுவை, நம்மைச் சிரிக்கவைக்கலாம்!
ஒரு சிறிய அக்கறை, நம்மைக் காதலில் விழவைக்கலாம்!
ஒரு சிறிய தொடுதல், நம் உணர்வைக் கூர்மைப்படுத்தலாம்!
நானும் நம்புகிறேன் என் சிறிய பதிவு இதை,
உங்களுக்கு  என்னை நினைவுபடுத்தலாம்!

உங்கள் இதயத்தில் மகிழ்ச்சி
உங்கள் ஆன்மாவில் புத்துணர்வு
உங்கள் வாழ்வில் வெற்றி
உங்கள் முகத்தில் புன்னகை
உங்கள் இல்லத்தில் அன்பின் நறுமணம்
இவை அனைத்தும் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்!

8/17/2010

உங்களுக்கு ஏன் இவரைப்பற்றி கவலை ?


இந்த பதிவு எழுதும் போது எனக்கு இவர் நான் ரசிக்கும் நல்ல மனிதர்களில் இவரும் ஒருவர் என்பதனால்  தான்,ஆனால் இவரை பத்தி தவறாக நினைக்கும் வெட்டி பசங்களுக்கு பதிலுடன் இங்கு பதிவு செய்கிறேன்........

 

        ரஜினிபற்றிய ஒரு சாதாரண விடயமென்றாலே சிலர் எதிர்மறையான கருத்து சொல்லி தங்களை உலகிற்கு வெளிக்காட்டிக்கொள்வது ஒன்றும் இங்கு புதிதல்ல. இவர்கள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ள அல்லது பிரபலப்படுத்திக்கொள்ள அல்லது பொறாமையை, இயலாமையை வெளிக்கொணர்வதற்க்கு ரஜினியை விமர்சிப்பது கூட ரஜினிக்கு ஒருவகை பப்ளிசிட்டிதான். இதைதான் விவேக் எந்திரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் "ரஜினி ஹச் என்று தும்மினாலே பப்ளிசிட்டிதான்" என்று கூறினார். ரஜினியை விமர்சிக்கிறேன் பேர்வழி என்று கிளம்பியவர்கள் யாரையும் ரஜினி இதுவரை கண்டுகொண்டதே இல்லை, இவர்களால் ரஜினிக்கு இதுவரை எதுவும் ஆகியதில்லை. 60 வயது தாண்டியும் 35 வருடமாக ஒரு துறையில் முதல்வனாக ரஜினி இருக்கின்றாரென்றால் அவருக்கு  kidaitha viruthu

இப்போதெல்லாம் பல இடங்களில் எந்திரனையோ, ரஜினியையோ விமர்சிக்கும் சமுதாய புரட்சிக்காரர்களுக்கு (அப்பிடித்தான் நினைப்பு) இருக்கும் முக்கியமான கவலைகள் மற்றும் கேள்விகள்சில......


1) அடுத்த நேர சோற்றுக்கே வழியில்லாத நிலையில் 150 கோடி பட்ஜெட்டில் ஒரு படம் தேவையா?


2) 60 வயதில் ரஜினிக்கு ஹீரோ வேடம், ஜோடிக்கு ஐஸ்வர்யா, என்ன கொடுமையடா சாமி.


3) எந்திரன் என்னும் பிரம்மாண்டத்துக்கு முன்னால் லோ பட்ஜெட்டில் வெளிவரும் நல்ல படங்கள் காணாமல் போகப்போகின்றன.


4) ரஜினி மக்களை ஏமாற்றுகிறார், அவர் நடித்துவிட்டு கோடி கோடியாக பணத்தை கொண்டு போய்விடுவார், அவர் படத்தை பார்ப்பதால் மக்களுக்கு என்ன வந்துவிடப்போகிறது?
இவர்களது இந்தமாதிரியான லூசுத்தனமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் தேவையோ கட்டாயமோ ரஜினி ரசிகர்களாகிய எங்களுக்கில்லாவிட்டாலும் சாதாரண மக்களுக்கு இவர்களது கேள்விகளிலும் கவலைகளிலுமுள்ள மாயையை உடைக்க வேண்டியது அவசியமானது. அந்த வகையில் ....

அடுத்த நேர சோற்றுக்கே வழியில்லாத நிலையில் 150 கோடி பட்ஜெட்டில் ஒரு படம் தேவையா? என்ற கேள்வியை எடுத்துக்கொண்டால்..


இந்த கேள்வியே தவறானது, அடுத்த நேர சோற்றுக்கே வழியில்லாமல் ஒருவன் இருக்கும்போது 150 கோடி என்ன ஒரு கோடியில் படமெடுத்தாலே அது தேவை இல்லாததே. அப்படி பார்த்தால் பணத்தை போட்டு எந்த சினிமாவுமே எடுக்கக் கூடாது. சினிமா என்ன சினிமா; யாருமே பெரிய முதல்போட்டு எந்த தொழிலுமே செய்யக்கூடாது. இவர்களது பினாத்தல்ப்படி சாதாரண பெட்டிக்கடை வைத்திருப்பவனும் 1000 ரூபா முதலில்தான் தொழில் பண்ணனும், பெரிய மொத்தவியாபாரியும் 1000 ரூபா முதலில்த்தான் தொழில் பண்ணனும், நாளைக்கு பெட்டிக்கடை வைத்திருப்பவன் உழைப்பால் முன்னுக்குவந்து பெரியளவில் மொத்தவியாபாரம் செய்யவேண்டுமென்றாலும் 1000 ரூபா முதலில்த்தான் தொழில் ஆரம்பிக்கணும்.


ஒரு படத்தின் தேவையை பொறுத்துத்தான் அதனது பட்ஜெட் அமையும், அதை தீர்மானிப்பது இயக்குனர். போட்ட பணத்தை திருப்பி எடுக்க முடியுமா? முடியாதா என்கிற கவலை தயாரிப்பாளருக்கு? தயாநிதிமாறன் பணம் மக்கள் பணமாகவே (மறைமுகமான) இருக்கட்டும், அதை எந்திரனில் முதலிடாவிட்டால் அவர் வேறொரிடத்தில் முதலிடத்தான் போகிறார், இதற்க்கு முன்னரும் எத்தனையோ இடங்களில் முதலிட்டுள்ளார், இல்லாவிடால் 20 இலட்சத்துக்கு ஆரம்பித்த சண் நேர்வேர்க்கின் இன்றைய பெறுமதியை 8000 கோடியாக எப்படி மாற்றியிருக்கமுடியும்? அப்பவெல்லாம் எங்க இருந்தாங்க இந்த புரட்சிக்காரங்கள் எல்லாம்? ரஜினி படத்துக்கு தயாநிதிமாறன் பணம் போடும்போதுதான் ஒருநேர சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் மக்கள் கண்ணுக்கு தெரிகிறார்களா? புதுமுக இயக்குனர்களும், நடிகர்களும் புதிய முயற்சிகளை செய்தால் வரவேற்கும் இந்த புரட்சிகரகூட்டம் எதற்க்காக ஷங்கரோ ரஜினியோ புதுமை செய்தால் வரவேற்கிறார்கள் இல்லை? புதியவர்களை பாராட்டினால் நல்லவர்கள்; பிரபலங்களை விமர்சித்தால் வல்லவர்கள், என்கிற தவறான சுயநல எண்ணம்தான் காரணம்.

அப்புறம் 60 வயதில் ரஜினிக்கு ஹீரோ வேடம், ஜோடிக்கு ஐஸ்வர்யா, என்ன கொடுமையடா சாமி? என்று காரணமே இல்லாமல் கவலைப்படுபவர்களே.....


முதலில் ஒரு விடயத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், 60 வயதில் ரஜினி நாயகனாக நடிக்கும் படங்களை உங்களையோ அல்லது மக்களையோ வந்து பார்க்கும்படி ரஜினி கட்டாயப்படுத்தவில்லை. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பார்க்காமல் விடுங்கள், அதே போல மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்கள் பார்க்காமல் விடுகிறார்கள். அதேபோல மக்கள் வரவேற்க்குமட்டும் ரஜினி விஞ்ஞானியாக என்ன கல்லூரி மாணவனாக கூட நடிப்பார். உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக ரஜினி நடிப்பதை நிறுத்தமுடியாது, ரஜினி எப்படி நடிப்பது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.


மக்களைவிட இந்த வெத்துவேட்டுகள் ஒன்றும் புத்திசாலிகள் இல்லை. எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்கள் இருக்கும்போதே ஸ்ரீதர், பாலச்சந்தரை வரவேற்ற மக்கள் தொடர்ந்து இன்றுவரை பாரதிராஜா, பாக்கியராஜ், மகேந்திரன், பாலுமகேந்திரா, மணிரத்தினம், பாலா, அமீர், வசந்தபாலன், சசிகுமார் என வித்தியாசங்கள் அனைத்தையும் வரவேற்க தவறவில்லை. அதே மக்களுக்கு 60 வயதில் நாயகனாக நடிக்கும் ரஜினியை வரவேற்பதா? இல்லையா? என்பதை இந்த கத்துக்குட்டிகள் சொல்லி தெரியவேண்டியதில்லை, மக்கள் எப்பவுமே புத்திசாலிகள்தான்.


அடேய் வெண்ணைகளா ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிப்பதற்கு அமிதாப், அபிசேக், ஜெயா பஜ்சன்களே ஒன்னும் சொல்லல, இதில உங்களுக்கு என்ன வந்திச்சு? பொறாமை..... (லைட்டா இல்ல,ரொம்பவுமே). அப்புறம் கண்ணுகளா 150 கோடி பட்ஜெட்டை தாங்கிறதுக்கு இந்தியாவிலேயே இந்த 60 வயசு இளைஞரால மட்டும்தான் முடியும்.


எந்திரன் என்னும் பிரம்மாண்டத்துக்கு முன்னால் லோ பட்ஜெட்டில் வெளிவரும் நல்ல படங்கள் காணாமல் போகப்போகின்றனவென லோ பட்ஜெட் படங்களுக்காக கவலைப்படும் சீர்திருத்தவாதிகளுக்கு(நினைப்புத்தான் பிழைப்பை கெடுக்கிறது).....


இவர்களுக்கு வணிக சினிமா இல்லாவிட்டால் வித்தியாசமான முயற்ச்சிகளுக்கு பணம் எப்படி கிடைக்குமென்கின்ற அடிப்படை சினிமா அறிவேயில்லையென்று கூறினால் அதில் தவறில்லை. கமர்சியல் படங்கள் கொடுக்கும் பணத்தில்த்தான் வித்தியாசமான முயற்ச்சிகளுக்கு பணம் கிடைக்கின்றது என்பதற்கு தற்போதைய உதாரணம் ஷாங்கர், பிரகாஷ்ராஜ் போன்றவர்கள்தான். இவர்கள் தயாரிக்கும் வித்தியாசமான சினிமாக்களுக்கான பணம் எங்கிருந்து பெறப்பட்டது? பெரும்பாலான வித்தியாசமான முயற்சிகளுக்கு ஆரம்பகாலம் முதல் இன்றுவரை பணத்தை போட்ட தயாரிப்பாளர்கள் வணிக சினிமாவோடு தொடர்புடையவர்களே.


இதிலே காமடி என்னவென்றால் பிரம்மாண்டத்துக்கு முன்னாடி லோ பட்ஜெட் காணாமல் போய்விடுமாம், அப்படிபார்த்தால் தசாவதாரம் என்ற பிரம்மாண்டத்திற்கு முன்னால் சுப்ரமணியபுரம் காணாமலா போனது? சுப்ரமணியபுரம் வரிசையில் வெளிவந்த பசங்க, ரேணிகுண்டா, அங்காடித்தெரு, களவாணி போன்ற லோ பட்ஜெட்டில் உருவாக்கி வணிக ரீதியாகவும் சிறந்த படைப்புக்களாகவும் பேசப்பட்ட படங்கள் சிவாஜி, தசாவதாரம் போன்ற பிரம்மாண்டங்களினால் காணமலா போயின?


ரஜினி மக்களை ஏமாற்றுகிறார், அவர் நடித்துவிட்டு கோடி கோடியாக பணத்தை கொண்டு போய்விடுவார், அவர் படத்தை பார்ப்பதால் மக்களுக்கு என்ன வந்துவிடப்போகிறது? என்கின்ற சமுதாய விளிப்பு(ண்ணாக்கு)ணர்வு கேள்வியைகேட்பவர்கள்....


முதலில் ஒரு கேள்விகளுக்கு பதிலை அளிக்கட்டும். ஒரு வேலையில் புதிதாக சேர்ந்ததில் இருந்து ஓய்வு பெறும் காலம்வரை கிடைக்கும் ஊதிய உயர்வை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பார்களா? ரஜினி என்ன எடுத்த எடுப்பிலேயே கோடிகளில் பணம் கேட்கிறாரா? கையில் ஒன்றுமே இல்லாமல் சினிமாவை தேடி சென்னை வந்த ரஜினி சினிமாவில் முதல் காட்சியில் தலைகாட்டும் வரை பட்டபாடு இவர்களுக்கு தெரியுமா? அதன் பின்னர் 35 வருட கடினஉழைப்பு, அதில் ஏற்ப்பட்ட அவமானங்கள், தோல்விகள், விரக்தி, மனநிலை பாதிப்பு என படிப்படியாக முன்னேறிய ரஜினி 35 வருட சினிமா வாழ்க்கயில் ஆயிரங்கள், லட்சங்கள், கடந்த பின்னர்தான் கோடிகளை தொட்டார்.


தனக்கு கிடைக்கவேண்டிய நியாயமான தொகைதான் ரஜினி இதுவரை பெற்றிருக்கிறார், இல்லாவிட்டால் எதற்க்காக ரஜினிக்கு சம்பளம் கொடுத்து அவரை நடிக்கவைக்க தயாரிப்ப்பாளர்கள் காத்திருக்கிறார்கள்? 1000 ரூபாய் லாபம் வரும்போது 100 ரூபாய் ஊதியம் பெற்ற ஒருவன் 100,000 ரூபாய் லாபமாக வரும்போது 10,000 ரூபாய் ஊதியம் பெறுவது குற்றமா? இதில் மக்கள் பணம் எங்கிருந்து கொள்ளை அடிக்கப்படுகின்றது? தங்கள் மூன்றுமணிநேர பொழுது போக்கிற்காக, மகிழ்ச்சிக்காக, ரிலாக்சிற்காக மக்கள் கொடுக்கும் பணத்தின் ஒருபகுதிதான் நடிகர்களுக்கு கிடைக்கின்றது. அதிகளவு மக்கள் ரஜினி படங்களை விரும்பி பார்ப்பதால் ரஜினிக்கு அந்த தொகை அதிகமாக கிடைக்கின்றது. இதில் என்ன தவறு இருக்கின்றது என்றுதான் புரியவில்லை!


சுறா  திரைப்படத்தில் விஜய் 'பப்ளிசிட்டி' தேடுவதுபோல இவர்கள் தங்களுக்கு தாங்களே பப்ளிசிட்டி தேடுகிறார்கள்  என்பது தெரிந்தாலும் சில நேரங்களில் கோபம் வருவதை தவிர்க்கமுடியாமல் இருக்கும். இவர்களை சமாளிப்பதற்கான வழி  ரஜினி சொன்ன தவளைகள் மலையேறும் கதையில் உள்ளது.  அதிலே தலைவர் சொன்னது போல நாங்களும் காது கேட்காதவர்கள்போல இருந்தால் இந்த தெருநாய்கள் குரைப்பது எங்கள் காதில் விழாமல் இருக்கும்.(உண்மையான தெரு நாய்களே " இந்தப் போலி சந்தர்ப்பவாத புரட்சியாளர்களுக்கு உங்கள் பெயரை உவமானமாக பயன்படுத்தி உங்களை அவமானப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்").

குறிப்பு : நான் அவரின் விசுவாசி அல்ல , நான் மதிக்கும் நல்ல மனிதர்களை இவரும் ஒருவர் என்பதனால் இந்த பதிவு என்பதை மீண்டும் நினைவு கொள்கிறேன் .

8/16/2010

என் கற்பனை மொழி

என்னவள் பேசும் "தமிழ்" அமுத மொழி..!
எப்போதாவது பேசும் "ஆங்கிலம்" கணினி மொழி..!

என்னிடம் பேசுவது "மௌன மொழி"..!
இருவரும் பேசுவது "காதல் மொழி"..!

உச்சரித்துப் பேசினால் "கனிமொழி"..!
உதடுகளால் பேசினால் "தேன்மொழி"..!


எதிர்கால உலகத்தில் பேசப்படும் "முதல் மொழி"
என்னவளின் "பழம்பெரும் செம்மொழி"

அதுவே அனைவருக்கும் "செந்தமிழ் மொழி"..!

8/15/2010

என் நாட்டுக்கு என்ன செய்தேன் ?
மூன்று பக்கங்கள் இந்திய
அரசியலை சாடி எழுதியிருந்ததை
பற்றி கிழித்துபோட்டுவிட்டேன்

நாட்டில் ஒரு  ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு
வெட்டியாய் எழுதி கிழிக்கமட்டும்தான்
எனக்கு தெரிந்திருக்கிறது


இலக்கணம் மீறாமல் காதல் கவிதைகள்
எழுத தெரிந்த எனக்கு

ஒருநிமிடம் எந்த பக்கங்களையும்
புரட்டாமல் இந்திய தேசிய கீதத்தை
தப்பில்லாமல் எழுதவோ சொல்லவோ
தெரிந்திருக்கவில்லை

வெட்கி கூசி கூனி குருகிப்போனேன்
எனக்கென்ன தகுதியிருக்கிறது

இது எத்தனையாவது சுதந்திர தினம்
என்று கூட தெரிந்திருக்கவில்லை

ஆனால் வாய் கிழிய சுதந்திரத்தை
வீணடிப்பவர்களைப்பற்றி
வீணாய் பேசியிருக்கிறேன்...

இந்தியாவில் பசுமை புரட்சி
வேண்டும் என்று காகிதங்களில்
 பக்கம் பக்கமாய் எழுதியிருக்கிறேன்


அந்த பசுமை காணாமல்
போவது காகிதத்தில்தான்
என்றுகூட தெரியாமல்..

இந்த சுதந்திரம் கிடைத்திருக்காவிடின்
என்னால் இப்படி சுதந்திரமாக
எதையும் எழுத முடிந்திருக்காது


இந்தியாவைச்சாடி எழுத
முன்னூற்றி அறுபத்தி நான்கு
நாட்கள் இருந்த பொழுதும்
மீதியிருக்கும் இன்று ஒரு நாள் மட்டுமேனும்
இந்தியாவை போற்றி பாடுகிறேன்

எத்தனை உயிர்கள் இழந்து
பெற்ற என் தாய் நாட்டின்
சுதந்திரத்தை எல்லை சென்று
காக்கமுடியாவிடினும்
போற்றுகிறேன் வாழ்க இந்தியா


வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்...!

8/13/2010

மறத்தமிழச்சிதன்மானம் காக்க
அன்றொரு நாள்
முறத்தை தூக்கினாள்
மறத்தமிழச்சி

இன்றோ
தமிழ்மானம் காக்க
துப்பாக்கியை தூக்குகிறாள்
மறத்தமிழச்சி..


இளமை, கனவு,
குடும்பம்,நாடு,
பாசம்,சிரிப்பு,
சந்தோசம்,காதல்,
அழகு,உறக்கம்,
நிம்மதி,நாடு,
மக்கள்,


அனைத்தும்
இழந்திவள்..


பெற்ற விருது இந்த ஏகே 47...


பிறந்தோம் !வாழ்ந்தோம்!!
என்றில்லாமல்
வாழப்பிறந்தவள்...

8/11/2010

நான் நினைப்ப தெல்லாம்
கவிதை ஆவதில்லை !
நான் வடித்த கவிதை
நம்பும்படி இல்லை!
நான் நினைத்த மாதிரி
அமைவ தில்லை!


சமுகத்தின் சல்லிவேர்களை
சாடாமல் போனாலும்
ஆணிவேர்களை ஆட்டாமல்
விட்ட தில்லை!


என் கவிதை ஆசிட்
பட்டு பட்டு
பட்டுப் போன மரங்கள்
பல பல !


சமுக அவலங்களை சாடி
கத்தி இன்றி
இரத்தமின்றி சுத்தமாய்
அறுவை சிகிச்சை செய்வன
என் கவிதைகள்!


சாகியம் பேசும் சமுகத்தில்
சதி செய்யும் உலகில்
கால் ஊன்றி
சாதி சாதி சாதியென
சாதனை படைக்கும்
சாகா வரம் பெற்றவை
என் கவிதைகள்!


சிந்தினை தூண்டி விட்டு
சின்ன இதயத்தில்
மனிதநேயம் வளர்க்கும்
மகா கவிதைகள்
இறைமை தன்மை பெற்று
இன்றும் இயங்கிகொண்டிருப்பவை!

எழுதிய நாள் : 16.07.2008

8/10/2010

நம் முகம் இப்படியா?

கவிதை ஒண்ணு எழுதலாம்னு நினைச்சேங்க.. சரி எழுதறது தான் எழுதறோம்.. அதையே என் தோழி ஒருவர் அழைப்பிற்கிணங்க "கவிதை சுரங்கத்தில் " போடலாம்னு... எழுதி போட்டாச்சு..

அப்படி என்ன தான் எழுதினேன்னு நீங்க பார்க்க வேண்டாமா??
வளர்ந்து வரும் "கவிதை சுரங்கத்தில் ", சென்ற வாரம், கொடுக்கப்பட்ட தலைப்பு "நம் முகம்"... அதையே முதல் வார்த்தையாய் கொண்டு கவிதை எழுத வேண்டும்..!!
அத்தலைப்பில் நான் சமர்ப்பித்த கவிதை.. இங்கே உங்களுக்காக...!!


உன் எண்ணத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி..
உன் கோபத்தை காட்டினால் குரூரனாவாய்..
எல்லாவற்றுக்கும் சிரித்தாய் என்றால்
ஏமாளி ஆகி போவாய்...


எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் இருந்தால்
எமட்டன் ஆவாய்..
எரிச்சலைக் காட்டினால்
எதிரி ஆகிப் போவாய்..


எதிர்மறை உணர்ச்சி காட்டினால்..
எள்ளலுக்கு ஆளாகி போவாய்.. சரி பிறகு
எப்படித்தான் என் முகத்தை வைத்திருப்பது?


எழிலாக ஒரு சிரிப்பு..
ஒயிலாக ஒரு நகைப்பு..
சாந்தமாய் ஒரு பார்வை..
சக்தி தருவதாய் ஒரு முறுவல்..
சங்கேதமாய் ஒரு சேதி..
சாஸ்வதமாய் ஒரு புன்னகை..


இத்தனையும் உன் முகத்தில்
இயல்பாய் வருமென்றால் உன்னை போல்
இவ்வுலகில் அதிர்ஷ்டஷாலி யாருளரோ??8/09/2010

படித்ததில் பிடித்தது "புத்தகம்"


புத்தகம் புதுமை
செய்யும்!
புரட்டுவது பக்கத்தை
அல்ல மனத்தை !


பத்திரபடுத்து புத்தகத்தை
பத்துமாதம் சுமந்து
பெற்ற உன்னை
பத்திரமாத்து தங்கமாக்கும்!


புத்தகம் திறககும்
போதெல்லாம்...
திறக்கும் உன்
மனக் கதவு!


கடலெனக் கிடக்கும்
கிடைக்கும் புத்தகத்தை
கிடக்கும் மிடமெல்லாம்
இடைவிடாது படி
பிடித்த நேரமெல்லாம்
படி உன் நேரம் சரியாகும்!
பரப்பிக் கிடக்கும்
புத்தகம் விரிக்கும் அறிவை!
உறங்கி கிடக்கும்
உயர்வை உசிப்பிவிடும்!


புத்தகம் ஆக்கும்
புத்தனாய் உன்னை!
ஏற்றம் கொடுக்கும்
மனச் சீற்றம் குறைக்கும்!
மற்றம் தந்து
மனிதனாக்கும்!


மனிதனை மாமனிதனாக்கும்!
மறுக்காமல் மறக்காமல்
தேடித் தேடி பிடி படி !
புத்தகம் புத்துயிர்
தரும் தவறாமல் படி !

நன்றி : சரவணன்

8/07/2010

மாற்றுவோம் மரணத்தை ...........

மரணம்
மனு போட்டாலும் வராது !
மறுத்தாலும் விடாது !


மரணிக்கும் வரை
வாழ்வை வசமாக்கு!
மரணிக்கும் போது
வாழ்வு வரலாறு ஆகும்!


இவ்வாண்டின் மரணம்
வருமாண்டின்  விடியலுக்கு
விட்டுச்செல்லும் வெளிச்சம் !


தனி மனித மரணம்
தன் சந்ததிக்கு
கற்றுத்தரும் பாடம்
ஒவ்வெரு நாளையும்
மரணமின்றி விடியலாக்கும்!


மரணத்தை கண்டு
மிரளாமல் மரணத்தின் கைகளில்
முத்தமிட்டுவாழ்வை வளமாக்குவோம்!

8/06/2010

மானிட உலகில் கவலை இல்லையா ?

             உலகில் கவலை இல்லாத மனிதர்கள் என்று யாரேனும் இருக்கிறார்கள்.
அவரவர்களின் வயதுக்கு தகுந்து, அவரவர்களின் வசதி, வாய்ப்புக்கு தகுந்து சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ கவலைகள் உள்ளன. கவலைகளின் இன்னொரு பக்கத்தை பிரச்சனைகள் என்று சொல்லலாமா... அல்லது எல்லா கவலைகளும், பிரச்சனை என்கிற விதையில் இருந்து தான் முளைக்கிறது என்று சொல்லலாம்மா...


எது எப்படி என்றாலும்- கவலைகள் இன்றி மனிதர்கள் இல்லை. கவலைகள் அல்லது பிரச்சனைகள் இரண்டு வகை படுகின்றன. ஒன்று அவரவர்களுக்கு இயற்கையாக ஏற்படுவது. இதை நாம் ஏற்று கொண்டு தான், சகித்து கொண்டு தான் ஆக வேண்டும். மற்றொன்று பிறரால் நமக்கு ஏற்படுவது அல்லது ஏற்படுத்தப்படுவது. "பிறரின் வம்பு தும்புக்கு போகாதவனுக்கும்" பிரச்சனைகள் ஏற்படுகின்றன. முற்றும் துறந்தவனுக்கும் கவலைகள் இருக்கவே செய்கின்றன.

மனித நாகரீகம் வளர வளர கவலைகளுக்கான அளவுகளும் அதிகரித்து கொண்டு இருப்பதாகவே தோன்றுகிறது. பயம், சில நேரம் கவலையாக வடிவம் எடுக்கிறது. தாயின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையும், பூமியின் வயிற்றுக்குள் இருக்கும் பிணமும் தான் கவலையற்றவர்கள் என்று சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் அதுவும் தவறாகபடுகிறது. வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்காக தாய் கவலைப்படுகிறாள். குழந்தைக்கும் சேர்த்து தாய் கவலைப்படுகிறாள். இறந்து போனவர், இறந்து போய் தன் கவலைகளை மறந்தாலும், பிரச்சனை இல்லாமல் அவர் போய் இருந்தால் தான், இருப்பவர்களுக்கு கவலை இல்லை... இல்லையேல் இல்லாதவர்க்கும் சேர்த்து இருப்பவர்கள் கவலைப்பட வேண்டியது தான்.


பள்ளிக்கு செல்ல துவங்கும் நாட்களிலேயே, கவலை பட துவங்கும் காலமும் துவங்குகிறது. மிக மிக இயல்பாக, சிக்கலின்றி இருக்க வேண்டிய வாழ்க்கையை, நமது ஆசைகள் தான் கவலைக்குரியதாக்கி விடுகிறதோ... எது தேவை... எது தேவையில்லை என்பதை முடிவு செய்யாமலே ஒன்றின் மீது ஆசைப்படுகிறோம். அதுவே கவலைக்குகாரணமாகிறது.

கூட்ட வேண்டிய இடத்தில் கழிப்பதாலும், பெருக்க வேண்டிய இடத்தில் வகுப்பதாலும் பிரச்சனையாகிறது. அதுவே கவலைக்கு காரணமாகிறது.
அறிவாளியாக இல்லையே என்பது முட்டாளின் கவலை. அறிவாளிகள் எல்லாம் கவலையற்றவர்களாக இருக்கிறார்களா... ஏழைக்கு பணக்காரனாக நாம் இல்லையே என்று கவலை. பணம் படைத்தவர்கள் எல்லாம் கவலையற்றவர்களாக இருக்கிறார்களா... சொந்த வீடு வேண்டும் என்பதே வாடகை வீட்டுகாரனின் கவலையாக உள்ளது. சொந்த வீடு வைத்துள்ளவர்கள் எல்லாம் கவலையற்றவர்களா.ஒன்று கிடைத்தால் நம் கவலை தீரும் என்று நினைக்கிறோம். அந்த ஒன்று கிடைத்த பின்னால், வேறொன்றுக்காக கவலைப் படுகிறோம். அதிகமாய் சிந்திப்பவர்கள் தான் அதிகமாய் கவலைப்படுபவர்கள்.


நம் சிந்தனைகள்- நம் கவலைகள் தீருவதற்கு தான் இருக்க வேண்டுமே ஒழிய - நம் கவலைகளை அதிகப் படுத்த இருக்கக் கூடாது. கவலைகள் தீர வழி உள்ளதா... உள்ளது. தலைவரு படம் தீபாவளிக்கு வரலையே என்பது சிலர் கவலை... அவள் என்ன விரும்பலயே என்பது சிலர் கவலை,.. இந்தியா கிரிக்கெட்ல தோத்துட்டே இருக்கே என்பது சிலர் கவலை... யோசிக்கையில் நாம் கவலைகளாக நினைக்கிற பல விஷயங்கள் கவலைகளே கிடையாது.

பலவீனமான மனம் படைத்தவர்க்கு காற்றுல மரம் அசைந்தா கூட பயம்
தான். ஆனால் சிலருக்கோ மரமே சாயஞ்சு விழுந்தாலும் பயம் ஏற்படுறதில்லை. ஏன் இந்த வித்தியாசம். எல்லா கவலைகளுக்குமே முடிவு என்பது ஒன்று உண்டு. அந்த முடிவை யார் வேணுமானாலும் ஊகிக்கலாம். நல்லா யோசிங்க. எந்த கவலைக்கும், எந்த பிரச்சனைக்கும் மூணே மூணு முடிவு தான். ஒரு விளையாட்டு போட்டிய எடுங்க. அதற்கும் மூணு முடிவு தான். வெற்றி, தோல்வி அல்லது ஆட்டம் கைவிடப்பட்டது(டிரா ன்னு கூட வைச்சுக்கலாம்).

இதே போல் தான் ஒரு கவலைக்கும் மூன்று முடிவு. கவலை தீரும் அல்லது கவலை தீராது அல்லது அந்த கவலை பற்றின ப்ரக்ஜை நம்மை விட்டு போய் விடும். ஒரு அடிதடில இறங்க வேண்டிய சூழல் வருது. அதற்கும் மூணு முடிவு இருக்கு. ஒண்ணு அடிப்போம் இல்ல அடி வாங்குவோம் இல்ல யாராவது சண்டைய விலக்கி விடுவாங்க. அவ்வளவு தான்.


ஒரு மனிதரிடம் உதவி கேட்டு போறோம். செய்வாரா, மாட்டாரா என்பது நம் கவலை. மூணாவதா அங்கயும் ஒரு விஷயம் இருக்கு."பார்ப்போம்" என்றோ"யோசிச்சு சொல்றேன் " என்றோ சொல்லலாம் இல்லையா. இவ்வளவு தான் எல்லாமே. ஆக கவலைகளின் கடைசி பக்கத்தை உங்களால் யூகிக்க முடிந்தால், உங்களால் எந்த விஷயத்திற்குமே கவலைப்பட தோன்றாது. கவலை என்கிற வார்த்தை உங்கள் அகராதியில் இருக்காது. இருந்தால் கூட நீக்கி விடலாம்

குறிப்பு : இதைப்பற்றி நான் எழுதி கொண்டு இருக்கும் போது, என் நண்பர் மனித உலகில் இதுதான்  கவலை என நினைக்காமல் நாம் சரியாக இருந்தால்  
கவலை இல்லை என்கிறார். உங்கள் எண்ணம் பதிவு செய்யவும் ....


8/05/2010

“நட்பிலும் விஷமும் உண்டு”

ஒரு மனிதன் உயர்வதற்கும் தாழ்வதற்கும் நட்பு ஒரு காரணம் ஆகின்றது.


நட்பு மிக சிறந்த பண்பு ஆனால் அதிலும் நாம் சிறிது கவனம் செலுத்த வேண்டும் . திருக்குறள் மிக தெளிவாக நட்பை பற்றி சொல்லிவிட்டது .


நகுதல் பொருட்டன்று நட்டல்: மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு


நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று; நண்பர் நெறி கடந்து சொல்லும்போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும். 784


நட்பு என்ற உயர்ந்த தத்துவத்தை நாம் இன்று சரியாக புரிந்து
கொள்ள வில்லை, இதன் காரணமாக நட்பினால் நாம் இன்று பல துன்பங்களுக்கும் ஆளாகிறோம் . அதை பற்றி இப்போது பார்ப்போம்.


மிக சிறந்த நட்பிற்கு பலர் உதாரணமாக உள்ளனர். நமது இதிகாசங்கள் நட்பை பற்றி அற்புதமாக கூறியுள்ளன. கர்ணன் தனக்கு திறமை இருந்தும் அவன் சத்ரியன் இல்லை என்று கூறி அதை வெளிகாட்ட விடாமல் தடுத்த பலருக்கு மத்தியில் துரியோதனன் அவனுக்கு ஒரு நாட்டை பரிசளித்து ஒரு அரசன் அக்கி அந்த போட்டியில் கலந்திட செய்தான். அதற்கு பிறகும் துரியோதனன் பல முறை தன் நட்பை கர்ணனுக்கு அற்புதமான முறையில் கட்டியுள்ளான். மகாபாரதத்தில் இவர்கள் நட்பு மிக அற்புதமாக சொல்லப்பட்டிருக்கிறது. இறுதியில் பாண்டவர்கள் தங்கள் சகோதர்கள் என்று தெரிந்த பிறகு நட்பிற்காக தீமையின் பக்கம் போரிடினான் தன் உயிரை விட்டான், அனால் அவனுக்கு தான் பகவான் கிருஷ்னர் விஸ்வரூபத்தை முதலில் காட்டினர்.


இன்று சமுகத்தில் மிக சிறந்து விளங்குபவர்கள் பலர் தங்கள் நண்பனின் உதவியால் தான் இவ்வாறு வந்தோம் என்பதை மறக்காமல் நினைவு கூறும்போது நட்பின் வலிமை நமக்கு அற்புதமாக புரியும்.இதை திரை துறையில் நீங்கள் அதிமாக பார்க்கலாம்.


இன்று உலகம் முழுவதிலும் உள்ள கணினிகளை இயக்கும் சிறந்த software மென்பொருளான விண்டோஸ் என்னும் ஆபரேடிங் சிஸ்டம் வடிவமைத்த மைக்ரோசாப்ட் (Microsoft) என்னும் உலகின் முன்னணி நிறுவனத்தின் ஸ்தாபகர் ஆன பில்கேட்ஸ் தன்னுடைய நண்பனான பால் ஆலென் ஆரம்ப காலத்தில் செய்த உதவிகளால் தான் உலகின் தலை சிறந்த மென்பொருள் (software) கம்பெனியை உருவாக்க முடிந்தது.

 இது தான் நட்பின் வலிமை.

இவ்வாறு நட்பினால் உயர்ந்த எத்தனயோபேரை நாம் உதாரணம் சொல்ல முடியும். ஆனால் அவை அனைத்தையும் நீங்கள் உற்று பார்த்தல் உண்மையான நட்பு என்றால் என்ன என்பது புரியும். இந்த திருக்குறளை படியுங்கள்


அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.


அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவு வந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும். 787


நண்பன் என்பவன் உங்களை கேடான பாதைக்கு எப்போதும் அழைத்து செல்ல மாட்டான். நீங்கள் அவனை எதாவது கேடான செயல் செயலாம் என்று சொல்லி அழைத்தாலும் அவன் உங்களுக்கு அவ்வாறு செய்ய கூடாது என்று அறிவுரை வழங்கி நல்வழி படுத்துவான். இவ்வாறு இன்றி நீங்கள் விரும்பாவிட்டாலும் கேடான பாதைக்கு அழைத்து செல்லும் ஒருவன் ஒரு காலமும் உங்கள் நண்பனாக இருக்க முடியாது.


பத்தாம் வகுப்பில் நன்றாக மதிப்பெண் எடுத்த ஒரு மாணவன் பனிரெண்டாம் வகுப்பில் மிக மோசமாக மதிப்பெண் எடுத்து சில சமயம் தோல்வி அடைவதையும் நாம் இப்போது காண்கின்றோம். இதற்கு தொண்ணூறு சதவிதம் காரணம் மோசமான நட்பாகத்தான் இருக்கும்.  எனவே பல மாணவர்கள் கூடா நட்பினால் தங்கள் வாழ்கையை இழக்கின்றனர். இரண்டு வருட தவறான நட்பு ஒரு நல்ல மாணவனின் முழு எதிர்காலத்தையும் 
வீனாகி  விடும்.

உண்மையான நண்பன் யார் என்பதை நீங்கள் அடையாளம் கண்டு கொள்வது எளிது. சிரிக்கும் பொது மட்டும் உடன் இருக்காமல் நீங்கள் அழும பொது ஆறுதல் கூறும் ஒருவனே உண்மையான நண்பன். ஒரு அழகிய ஆங்கில வழி சொல்லை பாருங்கள்


"A real friend is one who walks in when the rest of the world walks out."


அதாவது உலகம் உங்களை விட்டு விலகும் பொது எவன் ஒருவன் உங்களை விலகாமல் இருக்கிறானோ அவனே உண்மையான நண்பன்.


அரிஸ்டாடில் என்னும் கிரேக்க தத்துவ ஞானி நட்பை பற்றி ஒற்றை வரியில் சொல்லிவிட்டார், அது என்ன தெரியுமா?.


“துன்பங்களின் பொது பொய்யான நண்பர்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்”.


கார் என்னும் ஊர்தியை கண்டுபிடித்த ஹென்றி போர்ட் இவ்வாறு நட்பை பற்றி அழகாக கூறியுள்ளார்


"My best friend is the one who brings out the best in me."


எனது சிறந்த நண்பன் யார் என்றால், எவன் என்னுள் உள்ள சிறந்தவைகளை வெளியில் கொண்டு வருகின்றனோ அவனே அவன்.


இப்போது நாம் எவ்வாறு நட்பை தவறாக புரிந்து கொள்வதால் அவதி உருகிறோம் என்று பார்ப்போம்.

நம்மை சுற்றி இருப்பவர்கள் அல்லது நமக்கு தெரிந்தவர்கள் எல்லாம் நம் நண்பர்கள் ஆகி விட மாட்டார்கள். இதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.


நம் அலுவலகத்தில் இருப்பவர்கள் பலர் இருக்கலாம் ஆனால் அதில் சிலர் மட்டும் தான் நம் நண்பர்களாக இருக்க முடியும். இங்கே மிக முக்கியமான ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன். இப்போதெல்லாம் முக்கியமாக மிக சிறந்த கல்லூரியில் படித்து software துறைக்கு வரும் நல்ல மாணவர்கள் பலர் மது பழக்கம் இன்றி வந்து பிறகு அலுவலகத்தில் இவைகளுக்கு அடிமை ஆகின்றனர், அதற்கு காரணம் அவர்கள் உடன் இருக்கும்  சிலரே. அதாவது இப்போது பார்ட்டிகளில் மட்டும் குடிப்பதை “social drinking” என்று பெயர் வைத்து அழைகின்றனர், ஆனால் மது ஒரு போதை பொருள் அதை ஒரு முறை நீங்கள் சுவைத்து விட்டால் அது தன் வேலையை காட்டிவிடும், எனவே நீங்கள் சிறிது காலம் பார்ட்டிகளில் மட்டும் குடிக்கும் சோசியல் ட்ரின்கர் என்று சொல்லி கொண்டாலும் பின் ஒரு காலத்தில் நீங்கள் ஒரு குடிகாரர் அக போகிறேர்கள் என்பது உண்மையே. கசப்பாக இருந்தாலும் இது தான் நிஜம். எனவே IT துறையில் உள்ள திறமை மிக்க நண்பர்களே உங்களை கெடுக்கும் நண்பன் பேச்சை கேட்டு சோசியல் ட்ரின்கிங் என்னும் கேடான பழக்கத்திற்கு அடிமை ஆகி விடாதீர்கள்.  நட்பின் பெயர் சொல்லி உங்களை மோசமானவன் ஆக்கும் எல்லாறையும் ஒதுக்கி விடுங்கள், இதன் மூலம் பிற்காலத்தில் நீங்கள் சந்திக்க போகும் பல இன்னல்களில் இருந்து விடுபடலாம்.


மோசமான நண்பர்கள் பட்டாளத்தை காண வேண்டுமா? மோசமான நட்பு எப்படி இருக்கும் என்று நேரில் காண வேண்டுமா? அது மிக எளிது.


 மது கடைகளில் ஒன்றாக கட்டிபிடித்து உருளும் நபர்களும், சூதாட்ட திடலில் அன்பாக பேசி பழகும் அனைவரும், போதைக்கு அடிமை ஆகி சுற்றி திரியும் பலரும், இவர்கள் வாழ்கையில் நட்பினால் கெட்டு போனவர்களே, இவர்கள் நட்பும் கூட அவர்களை போன்று இழிவனதே. இது போன்றவர்களை உங்கள் நண்பர்கள் என்று மறந்தும் கூட வெளியே சொல்லிவிடாதீர்கள், அது உங்களுக்கு மிக பெரிய அவமானத்தை பின்னல் கொண்டு வந்து விடும். இம்மாதிரி பழக்கம் உடையவர்கள் உங்கள் உடன் பனி புரிந்தால் அவர்களிடம் பேசுங்கள் பழகுங்கள், அதாவது சக உழியர் என்ற முறையில், ஆனால் அவர்களுடன் நட்பு வைக்காதீர்கள். அலுவலகம் முடிந்ததும் அவர்கள் யாரோ நீங்கள் யாரோ என்று இருங்கள்... இது உங்களுக்கு படிக்கும் பொது சற்று கடினம் அக தான் இருக்கும் ஆனால் காய்ச்சலுக்கு வலிக்கும் ஊசி போடுவது எவ்வளவு நன்மை தருமோ அது போல இந்த கடின பழக்கம் உங்களை கேடுகளில் இருந்து காப்பாற்றும்.


மிண்டும் சொல்கிறேன் தெரிந்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை மிக சரியாக புரிந்து கொள்ளுங்கள். உங்களை யாரிடமும் பழக வேண்டாம் என்று நான் சொல்லவில்லை ஆனால் உங்கள் நலம் விரும்புவோர்களையும், நல்லோர்களையும் நண்பர்களாக ஏற்று கொள்ளுங்கள், மீதம் உள்ள அனைவரையும் தெரிந்தவர்கள், உறவினர்கள், சக ஊழியர் என்று பாகுபடுத்துங்கள்.

(இது நான் பட்ட அவஸ்தைகள்)


இன்று நட்பு என்னும் சொல் மிக இழிவாக பயன் படுத்தப்படுவது வருத்தம் தருகின்றது. ஒரு நண்பன் என்னுடன் இருக்கும் பொது நட்பு பாராட்டும் ஒரு நல்ல நண்பன்  அடுத்த நண்பனிடம் சென்றவுடன் இவ்வளவு நாள் யாரை நண்பன் என்று சொன்னானோ அவனே தற்போது இருக்கும் நட்புடன் என்னை  
இழிவாக  பேசுகிறான். ஆக அவன் காட்டியது உண்மையான நட்பு அன்று , இது போன்று  பணத்துக்காக, சொத்துக்காக உங்களுடன் சுற்றும் இழிவானவர்களை உங்கள் நண்பர் என்று தலை மேல் தூக்கி வைத்து ஆடாதீர்கள் உங்கள் பணம், பதவி, சொத்து போகும் பொது அவர்களும் சென்றிருப்பார்கள், உண்மையை சொல்ல போனால் அவ்வாறான மோசமான நண்பனே கூட உங்கள் பணத்தை எல்லாம் சுருட்டி சென்றிருப்பான். ஆக உங்களிடம் பணம் அதிகம் இருந்தால் நீங்கள் உங்கள் நண்பர்களை தேர்வு செய்வதில் மிக மிக கவனமாக இருங்கள். பணத்துக்காக நண்பனையும் கொலை செய்யும் மோசமான ஆட்கள் இன்று நிறைய உண்டு. நண்பர்கள் தேர்வில் நிதானம் தேவை.


உலகின் தலை சிறந்த மனிதர்கள் உருவாவதற்கு நட்பு மிக முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது, ஆனால் அது நுற்றில் பத்து. மீதம் தொண்ணூறு சதவிதம் நட்பினால் என்ன ஆகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. மீண்டும் சொல்கிறேன் யாரையும் விலக்காதீர்கள் ஆனால் சரியான நண்பனை விட்டு விடாதீர்கள் அவனை அடையாளம் காண்பது எளிதல்ல.


எல்லோருமே எனக்கு நண்பர்கள் தான் என்பவனுக்கு உண்மையில் யாரும் நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியாது, அவனுக்கு எல்லாரையும் தெரியும் அவ்வளவுதான். நெருங்கிய நண்பர்கள் என்றால் ஒருவனுக்கு மிக சிலர் தான் இருக்க முடியும் காரணம் ஒரு நண்பன் என்ற நிலையில் இருந்து நெருங்கிய நண்பன் என்ற நிலை வர பல வருடங்கள் ஆகும், ஆனால் எல்லா துன்பங்கிளிலும் தோள்    கொடுத்து, இன்பங்களில் பங்குபெற்று, தோல்வியில் தேற்றி விட்டு, வெற்றியை உற்சாக படுத்தி, சந்தோஷத்தை அதிகபடுத்தும் ஒருவனே உண்மையான நெருங்கிய நண்பன் .


கல்லூரியில் கட் அடிக்க உதபுவனும், பரிட்சையில் பிட் அடிக்க உதபுவனும், பணம் வரும் பொது வருபவனும், பதவிக்காக உடன் இருபவனும் நண்பன் இல்லை.


உண்மையன் நட்பு உங்கள் வாழ்கையை உயர்த்தும், பொய் மற்றும் கூடா நட்பு உங்களை அளித்து விடும்.


நட்பினால் "அமுதம் உண்டு விஷமும் உண்டு" .

உங்கள் கவனத்துக்கு : இதை என் நண்பன் என்னை ஏமாற்றும்  போது நான்(ஏமாறும்) எழுதியது ,  என் நிலைமை  வர வேண்டாம் . 
தொடரும் ....