தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

3/19/2012

படைத்திருக்கிறேன் ! படைத்திருக்கிறேன் !

படைத்திருக்கிறேன் ! படைத்திருக்கிறேன் !


நான் படைத்த நாவல்கள் ஆயிரம் ,

கட்டு கட்டாய் எழுதிய

கவிதைகள் ஆயிரம் ,

மக்களை கவர தீட்டிய

வர்ணங்கள் ஆயிரம் ,

மக்கள் குறைகளை தீர்க்க எழுதிய

மனுக்கள் ஆயிரம் ,

மனுக்களின் நிலை கண்டு ஏற்ப்பட்ட

மனவருத்தங்கள் ஆயிரம் ,

அவர்களுக்கு ஏதாவது செய்ய முடியவில்லையே ?

என்ற

ஏக்கங்கள் ஆயிரம் ,

ஆனால்,

என்னால் ஏதும் செய்ய முடியாது !

ஏனெனில் நான் ஒரு

எழுதுகோல்.

3/15/2012

புதுமை பெண்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை


பண்பும் பயனும் அது.


மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே என்று கூறிய திருவள்ளுவர் வாழ்ந்த பூமி நம் தமிழ் நாடு.



இல்லறம் நல்லறமாக அமைய நம்முடைய தலைமுறையினர் நமக்கு கூறிய அறிவுரைகள் வழிகாட்டுதல்கள் ஏராளம். கூட்டு குடும்பதிற்கும், தாம்பத்திய வாழ்விற்கும் சிறந்த எடுத்துக்காட்டாய் தமிழர்கள் விளங்கினார்கள். அனால் இன்று உள்ள நிலைமை உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் 2010ம் ஆண்டில் கணவன் அல்லது மனைவி இழந்தோர், விவாகரத்து ஆனவர்கள் மற்றும் பிரிந்து வாழ்பவர்கள் பட்டியலில் 8.8 சதவீதத்துடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. வியப்பாக இருந்தாலும் இது தான் இன்றைய நிலவர உண்மை.




கணவன் மனைவியிடம் பரஸ்பர புரிந்துணர்வு, விட்டுகொடுக்கும் மனப்பான்மை, பொறுமை, அன்பான அனுசரணை, தாம்பத்திய உறவில் குறைவு ஆகியவை குறைந்ததால் தான் இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்பொழுது அதிகம் சம்பாத்தியம் கொண்ட தம்பதியர்கள் மிகுதியாக உள்ளனர். அவர்கள் குடும்பத்திற்காக அதிக நேரம் ஒதுக்காமல், வேலை மற்றும் பணம் சம்பாதிப்பதில் கூறியாக உள்ளனர்.இன்றைய இளைய சமுதாயம் காதல் என்ற பெயரில் பருவகால மோகத்தில் மயங்கி ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துகொள்ளாமல் திருமணம் செய்துகொண்ட பிறகு கருத்துவேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்கிறார்கள்.



பாரதி கண்ட புதுமை பெண்ணாக இன்று பல பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறி உள்ளனர். ஆனால் ஒரு சில பெண்கள் ஆண்களை அடக்கி ஆள்வது தான் புதுமை பெண்ணியத்தின் பொருள் என்று தவறாக நினைகிறார்கள். அவர்கள் ஆணவம், திமிருடுன் கணவனை கூட மதிப்பது இல்லை. பெண்கள் வீரமாக இருக்க வேண்டும் தங்களை காப்பதில்; கணவனை அடக்கி ஆள்வது தான் வீரம் என்று தவறாக நினைகிறார்கள். அது பெண்மை இல்லை. பெண்மை என்றால் அன்பு, அடக்கம், நாணம்,பொறுமை, அரவணைப்பு கலந்தது. குடும்பத்தை அன்புடன் நிதானமாக சாதுரியமாக அனைவரும் மகிழும்படி வழிநடத்தி செல்வதில் தான் புதுமை பெண் வெற்றி அடைகிறாள்.


ஆண்களும் பெண்களுக்கு உரிய அன்புடன் சமவாய்ப்பும், மதிப்பும், மரியாதையும் கொடுக்க வேண்டும். அப்போது தான் ஆண்கள் பெண்களிடம் உண்மையான பெண்மையை அவர்கள் உணர முடியும். குடும்பம் ஒரு கோவிலாகும், அதை இனிமையாக சிறப்பாக வழிநடத்தி கணவனும் மனைவியும் செல்லவேண்டும். அன்பான ஒற்றுமையான கட்டுக்கோப்பான குடும்பத்தை மேற்கொள்ள இருவரும் முயற்சிக்க வேண்டும். வாழ்கை ஒருமுறைதான் அதை அழகாக மாற்றுவது நம் கையில் உள்ளது.




3/10/2012

அம்மா-அப்பா


என்னை இந்த உலகுக்கு

அறிமுகபடுத்தியவள் . . .


என் முதல்தோழியும் கூட . . .


என் செல்ல குறும்புகளை

செல்லமாய் திட்டியபடி

ரசிப்பவள் . . .


இந்த உலகத்தில் ஒருவர் மட்டுமே

உனக்கு துணையென

இறைவன் சொன்னால்

இவள் தான்

என் இனிய துணை . . .

அம்மாவின் அன்புக்கு

இணை என்றுமே

உலகில் இல்லை . . .


என் முதல் Friend . . .

அப்பாவிற்கு ஒரு நாளும்

உதவியதில்லை . . .

ஆனாலும் என் எல்லா

தேவைகளையும் அறிந்து

நான் சொல்லும் முன்பே

செய்து தருபவர் . .

3/09/2012

வெற்றி உனக்கே !

இந்தியர்களின்


மானத்தைக் காப்பாற்ற

துணி மட்டும் போதாது

துணிவு வேண்டும்


நல்லடக்கம் வேண்டும்

நல்பழக்கம் வேண்டும்

நல்லதை கற்க வேண்டும்

தீ யதை ஒதுக்க வேண்டும்


துணிப்பட்டாலும் துணிந்து நில்

ஒதுக்கப்பட்டாலும் தொடர்ந்து செல்

நண்பா உனக்கொன்று தெரியுமா?


மனத்தில் துணிவோடு

நெஞ்சில் கனிவோடு

சிதறா சிந்தனையுடன்


நீ எதை செய்தாலும்

வெற்றி உனக்கே !

3/05/2012

பெண்ணே

எதிரி என்பவன் யார் ?
நிம்மதி கெடுப்பவன்
சந்தோசம் பறிப்பவன்- தானே எதிரி

அப்படியானால் - பெண்ணே


நீ என் எதிரியா ?

எல்லாம் முடிந்து விட்டது

போதையிளே ஊரிக்கொண்டு


பெண்ணை என்னி வாடிக்கொண்டு

செல்வம் தேடி ஓடிக்கொண்டு

பேர் புகழ் நாடிக்கொண்டு


கற்பனையில் மிதந்துக்கொண்டு

கேடு கெட்டு நாறிக்கொண்டு

எதிர்காலம் தேடி

நிகழ் காலம் துளைத்தேன்

கனவைத் நாடி

நினைவை துறந்தேன்

இல்லாததை நினைத்து

இருப்பதை மறந்தேன்


கனவு களைந்து

கண் விழித்துப் பார்க்கும் பொழுது

எல்லாம் முடிந்து விட்டது

3/01/2012

இறைவா !

இறைவா !


நீ தந்த வரம் - எனக்கு

இப்பொழுதுதான் உணர்கிறேன்


தமிழ்ப் பேசத்தெரிவதே

பெரியக் குடுப்பினை - ஆனால்

எனக்கு எழுதப் படிக்கவும்

அருள்ப் புரிந்தாயே


இந்தப் பிறவிக்கு இதுபோதும்

அடுத்த ஜென்மம்- இருந்தால்


மீண்டும் தமிழனாய் !

தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த- தமிழனாய்

என்னை படைத்துவிடு

இல்லையேல்..

என்னைப் படைக்காமல் இருந்துவிடு !