தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

6/29/2010

(என் பாரத தாய்க்கு) ஒரு துரோகம்....


பல்லாயிரம் ஆண்டுகளாய் நன்றாகதான் இருந்தாய்
ஏனிப்படி ஒரு தவறு செய்தாய் இயற்கைதாயே

ஆறாவது அறிவு படைத்தாய் உன் குழந்தைக்கு
அது படுத்தும் பாடு இப்போது நீ அறிவாய்.


கடைசி குழந்தையாய் மனிதன் நீ படைத்தாய்
சிறப்பாய் இருக்க பகுத்தறிவும் கொடுத்து வைத்தாய்

இன்று உனை அழிக்க உன் குழந்தை விளைய
பெற்றெடுத்த தாயே இப்போ நீ என் செய்வாய்.


மனிதன் காடழித்தான் கைதொழில் புரடசி என்றான்
கரியமில வாயு கொண்டு உன் காற்றுமண்டலம் நிரப்பினான்

தொழில்நுட்ப புரட்சி என்றான் விணவெளிக்கு சென்று வந்தான்
அந்த அறிவு கொண்டே அணுகுண்டும் படைத்து வைத்தான்.


அதிகமாக ஒரு ஆறறிவு நீ கொடுத்தாய்
முன்பிருந்த ஓர் அறிவை மனிதா நீ தொலைத்தாய்

காட்டுமிராண்டி என்று சொல்லி நீ பழிக்கிறாய்
நாட்டுமிராண்டி தனமாய் நீ வாழ்ந்து தொலைக்கிறாய்.


வயிற்று பசிக்கே விலங்குகள் உயிர் கொல்லும்
ஆசைப்பசி கொண்டு உன்னையே நீ கொல்லு

பிணந்தின்னும் விலங்குகள் எத்தனையோ மேல் மனிதா
மனம் கொன்று தின்று வாழும் மடையா உன்னை விட.

உன் இருப்போ சமநிலையில் இயறகைத்தாயே
அவனிருப்போ உன் நிலையில் அறிவாய் நீயே

பகுத்தறிவு கொண்டு உனை அழிக்கும் மனிதனையே
நீ அழித்து உனை நிலை நிறுத்த முயல்கிறாயே.

இதை அறிந்தும் நாங்கள் இன்னும் திருந்த மாட்டோம்
தாயே உனைப்பற்றி நாங்கள் என்றும் வருந்த மாட்டோம்

செவ்வாயில் வீடு கட்ட திட்டமிடுகிறோம்
இங்கிருக்க எதுவுமின்றி தொலையப்போகிறோம்.



{இந்த நடை ஒரு கவிதையிருந்து திருடினேன் நன்றாக இருக்கிறது உங்களுக்கு பிடித்திருந்தால் சந்தோசம் அந்த கவிதையை அடுத்த பதிவில் தருகிறேன்.)

குறிப்பு : இந்த கவிதையை சென்ற வாரம் தினமலர் நாளிதலுக்கு அனுப்பியுள்ளேன்  அட! சத்தியமாக நம்புங்க .....

உருவாக்கம் & இடுக்கை :அ.ராமநாதன்
















                 நீ வேண்டும்...!


இரவு நேரத்து பவுர்ணமி போல்
இதய தேசத்தில் நுழைந்தவளே...


ஒற்றை அன்றில் பறவை என்னை
உறவு கொடுத்து முழுமைபடுத்தியவளே...


வேஷங்கள் நிறைந்த இவ்வுலகில் என‌க்கு
வெளிச்ச புள்ளியாய் வ‌ந்த‌வ‌ளே.


குழந்தையாய் மாறும் கடைசி காலங்களிலும்
கூடி நீ என்னோடு தவழ வேண்டும்

உன் வாய் ஒழுகும் சிறு உண‌வெடுத்து
உன்னோடு உண்டு நான் மகிழவேண்டும்...


இருப்பதெல்லாம் ஒன்றும் வேண்டாம்
இல்லையென்ற உன் அன்பு வேண்டும்.

என் வாழ்க்கை முடியும் வரை
என்னில் பாதியாய் இல்லை
எனக்குள் முழுமையாகவே நீ வேண்டும்...!



                   மனித மனம்.....

மலருக்கு கோபம் வண்டுகள்
மலர்விட்டு மலர்தாவுகின்றனயென்று

வானத்துக்கு கோபம் மேகங்கள்
இடம் விட்டு இடம் மாறுகின்றனயென்று

ஆரறிவு படைத்த மனிதனே
மனம்விட்டு மனம் மாறுகையில்

பாவம்
மலர்களும் மேகம்களும்
என்னதான் செய்ய முடியும்...!
பள்ளிநாட்கள்


விட்டுச்சென்ற
பள்ளி நாட்களை
எண்ணியென்னி
நித்தமும் விடுகின்ற
என் ஏக்கபெருமூச்சுகளை
மொத்தமாய் சேர்த்தெடுத்தால்
பெரும்புயலாய்மாரி
இந்நாடே அழிந்திருக்கும்.


ஆயிரம்வருடங்கள்
அழுதுதவமிருந்தாலும்
அந்த நாட்களில்
ஒரு நிமிடம் கூட
கிடைக்கப்போவதில்லை....
ஓய்வு நேரங்களில்லை
அரட்டைவாத்தைகளால்
அலங்கரித்த நாட்களவை....
எங்கள் சோகங்களை
சொல்லிச்சொல்லி
பங்கிட்டுக்கொண்ட நாட்கள்.

பாடங்களுக்கு மட்டும்
கூடிய நாட்களல்ல
பாசங்களையும்
பரிமாரிக்கொண்ட
பண்பின நாட்களது.
பாடங்களுக்கு மட்டும்
இது மலரும் நினைவுகள் தொடரும்

இடுக்கை :அ.ராமநாதன் 
                   காதல்
பனித்துளிபோல் தூய்மையானது
விஷத்துளிபோல் ஆபத்தானது...
தென்றலைப் போல் இதமானது
புயலைப்போல் கொடுமையானது....


          உனக்காக மட்டும்.....


என் உணர்வில் என்றென்றும்
உன் நினைவே
என் உயிரில் என்றென்றும்
உன் உருவமே
என் விழிகளில் என்றென்றும்
உன் முகமே
என் உச்சரிப்பில் என்றென்றும்
உன் குரலே
என் மூச்சில் என்றென்றும்
உன் சுவாசமே
எத்தனை ஆயிரம் உறவுகள்
என்னுடனிருந்தும்
என் உயிர் தேடும்
ஒரே உறவாக
உன்னை மட்டுமே காண்கிறேன்
நான் என்றும் உன்னையே
நினைத்துக்கொண்டிருக்கிறேன்
உன்னை நினைப்பதற்காக மட்டுமே
நான் இன்றும் இருக்கிறேன்
இல்லை என்றால்
என்றோ இறந்திருப்பேன்...!


       அது மட்டும்தான் நாம்

பண்பும் பணிவும்
நம்மை நல்லவனாக்கும்
அடக்கமும் ஒழுக்கமும்
நம்மை சிறந்தவனாக்கும்
உண்மையும் உழைப்பும்
நம்மை உயர்ந்தவனாக்கும்
ஆர்வமும் முயற்சியும்
நம்மை வெற்றியாளனாக்கும்
திறமையும் அறிவும்
நம்மை சாதனையாளனாக்கும்
ஆனால்
அன்பும் கருணையும்
நம்மை மனிதனாக்கும்....!


 இடுக்கை :அ.ராமநாதன்

6/28/2010

ராவணன் - என் பார்வையில்



ராவணன் திரைப்படத்தின் முதல் காட்சியை நேற்று கே ஜி  திரையரங்கில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

வழமையான முதல் நாள் படம் பார்க்கும் கூட்டம்.

பரபரவென ஆரம்பிக்கும் ஆரம்ப காட்சிகள்.. எதுவித ஆர்ப்பட்டமும் இல்லாமல் நாயகன் விக்ரமின் அறிமுகம்.ஐஸ்வர்யாவை அழகைக் காட்டும் காமரா முதல் காட்சியிலேயே மனதைப் பறிக்கிறது.


பெயரோட்டம் ஆரம்பிக்கும் போதே விக்ரம்,ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு பலத்த கரகோஷங்கள்.


ஆச்சரியமாக பின்னர் ப்ரியாமணி, ரஞ்சிதாவின் பெயர்கள் தோன்றியபோதும் விசில் ஆரவாரங்களும் கூட..
ரஞ்சிதாவின் பெயர் பார்த்ததுமே நித்தி,நித்தி என்ற கூச்சல்களும் கேட்டது ரஞ்சிதாவிடம் 'நிறைய' எதிர்பார்க்கிறார்கள் எனப் புரிய வைத்தது.

பின்னர் வழமைபோலவே ரஹ்மானுக்கும் மணிரத்னத்துக்கும் பெருவாரியான கரகோஷங்கள்.

வீரா பாடலுடன் எழுத்துக்கள் திரையில்..

வசனம் சுகாசினி.. அட..
அது தான் சில வசனங்களில் சுஹாசினியின் சித்தப்பா கமலும் எட்டிப் பார்க்கிறார்..
'உங்கள் கடவுள் அப்பழுக்கில்லாதவரா?அழகானவரா?'

மணியின் வழமையான,ஆஸ்தான ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இணைந்திருப்பது படத்துக்கு ஒரு தனியான உயர்ச்சியைக் கொடுக்கிறது.
ஈரமான,குளுமையான,அழகான,உயரமான இடங்களிலெல்லாம் நாம் உலவுவது போல ஒரு உணர்வை ஒளிப்பதிவு தருகிறது.
சந்தோஷ் சிவனுக்கே உரிய ட்ரேட் மார்க்கான முகில்களும்,பச்சைப் பசேல் பின்னணியும் படத்தின் முக்கிய அம்சங்களாகின்றன.

இசைப்புயல் ரஹ்மான் படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் உயிர்க்கிறார்;ஜொலிக்கிறார்.
மெல்லிய உணர்வுகளை மீட்டும் இசையாகட்டும்,அதிரடி இசையாகட்டும்.. ரஹ்மான் மின்னுகிறார்.
அதிலும் சண்டைக்காட்சிகளின் பின்னணியில் வரும் கலிங்கத்துப் பரணி அருமை.
எங்கேயாவது தேடி எடுத்து மீண்டும் கேட்கவேண்டும்.
படத்தின் இறுதியில் வரும் "நானே வருவேன்" இருக்கையிலிருந்து எழுந்து விடாமல் செய்தது. இன்னும் காதில் ரீங்கரிக்கிறது.
இந்த இரு பாடல்களையும் யாராவது தேடி எடுத்துத் தாங்களேன்.

மணிரத்னத்தின் படங்களில் அதிக சண்டைக் காட்சிகள் இடம் பெற்ற படமாக ராவணனையே கருதமுடியும் என நினைக்கிறேன். விக்ரமினாலும் ரஹ்மானாலும் அந்த சண்டைக் காட்சிகளெல்லாம் அனல் பறக்கின்றன. அலுப்படிக்கவும் இல்லை.

இனி நடிக,நடிகரைப் பற்றிப் பார்க்க முன், கதை....
நவீன ராமாயணமே..

அப்படியே எடுத்து தந்தால் ராவணனுக்கு பத்து தலை வேண்டுமே என்று சில,பல வசனங்கள்,சில உருவக எடுத்துக்காட்டுக்கள்,சம்பவங்கள்,சில பாத்திரங்களின் குணவியல்புகள் மூலமாக சித்தரிக்கிறார் இயக்குனர்.
அவற்றுள் சில அடடா போட வைத்தாலும், மேலும் சில சலிப்பூட்டுவதையும் தவிர்க்க முடியவில்லை.மணிரத்னம் படத்தில் என்பதால் மேலும் உறுத்துகிறது.

தன் தங்கையைப் பலியெடுத்த போலீஸ் அதிகாரியைப் பழிவாங்க அவரது அழகு மனைவியைக் கடத்தி செல்லும் தாழ் குடியைச் சேர்ந்த ஒரு முரடனுக்கும் போலீஸ் அதிகாரிக்கும் இடையிலான மோதலே திரைக்கதை.
இடையிலே அந்த முரடன் (தன் மக்களுக்கு அவன் கடவுள் போல) கடத்தி வந்த மாற்றான் மனைவி மீது காதல் கொள்கிறான்.மனைவியை மீட்கப் படையெடுத்து வரும் போலீஸ் அதிகாரிக்கும் வீரையாவுக்கும் இடையிலான மோதலில் இந்த ஒரு தலைக் காதலும் கலக்கிறது.

ராவணன் விக்ரம்.. மனிதர் நடிப்பில் ஒரு ராட்சசனே தான்.. பலத்திலும் உடல் கட்டுக் கோப்பிலும் கூட..சீதையாக ஐஸ்வர்யா ராய்.. என்ன ஒரு அழகு.. கொஞ்சமும் மாசு மறுவற்ற முகம்.. பேசும்,மிரளும்,காதலிக்க அழைக்கும் கண்கள்..
ராமனாக - மிடுக்குடன் ப்ரித்விராஜ். தமிழர் நோக்கில்,ராவணனை ஹீரோவாக்கியதால் ராமனின் நல்ல இயல்புகளைக் குறைத்து வில்லனாக மிகைப்படுத்தியிருக்கிறார்.


அப்படியே கும்பகர்ணன் போல பிரபு(உடல் பருமனும் துணை வந்துள்ளது),விபீஷனனாக முன்னா,சூர்ப்பனையாக முத்தழகு ப்ரியா மணி என்று பரவலாக மூலக் கதை ராமாயணத்தில் கை வைக்காமல் பாத்திரங்களைப் பொருத்தி உலாவிட்டுள்ளார் இயக்குனர்.

அனுமார் யார் என்று எல்லாம் எம்மை சிரமப்படுத்தவில்லை . கார்த்திக் தன் அறிமுகக் காட்சியிலேயே அங்கும் இங்கும் குரங்கு போலத் தாவியும் சேஷ்டைகள் செய்தும் அனுமன் யானே என்று காட்டி விடுகிறார்.
அதற்காக ஐஸ்வர்யாவைத் தேடி சென்று அனுமன் போலவே கணையாழி போல அடையாளம் கட்ட முற்படுவது எல்லாம் மணிரத்னத்தின் தரத்துக்கு சிறுபிள்ளைத் தனம் போல இருக்கிறது.

விக்ரம் - ஆவேச இராததன்.அக்ஷன் காட்சிகளில் யாராலும் அடிக்கமுடியாத ஆஜானுபாகுவாக மிரட்டுகிறார். முறுக்கேறிய கட்டான உடம்பும்,முறுக்கு மீசையும் உஷ்ணப் பார்வையுமாக வீரையாவாக வாழ்ந்திருக்கிறார்.
ஆவேசப்பட்டு 'கப கப' எனும் போதும் சரி, தாபம்,காதலோடு இங்கேயே இருந்துருங்களேன் என்று கெஞ்சும்போதும், கம்பீரமாக எதிரியை தப்பிக்க அனுப்பும் கண்ணியத்திலும் நடிப்பில் மின்னுகிறார்.
பாத்திரங்களாக இக்கால நடிகர்களில் வாழ்பவர் இவரும் சூர்யாவும் மட்டுமே.
அடுத்த கமல் என்று அடித்து சொல்கிறேன்.

ஐஸ்வர்யா - அழகு.உருகுகிறார்.உருக வைக்கிறார்.சில இடங்களில் ஏங்கவும் வைக்கிறார்.கள்வரே பாடலில் வாவ்.. என்னாமாய் உடலை வளைத்து நடனமாடுகிறார்.நடன அமைப்பு ஷோபனாவாம். அப்படியே ஷோபனா ஐஸ்வர்யாவுக்குள் புகுந்தது போல ஒரு தத்ரூபம்.கண்களால் பேசும் இடங்களும் அருமை.

"எப்போ வருவீங்க?எனக்கு உண்மையில் துணிச்சலில்லை" என்று தனியே புலம்புவதிலும் பின் கடவுள் சிலை முன்னாள் உருகுவதிலும் நெகிழ வைக்கிறார்.

ப்ருத்விராஜ் - கம்பீரமான ஒரு போலீஸ் அதிகாரி.அழகாக ஹிந்தி நடிகர்கள் போல இருக்கிறார். மணிரத்னப் பட வாய்ப்பு மேலும் பொலிவைத் தந்துள்ளது.விக்ரமின் கம்பீரம் இல்லாவிடினும் சில இடங்கிலாவது ஈடு கொடுக்கிறார்.வசன உச்சரிப்புக்களும் பார்வையினால் மாறுதல் காட்டுவதும் அருமை.
ஐஸ்வர்யாவுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கையில் அபிஷேக் பச்சனே எரிச்சல் பட்டிருப்பார்.
பிரபு - கம்பீரமான அண்ணன்.வெயிட்டான பாத்திரம்.தாங்குகிறார்.
கார்த்திக்- பிரபுவை விடக் கொஞ்சம் பெரிய பாத்திரம்.சிரிக்கவும் வைக்கிறார். அனுமார் என்பதால் சேஷ்டைகள் விடுகிறார். இவரை தமிழ் சினிமா கதாநாயகனாக இழந்துவிட்டதே என ஏங்கவும் வைக்கிறார்.

ப்ரியா மணி - கொஞ்ச நேரமே வந்தாலும் ஒரு மினி சூறாவளியாக வந்து போகிறார்.அவரது கட்டிக் குரலுக்கேற்ற ஒரு வீரப் பெண் பாத்திரம்.

அரவாணியாக வையாபுரியும்,போலீஸ் அதிகாரியாக 'ஓரம்போ' புகழ் ஜோன் விஜயும் ஏனைய குறிப்பிடத்தக்க பாத்திரங்கள்.
இயக்குனராக மணிரத்னத்தை முன்பு எல்லாத் திரைப்படங்களிலும் வியந்ததையும் ரசித்ததையும் இத்திரைப்படத்திலும் அவர் காப்பாற்றுகிறார்.

முதல் காட்சியில் கம்பீரமாகப் பெரிய படகில் விக்ரம் வந்து ஐஸ்வர்யாவைக் கடத்துவது..மலையிலிருந்து ஐஸ்வர்யா அதலபாதாலத்திளிருந்து குதிக்கும் பிரம்மாண்டம். (ஆனால் அதை மீண்டும் மீண்டும் ஸ்டன்டாகக் காட்டியது தேவையில்லைப் போல் இருந்தது)அந்தத் தெப்பக் காட்சி.. சுழலும் காமராவும் விக்ரமின் முகபாவங்களும் கவிதை.
கடைசிக் காட்சியில் விக்ரம்-ஐஸ்வர்யா உரையாடல்களும் இடையிடையே flashbackஆக வரும் தொங்குபாலக் காட்சிகளும்..

கலிங்கத்துப் பரணியை மிகப் பொருத்தமாக இரு இடங்களில் கையாள்வது class.
ஐஸ்வர்யாவின் ஆடைகளாலேயே கணவரையும் காதலரையும் காதல் பிரிவிலும் தவிப்பிலும் உணர்த்துவதும் கவிதையே.

அருமையான காட்டு சிறுக்கி பாடலை படத்தில் ஏனோ வைக்கவில்லை. அதற்குப் பதில் ஒரு அடர் குரலில் விருத்தமாக மட்டும் ஐஸ்வர்யா-விக்ரம் இடையிலான ஊடல் சண்டையாகக் காட்டுகிறார்.ராமர் மனைவி ராவணனோடு டூயட்டா என்று யாரும் கேட்டு விடக் கூடாது என்பதற்கா?

படம் முழுவதும் இருவருமே தொட்டுக் கொள்ளாமலே நடிப்பதும் ஒரு புதுமையே.
கடவுள் சிலையருகே விக்ரம் கொஞ்சம் தாபம்,கொஞ்சம் வேதனை,கொஞ்சம் கெஞ்சலோடு ஐஸ்வர்யாவிடம் கேட்கும் கேள்விகளும்,பின்னர் செய்யும் காதல் பிரகடனமும் மனசில் நிற்கின்றன..இங்கேயே பதிவிட்டால் உங்களுக்கு அந்த சிலிர்ப்புக் கிடைக்காது..பார்த்து உணருங்கள்..உருகுங்கள்.

ஆனால் படப்பிடிப்பு நடந்த இடங்களின் தேர்வு  மிக அருமை.சாதாரணர் நாம் எல்லாம் நினைத்தும் பார்க்க முடியா இடத் தேர்வுகள்.இந்த இடங்களின் குளுமையை அனுபவிக்கவும் காமராக் கோலங்களை ரசிக்கவும் மட்டும் மீண்டும் ஒருமுறை ராவணன் பார்க்கலாம் என்று இருக்கிறேன்.


இடுக்கை :அ.ராமநாதன்

6/18/2010

செம்மொழி மாநாடு அழைப்பிதழ்

        "யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதாவது எங்கும்
காணோம் " - பாரதி பாடிய தமிழுக்கு

       " தமிழ் எங்கள் இளமைக்குப் பால் " என்று பாவேந்தர் பாடிய
தமிழுக்கு -





















     


    
      வலிவும் பொலிவும் சேர்த்து - வையத்தோர் வழங்கும்
      வாழ்த்துக்களைக் குவித்திட -குமணனை ஒத்த
      வள்ளல்கள் வாழ்ந்த கொங்கு மண்டலத்தில்
      விழா எடுக்கிறோம்

ஆம் தமிழுக்கு திருவிழா

ஆம்; தமிழுக்கு விழா! தமிழ் இனம் அழியாமல் இருக்க விழா!.

அந்த விழாதான் தமிழா! " உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு! "

அயல் நாட்டு அறிஞர் பெருமக்கள்,மொழி வல்லுநர்கள்

அனைவருமே  கொங்கு மண்டலம் நோக்கி ....................

           நாகரிகத்தை, தம் கலையை, கலாச்சாரத்தை, பண்பாட்டை,

பழக்கவழக்கங்களை, இனிய தமிழ்ச் சொற்களை,

இலக்கியநயமிக்க கவிதையைப் பருகிடவும்,அவற்றின்

இனிமை கண்டு உருகிடவும், தமிழ்ச் சான்றோர்

வருவது மட்டுமல்ல;அவர்களில் தமிழ்ப் புலமை மிக்கார்,

மொழிப்புலமை மிக்கார் எடுத்துரைக்கும் வாதங்களைக் கேட்டிடவும்,

தாயின் மார்பில் குடித்த தமிழ்ப் பால் அளித்த வலிமை கொண்டு,

வெற்றி பல கண்ட, எங்கள் தமிழ் வென்ற வரலாறு எழுதுவதற்கு

இங்கு வந்த தமிழரெல்லாம்; நெஞ்சம் நிமிர்த்தி நிற்கின்றார்

என்பதனை அனைத்து நாடும் அறிவதற்கு- என் தமிழன்னைக்கு

வலிவு சேர்த்து- உலக மொழிகளிலே அன்றும் இன்றும்- இனி என்றும்-

இதுவே முதல் மொழி எனும் புகழ் கொடி தூக்கிப் பிடிக்க வாரீர்! வாரீர்!

என்று தமிழகத்துச் சிங்களை நாங்கள் அழைக்கின்றோம், கோவை மாநகருக்கு!

           காட்டில் வேட்டையாடும் சிங்கமன்றோ நீ?. அத்தகைய களத்திற்கு நான்

உன்னை அழைக்கவில்லை; புலவர் பெருமக்களும்- அறிஞர் பெருமக்களும்-

கவிஞர் பெருமக்களும்- அமர்ந்து இருக்கின்ற அழகுமிகு, அறிவு

நிறை அரங்குகளுக்கு நண்பா! உன்னை நாங்கள் அழைக்கின்றோம்!.

ஓர் நண்பனுக்கு மற்றோர் நண்பன் எழுதும் மடல்-நானே நேரில்

வர முடியாமல் இந்த மடலை -அனுப்பி வைக்கின்றேன்!. மடலிலே

உள்ளத்தைப் பறி கொடுத்து விடாமல்- பயணம் புறப்படு, பாசமிகு தோழா!.

          உன் ஊரில் திருவிழா என்றால் உனக்கும் ,எனக்கும்
மட்டும் தான் மகிழ்ச்சி........

          நம் தமிழுக்கு திருவிழா என்றால் "உலகத் தமிழன்"
அனைவருக்கும் மகிழ்ச்சி.....


இடுக்கை :அ.ராமநாதன்          

6/15/2010

எனது பார்வையில் தமிழ்த்தாய் வாழ்த்து ... .

என்ன எங்கேயோ கேட்ட மாதிரி இருக்க ?  நல்ல நினைவுபடுத்தி பாருங்க, நாம படிக்கும் போது எல்லோரும் பாடும் போது (இறைவழிபாடு) பாடும் பெயரில் வாயை அசைக்கும் வாழ்த்து பாடல்......................

தமிழ்த்தாய் வாழ்த்து

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே!
உன் சீரிளமை திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! 
                             
                                           - மனோண்மணீயம் பெ.சுந்தரனார்

நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு





அழகு மிளிரும்சிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்தியக் கண்டத்தில்


தென்னாடும்,
 
அதில்சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும்


பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும்
அதிலிட்ட மணம்வீசும்திலகமாகவும் இருக்கின்றன.


அந்த திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல ...


அனைத்துலகமும் இன்பம்பெறும்வகையில்




எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருந்த..இருக்கின்ற




பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே!
இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து
எங்கள் செயல்களை மறந்து உன்னை

                                                         
                                                                 வணங்குவோமே!

                                                               வணங்குவோமே!


                                                                வணங்குவோமே!

இடுக்கை : அ.ராமநாதன்                                             படங்கள் : வசந்த்

6/10/2010

அவளை பார்த்து போனேன்

அவளை பார்த்துக்கொண்டே
போனேன் ..........
"பார்த்துப்போ "
அம்மா சொல்லி இருக்கிறாளே ...........!

பார்த்து போகும் பொழுதே
கல் தடுக்கி விழுந்தேன்
"பார்த்து போ பா "
பெயர் தெரியாத பெரியவர் சொன்னார்......!

என்ன செய்ய அவளை பார்த்துக்கொண்டே
போகும் பொழுது ....எதையும் பார்த்து போக
முடியவில்லை ......!

இடுக்கை :அ.ராமநாதன்

6/07/2010

சரியெனபடும்போது சொல்ல வேண்டும் காதல்

 காதல்
சந்தித்து பேசிப் பழகிய பத்தாவது நாளில் ஐ லவ் யூ சொல்லி சாதித்தவர்களும் உண்டு, ஒன்றாகவே படித்து, பழகி பல ஆண்டுகள் ஆகியும் சொல்லாமல் காதலை மறைத்து தொலைத்தவர்களும் உண்டு.(என்னை மாதிரி)

ஆனால் காதலில் விழுவதை விட, காதலை உணர்த்துவதே மிக மிக முக்கியமான விஷயமாகும். அதனை சரியாக செய்யாத காதலர் தோல்வியைத்தான் அடைவார்கள்.

உங்கள் காதலைப் பற்றி உங்களுக்கு எப்போது அதீத நம்பிக்கை வருகிறதோ அப்போதுதான் நீங்கள் அதனை கூறுவீர்கள். அப்படி வரும்வரை நீங்கள் காத்திருந்துதான் ஆக வேண்டும்.

அவரும் நம்மை காதலிக்கிறார் என்று தெரிந்து கூறும் காதலும் உண்டு, நாம் காதலை உணர்த்தியப் பிறகே அவருக்கு நம் மீது ஈர்ப்பு வர வேண்டும் என்ற வகையும் உண்டு.

கல்லை எறிந்து பார்ப்போம், விழுந்தால் மாங்காய், இல்லாவிட்டால் கல்தானே போகும் என்று அலட்சிய மனப்பாங்குடன் காதலைச் சொன்னால் கண்டிப்பாக தோல்விதான் கிடைக்கும்.(இதுவெல்லாம் காதல் அல்ல அது ஒருவகை ஈடுபாடு)

உங்களுக்கு இடையே பேச்சு வார்த்தை சுமூகமாக போய்க் கொண்டிருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். அந்த பேச்சுவார்த்தை சாதாரண நண்பர்கள் போலவா அல்லது நெருங்கிய நண்பர்கள் போல் இருக்கிறதா என்பதை அலச வேண்டும்.

சாதாரண நண்பர்கள் போல் என்றால் நீங்கள் இன்னும் சிறிது காலம் காத்திருந்து உங்கள் உறவை பலப்படுத்திக் கொண்டு காதலைச் சொல்லலாம். ஆனால் அதற்காக அதிக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது.

நெருங்கிய நண்பர்கள் போன்ற உறவு இருந்தால் நல்ல முறையில் காதலை உணர்த்துங்கள்.
சரியான நேரத்தில் சொல்லப்படாத காதல் வெற்றியை நோக்கு செல்வதே இல்லை. காதல் ஐஸ்கிரீம் மாதிரி. உருகுவதற்குள் சொல்லிவிட வேண்டும். இல்லை என்றால் காலி கப் தான் கையில் மிஞ்சும். (எப்படி நாங்களும் ஹைக்கூ சொன்னேமெல்ல..)

இடுக்கை : அ.ராமநாதன்

6/04/2010

நண்பர்களில் ஒரு காதல் -2



" டிவிஸ், டி.சி.எஸ் இரண்டு கிடைச்சா.. எதுலடா சேறது " என்றாள்.


" நான் டி.சி.எஸ்" என்றேன்.


" எனக்கு என்னவோ டிவிஸ் சேறலாம் தோனுது. டி.சி.எஸ் விட பெரிய கம்பேனி இல்லனாலும், சிட்டிக் குள்ள ஒரு ஆபிஸ் வெச்சிருக்கான். சீக்கிறம் வீட்டுக்கு போய்ட்டு வரலாம் "


அவள் என்னிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வது எவ்வளவு பிடிக்குமோ, அந்த அளவிற்கு அவள் முடிவு எடுத்துவிட்டு என் கருத்தை கேட்பது எனக்கு பிடிக்காது. அந்த முடிவை எந்த பதில் சொல்லியும் மாற்ற முடியாது. அவள் எப்போதும் இப்படி தான். யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுப்பாள். நான் பேசாமல் அமைதியாக வந்தேன்.


நாங்கள் வீட்டுக்கு திரும்பும் போது நல்ல மழை. முன்பே பஸ்ஸில் ஏறிவிட்டதால் நனையவில்லை. ஆனால், நனையாமல் இருந்தது அவளுக்கு வருத்தம் தான். ஜன்னலோர சீட்டில் அமர்ந்து மழை நீரை பிடித்து என் மீது தெளித்தாள். முதல் முறையாக அவள் கண்ணில் காதலை கண்டேன்.


" கை ரொம்ப ஜில்லுனு இருக்கு.... பாரேன்" என்று என் அனுமது கேட்காமலே கை பற்றினாள். அந்த ஸ்பரிஸ்த்தில் அவள் காதலை இன்னும் உணர்ந்தேன். கொஞ்ச நேரத்தில் நாங்கள் இறங்க வேண்டிய பஸ் ஸ்டாப் வந்தது. மழை விடாமல் பெய்தது. அவளிடம் குடையிருந்ததால், மழையில் நனையாமல் இருவரும் குடைக்குள் நடந்தோம். பஸ்ஸில் அமர்ந்து வந்த நெருக்கத்தை விட குடைக்குள் எங்கள் நெருக்கம் அதிகமாகவே இருந்தது.


அவள் தப்பாக நினைத்து விடுவாளோ என்று பயந்து குடையில் இருந்து வெளியே வர நினைத்த போது, " ரொம்ப வெட்கப்படாத.. குடைக்குள்ள வாடா" என்றாள்.


இருவரும் அவள் வீட்டு தெரு முனை வரை பேசிக் கொண்டு நடந்தோம்.


" எனக்கு வர போற புருஷன் கூட இப்படி கொட புடிக்க மாட்டான்" என்று வெட்கத்தோடு சிரித்தாள்.


அவள் சொன்னது போல் நான் ட்யூப் லைட் தான். அவளின் காதலை இப்போது கூட புரிந்து கொள்ளவில்லை என்றால் என்னை விட முட்டாள் யாருமில்லை.


மாடியில் போனை நொண்டி கொண்டே யோசித்தேன்.


அவளிடம் காதலை சொல்ல வேண்டும். ஆனால், அதற்குள் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்த தேதி குறித்துவிட்டார்கள். "உனக்கு புடிச்ச சொல்லு நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று முன்பு அவள் சொன்னது நினைவில் இருந்தது இப்போதும். அவர்களிடம் சொல்லி நிச்சயதார்த்தத்தை நிறுத்துவதை விட முதலில் அவளிடம் காதலை சொல்ல வேண்டும்.




போனை நொண்டி முடித்து கீழே வந்தேன். நான் அவளுக்கு போன் பேசலாம் என்று நினைக்கும் போதே, என் செல்போன் மணி ஒலித்தது. அவள் தான்.


செல்போனை எடுத்து, " சொல்லு தங்கம்மா ! " என்றேன்.


"உன்ன அவசரமா பார்க்கனும். என் வீட்டுக்கு வா " என்றாள்.


என்னது என்று கேட்க தோன்றவில்லை. அவள் அழைக்கவில்லை என்றாலும் நானே அவளை பார்க்க வேண்டும் என்று தான் இருந்தேன். பத்து நிமிடத்தில் உடைகளை மாற்றிவிட்டு அவள் வீட்டுக்கு சென்றேன்.


முகம் கடு கடுவென கோபத்தோடு இருந்தாள். கணவனுக்காக காத்திருக்கும் மனைவி கோபம் போல் எனக்கு தெரிந்தது.


" ஹாய் தங்கம்மா... என்ன அவசரமா கூப்பிட்ட...." என்றேன்.


அவள் முகம் மாறவில்லை. எனக்கு என்னவோ போல் இருந்தது.


" ராம் ! ஏன்டா என்கிட்ட உண்மைய மறைச்ச...." என்று கண்ணீருடன் கேட்டாள்.


அவளிடம் காதலை சொல்லாமல் விட்டது எவ்வளவு பெரிய தவறு. அவள் என் மேல் எவ்வளவு காதல் இருந்தால், சொல்லாமல் இருந்ததற்கு கண்ணீர் சிந்துவாள்.


" தங்கம்மா ! இதுக்கு போய்யா அழுவுற. நாம மூனு வருஷமா பிரண்ட்ஸா இருக்கோம். நம்ப லவ்வ சொல்லி தான் புரிஞ்சிக்கனுமா..." என்றேன்.


" நான் லவ்வ பத்தி கேட்கல. என் நிச்சய தார்த்தம் பத்தி கேட்டேன் " என்றாள்.


இவளுக்கு எப்படி தெரியும்.நான் வரவில்லை என்று, இவளது (காதலியின் )நிச்சய தார்த்தம் என்றால் கண்டிப்பாக எந்த ஆணுக்கும் அதிர்ச்சியாக தான் இருக்கும். நான் மட்டும் விதி விலக்கா ? ஆனால், நம் காதலுக்கு அது தடையாக இருக்கும் என்று நினைக்கவில்லை. நீ காதலுக்கு சம்மதம் சொல்லிவிட்டால், என் நிச்சயதார்த்ததை நிருத்திவிட போகிறேன். என்றாள் அம்மாவிடம் காதலை பற்றி சொன்னால், கொஞ்சம் மன வருத்தம் இருந்தாலும் ஏற்றுக் கொள்வாள்,என்றாள்.


நான் மாடியில் அவளை நினைக்கும் போது , அங்கு அவளுக்கு விக்கல் வ்ந்துள்ளது ,அப்போது அவள் அம்மா நான் நிச்சயாதார்த்திற்கு வராததை அவளிடம் சொல்லியிருக்கிறார்.(எங்கள் இருவரில் யாருக்கு விக்கல் வந்தாலும் நாங்கள் தான் நினைப்பதாக)


" தங்கம்மா ! இது எல்லாம் ஒரு மேட்டரே இல்ல. " நாமா நல்ல நண்பர்கள்............


"அது எல்லாம் வேண்டாம். நீ உங்க அம்மா சொல்லுற பையன கல்யாணம் பண்ணிக்கோ..!! " என்றேன்.


பெரிய சுத்தியல் தலையில் விழுந்தது போல் இருந்தது. என் மேல் இருக்கும் காதலை பல சமயத்தில் உணர்த்தியவள் அவள் தான். அவளை காதலிப்பது நூறு சதவீத உண்மை. நான் ஏன் இப்படி மறுத்தேன்.


" என்ன ஆச்சு உனக்கு ? நம்ப லவ்க்கு முன்னாடி அவங்க சொல்லாட்டியும் . இப்ப நினச்சா கூட நிறுத்தலாம்." என்றாள்


" இல்ல வேண்டாம் தங்கம்மா, எனக்கு என்னவோ சரியா வரும்னு தோணல்ல..."


வழக்கம் போல் முடிவு எடுத்து விட்டு என்னிடம் பேசுவாள் ,ஆனால் நான் எடுத்த முடிவு என்று புரிந்தது. அவள் எப்படியாவது முடிவை மாற்றிவிடுவாள். அந்த அளவிற்கு எங்கள் காதல் மீது நம்பிக்கை இருந்தது.


" நீ என்ன லவ் பண்ணா போதுமா. நான் உன்ன லவ் பண்ணவே இல்ல. " என்றேன். கோபத்துடன்.....


நான் சொன்னதை அவள் மட்டுமல்ல படிக்கும் நீங்கள் கூட நம்ப மாட்டீர்கள் என்று தெரியும். அவளிடம் அதற்கு மேல் பேச எனக்கு விருப்பமில்லை. என்றேன் காதல் இல்லை என்று பொய் சொல்லுபவனிடம் என்ன பேசினாலும் வீண் தான்.என்று அழுதாள், என்னால் மட்டும் எப்படி அழுகாமால் இருக்க முடியும்.அழுதுகொண்டே இனி நாம் பேசி கொள்ள வேண்டாம் ,உனது மொபைலில் எனது எண்ணையும் அழித்து விடு என்று சொல்லிவிட்டு கிளம்பினேன் .


அவளுக்கு இரண்டு மாதத்தில் திருமணமும் நடந்தது. சிரித்த முகத்துடன் அவளை மனதளவில் வாழ்த்தினேன். கொஞ்ச தூரம் தனியாக பைக்கில் சென்றதும் என்னை அறியாமல் கண்ணில் நீர் துடைப்பதை பார்த்தேன். நான் மாற எத்தனை நாள் கஷ்டப்பட்டு கிடந்தேன்


" ஸாரி.... தங்கம்மா , நீ வைராக்கியம் உள்ளவள் தான் இதுவரை என்னிடம் பேச நினைக்கவில்லை இல்லை மாறிவிட்டயோ ? எது எப்படியோ உன் நினைவில் வாடும் ,உன் மனதை காயப்படித்தியா.....!!" பாவி அல்ல .......


உன் அன்பு ராம்..........BOSS( இது அவளும் நானும் வைத்த என் பெயர்) [இப்போதும் உன் பிறந்த நாளில் வாழ்த்த முடியவில்லை என நினைத்து எழுதிய எ(ந)மது பொக்கிஷம்]

இடுக்கை , எழுத்து & இயக்கம்   : அ.ராமநாதன்   

6/03/2010

நண்பர்களில் மாறிய ஒரு காதல்

இது ஒரு உண்மை கதை ,என்னவளின் பிறந்த நாளில் அவளை பற்றி நினைத்து பார்க்கும்போது எழுதிய "பொக்கிஷம் " ஹாலோ நண்பர்களே இது சேரனின் பொக்கிஷம் அல்ல.............


எல்லாம் முடிந்த பிறகு இப்படி ஒரு எண்ணம் வந்திருக்க கூடாது. நிலைமை கை மீறி போய்விட்டது. இரண்டு மாதத்தில் அவளுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்கும் சமயத்தில் தங்கம்மா(இது அவள் செல்ல பெயர்) என் மீது இருந்த காதல் தெரிந்திருக்க கூடாது. மூன்று வருடமாய் தோழியாய் இருந்து, அவள் காதலை இப்போது புரிந்துக் கொண்ட என் முட்டாள் தனத்தை என்ன சொல்லுவது.


இருவரும் ஒரே நிறுவனத்தில் தான் பணியில் இருந்தோம் . நான் அவளிடம் பழகிய இரண்டாவது வருடத்தில் இருந்தே காதலிக்க தொடங்கிவிட்டேன். அடிக்கடி ' நட்பை பற்றி பெருமையாக பேசி, நட்பை பற்றின எஸ்.எம்.எஸ் அனுப்பி என் மீது இருக்கும் நட்பை மட்டுமே உணர்த்தினாள். நட்பை தக்க வைத்து கொள்ள, காதலை தொலைக்கும் ஒரு கோடி ஆண்களிள் நானும் ஒருவனாக இருக்க மூடி மறைத்துவிட்டேன்.


வேலையில் இருந்து நின்ற கையோடு எனது நிறுவனத்தில் ரூ.10,000 சம்பளத்தில் இருந்து வந்தேன் ஆனால், அவள் வேலை தேடி அலைந்தாள்.


ஒரு நாள்... "டேய் !கோவை சுகுணா மண்டபத்தில் ஜாப் பேர் நடக்குது.ரொம்ப தூரம். என்ன வண்டியில கூட்டிட்டு போறியா" என்றாள்.


அவளிடம் எனக்கு பிடித்ததே என் மீது அதிக உரிமை எடுத்துக் கொள்வது தான். என் செல்போன், பர்ஸ், புத்தகம் என்று என் அனுமதி கேட்காமலே எடுத்து பார்ப்பாள். 'தொடாதே' என்று சொல்லும் தைரியம் எனக்கு இல்லை.


அவள் அழைத்தது ஞாயிற்றுகிழமை என்பதால், அவள் அம்மாவின் அனுமதியுடன் அவளை என் வண்டியில் அழைத்து சென்றேன். உட்காரும் போது, "அடிக்கடி பிரேக் போடாம வண்டி ஒட்டுடா..."


" எதிர்க்க வண்டி வந்தா.... பிரேக் போடாம என்ன பண்ணுறது "


" போடா டியூப் லைட்..." என்று அவள் சொல்ல, அவள் எதற்காக அப்படி சொன்னால் என்று நினைத்தப்படி வண்டி ஓட்டினேன். வேலைக்காக பலர் பெரிய க்யூவில் ஜாப் சென்டரில் நின்றுக் கொண்டு இருந்தனர்.


" இது வேலைக்காவாது வா போலாம்" என்றேன்.


" உன் பிரண்டுக்காக வெயிட் பண்ணமாட்டியா...!" என்று தன் பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தினாள். காதலிக்கும் பெண்ணிடம் கூட பொய் சொல்லி வந்துவிடலாம். ஆனால், தோழியாக இருக்கும் பெண்ணிடம் பொய்யும் சொல்லமுடியாமல், உண்மையும் சொல்ல முடியாமல் தவித்தேன். வேறு வழியில்லாமல், அவளுக்காக ஜாப் சென்டரில் காத்திருந்தேன். அவள் "உன் பிரண்டுக்காக..." என்று சொன்னது, என் காதில் " உன் காதலுக்காக" என்றே ஒலித்தது.


அவள் வரும் போதும் மதியம் 3:30 மணியிருக்கும்.


"எப்படி இருந்தது ஜாப் பேர்" என்று கேட்டேன்.


" இப்படி எனக்காக வெயிட் பண்ண ஆளு இருந்தா.... இந்த மாதிரி எத்தன ஜாப் பேர் வேணுமானாலும் வருவேன் " என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.


கொஞ்ச நேரத்தில், "டிவிஸ்ல வேலை கிடைக்கும்னு தோணுது " என்றாள். அவள் பேசும் போது என் தோள் மீது கை வைத்ததால், அதன் பின் அவள் சொன்னது என் காதில் எதுவும் விழவில்லை. என் உடல் கொஞ்சம் நெளிய தொடங்கியது. அவள் வெட்க படுவதை கண்டு கண்ணாடியில் பார்த்தேன்.


அவளை வீட்டில் விட்ட பிறகு, " சரிடா...! நாளைக்கு பார்ப்போம் " என்றாள்.


" என்னது நாளைக்கா ! ஒரு வாரம் ஆபிஸ் வோர்க் ரொம்ப டைட்டா இருக்கும். நெக்ஸ்ட் சண்டே மீட் பண்ணுவோம்" என்று சொல்லி வண்டி எடுத்தேன்.


"என்னடா உடனே போற...பேசுறதுக்கு ஒண்ணுமில்லையா" மெல்லிய குரலில் கேட்டாள்.


" இப்பவே டைம்மாச்சு. வீட்டுல போய் தூங்கனும் " என்றேன்.(அவள் இருப்பது பொள்ளாச்சி நான் கோவை)


" என் பொறுமைய ரொம்ப சோதிக்கிற" என்றாள்.


" என்ன சொன்ன... ?"


" ம்ம்....ஒண்ணுமில்ல.... பை சொன்னேன்" என்று சொல்லி செல்லமாக கோபத்துடன் சென்றாள். 'ஒரு வேலை அதுவா இருக்குமோ ' என்று மறை முகமாகவோ கேட்டுபார்த்தால், " பிரண்ட்ஸ் கிட்ட இப்படி பேச கூடாதா...." என்று ஒரு குண்டை போடுவாள். எங்கள் மூன்று வருட நட்பில் என்னை இப்படி குழப்புவாள்.


இதே போல், டி.சி.எஸ்யில் இண்டர்வியூ என்றாள். என் வண்டி சரியில்லாததால், அவளை பஸ்ஸில் அழைத்து சென்றேன். வார வாரம் அவளை இண்டர்வியூ அழைத்து செல்லும் பாடிகார்ட் வேலை செய்கிறோமோ என்று கூட தோன்றியது.


இண்டர்வியூ முடித்து வந்ததும் இந்த வேலையும் கிடைக்கும் என்று கூறினாள்.


" டிவிஸ், டி.சி.எஸ் இரண்டு கிடைச்சா.. எதுலடா சேறது " என்றாள்.


" நான் டி.சி.எஸ்" என்றேன்.


" எனக்கு என்னவோ டிவிஸ் சேறலாம் தோனுது" " என்றாள் (அது கோவை )


( காதல் அடுத்த பதிவில் முடியும் )