தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

7/14/2010

கண்டிப்பாக படியுங்கள் மனிதம் இருந்தால் 2சாதாரணமாக ஒரு அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டால் எப்படித் தப்பிக்க வேண்டும் எனப் பெயரளவிலாவது பயிற்சி அளிக்கப் படும். ஆனால் இந்த போபாலில் வசிக்கும் மக்களுக்கு நச்சு வாயு வெளியேற்றத்தை எப்படி எதிர் கொள்வது என்பதற்கான எந்தப் பயிற்சியும் அளிக்கப் படவில்லை.


இது போன்று நச்சு வாயுக்கள் வெளியேறும் போது முகத்தில் ஈரத் துணியைக் கடிக் கொண்டு தரையில் தவழ்ந்து வாயு வெளியேறும் திசைக்கு எதிர்த் திசையில் நகர்ந்தாலே போதும், மரணத்திலிருந்து காத்துக் கொள்ளலாம் என்கிற சிறிய பயிற்சியைக் கூட அளிப்பதில் ஈடுபாடு காட்டாத இந்தக் கொடியவர்களால் செய்வதறியாது இறந்து போனவை உயிர்கள் இல்லையா? அதற்கு பெயர் கொலை இல்லையா?


இந்த மெத்தில் ஐசோ சயனைடு வாயு காற்றை விட இரு மடங்கு அடர்த்தி கொண்டது. அப்படியென்றால் அதை சுவாசிப்பது எவ்வளவு சிரமமாக இருந்திருக்கும். அதோடில்லாமல் இந்த வாயுவிற்கு எந்த ஒரு வாசனையும் கிடையாது. இதை நுகர்ந்தவர்கள் மிளகாய்ப் பொடியை நுகர்ந்தது போன்ற எரிச்சலை உணர்ந்திருக்கிறார்கள்.


அந்த எரிச்சலால் கண்கள் பிதுங்கி வெளியே வந்து விடுவது போல் உணர்வு ஏற்பட்டிருக்கிறது. பின்னர் நுரையீரலில் நெருப்பைக் கொட்டியது போல் மக்கள் வலியில் துடிதுடித்தனர்.


பலர் செய்வதறியாது தப்பிக்கும் எண்ணம் மட்டும் கொண்டு வேகமாக ஓடியிருக்கின்றனர். எந்த அளவு வேகமாக ஓடினார்களோ அதற்கு ஏற்றார் போல் இந்த மெத்தில் ஐசோ சயனைடு வாயுவை அதிகமாக சுவாசித்து துடிதுடித்து இறந்தவர்கள் தான் இங்கு அதிகம். சாலையோரங்களில் குழந்தைகளுடன் குளிரில் நடுங்கியவாறு உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அப்படியே இறந்து போயினர்.


விஷம் தாக்கியக் குளத்தில் மீன்கள் மிதப்பது போல் போபால் முழுவதும் பிணக் குவியல்கள். ஆனால் காவல்த்துறையோ மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். கதவுகளை அடைத்து உள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தி வீட்டோடு சமாதியாக்கியது. என்ன செய்ய வேண்டும்? எப்ப்படித் தப்பிக்க வேண்டும்? என்ற முறைகள் அங்கு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.


காரணம் அரசோ, அல்லது யூனியன் கார்பைடு நிறுவனமோ இது குறித்துப் ப்யிற்சி அளிப்பதை ஒரு பொருட்டாகவேக் கருதவில்லை. இதை வெறும் அலட்சியத்தால் நிகழ்ந்த விபத்து என முதலாளிகளைக் காப்பாற்றி பொது மக்களின் உயிர்களைக் கேவலப் படுத்துவது எவ்வளவு கொடூரமான ஒரு செயல்?


மரணம் அவர்களை ஒன்றும் உடனே கவ்விக் கொள்ளவில்லை. இவ்வளவு சித்திரவதைகளுக்குப் பின்னர்தான் அவர்களின் உயிர் பிரிந்திருக்கிறது.


எந்தத் தவறும் செய்யாமல் மரண தண்டணையை விடக் கொடுமையான தண்டணையை அனுபவித்த இவர்களின் மரணத்திற்கு காரணமானவன் அமெரிக்காவில் சுக வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறான். இதை விபத்து என்று சொல்லி அவனையும் தப்பிக்க வைத்து வழக்குகளைத் திரும்பப் பெற்ற நம் அரசியல் வியாதிகளுக்கு மனிதம் என்பதேக் கிடையாதா?


ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது இந்தியா ஜனநாயக நாடுதான். ஆனால் பொதுமக்களுக்கு அல்ல. பணம் படைத்த முதலாளிகளுக்கு மட்டும்.


1984 முதல் இப்போது வழங்கப் பட்ட தீர்ப்பு வரை இந்த வழக்கு எப்படி கையாளப் பட்டிருக்கிறது? என்பதை அடுத்தப் பதிவில் சொல்கிறேன்.

இடுக்கை :அ.ராமநாதன்  

9 கருத்துகள்:

sangeetha சொன்னது…

அருமை ..ஆனால் மெகா தொடர்போல் இருக்காதே....

suryadeva சொன்னது…

நண்பா .......உண்மையிலே மிகவும் அருமை

ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்நோக்கும் வாசகன்

சுரேஷ் சொன்னது…

சரியான பதிவு,வாழ்த்துக்கள்......
கார்கில் நிதி,ஒரிஸா புயல்,குஜராத் பூகம்பம் , சென்னை சுனாமி,
இது போல் நமது அரசும் நிதி வழங்கும் வாய்ப்புள்ளதா?

madurairajesh சொன்னது…

இந்தியா ஜ‌ன‌நாய‌க‌ப் போர்வை போர்த்திய‌
ப‌ண‌நாய‌க‌, அதிகாரவாரிசுக‌ள் ஆட்சி.
'ப‌சுத்தோல் போர்த்திய‌ புலி' போல‌.
ம‌க்க‌ள் தான் ஆட்டு மந்தைக‌ளாய்,
இல‌வ‌ச‌ புற்க‌ளால் ஈர்க்க‌ப்ப‌ட்டு,
க‌சாப்பு க‌டைகார‌ர்க‌ளின் பின்னால்.
வாக்குச்சீட்டின் வ‌லிமைய‌றியா
வ‌க்க‌த்த‌ வாக்காள‌ர்க‌ள்

ரகுமான் சொன்னது…

அண்ணா ,ரொம்ப அருமை என் தொடர்பில் இல்லை......
எனக்கு தெரியல இதுபோன்ற அபாயமான தொழிற்சாலைகள் மக்கள் வாழும் பகுதிக்கு அருகில் இருக்கலாமா ?

அ.ராமநாதன் சொன்னது…

sangeetha கூறியது...
அருமை ..ஆனால் மெகா தொடர்போல் இருக்காதே
நான் மெகா தொடர் இயக்கவில்லை தோழி

"இது கதையல்ல நிஜம்"

அ.ராமநாதன் சொன்னது…

சுரேஷ் கூறியது...
சரியான பதிவு,வாழ்த்துக்கள்......
கார்கில் நிதி,ஒரிஸா புயல்,குஜராத் பூகம்பம் , சென்னை சுனாமி,
இது போல் நமது அரசும் நிதி வழங்கும் வாய்ப்புள்ளதா?

நன்றி வ்ருகைக்கு , தெரியவில்லை , நமது அரசு நினைப்பதில் தான் உள்ளது
தாங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபடலாம்

அ.ராமநாதன் சொன்னது…

madurairajesh கூறியது...
இந்தியா ஜ‌ன‌நாய‌க‌ப் போர்வை போர்த்திய‌
ப‌ண‌நாய‌க‌, அதிகாரவாரிசுக‌ள் ஆட்சி.
'ப‌சுத்தோல் போர்த்திய‌ புலி' போல‌.
ம‌க்க‌ள் தான் ஆட்டு மந்தைக‌ளாய்,
இல‌வ‌ச‌ புற்க‌ளால் ஈர்க்க‌ப்ப‌ட்டு,
க‌சாப்பு க‌டைகார‌ர்க‌ளின் பின்னால்.
வாக்குச்சீட்டின் வ‌லிமைய‌றியா
வ‌க்க‌த்த‌ வாக்காள‌ர்க‌ள்

அது போல் மக்களை சிந்திக்க விடாமல் செய்து வைத்திருக்கிறார்கள் இந்தப் பண முதலைகள். இதை முதலில் சரி செய்ய வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

அ.ராமநாதன் சொன்னது…

ரகுமான் கூறியது...
அண்ணா ,ரொம்ப அருமை என் தொடர்பில் இல்லை......
எனக்கு தெரியல இதுபோன்ற அபாயமான தொழிற்சாலைகள் மக்கள் வாழும் பகுதிக்கு அருகில் இருக்கலாமா ?

நிச்சயம் இருக்கக் கூடாது. ஏழை நாடுகளில் வாழும் மக்களைதான் அந்த அமெரிக்காவிற்கு மக்களாகவே எண்ணத் தோன்றாதே. முதலாளிகளுக்கு கொடி பிடித்து வரவேற்று இந்தியாவில் உங்கள் குப்பைகளைக் கொட்டி மக்களை அழியுங்கள் என நம் நாட்டு அரசியல் வியாதிகள் அழைக்கின்றனவே.