தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

11/30/2011

முன்னேற்றம்

மனித வாழ்வில் முன்னேற்றம் என்பது படைப்பில் இறைவனது செல்வாக்கு இருப்பதற்கு அடையாளமாகும்.


முன்னேற்றம்: இதற்காகவே நாம் இப்புவிக்கு வந்துள்ளோம்.


முன்னேற்றமே புவி வாழ்வின் நோக்கம். உனது முன்னேற்றம் நின்றுவிட்டால் நீ இறந்துவிடுவாய். முன்னேறாத ஒவ்வொரு கணமும் நீ புதைகுழியை நோக்கி ஓர் அடி எடுத்து வைக்கிறாய்.


இருக்கும் நிலையில் திருப்தியடைந்து ஆர்வமுறுவதை நிறுத்திய கணத்திலேயே நீ சாகத் தொடங்கிவிடுகிறாய். இயக்கமே வாழ்வு, முயற்சியே வாழ்வு, முன்னோக்கிச் செல்லுதல், வருங்கால வெளிப்படுத்துதல்களையும் சித்திகளையும் நோக்கி மேலேறுதல், அதுவே வாழ்வு. ஓய்வெடுக்க நினைப்பதைப்போல் ஆபத்தானது வேறொன்றுமில்லை.


ஒவ்வொரு நிமிடமும் ஏதோவொன்றைக் கற்கவும் ஒரு முன்னேற்றம் அடையவும் வேண்டியதிருக்கும், ஒவ்வொரு தருணத்திலும் ஒன்றைக் கற்றுக்கொள்வதற்கும் முன்னேறுவதற்கும் வாய்ப்பிருக்கும்.


முன்னேற்றம்: யோக பாதையில் முன்னேறுவதற்காக ஒவ்வொரு நிமிடமும் தன்னையும் தன் உடைமைகள் எல்லாவற்றையும் கொடுத்துவிடத் தயாராக இருத்தல். முன்னேற்றத்திற்கு முடிவே இல்லை. ஒவ்வொரு நாளும் நாம் செய்வதை மேலும் நன்றாகச் செய்யக் கற்றுக்கொள்ள முடியும்.


நீ எப்படி இருந்துள்ளாய் என்பதைப் பற்றி எண்ணாதே, நீ எப்படி இருக்கு விரும்புகிறாய் என்பதையே எண்ணு, நீ நிச்சயமாக முன்னேறுவாய்.


பின்னோக்கிப் பார்க்காதே, எப்போதும் முன்னோக்கியே நீ எதைச் செய்ய விரும்புகிறாயோ அதையே பார் - நீ முன்னேறுவது உறுதி.


நமது இதயத்தில் முன்னேற்றத் தீ எரிந்துகொண்டிருக்கச் செய்வோமாக. இன்று செய்ய முடியாததை இன்னொரு நாள் செய்வோம். முன்னேற்றத்திற்காகச் செய்யப்படும் முயற்சி ஒருபோதும் வீண்போவதில்லை.


முதலில் நாம் முன்னேறுவோம், பிறரை முன்னேறச் செய்ய அதுவே மிகச் சிறந்த வழி (இது ஆன்மீக பாதைக்குச் சொல்லியுள்ளார் என்பதைக் கருத்தில் நிறுத்துக).


எப்போதும் முன்னேறிக்கொண்டேயிருக்க விரும்புவோருக்கு மூன்று முக்கிய முன்னேற்ற வழிகள் உள்ளன.


1. தனது உணர்வு (consciousness) எல்லையை விரிவுபடுத்துதல்.


2. தனக்கு தெரிந்துள்ளதை இன்னும் நன்றாகவும் இன்னும் முழுமையாகவும் தெரிந்துகொள்ளுதல்.


3. இறைவனைக் கண்டுபிடித்து அவனுடைய சித்தத்திற்கு மேலும் மேலும் சரணடைதல்.


வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால்:


1. கருவியின் சாத்தியக்கூறுகளை இடைவிடாது வளப்படுத்துதல்.


2. இந்தக் கருவியின் (உடலை) வேலை செய்யும் முறையை இடைவிடாது பூரணப்படுத்துதல்.


3. இந்தக் கருவியை மேலும் மேலும் அதிக ஏற்புத்திறன் உடையதாகவும் இறைவனுக்குக் கீழ்ப்படிவதாகவும் செய்தல்.


மேலும் மேலும் அதிகமானவற்றை புரிந்துகொள்ளவும், செய்யவும், கற்றுக்கொள்ளுதல். இறைவனுக்கு முழுமையாகச் சரணாகதி செய்திட முடியாதபடி தடுக்கிற எல்லாவற்றையும் தன்னிடமிருந்து நீக்கிவிடுதல், தன்னுடைய உணர்வை மேலும் மேலும் அதிகமாக இறைவனுடைய செல்வாக்கை எளிதில் ஏற்கும் தன்மையுடையதாகச் செய்தல்.


இப்படியும் சொல்லலாம்: தன்னை மேலும் மேலும் விரிவாக்குதல், தன்னை மேலும் மேலும் முழுமையாக (இறைவனுக்கு மட்டுமே) சரணாகதி செய்தல்.

11/25/2011

ஹைக்கூ

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நம்து வலைதளத்தில் மிகப்பெரிய வாக்கு பதிவும் அதற்கான எதிர்ப்பு கவிதைகளும் ,கருத்துக்களும் வந்துகொண்டு இருக்கிறது ,அதற்கு ஆதரவளித்த நல் உள்ளங்களுக்கு அன்புகலந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்



நமக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஹைக்கூ கவிதை ஒண்ணு தந்த எனது நண்பரும் , வலைதள ஆர்வலரும் ஆன திரு.ரஜினிகாந்த் –திருப்பூர் அவர்களுக்கு நன்றியுடன் ,தங்களின் மேலான ஆதரவை நாடும் தமிழ் உலகம்

அவர் சம்ர்பித்த கவிதை உங்களுக்காக !!.....

ஹைக்கூ


மக்கள் மீது பேருந்து ஏறாமலே மக்கள் மாண்டனர் !


                                                ஏறிய பேருந்து கட்டணத்தால் !!










11/22/2011

உன்னை எண்ணி


மின்னலை 5CM இடைவெளியில் பார்த்தேன்..
நீ பளிச்னே சிரித்தபோது...

உன்னை பற்றி எழுதும் போது பக்கத்து வீட்டு பெண்கூட வெட்கப்பட்டது...
உனது வர்ணிப்பை பார்த்து...!

தடம்புரளாமல் சென்ற தண்டவாள இரயில் நீ...
உனக்காக சிலை வைக்க சொல்லி இருக்கிறேன் மவுண்ட்ரோட்டில்...

எப்பொழுதும் சோர்வாக இருக்கும் நீ என்ன.?
பைசாநகர சாய்ந்த கோபுராமா..!

உனது திமிர் ஈபிள் டவரை போல வளர்ந்து கொண்டே போகிறது...

உனது தரத்தை ஆராய்ந்தால்  ISI நிறுவனமே ஆடிப்போய்விடும்.. 
அப்படியோரு அதிசயம் நீ..

அமாவாசை இருட்டிலும் அழகாய் தெரிபவளே ..
.எப்பொழுது வருவாய் காதல் என்னும் வெளிச்சத்தில்...

பெண் என்பவள் பூவிற்கு சமமாம்..?
நீ என்ன புயலாய் வீசுகிறாய்..!

சந்தோசமாய் வாழ ஆசைதான் எப்படி..
.நீ இல்லாமல் வாழ்வது?

வசந்தங்கள் வாழ்த்தும்போது உனது கிளையின் பூவாவேன்...
இலையுதிர் காலமுழுவதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்..!

உறங்கும் போதும் உந்தன் பேரைச் சொல்லிப் பார்கிறேன்...
நெருங்கி வந்து பேசும்போது உச்சி வேர்க்கிறேன்..
உன்னை எண்ணி என் மேனி உருக..உருகி உருகி நூலானேன்....!

11/18/2011

நான் பிடித்த முயலுக்கு மூணு கால் ?




               ஆம்,இப்படி இருப்பவர் வேறு யாருமல்ல இன்றைய முதல்வர் அவரை எதிர்க்க எதிர்க்கட்சியும் இல்லை , ஆலோசனை சொல்ல நல்ல அமைச்சர்களும் தமிழகத்தில் இல்லை அவரை எதிர்க்க பதிவாளன் என்ற முறையில் கண்டன பதிவாக இதை பதிவு செய்துள்ளேன்


பேருந்து கட்டணங்களையும், பால் விலையையும் கடுமையாக உயர்த்தி ஓர் இரவில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது தமிழக அரசு. எவ்வளவு நியாயங்களைப் பேசினாலும் சராசரி மக்களின் பொருளாதார வாழ்வில் ஏற்றப்பட்டுள்ள இந்தச் சுமை ஏற்கத்தக்கதல்ல. மாறாக, நம்பிக்கையுடன் வாக்களித்த மக்களுக்கு துன்ப அதிர்ச்சி அளித்திருப்பது அநியாயமானதாகும்.


சென்னை உள்ளிட்ட நகரங்களில் பேருந்து போக்குவரத்துக் கட்டணம் 50% உயர்த்தப்பட்டுள்ளது. புறநகர் பேருந்துகளில் இக்கட்டணம் 60% உயர்த்தப்பட்டுள்ளது. தொலைத்தூர இடங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் கட்டணம் 60% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு எந்த அளவிற்கு அதிர்ச்சியானது என்பதை அறிய வேண்டுமெனில், இதுவரை கோவையிலுருந்து திருப்பூர் செல்ல வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.13இல் இருந்து ரூ.24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவை நகர மக்களை மட்டுமின்றி, தமிழ்நாட்டின் மற்ற நகரங்களில் இருந்து 100, 200 கி.மீ. தூர பயணத்தை பணி நிமித்தம் அடிக்கடி மேற்கொள்ளும் பயணிகளுக்கு பெரும் சுமையாகும்.



பால் விலையை 25% உயர்த்தியுள்ளது தமிழக அரசு. பால் குழந்தைகளுக்கான முக்கிய உணவு, ஏழை, எளிய குடும்பங்களின் அத்யாவசிய உணவு. அதன் விலையை இந்த அளவிற்கு உயர்த்தியிருப்பது, ஏற்கனவே உணவுப் பொருட்களின் விலை உயர்வால் கடும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் சராசரி மக்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. “உள்ளாட்சித் தேர்தல் முடிந்திருக்கலாம், வரட்டும் நாடாளுமன்றத் தேர்தல்” என்று மக்கள் கருவத் தொடங்கியுள்ளனர்.


இப்படிப்பட்ட விலையேற்றம் தவிர்க்க முடியாதது என்பதற்கு தமிழக முதல்வர் கூறிய நீண்ட விளக்கத்தில், முந்தைய அரசின் ஆட்சிமையையும், அதனால் ஏற்பட்ட கடன் சுமையையும், அதில் இருந்து பொதுத் துறைகளை மீட்க போதுமான கடனை மத்திய அரசு தர மறுத்திருப்பதையும் சுட்டிக்காட்டி, “நான் வேறு எங்கு சென்று உதவி கேட்க முடியும்? தவிர்க்க முடியாத இந்த உயர்வுகளை ஏற்றுக்கொண்டு அரசுக்கு முழு ஒத்துழைப்புத் தர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


தமிழக முதல்வர் கூறிய காரணங்கள் மறுக்க முடியாதவை என்பது உண்மையே. அதே வேளையில் பேருந்து போக்குவரத்துத் துறையையும், ஆவின் பால் நிறுவனத்தையும், அதிகக் கடனில் மிதந்துக்கொண்டிருக்கும் மின் கழகத்தையும் காக்க (மின் கட்டணம் யூனிட்டிற்கு ரூ.1.50 உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது) இப்படி ஒரே அடியாக மக்களின் தலையில் தாங்க முடியாத அளவிற்கு சுமையை ஏற்ற வேண்டுமா? இதை குறைந்த அளவிற்குச் செய்ய முடியாதா? என்ற வினாக்களுக்கு பதில் தேடுவது அவசியமாகிறது.


இந்த த்ருணத்தில் கவிஞர் இரா.இரவி எழுதிய கவிதை என்னை போன்றவர்களுக்கு பொருந்துமோ...


விலைவாசி ஏற்றம்


ஊதியத்தில் இல்லை மாற்றம்


வேதனையில் தனியார் பணியாளர்கள்ட்


பாதிக்கப்பட்ட ஆயிரம் பேரிலும்


தனியாகத் தெரிந்தது என் விழிகள்


கட்டண உயர்வின் வலியால்


மேற்கண்ட பதிவில் தங்களின் கண்டனத்தை தெரிவிக்க நினைத்தால் நம்து வலைப்பூவில் கண்டனத்திற்கான வாக்குபதிவு துவங்கியுள்ளேன் அதில் வாக்குகளையும் ,க்ருத்துக்களையும் பதிவு செய்ய வேண்டுகிறேன்...

11/10/2011

இறைவன் தந்த வரம்



வரம் ஒன்று தந்தான்

இறைவன் இலவசமாக

அழுகையும் கண்ணீரையும்

கனவுகள் பிரதிபலிக்க வேண்டிய

காலத்தில் - வாழ்க்கையெனும் பயணமே

கனவாகியது எனக்கு....


வேதனை என்ற சொல்லுக்கு

வரை விலக்கணம் இதுதான் எனக்
கூறியதுகன்னங்களின் ஓரம்

காய்ந்துபோன கண்ணீர்த்துளி..


என்னைவிட்டு புன்னகையும் பொன்நகையும் தொலை தூரம்
தொலைந்து போனதால்

பொன்நகையில் பார்ப்பதை விட என்னை

புன்னகையில் பார்ப்பது

பகல் நேர பௌர்ணமிகளாய்

தோன்றியது சிலருக்கு ....

என்னை நோக்கி அனுதாபம்

அடைந்த சில உறவுகளை

மறக்கவில்லை இன்னும் என் மனம் - ஆனால்

காயம் கண்ட இதயமதை மீண்டும்

காயப்படுத்திய நட்பு களை இன்னும்

ஏற்கவில்லை என் மனம் ஏனோ?


காலங்களும் கரைந்து சென்றது

காட்சிகளும் மாறியது

கனவுகள் போல

கண்கள் கண்ட கனவுகளும்

கலைந்து சென்றது

கார்மேகம் போல...

மனதில் எழுந்த கேள்விகளுக்கு

விடை தேடுகின்றேன்

நான் நாளும்..

மனித மனங்களும் மரித்து விட்டது

இறைவனோ மௌனம் காக்கின்றான்

கண்ணீரைப் பரிசாக தந்து விட்டு....

நான் இங்கே பேதலிகின்றேன்
வரும் கால வாழ்வை எண்ணி

யாரறிவார் என்  மனதை......

11/08/2011

மழை வெள்ளமே!


மழை வெள்ளமே!
உங்களுக்கு
பரிதாபம்  இல்லையா
ஏழையின் குடிசையில்
நுழைந்து
அவர்களின் உயிரையும்,
உடமைகளையும்,
வாரிக்கொண்டு அழிக்கிறாயே ...
அவர்கள் விடும் கண்ணீர்
 உனக்கு தெரியவில்லையா ....
அதுவே விஷமாக மாறி
உம்மை கடலிலே
தள்ளி விடபோகிறது
என்பதை மறந்து விடாதே...


குறிப்பு :திருப்பூர்  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவருக்கு சமர்ப்பணம் 

11/04/2011

"ஆளுமை"

Personality என்றதுமே அதன் நேரான தமிழாக்கம் "ஆளுமை" என்ற சொல் என்பது தான் பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்பு. ஆனால் "பெர்சனாலிடி" என்ற சொல் நம் மனத்தினுள் தோற்றுவிக்கும் ஒரு கருத்துக்கு முழுமையாக இந்த "ஆளுமை" எனுஞ்சொல் ஈடுகொடுக்கிறதா என்பது உடனே எழும் கேள்வி. அதன் வீச்சு சற்றே குறைவாக உள்ளதுபோல் தோன்றுகிறது. ஆனால் நம் பெர்சனாலிடியின் நீள, அகல பரிமாணத்தில் அந்த "ஆளுமை"யின் பங்கு என்ன என்பதை ஆராய்ந்தால் அதன் தாக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்!
இந்த பெர்ஸனாலிடி என்கிற சித்தாந்ததை உட்புகுந்து ஆராய முற்பட்டோமானால், அது எங்கோ இழுத்துச் செல்லும். நாம் இப்போது இத்தகைய தத்துவங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கப் போவதில்லை. அவற்றையெல்லாம் கரைத்துக் குடித்து யாராவது டாக்டர் பட்டம் பெறட்டும். நாம் இப்போது செய்ய முனைவதெல்லாம் நம் பெர்ஸனாலிடியை இவ்வுலகில் முன்னிறுத்தி வாழ்க்கையில் வெற்றி எனும் இலக்கை எட்டுவதற்கான வழிமுறைகளைத் தேடுவதுதான்.
இந்த "பெர்ஸனாலிடி" என்றசொல் "முகமூடி" என்று பொருள் கொண்ட "persona” எனும் கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து தோன்றியது. ஒருவர் பலவகை "பெர்சனா"வை வெளிக்காண்பிக்கக்கூடும். எவ்வகை மனிதனாகத் தன்னை பிறர் கண்முன் தோற்றுவிக்க நினைக்கிறோமோ அந்தத் தோற்றத்தை பிறர் மனத்திறையில் அறுதியாக நிறுத்தவேண்டும். You must present a favorable facade before the world. இதுதான் இந்த பெர்ஸனாலிடியின் அடிப்படைத் தத்துவம்.
சரி. இந்த மந்திரச் சொல் எதைத்தான் குறிக்கிறது என்பதை சற்று ஆராய்வோம்:
1. மற்றவர்களிடமிருந்து நம்மைப் பிரித்து நம் தனித்தன்மையைக் காண்பிக்குமுகமாக நம்மை முன்னிறுத்தல்
2. நம் பிரத்தியேகமான, நீட்சியுள்ள, முரண்பாடற்ற சிறப்பியல்புகள்
இதையே ஆங்கிலத்தில் குறிப்பிட முற்பட்டால், “Personality can be defined as the complex amalgam of all the attributes that characterize an individual; attributes that are unique to him – behavioral, temperamental and emotional” என்று கூறலாம். நம்மில் ஒவ்வொருவரும் நம் தனித்தன்மையினால் ஒரு முத்திரையைப் பதிக்கிறோம். அதன் ஆற்றலைப் பொருத்து நம்மைப் பற்றிய புரிதல், கணிப்பு பிறர்பால் அமையப்பெருகிறது. ஆனால் இந்த இயல்புகள் யாவும் நம்முடனே பிறக்கின்றன. ஆகையால் இந்த பெர்ஸனாலிடியும் பிறப்பிலிருந்தே நம்மோடு உள்ளதா, அதனை மாற்றியமைக்க முடியாதா என்று கேட்கலாம். அதற்கு விடையாகத்தான் இந்த "behavioral” என்ற சொல் அமைகிறது. நாம் நடந்து கொள்ளும் முறை, பிறரிடம் கொள்ளும் அணுகுமுறை இவற்றை சற்றே திருத்தி அமைத்துக் கொள்வதன் மூலம் நம்மைப் பற்றிய புரிதலை மாற்றமுடியும். ஆகையால் நம் "பெர்ஸனாலிடி"யின் வெளிப்பாடு நம் கையில் தான் இருக்கிறது என்று அடித்துச் சொல்லலாம்.
நான்கு சுவர்களுக்குள் நீங்கள் வாழ்ந்துகொண்டிருந்தால் உங்கள் பெர்ஸனாலிடி பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். நீங்களே உங்களை எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்து கொண்டு வாழலாம். ஒரு நிலைக் கண்ணாடியை எதிரே வைத்துக் கொண்டு "Mirror mirror on the wall, who is the fairest of all” என்று உங்களை நீங்களே துதி செய்து கொண்டு வாழலாம். ஆனால் இந்த உலகத்தின் ஒரு அங்கமாக சமுதாயத்தில் வாழவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நீங்கள் என்றும் பிறர் பங்களிப்பைப் பெறவேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். பிறரிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பங்கு நீங்கள் விரும்பும் அளவில் அமைவது உங்கள் பெர்ஸனாலிடியைப் பொருத்து அமையும். அதாவது பிறர்மேல் உங்கள் "ஆளுமை" எத்தகையது என்பதைப் பொருத்து அமையும்! இங்கே நிற்கிறார் இந்த "ஆளுமை"
“ஆளுமை" என்று நான் அழைக்க முற்படுவது பிறர் மனத்தில் நாம் செலுத்தும் ஆளுமையை. நம்மைச் சூழ்ந்துள்ள சமுதாயத்தில் அங்கம் வகிக்கும் சக மனிதர்களின் எண்ணப்போக்கு மற்றும் நம்மைப் பற்றிய அவர்களின் கண்ணோட்டம் - இவற்றை நம் ஆளுமையால் தன்வசப்படுத்த வேண்டும். நம் செயல்முறைகள், விழுமியங்கள், சொற்கள், சொல்லும் முறை, பலவகை மனிதர்களிடம் நம் அணுகுமுறை, ஒழுகல், பலவித சூழ்நிலைகளில் நாம் வெளிக்காண்பிக்கும் தன்னம்பிக்கை முதலிய ஆளுமை வெளிப்பாடுகள் ஆகிய யாவையும் ஒருங்கே சேர்ந்து நம்மைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தைத் தோற்றுவிக்கிறது. இதுதான் அந்த பெர்ஸனாலிடி! இந்த ஒளிக்கதிர்கள் பிறர் மனத்தினுள் புகுந்து அவர்களின் புரிதலையும், அவதானிப்புகளையும் நமக்குச் சாதகமாக மாற்றியமைத்து, நம்மைப் பற்றிய ஒரு உயர்வான பதிப்பை ஆங்கே செதுக்கிவிடக்கூடிய வல்லமை பெற்றது. இந்த வல்லமையைத்தான் பிறர்பால் கொண்ட "ஆளுமை" என்றழைக்கிறோம்.
அதுசரி. பிறர்மனதை ஆட்கொண்டு நம்வசப்படுத்த நாம் ஏதாவது சித்தரிடமிருந்து தீட்சை பெறவேண்டுமா, அல்லது வசிய மந்திரம், தாயத்து, பச்சிலை, லேகியம், கயிறு, தகடு, பில்லி, சூனியம், காலடி மண், உப்பு, மிளகு, மை - இதுபோன்ற வஸ்துக்கள் தேவையா. அல்லது உடான்ஸ் சாமியார் யாருக்காவது சொத்தை எழுதி வைக்க வேண்டுமா? அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். திருவாசகத்தில் "அவனருளாலே அவன்தாள் வணங்கி" என்று கூறியுள்ளதுபோல், நம் எண்ணம், சொல், செயல், நடத்தை முதலியவற்றை நெறிப்படுத்துதல் மூலமே பிறர் மனத்தை ஆளலாம்!
பலவகை மனிதர்கள் கூடியுள்ள ஒரு அவையினுள் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அதாவது கலை நிகழ்ச்சிகள் போன்றவை நிகழும் அரங்கு போலல்லாமல், ஒரு கருத்தாய்வுக் கூட்டம் நடக்கும் அமர்வறை - ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளக்கூடிய வகையில் அமைந்தது. நடு நடுவே நீங்கள் ஒரு பேப்பர் வெயிட்டை உருட்டிக் கொண்டோ, பேனாவை ஒரே முறையில் சுற்றிக் கொண்டோ ஆட்டிக் கொண்டோ இருங்கள். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் உங்கள் சேட்டைகளை அந்த அறையிலுள்ள பலர் பின்பற்ற ஆரம்பித்திருப்பார்கள்! அவர்கள் அறியாமலேயே உங்கள் செயலால் கட்டுப் படுத்தப் பட்டுள்ளார்கள். பின் நீங்கள் உரையாடும்போது ஒரு குறிப்பிட்ட சொல்லையோ சொற்றொடரையோ தொடர்ந்த்து பயன்படுத்துங்கள். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் அந்த அவையிலிருக்கும் பலர் வாயில் அந்த சொற்கள் அவர்களறியாமல் ஒலிப்பதைக் காணலாம். மிகச் சாதாரணச் சொற்கள் கூட இடம், பொருள், ஏவல் மாறுபாட்டால் பல பின்விளவுகளை ஏற்படுத்துகின்றன. அவற்றை பிரயோகிக்கும் விதம், பாதி சொல்லி மீதியைத் தொங்கலில் விடுவது - இதுபோன்றவற்றின் தாக்கம் மிக அதிகம். சொன்னதைவிட சொல்லாமல் விட்டது (untold story) தான் மிக்க பலம் கொண்டது. “மறைமுகச் சுட்டிக் கூறல்" என்னும் ஆயுதம் இவ்வுலகில் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதைக் காணலாம். பல திரைப்பட நடிக,நடிகைகள் தங்கள் பேட்டிகளில் பல தீயவர்கள் தங்களைப் பற்றி அவதூறான செய்திகளைப் பரப்பி அவர்களின் மார்க்கெட்டை சிதைத்து விட்டார்கள் என்று அழுதுள்ளதைக் கண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி பல நபர்கள் இதுபோல் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வே இதுபோன்ற புல்லுருவித்தன்மை நிறைந்தது. ஊன்றிக் கவனித்தால் அது போன்றவர்கள் அந்தச் சூழலில் எந்தப் பங்களிப்பும் இல்லாதவர்கள். ஆனால் மனிதர்களின் அடிப்படை பலவீனங்களைப் பயன்படுத்தி யாரிடமாவது ஒட்டுப்புல் போல் ஒட்டிக் கொண்டு முகஸ்துதியிலேயே காலம் ஓட்டும் "வேப்பிலை கோஷ்டி" freeloaders. ஆனால் இவர்களின் செல்வாக்கையும், இவர்களுடைய mischief value and negative influence பற்றியும் சிறிதும் குறைவாக மதிப்பிடக் கூடாது. சமயம் பார்த்து அங்கொன்றும் இங்கொன்றுமாக வார்த்தைகளைச் சிதற விட்டுவிட்டு ஒன்றுமே அறியாதவர்கள்போல், யாருக்கு வெடி வைத்துவிட்டு வந்திருக்கிறார்களோ, அவர்களிடமே போய் ரொம்பவும் வேண்டியவர் போல் நடித்து அவர்கள் வீட்டிலேயே விருந்துண்டு வருவார்கள்!
இது போன்ற oblique suggestions பலருக்கு பலவித பாதிப்புகளுக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. கிரிக்கெட் உலகில் "கர்னல்' என்று அழைக்கப்படும் திலீப் வெங்சார்க்கர் ஒரு பேட்டியில், தான் பேட்டிங் செய்ய விக்கெட் முன் நிற்கும் நிலை (stance) ஏதோ குறைபாடுள்ளது என்று யாரோ சொல்லப்போக, ஒவ்வொருமுறை பேட்டிங் தொடங்கும்போதும் அதுபோன்ற சந்தேகமும், நிச்சயமற்ற மனநிலையும் தொடர்ந்து ஏற்பட்டதாகக் கூறியிருக்கிறார். இதேபோல் மறைந்த கர்நாடக இசைமேதை ஜி.என்.பி அவர்களிடம் "மேல்ஸ்தாயி சட்ஜம்" வரும்போது சற்று "சுருதி சேரல்லையே" என்று கூறப்பட்டு, அவருக்கு அதன்பிறகு சட்ஜத்துக்கு வரும்போதெல்லாம் ஒரு tentativeness ஏற்பட்டு, தன்னம்பிக்கை போய், நிஜமாகவே அங்கு பிசிரடிக்க ஆரம்பித்துவிட்டது. அவர் ஆரம்ப காலத்தில் பாடிய பதிவுகளையும் பிற்காலத்திய ஒலிநாடாக்களையும் கேட்டால் இந்த மாறுதல் விளங்கும். இதுதான் நம் சொல், செயல் இவற்றின் ஆளுமை!
ஆகையால் நம் செயல்பாட்டை முழுவதும் நம் சுயக் கட்டுப்பாட்டுகுள் கொண்டுவந்து, அவற்றை சரியானபடி வெளிக்காண்பிப்பதன் மூலம், நம் ஆளுமையை நிலைநிறுத்தலாம் என்பது திண்ணம்.
நன்கறிந்த பலர் ஒரு இடத்தில் குழுமியுள்ளார்கள், அங்கு நீங்கள் செல்கிறீர்கள் என்றால், உங்களையறியாமல் அவர்களில் ஒருவர்பால் ஈர்க்கப் பட்டு அவரிடம் eye contact செய்து உரையாடத் தொடங்குவீர்கள். இது ஏன் அப்படி என்று உங்களால் இனம் கண்டு சொல்ல முடியாது. இதுதான் அந்த நபருடைய ஆளுமையின் வெளிப்பாடு.
நாம் மாறுபட்ட சூழ்நிலைகளில் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதை நாம் அறிவதில்லை. நம்மை நாம் காண்பதில்லை. பிறர்தான் காண்கிறார்கள். நாம் மனத்தினுள் அனுமானித்தபடிதான் பிறர்நோக்கிலும் அமையும் என்று எண்ணுகிறோம். ஆனால் உண்மையில் அதற்கு எதிர்மாறாக பிறர் புரிந்துகொள்ளக்கூடும் என்பதை நாம் அறியமாட்டோம். அதனால் நம் அணுகுமுறையும் செயல்படும் விதமும், முற்றிலும் rehearse செய்யப்பட்டு, இப்படிச் செய்தால் எப்படி அதன் விளைவுகளிருக்கும் என்பதை தெளிவாகத் திட்டமிட்டுச் செய்தல் வேண்டும். பொது இடங்களில் கடைப் பிடிக்க வேண்டிய etiquette முதலியவற்றில் கவனிப்பாக இருத்தல் வேண்டும். நம்மை பிறர் அலட்சியம் செய்ய ஒருக்காலும் இடம் கொடுக்கக் கூடாது. அதற்கான சூழ்நிலைகளை நாமே ஏற்படுத்தலும் கூடாது. பேசும்போது நிதானமாக, இடைவெளி கொடுத்து, deep, resonant voice-ல் பேசவேண்டும். High-pitched shrieks கூடாது. சிறுபிள்ளைத் தனமாக ஒருபோதும் நடந்துகொள்ளக் கூடாது. ஒரு பொருட்டாக மதிக்கப்பட லாயக்கில்லாத மனிதர் என்று யாரும் நம்மை கணக்குப் போட்டுவிட அனுமதிக்கக் கூடாது. சின்னச் சின்ன விஷயங்களில்கூட நம் ஆளுமையை வெளிப்படுத்த வேண்டும். நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, தெளிந்த சிந்தனை, அறிவார்ந்த உரையாடல் மற்றும் திருவள்ளுவர் பொருட்பாலில் கூறியுள்ள அறிவுரைகளின்படி நடந்தால் இப்பூவுலகம் உங்கள் கையில். மக்கள் மனமும் உங்கள் வசப்படும்!





11/03/2011

என் தமிழ்


தொழிற்சாலைப் பகுதிக்குள்
தொடர்ந்திடும் உரையாடல்களில்
தக்கதோர் இடமின்றித் தமிழ்
தயங்கி நிற்கிறது.
இயந்திரங்கள் ஆனாலும் - அதில்
இரசாயணங்கள் சேர்த்தாலும்,
இயக்குகின்ற முறையானாலும்,
பழுதாகிப் போனாலும்,
பார்த்துச் சரிசெய்தாலும்
சொல்வதெல்லாம் ஆங்கிலத்தில்.
வெல்லத் தமிழ் ஓர் ஓரத்தில்.
இலக்கியப் பார்வை
போற்றப்படும் நேரத்தில்,
அறிவியல் பார்வையும்
அகண்டதாய் வேண்டும்.
அன்னைத் தமிழுக்கு
அதுதான் புத்துயிர் ஊட்டும்.

11/01/2011

எனது பார்வையில் எழாம் அறிவு

      சென்ற இருநாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள KG திரையரங்கில் படம் பார்க்க சாதரண தமிழனாய் அமர்ந்து இருந்தேன் ,எனக்கு பிடித்த படங்களில் கண்டிப்பாக இருக்கும் என்பதை தெரிவித்து இந்த பதிவை தொடர்கிறேன்.



தமிழனின் வீரம் குறித்து அவர் பேசும் வசனங்களுக்கு தியேட்டர் அதிர்கிறது. 'ஒன்பது நாடுகள் சேர்ந்து ஒரு தமிழனை தாக்குறது வீரம் இல்ல. இலங்கையில் நடந்தது துரோகம். நிச்சயம் திருப்பி அடிக்கணும்' என்று சீறும் போது தமிழனின் டி.என்.ஏக்கள் அத்தனையும் தன்னை ரீசார்ஜ் செய்து கொள்ளும். இப்படி ஒரு கதைக்காகவும் வசனங்களுக்காகவும் கோடிகளை அள்ளி இறைத்த தயாரிப்பாளக்கும் மனசார பாராட்டுகள்

படத்தின் நிறை குறைகளை அலசிப் பார்ப்பதற்கு முன்… ஏழாம் அறிவு படத்தில்… பக்கத்து நாட்டுல என்ன நடந்தது, வீரம் வீரம் என்று சொல்லி என்ன செய்தோம்… கடைசியாக எல்லோரும் செத்தது தானே மிச்சம் என்று ஸ்ருதி சொல்ல… வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு… ஒரு நாட்டோடு ஒன்பது நாடுகள் மோதுவது வீரமல்ல, துரோகம்! என்று சூர்யா பேசும் வசனம் இதயத்தில் இடியாய் பாய்கிறது. இந்த வசனத்தை தைரியமாக ்வோடுஉணர படத்தில் வைத்த இயக்குனர்க்கு பாரட்டுக்கள்
படத்திற்கு வருவோம்… தற்காப்புக் கலையான குங்ஃபூவில் சிறந்து விளங்குவது சீனா. இந்த கலையை சீன மக்களுக்கு கற்றுக் கொடுத்தவர் புத்த மதத்தை தழுவிய போதி தர்மர் என்பவர். இதில் ஆச்சரியம் என்ன என்றால் போதிதர்மர் ஒரு தமிழர்.
பாரம்பரிய கலைகளை நாம் மறந்துவிட்டோம்… ஆனால் ஒரு தமிழன் கற்றுக்கொடுத்த கலை அறிவை வைத்தே தமிழர்களுக்கு ஆப்பு வைக்க துணிந்து விட்டான் சீனாக்காரன்… இந்த சிக்கலை எப்படி சமாளிக்கபோகிறோம் என்ற கற்பனைக் கலவையே ஏழாம் அறிவு.
கி.பி 6ஆம் நூற்றாண்டில் துவங்குகிறது கதை. பல்லவர்கள் காலத்தில் தான் தென்னிந்தியாவில் புத்த மதமும் தழைத்தோங்கியது. தென் இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான பல்லவ வம்சத்தை சேர்ந்தவர் ‘போதி தர்மர்’ (போதிதர்மராக அறிமுகமாகிறார் சூர்யா). அச்சமயத்தில் புத்த மதத்தை தழுவிய போதி தர்மர், மகாயான புத்த மதத்தையும் கலை, மருத்துவம், எதிரில் இருப்பவரை தன் வயப்படுத்தும் வர்மக்கலை போன்ற கலைகளை பரப்புவதற்காக சீனாவிற்கு பயணம் மேற்கொள்கிறார் போதி தர்மர்.
போதிதர்மர் சீனா சென்றிருந்த நேரம், சீனா பயங்கரமான தொற்று வியாதியால் பாதிக்கப்படுகிறது. அதில் இருந்து சீன மக்களை காப்பாற்றுகிறது போதிதர்மரின் மருத்துவம். இதனால் அப்பகுதி மக்களால் தெய்வமாகவே வணங்கப்படுகிறார் போதிதர்மர். அப்பகுதி மக்கள் எதிரிகளால் தாக்கப்படும் போதும் தன் வர்மக் கலைகளை பயன்படுத்தி மக்களை காப்பாற்றுகிறார்.
சாவூலின் குங்ஃபு என்ற தற்காப்பு கலையை சீன மக்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். கலை, மருத்துவம் என அனைத்திலும் சிறந்து விளங்கியவர் போதிதர்மர். அவர் மீண்டும் தன் தமிழகம் திரும்ப விருப்பப்பட்ட போதும், போதிர்மரின் உயிர் சீன மண்ணில் பிரிய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் விருப்பியதால் அவர்கள் கொடுத்த விஷம் கலந்த உணவை உண்டு அங்கேயே தன் உயிரை விடுகிறார் போதிதர்மர்.
பையோ வார் ( உயிர் போர் ) பற்றிய விஷயங்களை நம் தமிழ்படமான ‘ஈ’ படத்தில் பார்த்திருப்போம். ஏழாம் அறிவு படத்தில் இந்தியாவை தாக்க சீனா ரெட் என்கிற பையோ வார் பிளானில் இறங்குகிறது. அதன் தொடக்கமாக சீனாவை சேர்ந்த டோங்லி ( படத்தின் வில்லன் ) என்றவன் தமிழ்நாட்டுக்கு வருகிறான்.
அரவிந்த் ( சூர்யா ) சென்னையில் நடக்கும் பாம்பே சர்க்கஸ் கம்பனியில் வேலைபார்க்கும் சர்க்கஸ் கலைஞர். சர வெடியாக வெடிக்க இருந்த ‘ரிங்க ரிங்கா’ பாட்டு ஊசி வெடியாக மாறிவிட்டாலும்… அதில் சூர்யாவின் சாகசங்களும், அதைவிட மற்ற சர்க்கஸ் கலைஞர்களின் சாகசங்களும் பலே!
ரெட் ஆபரேஷனை தமிழகத்தில் தொடங்க டோங்லி வந்துவிடுகிறான். வந்ததும் அவனது முதல் வேலை, சுபாவை (ஸ்ருதிஹாசன்) கொலை செய்வதுதான். ஏன்?
மரபியல் பொறியாளராக சுபா (ஸ்ருதிஹாசன்). பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்தவர் போதிதர்மர். இப்போது உலகில் பல விளங்க முடியாத நோய்கள் வர தொடங்கிவிட்டது. போதிதர்மரின் டி.என்.ஏ.வை எடுத்து ஆராய்ச்சி செய்து, அதே விதமான டி.என்.ஏ-வை போதிதர்மரின் பரம்பரையில் யாருக்காவது இருக்கும். போதிதர்மரின் டி.என்.ஏ.வை இவருக்கு பொருத்தினால், போதிதர்மரின் கலை, மருத்துவ அறிவு மீண்டும் உலகத்துக்கு கிடைக்கும் என்பது தான் சுபாவின் ஆராய்ச்சி. (இந்த டி.என்.ஏ மேட்டர் Assassin’s Creed என்ற ஆங்கில படத்தில் இருந்து உருவப்பட்டதாகவே சொல்லப்படுகிறது…)
சுபாவின் ஆராய்ச்சி விஷயங்களை காசு வாங்கிக்கொண்டு சீனாவுக்கு தெரியப்படுத்துபவர் சுபாவின் பேராசிரியர் ரங்கராஜன்… இந்த சகுனி வேலையால் தான் வில்லன் டோங்லி தமிழ்நாட்டுக்கு வந்து புது வைரஸ் கிரிமியை பரப்பியதோடு… சுபாவை கொல்ல முயர்ச்சி செய்கிறான். போதிதர்மர் பரம்பரையில் வந்தவர் சர்க்கஸ் கலைஞராக இருக்கும் அரவிந்த். அரவிந்தை வைத்து அவருக்கும் தெரியாமலே ஆராய்ச்சியை தொடர்கிறார் சுபா.
சுபாவின் பழக்கத்தை காதலாக எடுத்துக்கொண்டு, அது இல்லை என்ற பின் ரெயில்வே ட்ராக்கில் யம்மா யம்மா சோகப்பாட்டுப் பாடி பின் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் தெரிந்து சுபாவுக்கு ஒத்துழைப்பு தருகிறார் அரவிந்த்.
போதிதர்மரின் திறமைகள் திருப்பவர… விளைவுகளை சந்திக்கிறான் வில்லன் டோங்லி!
படத்தின் முதல் பாதியில் பல பிரம்மாண்ட காட்சிகளோடு, நாம் அறியாத பல தகவல்களை சொன்னாலும்… பார்வையாளனுக்கும் படத்துக்கும் ஏதோ ஒருவித சம்பந்தம் இல்லாமலே போய்விடுகிறது.
முதல் பாதியில் பழையகால சீன கிராமத்தை காண்பிக்க உழைத்தவர்களுக்கு சபாஷ்! போதிதர்மரால் காப்பாற்றப்படும் சிறுமியின் சிரிப்பும் அதன் பின்னணி இசையும் இதம். சூர்யாவின் வர்மக்கலை வித்தைகளும் ஹீரோயிஸம் கலந்ததாகவே பிரம்மிப்பூட்டியது.
ஆனால் முதல் பாதியில் சூர்யாவுக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் இருக்கிற ரொமான்ஸ் காட்சிகள் எம்.ஜி.ஆர் காலத்து பழைய ஸ்டைல். அந்த யானை சவாரி ரொமான்ஸ் காட்சி புதுசு. காதல் தோல்வி என்று யம்மா யம்மா பாடலில் சூர்யா உருகி உருகி பாடுகிற அளவுக்கு அதற்கு முன்பு இருந்த காதல் காட்சிகள் உருக்கமானதாக அமையவில்லை என்பதே உண்மை.
முதல் பாதியிலும் க்ளைமாக்ஸ் காட்சி தவிர்த்தும் ஹிப்னாடிஸம் (நோக்கு வர்மம்– எதிரில்இருப்பவர்களை தன் வசம் வசீகரப்படுத்துவது) என்கிற கலையை வைத்துதான் சண்டை போடுகிறார் வில்லன். ஹிப்னாடிஸம் கலையை உணர்ந்தவர்களாகவே இருந்தாலும், அதை படமாக்கிய விதம் எதோ காமெடித்தனமாகவே இருக்கிறது.
இரண்டாம் பாதியில் லாரி முதல் கார், ஆட்டோ எல்லாம் ரவுண்டுகட்டி பறப்பது தயாரிப்பாளரின் பர்ஸை காலி செய்ததைத் தவிர பிரம்மாண்டம் எதுவும் இல்லை… வீடியோ கேம்ஸ் தான் நினைவுக்கு வருகிறது.
தமிழ் மொழியை குரங்கு என்று ஒருவர் சொல்லிவிட அவரை வார்த்தைகளால் விளாசும் காட்சிக்கு வந்த அபாரமான கைதட்டல், இன்னும் நாம் உணர்வுள்ள தமிழர்களாய் இருக்கிறோம் என்பதை நிரூபிக்கிறது. வெள்ளைக்காரன் இங்க வந்து நம்மை அடிமைப்படுத்தினான், இப்போ நாம அங்க போய் அடிமையாய் இருக்கிறோம் என்ற வசனங்கள் நச்! வசங்களோடு நில்லாமல் ஸ்ருதிஹாசனின் நடிப்புக்கும் கைதட்டல்! வில்லனிடம் போனில் கண்ணீர்விடும் காட்சியில் ஸ்ருதி பின்னிட்டார்.
வில்லன் நடிகர் ஜானி ட்ரி, பார்வையில் மிரட்டுகிறார். க்ளைமக்ஸ் காட்சியில் தான், நிமிர வைக்கிறார் இயக்குனர். பீட்டர் ஹென் அசாத்தியமான சண்டைக்காட்சியாகவே அதை உருவாக்கி இருக்கிறார். அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி விழுது.
ரவி கே.சந்திரனின் ஷாட்டும் ஆண்டனியின் கட்டும் இயக்குனர் சொன்ன சொல் கேட்டிருக்கிறது என்றே சொல்லலாம். இன்னும் என்ன தோழா… பாடலை வீணடிப்பார்கள் என்பது எதிர்பார்த்த விஷயம். நல்லவேளை படத்தின் பின்புலத்தில் வைத்து மகிழ்ச்சி. ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் முன்னந்தி சாரல்…, யம்மா யம்மா…, அவருக்கே உரிய மெலடி ஸ்டைல். ஓரிரு பாடல்கள் அவர் படத்தின் பாடல்களை அவரே ரீமிக்ஸ் செய்தது போல ஒரு உணர்வு.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படங்கள், கருத்துக்களை கமர்ஷியல் கலவையோடு சொல்வது போலவே இருக்கும். இதில் கருத்துக்கள் நிறைய இருந்தாலும், கமர்ஷியல் கலவைகள் சரியில்லை.
எவ்வளவு எதிர்பார்த்தாலும் அதைவிட மேலே மேலே மேலே இருக்கும் என்று சொன்னார் இயக்குனர். உண்மையை நீங்களும் பார்த்து சொல்லுங்கள்….