தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

9/30/2012

உன்னிலிருந்து பிறப்பதால்!!





பலமுறை  முயன்றும் முடியவில்லை!

இதயம்  'தாடி' என கேட்பது ...

ஆதலால்  தாடையில் வளர்த்தேன் 'தாடி'...!

பூக்களைத் தேடி வந்த வண்டுக்கு...

முட்களால் காயம்!  அவள் பார்வை!!

அவளைப் பார்த்தும் துடிதுடித்தது இதயம்!

எங்கே தாம்  இல்லாமல் போயிவிடுவோமோ என்று...!

கவிதை மனதின் உள்ளிருந்து பிறக்குமாம்! ஆம்!

ஒத்துக்கொண்டேன்.  உன்னிலிருந்து பிறப்பதால்!!

நேர்மாறான சிந்தனை


சமீபத்தில்  பல விதமான நேர்மாறான சிந்தனைக்கு உட்கொள்ளும்போது படிக்க நேர்ந்தது

அதை உங்களுடன்




* உன்னுடைய குறிக்கோளை அடைய முயற்சிக்க வேண்டும். தோல்வி கண்டு துவளக்கூடாது.

தோல்வியின் மூலமே நாம் புத்திசாலிகளாகிறோம்.

* உனக்குள் இருக்கும் ஆற்றல் புறத்தில் வெளிப்படும் வகையில் நீ வளர வேண்டும். வேறு

எவரும் உனக்குக் கற்பிக்கவும் முடியாது. உன்னை ஆன்மிகவாதி ஆக்கிவிடவும் முடியாது.

உனது சொந்த ஆன்மாவைத் தவிர வேறு ஆசிரியர் யாருமில்லை.

* இடையறாத பயிற்சியின் மூலம் கஷ்டங்களை நாம் வெல்ல முடியும். எளிதில் பாதிக்கப்படும்

வகையில் நம்மை நாமே விட்டுவைத்தாலன்றி, நமக்கு எதுவும் நேர்ந்துவிட முடியாது என்பதை

நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

* தொடர்ந்து புனிதமான எண்ணங்களையே சிந்தித்தபடி நன்மையைச் செய்து கொண்டிருந்தால்

தீய செயல்கள் தலைகாட்ட வழி ஏற்படாது.

                                                                                                                                   - விவேகானந்தர்

9/29/2012

சுந்தர பாண்டியன் - சினிமா விமர்சனம்




நான் படம் பார்க்க போனதையே ஒரு படமா எடுக்கலாம் போல. இன்னைக்கு பாத்து என்னை

படம் பாக்க விடாம விதி இடைஞ்சல் செய்ய அதை தாண்டி வந்து சிறிது குறைபாடோட

படத்தை பார்த்தேன்.


படத்திற்குள் வருவோம். இந்தப் படமும் சுப்ரமணியபுரம், நாடோடிகள், போராளி வரிசையில்

நண்பர்களைப் பற்றியது தான். இந்த ஆண்டு இதுவரை காமெடி படங்கள் ஹிட்டாகி வந்த போது

நல்ல பரபரப்பான இந்தபடம் சிறந்த என்டர்டெயின்மண்ட் படமாக அமைந்துள்ளது. விளம்பரம்

குறைவு என்பது திரையரங்கிலேயே தெரிந்தது. (இப்போ பண்ணரங்கா)

எல்லோரையும் எல்லாத்தையும் பாசிட்டிவாகவே நினைக்கும், நண்பர்களுக்காக எதுவும் செய்யத்

துணிந்த ஹீரோவின் கதை இது. நண்பனின் காதலுக்காக ஹீரோயினிடம் தூது போகிறார்

சசிகுமார். போன இடத்தில் ஹீரோயின் சசியையே காதலிப்பதாக சொல்ல அவரும் ஏற்றுக்

கொள்கிறார்.

ஹீரோயினுக்காக சண்டை போடப் போய் விபத்தாக ஒரு கொலை நடந்து விடுகிறது.

கொலைப்பழி சசியின் மேல். காதல் விவகாரம் ஹீரோயின் வீட்டுக்கு தெரிந்து அவசர

அவசரமாக மற்றொருவருடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. இவ்வளவையும் சமாளித்து

ஹீரோவும் ஹீரோயினும் இணைந்தார்களா என்பதே படத்தின் தோராயமான கதை.

நண்பனின் காதலுக்கு ஜடியா கொடுத்து அதற்காக விதவிதமான முறையில் பேருந்தில் ஏறும்

போது தியேட்டர் கலகலக்கிறது.

ஹீரோயின் கும்கி படத்திற்கான ஆடியோ வெளியீட்டில் பார்த்த போது சுமாரான பெண்ணாகவே

தெரிந்தார். ஆனால் ஸ்கிரீன் பிரசன்ஸ் அருமையாக இருக்கிறது. அந்த அம்மை தழும்பை

இயல்பாக விட்டிருப்பதும் ரசிக்க வைக்கிறது. நல்ல எதிர்காலம் இருக்கிறது. பக்கத்து வீட்டு

பெண்ணைப் போன்ற அழகு தான் கவர்கிறது.

சூரி படத்தில் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். இடைவேளைக்கு பிறகு திரைக்கதையின்

தேவை கருதி இவரின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது. ஆனால் முன்பாதியை குத்தகைக்கு

எடுத்து கலாய்க்கிறார்.

விஜய் சேதுபதி தனியாக பல படங்களில் கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கும் போது இதில்

எப்படி ஒரு சாதாரண கதாபாத்திரத்தில் நடித்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

படத்தின் வெற்றி முக்கியமான விஷயங்களில் ஒன்று படத்தின் வசனம் தான். இறுதியில்

நண்பன் குத்தினால் சாகும் போது கூட காட்டி கொடுக்காதது தான் நட்பு, இது போல் பல.

பாடல்களில் ஏற்கனவே கேட்காததால் வரிகள் நினைவுக்கு வரவில்லை. ஆனால் படத்தில் வரும்

இரண்டு மாண்டேஜ் பாடல்கள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இனிமேல் தான் ஹிட்டாகும்

என்று நினைக்கிறேன்.

சுப்ரமணியபுரத்திலிருந்து நண்பனின் துரோகம், நாடோடிகளில் இருந்து நண்பனின் நண்பன்

எனக்கும் நண்பனே என்ற கான்செப்ட், தூங்கா நகரத்திலிருந்து கிளைமாக்ஸ் என பல

படங்களிலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும் பார்ப்பதற்கு வலிந்து திணித்தது போல் இல்லாமல்

இயல்பாக இருக்கிறது.

படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம்.  சில குறைகள் படத்தில் இருந்தாலும் அவற்றை

குறிப்பிட்டு சொல்வது எல்லாம் தேவையில்லாத ஒன்று.

9/19/2012

பிள்ளையார்

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்




பார்வதிதேவியின் புத்திரனாக அவதரித்த விநாயகர் ஆரம்பத்தில் ஆதிவிநாயகர் என்ற பெயரில் மனித உருவத்துடன் தான் இருந்தார். பிரம்மன் உயிர்களைப் படைக்கும் பணியை மேற்பார்வையிட சென்றார். அந்நேரத்தில், தொழிலில் சற்று கவனமில்லாமல், தூக்க கலக்கத்தில் கொட்டாவி விட்டார் பிரம்மன். கொட்டாவி சோம்பலின் அறிகுறி. சோம்பல் வந்து விட்டால், துன்பம் பின்னாலேயே விரட்டிக் கொண்டு வந்து விடும். அந்த கொட்டாவியில் இருந்து ஒரு அரக்கன் பிறந்தான். இவன் தன்னைப் படைத்த பிரம்மனை வணங்கினான். ஐயனே! நீங்கள் உபயோகிக்கும் மண் உள்ளிட்ட எந்த உபகரணத்தில் இருந்தும் நான் பிறக்கவில்லை. வாயில் இருந்து பிறந்துள்ளேன். தாயில்லா பிள்ளையான நான் தங்களின் பிள்ளையாக இருக்க விரும்புகிறேன், என்றான். பிரம்மா இதற்கு சம்மதிக்கவில்லை. கோபம் கொண்ட அவன், அப்படியானால், நான் கேட்கும் வரத்தையாவது தாருங்கள், என்றான். பிரம்மா சம்மதிக்க, நான் யாரைக் கட்டித் தழுவுகிறேனோ அவர்கள் சாம்பலாக வேண்டும், என்றான். பிரம்மா சம்மதித்து விட்டார். அவ்வளவு தான். தன்னை மகனாக ஏற்காத பிரம்மனையே கட்டிப்பிடிக்க முயன்றான் அவன். பிரம்மா ஓடிவிட்டார். இதைப் பார்த்த விநாயகர் தந்தையிடம் சென்று நடந்த சம்பவத்தை சொன்னார். பிரம்மா இல்லாததால் உயிர்களின் பிறப்பு நின்றது.


கொட்டாவியில் இருந்து பிறந்த சிவந்த நிறமுடைய அந்த அரக்கன் சிந்தூரன் என தனக்கு பெயர் சூட்டிக் கொண்டான். தேவலோகத் தெருவில் போவோர், வருவோரை எல்லாம் கட்டிப்பிடித்து பஸ்பமாக்கினான். அவனைக் கண்டு நடுங்கிய தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவபெருமான் விநாயகரை நோக்கினார். தந்தையின் பார்வையை குறிப்பால் உணர்ந்த கணபதி சிந்தூரனைக் கொல்ல முடிவெடுத்தார். இந்நிலையில் மகேஸ்வரன் என்ற குரு (பிரகஸ்பதி) பக்தன், அவரை தினமும் கோயிலில் சென்று வணங்குவான். குரு அவன் பக்திக்கு மகிழ்ந்து, என்னை வணங்கிய உன் சிரம் இந்த உலகத்தாரால் வணங்கப்படுவதாக,என வரமளித்தார். அதற்கான நாளை எதிர்பார்த்திருந்தான் மகேஸ்வரன். ஒருநாள் அவன் தன் பரிவராங்களுடன் வீதியுலா சென்ற போது, அவ்வூருக்கு நாரதர் வந்தார். மன்னன் அவரைக் கவனிக்காமல் சென்றான். கோபமடைந்த நாரதர் அவனை அசுரனாகும்படியும், யானத்தலையுடன் திரியும்படியும், சிவனால் அத்தலை அறும்படியும் சபித்தார். இதன்பிறகு மகேஸ்வரன் அட்டூழியம் செய்து திரிந்தான். சிவபெருமான் அவன் சிரத்தை அறுத்தார். பிரகஸ்பதியிடம் ஓடோடிச் சென்ற விநாயகர், உங்கள் விருப்பப்படி உங்களால் வரம் தரப்பட்ட மகேஸ்வரனின் தலையை நான் பொருத்திக் கொள்வேன். அவன் தலையுடன் கூடிய என்னை எல்லாரும் பணிவர், என்றார். பின் அந்த தலையை தன் திருமேனியில் தாங்கி காட்சி கொடுத்தார். அன்று முதல் விநாயகருக்கு கஜானனர் என்ற பெயர் ஏற்பட்டது. ஒருநாள் சிந்தூரன் விநாயகரை எதிர்க்க வந்தான். சர்வசக்தியுள்ள அந்தக்கடவுள் சிந்தூரனை அப்படியே தூக்கி தன் மத்தகத்தில் சாந்தாக பூசிக்கொண்டார். தேவர்கள் மகிழ்ந்தனர். வடமாநிலங்களில், விநாயகர் உடல் முழுவதுமே செந்தூரம் பூசுவதன் காரணம் இதுவே.



காணபத்தியம்

இந்து மத்தத்தினுள் உள்வாங்கப்பட்ட சமயமான காணபத்தியம் எனும் பிரிவு இக்கடவுளை மையப்படுத்தியதே.
இந்துக்களின் புராணக்கதைகள், இக்கடவுள், மற்றைய இந்துக்கடவுள்களான சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாக சித்திரிக்கிறது. முருகன் எனும் கடவுளின் அண்ணனாகவும் இக்கடவுள் கருதப்படுகிறது. இக்கடவுளின் வாகனமாக மூஞ்சூறு கருதப்படுகிறது.



திருவுருவ விளக்கம்



திருவடி


ஆன்மாவைப் பொருந்தி நின்று மலகன்ம மாயைகளை தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன.



பெருவயிறு

ஆகாசம் எல்லாப் பொருள்களும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந்தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது.



விநாயகரின் வேறு பெயர்கள்



பிள்ளையார்


கணபதி - கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.

ஆனைமுகன் - ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.

கஜமுகன் - கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.

விக்னேஸ்வரன் - விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள்


விநாயக சதுர்த்தி


வருடந்தோறும் ஆவணி மாதம் வளர்பிறைச்சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி, இக்கடவுளுக்கான விழாக்களுள் முக்கியமானதாகும்.

9/17/2012

என் தமிழ் மொழி






"பிறந்தவுடன் நான் சொன்ன  "அம்மா" என்ற என் மொழி 


மழலையாய் நான் கற்ற மழலை மொழி 

அதுவே செம்மொழியான என் தமிழ் மொழி! 

பண்பை வளர்த்த பண்பாட்டு மொழி 

என் கவிதைகளை உருவாக்கிய  என் காதல்  மொழி 


செம்மொழியான என் தமிழ் மொழி! 

என் பகுத்தறிவை வளர்க்கும் பக்குவ மொழி 

உலகை ஆளப் பயணிக்கும் மொழி 

செம்மொழியான என் தமிழ் மொழி! 

நம் தமிழ் இதயங்களை இணைக்கும் இனிய மொழி 

இணையத்தில் வளரும் செம்மொழியாக இங்கே! 

இணைக தமிழ் இதயங்கள்! 

9/15/2012

நம் தோழர்கள்........


கடல் தாண்டி ஆண்டு வந்த 


தமிழ் சமுதாயம் இன்று கலை இழந்து 


கவலையோடும் கண்ணீரோடும் கடலுக்கு 


நடுவே அல்லல்படுகிறது (கூடங்குளம் எதிர்ப்பாளர்களின் நிலை)


வாழ்வு வேண்டுமென்று வந்தோரெல்லாம் 


வசதியாக வாழ்கின்றனர் என் தமிழ்நாட்டிலே 


இங்கு வாழ்ந்துவிட்டு சென்ற தமிழீழ 


தமிழினமோ தவிக்கிறது தண்ணீருக்கும் 


தங்குமிடத்துக்கும்…. 


எக்காலமும் நிக்காது இக்காலம் வரை 


தொடர்கிறது ஒருக்காலும் அனுமதியாத 


சுயமரியாதை யுத்தம்… 


என் தமிழன் ஒன்றுபடும் காலம்  வரை 


இது நிற்காது செல்லும் நித்தம் 


அதுவரை நம் தோழர்கள் குடும்பத்தை 


அரவணைப்போம் அவர்களுள் ஒருவராக


9/07/2012

பிரிவுடன்..........




நீரில்லா மீனாய் 

தவித்த போது 

நேரில் வந்தாள் 

வசந்தம் தந்தாள்! 

பார்க்கும் இடமெல்லாம் 
தேவதை அவள் முகம் பகலில் ! 

இரவில் அவளை தேடினேன் 
நிலவாய் வானில் ! 

விழிகளின் சயனத்தில் 
இவளுடன் பயணம் கனவில் ..! 

கனவுடன் கலைந்தது 
அவளின் நினைவுகள் 

அவள் பிரிவுடன் ..! 

9/04/2012

வரப்பிரசாதமே

 

 

கட்டு கட்டாக கவிதைகளையும்

கட்டுரைகளையும் மன வேதனைகளையும்

வார மற்றும் மாத பத்திரிகைகளுக்கு 

அனுப்பி விட்டு பத்திரிகையில் 

வெளியாகாதா என்ற ஏக்கத்தில் 

கண்கள் பூத்து எழுத்திற்கு நான் தகுதி

இல்லையோ என்று வேதனை பட்ட 

நாட்கள்தான் எத்தனை எத்தனை....

நண்பர்களிடம் நல்ல விதமான கருத்தும் 

பாரட்டும் பெறும்போது பூரித்த நாட்கள்தான்

எத்தனை எத்தனை?

எழுத்து என்ற ஓர் அற்புத

வலைத்தளம் என்னை போல்

நல்ல உள்ளங்களுக்கு


ஓர் சிறந்த வரப்பிரசாதமே...