தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

3/30/2010

மௌனமாய்த் தேடுகிறேன்

இன்னும் எத்தனை விடியல்தான்
கசங்காத அடர்த்தியான போர்வைக்குள்
முயல் குட்டியாய் சுருண்டு எனக்கான
வெப்பத்தை நானே தேடுவேன்

போர்வை விலகிய வலது பாதத்தின்
சுண்டு விரல் வழி நுழைந்த குளிர்
எலும்புக்குள்ளும் நரம்புக்குள்ளும்
இன்னும் கூடுதல் இம்சையாய்

நீ கையோடு எடுத்துச் சென்று விட்ட
உன் சதைகளில் கசியும் வெப்பத்திற்கு
கைகளை நீட்டி நடுங்கும் உடலோடு,
உதறும் மனதோடு வாடுகிறேன்

மண்டிக்கிடக்கும் புதர்களைத் தாண்டி
உன் கைகள் நீளமுடியாத தொலைவில்
தன்னந்தனியாய் வாடுகிறேன் வாசமும்
வண்ணமும் உணரப்படாத மலராய்

துளியும் குறையாமல் காய்ந்து கனக்கிறது
அள்ளியெடுக்க நீ இல்லாமல்
பருவத்தில் எனக்குள் வெடித்துச்சிதறி
மனதில் மலையாய் குவிந்த காதல்

நீ தேட மறந்த நாளன்று எனக்குள்
நானே தொலைந்துபோனேன்
ஆனாலும் மௌனமாய்த் தேடுகிறேன்
அடையாளம் சிதைந்த என்னை....

வறுமையின் நிறம் சிவப்பா ...





















என்னசெய்து என்
செல்லத்தின் அழுகையை
நிப்பாட்ட வழியேதும்
உண்டா?...

கைகள் உண்டு
வாரியணைக்க‌
தாலாட்டு பாடி
தூங்க வைக்க
தொட்டில் உண்டு

கொஞ்சி கொஞ்சி
அவனை தூங்க‌
வைக்க மடி உண்டு
வெளியில் அழைத்து
செல்ல கால்கள் உண்டு

என்னசெய்து அழுகையை
நிப்பாட்ட ...

அவன் பசிதீர
மார்பு உண்டு
இருந்தும் இல்லையே
சுரக்க சுரக்க‌
அது என்ன‌
அமுதசுரபியா

என் பசியை
தாங்கிக் கொள்வேன்
அவன் பசி?.............

இடுக்கை : அ.ராமநாதன்

தமிழா தமிழா ...


தமிழ் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் . தமிழ் என்ற வார்த்தையை உச்சரிக்கும் போதே எவ்வளவு இனிமையாக உள்ளது . இப்போது எல்லோருக்கும் பிற மொழி மோகங்கள் நம்மை ஆர்ப்பரிக்க தொடங்கியுள்ளது . தமிழில் எத்தனை நூல்கள் உள்ளது . அதனை பாதுகாக்கிறோமா என்றால் இல்லையெனலாம் . தமிழனாக இருந்தால் மட்டும் போதாது . தமிழை பாதுகாக்க வேண்டும் . தமிழில் உள்ள நூல்களை பாதுகாக்க நம்மால் ஆன சிறு முயற்சி மேற்கொள்ள வேண்டும் .

தமிழ் இலக்கிய நூல்களை பத்தி நாம் அறிந்து கொள்வதற்கு நான் இங்கே தொகுத்து தந்துள்ளேன் .

தமிழ் இலக்கியம் பலவகைப்படும். அவை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியம், தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தம் , மருத்துவ நூல்கள் எனப்படும் சித்தர் எழுதிய இலக்கிய நூல்கள் என விரிவடைந்து இலக்கிய வகையின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது . காலத்துக்கு ஏற்ப கருத்துகள் வளர்ந்து கொண்டே வருவதைப் போல இலக்கிய வளர்ச்சியும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தையே தமிழ் இலக்கியத்தில் சங்க காலம் என்று குறிப்பிடுகிறார்கள்.

தொன்மையான தமிழ் மொழிகளின் மிக மூத்த நூல் அகத்தியர் எழுதிய அகத்தியம் என்று கூறப்படுகிறது.

இலக்கியம் தோன்றியபிறகே அதனை ஒழுங்குபடுத்த இலக்கணம் தோன்றி இருக்கமுடியும் என்பதால், அகத்தியத்திற்குமுன்னரே தமிழில் சிறப்பான இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும் .

இப்போது நமக்குக் கிடைத்திருக்கிற மூத்த தமிழ் நூல் தொல்காப்பியமே. இதுவும் இலக்கண நூல்தான்.

[ கி.மு.300 - கி.பி 100. இந்தக் காலக்கட்டத்தில் தமிழ்ச் சங்கம் அமைத்து தமிழ் வளர்க்க முற்பட்டனர் தமிழ் அறிஞர்கள். அப்போது தோன்றியவையே சங்கம் இலக்கியம் என்று வழங்கப்படுகிறது.அதோடு
இக்காலக் கட்டம் கடைச் சங்ககாலம் எனப்படுகிறது]

சங்க இலக்கியம்

சங்க இலக்கியத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1. பத்துப் பாட்டு.
2. எட்டு தொகை.
3. பதினெண் கீழ்க்கணக்கு.

பத்துப் பாட்டு

இவற்றில் பத்துப்பாட்டு ஒரு தனிப்பட்ட நூல் அல்ல. பல நூல்களின் தொகுப்பு.

மொத்தம் எட்டுப் புலவர்கள் எழுதிய பாடல்கள் பத்தைத் தொகுத்து பத்துப்பாட்டு என்று கூறினர். இவற்றில் ஒவ்வொரு பாட்டும், தனி நூல் என்று சொல்லத்தக்க அளவில் முழுமையானவை. இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றும் 100 அடிகளுக்கு மேலானவை. 500 அடிகள் வரை கூட சில போகும், சில பத்துப்பாடல்கள் .

முருகு, பொருநாறு, பான் இரண்டு, முல்லை, பெருகு, வளமதுரைக் காஞ்சி,
மருவினிய கோலநெடுநல் வாடை, கோல் குறிஞ்சி, பட்டினப் பாலை,
கடாத்தொடும் பத்து

அதாவது,

திருமுருகாற்றுப்படை, பெரும்பாணாற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை,
பொருநாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை,
குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்....
ஆகிய 10 நூட்கள் 10 பாட்டு.

எட்டுத் தொகை.

எட்டுத் தொகை நூற்களும், பல புலவர்கள் இயற்றிய பாடல்களின் தொகுப்பே, ஆனால், இவற்றுள் எந்தப் பாடலையும் ஒரு தனி நூலாகக் குறிப்பிடமுடியாது. 100 அடிகளுக்குக் கீழ்ப்பட்ட இந்த
எட்டுத் தொகை நூலக்ளை ஒரு பழம்பாடல் இப்படி விவரிக்கிறது.

நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐயகுறுநூறு பதிற்றுப்பத்து, பரிபாடல்
கலித்தொகை, அகநானூறு, புறநானூறு...., ஆகியவை இந்த 8 நூல்கள் ஆகும்.

பதினெண் கீழ்க்கணக்கு.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர்கள் என்போர் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து பாண்டியர்களை வென்று மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். இவர்கள் காலத்தில்தான் முச்சங்கத்தின் கடைசியான கடைச்சங்கம் அழிந்தது. தமிழர்களின் கலை,
கலாச்சாரம், நாகரிகம் நசிய தலைப்பட்டது. தமிழகத்தின் இருண்ட காலம் என்பார்கள்.
இதனை 'சங்கம் மருவிய காலம்' என்பார்கள்.அப்போது தோன்றிய நூல்கள் பதினெண்கீழ்க் கணக்கு என்று அழைக்கப்படுகிறது.

ஐந்தோ அல்லது அதற்கு கீழோ அடிகளைக் கொண்டு அமையப் பெற்றவை கீழ்க்கணக்கு நூல். அதற்கு மேற்பட்ட அடிகளைக் கொண்டவை மேற்கணக்கு நூலகள் . மேற்கணக்கு நூல்களைக் கொண்டவை மேற்கணக்கு நூல்கள்.(பத்துப்பாடல், எட்டுத்தொகை)

அறம்,பொருள், இன்பம் ஆகிய மூன்றையோ அல்லது மூன்றில் ஒன்றையோ விளக்கி வெண்பாவில் எழுதப்படுவது கீழ்க் கணக்கு நூல்கள்.
நாலடி, நான்மணி,நாநாற்பது ஐந்திணை, முப்பால்,கடுகம், கோவை. பழமொழி -மாமூலம் இன்னிலை சொல் காஞ்சியோடு ஏலாதி என்பதும் கைநீலையுமாம் கீழ்க்கணக்கு.

(பதிணெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளைச் சொல்வது உண்டு.
அது பற்றிய குறிப்பைக் காணவில்லை.ஒருவேளை முப்பால் எனச் சொல்லப்
பட்டிருப்பதால் இருக்கலாம்?)

நாலடியார், நான்மணிக் கடிகை, இன்னா நாற்பது, இனிவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி
முதுமொழிக் காஞ்சி, முப்பால், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்ச மூலம் ஆகிய 11
அற ஒழுக்க நூல்களும்,

ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணை மாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார்நாற்பது, களவழி நாற்பது ஆகிய 7 அகத்துறை (காதல்) நூல்களும் சேர்த்து 18 நூல்கள் பதினென்கீழ்க்கணக்கு நூல்களாக வருகின்றன. இவையே சங்க கால நூற்கள்.

செய்யுள் இலக்கியம்

காகிதமும் அச்சு இயந்திரமும் இல்லாத காலத்தில், ஓலைச் சுவடிகளில் எழுதிப் படிப்பதும், சுவடிகளைப் பேணிக் காப்பதும் கடினமானதாக இருந்தது. செய்யுள் வடிவங்களைப் பெற்ற கலை இலக்கியங்கள் எளிதில் மனனம் செய்வதற்கும் நினைவில் வைத்துக் கொள்வதற்கும் ஏற்றதாக, பயனுடையதாக விளங்கியது. எத்தகைய செய்திகளானாலும் அவற்றைக் கல்லிலோ, செப்புப் பட்டயங்களிலோ ஓலைச் சுவடிகளிலோ எழுதும் போது, செய்யுள் வடிவமே கையாளப்பட்டது. அவ்வாறு, செய்யுளுருவம் பெற்ற மருத்துவம், தனித்த இலக்கிய வகையாக வளர்ச்சியுற்று ஏட்டுருவம் பெறத் தொடங்கிற்று.

சித்தர் இலக்கியம்

தமிழில் வழங்கி வரும் மருத்துவ நூல் ஆசிரியர் பெயர்கள் அனைத்தும் சித்தர்கள் பெயராலேயே வழங்கப்படுகின்றன. அகத்தியர்12000; திருமூலர்8000; போகர்7000; மச்சமுனி800; சட்டமுனி3000; கொங்கணர்3000; கோரக்கர் சந்திரரேகை என்றே குறிப்பிடப்படுகின்றன. இப்பெயர்கள் அனைத்தும் சித்தர் பெயராகவே இருப்பதனால், மருத்துவ இலக்கியம் அனைத்தும் ‘சித்தர் இலக்கியம்’ என்னும் பொதுப்பெயரால் வழங்கப்படுகின்றன.

சித்தர் இலக்கியம் முழுவதும் மருத்துவம், வாதம், யோகம், ஞானம் என்னும் நான்கு கூறுகளைக் கொண்ட மருத்துவத்தின் அடிப்படைகளை வகுத்துக் கொண்டு, நோய்களைக் கண்டறிதல், மருந்துகளை நோய்களுக்கு ஏற்றவாறு தயாரித்து அளித்தல், நோய் அணுகாதிருக்க கற்ப முறைகளைக் கூறுதல், சாகா நிலையைப் பெற யோக முறைகளை விளக்குதல் போன்ற செய்திகளையும் முறைகளையும் உரைப்பதால், ‘மருத்துவ இலக்கியம்’ என்றும் வழங்கப்படும். அவ்வாறான மருத்துவ இலக்கிய நூல்கள் பழங்காலத்திலிருந்தே தமிழ்மொழியில் வழங்கி வருவதனால், அவை, ‘தமிழ் மருத்துவ நூல்’ என்று பழமையைச் சுட்டும் பெயராகவும் வழங்கப்படுகின்றன.

அகத்தியர்

தமிழில் காணப்பெறும் மருத்துவ நூல்களில் அகத்தியர் பெயரால் வழங்கும் நூல்களே அதிகமாக இருக்கின்றன.கீழ்த்திசைச்சுவடி நூலகத் தொகுப்பில் காணப்பெறும் மருத்துவச் சுவடிகளில் அகத்தியர் பெயரால் வழங்கப் பெறும் 166 சுவடிகள் உள்ளன. அத்தனை செய்யுள்களையும் ஒருவரால் இயற்றிட இயலுமா? என்று எண்ணும் போதே ஒரு வித மலைப்புத் தோன்றுகிறது. அந்நூல்களில் காணப் பெறுவது கற்பனைச் செய்யுள்கள் அல்ல; அறிவியல் கருத்துகளைக் கொண்ட மருத்துவச் செய்யுள்கள்.

அவ்வாறு கூறப்பெறுகின்ற நூல்கள் தொகுக்கப்பெற்ற பட்டியல்களில் காணப் பெறாதவை. அவ்வாறான நூல்களில் சிலவற்றின் விபரம் வருமாறு:

அகத்தியர்81000; அகத்தியர்51000; அகத்தியர்30000; அகத்தியர் 21000; அகத்தியர்18000; அகத்தியர்8000; திருமூலர்8000; பரஞ்சோதி 8000; கோரக்கர் வெண்பா; மச்சமுனி கலிப்பா; சங்கர மாமுனி கிரந்தம் போன்றவையாகும்.

இந்த சுவடிகள் எல்லாம் காலப்போக்கில் அழிந்து வருகிறதே . இதனை பாதுகாக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது .

மிகவும் நலிந்தும் சிதைந்தும் காணப்படும் சுவடிகளும், நல்ல நிலையிலும் சிதைவுகள் ஏதுமில்லாத நிலையில் உள்ள சுவடிகளும், தொடக்கமும் முடிவும் இல்லாமல் இடைப்பகுதி மட்டுமே உள்ள சுவடிகளும், முழுவதும் இருந்தாலும் படித்தறிய முடியாத நிலையில் உள்ள சுவடிகளுமாக இருக்கின்றன.

தமிழ் நாட்டில் உள்ள சுவடி நிலையங்களாவன:

1. தமிழ்ப் பல்கலைக்கழகம், ஓலைச்சுவடிகளைத் தொகுத்துப் பாதுகாப்பதுடன், அவற்றை ஆய்வு செய்வதற்கென்று ‘ஓலைச் சுவடித்துறை’ என்றொரு தனித்துறையையும் இயக்கி வருகிறது. அத்துறையில் சுமார் 5000 சுவடிகள் இருக்கின்றன. அவற்றுள் மருத்துவச் சுவடிகள் மட்டும் ஏறத்தாழ 60 சதவீதம் எனலாம்.

2. சென்னை, அரசினர் கீழ்த்திசைச்சுவடி நூலகம், பல்லாயிரக் கணக்கான சுவடிகளின் களமாக விளங்குகிறது. இந்நூலகம்

ஆய்வாளர், சுவடியியல் கற்போர், பதிப்பாளர், மருத்துவர், கல்வியாளர் போன்ற அனைவரும் பயன்படுத்தும் நோக்கில் அமைந்திருக்கிறது. இந்நிலையத்திலுள்ள தமிழ் மருத்துவச் சுவடிகளின் பட்டியல் பின்னிணைப்பில் இணைக்கப் பட்டுள்ளது.

3. தஞ்சைச் சரசுவதி மஹால் நூல் நிலையம், தஞ்சை மன்னர் சரபோஜி (கி.பி. 1798 -1832) அவர்களால் ஏற்படுத்தப்பட்டு, பல்வேறு துறை சார்ந்த சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள் எனத் தொகுக்கப்பெற்று பாதுகாக்கப் படுகின்றன. இந்நிலையத்தில் பல்வேறு தலைப்புகளைக் கொண்ட 396 மருத்துவச் சுவடிகள் உள்ளன.

4. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 270 மருத்துவச் சுவடிகளைத் தொகுத்திருக்கிறது. அவற்றுள் சில பதிப்பிக்கப்பட்டும் வருகின்றன.

5. சித்த மருத்துவ மேம்பாட்டுக் குழு 478 தலைப்புகளைக் கொண்ட சுவடிகளைச் சேகரித்துள்ளது.

6. மத்திய அரசால் 1924–இல் நீதி அரசர் உஸ்மான் தலைமையில் அமைக்கப்பெற்ற சித்த மருத்துவ நூலாய்வுக்குழு, அதனது அறிக்கையில், 594 சுவடிகளைத் தொகுத்திருப்பதாக அறிவித் திருக்கிறது.

7. உ.வே.சாமிநாதையர் நூலகம், 15 மருத்துவச் சுவடிகளைப் பாதுகாக்கிறது.

8. விருத்தாசலம், குமார வீரசைவ மடத்தில் 15 மருத்துவச் சுவடிகள் இருக்கின்றன.

9. பாண்டிச்சேரி, பிரஞ்சுஇந்தியக் கலைக்கூடம் 80 சுவடிகளைப் பாதுகாக்கிறது.

10. மதுரை, தமிழ்ச்சங்கம் 24 தலைப்புகளைக் கொண்ட நூல்களைப் பாதுகாக்கிறது.

11. திருவனந்தபுரம், கீழ்த்திசைச் சுவடி நூலகம் 165 மருத்துவச் சுவடி களைக் கொண்டிருக்கிறது.

12. சென்னை, ஆசியவியல் நிறுவனம் பல சுவடிகளைத் தொகுக்கும் நிறுவனமாக விளங்குகிறது.

13. மேற்கண்ட நிலையங்களில் காணப்படும் சுவடிகள் மட்டுமல்லாது, பல தனியார் நிறுவனங்கள், மருத்துவச் சாலைகள், மருத்துவர்கள், சோதிடர்கள், மாந்திரீகர்கள், துறவிகள், மடாலயங்கள், சித்தர் பீடங்கள், கோயில்கள் எனப் பல்வேறிடங்களில் மேற்குறிப்பிட்ட தொகுப்புள் அடங்காத சுவடிகள் பயன் கருதாது முடங்கிக் கிடக்கின்றன.

த‌மிழில் தோன்றி மறைந்து விட்டதாகக் கருதப்படும் மிகச் சிறந்த நூல்கள் பல தமிழல்லாத பிற மொழிகளில் காணப்படுகின்றன. பிறமொழிகளில், மிகவும் குறிப்பாக சமஸ்கிருதம், திபெத்தியன், அரபிக், தெலுங்கு, மராத்தி போன்ற மொழிகளில் வழங்கிவரும் மருத்துவ நூல்கள், தமிழ் மருத்துவ நூல்களாகக் காணப்படுகின்றன என்பர். அம்மொழிகளில், தமிழ் மருத்துவ நூல்கள் எளிதில் கிடைக்கக் கூடியவையாகவும், திரண்ட மருத்துவக் கருத்துகளைத் தரக் கூடியவையாகவும் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகின்றன.

சித்த மருத்துவத்தை மரபு வழியாக அறிந்த தொழில்முறை மருத்துவர்கள், தங்களுக்கு வேண்டிய சித்த மருத்துவ முறைகளை அறிய அம்மொழிகளையே நாடி அறிந்து வருகின்றனர் .

எனவே நாம் நம்மால் ஆன சிறு முயற்சியாக தமிழ் நூல்களை பாதுகாக்க முயற்சி மேற்கொள்வோமா ...

இடுக்கை : அ.ராமநாதன்

இதயம் பேசுதே

உன் நினைவு பிறழாமல்
மௌனமொழியிலே
கனவுகள் வந்து
கவிபாடும் கணநேரமும்
உன் நினைவுகளே!

காதலின் மௌனராகம்
பூவின் வழியாய்
மாலையானது
உன் முதல்பார்வையும்
அதை உறுதிசெய்தது.

கடிகாரமுட்கள் சுற்றும்
நேரம் தவறாமல்
காணாமல் தேடும்
விழிகள் போல‌
மழைத்தூறும் சாரல்
என் மனமெங்கும்
உல்லாச பறவைகள்
சிறகடிக்கும்
உன்னை நினைக்கையில்

காற்றிலாடும் உன் கூந்தல்
மயக்கும் மல்லிகையாய்
மறுமொழி பேச நேரமின்றி...

3/26/2010

யார் அவள் ........

சென்ற வாரம் எனது அலுவலுக்காக எனது வீட்டில் ஒரு டைரியை தேடிக் கொண்டிருந்தேன் அப்போது நான் முதன்முதலாக எழுதிய கதையை கண்டேன் ,உடனே என்னுள் தோன்றிய பழைய நினைவுகளுடன் உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்........

2007 ...., மீண்டும் ஓர் மழை நாள்..,
"மழை இருந்தாலும் பரவால்ல ஊருக்கு வந்துடவா ?" என்று ஆறாவது முறையாய் அலைபேசியில் கேட்டாள்.வேண்டாம் என்று அத்தனை முறையும் தடுத்து விட்டான். அவள் அண்ணன் மகள் திருமணத்திற்காக மூன்று வயது மகனையும் ஐந்து வயது மகளையும் கூட்டிக்கொண்டு ஊருக்கு போனவள் ஆடைமழை அங்கேயே தங்கவைத்து விட்டது.இந்த நாட்களில் சாப்பாட்டுக்கு சற்று சிரமப்பட்டு தான் போய்விட்டான்.மழை பெய்து கொண்டிருந்ததால் குடையுடன் பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்க தொடங்கினான் "பள்ளி கல்லூரிக்கெல்லாம் விடுமுறை...ஆனா நாம வேலைக்கு போகணும் "என்ற முனகலோடு ...,

1999 ...,ஓர் மழை நாள்..,
"இவ்வளோ மழை பெய்யுதே இன்னிக்குமா பரீட்சை வைக்கணும் .., நாதாரிங்க தள்ளி வைக்க கூடாதா" என்று கொஞ்சம் சத்தமாகவே திட்டி கொண்டிருதான் .பேருந்து வந்தது பெரிதாக கூட்டம் இல்லை ஆனாலும் படியில் நிற்க முடியாது என்ற காரணத்தினால் படியிலும் நிற்காமல் உள்ளேயும் செல்லாமல் ஓர் இடைப்பட்ட இடத்தில் நின்று கொண்டான்.எதேட்சையாய் திரும்பிய போது அவளை பார்த்தான் சற்று அடிக்கும் சிகப்பு நிறத்தில் நாகரிக வெளிப்பாடாய் சுடிதார் அணிதிருந்த தேவதையை...,

பேருந்து வந்து விட்டது .சற்று கூட்டம் அதிகம் தான் எனினும் படியில் யாரும் நிற்காத காரணத்தால் கொஞ்சம் நிம்மதியாகவே ஏறினான்.உள்ளே செல்ல முடியாத அளவிற்கு கூட்டம் இருந்ததால் படிக்கு பக்கத்திலேயே நின்று கொண்டான்.எதேட்சையாய் திரும்பிய போது பார்த்தான் அவளை சற்று அடிக்கும் சிகப்பு நிறத்தில் ஆங்கிலத்தில் கிறுக்கப்பட்ட பனியனும் ஜீன்சும் அணிந்திருந்த தேவதையை.இரண்டாம் முறை பார்த்த போது தான் பொறி தட்டியது அட.., இது அவளே தான் ஆனால்..,

இரண்டாம் முறை திரும்பிய போதே கவனித்து விட்டாள்.அத்தனை மழையிலும் சுட்டது அந்த பார்வை எனினும் இவன் பார்வையை திருப்ப அந்த சூடு போதவில்லை.குளிருக்கு இதமாய் சிறு சிறு இடைவெளியில் சுடும் நெருப்போடு பயணத்தை தொடர்ந்தான் கல்லூரியை கடந்தான் பரிட்சையை மறந்தான்.அவள் இறங்கிய இடத்தில் இறங்கினான் பெயர் கேட்டான் பிய்ந்துவிடும் என்றாள்.

ஆனால் அவள் மகளாய் இருக்குமோ இல்லையே இவ்ளோ பெரிய மகள் இருக்க வாய்ப்பில்லையே .. அப்போ அவளோட தங்கையா இருக்குமோ இல்ல அவளே ஓவர் மேக் அப்ல வந்து இருக்காளா.., குழப்பத்துடன் அவள் பனியனில் உள்ளதை படிக்க தொடங்கிய போது சுட்டது...

தைத்து கொள்ளலாம் என்று மொக்கை போட்டான் ., சிரிக்க துடித்த உதடுகளை கடித்த படியே ஒழுங்கா போய்டு எங்க ஏரியா .., என்று முடிக்கும் முன் நான்கு கண்கள் முறைப்பதை உணர்ந்து திரும்ப நினைத்த போது..,

அவளுடைய பார்வை.., அவனை தானா என்று திரும்பி பார்த்து கொண்டான். கண்டிப்பாக நிச்சயமாய்அவனை தான் .அப்புறம் அவள் பனியனை அவ்வளவு நேரம் பார்த்து கொண்டிருந்தால் முறைக்காமல் என்ன பண்ணுவாள்.தன்னுடைய கைப்பைக்குள் கை விட்டாள்...,

முதுகில் விழுந்தது முதல் அடி அதன் பிறகு கணக்கு இல்லை.., நான்கு கைகள் அவன் உடம்பில் சதிராடி விட்டன..,ஆஸ்பத்திரியில் படுக்க வைத்து விட்டனர்.., மூன்றாம் நாள் மழை குறைந்திருந்த போது அவள் வந்தாள் ..., அழுதாள் மொக்கை போட்டு சிரிக்க வைத்தான் அடுத்த நாளும் வந்தாள் ..,

செல் போனை எடுத்து கண்களால் இவனை சுட்ட படியே பேசினாள்.., பேசி முடித்து திரும்பி பார்த்தாள்..,அங்கு இன்னும் நான்கு கண்கள் இவனை முறைத்த படி இருந்தன .திரும்பி நின்றுக்கொண்டான் ..,

காதலிக்கிறேன் என்றான்.., சிரிக்கவும் இல்லை அழவும் இல்லை மௌனமாய் இருந்தாள்.., கொஞ்ச நேரம் கழித்து போய்விட்டாள்.., அடுத்த நாள் சாப்பாடு கொண்டு வந்தாள் சிரித்த படியே..,

பழைய ஞாபகம் வந்துவிட்டது அவனுக்கு ...,சீ.. பாத்ததுக்கெல்லாமா அடிப்பாங்க.., திரும்பி பார்க்கலாமா என்று நினைத்த போது..,

நாளை வீட்டுக்கு செல்வதாக சொன்னவன் அப்படியே நேற்றைய கேள்விக்கு பதில் கேட்டான் . நாளைக்கு சொல்வதாக சொல்லிவிட்டு போனாள்.மதியம் கிளம்ப வேண்டியவன் மாலை தான் கிளம்பினான் அதுவரை வரவே இல்லை...,

ஒரு கை அவன் தோளில் அழுத்தமாக பதிந்தது.., அந்த கை.., அந்த கை அவளுடைய கையாகவும் இருக்கலாம்.., அவர்களின் கையாகவும் இருக்கலாம்.., டிக்கெட் கேட்டு கண்டக்டரின் கையாகவும் இருக்கலாம்.., யார் கையா இருக்கும்??????

.....................(முற்றும்)..............

கவனிங்க :- கிட்ட தட்ட இது தான் என்னுடைய முதல் கதை (இதற்கு முன்பு பத்தாம் வகுப்பு படிக்கும் போது போட்டிக்காக ஒரு கதை எழுதி இருக்கேன்..,இந்த கதையின் நிறை குறைகளை கூறுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்... அப்புறம் அந்த நாளில் தினத்தந்திக்கு இந்த கதையை அனுப்பி உள்ளேன்(என்னா ஒரு தைரியம்) ஆனால் அது வரவில்லை....

இடுக்கை :அ.ராமநாதன்                                        எழுதிய நாள் : 01.06.2006
.

3/24/2010

படித்தபோது நம்ப வில்லை ஆனால்???

நேற்று எனக்கொரு ஈமெயில் வந்தது அதை முடிந்த அளவு தமிழ் படுத்தி உள்ளேன்.இதை படிக்கும் போது என்னை போலவே நம்பிக்கை இல்லாமல் தான் நீங்களும் இருப்பீர்கள் ஆனால் முற்சி செய்து பாருங்கள்...

இது கடவுள் நம்பிக்கை பற்றிய பதிவு அல்ல.. கம்ப்யூட்டர் சம்பந்தபட்டது..., விண்டோஸ் பயன்படுத்துபவர்கள் மட்டும்...
சோதனை ஒன்று:-

உங்கள் கணிணியில் எத்தனையோ folder உருவாக்கியும் அளித்தும் இருப்பீர்கள் ஆனால் CON என்ற பெயரில் ஒரு folder உருவாக்கி பாருங்கள் முடிந்தால். கண்டிப்பாக உருவாக்க முடியாது. இதற்கான காரணத்தை யாராலும் விளக்க முடியவில்லை...
என்ன உருவாக்க முடிந்ததா...

சோதனை இரண்டு :-
முதலில் ஒரு empty notepad file ஓபன் பண்ணி கொள்ளவும். அதில் Bush hid the facts என்ற வாசகத்தை டைப் பண்ணவும் .அதான் பிறகு நீங்கள் விரும்பும் பெயரில் save பண்ணவும் . மீண்டும் அந்த பைலை ஓபன் பண்ணுங்கள் பிறகு நடப்பதை நீங்களே பாருங்கள்...

சோதனை மூன்று :-

இது தான் ஹை லைட்...
ஒரு MS - WORD டாகுமென்ட் ஓபன் பண்ணி கொள்ளுங்கள்..
=rand (200, 99) இதை டைப் பண்ணவும்..,
பிறகு enter தட்டவும் பிறகு நடப்பதை நீங்களே பாருங்கள்..

உங்கள் கருத்தகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்...

உங்களை எங்கேயோ பார்த்தது போல இருக்குதே….?



இதே கேள்வியை நாம் ஒவ்வொருவரும் யாரையாவது பார்த்து, எப்போதாவது கேட்டிருப்போம்.

ஒன்று அவர்களை நாம் முன்பே எங்காவது பார்த்து மறந்திருப்போம்..
இல்லையென்றால் நாம் பழகிய ஒருவரின் முகச்சாயலை அவர்ககொண்டிருப்பார்..!!

நாம் பழகிய ஒருவரின் முகம் நம் மனதில் ஆழப்பதிந்துவிடும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்காது.

என்னுடன் இளங்கலை படித்த நண்பர் ஒருவர் படித்துப் பிரிந்து 5 ஆண்டுகள் கழித்து ஒரு முறை அலைபேசியில் தொடர்பு கொண்டார். ஹலோ என்று சொன்னவுடனேயே அவரின் பெயரை அழைத்து நீங்கள் தானே என்றேன். வியந்து போய்விட்டார்.

வியந்துபோனது அவர் மட்டுமல்ல!
நானும் தான் எப்படி என்னால் முடிந்தது?

நன்கு பழகிய அவரின் குரலை என்மனம் எங்கோ ஆழப்பதிந்து வைத்திருக்கிறது என்பதை அப்போது நான் உணர்ந்து கொண்டேன்.

இப்படி நம் ஆழ்மனப்பதிவுகள் ஆயிரம் ஆயிரம் வியப்புகளை உள்ளடக்கிக்கொண்டு அமைதியாக இருக்கின்றன.

ஒருகதை,

பூனைகள் சேர்ந்து மாநாடு நடத்தின. பல நாடுகளிலும் இருந்து நிறைய பூனைகள் வந்திருந்தன. கூட்டம் தொடங்கியது.

தலைமை தாங்கிய பூனை மேடையில் தோன்றி பேசியது.

நாமெல்லாம் முழு நம்பிக்கையோடு இறைவனை வேண்டினால் நிச்சயமாக “எலிகள் மழையாகப் பொழியும்“ என்றது.

அவ்வளவு தான் எல்லா பூனைகளும் சேர்ந்து கைதட்டி ஆரவாரம் செய்தன.

இதனைப் பார்த்துக்கொண்டே அந்த வழியில் சென்ற நாய் ஒன்று சிரித்துக்கொண்டே சென்றது..

என்ன இது முட்டாள்த்தனம்?

என்றாவது எலிமழை பொழிந்திருக்கிறதா?

இவ்வளவு முட்டாள்தனம் நிறந்தவையாகப் பூனைகள் இருகும் என நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை!

நம்பிக்கையோடு வேண்டினால் ஒருவேளை “எலும்பு மழை“ வேண்டுமானால் பொழியலாம்!

என்று மனதில் எண்ணியவாறு சென்றது நாய்.

என்றோ எங்கோ படித்த இந்தக் கதையை பலசூழல்களில் நான் அடிக்கடி நினைத்துக்கொள்வதுண்டு.

ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு சிந்தனைகள், நம்பிக்கைகள் அவரவர்களும் அதனை முழுவதும் நம்புகிறார்கள்.


மனதில் என்ன உள்ளதோ அதுதான் கனவில் மட்டுமல்ல, நினைவிலும் வரும்!

பசியோடு இருக்கும் ஒருவனுக்கு காணும் பொருளெல்லாம் உணவாகத் தெரியும். காரணம் அவன் மனமெங்கும் பசி நிறைந்திருக்கிறது.

பூனைகளின் நினைவில் எப்போதும் எலிகள் தான்!
நாய்களின் மனதில் எப்போதும் எலும்பு தான்!

அதுபோல ஒவ்வொருவர் மனதிலும் ஏதோ ஒன்று நிறைந்திருக்கிறது.

3/19/2010

வானம்பாடியாய்...

உன்னை
நான் முதலில்
சந்தித்த நொடிகளை
திருப்பிப்பார்த்து.......

உன்னுடன்
நான் பேசியபோது
சிரித்ததை
சிந்தித்து.......

உன்னை
நான் எண்ணிய
தருணங்களில்
தோன்றியவற்றை.......

உனக்கு
நான் எழுதிய
கடிதங்கள் முழுவதும்
கவிதைகளாய்.......

உன்னிடம்
நான் அவைகளைக் கொடுக்க
தேடித் தேடி அலைகிறேன்
வானம்பாடியாய்.......!

நன்றி : செல்வி;எஸ்தர் திண்டுக்கல்

3/18/2010

அணிக்காகவே ஆடுகிறேன்.. சாதனைகள் தானாய் வருகின்றன! –{வாசகரின் சிறந்த கருத்து }

சென்ற மாதம் நமது வலைப்பூவில் நடந்த சச்சினுக்கு வாக்கு மற்றும் கருத்து போட்டியில் வெற்றி பெற்ற வாசகரின் சிறந்த கருத்து வாசகரான நமது பார்வைக்கு இதோ...


நமது பிளாக்கில் என்னெற்ற வாசகரின் கருத்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன ,அதில் சிற்ந்த கருத்து மற்றும் நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவை தான் இறுதி ....


ஆதரவளித்த மற்றும் ஒத்துழைப்பு தந்த அத்தனை நல் உள்ளங்களுக்கு அன்பு கலந்த கோடான கோடி நன்றிகள் ,நன்றிகள்..............மேலும் நமது வலைப்பூவுக்கு தங்களின் மேலான நல் ஆதரவை நாடும் என்றென்றும் தமிழ் உலகம் வலைப்பூ.


அணிக்காகவே ஆடுகிறேன் சாதனைகள் தானாய் வருகின்றன




டெண்டுல்கள் அசத்தல் பேட்டி
இரட்டை சதம் அடித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் இப்படியொரு சாதனையைச் செய்ய வேண்டும் என்ற இலக்கு வைத்து நான் ஆடவில்லை. அணிக்காக ஆடியபோது இந்த சாதனை படைக்க முடிந்தது. 20 ஆண்டுகளாக எனது ஆட்டத்தை ரசித்து உற்சாகப்படுத்தும் என் நாட்டு மக்களுக்கு இந்த சாதனையை அர்ப்பணிப்பதை சிலிர்ப்பாக உணர்கிறேன்!” என்கிறார் கிரிக்கெட் சாதனையாளர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்.
40 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை தெண்டுல்கர் சாத்தியப்படுத்தியுள்ளார். குவாலியரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் அவர் ரசிகர்களுக்கு வைத்த ரன் விருந்து வாழ்நாளில் எந்த கிரிக்கெட் ரசிகரும் மறக்க முடியாதது.
உலகமெங்கிலுமிருந்து சச்சினுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்தவண்ணம் உள்ளன.
சச்சினைப் போலவே பல சாதனைகள் புரிந்த சர் விவியன் ரிச்சர்ட்ஸ் தொடங்கி, சச்சின் பெரிதாய் மதிக்கும் ‘டார்லிங் ஆஃப் கிரிக்கெட்’ பிரையன் லாரா வரை பாராட்டு மழை பொழிந்துவிட்டார்கள் சச்சின் சாதனைப் பற்றி.
இந்த நிலையில், இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் டெண்டுல்கர். அவர் கூறுகையில், “இரட்டை சதம் அடிப்பேன் என்று நான் நினைக்கவே இல்லை. 175 ரன்னை தொட்ட போதுதான் எனக்கு அந்த ஆர்வம் ஏற்பட்டது. அப்போது 42 ஓவர்தான் முடிந்து இருந்தது. இந்த வாய்ப்பு கிடைத்ததும் ஒவ்வொரு ரன்னாக எடுக்க முடிவு செய்தேன். ஏனென்றால் மறுமுனையில் டோனியின் அதிரடி ஆட்டத்தை வெகுவாக ரசித்தேன்.
200 ரன்னை அடித்ததை எப்படி உணர்வது என்றே உண்மையில் எனக்கு தெரியவில்லை. இது என் மகிழ்ச்சி என்பதைவிட என் நாட்டு மக்களின் மகிழ்ச்சி என்பதே உண்மை. எனது ஆட்டத்தில் அவர்கள் தங்களைப் பார்ப்பது புரிகிறது. 20 ஆண்டு காலமாக எனக்குஅப்படித்தான் அவர்கள் ஆதரவு தந்து வருகிறார்கள். எனவே எனது இந்திய மக்களுக்கு இந்த இரட்டை சதத்தை அர்ப்பணிக்கிறேன்.
இன்னொரு பக்கம் எனது ஆட்டம் எனக்கே மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. பந்து சரியான முறையில் மட்டையில் பட்டது.
சாதனைக்காக நான் ஆடவில்லை. அணிக்காக ஆடும்போது அது தானாகவே நடக்கிறது. நான் எப்போதுமே சாதனைக்காக ஆடியது கிடையாது. மற்றெல்லா பெருமைகளிலும் இந்தியன் என்ற பெருமையே முக்கியம். இந்த 200 ரன்களால் என் தேசம் பெற்ற மகிழ்ச்சியை பாக்கியமாகக் கருதுகிறேன்.
எனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள் அனைவரையும் மதிக்கிறேன். அவர்களது வாழ்த்து எனக்கு மிகவும் முக்கியம்.
நான் 199 ரன்னில் இருந்த போது மனநெருக்கடி எதுவும் இல்லை. இயல்பாகவே இருந்தேன். அதேபோல 50 ஓவர்கள் நான் களத்தில் நின்றது மகிழ்ச்சியை தருகிறது. எனது உடல் தகுதிக்கு கிடைத்த நல்ல சோதனையாகும்.
நான் 150 ரன்னில் இருந்த போது 350 முதல் 360 ரன் வரை எடுக்க முடியும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் யூசுப்பதானும், டோனியும் அதிரடியாக ஆடி 400 ரன்னை குவிக்க காரணமாக இருந்தார்கள். யூசுப்தான் ஆட்டத்தை மாற்றினார். டோனி அருமையாக நிறைவு செய்தார். தினேஷ் கார்த்திக் பேட்டிங்கும் சிறப்பாக இருந்தது… என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இது..
இன்னொன்று… இது எனது தனிப்பட்ட விருப்பமும் கூட… முறியடிக்க முடியாத சாதனை என்று எதுவும் இல்லை. முறியடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. எனது சாதனைகளை இந்தியர் ஒருவரே முறியடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்…” என்றார் டெண்டுல்கர்.
இதற்கிடையே, சச்சின் சாதனை செய்ததை கவுரவிக்கும் விதத்தில் குவாலியரில் உள்ள ஹூரவாலி சாலைக்கு சச்சின் டெண்டுல்கர் பெயர் சூட்டப்படுவதாக மத்திய பிரதேச முதல்வர்
சௌஹான் அறிவித்துள்ளார்.
ஐ.நா.: ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் இந்திய கிரிக்கெட்டின் தன்னிகரற்ற வீரராகப் போற்றப்படும் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்.
ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட (UNEP)த்துக்கு இனி இவர்தான் தூதுவராக செயல்படுவார்.
சர்வதேச கிரிக்கெட்டின் பல சாதனைகளை உடைத்தவர், நாளும் ஒரு சாதனை படைத்து வருபவர் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர்.
கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் என்றால் அது சச்சின்தான்.


இந்த உலகுக்கு எனது பங்களிப்பு…. – சச்சின்
இதுகுறித்து சச்சின் கூறுகையில், “இதுவரை உலகம் முழுவதும் நான் விளையாடியுள்ளேன். எனது கிரிக்கெட்டை பல்வேறு நாடுகளில் அனுபவித்து வந்தேன். இப்போது இந்த உலகுக்காக எனது பங்கை செலவிடும் நேரம் வந்துள்ளது.
உலகைக் காக்கும் முயற்சிகளில் அனைவருக்கும் பங்குண்டு. இது நமது வீடு. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது மிகவும் சவாலானது. ஆனால் அந்த சவாலை ஏற்க நான் தயாராகி விட்டேன். யுஎன்இபியுடனும், உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுடனும் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளேன். அனைவரும் ஒருங்கிணைந்தால் பல அற்புதங்களைப் படைக்க முடியும்,” என்றார்.

நன்றி : திரு சிவகுமார் -கோவை

3/12/2010

உனக்காக எழுதனது (வாசகர் எழுதியது )

உனக்காக எழுதனது ..................

உன் பார்வை ரொம்ப டெர்ரராகிது
உன் ஃபேஸ் என் மிர்ரராகிது
உன்ன பாக்கறப்பயெல்லாம் வெதறு கூலாகிது
உங்கப்பன் என்ன பத்தி போடற கணக்கு எர்ரராகிது
உன்ன பாத்தாக்கா எனக்கு ஒரு பவராகிது
நீ போடற செருப்பு எல்லாம் லெதராகிது
கடைசிவரைக்கும் நீ என் லவ்வராயிரு

நன்றி : செல்வி .கீர்த்தி - பெங்களூர்

3/10/2010

நல்ல வேலை நான் காதலிக்கவில்லை...!

என் காதல எனை கொன்றிருக்கும்..;
என் மூளை முழுதும் தின்றிருக்கும்..;
என் கணுக்கால் வரையில் கட்டெறும்பு.,
எனை கடித்துக் கடித்து
செரித்திருக்கும்...!
நல்ல வேலை நான் காதலிக்கவில்லை..!

செத்தே போயிருப்பேன்..!
செவ்விதழ் புன்னகைக்கும்
உதட்டு வரிப்பள்ளம் வீழந்து..!

செத்தே போயிருப்பேன்...!
கயல் விழியால்
இடை மடிப்பிற்கிடை மாட்டி...!

செத்தே போயிருப்பேன்...!
காரணமே சொல்லாமல்
எனை கொல்லும் கண்ணசைவால்...!

பூக்கள் என் செலவுக்கு மிச்சம்..,
கனாக்கள் என் இரவுக்கு மிச்சம்..,
காதல் எனை கொல்லும் சொர்க்கம்..,
நல்ல வேலை நான் காதலிக்கவில்லை....!

இடுக்கை : அ.ராமநாதன்

விட்டுப்போனால் செத்துப்போவேன்..



விட்டுப்போனால் செத்துப்போவேன்..
விட்டுச்செல்லாதே,

உன் கண்கள் என்னும் கத்திக்கொண்டு..

குத்திச்செல்லாதே,

காதல் கனவு இருவர்காண்பது..

கடந்துசெல்லாதே,

என்னை மட்டும் தனியாய் விட்டு..

நீங்கிச்செல்லாதே,

கத்திகுத்தி நெஞ்சம் கரையுது..

காயமில்லையா.?,

தனிமையிலே கனவுகள் காண்பது..

பாரமில்லையா.?,

தூரம் நின்று இதயம் வாடுது..

பாவமில்லையா.?,

உனக்கென்ன தெரியாதா.?,

என் காதல் புரியாதா.?,

காதல் என்ன பேருந்தா.?,

மாறி மாறி பயணிக்க.,

காதல் கடவுளின் பரிணாமம்..

காதலே கடைசி பரிமானம்..

காதலே என் மதம்..

காதலி நீ குலதெய்வம்..

பிஞ்சு உன் மனசுக்கு.,

பாசாங்கு பரிட்சயமா.?,

காந்தம் என் கண்களுக்கு.,

கண்ணீர் தான் அவசியமா.?,

விட்டுப்போனால் செத்துப்போவேன்..

விட்டுச்செல்லாதே,

உன் கண்கள் என்னும் கத்திக்கொண்டு..

குத்திச்செல்லாதே,

தமிழின்றி யாமொன்றறியோம் பராபரமே..,

தாயும், தனிமையும்,
கற்றுத்தராத ஒன்றை..;
தமிழ் கற்றுத்தந்தது.!!.."கவிதை"..

எமக்கு தொழில் கவிதையல்ல ..
இன்னபிற பொழுது போக்கு..
கற்றதும் தமிழ்.,
உற்றதும் தமிழ்.,
நான் கண்டதும் தமிழ்.,
கொண்டதும் தமிழ்.,
எனை பெற்றதும் தமிழ்.,
நான் இருப்பதும் தமிழ்.,

தமிழின்றி யாமொன்றறியோம் பராபரமே..,

நாட்குறிப்பு"

எத்தனை பக்கங்கள்
வீணாகி இருக்கிறது
என் நாட்குறிப்பில்.,
இப்போது தான்
எண்ணிப்பார்கிறேன்,
"என் காதலைப்பற்றி !!"


எனது இரத்தம் O+
என் காதலைப் பற்றி எழுத ,

என் பேனா சிந்திய ஒவ்வொரு துளியும்

எனது ரத்தங்கள் .

வேண்டுமென்றால் சோதித்துப் பாருங்கள்

"O+" என்று இருக்கக்கூடும் !!!!

3/09/2010

நெப்போலியன் போனபார்ட் வரலாறு

நெப்போலியன் போனபார்ட் ஒரு  அறிமுகம்

வரலாற்றின் பக்கங்கள் சுவாரஸ்யமானவை மட்டுமல்ல.. பல பாடங்களைச் சொல்லிச் செல்பவை.

பல நாட்டு மனித வரலாறுகளைப் படித்தாலும் ஐரோப்பிய வரலாற்றின் மேல் எப்போதும் தீராத ஆர்வம். காரணம் இருந்த வளங்களை அவர்களைப் போல வீணடித்தவர்களும் செம்மையாகப் பயன்படுத்தியவர்களும் அன்றைக்கு மட்டுமல்ல… இன்றைக்கும் யாருமில்லை.

குறிப்பாக பிரெஞ்சுப் புரட்சி… இந்தப் புரட்சி மூலம் பிரான்ஸ் மக்கள் சுதந்திரம் பெற்ற விதம், பெற்ற சுதந்திரத்தை காப்பாற்றிக் கொள்ள அவர்கள் பட்ட பாடுகள், எதை எதிர்த்து அவர்கள் போராடினார்களோ, எதிலிருந்து விடுதலை பெற விரும்பினார்களோ அதற்குள்ளேயே மீண்டும் விரும்பிப் போய் மாட்டிக் கொண்டது… இப்படி ஒவ்வொரு நாட்டவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய படிப்பினைகள் ஏராளம்.

இங்கே பிரெஞ்சுப் புரட்சி பற்றி நாம் பாடம் எடுக்கவில்லை. அதன் பிந்தைய விளைவாகத் தோன்றிய நெப்போலியன் சம்பந்தப்பட்ட மாபெரும் வரலாற்று நிகழ்வுகளை மட்டும் முடிந்தவரை எளிமையாக சொல்லவிருக்கிறோம்.

வரலாற்றை ஒரு தொடராகத் தராமல்… அவ்வப்போது சுவாரஸ்யமான நிகழ்வுகளாக மட்டுமே சொல்ல வேண்டும் என்பதே நமது நோக்கம்.

இதை இப்போது எழுதக் காரணம்… தெரிந்தோ தெரியாமலோ நமக்கு நெப்போலியன் பற்றிய பல கதைகள் சொல்லப்பட்டுள்ளன. அந்தக் கதைகளுக்கும் அப்பால் உண்மையான நெப்போலியன் யார்… என்ன அவர் செய்த சாதனை என்பதை மிகையின்றி சொல்ல விரும்பியதன் விளைவு இது. சற்று பெரிய கட்டுரை என்பதால் இரு பகுதிகளாகத் தருகிறோம்.

இனி நெப்போலியன் கதை… விரைவில் உங்களுக்காக .....................

3/08/2010

காதலே !

என்றும் உனை நான் மறவேன்
முதல் நாளில் நீ சிந்திய புன்னகை
இரண்டாம் நாளில் நீ பேசிய
முதல் வார்த்தை
மூன்றாம் நாளில் .....
எதையும் மறவேன் அன்பே
மறக்கவும் முடியாது
இன்னொரு காதலி கிடைக்கும்வரை

உள‌மார‌ வாழ்த்துவோம்!

அமுது படைப்பதில்
ஔவையாய்...

அன்பு செலுத்துவதில்
அன்னை தெரசாவாய்...

வீரத்தில் ஜான்ஸி ராணியாய்...
விவேகத்தில் அன்னை
இந்திராவாய்...

சரித்திரம் படைப்பதில்
சுனிதா வில்லியம்ஸாய்...

சாதனை படைப்பதில்
சானியா மிர்சாவாய்...

இப்படி...இப்படி...

உலகுக்குத் தெரியாமல்
உயர்ந்த சாதனைகள் படைக்கும்

உல‌க‌ ம‌ங்கைய‌ர் அனைவ‌ரையும்
உளமாற வாழ்த்தி ந‌ம்
உள‌ங்க‌ளிப்போம் ம‌க‌ளிர் நாளில்!

உலக பெண்கள் தினம்

உற்ற‌த் தோழியாய்
உய‌ர்குடும்ப‌த் த‌லைவியாய்
ந‌ற்ற‌மிழ்ச் செல்வியாய்
ந‌ல‌ம்பாடும் ச‌கோத‌ரியாய்
உற்ற‌துரைக்கும் உய‌ர்க‌னிமொழியாய்
க‌ற்ற‌த‌னைத்தும் க‌டைப்பிடித்து
க‌ட‌மையாற்றும் காரிகையாய்
வாட்ட‌ம் போக்குகின்ற‌
வ‌ண்ண‌ப் புதும‌ல‌ராய்
காட்சியில் திக‌ழும்
க‌ன‌க‌த் திர‌ளாய்
விள‌ங்கும் புதுமைப் பெண்க‌ளை
வாழ்த்திப் போற்றுவோம்
ம‌க‌ளிர் ந‌ன்னாளில்!

3/05/2010

என்னை காதலியுங்களேன் பிளீஸ்..

பார்த்தவர்கள் எண்ணிக்கை
பத்தை கூட தாண்டவில்லை..

ஈ கூட மொய்க்கவில்லை
என் வலைப்பூவில்..

அரசியல் பதிவெழுதினால்
ஆட்டோ வரும்...

விமர்சன பதிவெழுதி கிழிக்க
விஜய் படமும் இல்லை..

மொக்கை எழுதினாலும்
மவுசு இல்லை இப்போது..

எதிர்வினை எழுதவும்
எக்கசக்க போட்டி இங்கே..

காதல் கவிதை எழுதினால் மட்டுமே
களை கட்டும்..(நமது வாசகரிடம் )

அதற்காகவாவது ஏற்றுக்கொள்
என் காதலை.. பிளீஸ்..
(இது என்னவளிடம் )

இடுக்கை :அ.ராமநாதன்

3/03/2010



கிறுக்கல்கள்

இலட்சியம் இல்லாத மனமே
தோல்விகளில் துவண்டது போதும்
ஏளனங்களினால் வருந்தியது போதும்....
எழுந்திரு........ விழித்திடு........
என  எதிர்காலத்தை
எனக்கு  கையைக் காட்டிய இவர்ககள் ............

உன்னால் முடியும் உன்னால் முடியும் என்று கூறி
என்னால் கூட சாதிக்க முடியும் என்று என்னைத்
தூண்டிய சில மனிதர்கள் என் சமுக நலன் , சிந்தனை,
வாய்ப்பு , வாழ்க்கை ,என பலவற்றை கற்க செய்த(கற்று தருபவர்கள் ) 
"என் நலன் விரும்பிகள் ".
 1 திரு.செந்தில் (ஆசிரியர்)
2. திரு முருகன் 
3. திரு முத்துவேலு (பெரியப்பா)
4.திரு. பூபதி  (பொது மேலாளர் )
5.திரு. ரமேஷ் (மேலாளர்) 
6.திரு முருகேசன் (மேலாளர்)
7. திரு. முரளி (அண்ணா)
8 மறைந்த திரு. கேசவன்
9.திரு ராதாகிருஷ்ணன்

இந்த கவிதையை உலகிலும் ,என் மனதில் 
வாழும்,இவர்களுகு சமர்ப்பிக்கிரேன்.....

தேடல்

நதியின் தேடல் கடல் காண்பது...

வீரனின் தேடல் வெற்றியை...

மாணவனின் தேடல் தேர்ச்சியை...

உயிரின் தேடல் உன்னைக் காண்பது...

என்னவள் மறைந்த(மறந்த) கதை......

அழகனே- உன்
செவ்வேல்விழிகளைப்
பார்த்ததும் நிலா ஒளிந்துகொண்டதே!
நீ
அமாவாசை இருட்டில் நின்றும்.....
அவ்வளவு அழகா அவை.........!?!

இனியவனே- உன்
இதழோரம்
வண்டுகள் வட்டமிடுகிறதே!
நீ
செவ்வந்தித் தோட்டத்தில் நின்றும்......
அவ்வளவு இனிமையா அவை.........!?!

பிரியமானவனே- உன்
உடலோடு
என் இதயம் சுற்றுகிறதே!
நீ
பூவுலகிலிருந்து விலகி நின்றும்......
அவ்வளவு அன்பானவையா அவை......!?!

மறத்தமிழன்

கோபக்காரன் பழகினால் பாசக்காரன் ●๋•

●๋•தவறை மன்னிப்பவன் மனிதன்,
தவறை மறப்பவன் தெய்வம்●๋•
(கண்டிப்பா என்னால் தெய்வமாக முடியாது, முயற்சி பண்ணுறேன்)

●๋•தன் மானத்தை இழப்பவன் மனிதனல்ல
தன்மானத்தை இழப்பவன் தமிழனல்ல●๋•

●๋•எங்கே உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், உரிமைகள் நசுக்கப்படுகிறதோ; அங்கே புரட்சி வெடிக்கிறது●๋•

●๋•உள்ளங்கள் அழுதாலும், உதடுகள் சிரிக்கட்டும்●๋•

கற்றவை :

●๋•பேசக்கூடாததை பேசாதிருப்பது தான் நாவடக்கம்,
வாய் மூடி இருப்பதுஅல்ல●๋•

●๋•செல்வமும் மதிப்பும் பெருக பர்ஸையும், வாயையும்,
அதிகம் திறக்காதே●๋•

●๋•பணமும் செருப்பும் ஒன்று சிறிதாக இருந்தால் கடிக்கும், பெரிதாக இருந்தால் தடுக்கி விழச் செய்யும்●๋•

பெற்றவை :

●๋•மனிதனை மனிதனாய் பார்ப்போம்●๋•
●๋•மதத்தை மனிதநேயத்தால் வேரறுப்போம்●๋•
●๋•வறுமையை வடு தெரியாமல் ஒழிப்போம்●๋•
●๋•வலியோர்க்கு மட்டும் வளமான வாழ்வு என்பதை மாற்றுவோம்●๋•

நான்.....

"நட்பை" மதியாதவன்

"உணர்வுகளை" புரியாதவன்

"உள்ளங்களை" அறியாதவன்

"ஊக்கம்" இல்லாதவன்

"அன்பே" அற்றவன்

"அமைதியை" அழிப்பவன்

அழியா "அகந்தை"யுடைவன்

எல்லையில்லாமல் "ஏமாற்றுபவன்"

"ஏக்கங்களை" மட்டுமே தருபவன்

"சிந்திக்க" மறந்தவன்

"சிந்தனை" அற்றவன்

"நற்பண்பு" இல்லாதவன்

"நன்றை" அன்றே மறப்பவன்

"நயவஞ்சகத்தை" நன்கறிந்தவன்

"கோபத்தின்" உற்றவன்

"வெறுப்பின்" கொற்றவன்

"கனவுகளை" கலைப்பவன்

"நினைவுகளை" நிர்மூலமாக்குவபன்

"பாசத்தை" பழிதீர்ப்பவன்

"நேசத்தை" நெருங்கவிடாமல் செய்பவன்

"தோல்விகளை" தோற்றுவிப்பவன்

"வெற்றிகளை" வேர்அறுப்பவன்

"விதிக்கு" வித்திடுபவன்

"விமர்சனத்தின்" வித்தகன்

"தவிக்க" விடுபவன்

தன்நிகரில்லா "தலைக்கனம்" பிடித்தவன்

உங்கள் கண்ணோட்டம் அதுவானால்....!!

இவன்

~~~~எவனோ ஒருவன்

3/02/2010

படித்ததில் பிடித்த‌து

பிரவாகத் தமிழும்.. திராவிட கழகங்களும்.. இன்று???

படித்ததில் பிடித்த‌து

அவ்வபோது பலரின் பழையப் பதிவுகளை மேயும்போது ஆச்சிரியம் தரும் வகையில் பல நல்ல பதிவுகளை படிக்க நேரிடுகிறது. பதிவர் சந்திப்பன்று என்னை சந்தித்த நண்பர் ஒருவருடன் பேசியபோது நிறைய பேர் நிறைய எழுதுவதால் பல நல்ல பதிவுகளை தவறவிடுவதாக சொல்லியிருந்தார். அப்படி என் கண்ணில் படும் பதிவுகளுக்கு சுட்டிக் கொடுத்தால் படிப்பவர்களும் மகிழ்ச்சிக் கொள்வார்கள், எனக்கும் ஒரு நாளுக்கான மேட்டர் கிடைத்துவிடும். இனி,ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழைமையும் இப்படி நான் படித்து ரசித்த பழைய பதிவுகளில் ஒன்று பதிவிடலாம் என்றிருக்கிறேன்.

************************************************

"பேஷா" பண்ணிடலாம், "ஷரத்து" வாபஸ், மெட்ராஸ் மாகணம்...என்று இருந்த ஆட்சிமொழியையும் மக்களையும்.. தங்கள் பிரவாகத் தமிழால்,துள்ளல் மொழியால், இலக்கியத்தால்,எதுகை மோனையால் தன்பால் வசீகரித்து திருப்பிக் கொண்டது அன்றைய பேச்சாற்றல். ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தது அவர்களின் தமிழ். அந்தத் துள்ளல் தமிழில் அவர்களின் கொள்கை முழக்கங்கள் மக்களை எளிதாக சென்றடைந்தது. தந்தை பெரியார் விதைத்த விதை வேர்விட்டு பெருமரமாகி உருமாறியிருக்கிறது..

அறிஞர் அண்ணா :

"மாதமோ சித்திரை,
மணியோ பத்தரை,உங்கள்
தழுவுவதோ நித்திரை..
மறக்காமல் இடுங்கள்
எங்களுக்கு முத்திரை.."
இந்த எதுகை மோனை அந்த பொதுக்கூட்ட தாமத்தையும் மறக்கடித்து மக்களையும் கிரங்கடித்தது... தமிழ் நாட்டின் பெர்னாட் ஷா என வர்ணிக்கப்பட்ட அண்ணாவின் தமிழ் பேச்சில் மயங்காதார் யாரும் இல்லை..

கலைஞர் கருணாநிதி :

எம்ஜியார் முதலைமைச்சராக இருந்த பொழுது சட்டசபை விவாதத்தில் கூச்சல் எழுந்தவுடன் "உங்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்" என்று எம்ஜியார் சொன்ன மறு நிமிடம் எதிர்கட்சி தலைவராய் இருந்த கலைஞர் எழுந்து.."இதற்கு முன் தமிழ் நாட்டை "ஆண்டவன்" என்று என்னை சொல்வாதல்.. நான் இருக்கிறேன் காப்பாற்ற" என்று கூறியதை கேட்டு மொத்த சபையும் ரசித்தது..
இப்படி சிலேடை பேச்சானாலும் சரி,இலக்கியமானாலும் சரி தமிழ் தங்குதடையில்லாமல் தங்கிய இடம் கலைஞரின் நாக்கு.. இன்றுவரை மேடைப்பேச்சில் கோலேட்சும் இவரின் அன்றைய தமிழ் மேடைப் பேச்சு இளைஞர்களின் மூச்சாகவே இருந்தது..இவரின் பேச்சால் திமுக விலும் இவரின் தமிழ் வசனம் கேட்டு திரைத்துறைக்கும் வந்தவர்கள் ஏராளம்.

காளிமுத்து :

"மயிலுக்கு தோகை கன‌க்கிறது என்று குயிலுக்கு என்ன கவலை?" என்று இவர் தமிழ் பேச ஆரம்பித்தால் அக்கம் பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் இருந்ததெல்லாம் கூட்டம் சேர்ந்துவிடும்..
உலகத்தமிழ் மாநாட்டில் இவர் மூச்சுவிடாமல் பேசிய பேச்சைக் கேட்டு மூர்ச்சையாய்போய் நின்றது மாநாடு. இந்தியாவில் பேசப்படும் மொழிகளை இவர் பட்டியல் இட்டதை பார்த்து நெடுநேரம் தட்டிக்கொண்டிருந்தது முதல்வர் எம்ஜிஆரின் கரங்கள்.. "கருவாடு மீனாகாது,கறந்த பால் மடி புகாது" இன்றும் வழக்கில் உள்ள இவரது வார்த்தைகள்.

நாவலர் :

எதைப்பற்றி பேசினாலும் அதன் முழு விபரத்தையும் கொடுக்கும் பாங்கு நாவலரின் தமிழ். நிதானமாக ஆனால் அழுத்தமாக இவர் பதிந்த பேச்சுக்கள் இவரை " நாவலர்" ஆக்கியது.

வைகோ :

"ஏதென்ஸ் வீதியிலே... என்று ஆரம்பித்து.. பின் கர்ணனின் நட்பைத்தொட்டு,கலைஞரின் தலைமை பற்றி..என்று இவரின் தமிழ், தமிழ் நாட்டையே வசப்படுத்தி இருந்தது ஒரு காலம்.இவரின் ஆவேசப் பேச்சினால் உணர்ச்சிவயப்படாதவர் மிகக் குறைவு என்றே சொல்லலாம்.. ஆழ்ந்த இலக்கிய அறிவும்,வரலாற்று செய்திகளையும் இணைத்து இவர் முழங்கினால் மணிக்கணக்கில் கூட்டம் அசையாமல் கேட்டுக் கொண்டிருக்கும்.

மேலும் அன்றைய வட்ட,மாவட்ட, நகர பதவிகளில் இருந்தவர்களின் மேடைப்பேச்சும் கட்டிப் போட்டது.. ஏனெனில் அவர்கள் தங்களின் தலைவர்களை பின்பற்றி பேசியதால்...
ஆனால் இன்று...
மாணவரணியையோ..இளைஞரணியையோ தங்களின் தமிழால் கட்டிப்போட இன்று அடுத்த கட்ட தலைவர்கள் யாரும் இல்லை என்பதே உண்மை...

ஸ்டாலின் : ஓரளவு பேசினாலும் பெரிய ஈர்ப்பு . வரலாற்று குறிப்புகளில் தவறுகள் தென்படும்

கனிமொழி : இவரின் எழுத்தில் இருக்கும் ஆழம் பேச்சில் இல்லை..

தயாநிதி: இவர் தமிழ் பேசினால் அஜித் ஐஸ் விற்பது போல் இருக்கிறது..

விஜயகாந்த் : தமிள் அல்லது தமில் பேசுகிறார்.

T.ராஜேந்தர் : இவர் தமிழ்.. விடுங்க..உங்களுக்குத்தான் தெரியுமே..

இப்படி தமிழ் பேச்சு ஆறாகத் தொடங்கி இன்று வாய்க்கால் அளவு கூட இல்லை..

இன்றும் திருச்சி சிவா,கம்பம் செல்வேந்திரன் போன்ற நல்ல பேச்சாளர்கள் கழகத்தில் இருக்கிறார்கள்.. தமிழச்சி தங்கபாண்டியனின் தமிழும் அவையைக் கட்டிப்போடும் திறன் கொண்டதே... தலைவர்களும் அடுத்த கட்ட தலைமுறையில் இலக்கிய பிரவாக மேடைப்பேச்சிற்கு முக்கியதுவம் கொடுத்து வாய்ப்பளிக்கவில்லை..
நல்ல தமிழையும் இலக்கியத்தமிழையும்,எதுகைமோனையை கேட்பதற்கும் ரசிப்பதற்கும் மக்கள் காத்திருக்கிறார்கள்.. ஏனெனில்

"கல் தோன்றி மண்தோன்றா காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த மொழி"

எனது பார்வையில் விண்ணைத் தாண்டி வருவாயா

உனக்கு 22 வயது எனக்கு 23 வயது...

உனக்கு சினிமா எடுப்பது லட்சியம் எனக்கு சினிமா பார்ப்பதே பாவம்...

நீ இந்து பையன்... நான் கிருஸ்துவ பெண்

என்றெல்லாம் த்ரிஷா ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் அத்தனைக்கும் சிம்புவின் பதில், ஐ லவ் யூ என்பதாக இருக்கிறது! அந்தக் காதல் த்ரிஷாவுக்கும் தொற்றிக் கொள்கிறது. இருவர் காதலும் என்னவானது என்பதுதான் விண்ணைத்தாண்டி வருவாயா சொல்லும் கதை!

அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பாமல் துல்லியமாக நூல் பிடித்ததுபோல ஒரு காதல் கதையைச் சொல்லியிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். துணைக் கதைகளோ( ரீமேக்) உதிரி இழைகளோ எதுவும் இல்லாத சுத்தமான காதல் கதை. காதலின் சுகமும், பிரிவின் வலியும் நிதானமாகச் சொல்லப்படுகின்றன. சிம்பு தன் காதலை வளர்த்தெடுக்கும் விதமும் த்ரிஷா அதற்குச் சாதகமாக எதிர்வினையாற்றுவதற்கான சந்தர்ப்பங்களும் சுவாரஸ்யம்!

நீ என்னை ஃபாலோ செய்கிறாயா என்று த்ரிஷா கேட்கும் இடம், அருமை

‘உன் கண்ணாலேயே என்னை யாரும் பார்க்கலை போல இருக்கு’ என்பது போன்ற வசனங்களில் கௌதம் மேனனின் பேனாவில் காதல் வழிகிறது.

“எங்கிட்ட அப்படியென்ன உனக்கு பிடிச்சது?” என எப்போதோ கேட்ட த்ரிஷாவின் கேள்விக்கு அமெரிக்க எபிசோடில் கிடைக்கும் பதில் டைரக்டர் கெளதம்மேனனின் டச்.

சிம்பு சில்மிஷம் எதுவும் இல்லாத சிம்பு படம். . காதலில் உருகும் இளைஞனின் வேடத்தைக் கச்சிதமாகச் சித்தரிக்கிறார். காதலின் உற்சாகம், ஏமாற்றத்தால் வரும் ஆத்திரம், பிரிவின் வலி எல்லாமே அளவெடுத்தது போல இருக்கிறது. இப்படி டைரக்டரை நம்பி தன்னை ஒப்படைக்க சிம்பு முன்வந்தால் சிம்புவின் சினிமா கேரியர் ஜிவ்வென்று பறக்கும்.

த்ரிஷாவுக்கு இது முக்கியமான படம். இயல்பான அழகைத் தன்னைச் சுற்றிலும் படரவிட்டபடி அவர் நடந்து செல்லும் காட்சிகள், குறும்பான பார்வையிலும் சின்னச் சின்ன சிரிப்பிலும் நுட்பமான முக பாவ மாற்றங்களிலும் தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் ஆகியவை ரசிக்கும்படி உள்ளன, கிளைமாக்ஸில் சிம்பு பேசப் பேச உருகும் காட்சி என்று பல இடங்களில் நன்றாக நடித்திருக்கிறார். படம் முழுவதும் புடவைக்கடை மாடல்போல இவர் வருவது வித்தியாசமான அழகாகக் காட்சியளிக்கிறது. துளிக்கூட உடலைக் காட்டாமல் படம் முழுவதும் வசீகரிக்கிறார். த்ரிஷாவுக்கான நளினி ஸ்ரீராமின் ஆடை வடிவமைப்பு அற்புதம்.

பாடல்களால் நம்மைக் கட்டிப்போடுகிறார் இசைப்புயல். பாடல்களில் இருக்கும் மேற்கத்தியத்தனம் படத்தின் நிலையையே உயர்த்திச் செல்கிறது.

மனோஜ் அமெரிக்காவையும் கேரளாவையும் சென்னையின் சில இடங்களையும் அழகாகப் படம் பிடித்திருப்பதுடன் த்ரிஷாவை மிக அழகாகக் காட்டியிருக்கிறார்.


அதேபோல இரண்டாம் பாதியில் படம் மிக மெதுவாக நகர்கிறது. வெவ்வேறு இடங்களில் த்ரிஷாவும் சிம்புவும் சந்தித்துப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். காதலின் வெவ்வேறு உணர்வு நிலைகள் பற்றிச் சலிக்கச் சலிக்கப் பக்கம் பக்கமாகப் பேசிக்கொண்டே போகிறார் மேனன். காதலை மென் தென்றலாக உணரவைப்பதற்காக ரொம்பவே மெனக்கெடுகிறார். ஆனால் திரும்பத் திரும்ப ஒரே விதமான காட்சிகள் வந்து அலுப்பூட்டுகின்றன.
எப்படியோ

விண்ணைத் தாண்டி வருவாயா ஒரு உலக காதல் படம்..

நமது ரசிகர்களின் பார்வையில் விண்ணைத் தாண்டி வருவாயா

விண்ணைத் தாண்டி வருவாயா ஒரு உலகப் படம்..

தமிழ் சினிமாவின் மொக்கை மசாலாக்கள் மத்தியில் ஒரு குறிஞ்சிப்பூ..

இந்தப் படம் பிடிக்காதவர்கள் c,d,e,f….z செண்டர்களில் வாழ்பவர்கள்..

இந்தப் படம் ஓடாவிட்டால் இனி அசலும், வேட்டைக்காரனும் தான் தமிழகத்தின் தலைவிதியாகும். ஜாக்கிரதை.

கெளதம் ஒரு கிளாஸிக் ஃபில்ம் மேக்கர். ஹாலிவுட் தரத்திற்கு இணையாக எடுத்திருக்கிறார்.

தாங்க்ஸ் பா.. ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல காதல் படம்…..

3/01/2010

இது கவிதைகளின் காதல்

சந்தேக புத்தி எனக்கும் வந்து விட்டது
நீ என்னை காதலிக்கிறாயா ?
இல்லை என் கவிதைகளை
காதலிக்கிறாயா ?

என்னை பார்த்து ஏளனமாய்
சிரிக்கின்றன என்
கவிதைகள்

நேற்று அவைகளுக்கு -நீ
முத்தம் கொடுத்தாய்
போலும்
பிரிஜ் க்குள் இருந்த
ஆப்பிள் போல்
குளிர்ந்து போய் இருந்தது .

நீ தொட்டு விட்டாயாம்
என்று
இன்னமும்
குளிக்காமல்
இருக்கின்றன .
பாவம் அவை .

உன் கூந்தலை கொஞ்சம்
எனக்கு
அனுப்பி வை .
இங்கு
வெயில் கொடுமையாக
இருக்கிறது .
அதில் நான் இளைப்பாறி கொள்ள
போகிறேன் .

உனக்கும் எனக்குமான
இடைவெளிகளை
என் கவிதைகளே
நிரப்புகின்றன .

சரி எல்லாம் இருக்கட்டும்
கடைசியாய் சொல்லுகிறேன்
நீ என்னைத்தான் காதலிப்பதை
என் கவிதைகளிடம்
சொல்லிவிடு .அவைகளின்
அட்டகாசம்
என்னால் தாங்க முடியவில்லை