தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

6/29/2012

சாதனை

வயது தடையல்ல



எந்த வயதிலும் புரியலாம்


சாதனை

சோதனைக்கு


வேதனைப்படாதே


சாதனை


தோல்விக்கு துவளாமல்


தொடர்ந்து முயன்றால்


சாதனை

மனதில் தீ வேண்டும்


திட்டமிட வேண்டும்


புரியலாம் சாதனை

அரசுத் தேர்வில்


முன்பை விட ஆண்-பெண்


சாதனை

முயற்சி உழைப்பு


மூலதனம


சாதனை


அணுகுண்டு வெடித்து


அப்துல்கலாம்


சாதனை


சோம்பேறிகளாலும்


சுறுசுறுப்பற்றவர்களாலும்


நிகழ்த்த முடியாது சாதனை

6/20/2012

கற்பனை காதல்தான்!


உன் முகத்தின் முகவரியை


அசைபோட்டுப் பார்க்கிறேன்!


பார்ப்போர் எல்லோர் மீதும்


பாசம் வருவதில்லை!




கண்ணில் காண்போர்

எல்லோர் மீதும்


காதல் வருவதில்லை!


ஆனால் எப்படி


உன்மீது மட்டும்


இப்படி ஒரு காதல்!



என் இதயக் கோயிலில்


காதல் கீதங்கள் பாட …


உன் வாசனைகள்


எனைக் கடந்து செல்கிறது!


ம்…! இதயத்தின்


ஒவ்வொரு நிலையிலும்


உன் முகம் பதிகிறது!


உன் நினைவால்…


என் அனுமதிகள் எதுவுமின்றி


கற்பனை நான்கு திசைகளிலும்


உன்னை தேடிப் பார்க்க…


நெஞ்சினில் அன்பையும்


கண்களில் காதலையும்


தேக்கி வைத்த காதலை


உன்னிடம் சொல்லி …


இருந்தும் என்ன பயன்…?




இது கற்பனை  காதல்தான்!

6/17/2012

என் உறவே என் தம்பி





எனக்கென்று ஒரு தம்பி நீ



ஒருத்தன் இருக்கின்றாய்


என்கிற.... நினைப்பில்


இன்றுவரை ..... இருந்தேன்....!






என் நினைப்பில்.... நீ மட்டும்


இனி எப்போதும் வேண்டாம்


என்கிற அதிகபட்ச வெறுப்புகளோடு


வாய்விட்டு சொல்லி விட்டு போகிறாய்.....


இனி எந்த அன்பும்.... அரவணைப்பு எவரிடமும்


இருந்து வேண்டாம் என்று.....!!



தம்பி !


எப்படி புரியவைப்பேன் என் அன்பை


பேசும் வார்த்தைகளில் ...


உள்ளம் திறந்து சொல்கிறேன்


உடல் காயம்பட்டாலும் என்


உறவே என் தம்பி .....

6/12/2012

கண்ணீர்





ஏனோ ,கண்ணீர்


சில சமயம் மனசு அமைதியாக

இருந்தாலும் வருகிறது.....

அமைதியாக இல்லாவிட்டாலும் வருகிறது.....!



6/10/2012

திருப்பூர் -மயிலாடுதுறை -காரைக்கால் சுற்றுலா - நண்பர்களுடன்





       திருப்பூரிலிருந்து சுமார் 270 -350 கிமீ தொலைவில் அழகானதொரு கோவிலை

சுற்றியுள்ள  நகரம், நாங்கள் சென்ற தனியார் பேருந்து சொன்னபடி சரியாகஅங்கு 5.30

மணிக்கே இறக்கி  விட்டுவிட்டார்கள் , இறங்கியவுடன் அருமையான டிகி ரி காபி.

காலை 7  மணிக்கு நண்பரின்  திருமண நிகழ்ச்சி என்பதால் திட்டமிட்ட படி

சரியாக கிளம்ப வேண்டிய சூழல் . மண்டபத்திற்கு சென்றவுடன் காலை உணவு

முடித்து நிகழ்ச்சி நிரலுக்கு 8.45 மணி ஆகிவிட்டது. புதுமையான  திருமண நிகழ்ச்சி

ஒரு சமயத்தை சார்ந்தவர்கள் பெரியவர்கள் வழியில் நடந்திருப்பது மிகவும்

நல்ல விடயமாகும் . ஆனால் முழுமையான நிகழ்ச்சியை பார்க்க இயலவில்லை

என்பது சற்று வருத்தமே .கண்டிப்பாக அதை முழு நீள வீடியோ பதிவையும்,

சார்ந்த புத்தகங்களை பார்க்க வேண்டும் என்பது எனது ஆவல்.


       மாயவரம் அதனை சுற்றியுள்ள கோவிலுக்கு செல்ல  திட்டமிடருந்தாலும் ,

நண்பர்களின் உ.பா ஆசையால் எங்களது பயணம் பக்கத்து மாநிலமான  (புதுச்சேரி)

காரைக்காலை நோக்கி செல்ல வேண்டியதாயிற்று. மாயவரம் புதிய பேருந்து

நிலையத்திலிருந்து (நம்புங்க அதுவும் பஸ் வர இடமுங்க) 1 மணி நேர பயணம்.

இறங்கியவுடன் இரவு பயணத்திற்காக பயணச்சீட்டை தேடி அலைய

வேண்டியாதாயிற்று. ஒருவழியாக  யுனிவர்சல் (பேரு மட்டும் தான்) டிக்கெட்

போட்டவுடன் , உ.பா கடைகளை தேடி (அனைவ்ரும் புதியவர்கள்) ஒரு சின்ன

கடையை நோக்கி சென்று கையில் இருக்கும் தொகைக்கு ஏற்ற மாதிரி

கு(டி)த்து முடித்து விட்டு (திருப்தியில்லாமல்),மதிய உணவை அருகிலே

சாப்பிட்டு, கடற்கரையை  நோக்கி பயணம் இனிதே ஆரம்பமானது


கடற்கரை நினைத்தபடி திருப்தியில்லை என்றாலும் , வெயிலின் கொடுமை ,

தண்ணீரின்  ஆரவாரம் மனதில் சில மாற்றங்களுடன் ,குழந்தைகளாக

4 மணி நேரத்திறகு மேலாக   (தண்ணி)ரிலே மாலைவரை பொழுதை

கழித்து வந்தோம்.



    அவ்வப்போது சிலர் தண்ணிரில் சிக்கி கொள்வதால் ,காக்கியின்   எச்சரிக்கை   நடந்து கொண்டிருந்தது . 

கடலில் சரியான இடைவெளியில் படகு செல்வதை பார்க்கும் போது   அருமையாக தான் இருந்தது.

காக்கியின் வசூல் வேட்டை அருமையாக நடந்து கொண்டுதான் உள்ளது


கடற்கரைக்கு உண்டான சில்மிஷங்களும், மிகவும் சர்வசாதரமாக அரங்கேறி வருகிறது


இதை கண்டிப்பதற்கு யாருமில்லை,கண்டிப்பவர் களியாட்டமாடினால்   (அதங்க காக்கி) 
எப்படி நாம் குடும்பத்துடன் செல்ல நினைக்க முடியும் என்பது   தான் சற்று கவலை தரக்   கூடிய விஷயமாகும். 

சுனாமி தாக்குதலுக்கு பிறகு கடற்கரை அழகு ,மக்களின் வருகை எல்லாம் குறைந்துவிட்டதாக வசிப்பவர்கள் சொல்ல அறிந்து கொண்டோம்.


            ஒரு வழியாக பயணம் இனிதே முடிவடைந்து இரவு உணவையும் முடித்து ,           

பேருந்தில் பயணிக்க  தீர்மானமானோம். அந்த பயணம் மிகவும் மோசமாக

அமைந்ததுமட்டுமல்லாமல் மறக்க  முடியாதாதாகும் .பஸ்ஸின் வேகத்தால் ,

பயணத்தின் எல்லை முடியாமாலே பாதியிலே காங்கயம் இறங்கி காலை

கடன்களை முடித்து திருப்பூரை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம்.

வந்து இறங்கியவுடன் நண்பர்கள் பிரிந்து ,அலுவலக பணிக்கு செல்வதால்

உடனடியாக விடைப் பெற்றுக் கொண்டோம்.


மொத்தத்தில் இன்ப சுற்றுலாப் போல இல்லாமல் இருந்தாலும் அனைவரையும்

இன்முகத்துடன் ஒன்றினைய வைத்த நண்பரின் திருமண நிகழ்ச்சி என்பது

தான் உண்மை . அவர்களை வாழ்த்தி ,பங்கேற்ற நண்பர்களுக்கும் நன்றி

கூறினால் தான் இப்பதிவு முழுமை பெறும்.


குறிப்பு: இதுவரை பல பதிவுகள் எழுதி இருந்தாலும், உரையாடல்கள்

எல்லாம் எழுதி படிப்பவர்களைக் கொட்டாவி விட வைக்கும் மோசமான

பதிவாகவே எழுதி இருக்கிறேன். சுற்றுலாப் பயணங்கள் பற்றிய முதல்

பதிவு என்பதால் இப்படி இருக்கிறது அடுத்தவர்கள் பிரமிக்க வைக்கும்

வகையில் அற்புதமாக ஒரு பதிவாவது வாழ்வில் எழுத வேண்டும் என்ற

எண்ணத்தின் முதல் முயற்சி இந்தப் பதிவு. [நல்ல இருந்தால் சொல்லுங்க .)


எண்ணங்களுடன் :கோவை  அ . ராமநாதன்

6/09/2012

கட்டிங் பொன் மொழிகள்

மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவும் செய்துபார், ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது "கடவுள் இருக்கிறார்" என்பதே.

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல,


விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான்.

மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாகச் சிந்திப்பது,


ஆனால் முட்டாள்தனமாகச் செயற்படுவது.

பணமும், பதவியும் மோசமானவை என்று ஞானிகள் ஏன்


சொல்கிறார்கள்? அவை வரக்கூடாதவனுக்கு வருவதால்,

கிடைக்கக்கூடாதவனுக்குக்கிடைப்பதால்.

மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட, ஒரு கணப்


பொழுதாயினும் உதவி செய்வது மேல்.

தாய் பசித்திருக்க, தாரத்திற்கு சோறு ஊட்டாதே, நாளை நீ பசித்திருக்க

உன் பிள்ளையும் அதே தவறைச் செய்து கொண்டிருப்பான்.

அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி, ஒரே தவறைத் திரும்பத் திரும்பச்

செய்கிறவன் மூடன், ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை,

 தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து


திருத்திக் கொள்கிறவனே மனிதன்.

பூமியை ஆழமாகத் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கிறது,

உண்மையான அன்பு  வைப்பவனுக்குத்தான் நன்றி நிரம்ப வருகிறது.

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால்

யாருக்கும் உன்னைத் தெரியாது.

நீ கொடுக்கவேண்டியவற்றை நன்றாகக் கொடு, அது உனக்கு 4 மடங்காகத்

திருப்பித்தரப்படும்.

எப்பொழுதும் உன்னை நினைத்துச் சுயநலமாக இருப்பதைவிட,

மற்றவர்களை நினைத்துப் பொதுநலமாக சிந்தி, நீ நன்றாக இருப்பாய்.


வாழ்க்கை ஒருமுறை, அதை மற்றவர்களுக்காகவும் வாழ்ந்து காட்டப்

பழகிக் கொள்ளவேண்டும்.

நீ இந்தப் பூமியை விட்டு வெளியேறும்போது நீதி, நேர்மை, மனிதாபிமானம்

போன்றவற்றை விட்டுச் செல், அது உன் சந்ததியை நன்றாக வழிநடத்தும்.

நீ எப்பொழுதும் நல்லவற்றையே சிந்தி, உனக்கு எல்லாம்

நல்லவைகளாகவே நடக்கும் இது விதி, தீயவற்றைச் சிந்தித்தால்

தீயவையே நடக்கும் இதுவும் விதி.

உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே, ஆனால் சந்தர்ப்பம், சூழ்நிலைகள்  அதை மாற்றியமைக்கின்றன.

ஆண்டவன் எல்லோருக்கும் எதோ ஒரு திறமையைக் கொடுத்திருக்கிறான், நாம் அதைக் கண்டுகொள்ளாமல், திறமையற்றவர்களாகத் திரிகிறோம்.

நீ மற்றவர்களுக்காக வழிவிட்டுக் கொடு, இறைவன் நிச்சயம் உனக்கு வழி விடுவான்.

நீ எப்போது யாருமற்ற ஏழை, எளியவர்களுக்கு உதவுகிறாயோ, அப்போது ஆண்டவன் உன்னிடம்'கடன்காரன்' ஆகிறான்.



6/04/2012

விக்கல்




யாரோ தம்மை நினைப்பதால் வருகிறது என்று நம் முன்னோர்கள் கூறுவர், இன்றளவும் அனைவரும் அதையே தான் நினைக்கிறார்கள்.

நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றானது மூச்சுப் பாதையின் மிகக் குறுகிய இடைவெளியில்செல்வதால் ஒருவித விநோத ஒலி உண்டாகும். அந்த ஒலி தான் விக்கல். இந்த விக்கல் வருவது இயல்பு.

ஒரு சிலருக்கு விக்கலானது அடிக்கடி வரும். இதற்கு முறையான மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

 ஏனென்றால் சிறுநீரகக் கோளாறுகள், கல்லீரல் நோய்கள், மூளைக் காய்ச்சல்,நீரிழிவு நோய், குடல் அடைப்பு போன்றவற்றின் அறிகுறியாகவும் விக்கல் வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக காரம் உள்ள உணவுகள் சாப்பிடும் போது விக்கல் வரும். அளவுக்கு மீறி அல்லது அவசர அவசரமாக உணவு உட்கொண்டாலும் விக்கல் வரும். மேலும் தேவையான அளவிற்குத் தண்ணீர் குடிக்காத போதும் விக்கல் வருவதுண்டு.

விக்கல் தொடர்ந்து வரும் போது கண் வறண்டு போதல் மற்றும் மயக்கம் ஏற்படலாம்.

இப்படி பிரச்சனை உள்ளவர்கள் எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளாக சாப்பிட வேண்டும்.

காய்கறி, பழங்கள் அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம். தினமும் 4 முதல் 8 லிட்டர் தண்ணீர் வரை அருந்தவும். வைட்டமின்கள் அதிகம் நிறைந்த உணவுகள், எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

நார்ச்சத்து, புரதம், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் ஆகியவற்றை தவிர்க்கவும். வறட்சியான உணவுகளையும் தவிர்க்க வேண்டும். சூடான உணவுகள் தவிர்த்து எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளுக்கு முக்கியத்துவம் தரவும்.

6/02/2012

தமிழா நீயும் கலங்கிவிடாதே

அவனுக்கு முன்னால் கரையற்ற கடல்..


நம்பி வந்தவர்கள் நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்தனர்..

வெளுத்து களைத்த மாலுமிகள் பிரேதம் போல ஆனார்கள்..

பயங்கரமான அந்தக் கடலில் இருந்து கடவுளும் விலகிவிட்டார்..

நம்பிக்கை போனால் நாம் என்ன செய்வது ?

பயணம் செய் ! பயணம் செய் ! பயணம் செய் !

அந்த இரவோ இரவுகளில் எல்லாம் இருண்டது !

பிறகு ஓர் ஒளி !

வெளிச்சம் ! வெளிச்சம் ! வெளிச்சம் !

கொலம்பஸ் அன்று உலகை வென்றான்

உலகுக்கு ஒரு பாடம் சொன்னான்..

பயணம் செல் தொடர்ந்து பயணம் செல்..

ஈழத் தமிழா நீயும் கலங்கிவிடாதே

பயணம் செல்..! தொடர்ந்து பயணம் செல்..!

நீயும் கொலம்பஸ்போல சுதந்திர மாலையுடன்

ஒரு நாள் உன் தாய் நாட்டைக் காண்பாய் !