தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/25/2011

என் தேசத்தில் இளைஞரின் நிலமை

 1940 -50


தேவை - புரட்சி செய்ய விருப்பமுள்ள இளைஞர்கள்


ஊதியம் - மரணம்


பரிசு - வீரத்தியாகி என்ற பட்டம்


பேன்ஷன் - இந்திய விடுதலை


பணியாற்றும் இடம் - இந்தியா
2005-12


தேவை - கணிப்பொறி கற்ற இளைஞர்கள்


ஊதியம் - மாதம் ஒரு லட்சம்


பரிசு - வெளிநாட்டு கிரீன் கார்ட்


பேன்ஷன் - சுக போக வாழ்க்கை


பணியாற்றும் இடம் - அமெரிக்கா1940 ல்

நாட்டுக்காக வாழ்க்கையை இழந்தோம்2010 ல்


சுகபோக வாழ்க்கைகாக நாட்டை இழந்தோம்


2/24/2011

பேரு‌ந்து ‌தின‌ம் ‘அட்டகாசம்
சென்னையில் கட‌ந்த ஒரு வாரமாக க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ளா‌ல் பேரு‌ந்து ‌தின‌ம் கொ‌ண்டா‌டப்ப‌ட்டு வரு‌கிறது. க‌ல்லூ‌ரி‌யி‌ல் இறு‌தி ஆ‌ண்டு படி‌க்கு‌ம் மாணவ‌ர்களா‌ல் இ‌ந்த பேரு‌ந்து ‌தின‌ம் கொ‌ண்டாட‌ப்படு‌கிறது. இ‌ந்த பேரு‌ந்து ‌தின‌த்‌தா‌ல் அ‌திக‌ம் பா‌தி‌க்க‌ப்படுவது க‌ல்லூ‌ரி ‌நி‌ர்வாக‌ம் அ‌ல்ல, பொது ம‌க்களு‌‌ம், காவ‌ல்துறையு‌ம் தா‌ன். ‌அ‌ந்த அளவு‌க்கு மாணவ‌ர்க‌‌ளி‌ன் பேரு‌ந்து ‌தின‌ம் ‘அட்டகாசமாக’ நட‌க்‌கிறது.
செ‌ன்னை ந‌ந்த‌னம் அரசு கலை‌க்க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் அ‌ண்மை‌யி‌ல் பேரு‌ந்து ‌தின‌த்தை கொ‌ண்டாடின‌ர். சே‌த்து‌ப்ப‌ட்டு அருகே மாணவ‌ர்க‌ளி‌ன் பே‌ரு‌ந்து வ‌ந்தபோது பேரு‌ந்து‌க்காக கா‌‌த்‌‌திரு‌ந்த பெ‌ண்களை கே‌லியு‌ம், ‌கி‌ண்ட‌லு‌ம் செ‌ய்து‌ள்ளன‌ர் மாணவ‌ர்க‌ள். இதனா‌ல் பொதும‌க்களு‌க்கும‌், மாணவ‌ர்களு‌க்கு‌ம் இடையே மோத‌ல் ஏ‌ற்ப‌ட்டது. ‌பி‌ன்ன‌ர் மாணவ‌ர்க‌ள் சாலைக‌ளி‌ல் இரு‌ந்து ம‌றிய‌லி‌லு‌ம் ஈடுப‌ட்டன‌ர். போ‌க்குவர‌த்து பா‌தி‌க்க‌ப்ப‌ட்டது‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் ‌விரை‌ந்து வ‌ந்து மாணவ‌ர்க‌ளிட‌ம் பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்‌தி கலை‌ந்து போக‌ச் செ‌ய்ததோடு க‌ல்லூ‌ரி வரை பாதுகா‌‌ப்போடு அழை‌‌த்து செ‌ன்றன‌ர்.
இ‌ந்த ‌பிர‌ச்சனை அட‌ங்குவத‌ற்கு‌ள் நே‌ற்று ப‌ச்சைய‌ப்ப‌ன் க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ளா‌ல் பெரு‌ம் வ‌ன்முறை வெடி‌த்து‌வி‌ட்டது. 15 பி மாநகர பேரு‌ந்‌தி‌ல் பே‌ரு‌ந்து தின விழா கொண்டாடப்போவதாக அறிவித்திருந்தன‌ர் ப‌ச்சைய‌ப்ப‌ன் க‌‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள். அவ‌ர்களு‌க்கு பேரு‌ந்துகளை வழங்க மாநகர போக்குவரத்துக்கழகம் மறுத்ததா‌ல் காவ‌ல்துறை‌யின‌ரிட‌ம் பே‌சி ஏற்பாடு செய்து அமைதியாக செல்வோம் என்று மாணவர்கள் உறுதி அ‌ளி‌த்ததா‌ல் 3 பேரு‌ந்து‌க‌ள் வழங்கப்பட்டது.2/23/2011

ஆந்த்ரே நோஸ் (Entre Nos)திரைப்படங்களில் பல உண்மைகள் பேசுகின்றன. கடந்து போன கதைகளை சொல்லுகின்றன. நம்பிக்கைகளை விதைக்கின்றன. வாழ்வின் விளிம்பிற்கு சென்ற மனிதர்கள் வெற்றி பெற்ற கதைகளை சில படங்கள் உண்மைக்கு அருகே இருந்து காட்டுகின்றன. அவ்வகை திரைப்படங்களாக 'The pursuit of happyness' போன்ற திரைப்படங்களில் கண்டிருக்கிறோம். அந்த திரைப் படங்களை நம்முடைய வாழ்வோடு ஒப்பிட்டு, நமது வாழ்கை அவர்களோடு மேலாக இருப்பதை உணர்ந்து ஆறுதல் பட்டுக் கொள்ளலாம். அவர்களின் தன்னம்பிக்கை கண்டு நமக்கும் நமது மேல் நம்பிக்கை பிறக்கலாம். அப்படிப்பட்ட ஒரு தன்னம்பிக்கை பெண்மணியின் கதையைத்தான் ஆந்த்ரே நோஸ் திரைப்படம் பேசுகிறது.கொலம்பியாவின் பகோடா என்ற ஊரிலிருந்து நியூ யார்க் நகருக்கு வேலை தேடி வருகிறது ஒரு குடும்பம். கணவன், மரியானா என்ற மனைவி. அவர்களின் குழந்தைகள் காபி என்ற காப்ரியல் மற்றும் அண்ட்ரியா என்ற சிறுமி. வந்த இடத்தில் கணவன் வேறு ஒரு துணையை தேடிக் கொண்டு, தனக்கு மியாமி நகரில் வேலை கிடைத்திருப்பதாகவும், தான் அங்கு சென்று செட்டில் ஆனா பின்னர் வந்து குடும்பத்தை அழைத்து செல்வதாகவும் கூறி செல்கிறான். நம்பிக்கையுடன் அவனை வழி அனுப்பி வைக்கிறது. அவனது நண்பனின் மூலமாக, மரியானாவுக்கு அவள் கணவன் திரும்பி வரப்போவதில்லை என்ற உண்மை சொல்லப்பட அவள் உடைந்து போகிறாள்.


நமது ஊர் பப்ஸ் போல இருக்கும் எஸ்பனடா என்னும் பலகாரம் செய்து தெருவில் இறங்கி விற்கிறாள்.அதில் வருமானம் வரவில்லை.


ஒருமுறை கோக் டின்களை சேகரிக்கும் ஒருவனை கண்டு அவன் பின்னாலேயே தன குழந்தைகளுடன் தொடரும் மரியன், ரீசைக்ளிங் செய்யப்படும் ஒரு காலி கோக் டின்னுக்கு ஐந்து சென்ட்கள் கிடைக்கும் என அறிந்து கொண்டு, மறுநாள், ஒரு கடையில் இருந்து ஸ்ட்ராலரை திருடும் அந்த குடும்பம், தினமும் காலி கோக் டின்களை குப்பைகளிலிருந்து பொறுக்க ஆரம்பிக்கிறது. அதே தினம், அவளது கணவன் மூன்று மாதமாக வாடகை தராததால், அந்த சைனீஸ் வீட்டுக்காரன், அவர்களை வீட்டில் இருந்து துரத்தி விட, அந்த குடும்பம் பார்க்குகளிலும், ரயில் மேம்பாலங்களிலும் தங்குகிறது. யாரோ சொன்ன ஒரு முகவரியை வைத்துகொண்டு, நியூ யார்க் நகரில் இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் வாரத்துக்கு 150$ வாடகைக்கும் தங்குகிறார்கள். அப்போது தான் தான் கர்ப்பமாக இருப்பதை உணர்கிறாள் மரியான். இருக்கிற கஷ்டம் போதாமல் இது வேறயா என விக்கித்து நிற்கும் வேளையில் அந்த இந்திய பெண் அவள் கருவை கலைக்க உதவுகிறாள். நமது ஊரு கிழங்கோ அல்லது மருந்தோ.. எதோ ஒன்றை கஷாயமாக்கி தர, அதுவாகவே கரு கலைந்து விடும் என சொல்லி அவளை பார்த்துக் கொள்கிறாள்.


கருகலைப்பு தனது மதத்துக்கு விரோதம் என தெரிந்தும் ஆலயம் சென்று கடவுளிடம் மன்னிப்பு வேண்டி அழுகிறாள். கரு கலைகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த குடும்பம் குப்பையில் கிடக்கும் காலி கோக் டின்களை பொறுக்கி முன்னேறுகிறது. அவளது ஒவ்வொரு கஷ்டத்திலும் அவளுக்கு துணையாக அவளது மகன் காப்ரியல் இருக்கிறான். எல்லாம் தெரிந்தும், எதுவும் தெரியாதமாதிரி காட்டிக் கொள்ளும் அவன், தன தாய் கஷ்டப்படும் போதெல்லாம், தனியனாக கோக் டின்கள் பொறுக்கி குடும்பம் காக்கிறான். படத்தின் முடிவில், இந்தப் படம் ஒரு உண்மை கதை என்றும், தற்போது மரியன், காப்ரியல் மற்றும் ஆண்ட்ரியா என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என கார்டு போடும்போது நம் மேனி சிலிர்ப்பது உண்மை.


மரியனாக நடித்திருக்கும் பாவ்லா மண்டோசா தான் படத்தின் பிரதான பாத்திரம். தனது இயலாமையும், தன்னம்பிக்கையும் ஒரு சேர தன முகத்தில் படம் நெடுக அற்புதமாக வெளிப்படுத்துகிறார். படத்தை க்ளோரியா லா மார்த்தே என்ற மற்றொரு பெண்ணோடு சேர்ந்து எழுதி இயக்கி இருப்பவரும் இவரே.


படத்தில் காப்ரியல்ஆக நடித்திருக்கும் அந்த சிறுவன் தான் இந்த படத்தின் கதாநாயகன். எல்லாம் தெரிந்தும், எதுவுமே தெரியாதது போல முகத்தில் உணர்ச்சிகளை அடக்கி கொண்டு, தன அம்மாவின் சிரமம் புரிந்து அவளது கஷ்டங்களில் தோள் கொடுத்து தன்னால் இயன்ற அனைத்து செல்லும் ஒரு கதாபாத்திரம், அனைத்து அன்னைகளுக்கும் ஒரு உதாரண மகனாக சிறந்த நடிப்பு.


இந்த திரைப்படம் உலகெங்கும் பலவித விருதுகளும் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.


இந்த திரைப்படம் வாங்கிய விருதுகள்.


படம் மெதுவாக நகர்ந்தாலும், ஒரு அற்புதமான நெகிழ்வையும், எப்படிப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டாலும் வாழ்வதற்கு ஆதாரங்கள் இந்த உலகத்தில் உண்டு என்பதை ஆணித்தரமாக உணர்திருக்கும் இப்படத்தின் திரைக்கதை இயக்கத்துக்கு சொந்தமான பெண்கள் க்ளோரியாவுக்கும் பாவ்லா மண்டோசாவுக்கும் ஆயிரம் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.


இந்த படத்தை கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுடன் பாருங்கள்.


2/22/2011

வாக்கு மட்டுமே எங்கள் முதலீடு

பாராளுமன்ற தேர்தலென்றால்தாராளமாய் பணம் கிடைக்கும்...


சட்ட மன்ற   தேர்தல் வந்தாலும்


இது போலவே கிடைத்திருக்க வேண்டி ...


பணம் மட்டும் தந்தால் போதும்


எமனுக்கும் வாக்களிப்போம்


இறைவனையே தோற்கடிப்போம்...!
எங்களின் பலம்கொண்ட


பசிமறந்த உழைப்புக்கு


பலனேதும் கிடைத்ததில்லை...


பல போராட்ட குழுவிருந்தும்


பசிபோக்க யாருமில்லை...


பணம்தந்தால் ஓட்டுண்டு


தேர்தலென்று வந்துவிட்டால்


கடவுளுக்கே வேட்டுண்டு....!
சோறள்ளி உண்பதற்கும்


சேறள்ளி உழைப்பதற்கும்


உண்டான கையென்றாலும்


தேர்தலுக்கு தேடி வந்து


ஒற்றை விரலில் மைபூசி


வாக்களிக்க பலநூறு பணமளிக்கும்


கூட்டமிங்கே கூடிடுச்சு...!
எவன் வென்றால் நமக்கென்ன


எதிர்கொள்ள தேவையென்ன...?


பணம் வந்தால் போதுமென்று


பழகிக்கொள்ள கற்றுக்கொண்டோம்


வாக்கு மட்டுமே எங்கள் முதலீடு


தேர்தல்தான் எங்களுக்கு பலியாடு...!


2/21/2011

தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி

    நான் தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி? என்பது பற்றி கூற வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது ஆனால் என்ன செய்வது? நேரம் கிடைக்கவில்லை, ஆகவே நான் இதில் தோல்வி அடைந்துவிடுவோமோ என் மனதில் நினைத்தேன்........ஆனாலும் மனதில் ஒரு வெறி இருந்தது. எப்படியாவது.......... இதை வலையில் வெளியிட வேண்டும் என்று. அது இன்று தான் வெற்றி பெற்றது.

உலக வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும், எதையாவது புதிதாகக் கற்றுக்கொண்டுதான் இருக்கின்றோம். "கல்வி கரையில" என்று இதனாலேதான் பெரியோர்கள் கூறுகின்றனர்.

சிறுவயதில் பிறந்த வீட்டிலேயுள்ள பெற்றோரிடமும், அங்கேயுள்ள குடும்பத்தாரிடமும் பல செய்திகளை கற்றுக் கோள்கின்றோம். அதன் பின்னர் பள்ளிக்கூடங்களில் சென்று ஒரு பொதுக்கல்வியைப் பெறுகின்றோம். இதன் பின்னர் ஏதாவது ஒரு தொழிலுக்கான சிறப்புக் கல்வியையும் பயிற்சியையும் பெறுகின்றோம். இதனைத் தொடர்ந்து குடும்ப வாழ்வு சமூக வாழ்வு, என பல வகையான அறிவுகளை பெறுகின்றோம்.

உலகில் ஒவ்வொருவரும் இந்த முயற்சிகளிலே ஈடுபடுவதனால், ஒருவருக்கொருவர் போட்டிகள் இயல்பாகின்றன. இதனால் வெற்றி தோல்விகளும் இயற்கையாகின்றன.

உலக வாழ்வில் வெற்றி பெற வேண்டும். இந்த நோக்கத்தில் மன உறுதி வேண்டும். இதற்கேற்றப்படி நடந்து கொள்ளவும் முயல வேண்டும். இதைச் சிதைக்கும் அல்லது தடுக்கும் வேறு நோக்கங்களுக்கு முதன்மை தருகின்வர்கள் உலகை சார்ந்த வாழ்வில் வெற்றி பெற முடியாது. வாழ்வின் வெற்றிக்கான செல்வத்தின் பெருக்கத்தையோ, அல்லது ஆதரவான துணை வசதிகலையோ பெற முடியாது.

தாங்கள் உயர்வாகப் போற்றி மதிக்கும் நோக்கங்களையும், பண்புகளையும், கோட்பாடுகளையும் நடைமுரை உலக வாழ்விலேயும் கடைப்பிடிக்க முயல்பவர்கள் பெறும்பாலும் உலகில் தோல்வியையே சந்திப்பார்கள். இவைகளையும் உலகப் போக்கோடு இணைத்துக் கொண்டு உலகத்தோடு, ஒட்டி வாழ்வதிலே கருத்துச் செலுத்தினால், இவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும்.

தோல்வியை மறந்துவிடுங்கள்.

தோல்வியைப் பற்றி நினைத்து, வேதனைப்பட்டுப் புலம்புகிறதை அடியோடு மறந்து விட வேண்டும். இனி எப்படி வெற்றி பெறுவது என்பதைப் பற்றிச் சிந்திக்கப் பழ வேண்டும்.

"மாடிப் படியில் ஏறும் போது, மாடிக்குப் போய்ச் சேர்வதையே நினைத்துப் போக வேண்டும். கால் தவறி உருண்டு விழுந்தால் எந்த டாக்டரிடம் போவது என்பதை பற்றி ஏன் நினைக்க வேண்டும்.2/20/2011

           இலங்கையின் கடற்பகுதியில் வெகு தூரம் சென்று, யாழ்ப்பாண கடற்பகுதியில் மீன் பிடிக்க முயன்ற தமிழக மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சுற்று வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதும், அதற்குப் பிறகு புதுக்கோட்டை மீனவர்கள் மேலும் 24 பேர் கைது செய்யப்பட்டு, பிறகு இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருப்பதும் தமிழக மீனவர்கள் பிரச்சனையில் ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது.

ஒரு வாரத்திற்கு முன் நிகழ்ந்த இவ்விரு நிகழ்வுகளும் மிக ஆழமாக பரிசீலிக்கப்பட வேண்டிய முக்கிய நிகழ்வுகளாகும். இலங்கையின் வட பகுதியிலுள்ள (தமிழீழப் பகுதி) பருத்தித் துறை கடற்பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 18 இழுவைப் படகுகளை (Trawlers) ஈழத்து மீனவர்கள் சுற்றி வளைத்து, அவர்கள் தங்கள் படகுகளில் இறக்கிக் கொண்டு வந்து சிறிலங்க காவல் துறையினரிடம் ஒப்படைத்ததாக ஈழத்துச் செய்திகள் கூறின. அததோடு, கைப்பற்றப்பட்ட இழுவைப் படகுகளின் படங்களும், அதிலிருந்த மீனவர்களின் படங்களும் வெளியாகி இருந்தது. எமக்கும்  அந்த விவரங்கள் முழுமையாக மின்னஞ்சலில் வந்தது.

        18 இழுவைப் படகுகளில் இருந்த 106 மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்ற செய்தி தமிழ்நாட்டை எட்டிய சில நிமிடங்களில், அதனைக் கண்டித்து மறுநாள் ஆளும் தி.மு.க. சார்பில் சென்னையில் உள்ள துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது!

தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லைப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தாலே அங்கு சிறிலங்க கடற்படைக் கப்பல்கள் வந்து மீது தாக்குதல் நடத்தும், அப்படிப்பட்டத் தாக்குதல்கள் 1979 முதல் நடைபெற்றும் வந்துள்ளது. 500க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டும் உள்ளனர். நேற்று கூட கச்சத் தீவிற்கு அருகே - அதாவது இந்தியாவின் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் - 700 படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, 4 வேகப் படகுகளில் வந்த சிறிலங்க கடற்படையினர் விரட்டியடித்தனர் என்று செய்தி இன்று மிக விரிவாக வெளியானது. “இதற்கு மேலும் இங்கு வந்த மீன் பிடித்தால் சுடுவோம்” என்று சிறிலங்க கடற்படையினர் மிரட்டியதாகவும் சில செய்திகள் கூறுகின்றன.

இந்தச் செய்தியை, அப்படியே கடந்த ஒரு வாரத்திற்கு முன்னால் வந்த செய்தியுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்...
 

2/19/2011

இதுவா கல்யாணம் ?


 
     குழ‌ந்தைக‌ள் ‌திருமண‌ம், ‌மு‌‌தியவ‌ர்களுடனான ‌திருமண‌ங்க‌ள் பெருமளவு‌ற்கு ஒ‌ழி‌க்க‌ப்ப‌ட்டாலு‌ம், உலக‌த்‌தி‌ன் எ‌ங்கோ ஒரு மூலை‌யி‌ல் அர‌ங்கே‌றி‌க் கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌கி‌ன்றன.

அ‌ந்த வகை‌யி‌ல்தா‌ன், சோமா‌லியா‌வி‌ல் 112 வயது தா‌த்தா(?), 17 வயது பெ‌ண்ணை ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

சோமா‌லியாவை‌ச் சே‌ர்‌ந்த அகமத் முகமது டோரே 1897-ம் ஆண்டு பிறந்தவ‌ர். இவருக்கு ஏற்கனவே 5 மனைவிகளும் அவர்கள் மூலம் 13 குழந்தைகளும், 114 பேர மற்றும் கொள்ளுப் பேரக் குழந்தைகளும் உ‌ள்ளன‌ர். இவரது மூத்த மகனுக்கு த‌ற்போது 80 வயதாகிறது.

காடு வா வா ‌வீடு போ போ எ‌ன்ற ‌நிலை‌யி‌ல் 17 வயது சபியா அப்துல்லா என்ற பெண்ணை காத‌லி‌த்து ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ண்டு‌ள்ளோ‌ர் டோரே.

இது கு‌றி‌த்து டோரே கூறுகை‌யி‌ல், சபியாவை திருமணம் செய்து கொண்டிருப்பதால் எனது கனவு நனவாக இறைவன் உதவியிருக்கிறான். ச‌பியாவை நா‌ன் க‌ட்டாய‌ப்படு‌த்த‌வி‌ல்லை. ஆனா‌ல், எனது காதலை‌ச் சொ‌ல்‌லி ச‌ம்ம‌தி‌க்க வை‌த்தே‌ன். அவ‌ள் முழு மனதுட‌ன்தா‌ன் எ‌ன்னை‌த் ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌‌ண்டா‌ள். சபியா மூலமும் குழந்தைகள் பெற வேண்டும் என்பது எனது ஆசை என்கிறார், அ‌ந்த ப‌ல் ‌இ‌ல்லாத ‌கிழவ‌ர் டோரே.

இ‌தி‌ல் ம‌ற்றொரு ‌விய‌ப்பு எ‌ன்னவெ‌ன்றா‌ல், இ‌ந்த ‌திருமண‌ம், இரு‌ ‌வீ‌ட்டா‌ர் ச‌ம்மத‌த்துட‌ன் ஒரு ‌திருமண ம‌ண்டப‌த்‌தி‌ல், டோரே‌‌வி‌ன் குடு‌ம்ப‌ம் ச‌கிதமாக வெகு ‌சிற‌ப்பாக நடைபெ‌ற்ற‌ள்ளது எ‌ன்பதுதா‌ன்.

2/18/2011

தமிழின கொலைக்கு நீதி கேட்கும் முயற்சி


 

       

இந்தியா, சீனா உள்ளிட்ட தெற்காசிய வல்லாதிக்கங்களின் உறுதியான ஆதரவுடன் இலங்கையில் சிங்கள இனவெறி அரசு நடத்தி முடித்த சாட்சிகளற்ற தமிழினப் படுகொலைப் போருக்கு நியாயம் தேடி தமிழினம் மேற்கொள்ளும் பெரும் முயற்சிகளுக்கு இடையே, ‘என்ன செய்யலாம் இதற்காக’ என்ற தலைப்பில் அந்தப் போரின் கொடூரங்களை நம் கண் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.             மாமுயற்சி இது என்று பாராட்டினாலும், அந்த வார்த்தைகள் போதாது என்று சொல்லத் தோன்றுகிறது. ஈழத்தில் ‘வெற்றிகரமாக’ நடத்தி முடிக்கப்பட்ட தமிழினப் படுகொலையை இன்று வரை உலகத்தின் ஒரு நாடு கூட அங்கீகரித்திராத நிலையில், இந்தப் படங்களின் தொகுப்பை பார்ப்போரிடம் - இது இனப் படுகொலை இல்லையென்றால், இதற்குப் பெயர்தான் என்ன? என்று எளிமையாக வினவலாம். மனிதாபிமானமுள்ள எந்த நெஞ்சத்தாலும் இதிலுள்ள அனைத்துப் படங்களையும் பார்த்து முடிக்க இயலாது. ஏனெனில் ஒன்று, அனைத்தையும் பார்க்கும் வலிமை அப்படிப்பட்ட மனிதாபிமான உள்ளங்களுக்கு இருக்காது அல்லது அந்தப் படங்களை பார்க்கும்போது கண்களில் சுரக்கும் கண்ணீர் மேற்கொண்டு பார்க்கவிடாது.


ஆயினும் இது ஒரு சோகத்தின் தொகுப்பல்ல என்பதை ஒவ்வொரு படத்தின் கீழ் உள்ள வாசகங்களும் உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. அந்த இடத்தில்தான் படங்கள் பேசியதை விட அந்த எழுத்துக்கள் பேசுகின்றன. அவை பல வினாக்களை எழுப்புகின்றன. அதில் 1956 முதல் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிங்கள இனவெறி அரசுகளின் இனப் படுகொலைத் திட்டம் (Genocide intent) பட்டவர்த்தனமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதை முடிந்தால் வாங்கி பாருங்கள் ....

2/17/2011

என் பாரதத்தின் இன்றைய நிலைநெஞ்சு பொறுக்கு திலையே - இந்தநிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,


அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்


அஞ்சாத பொருளில்லை அவனியிலே;


வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த


மரத்தில் என்பார் அந்தக் குளத்தில் என்பார்;


துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத்


துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்.


மந்திர வாதி என்பார் - சொன்ன


மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்;


யந்திர சூனியங்கள் - இன்னும்


எத்தனை ஆயிரம் இவர்துயர்கள்!


தந்த பொருளைக் கொண்டே - ஜனம்


தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்;


அந்த அரசியலை - இவர்


அஞ்சதரு பேயென் றெண்ணி நெஞ்சம் அயர்வார்


சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச்


சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்;


துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு


தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார்;


அப்பால் எவனோ செல்வான் - அவன்


ஆடையைக் கண்டுபயந் தெழுந்துநிற்பார்;


எப்போதும் கைகட்டுவார் - இவர்


யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார்


நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த


நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட் டால்,


கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு


கோடிஎன் றால்அது பெரிதா மோ?


ஐந்துதலைப் பாம்பென் பான் - அப்பன்


ஆறுதலை யென்றுமகன் சொல்லி விட்டால்


நெஞ்சு பிரிந்திடு வார் - பின்பு


நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்.


சாத்திரங்கள் ஒன்றும் காணார் - பொய்ச்


சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே


கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் - ஒரு


கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்


தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமைச்


சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்;


ஆத்திரங் கொண்டே இவன் சைவன் - இவன்


அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடுவார்.


நெஞ்சு பொறுக்கு திலையே - இதை


நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே;


கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன்


காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்


பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்


பரிதவித்தே உயிர் துடிதுடித்து‌த்


துஞ்சி மடிக்கின் றாரே - இவர்


துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே


எண்ணிலா நோயுடையார் - இவர்


எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்


கண்ணிலாக் குழந்தை கள்போல் - பிறர்


காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்;


நண்ணிய பெருங்கலைகள் - பத்து


நாலாயிரங் கோடி நயந்துநின்ற


புண்ணிய நாட்டினிலே - இவர்


பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்
 
       - பாரதியார் -
 

2/16/2011

ஜான்சி ராணி எழுதிய கடிதம்
தனது கணவரது மறை‌வி‌‌ற்கு‌ப் ‌பிறகு ஜா‌‌ன்‌‌சி ம‌ண்ணை‌க் கா‌ப்பா‌ற்ற ல‌ட்சு‌மி பா‌‌ய் போ‌ர்‌க் கள‌த்‌தி‌ல் கு‌தி‌த்த வரலாறை எ‌ந்த‌ப் பெ‌ண்ணு‌ம் மற‌க்க மா‌ட்டா‌ர்க‌ள்.அ‌ப்படி‌ப்ப‌ட்ட ஜா‌ன்‌சி ரா‌ணி‌, தனது கணவரது மறை‌வி‌ற்கு‌ப் ‌பிறகு எழு‌திய கடித‌ம் ஒ‌ன்று இ‌ங்‌கிலா‌ந்து நூலக‌த்‌தி‌ல் இரு‌ந்து க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.


இந்தியாவில் முதலாம் சுதந்திரப்போர் துவங்குவதற்கு முன்பாக அதாவது 1857 ஆ‌‌ம் ஆ‌ண்டு ஜான்சி பகுதியை ஆட்சி செய்த ம‌ன்ன‌ர் ‌மரண‌ம் அடை‌ந்தா‌ர். ம‌ன்னரு‌க்கு வா‌ரிசு இ‌ல்லாததா‌ல் ஜா‌ன்‌சி‌ப் பகு‌தியை‌க் கை‌ப்ப‌ற்ற ‌கிழ‌க்‌கி‌ந்‌திய க‌ம்பெ‌னி‌யின‌ர் முய‌ற்‌சி செ‌ய்தன‌ர். இதை அ‌றி‌ந்த லட்சுமி பாய் அப்போதைய கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் ஜெனரல் டல்ஹவுசி பிரபுவுக்கு பாரசீக மொழியில் எழுதிய கடிதம் தா‌ன் த‌ற்போது இங்கிலாந்து நூலகத்தில் உள்ள ஆவண காப்பகத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.கணவனை இழந்த துயரத்துடன் லட்சுமி பாய் எழுதிய இந்த கடிதத்தில் `எனது கணவர், ஜான்சியை ஆட்சி செய்வதற்கு வசதியாக தாமோதர் ராவ் என்ற குழந்தையை தத்து எடுத்து இருக்கிறார். எனவே வாரிசு இல்லாத ராஜ்ஜியம் என்று கருதி ஜான்சியை உங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டிருந்தார்.


என்னும் இந்த சுவீகார‌ப் பு‌த்‌திரனை வா‌ரிசாக ஏ‌ற்று‌க் கொ‌ள்ளாத டல்ஹவுசி பிரபு ஜா‌ன்‌சியை‌க் கை‌ப்ப‌ற்ற ‌தி‌ட்ட‌மி‌ட்டா‌ர். இதனால் வெள்ளையர்களை எதிர்த்து ஜான்சிராணி 1857-ம் ஆண்டு தனது படைகளை திரட்டி போரில் குதித்தார் என்பது வரலாறு.


வெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் இந்தியாவில் அரசு ஊழியராக பணியாற்றிய லிவின் பென்தாம் போரிங் என்பவர் சேகரித்த மு‌க்‌கிய ஆவண‌ங்க‌ளி‌ல் இந்த கடிதம் இருந்ததாக லண்டன் நூலக ஆராய்ச்சியாளர் தெரிவித்தார்.
2/15/2011

தேர்தல் கவிதைஎலும்புத் துண்டு


ஏழை நாய்


அட இது வாக்குறுதிமக்கள் தான் மன்னர்கள்


கையிலே மை


ஊரெல்லாம் பொய்


முடிவுகள் வரும் வரை.நாங்கள் மன்னர்கள் ஆனால்


கிரிடம் அவர்கள் தலையில்கையிலே காசு விரல் நுனியில் மை


விற்பனைக்கு எங்கள் எதிர்காலம்.
திருடனா பொறுக்கியா..


தேர்ந்தெடுக்க வாய்ப்பு


ஒரே முடிவு தான்..எனக்கு


நிலம் தருவார் இலவசமாய்


பயிரிட ஆசை தான் வருவாளா பொன்னி


பட்டினியால் எலிவேட்டை


இனி தினம் மூன்று காட்சி


காணலாம் கலர் டிவியில்
ஓட்டுக்கு நூறு முதல் ஆயிரம்  ரூபாய்


வட்டியொடு வசூலிக்க


திறப்பார்கள் கள்ளுக் கடை

2/14/2011

காதலர் தினமாய்!


இனம் , மதம், மொழி கடந்து
இதயங்கள் இரண்டின் கலப்பு.


இதயத்தின் துடிப்பு
லப் டப் மறந்து
இரவு பகலாய்
உனது பெயரை
உரக்கச் சொல்லும்


உதிர்க்கும் பேச்சும்
வெளிவரும் மூச்சும்
உன்னைச் சுற்றியே
சிறகு விரிக்கும்.


காதல் என்றும் சுகமானது
கனவுகளும் நினைவுகளும்
புது விதமானது.
வாழ்வனில் இனிமை
காதலில் பிறக்கும்.
பரிசுத்தமான காதல்
புனிதமாய் ஒளிரும்.


சுமைகளைத் தாங்கும்
சுமைதாங்கி போலே
உண்மைக் காதல்
உயிராய்த் துடிக்கும்.


சோகத்தில் மனது
துவழும் போது
உள்ளத்தை மெதுவாய்
இதமாய்த் தழுவி
உண்மைக் காதல்
உயிர்ப்பைக் கொடுக்கும்.


வாழ்க்கை என்பதை
எத்தனை தடவை
வாழப் போகின்றோம்?
வாழ்வு என்பது
ஒருமுறை தானே!


வாழ்க்கை தன்னில்
பிடிப்பைத் தந்து
ரசிப்பாய் வாழ
காதல் வேண்டும்.


காதல் இல்லா
வாழ்வு அதுவும்
வறண்ட பூமியாய்
காய்ந்து பிளந்து
வாழ்க்கை வெறுத்து
இடறியே வீழும்.
இது தோன்றுவதும் அதிசயம்
தோன்றாமல் இருப்பதுவும் அதிசயம்.


பிறந்த தினம் மறந்து
பிரிந்த மனம் தவித்து
கண்ணீர் காணாத நாளொன்று
கண்டதில்லை நான்.


வருடத்தில் இந்நாளாவது
வாழ்ந்திட வேண்டும் இணைந்து
அதற்காக என்னிடம் கேட்டால்
தினம் ஒன்று இங்கு
போதாது என்பேன்.


திக்கெட்டும் போற்றட்டும்
காதலின் புகழை!


திகட்டாத இன்பத்தின்
தித்திக்கும் சுகங்களை
முடிவின்றி மீட்டிட…


என்னிடம் கேட்டால்
தினம் ஒன்று இங்கு
போதாது என்பேன்.


இரண்டு மனங்களின்
இன்ப இணைப்புக்கு
தினமும் தோன்றட்டும்
காதலர் தினமாய்!

2/13/2011

காத்திருக்கலாமே ...


காதல் பிரச்சனை வீட்டில் தெரியவந்தவுடன் கண்டிப்பாக பிரச்சனைகள் வரவே செய்யும்.


குழந்தையாக பாவித்துக் கொண்டிருப்பவர்கள் திடீரென மிகப்பெரிய முடிவினை அவர்களாகவே எடுக்கும் பொழுது கோபம், ஆத்திரம் எல்லாம் பெற்றவர்களுக்கு ஏற்படுவது நியாயமே.


'ஏன் நமது நியாயமான காதல் ஆசையை, ஆர்வத்தைப் புரிந்து கொள்ளாமல் பெற்றவர்கள் கோபத்தில் இருக்கிறார்கள்?' என சிந்திக்காமல், அவர்களது கோபம் நியாயமே, அது தீர்வதற்கு சிறிது நேரம் கொடுக்கலாம் என காத்திருங்கள்.


இந்திரா காந்தி படிக்கும் காலத்தல் பெரோஸ் காந்தியைக் காதலித்தார். விஷயம் பிரதமராக இருந்த நேருவின் காதுகளுக்குப் போனது. 'நான்கு வருட காலம் இருவரும் சந்திக்காமல், பேசிக்கொள்ளாமல், கடிதம் எழுதாமல் இருங்கள். அதற்குப் பின்னர் இருவருக்கும் காதல் இருப்பதாகத் தெரிந்தால் திருமணம் முடித்து வைக்கிறேன்' என்று நிபந்தனை விதித்தார்.


இருவரும் காதலுக்காக சொன்ன சொல்லைக் காப்பாற்றிக் கிடந்தார்கள். அவர்கள் இருவரும் அன்போடு காதலில் காத்துக் கிடந்திருப்பதைப் பார்த்த நேரு, விரைவிலேயே இருவருக்கும் திருமணம் முடித்து வைத்தார். பெற்றோர்களது கோபம் தீரும் வரை காத்திருங்கள். காத்திருந்தால் கண்டிப்பாக நல்லதே நடக்கும்.


பெற்றோர், காதல் இரண்டும் மனிதனுக்கு இரு கண்களைப் போன்றது என ஏற்கனவே பார்த்தோம். அதனால் இரண்டுடனும் சேர்ந்து வாழ்வதற்காக முடிந்தவரை கஷ்டப்பட்டு சம்மதம் பெறுதலே நல்லது.


சில பெற்றோர்கள் காதலுக்கு ஆதரவாகவே இருப்பார்கள். ஆனால், இந்த காதலுக்கு இசைவு தெரிவித்தால் அடுத்ததாக தம்பி, தங்கைக்கு திருமணம் முடிப்பதில் சிக்கல் ஏற்படும் என பயப்படுவார்கள். அவர்களது சந்தேகம், பயம் நியாயமானதே. அதனால் உங்களது காதலால் குடும்பத்தில் மற்றவர்களது எதிர்காலத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என உறுதியளிக்க வேண்டியது உங்கள் கடமை.


காதல் திருமணங்கள் என்பது இப்பொழுது வெகு சகஜமாக நடைபெறுகின்றன. இது சமூக குற்றம் அல்ல என்பதை எடுத்துச் சொல்லி அவர்களது அன்பினைப் பெற்று அதன் பின்னர் திருமணம் முடிப்பதே நல்லது.


காதல் என்ற கனவுக் கோட்டையினைப் பிடிக்க ஏழு மலை, எட்டு கடல் கடந்து போகும் பொறுமை இருவருக்கும் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் இருவரும் உண்மைக் காதல் செய்கிறார்கள் என அர்த்தமாகும்.

2/12/2011

ஏன் இந்தியா உலக கோப்பை வெல்ல வேண்டும் ...


            சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பலமான முழு இந்திய் அணி இதில் களமிறங்குகிறது. இதனால் எதிர்பார்ப்புகள் அழுத்தம் அதிகரித்து வருகிறது. சச்சின் டெண்டுல்கரின் கடைசி உலகக் கோப்பை என்று கருதப்படும் இந்த உலகக்கோப்பையில் அனைவரின் கவனம் முழுதும் இந்திய அணி மேல் இருப்பதால் அழுத்தத்தை எவ்வாறு கடக்கிறார்கள் என்பதைப்பொறுத்து வெற்றி தோல்வி நிர்ணயம் செய்யப்படலாம்.

இந்தியா ஏன் இந்த உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்கான என் பார்வையில் காரணங்கள்:


1. 2007ஆம் ஆண்டு ஏற்பட்ட அவமானகரமான முதல் சுற்று வெளியேற்றத்திற்குப் பதிலடி கொடுக்கவேண்டும்.


2. சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேகிறார். 22 வருட நீண்ட கிரிக்கெட் வாழ்வில் ஒரு உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் கூட இந்தியா வெல்லவில்லை என்பது சச்சினுக்கு பெரிய வருத்தமாக போய் விடும் என்பதை விட அவரது ரசிகர்களுக்கும் இந்திய கிரிக்கெட்டிற்குமே பெரிய ஏமாற்றமாகப் போய் முடியும்.


3. உள்நாட்டு மைதானங்களில் விளையாடுவது.


4. தோனி தலைமையில் ஒரு முழு பலம் பெற்ற இந்திய அணி இப்போதுதான் களமிறங்குகிறது. இதற்கு முந்தைய சில தொடர்களில் முன்னணி வீரர்கள் சிலர் இருக்க மாட்டார்கள். குறிப்பாக சச்சின் டெண்டுல்கர், சேவாக் இல்லாமல் விளையாடியுள்ளார். எனவே இந்த அணியை வைத்துக் கொண்டு தோற்க முடியாது.


5 எல்லாவற்றிற்கும் மேலாக பயிற்சியாளர் கேரி கர்ஸ்டன் இந்த அணி மீது தன்னலமற்ற ஒரு பிரியம் காட்டி இதன் வெற்றி தோல்விகளில் பங்கு பெற்று அணியை வளர்த்தெடுப்பதில் பெரும் தாக்கம் செலுத்தியுள்ளார். அவர் இந்தியா சாம்பியன் என்ற உணர்வுடன் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விடுபட பெரிதும் விரும்புவார்.


6. இந்தியாவில் இந்திய ரசிகர்கள் முன்னிலையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறுவது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும்.

7 .இளம் இந்திய வீரர்கள் கொண்ட பலமான அணி

8 . தற்போது டெஸ்ட் முதலிடம் ,ஒரு நாள் போட்டியில் இரண்டாம் என பலமான அணி

2/11/2011

எதிர் கட்சி தலைவரின் மொத்த வழக்குகள்...

இன்று எப்போதும் போல இணையத்தில் ஏதோ தேடி கொண்டு இருக்கும்போது இன்று ஊழலை எதிர்க்கும் தலைவியின் மொத்த வழக்குகள்...

• September 14, 2001
SC rejects Jaya's plea on HC hearings


• September 13, 2001
TN ministers have to go if CM does: AG; SC reserves verdict


• September 12, 2001
Jaya summoned on Oct 4 in 2nd wealth case


• September 6, 2001
Speculation rife as Jaya stays away from assembly
Jaya has no option but to quit: Vaiko


• September 5, 2001
Tough Day for Jaya's Counsel in SC


• September 4, 2001
Jaya as CM will set unhealthy precedent, SC told
PIL: SC rejects Jaya's adjournment plea


• September 3, 2001
Jaya 'explains' comments on judiciary
Jaya moves Supreme Court for vacation of stay in Tansi case


• August 31, 2001 Madras HC indefinitely adjourns Jaya's appeals


• August 30, 2001 SC stays hearing of Jaya's appeals, shocks AIADMK


• August 24, 2001 Jaya writes to PM on Cauvery issue


• August 17, 2001 Jaya's co-convicts too want their appeals heard Jaya refuses to relieve 3 IPS officers


• August 14, 2001 Jaya denies AIADMK role in Sunday violence TN cops issue: Jaya calls on governor


• August 13, 2001 Jaya's appeals not taken up for hearing


• August 12, 2001 Jaya recommended Subramanyam's name: Fernandes


• August 3, 2001 Hearing on Jaya's appeal in Tansi case delayed


• July 20, 2001 SC admits petitions against Jaya as CM


• July 14, 2001 Jaya terms Centre's warning 'illegal'


• July 10, 2001 Maran, Baalu ought to be sacked: Jaya


• July 9, 2001 Jaya names comedian for RS seat


• July 6, 2001 Jaya meets TN governor Plea against Jaya's appointment dismissed


• July 5, 2001 Jaya declines to comment on Centre's warning Jaya ally comes out in Karunanidhi's support


• July 4, 2001 Jaya's assault against DMK far from over Jaya bows down to pressure


• July 3, 2001 Jaya ally condemns TN police Jaya blinks first Jaya to attend Rangarajan swearing-in


• July 2, 2001 Jaya refuses to comment on arrests


• June 30, 2001
Jaya calls Sun TV footage a stunt


• June 29, 2001
Scribe arrested by Jaya govt released on bail


• June 26, 2001
Jaya replaces another minister


• June 18, 2001
DMK mounts legal offensive against Jaya


• June 13, 2001
Jaya's 'foster son' arrested


• June 12, 2001
Fresh summons issued to Jaya


• June 9, 2001
Jaya replaces three ministers


• June 6, 2001
No alliance with any party, says Jaya: PTI


• June 4, 2001
SC refers Jaya case to a larger bench
Supreme Court refers case against Jaya to a larger bench


• May 30, 2001
Jaya government targets Stalin for starters


• May 28, 2001
Swamy files PIL questioning Jaya's appointment as CM


• May 24, 2001
SC to hear PILs against Jaya on June 4


• May 23, 2001
Another PIL against Jaya's appointment as CM


• May 21, 2001
Jaya readying dossier on DMK leaders
Jaya readying dossier on DMK leaders


• May 22, 2001
PIL challenges Jaya appointment


• May 19, 2001
Several new faces in Jaya's expanded ministry


• May 15, 2001
Jaya determined to overcome hurdles to getting elected
Jaya extends an olive branch to Delhi


• May 14, 2001
Jaya to be sworn in at 1730 on Monday
Jaya in battle against law, and time


• May 13, 2001
Jaya will stake her claim to be CM


• May 10, 2001
Karunanidhi, Jaya hopeful of victory


• April 30, 2001
No discrimination against Jaya: CEC
I am still a chief ministerial candidate: Jaya


• April 25, 2001
'Rejection of Jaya's nomination proves law cannot be bent'
Voters, governor will decide Jaya's fate
I am still in the race, insists Jaya


• April 24, 2001
Karunanidhi behind rejection of nominations: Jaya
Jaya leaves everyone guessing
Decision on Jaya nominations right: Jethmalani
rediff.com:


• April 23, 2001
Tamil Nadu elections


• April 22, 2001
Jaya's fate may be decided on Monday


• April 19, 2001
DMK weaving a conspiracy, says Jaya


• April 18, 2001
Jaya files nomination for Andipatti


• April 17, 2001
Jaya summoned to face fresh case


• April 16, 2001
EC has no comments on Jaya's eligibility
Jaya files nomination in Krishnagiri


• April 14, 2001
Jaya to contest from two seats: PTI


• April 12, 2001
Jaya to move SC for sanction to contest poll
SC refuses to expedite Jaya's EVM petition
Allies watch developments as Jaya decides to move SC


• April 11, 2001
Verdict in Jaya case raises more questions than it answers
EC to decide on Jaya's poll eligibility


• April 10, 2001
Jaya's petition challenging use of EVMs dismissed
Orders reserved on Jaya's petition in Tansi case


• April 6, 2001
Jaya disowns Natarajan again


• April 2, 2001
Jaya moves HC for stay of conviction
Jaya puts spoke in Cong's plans for Pondy


• March 23, 2001
Charge-sheet filed against Jaya


• March 15, 2001


• March 13, 2001
Jaya seals pact on TN polls, AIADMK to contest 141 seats


• March 12, 2001
Can Jaya provide good governance, asks Chidambaram


• March 8, 2001
rediff.com:Jaya bid to sideline Cong, Left?


• March 7, 2001
***Saisuresh Sivaswamy on the Jayalalitha phenomenon


• March 6, 2001
Jaya offers TMC-Congress 45 seats in TN, and Pondy too
Congress rejects Jaya's proposal


• March 5, 2001
TMC leaders meet Jaya, PMK strikes deal


• March 4, 2001
Decision on Monday, says Jaya


• February 21, 2001
Jaya moves court against electronic voting machines


• February 16, 2001
SC Okays Jaya's Trial in TIDCO Scam: PTI


• January 13, 2001
Jaya tells Cong, TMC to finalise poll strategy by week-end: PTI


• December 26, 2000
• Charges framed against Jaya in SPIC case


• December 22, 2000
• Jaya to be charged in SPIC case on Dec 26


• December 21, 2000
Jaya rules out alliance with BJP


• December 15, 2000
• Jaya I-T case to begin on Dec 27


• December 11 2000
TN police moves HC against Jaya's acquittal in Tansi case


• October 25, 2000
• Jaya's appeal admitted in TANSI case


• October 24, 2000
• Jaya appeals against Tansi convictions


• October 9, 2000
• 3 years RI for Jaya in Tansi case


• August 17, 2000
• CBI gets nod to prosecute Jaya


• July 19, 2000
• HC stays attachment of Jaya's properties in wealth case


• June 23, 2000
• My signatures on Tansi sale documents were forged: Jaya


• June 6, 2000
• Court summons Jaya in coal import scam case


• May 5, 2000
• SC reprieve for Jaya in colour TV scam


• May 4, 2000
• SC verdict on Jaya's plea tomorrow


• February 9, 2000
• Madras HC suspends Jaya's sentence, grants her bail


• February 2, 2000
• Jaya's conviction sparks violence, 3 dead


• July 19, 1999
• Charges framed against Jaya in Tansi case


• July 6, 1999
• HC issues notice to Jaya on transfer of wealth case


• June 16, 1999
• Jaya discharged from coal import case
• Discharge is a political shot in the arm for Jaya


• June 11, 1999
• Coal import deal: Court summons Jaya


• June 3, 1999
• Framing of charges against Jaya in Tansi case put off again


• May 25, 1999
• Judge furious as Jaya falls 'sick'


• May 24, 1999
• Charges against Jaya in TANSI case to be framed tomorrow


• May 19, 1999
• Judges in Jaya graft cases face 'threats'


• May 14, 1999
• Supreme Court verdict setback to Jaya


• May 12, 1999
• SC dismisses Jaya's plea in coal import scam case


• April 15, 1999
• SC reserves verdict on Jaya's cases
• Madras high court orders Jaya's trial in coal import scandal


• April 14, 1999
• Centre's modified stand on special courts puts Jaya in a spot


• April 7, 1999
• Jaya's counsel does an about-turn over transfer of cases


• March 16, 1999
• TN will amend plea on transfer of Jaya's cases


• March 9, 1999
• SC to hear Jaya case on Thursday
• Judge Sambandam refuses to stay Jaya's trial


• February 26, 1999
• Judge in Jaya case seeks transfer


• February 22, 1999
• SC admits plea against central notification on Jaya's cases


• February 15, 1999
• TN will challenge transfer of Jaya's cases in SC


• February 12, 1999
• DVAC contests Jaya's case against validity of special judge


• February 10, 1999
• Move on Jaya's cases legally valid, says Thambidurai
• PIL against notification on Jaya's cases dismissed


• January 11, 1999
• Jaya gets a breather as Supreme Court refuses to stay verdict


• December 21, 1998
• Special judge dismisses Jaya's petition, initiates trial in Kodaikanal hotel case


• December 18, 1998
• Centre tells SC it has power to transfer Jaya's corruption cases


• December 7, 1998
• Trial process in another Jaya corruption case begin


• November 26, 1998
• SC okays Jaya's trial by special courts


• August 21, 1998
• SC orders Jaya's trial in land deal scam case


• June 6, 1998
• Jaya, Sasikala undertake not to alienate disputed property


• June 5, 1998
• Judge stays order attaching Jaya's property


• April 24, 1998
• Jaya takes Tansi case to high court


• April 20, 1998
• Court finds prima facie evidence against Jaya in Tansi land caseமுழு விபரம் ,இன்றைய தமிழர்களுக்கு

2/10/2011

இப்படிதான் கவிதை ....


உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளை
கொஞ்சம் கற்பனை கலந்து
நல்ல பல சொற்களையும் சேர்த்து…


என் மனதுக்குள் நிறைந்த
திறந்த அந்த விஷயம்
அதைப் படிப்பவர்களின் மனதிலும்
ஏதோ ஓர் தாக்கத்தை ஏற்படுத்தி
கண்முன் காட்சியாய் தோன்றி நிற்க…


அவர்கள் மனதுக்குள்ளும்
உறைந்திருந்த, ஒளிந்திருந்த
சில விஷயங்களைத் துருவி
திடீரென்று எதையெதையோ ஞாபகப்படுத்த…


மொழியின் தன்மையோடு
அதிகம் நீளாமல், சுருக்கமாக
இணைத்த சொற்களின் கோர்வையே கவிதை .

2/09/2011

பாரத ஜன‌ங்க‌ளி‌ன் த‌ற்கால ‌நிலைமை

நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே;
வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த
மரத்தில் என்பார் அந்தக் குளத்தில் என்பார்;
துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத்
துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்.


மந்திர வாதி என்பார் - சொன்ன
மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்;
யந்திர சூனியங்கள் - இன்னும்
எத்தனை ஆயிரம் இவர்துயர்கள்!
தந்த பொருளைக் கொண்டே - ஜனம்
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்;
அந்த அரசியலை - இவர்
அஞ்சதரு பேயென் றெண்ணி நெஞ்சம் அயர்வார்


சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்;
துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார்;
அப்பால் எவனோ செல்வான் - அவன்
ஆடையைக் கண்டுபயந் தெழுந்துநிற்பார்;
எப்போதும் கைகட்டுவார் - இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார்


நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட் டால்,
கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு
கோடிஎன் றால்அது பெரிதா மோ?
ஐந்துதலைப் பாம்பென் பான் - அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லி விட்டால்
நெஞ்சு பிரிந்திடு வார் - பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்.


சாத்திரங்கள் ஒன்றும் காணார் - பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் - ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்;
ஆத்திரங் கொண்டே இவன் சைவன் - இவன்
அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடுவார்.


நெஞ்சு பொறுக்கு திலையே - இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே;
கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்து‌த்
துஞ்சி மடிக்கின் றாரே - இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே


எண்ணிலா நோயுடையார் - இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தை கள்போல் - பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்;
நண்ணிய பெருங்கலைகள் - பத்து
நாலாயிரங் கோடி நயந்துநின்ற
புண்ணிய நாட்டினிலே - இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்

2/08/2011

அற்புதமாய் செதுக்குகிறேன் உன்னால்....

போராட்டங்கள் சங்கிலி தொடராய் தொடர
தனிமையில் வெறுமையை தேடி மனம் அலைய
சிந்தனை செய்தே செத்து கிடக்கிறது அறிவும் !

அகலக்கால் வைக்காதே விரைவில் அடிவிழும்
பெரியோர் அறிவுரை சரிதானோ
என்றே பிதற்றுகிறது மனம் !

கண்ணீரால் கவலைகளை கழுவிவிட
முயன்றும் கவலை தொலையவில்லை
கண்ணீரும் நிற்கவில்லை !

தட்டினேன் திறக்கவில்லை
கேட்டேன் கிடைக்கவில்லை
தேடினேன் கண்டடையவில்லை !

வெளிவர வகையற்று ஓட்டுக்குள்
நத்தையாய் ஒளிந்து கிடக்கிறேன் !
எதற்கும் கலங்காத என்னை கதற
வைக்கிறது வாழ்க்கை !

பற்றி கொள்ள உன்னிடம் கரம் நீட்டினேன்
கரம் விடுத்து உயிர் பற்றினாய் உறுதியாய் !
ஒரே ஆறுதலாய், உயிராய் நீ இருக்கையில்
இனி உதிரம் வற்றியும் துக்கம் இல்லை !

என் காயங்களை உன் கண் அசைவில்
கவசமாய் மாற்றி விட்டாய் ஒரு நொடியில் !
நெருப்பை ஒரு போதும் கரையான்கள் அரிக்காது
என்று சொல்லியே குளிர வைக்கிறாய் என்னை !

'எனதுயிரே ! துயரங்களை தூரப்போடு
நாளையும் இருக்கிறது ஒரு போராட்டம்
சந்திக்க வேண்டும் உற்சாகமாய்'
என்றே திடப் படுத்துகிறாய் தினமும் !

'இன்னும் கொஞ்சம் அமைதி கொள்
என் தோள் இருக்கிறது' என்றே
சாய்த்து கொள்கிறாய் என்னை !

சோகம் இடியாக நெஞ்சில்
இறங்கும் போதெல்லாம்
என் மனம் தளராமல் தாங்குகிறாய் !

அவமான கல்லில் அழகு சிலை
அற்புதமாய் செதுக்குகிறேன்
உன்னால் இன்று !!

இந்த வாரம் ஆனந்த விகடனுக்கு அனுப்பியது....

2/07/2011

"இவனா"

ஏன்தான் இன்று ,

என்நிலை இப்படியானது ?
முதலாளி நண்பன் என்று ஊருக்குள்
எனக்கு ஓர் பெயர் உண்டு.
முற்றுக்கும் காரணம் நான் அறிவேன் இன்று
என் திமிர் அன்று!


நான் சம்பாதித்த போது
என்னுடன் இல்லாத நண்பர்கள் இல்லை....
பிடித்திருக்குமோ கர்வம் எனக்குள்
ஊரில் நானும் முதலாளி என்று.
ஆயிரம் ஆயிரம் போன் அழைப்புகள்
விடாது தூரத்தியது எனக்கு - என்னை
பெரியவன் என்றும்,நான் மனிதன் என்றும்
எண்ணற்ற அழகிய பேச்சு கொண்டு
என்னை போற்றி என் அன்பை வேண்டி..

உள்ளம் மகிழ உச்சி குளிர
கர்வம் வரவழைத்து இன்று என்னையும்,
என் தொழிலையும் தட்டிகளித்தனர்
என் நண்பர்கள் ,உறவினர்கள் - ஏளனத்துடன் !

இன்றும் ,அன்னையிடமும் தந்தையிடமும்
எண்ணற்ற பாசங்கள் குவிந்தன


பல நிபந்தனைகள் எனக்குள் இட்டு அவர்கள் கழிவு
என்று தள்ளி வைத்தேன்


நண்பர்கள் அத்தனைபேரும் என் பாதகத்தை.
ஊருக்குள் பரப்பியது ,அவர்கள் குணாதிசயம் பற்றிய
விபரம் இன்று என்னை கலைத்தது
செல்வம் குறைந்தது ஏடெடுத்து பார்ப்பவர்
ஒருவர் கிடையாது தனிமரமாய் "இவனா" என்ற
பட்டம் சுமந்து இங்கு நான் !
இதன் பதில் மிகவிரைவில் என் அன்பு நெஞ்சங்களுக்கு ....

2/06/2011

திருக்குறள்


திருவள்ளுவரின் குறளை மெச்சுகிறார்களே ஒழிய காரியத்தில் அதோடு, அதற்கு நேர்விரோதமாக கீதையைப் போற்றுகிறார்கள்.


அறிவினால் உய்ந்துணர்ந்து ஒப்புக்கொள்ளக்கூடியனவும் இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துக்களைக் கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள்.


கம்பராமாயணத்தில் 100 பாட்டும், கந்தபுராணம் அல்லது பெரிய புராணத்தில் 200 பாட்டும் படிப்பதைக் காட்டிலும் திருக்குறளில் 10 பாட்டுப் படிப்பது எவ்வளவோ அறிவூட்ட வல்லது.


குறள் வெறும் ஒழுக்கத்தையும், வாழ்க்கைக்கு வேண்டிய அனுபவபூர்வமான பிரத்தியட்ச வழியையும் கொண்டதாகும்.


குறள் ஒரு அறிவுக் களஞ்சியம். பகுத்தறிவு மணிகளால் கோக்கப்பட்ட நூல்.


கூட்டுறவு


கூட்டுறவு வாழ்க்கை பிறருக்கு நாம் எவ்வாறு சகாயம் செய்வது, எவ்வாறு உதவி செய்வது என்பதை இலட்சியமாகக் கொண்டதேயாகம்.


நமது உடலில் பழைய தனிமைத் தத்துவ இரத்தைத்தை எடுத்துவிட்டுக் கூட்டுறவுத் தன்மை என்கிற இரத்தத்தைப் பாய்ச்ச வேண்டும்.


மனிதன் பகுத்தறிவுள்ள காரணத்தால்தான் தன் சமுதாயக் கூட்டு வாழ்க்கைக்கென்று பல திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறான். அத்திட்டங்களை நிறைவேற்றத் தனி மனிதனால் முடியாது. அதற்கு மற்றவர் உதவி இருந்தே தீர வேண்டியிருக்கிறது.


கூட்டுறவு என்கிற கொள்கை சரியான உயரிய முறையில் நம்நாட்டில் ஏற்பட்டுவிடுமானால் மக்கள் சமூகமே சஞ்சலமற்று, நாளைக்கு என்ன செய்வதென்ற ஏக்கமின்றி, திருப்தியுடன் நிம்மதியாக, குதூகலமாக வாழ வழி ஏற்பட்டுவிடும்.


நாம் செலவழிப்பதில் வகைதகையற்ற முறையில் வீண் செலவு செ ய்து வருகின்றோம். கூட்டுறவு முறையில் நமது வாழ்க்கையை நடத்தினால், இன்றைய நமது செலவில் எட்டில் ஒரு பாகம் தான் செலவு ஏற்படும். பாக்கி இன்னும் ஏழு பேருக்கு உதவக் கூடியதாயிருக்கும். நம் நாட்டு நிலைமைகளை மாற்றியமைக்காவிட்டால் நம் வாழ்வு விரைவில் அîதாகதியாகிவிடுமென்பது நிச்சயம்.


பொருளாதாரம்


கடவுளுக்குக்கு நன்றி செலுத்தும் முறையிலும் இன்னும் மேன்மேலும் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக விண்ணப்பம் போட்டு, லஞ்சம் செலுத்தும் முறையிலும் செல்வத்தைப் பாழாக்குகிறார்கள். இதன் பயனாகவே, இந்த நாட்டின் ஆண்டொன்றுக்குப் பல கோடி ரூபாய் பாழாவதைப் பார்க்கலாம்.


மக்களுக்குள்ள சமுதாயக் கொடுமை தீரவேண்டியது எவ்வளவு அவசியமோ அது போலவே, மக்களுக்குள்ள பொருளாதாரக் கொடுமையும் தீரவேண்டியது அவசியமாகும்.


நான் ஒரு நிமிடம் அரசனாய் இருந்தாலும் முதல் முதல் திருமணம் முதலிய பலவகைகளிலும் ஏற்படும் பொருள் விரயத்தைத் தடுக்கத் ¬க்குத் தண்டனை நிபந்தனையுடன் சட்டம் செய்வேன். பொருள் நட்டம் தான் இன்று இந்தியாவைப் பிடித்த பெரும் பிணி என்று சொல்லுவேன்.


செல்வம் என்பது உலகின் பொதுச்சொத்து, அதாவது மக்கள் அனைவரும் அனுபவிக்க உரிமையுள்ள சொந்தமான சொத்தாகும். அதை யார் உண்டாக்கியிருந்தாலும் உலகத்தில் உள்ளவரை, எவருக்கும் அது பொதுச்சொத்தாகும். அனுபவிக்கும் உரிமைபோல அதை அழியாமல் பாதுகாக்கவும் உரிமை உண்டு.


நாளுக்கு நாள் மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியப் பொறுப்பு ஆகிய தன்மைகள் இல்லாத போக்கு உச்ச நிலையடையும் வகையில் மனித சமுதாயம் சென்று கொண்டிருக்கிறது. சொத்துரிமை இல்லாமல் தடுப்பதே இதற்குப் பரிகாரமாகும்.


திருமணம்


மணமக்கள், உயிர் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பழகும் முறையைப்போல் நடந்துகொள்ள வேண்டும். எதிலும் தான் கணவன் என்ற ஆணவத்தை மணமகன் கொள்ளக்கூடாது. மணமகளும் தான் கணவனுக்கு அடிமைப் பொருள் - அடுப்பூதுவதற்கு என்றே வந்தவள் என்ற எண்ணமில்லாது பழக வேண்டும்.


மணமக்கள் சந்ததி உற்பத்தி செய்வதில் அவசரப்பட்டுவிடக் கூடாது. திருமணம் நடந்து குறைந்தது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னாவது குழந்தை பெறுவதாயின் மிக நல்லதாகும்.
ஒருவனுடைய வாழ்க்கைக்கு ஒருவர் இன்றியமையாதவர் என்ற நிலையில் காதல் கொள்வதுதான் உயர்ந்த காதலாகும்.


சுயமரியாதைத் திருமணம் என்பது அறிவு ஆராய்ச்சியின் காரணமாய் ஏற்பட்டது.


திருமணம் என்பது மணமக்களை மட்டும் பொறுத்ததல்ல. நாட்டின் முன்னேற்றத்திலும் தொடர்பு கொண்டிருக்கிறது.


அரசியல்


பிறவியிலும் பணத்திலும் உயர்வு தாழ்வு இல்லையானால் ஆளுவதிலும் ஆளப்படுவதிலும் உயர்வு தாழ்வு இல்லாமல் போய்விடுமே என்று அரசன் பயப்படுகிறான்.


நம் நாட்டுக்கு இன்று எவ்வித அரசியல் கிடைப்பதானாலும் அதில் சமூக சமத்துவமும், சமூக ஒற்றுமையும் உண்டாக்கக்கூடிய தன்மை இருக்க வேண்டும்.
பணம் உள்ளவனும் பணம் இல்லாதவனும் உலகத்தில் இருக்கும்வரை லஞ்சம், பிச்சை முதலானவைகள் ஒழியவே ஒழியாது.


இலஞ்சம் ஒழிய வேண்டுமானால், தனி உடைமைத் தர்மம் அழிந்து, ஒழிந்து, பொதுஉடைமை நிலை ஏற்பட்டால்தான் முடியும். அதில்லாதபடி இலஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசுவது மனுதர்மம் பேசுவதேயாகும்.


சமுதாயத் துறைக்கு பாடுபடுவதுதான் உண்மையான அரசியல் தொண்டாகும்.


பொதுத்தொண்டு


தன்னலமற்ற பொதுத்தொண்டு செய்பவர்கள் - பிரதிபலன் கருதாது உழைக்கக் கூடியவர்கள் எண்ணிக்கை நாட்டில் மேன்மேலும் பெருகவேண்டும். அவர்களின் சீரிய குணங்கள் பொதுமக்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும். மனிதனாகப் பிறந்தவர் பொதுவாழ்வில் எப்படி நடந்துகொண்ண வேண்டுமென்பதற்கு அவர்களின் வாழ்க்கையே எடுத்துக்காட்டாக இருக்கும்.


பிறப்பதும் சாவதும் இயற்கை, ஆனால் மக்கள் பாராட்டுதலுக்கு உகந்தவகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரைச் சும்மா போற்றமாட்டார்கள். நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரியமாற்ற வேண்டும்.


சுகபோகத்தினால் இன்பம் காண்பதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காண்பதே சிறந்த இன்பமாகும். வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக் கூடாது. மக்களுக்காகவும் தொண்டுக்காகவும் நம் வாழ்வு இருக்க வேண்டும் என்று கருத வேண்டும்.


ஒருவன் தன்னுடைய சொந்தக் காரியத்தைப் பொருத்த மட்டில்தான் மானத்தையும், கவுரவத்தையும் கவனிக்க வேண்டும். பொதுநலம், பொதுத்தொண்டு என்று வந்துவிட்டால் அவை இரண்டையும் பார்க்கக்கூடாது.


மனிதன் திருடுகிறான், பொய் பேசுகின்றான், பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான். இவனை மக்கள் இகழ்வதில்லை, சாதியை விட்டுத் தள்ளுவதில்லை, ஆனால் சாதியைவிட்டுத் தள்ளிவிடப்படுகிறான், கல்யாணம் செய்தால், சாதியை விட்டுத் தள்ளிவிடப்படுகிறான். இந்த மக்களின் ஒழுக்கம், நாணயம் எப்படிப்பட்டது பாருங்கள்.


தீண்டாமை


சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கமே பக்தியைவிட இன்றியமையாது. ஒழுக்கம் என்பது, சொல்லுகின்றபடியே நடப்பதும் நடந்தபடியே செல்லுவதுமாகும்.


பக்தி என்பது தனிச் சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து. பக்தி இல்லாவிட்டால், இழப்பில்லை ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்.


தொழிலாளி-முதலாளித்தன்மை முறையே இருக்கக் கூடாது. வேலை செய்பவர்கள் பங்காளியாக அல்லாமல் கூலிக்காரர்களாக இருப்பது அடிமைத்தனம்.


நாடு, மொழி, கடவுள், மதம், சாதி என்று எந்தபற்றுமின்றி, மானுடப் பற்றுடன் அறிவைக் கொண்டு தங்குதடையின்றி சிந்தித்துச் செயல்புரிவதே பகுத்தறிவாளர் கடமையும், பொறுப்புமாகும்.


தீண்டாமை என்பதே சாதி காரணமாக ஏற்பட்டதே தவிர, அதற்கு வேறு காரணமே ஆதாரமே இல்லை. சாதியை வைத்துக்கொண்டு தீண்டாமை ஒழிய வேண்டும் என்பது சிறிதும் அறிவுடைமையாகாது.


பகுத்தறிவு


இராமாயணத்திலும், பாரத்திலும் ஆகாய விமானம் இருக்கிறது. ஆனால், அது மந்திர சக்தியால் ஓடியிருக்கிறது. ஆங்கில இலக்கியத்தில் ஆகாய விமானம் பற்றிய விளக்கம் இருக்கிறது. இது இயந்திர சக்தியால் ஓடுகிறது. நமக்கு எது வேண்டும்? மந்திர சக்தியா? இயந்திர சக்தியா?


அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் தேவைக்கும் பொருத்தமில்லாத காரியங்கள் பழக்கத்தின் பேராலோ, வழக்கத்தின் பேராலோ, தெய்வத்தின் பேராலே மதத்தின் பேராலே, சாதி வகுப்பின் பேராலோ மற்றெதன் பேராலே நடத்தப்படக் கூடாது.


கடவுள் சென்னது, மகான் சொன்னது, ரிஷி சென்னது, அவதார புருடர்கள் சொன்னது என்று பார்க்கின்றானே ஒழிய, தன்புத்தி என்ன சொல்லுகிறது என்று பார்ப்பதே இல்லை.
மூட நம்பிக்கைகளைப் பகுத்தறியாமல் பின்பற்றியதாலேயே உழைப்பாளி அடிமையாகவும், சோம்பேறி ஆண்டானாகவும் இருக்கும் நிலை வந்தது.


மாறுதலைக் கண்டு அஞ்சாமல், அறிவுடைமையோடும் ஆண்மையோடும் நின்று எதையும் நன்றாய் ஆராச்சி செய்து, காலத்திற்கும் அவசியத்திற்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளிக் கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்ய வேண்டியது பகுத்தறிவுடைய மனிதனின் இன்றியமையாத கடமையாகும்.


அறிவியல்


இயந்திரம் கூடாதென்றால் மனிதனுக்கு அறிவு விருத்தி கூடாது என்பதுதான் பொருளாகும்.


இன்று நாம் எவ்வளவு மாறுபாடு அடைந்துவிட்டோம். நம் வசதிகளும் வாழ்வும் ஏராளமாகப் பெருகிவிட்டன. அதற்குமுன் கட்டைவ ண்டிதான். இன்று ரயில், மோட்டார், ஆகாய விமானம் முதலிய நவீன வசதிகள், தீ உண்டாக்க சிக்கிமுக்கிக் கல்லை உராய்ந்தோம் , இன்று ஒரு பொத்தானை அழுத்தினால், ஆயிரக்கணக்கான மின்சார விளக்குகள் எரிகின்றன. வாழ்க்கையில் இவ்வளவு மாற்றமடைந்துள்ள நம் மக்களின் புத்திமட்டும் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போலவே இருக்கிறதே!


கொஞ்ச காலத்திற்குமுன் கடவுளைப் பற்றிய கதைகளை அப்படியே, அதாவது கடவுள் சக்தியில் நடைபெற்றது என்று நம்பிக்கொ ண்டிருந்தவர்கள் கூட, இப்பொழுது அப்படியே நம்புவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு, தங்களுக்குள்ள அறிவு வளர்ச்சியில்லாத தன்மையை மறைத்துக் கொண்டு, விஞ்ஞானத்தின் மூலம் அக்கதைகளை மெய்ப்பிக்க முயற்சி எடுத்துக் கொண்டு சிரமப்படுகிறார்கள்.


சக்கிமுக்கிக் கல்லால் முதலில் நெருப்பை உண்டாக்கியவன் அந்தக் காலத்து "எடிசன்" அப்புறம் படிப்படியாக முன்னேற்றமாகி இப்பொழுது மின்சாரத்தில் நெருப்பைக் காண்கிறோம்; எனவே மாற்றம் இயற்கையானது; அதைத் தடுக்க யாராலும் முடியாது.


மக்கள் பிறப்புக்கூட இனி அருமையாகத்தான் போய் விடும். அது போலவே சாவும் இனிக் குறைந்து விடும். மனிதன் வெகு சுலபமாக நூறு ஆண்டு வாழ முடியும். யாரும் சராசரி என்று இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற மாட்டார்கள். ஆண், பெண் உறவுக்கும் பிள்ளைப் பேற்றுக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடும்.


இலக்கியம்


எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் அதன் மதிப்பு, அந்த நூலின் பயனை அளவாகக் கொண்டதே ஒழிய, அதை ஆக்கியவனையோ, அதில் உள்ள தெய்வீகத் தன்மையையோ, இலக்கண இலக்கிய அளவையையோ, அமைப்பையோ, அற்புத தன்மையையோ அளவாகக் கொண்டது ஆகாது.


இலக்கியம் என்பது நாகரீகத்தை புகத்த வேண்டும். மக்களிடம் உயரிய குணங்களைப் புகுத்துவதாக இருக்க வேண்டும்.


இலக்கியம் எதற்காக? இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்? எப் படிப்பட்டதை இலக்கியம் என்று சொல்லலாம்? அவை எதற்காக இருக்க வேண்டும்? என்பது பற்றிச் சிந்தித்தால், மனிதனின் வாழ்க்கைக்கு உயிர் மட்டும் அல்லாமல் மனித சமுதாய வளர்ச்சிக் கும் ஏற்றதாக என்பது என் கருத்து.
நம் மக்களிடம் நிரம்பியிருக்கும் மடமை, மானமற்ற தன்மை, இழிநிலை, அறிவற்ற தன்மை இவைகளைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்தின்மீதே "இலக்கிய மறுமலர்ச்சி" பற்றிச் சிந்திக்க வேண்டும்.


மதம், கடவுள் சம்பந்தமற்ற - யாவரும் பொதுவான இயற்கை ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத விஞ்ஞான த்தைப் பற்றிய இலக்கியம் ஆகியவைகள் மூலம்தான் ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மையடைய முடியும் என்பது மாத்திரமல்லாமல், அதைக் கையாளும் மக்கள் ஞானம் உடையவர்களாவார்கள்.


கலைகள்


"தமிழ்நாட்டில் தமிழ்ப் பாட்டுக்கள் பாடப்பட வேண்டும்" தமிழில் இசை இருக்க வேண்டும்" என்று கூறுபவர்களை நையாண்டிசெய்து, அவ்வாறு கூறுவதும் கோருவதும் முட்டாள்தனம் என்று மேடைகள் மீதேறிப் பேசிடத் துணிவுகொண்ட கூட்டத்தினருக்கும் இத்தமிழ்நாடு இடங்கொடுத்துக் கொண்டிருக்கிறது.


நல்ல தமிழில் - இயற்கை எழில்களையும், தமிழரின் வீரத்தையும்,அன்பையும், மானமிக்க சமத்துவ வாழ்வினையும், வரலாற்றினையும், நேர்மையையும், நீதி நெறிகளையும், தமிழ்நாட்டுப் பற்றையும், மொழியின் ஆர்வத்தையும், ஒற்றுமையையும், கட்டுப்பாட்டையும் எடுத்துக்காட்டும் பாட்டுக்களையே பாடுமாறு செய்தல் வேண்டும்.


நாடகங்களிலே இரண்டு விதமுண்டு. ஒன்று பாட்டாக நடத்திக் காண்பிப்பது; மற்றொன்று வசன ரூபமாய் நடத்திக் காண்பது. வசன ரூபமாய்க் காண்பிப்பவைகளையே மக்கள் விரும்புகிறார்கள்.
தமிழர்களின் தன்மானத்தை வளர்ப்பதற்கும், தமிழர்களுக்கு அறிவூட்டுவதற்கும், தமிழர்கள் மனிதத் தன்மை அடைவதற்கும் பயன்படாத இயலோ, இசையோ நடிப்போ எதற்காக வேண்டும்? அது என்ன மொழியில் இருந்தால்தான் என்ன?


எப்படிப்பட்ட கலையும், ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் சிறிதும் பயன்படக்கூடாதோய் இருக்க வேண்டும்.


ஒழுக்கம்


பொதுவாழ்வின் பெயரால் ஒழுக்கக் கோடாக, லஞ்சகராக, திருடர்களாக நடப்பவர்களை ஒருநாளும் விட்டுவைக்கக் கூடாது.


ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழவேண்டுமானால் அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.


மனிதனிடம் சுலபத்தில் ஒழுக்கத்தைப் புகுத்த வேண்டுமானால், மாணவப் பருவத்தில்தான் முடியும்.


பிறருக்கு எந்தவிதத் தொல்லையும் தராத வாழ்வே ஒழுக்கம். இது எல்லாவித பேத நிலையும் ஒழித்த நிலையில்தான் வளர முடியும். ஒழுக்க அடிப்படையே இன்ப வாழ்வு.
ஒழுக்கம் என்பது தனக்கும் அந்நியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்ளுவதாகும்.


பெண் உரிமை


மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயொழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கும் அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை.


பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல்சாதிக்காரன் கீழ்ச்சாதிக்காரனை நடத்வதைவிட, ஆண்டான் அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகம்.


இந்திய நாட்டில் பெண்கள் சகல துறைகளிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்துவரும் வேதனையையும் இழிவையும், அடிமைத் தனத்தையும்விட அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள்.


கற்புக்காகக் கணவனின் திருகச் செயலையும் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொடுமை ஒழிய வேண்டும்.


ஆண் எப்படி வேண்டுமானாலும் திரியலாம், எவ்வளவு மனைவிகளை வேண்டுமானாலும் மணக்கலாம், என்கின்ற முறையே, விபச்சாரம் என்னும் பிள்ளைகளைப் பெற்றெடுக்கின்றது.


இளைஞர்கள்


வாலிபர்களுக்கு வெறும் உற்சாகமும், துணிவும், தியாகபுத்தியும் மாத்திரம் இருந்தால் போதாது. நன்மை தீமையை அறியும் குணமும், சாத்தியம் அசாத்தியம் அறியும் குணமும், ஆய்ந்து ஓய்ந்து பார்க்கும் தன்மையும் இருந்தால் தான் வாலிபர்கள் பொதுவில் பயன்படக்கூடியவர்கள் ஆவார்கள்.


வாலிபப் பருவம், அபாயகரமான பருவம், சுலபத்தில் நெருப்புப் பற்றிக் கொள்ளக்கூடிய பொருளைப் போல் மிகப் பத்திரமாய் காப்பாற்றப்படவேண்டிய பருவம்.
பித்தலாட்ட, மத சம்மந்தமான மூட நம்பிக்கைகள் அனைத்தையும் ஒழிக்க வாலிபர்கள் முனைய வேண்டும்.


வாலிபர்கள் சுயமாகச் சிந்திக்குமாறு பழகப்படுத்துவதேயில்லை, பகுத்தறிவை உபயோகிக்கச் சந்தர்ப்பமளிக்கப்படுவதே இல்லை அறிவுக்கும் அனுபவத்துக்கும் சம்பந்தப்படுத்திப் பழக்குவதேயில்லை. இத்தகைய நிலைமை மாறாதவரை, வாலிபர்கள் சுயமாகச் சிந்தித்துப் பார்த்து ஆராய்ந்து தாங்களே ஒரு முடிவுக்கு வருவது முடியாதோகும்.


இளைஞர்கள் குழந்தைகளுக்ச் சமமானவர்கள். சமீபத்தில் உள்ளதைப் பற்றுகிறவர்கள், பின்விளைவை அனுபவித்து அறியாதவர்கள். கண்ணோட்டம் விழுந்தால் பற்றி விடுபவர்கள். எழுச்சி என்பது எங்கொங்குக் காணப்படுகின்றதா, கூட்டம் குதூகலம் என்பவை எங்கெங்குக் காணப்படுகின்றனவோ அவற்றையெல்லாம் பற்றுவதும், அவை மறைந்தால் கைவிட்டுவிடுவதுமான குணமுடையவர்கள்.


பல்துறை


சிலர் சாமியைப் பார்த்தால் சாமி சக்தி ஓடிப்போவானேன்? சிலர் கோயிலுக்கு வந்தால் கோயிலும் சாமியும் தீட்டுப்ட்டுப் போவானேன்? சிலர் சாமியைத் தொட்டால் சாமி இறந்து போவானேன்? ஒரே பெயரும் உருவமும் உள்ள சாமிக்கு ஊருக்கு ஒரு விதமாய்ச் சக்திகள் ஏற்பட்டிருப்பானேன்?


காசி, பூரி, பண்டரிபுரம் முதலிய ஊர்களில் உள்ள சாமிகள் யார் தொட்டாலும் சாவதில்லை. அங்குக் கோயிலுக்கு போகிறவர்கள் எல்லாம் தங்களே நேரில் சாமியைத் தொட்டு தலையில் தண்ணீர்விட்டு மலர் போட்டுக் கும்பிடுகிறார்கள். அதே பெயருள்ள சாமி நமது தமிழ்நாட்டில் மட்டும் நாம் தொட்டால் செத்துப் போய்விடுகிறîதா, ஏன்? இப்படி சாமிகளின் சக்தியும் உயிரும் கோயில்களின் யோக்கியதையும் ஊருக்கு ஒரு விதமாய் இருப்பானேன்?


எவன் ஒருவன் கடன் வாங்காமல் வரவுக்கேற்ற மறையில் செலவு செய்து வருகிறானே அவன்தான் பிரபு ஆவான்.


நல்ல குடும்பம் எனப்படுவது வரவுக்கு மிஞ்சிச் செவு செய்யாமல் இருப்பதாகும். தமது வாழ்க்கைக்குச் செலவை வரவுக்கு உள்பட்டே அமைத்துக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட குடும்பந்தான் கண்ணியமான குடும்பம்.


சாதி ஒழிப்புக்கு இன்றைய அரசியல் சட்டம் இடந்தரவில்லை. அதை, அடிப்படை உரிமைக்கு விரோதம் என்கிறது. அதேபோல்தான் வகுப்புவாரி விகிதப் பேச்சும் பேசாதே அது வகுப்புத் துவேசம் என்கிறது. சாதி இருப்பது தவறல்லவாம். சாதிப்படி உரிமை கேட்டால் மட்டும் தவறு என்றால் இதைவிடப் பித்தலாட்டம் வேறு இருக்க முடியுமா?

படித்தததை பகிர்ந்துகொண்டேன் ....