தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

4/29/2010

அடி, என்னை மறந்தவளே..!(நான் ரசித்த கவிதைகள்)

செட்டியார் வீடு கட்ட

கொட்டிப் போட்ட

மண்ணுல

கோபுர வீடுகட்டி

கொஞ்சி விளையாண்டது

நினைவிருக்கா?


தெருவோரம் நின்ன மரம்

என் திண்ணையோரம்

நட்ட மரம் (மின்கம்பம்)

எப்படித்தான் எரியுதுன்னு

என்னைக் கேட்டியே,

நினைவிருக்கா?


வட்டிலில சோறுபோட்டு

வானத்து நிலா பார்த்து

ஒண்ணா உட்கார்ந்து

உருட்டித் தின்னமே

உனக்கது நினைவிருக்கா?


பள்ளிக்கூடம் போகயில

பாவி மழ பெய்யயில

ஓடிப் போய் மரத்தடியில்

ஒண்டியது

நினைவிருக்கா?


வீடு திரும்பயில

விட்ட மழ தொடரயில

உன் சந்தன முகத்துல

சாரல் படக்கூடாதுன்னு

என் சட்டையக் கழட்டித்

தந்தேனே நினைவிருக்கா?


விளையாட நீ வரல,

வீதியில காணவில்லே

உன் வீடுதேடி நான்

வந்தேன்

அந்த நாள்

நினைவிருக்கா?


பச்ச ஒலையில

பத்திரமா நீயிருந்த

பதினாறு வயசு வியாதி

பத்திக்கிச்சு நமக்குள்ள

பட்டப் படிப்பு படிச்சு வர

உன்னை

பஸ் ஏத்தி அனுப்பி

வெச்சேன்


பாவி மக உம் பெயரை

மனசுக்குள்ள செதுக்கி

வெச்சேன்


எல்லாமே மாறிப் போச்சு


என்னனென்னவோ

ஆகிப்போச்சு


எம் மகளும் உம் மகனும்

ஒண்ணா

விளையாடுதுங்க


நாளைக்கு அதும்

பொழப்பு

நம்மப் போல ஆகணுமா?

நாங் கண்ட ஒரு கனவு

நாசமா போகணுமா?

4/25/2010

நான் உன்னை நேசிக்கின்றேன்

அன்பே

எனது விடியல் என்பது
உந்தன் விழியில்
எனது மரணம் என்பது
உந்தன் மடியில்…..!!!!!!!

நீ இன்றேல்
நான் நிச்சயம்
தற்கொலை செய்ய மாட்டேன்.
என் உணர்விலும்
உயிரிலும் கலந்திருக்கும்
உன்னைக் கொல்ல
எப்படி மனம் வரும் எனக்கு…..?
தினமும் சொல்ல வேண்டும்
என்றுதான் வருவேன்…
ஆனால் உன் கண்களால்
சிவப்பு கொடி பிடிக்கிறாயே…!!!!!

உன் சிரிப்பினால்
என் வார்த்தைகளை சிறை பிடிக்கிறாயே….!!!!!

என் இதயத்தில்
ஓட்டை என்று டாக்டர்
சொன்னபோது நம்பவில்லை..
என் இதயத்தில் நீ நுழைந்த போதுதான்
அது புரிந்தது
நானோ உன் காதல் வேண்டும் என்றேன்.
நீயோ என் கவிதை தான் வேண்டும் என்றாய்…
அடி பைத்தியக்காரி…
எப்படி கவிதை எழுதமுடியும் என்னால்
உன் காதல் இல்லாமல்….?

இந்த உலகத்தில் சிறந்த தண்டனை
என்னவளின்
உன்னைக் கண் கொண்டு
பார்க்கவில்லை உயிர் கொண்டு
பார்க்கின்றேன்....

மரத்தில் பறிக்க பறிக்க மலரும் மலரல்ல
உன் மேலான என் நட்பு
பறித்தால் திருப்பி முளைக்காத
மரம் என் நட்பு...

கண்கள் செய்யும் சிறு தவறுக்கு
இதயம் அனுபவிக்கும் ஆயுள்
தண்டனை காதல்...

ஆனால் ஆயுள் வரை சுகமான
வதிவிடம் உன் நட்புள்ளம்..
நட்பை காதலிக்கின்றேன்
உன்னை சுவாசிக்கின்றேன்...

அனுமதி கேட்கவும் இல்லை
அனுமதி வாங்கவும் இல்லை
அனுமதியில்லாக் குடியிருப்பு
உன் இதயத்துக்குள் என் இதயம்....

வாழ்க்கையில் சந்தோஷம் வேணும்
என்றால் காதலை நேசி...

சந்தோஷமே வாழ்க்கையாக மாற
வேண்டும் என்றால் நட்பை நேசி

நான் உன்னை நேசிக்கின்றேன்
உன் நட்பை சுவாசிக்கின்றேன்...

நன்றி : வாசு

என் உயிர் நீ தானே ?

நான் உயிரோடு இருப்பது
எல்லோருக்கும் தெரியும்....ஆனால்
என் உயிர் உன்னோடு இருப்பது 
யாருக்கு தான் தெரியும் ?
உன்னை தவிர  ..........

(சென்ற இடுக்கை இட்டவுடன் தோன்றிய சிறு ........)

இடுக்கை : அ.ராமநாதன்

என் உயிர் நீதானே

என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம்
காண்போமே

( என் உயிர்.....)

பூங்கொடி தள்ளாட
பூவிழி வந்தாட
காதலை கொண்டாட
ஆசையில் வந்தேனே

(பூங்கொடி.....)

நீ தந்த சொந்தம் மாறாதே
நான் கண்ட இன்பம் தீராதே
உன்னருகில் உன் இதழில்
உன் மடியில் உன் மனதில்
ஆயிரம் காலங்கள் வாழ்ந்திட
வந்தேன்

(என் உயிர்.....)

பாவையின் பொன்மேனி
ஜாடையில் தானாட
பார்வையில் பூந்தென்றல்
பாடிட வந்தேனே

நீ கொஞ்சும் உள்ளம் தேனாக
நான் கொள்ளும் இன்பம் நூறாக
என்னருகில் புன்னகையில்
கண்ணுறங்கும் மன்னவனே
காவியம் போலொரு வாழ்வினை
கண்டேன்

(என் உயிர்.....)

(மிக அருமை ,நீண்ட நாட்களுக்கு பிறகு இளையராஜா இசையால் உருவான "பிரியா" பட பாடலை நினைவுக்கு கொண்டுவந்ததுக்கு ) 

நன்றி : (பெயர் வெளியிட வேண்டாம்
                 என கேட்டு கொண்ட வாசகர்/கி ) 

மறந்த (மறைந்த ) க(வி)தை

என் அன்பனே....
நம் காதல்
பரிமாறிக்கொள்ளப் படாதபோது
நான் தூதாக
பௌர்ணமி நிலவைத்தான்
அனுப்ப நினைத்து
என் மனதில்
உள்ளவற்றையெல்லாம்
உளறிக்கொட்டினேன்........!

பாவம்......
நீ இவ்வுலகைவிட்டு
பிரிந்துசென்றதால்
அவற்றை உன்னிடம்
உரைக்கவியலவில்லை-என்று
என் முகம்
பார்த்து சொல்லமுடியாமல்
கருப்பாடையணிந்து
அன்று அமாவாசையாகியது
அந்நிலவு........!

ஆனால்......
உயிருள்ளவரை
என் உள்ளத்திலும்
தாய் தமிழுள்ளவரை
என் கவிதைகளிலும்
நீயும் நம் காதலும்
வாழ்ந்துகொண்டேதான் இருப்பீர்கள்........!

நன்றி : செல்வி .எஸ்தர்

வாழ்த்துவோம் ,பெருமைபடுவோம்

நேற்று தனது 37 -வது பிறந்த நாள் கண்ட சச்சினுக்கு, நாம் என்னெவன்று பாராட்டுவது ,வாழ்த்துவது ........

பாராட்டு மற்றும் வாழ்த்து   கடலில் முழ்கி எந்தவித களைப்பும் இல்லாமல் அடுத்த போட்டியான இறுதி (மும்பை-சென்னை) போட்டியிலும் விளையாடுவேன் என கூறி வரும் இவரல்லவா மனிதன் ... இல்லை தெய்வபிறவி ஆம் நண்பர்களா இவர் ஒரு சாதனை சகாப்தம்...
இவரை பத்தி ஏற்கனேவே தேவையானளவு நமது வலைப்பூவில் பார்த்து ,படித்து தெரிந்துகொண்டோம் ஆனால் நம்மால் இவரை பற்றி படித்ததில் மிகவும் அருமையான பேட்டி உங்களுக்காக .......இதோ


வாழ்த்துவோம் ,பெருமைபடுவோம் இப்படியொரு இந்தியனை வரமாக பெற்றதக்கு

வாழ்க சச்சின் ..... வளர்க புகழ் .......ஜெய் இந்தியா...............

இடுக்கை :அ.ராமநாதன்

4/23/2010

இது 100- வது பதிவு

100வது பதிவு... எடுக்கவோ..கோர்க்கவோ.. நட்(பு) "பூ"


"நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தானாரா .. இல்லை "


என்று போகிற போக்கில் கண்ணதாசன் சொன்னதின் அர்த்தம் எவ்வளவு ஆழமானது.
தாய், தந்தை,சகோதர,சகோதரி சொந்தங்கள் நம்மையும் மீறி அமையப்பெற்றவை..


ஆனால்.. நண்பர்கள்.. நாமாக தேர்வு செய்யும் ஒரு பந்தம்.. நட்பைப் பற்றியும் நண்பர்களைப் பற்றியும் ஏராளமான எழுத்துக்கள் பதிந்து கிடக்கின்றன..


முதல் வில்லன் கதாபாத்திரங்களாக புனைந்து புகட்டப்பட்ட இருவரில் ஒருவர் துரியோதனன்.. அவனைப் பற்றி பேச்சு எழுந்தால், துரெளப‌தியின் துயில் உறித்ததை விட, .. நண்பன் கர்ணனுக்காக கேட்ட "எடுக்கவோ கோர்க்கவோ தான்" அதிகம் பேசப்பட்டவையாக இருக்கிறது.. காரணம் நட்பின் மேல் நமக்கிருக்கும் நம்பிக்கை.


எத்தனை நண்பர்கள் வாழ்வில் வந்து போகிறார்கள்.. எத்தனை வித குணங்கள்.. தியாகங்கள்.. சில துரோகங்கள்.. மன்னிப்புகள்..


கரண்ட் போனால் ஓ என்று கத்துவதிலும், திளைத்துத் திகட்டிய தெரு நண்பர்கள்..


கட் அடித்து சினிமா பார்த்து, பிட் அடித்து,அடிக்க உதவி,,இரவு குரூப் ஸ்டடியில் படித்ததை பகிர்ந்து,தேர்வு வரை உடனிருந்த‌ பள்ளிக் கூட நண்பர்கள்..


ஹீரோயிஸம்,ரவுடியிஸம்,காமெடி என்று அத்துனை வகை கூத்துகளும் அரங்கேறும் கல்லூரி நட்புகள்.. சிரித்து சிரித்து செத்துவிடுவோமோ என்று திரிந்த கல்லூரி நண்பர்களின் விடலைத்தனத்தின் ஒவ்வொரு நிமிடங்களும் சொர்கத்தின் திறப்பு விழாக்களாக கொண்டாடப் பட்ட நட்பு வட்டங்கள்..உலகமே இனி இவர்களுடன் தான் என்று எண்ணி இருந்த கல்லூரி நண்பர்கள்..


கால ஓட்டம் என்ற நாசாமாய்ப் போன வார்த்தையினால் இந்த அத்தனை நட்புகளும் தொடர்பற்று.. சிலர் தொலைத் தொடர்பாக.. இப்படி மாறிப் போகும்..


ஆனால் அடுத்த கட்டமாக..


அலுவலகத்தில் ஏற்படும் நட்பு வட்டம்.. பலரிடம் அந்நியமாகவும் சிலரிடம் மட்டும் சற்று அந்யோன்யமாகவும் பழக வைக்கும் பொறுப்பான‌ நட்பு..


துறை சார்ந்த,தொழில் சார்ந்த,இப்பொழுது பதிவுலகம் சார்ந்த.. என..மின்னல் பொழுதில் நட்பாகி..வாழ்நாள் முழுதும் மழையென தினம் பொழியும் நட்புகள்..
இப்படி ஏதாவது ஒரு ரூபத்தில் நட்பின் நீளம் தொடந்து கொண்டுதான் இருக்கிறது..இருக்கும்..


நீங்கள் சிறு வயதில் நீச்சல் அடிக்க தெரிந்தவராக இருந்து, ஆனால் இப்பொழுது அமெரிக்காவிலோ, ஆப்பிரிக்காவிலோ உள்ள இரண்டுக்கு இரண்டடி பாத்ரூமில் பம்மி குளித்துக் கொண்டிருப்பராக மாறி எத்தனை வருடங்கள் ஆகியிருந்தாலும்.. குளத்தில் திடீரென குதிக்க நேர்ந்தால் எந்த பயிற்சியும் தேவைப் படாமல் நீங்கள் நீந்த முடியும்..மறக்கவே மறக்காத கலை நீச்சல் கலை.


அது போலத்தான் மேலே சொன்ன அத்தனை நட்பும்.. ஒரே ஒரு மாலைப் பொழுதின் சந்திப்பு, பல வருட பிரிவையும் மொத்தமாய் நிறைத்து விடும்.. கண்கள் வலிக்கச் சிரிக்கச் செய்யும்..உலகின் மொத்த வார்த்தைகளும் தீர்ந்துவிடும் அளவு பேச வைத்து விடும்..


நட்பின் புனிதம், துரோகம் போன்ற வார்த்தைகளையும் மீறி தனிமனித வடிகாலாக இருப்பது நட்பும் நண்பர்களும் தான்.


100 பதிவுகள் எழுதும் அளவிற்கு என் எழுத்திற்கு உரமிட்ட பதிவுலக நண்பர்களுக்கும்,என் குடும்பத்துக்கும் ,என் இறைவனுக்கும் மிக மிக கோடான கோடி நன்றிகள் ...........இத்துடன் இவர்களுக்கு இதை சமர்ப்பணம் செய்ய உள்ளேன் 


சமர்ப்பணம் என்ன‌ வேண்டி கிடக்கிறது.. இதை தட்டச்சு செய்யும் பொழுது உதிரும் இந்த ரெண்டு சொட்டு கண்ணீர் தான் அதை செய்து விட்டதே!


இடுக்கை : உங்கள் கோவை ராமநாதன்.

மாற்றமே நிரந்தரம்

அவன் எத்தனையோ முயற்சி செய்தும் , அவளது நினைவுகளில் இருந்த அவனால் மீளமுடியவில்லை. அவளுடன் வாழ்ந்த அந்த நான்கு வருடங்கள் நிமிடங்களாக சென்ற போதும், அந்த பழைய நினைவுகள் இன்று அவனுக்கு நரகமாகவே இருக்கிறது. அந்த நான்கு வருடங்களில் அவர்களிடேயே எத்தனை சண்டைகள், எத்தனை பாச பரிமாற்றங்கள். அவன் அவளை முற்றிலும் நேசித்திருக்கிறான், முற்றிலும் வெறுத்திருக்கிறான். அவர்களின் பிரிவிற்கு பிறகு அவனால் அவளை சிறிதளவும் வெறுக்க முடியவில்லை. அவனுக்குள் எத்தனையோ போராட்டங்களுக்கு பிறகு அவளது திருமனத்திற்கு செல்வது என்ற முடிவை எடுத்தான்.

டிக்கெட் எடுத்து ரயில் வண்டியில் அமர்ந்தான். ரயில் புறப்பட இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது. அப்பொழுது அவளது நினைவுகள் அவனை ஈட்டி போல் குத்தி அவனது கண்ணிர் சுரபிகளை பெரிதாக்கி கொண்டிருந்தது. என் துயர மனநிலை போல்தான் அவளின் மனநிலையும் துவண்டு வருந்தும் என்று எண்ணி மனம் வருந்தினான். ஆண்கள் பல வழிகளில் அவர்களின் துன்பத்திற்கான ஆறுதல்களை தேடி கொள்ளலாம். ஆனால் பாவம் பெண்கள், அவர்கள் மனதில் எத்தனை ஆழமாக துயரம் புதைந்து கிடக்கிறது. அவளால் எப்படி இந்த வேதனையை தாங்கி கொள்ள முடியும் ? அவள் யாரிடம் வாய்விட்டு அழுது தனது துயரத்தை பகிர்ந்து கொள்ள முடியும்? அவளது நிலையை எண்ணி அவனது மனது மிகுந்த வலி கொண்டது.

ரயிலின் அசைவு அவனை தற்காலத்திற்கு அழைத்து வந்தது. அப்பொழுது திடீர் என்று மின்னல் போல் ஒரு பெண் அவன் எதிரில் வந்து அமர்ந்தாள். அவனை அறியாமலே அவளது அழகு அவனை மதிமயங்க வைத்தது. அவனது உடல் மற்றும் உள்ள உணர்ச்சிகள் அவனது கட்டுப்பாட்டில் இருந்து சிறுது விலகியது. நான்கு ஆண்டு சோக நினைவுகள் நிழலாக மறைய தொடங்கியது. அப்பொழுது பளீர் என்று அந்த நினைவு அவன் மூளை தசைகளில் பரவியது. இப்படித்தான் என் காதலிக்கும் மாற்றங்கள் நேர்ந்திருக்குமோ ? இதைத்தான் கார்ல் மார்க்ஸ் மாற்றங்கள்தான் நிரந்தரமானவை என்று கூறினாரோ ?

இது எனது நண்பன் தன் காதலில் வெளிவந்த  போது அவனால் தெரிந்து கொண்டு எனது கற்பனையில் உருவானது ........

இடுக்கை :அ.ராமநாதன் 

பட்டினி சாவு மனிதர்கள்வியர்வை சுரக்க , நெஞ்சு படபடக்க

கைகள் உதற, கால்கள் நடுநடுங்க

நாவு நீர் இழக்க, கண்கள் சிறுசிறுக்க

வார்த்தை வலுவிழக்க , தேகம் தவிதவிக்க

பசி பிடிபிடிக்க, உயிர் துடிதுடிக்க

மதி செயல் இழக்க, விதி முகம் கொடுக்க

பட்டினிச் சாவுத்தாயிற்காக காத்திருக்கிறார்கள்

இந்த பட்டினி சாவு மனிதர்கள்

நன்றி       : நமது உலகம்
படங்கள் : தமிழ் உலகம்

4/22/2010

நண்பர்களை அறிந்து கொள்ளுங்கள்

நமது வாசகர் வேண்டுகோளின்படி எனது நண்பர்களின் மூலம் வகைபடுத்தியுள்ளேன்....நீங்களும் உங்களது நண்பர்களை தெரிந்து கொள்ளுங்கள்......

நண்பர்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.

முதல் வகையில் உள்ளவர்கள் பனை மரத்தை
போன்றவர்கள். பனை மரம் நடப்ப்படும்போது
மட்டும் தண்ணீர் விட்டால் போதும். பின்னர் விட
வேண்டியதில்லை. ஆனால் காலமெல்லாம் பலன்
தந்துகொண்டே இருக்கும். அது போல அந்தவகை நண்பர்கள்
இருப்பார்கள்.

இரண்டாவது வகை நண்பர்களை தென்னை
மரத்திற்கு ஒப்பிடலாம்.அடிக்கடி தண்ணீர்
பாய்ச்சினால் தன பலன் தரும். அதுபோல
இந்தவகை நண்பர்களுக்கு நாம் அடிக்கடி
உதவிகள் செய்தால் தான் இவர்கள் நட்பின்
பயன் நமக்கு கிடைக்கும்.

மூன்றாவது வகை நண்பர்களை பாக்கு மரத்திற்கு
ஒப்பிடலாம். தொடர்ந்து தினசரி தண்ணீர் ஊற்றினால்
தான் பலன் கிடைக்கும். அதுபோல இவ்வகை நண்பர்கள்
நாள்தோறும் நம்மிடமிருந்து பயன் கிடைக்குமா என்று
பார்ப்பார்கள். பயன் கிடைக்கவில்லை என்றால் நம்மிடமிருந்து
விலகி சென்று விடுவார்கள்.

நல்ல நட்பை தேர்ந்தெடுங்கள். பலன் பெறுங்கள்.
(நன்றி : வாழ்வியல் சிந்தனைகள்)

இடுக்கை :அ.ராமநாதன்

4/20/2010

மகிழ்ச்சியுடன் வாழ கற்று கொள்ளுங்கள்

ஒரே மாதிரியான செயல்களாலும், அனுபவங்களாலும் வாழ்க்கை சலிப்படைந்து விடாமல் இருக்க
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை
உருவாக்கிக் கொள்ளுங்கள்.
***************
உங்களது அன்றாட
நிகழ்வுகளைக்கூட சிற்சில மாறுதல்களுடன்
வெவ்வேறு விதமாக பதிவு செய்யுங்கள்.
***************
எப்பொழுதும் சுறுசுறுப்பாக எதாவது ஒரு செயலைச்
செய்து கொண்டிருங்கள்.அந்தப் பழக்கம் உங்களை சலிப்படையாமல் இருக்கச் செய்யும்.
***************
ஒரெ மாதிரியான செயல்கள் உங்களை போரடிக்கச் செய்யாமல் இருக்க இடையிடையே வெவ்வேறு வேலைகளின் பக்கமும் கவனம் செலுத்துங்கள்.
***************
நகைச்சுவை நிகழ்ச்சிகளை ரசியுங்கள்.
***************
நகைச்சுவை உணர்வுடன் சந்தோஷமாகப் பேசுங்கள்.
***************
நல்ல நகைச்சுவைப் புத்தகங்களைப் படித்து மனம் விட்டுச் சிரியுங்கள்.
***************
மன இறுக்கத்தையும் சோர்வினையும் மாற்றிக்கொள்ளுங்கள்.
***************
மகிழ்ச்சி உங்கள் வசமாகும்.
***************

எவரேனும் இப்படி காதலித்ததுண்டா

மனதில் நிறைய வைத்துக் கொண்டு
தானே -ஒன்றுமில்லை ஒன்றுமில்லை
என்கிறாய்;

என்ன வைத்திருக்கிறாயென
எனக்குத்தெரியாவிட்டாலென்ன

உனக்குத் தெரிந்தால் போதும்!

தெருவில் நீநடந்து செல்கிறாய்;
நானும் -நடந்துச் செல்கிறேன்;

பார்ப்பவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்
நீயும் நானும் யார் யாரோவென்று;

உனக்கும் எனக்கும் தானேத் தெரியும் -
நீயும் நானும் யார் யாரென்று!

உன் -முட்டைக் கண்
பார்வையால் -நெட்டை கால் விரித்து
உயிர் கொண்டுவிட்டது
நமக்கான காதல்!

நீ -ஒருமுறை கை குலுக்கிய
அந்த இறுக்கத்தின் அழுத்தத்தில் தான்
இதயம் - எழுந்து நின்று செய்தது
காதல்!

எங்கோ -தூரத்தில் வரும்போதே
உன்னை பார்த்துவிடுவேன்;
நீயும் -பார்த்துவிடுவாய்;

அருகில் வந்ததும்
பார்க்காதவர்களைப் போலவே
சென்றுவிடுவோம்;

உன்னை நானும் என்னை நீயும்
கடந்தப் பிறகு - சடாரென
இருவரும் -
திரும்பிப் பார்க்க நினைப்போம்;

திரும்பிப் பார்க்காமலேயே
செல்வோம்.

காதல் -செந்தீயென
இருவருக்குள்ளும் எரியும்!

நான் -வாசலில் நின்றிருப்பேனென
உனக்குத் தெரியும்;
நீ -வீட்டிற்குள் நின்று
எனக்காகக் -காத்திருப்பாயென
எனக்கும் தெரியும்;
தெரிந்தும் -நான் காத்திருக்கட்டுமேயென
நீ -வீட்டிற்குள்ளேயே இருப்பாய்;

வெளியே -ஊர் எனை மட்டும்
கிறுக்கனென சொல்லி
காரி உமிழ்ந்துப் போகும்
நம் காதலை!

உனக்கும்எனக்கும்
திருமணமாகிவிட்டது;
குழந்தைகளும் உண்டு
பல வருடங்களுக்குப் பின்
இன்று ஏனோ -நேருக்கு நேர்
பார்க்க நேர்ந்ததில் -
நம் குழந்தைகளையும்
குடும்பத்தையும்
மறந்து தான் போனது நம்
பார்வை!

காதல் விண்வெளி

அந்த வெண்கல நிற விண்கலம்
உலோகக் கதவுகளை
விரித்துக் காத்திருக்கிறது.

நானும், என் தேசத்து தேவதையும்
செவ்வாய் கிரகம் போகிறோம்.

பிடிக்கவில்லை. உருகும் போதே உலர வைக்கும்
இந்த உலைக்கள உலகம் பிடிக்கவில்லை.

பூமி மக்களுக்கு  பனித்துளி கூட
பாதம் கழுவவே பயன்படுகிறது.
காதலைக் கழுவிலேற்று
என்றுகால்கள் கூட கத்துகின்றன.

அந்தஸ்தின் அட்டவணைகளில்
அன்புக்கு எதிராய் அரிவாள் தான்
சாய்க்கப்பட்டிருக்கிறது.

எனவே,தேடாதீர்கள் என்று
சீட்டெழுதி விட்டு
சத்தமில்லாமல் செவ்வாய் செல்கிறோம்.

செவ்வாயில் உயிர்களில்லை
என்பதெல்லாம் இனி சரித்திரத்திலிருந்து
துரத்தப்படும்.

எங்கள்இருவர் பெயர்களும்
துருவங்கள் வரை பொறிக்கப்படும்.

விண்கலம்ஓர் ஆகாய திமிங்கலமாய்
காலத்தை வென்று
கலத்தை செவ்வாயில் நடுகிறது.

காதலுக்கு எதிர்ப்பில்லா
காற்றில்லா தேசமது,
எங்களிடம் மட்டும்
ஆக்சிஜன் அணிகலன்கள்.

மணித்துளிகள் மங்க மங்க
செவ்வாய் ஓர் சவக்காட்டு ஊதுபத்தியாய்
அமைதி கெடுக்க ஆரம்பித்தது.

வற்றிப் போன வசந்தத்துக்கு
வாழ்க்கை என்று பெயரா ?
எதிர்ப்பில்லா தேசத்தில்
உதிர்ப்பதெல்லாம் சட்டங்களே.
ஆனால்மக்கள் இல்லா தேசத்தில்
மணி மகுடம் எதற்கு ?

சமஸ்தானம் அஸ்தமனமானபின்
சிம்மாசனங்கள்இருந்தென்ன சரிந்தென்ன ?

முடிவெடுக்கிறோம்,இனி,
வௌவால்களாய் வாழ்வதென்றாலும்,
பூமியின் புதர்களோடுதான்.

விண்கலம்,மீண்டும் எங்களை ஏற்றி
பூமி நோக்கி பாய்ந்த போது தான்
விண்கலக் கருவிகள்
சினிமாபோல் சட்டென செயலிழந்தன.

பிடி நழுவிய விண்கலம் கீழ்
நோக்கிப் பாய்ந்து கடலில் . . . . .

திடுக்கிட்டு விழித்தேன்,
சாரளம் வளியே சாரல் அடித்தது.
மேஜை மீது ‘காதல்.’ தலைப்பிட்ட
காகிதம் ஒன்று நான்
கவிதை நிரப்பக் காத்திருந்தது.

இதுவும் கற்பனை : அ.ராமநாதன

காதல் புன்னகை

ஒரு பரவச தேசத்தின்
பளிங்கு மாளிகை போல்
பரிசுத்தமானது
உன் புன்னகை.

அது இரவை உடைக்கும்
ஓர் மின்னல் கோடு போல
தூய்மையானது

தேவதைக் கனவுகளுடன்
தூக்கத்தில் சிரிக்கும்
ஓர் மழலைப் புன்னகையுடனும்
ஒப்பிடலாம்
உன் புன்னகையை.

எனக்குள் கவிழ்ந்து வீழும்
ஓர் பூக்கூடை போல
சிதறுகிறது உன் சிரிப்பு.

ஒரு மின்மினியை
ரசிக்கும் இரவு நேர யாத்திரீகனாய்
உன்புன்னகையை நேசிக்கிறேன்.

ஆதாமுக்கு ஆண்டவன் கொடுத்த
சுவாசம் போல எனக்குள் சில்லிடுகிறது
உன் புன்னகை.

எனினும் உன் புன்னகை அழகென்று
உன்னிடம் சொல்ல மட்டும்
ஆயுள் கால தயக்கம் எனக்கு.

நீ புன்னகைப்பதை
நிறுத்தி விடுவாயோ என்று.

இடுக்கை :அ.ராமநாதன்

நட்பு

“எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! “
என சிலிர்ப்புடன்
பெயர் சொல்லி அழைக்கும்
நண்பனுடன் பேசுகையில்
பயமாய் இருக்கிறது
“எம் பேரு ஞாபகமிருக்கா”
என கேட்டு விடுவானோ ?

அப்பப்போ
போன் பண்ணுடா…
எனும் சம்பிரதாய விசாரிப்புக்கு
“கண்டிப்பா”
என நகர்வான்,
நான் கொடுக்காத நம்பரை
அவன்
எழுதிக் கொள்ளாமலேயே.

பொய்கள் தான்
உண்மையாகவே
நட்பைக் காப்பாற்றுகின்றன.
“நேற்று கூட பேச நினைத்தேன்”
என யாரோ பேசிக் கடக்கிறார்கள்
செல்போனில்

அவளா இது ?
மீன் வாங்கிச் செல்லும்
பெண்ணிடம்
கொஞ்சமும் மிச்சமில்லை
கால் நூற்றாண்டுக்கு முன்
கண்களில் சிரித்த வசீகரம்.

நட்பு இருப்பதாய்
சொல்லிக் கொள்ளவேனும்
அடிக்கடி
தேவைப்படுகின்றன
வெள்ளிக்கிழமை பார்கள்.

கிராமத்து மௌன வீட்டின்
கம்பி அளியின் ஊடாக
நண்பனின்
புன்னகை முகம் தெரிகிறது.
இறந்து
வெகு நாட்களான பின்னும்.

“ஏழாயிரம் சம்பளம் டா மச்சி”
என குதூகலித்துச் சொல்லும் நண்பனிடம்
சொன்னதில்லை
பல மடங்கு வாங்கும் நான்.
அவனிடம் மிகுந்திருக்கிறது நட்பு.

யாரும் எழுதாத கவிதை

விரித்த புத்தகமும்
திறந்த பேனாவுமாய்,
கண்கள் மூடி
சன்னலோரம் அமர்ந்து - நான்
கவிதை தேடும் தருணங்களில்,
கவிதைகள்
சத்தமில்லாத பாதங்களோடு
பார்வையில்லா சன்னலைப்
பார்த்தபடி கடந்து போகும்.

குர்பான் - என்ன சொல்ல வருகிறது?குர்பான் என்ற இந்தி படத்தை சமீபத்தில் பார்க்க முடிந்தது. கமர்ஷீயல் என்று குறுகிய வட்டத்தில் சிக்காமல் வேறுபாதையில் பயணிக்கும் ஒரு இந்திப்படமாகவே எனக்குத்தோன்றுகிறது. பாம்பே, மிஷன்காஷ்மிர் போன்ற படங்களில் எடுத்துக்கொண்ட கதைக்களமாக இருந்தாலும் அதைவிட ஒருபடி மேல் இதன் கதைக்களம் கையாளப்பட்டிருக்கிறது.

சிறுபான்மை மதத்தில் ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் ஒரு தீவிரவாதி பிறந்துவிட்டான் என்று கிட்டத்தட்ட முத்திரை குத்தப்படும் நாடு இந்தியா என்றாகிவிட்டது. ஏதோ மற்ற மதங்களில் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் காந்தியும், புத்தனையும் போல. இதை ஏற்றுக்கொள்ள சிரமம் என்றாலும் குர்பான் போன்ற திரைப்படங்கள் இதையே வலியுறுத்துகிறது. இந்தப்படத்தில் அகிலஉலக நாட்டாமை, ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கு பாடம் கற்பிப்போம் என்று அதனை அவர்கள் நியாயப்படுத்த முயன்றிருப்பது மனிதத்திற்கு அப்பாற்பட்டது.

எந்த மதமும், எந்த கடவுளும், எந்த புனிதநூல்களும் அப்பாவிகளை கொல்வது நியாயம் என்று கற்பிப்பதில்லை. இதனை முடிவெடுக்க இந்த மனிதன் யார்? மனிதனால் உருவாக்கப்பட்ட மதத்தின் பெயரைச்சொல்லி ஒரு மனிதன் மற்றொரு மனிதனை கொல்லவது என்பது மிருகத்தனத்தின் உச்சம். அது எந்தமதமாக இருந்தாலும் சரி. குறிப்பிட்ட சிறுபான்மையினரே இதற்கு காரணம் என்று சொல்லி பட்டாசு வெடித்தாலும் அதற்கு அந்த அமைப்புத்தான் காரணம் என்று சுட்டிக்காட்டுவதும் சிறுபிள்ளைத்தனம்.

நாசிக் மாலேகானில் வெடித்த வெடிகுண்டுக்கு காரணம் ஒரு இந்து அமைப்பு. யாரை கைது செய்தார்கள். எந்த இந்து அமைப்பு காரணம் என்பது இன்னும் கண்கட்டுவித்தையாகவே இருக்கிறது.மதத்தின் பெயரைச்சொல்லி கொல்வது என்பதே தவறு. அது எந்தமதமாக இருந்தால் என்ன? ஏன் இந்த பாராபட்சம். குஜராத்தில் மோடி மட்டும் என்ன ஓலைப்பட்டாசா வெடிக்க வைத்தார்.

தீவிரவாத்தை ஒழிக்கிறோம் என்று ஆப்கானில் பச்சைக்குழந்தைகளை வரை கொன்று குவித்தது அமெரிக்கா. ஈராக்கில் அணுகுண்டை தேடுகிறேன் பேர்வழி ஓட்டுமொத்த படைகளையும் கொண்டுவந்து நிறுத்தி துப்பாக்கி முனையில் பெண்களும், குழந்தைகளையும் அதட்டுகிறது அமெரிக்கா. இதற்கு தண்டனையாக அமெரிக்காவில் பிறந்த குழந்தையையும், பெண்களையும், அப்பாவிகளையும் கொல்வது நியாயம் என்று எந்த புனிதநூலில் சொல்லப்பட்டிருக்கிறது. அதை நியாயப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்? அர்த்தமில்லாத விசயங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்றாலும் அதை நியாயப்படுத்துவது போன்ற திரைப்படங்கள்தான் உண்மையில் தவிர்க்கப்படவேண்டியவை. அதில் ஒன்றுதான் இந்த குர்பான்.

குர்பான் - (அர்த்தமில்லாத)தியாகம்.

 ஒரு காமன் மேன் (அ.ராமநாதன்)

ஆபிஸ்ல ஓவரா சீன்போட்டா இப்படியும் நடக்கலாம் {படித்ததில் மிகவும் பிடித்தது}

இந்த கதையை ஏற்கனவே நீங்க படிச்சிருந்தா உங்கள் கணிணியின் ஸ்கிரீன்ல் வலது பக்கம் மேல் ஓரத்துல இருக்கற பெருக்கல் குறியை க்ளிக் பண்ணி உங்களை நீங்களே காப்பாத்திக்கலாம்.

====
ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு. ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி நல்லா தூங்கிட்டுருக்கும்போது வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒரு திருடன் வந்துட்டான். சலவை தொழிலாளி நடப்பது தெரியாமல் நல்ல உறக்கத்திலிருக்க, திருடனைப்பார்த்த நாய் குரைக்காமல் கம்முன்னு இருந்துச்சு.

சரியா சோறே போடறதில்லை, இவனுக்கு நாம ஏன் உதவி பண்ணனும்னு நாய் குரைக்கவில்லை. அதைப்பார்த்த கழுதை என்னடா இவன் கம்முன்னு இருக்கான், குரைச்சு முதலாளியை எழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான், சரி நாமளாவது சத்தம் போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம்னு கத்த ஆரம்பிச்சுது. சத்தம் கேட்டதும் கள்ளன் ஓடிவிட்டான். சத்தத்தில் தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவைதொழிலாளி ஒரு கட்டையை எடுத்து பளார்னு கழுதை தலைல ஒரே அடி. கூறுகெட்ட கழுதை நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு இருக்கேன்னு கழுதையை திட்டிவிட்டு திரும்பவும் படுத்துகிட்டான்.

நீதி : ஆபிஸ்ல என்னவேலை கொடுத்திருக்கோ அதைமட்டும்தான் செய்யனும் ஓவரா சீன் போட்டா இப்படித்தான்.

இந்தக்கதை மற்றொரு கோணத்தில்...

கழுதை கத்தியதும் எழுந்த சலவைத்தொழிலாளி, கழுதை சும்மா கத்தியிருக்காது காரணாமாகத்தான் கத்தியிருக்கும் என்று எழுந்து பார்த்து திருடன் வீட்டுக்கு வந்ததால்தான் கழுதை கத்தியது எனப்புரிந்துக்கொண்டான். அடுத்த நாள் கழுதைக்கு வகைவகையான சாப்பாடு போட்டான். நாயைக்கண்டுகொள்ளவே இல்லை.

கழுதையோட ஆர்வக்கோளாறும், விசுவாசமும் முதலாளிக்கு பிடித்துவிட இவன் ரொம்ப நல்லவன்டா எவ்ளோ வேலை கொடுத்தாலும் செய்யிறான்னு முதலாளியின் எல்லா வேலைகளையும் கழுதையை செய்ய வைத்தான். நாய் செய்துக்கொண்டிருந்த வேலையும் கழுதையின் மேல் சுமத்தப்பட்டது. நாய் சுகமாக வேலையே செய்யாமல் கழுதையை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது. வேலை செய்து அலுத்துப்போன கழுதை இப்போது வேறு வேலைக்கு சிவி அனுப்பிகிட்டிருக்கு...

நீதி: ஆபிஸ்ல ஓவரா சீன்போட்டா இப்படியும் நடக்கலாம்.

இளைஞனே மாற்றிக்காட்டு

இளைஞனே நிமிர்ந்து நில்
வானம் உன் வசப்படும்
சுட்டெரிக்கும் சூரியனும்
உன் கூர்விழியில் எரிந்து போகட்டும்

எதிர்காலத்தை திட்டமிடு
எண்ணங்களை வசப்படுத்து
வரதட்சனை திருமணத்தில் –நீ
போகாதே விலை

ஆண் பெண் சரிசமமா
யார் சொன்னது- உன்னை
விற்கும் நிலையில்லல்வா நீ!
வாங்கும் நிலையிலே அவர்கள்

இளைஞனே மாற்றிக்காட்டு
அடிப்படை சமுதாயத்தை மாற்றிக்காட்டு
உன்னில் தான் உள்ளது உத்வேகம்
பழைய சமுதாயத்தை தொலைத்துவிடு
புதிதாய் பிறந்த விடிவெள்ளியாய்
எங்கேயாவது முளைத்துவிடு

4/16/2010

நீ

உன் அழகின் மிச்சமே - இவவுலகம் முழுவதும் ....
உன்னை நேசிக்க உரிமை என்றால் - ஒரு நொடி போதும் வாழ்வதற்கு

உன் மௌனச்சிரிப்பில்,வாழ்க்கையை தொலைத்த என் வார்த்தைகள்
உன் காதோரம் பாவமாய் ....

உன் கதையை நீயே எழுத வேண்டும்

??? ????? ?? ?????!தாகூர்...
புகழ் பெற்ற நோபல் பரிசு படைப்பான 'கீதாஞ்சலி'யை எழுதியவர். அந்தப் படைப்பில் ஓரிடத்தில், 'மரணம் உன் வாழ்க்கைக் கதவைத் தட்டுகிறபோது நீ என்ன செய்வாய்?' என்று கேட்பார். அதற்கு அவரே, 'வெறுங்கையோடு நான் அனுப்ப மாட்டேன். தட்டு நிறைய என் வாழ்க்கையை பரிமாறித் தருவேன்' என்று கூறி இருப்பார்.

இதுதான் வாழும் வாழ்க்கை. பயனுள்ள வாழ்க்கை. என் இனிய இளைஞனே, வாலிப தேசத்தின் வாசல்படிகளில் பயணித்துக் கொண்டிருப்பவனே வாழ்க்கை என்பது வட்டமடிப்பதல்ல என்பதை எப்போது நீ உணரப் போகிறாய்? நீ முத்துகள் நிறைந்த சமுத்திரம். ஆனால் நீயோ கிளிஞ்சல்களைப் பொறுக்க அலைந்து கொண்டிருக்கிறாய்.

டிக்... டிக்...டிக்... என்று ஒலிக்கும் கடிகாரத்தின் ஓசை என் காதுகளில் கேட்கிறது. உன் காதுகளிலும் ஒலிக்கலாம். இது கடிகாரத்தின் ஓசை மட்டுமல்ல. காலத்தின் ஓசை. காலனின் காலடி ஓசை. கடிகாரத்தின் ஓசையை நிறுத்தி விடலாம். ஆனால் நம் ஆயுள் கொஞ்சம் கொஞ்சமாய் உதிரும் காலனின் கைத்தடி ஓசையை யாராலும் நிறுத்த முடியாது.

இது வாழ்க்கையின் விதி. இதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். இடை விடாது நகர்ந்து கொண்டிருக்கின்ற வாழ்வில் இளமைப் பருவம் மதிப்புமிக்க பருவம். உன்னை நீயே தேடிக் கொள்கிற இனிய பருவம்.
நீ பெற்றிருக்கின்ற உடல் உன் பெற்றோர் இட்ட பிச்சை. உன் சுவாசம் காற்றிடம் கடன் வாங்கியது. பசித்தபோதெல்லாம் மேகம் பூமிக்கு அனுப்பிய தாய்ப்பாலாம் தண்ணீரை குடித்தாயே, எப்போதாவது இதற்கு விலை கொடுத்திருக்கிறாயா? இல்லை அன்னை தெரசாவைப்போல் "இந்த பூமிக்கு நாம் செய்கிற தொண்டுதான் வாடகை'' என்று வாடகையாவது தந்திருப்பாயா? என்ன உறவு உன் உறவு? மரணக் காற்றில் அணைந்து போகும் அகலா?
விளக்கைப் போல் நீ அணைந்து போய்விடாதே. ஓர் ஊதுவத்தியைப்போல் கொஞ்சம் நறுமணத்தை இந்தப் பூமிப் பந்தில் சுழலவிட்டுப் போக வேண்டும்.

கலில் ஜிப்ரான்

"ஒரே ஒரு முறை நான் ஊமையாகிப் போனேன், நீ யார்? என்று என்னை ஒருவன் கேட்டபோது'' என்பார் கலில் ஜிப்ரான்.

அன்பான இளைஞனே. உன்னையும் ஒரு சுட்டுவிரல் நீட்டி நீ யார்? என்று கேட்கிறபோது ஊமையாகி நின்றுவிடாதே. தாகூரைப்போல் இந்தா என்று உன் வாழ்க்கையை அடையாளப்படுத்து. உன் அடையாளத்தை உன் முகவரியை நீ தான் எழுதியாக வேண்டும்.

மகான் ஸ்ரீரமண மகரிஷியின் 'நான் யார்?' என்ற வார்த்தை மிகப் பிரசித்தி பெற்ற வார்த்தை. உடல் என்கிறபோது இதை என் உடல் என்கிறோம். மனம் என்கிறபோதும் இது என் மனம் என்கிறோம். உயிர் என்கிற போதும் இது என் உயிர் என்கிறோம். அப்படியானால் இந்த 'என்' என்பது எதைக் குறிப்பிடுகிறது? இந்தத் தேடல்தான் அவரை ஆன்மீகத் தடத்தில் பதிவு செய்தது.

இவரைப்போல் உனக்குரிய இலக்கு எது என்பதை அறிந்து அதை நோக்கிய பயணத்தில் பயணப்படு. "தடம் பார்த்து நடப்பவர்கள் மனிதர்கள், தடம்பதித்து நடப்பவர்கள் மாமனிதர்கள்''.

தன் மீது மூடிய மண்ணை கீறிக் கொண்டு முட்டி மோதி விதைக்குள் இருந்து வெளி வருகிற விருட்சத்தைப் போல உனக்குள்ளிருந்துதான் நீ வெளியே வர வேண்டும்.

விரும்பினால் வாழ்க்கையில் எல்லாவற்றையும் கற்கலாம்.

ஆர்வமில்லாவிட்டால் அடுத்த அடியைக் கூட எடுத்து வைக்க முடியாது.

இதோ ஒரு கதை-

சீன தேசத்தில் ஓர் அரசர். மாட்டு மாமிசம் அவருக்கு மிக மிக இஷ்டம். அவரே தினந்தோறும் மாட்டைத் தேர்ந்தெடுப்பார். அந்த மாட்டை தினமும் ஒரே வெட்டில் கோடாரியால் வெட்டிவிடுவார் கிடைபோடுபவர். தலைவேறு உடல் வேறு என இரண்டாகிவிடும். எந்த மாட்டையும் அவர் மறுமுறை வெட்டியதாக வரலாறே இல்லை.

அரசருக்கு ஒரே ஆச்சரியம். 'இந்தக் கோடாரியை தினந்தோறும் சாணை பிடிப்பாயா?' என்று கேட்டார்.
'இல்லை. சரியாக வெட்டுகிற பாணியில் வெட்டினால் கூர் மங்காது' என்றார்.
'அது என்ன, சரியான பாணி?' என்றார் அரசர்.
'முதல் நாள் இடது கை பக்கமாகச் சரித்துக் கொண்டு வெட்டுவேன். அடுத்த நாள் வலது பக்கமாகச் சரித்துக் கொண்டு வெட்டுவேன். இப்படி மாறி மாறி வெட்டுவதால் இரு பக்கமும் சமமான கூர்மையுடன் இருக்கும். அது மட்டுமல்ல. வெட்டுகிறபோது கொடுக்கிற அழுத்தம் ஒரே மாதிரியாக இருக்கும். அதனால் இடது வலது என்று மாறி மாறி வெட்டினால் கூர் தீட்டப்பட்ட மாதிரி ஆகிவிடும்'.

மாட்டை வெட்டுபவரிடம் 'இந்தக் கலையை எனக்குக் கற்றுத்தர முடியுமா?' என்று கேட்டார் அரசர்.

'மகாராஜா, அது என்னால் முடியாது. காரணம் எனக்கு யாரும் இதைக் கற்றுத் தரவில்லை. என் தாத்தா வெட்டும்போது தள்ளி நின்று பார்த்தேன். என் தகப்பனார் வெட்டும்போது அருகில் நின்று கவனித்தேன். அவர்கள் யாரும் எனக்கு எதையும் சொல்லித் தரவில்லை' என்றார்.

அரசர் அதற்கு அப்புறம் ஒன்றும் கேட்கவில்லை. ஆனால் ஒன்றை உறுதியாகத் தெரிந்து கொண்டார். எதுவும் உள்ளிருந்து வர வேண்டும் என்பதுதான் அது.

இனிய இளைஞனே! காட்சிகளை மறந்து விடு. கருத்தை மட்டுமே எடுத்துக் கொள். இரவல் அறிவு எப்போதும் பயன்தராது.

முகம் பார்க்கும் கண்ணாடி ஓர் அற்புதக் கண்டுபிடிப்பு. அது மட்டும் இல்லையென்றால் நம் முகம் அழுக்காக இருப்பதை ஒரு போதும் அறிய மாட்டோம். உனது செயல்களை எடுத்துக் காட்ட கண்ணாடி அவசியம். சில வேலைகளில் நிறை குறைகளைச் சுட்டிக் காட்டும் கண்ணாடியாக ஒரு மூன்றாவது நபர் கிடைப்பதுண்டு. ஆனால் அது சரியான முறை அல்ல. நீங்களே உங்களை கண்ணாடியாக இருக்கப் பழகுங்கள். பிறருக்கு மகிழ்ச்சிïட்டுபவராக இருக்கப் பழகுங்கள். இதை அடைவது உன்னிடமேதான் இருக்கிறது.

வாழ்க்கை என்பதே உண்மையில் மனிதன் தன்னைத் தானே பிரசவிக்க முயலும் முயற்சிதான். சாம்பலிலிருந்து உயர்த்தெழும் பீனிக்ஸ் பறவையாய் உன்னிலிருந்துதான் நீ உன்னை பிரசவித்துக் கொள்ள வேண்டும்.
உங்களுக்கு எதில் விருப்பமோ அதைக் கண்டுபிடியுங்கள். அதை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு விலங்குகளின் மேல் அளவற்ற விருப்பமா? அவற்றைப் படமாக வரைவதில் ஆர்வம் உண்டா? நீங்களும் ஒரு நாள் வால்ட் டிஸ்னியைப் போல் வரலாம்.

ஒரு சாதனையாளரின் சரித்திர சம்பவம்-

தனக்குள்ளிருந்த ஒருவனை பந்தைப்போல் தட்டியெழுப்பிய கால் பந்தாட்ட வீரர் ஓ.ஜெ.சிம்சன். அமெரிக்காவின் மாபெரும் கால்பந்தாட்ட வீரர். சுழன்றடிக்கும் சூறாவளிபோல் களத்தில் அவர் இறங்கினால் எதிரி அணி பஞ்சு பஞ்சாகப் பறந்துவிடும்.

இவர் பிறந்தது ஓர் ஏழைக் குடும்பத்தில். காசு கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்கி கால்பந்து விளையாட்டினை ஒரு பார்வையாளராய் பார்க்கும் அளவுக்குக் கூட அவருக்கு வசதியில்லை. அப்போது கால்பந்தாட்டத்தில் புகழ்க்கொடி நாட்டிக் கொண்டிருந்தவர் பிரவுன் என்பவர்.

ஒரு நாள் அவர் வெற்றிக் கோப்பைகளோடு அரங்கத்தைவிட்டு வெளியே வந்தார். அப்போது அவரது கால் முட்டி உயரம் கூட இல்லாத ஒரு சிறுவன், அவரது கால்களைக் கைகளால் சுரண்டிக் கூப்பிட்டான்.
பிரவுன் சிறுவனைப் பார்த்து, 'என்ன' என்றார்.

'சார், நான் உங்கள் ரசிகன்' என்றான்.

'ஓகே. அப்படியா?' என்று கேட்டுவிட்டு காரில் ஏறப்போனார் பிரவுன். மீண்டும் அதே சிறுவன், `சார் நீங்கள் ஆரம்பக் கட்டத்திலிருந்து இன்று வரை எத்தனை போட்டிகளில் விளையாடினீர்கள். ஒவ்வொரு போட்டியிலும் எத்தனை கோல்கள் போட்டீர்கள் என்ற முழுப் புள்ளி விவரங்களும் எனக்குத் தெரியும்' என்றான்.
'குட்' என்று புன்னகைத்துவிட்டு நகரத் தொடங்கினார். மீண்டும் அவரை நிறுத்திச் சொன்னான், 'உங்களின் அத்தனை சாதனைகளையும் ஒரு நாள் நான் முறியடித்துக் காட்டுவேன்'.

பிரவுன் அந்தச் சிறுவனை ஆச்சரியத்தோடு தட்டிக் கொடுத்துவிட்டு போய்விட்டார். அந்தச் சிறுவன் தான் இந்த சிம்சன்.

எப்படி இது சாத்தியமானது? ஒரு குறிக்கோளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதற்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொள்வதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது.

'நீ எதுவாக ஆக விரும்புகிறாயோ அதுவாகவே நீ ஆவாய்' என்பதின் ரகசியம் இந்த சரித்திர நிகழ்வில் இருக்கிறது.

இனிய இளைஞனே! காயங்கள் இல்லாமல் கனவு வேண்டுமானால் காணலாம். வலிகள் இல்லாமல் வெற்றி காண முடியாது. நீ இந்த உலகத்திற்கு வெறும் வெள்ளைத்தாளாகவே வருகிறாய். அதில் நீ தான் உன்னை எழுதிக் கொள்ள வேண்டும். சிலர் இந்தத் தாளில் கிறுக்குகிறார்கள். சிலரோ படிக்கப்பட்ட பின்னர் குப்பைக் கூடையில் எறியப்படும் கடிதமாகிறார்கள். சிலரோ வெற்றுத் தாளாகவே இருந்துவிடுகிறார்கள். சிலர் மட்டுமே காலத்தால் அழியாத காவியமாகிறார்கள். கவிதையாகிறார்கள்.

கவிதைகளை ரசிக்கும் பருவமல்லவா உன் பருவம். கவிக்கோ அப்துல்ரகுமானின் கவிதை இது. உனக்கான கவிதை. உன்னை நீயே எழுத வைக்கும் கவிதை. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

பெற்றோர் இட்ட பெயரல்ல உன் பெயர்
மேகத்திலிருந்து மழையைப் போல்
மலரிலிருந்து மணத்தைப் போல் உன் பெயர்
உன்னிலிருந்து உதிக்கட்டும் உன்னை நீ தான்
பிரசவிக்க வேண்டும்

ஆம். இதுதான் உண்மை....


இடுக்கை :அ.ராமநாதன்

நமது வாசகரின் நகைச்சுவை பகுதி

அவள் என்னை திரும்பி பார்த்தாள்
நானும் அவளை பார்த்தேன்.
அவள் மறுபடியும் பார்த்தாள்
நானும் பார்த்தேன்
இரண்டு பேருக்குமே பரிட்சையிலே பதில் தெரியலை..
--
அப்பா:என்னடா பரிட்சை எழுதினாயே பாஸ் பண்ணியா?
மகன்:என்னை மாதிரி பசங்க எல்லாம் எழுதினா பாஸ் ஆகமாட்டாங்க..
எழுத எழுதத்தான் பாஸ் ஆவாங்க..
--
இன்னிக்கு இருக்கிற மீன் நாளைக்கு கருவாடாக மாறலாம்...
இன்னிக்கு இருக்கிற மீன் குழம்பு நாளைக்கு கருவாட்டு குழம்பாக மாறமுடியுமா..?
-----
அவளை காண்பதற்கு நான் பட்ட கஷ்டங்கள் கோடி..
அவளை கண்ட பின் நான் பட்ட நஷ்டங்கள் தாடி...
--
ஆசிரியர்:-'சூரியன் மேற்கே மறையும்'இது நிகழ்காலமா,எதிர்காலமா,கடந்தகாலமா?
மாணவன்:-அது 'சாயங்காலம்'
ஆசிரியர்:-????
---
கொசு:அம்மா நான் சினிமாக்கு போறேன்.
அம்மா கொசு:வேண்டாம் யார் கையிலயாவது சிக்கி சின்னாபின்னமாகிடப்போற..
கொசு:பயப்படதீங்க அம்மா.நான் அஜித் படத்துக்கு தான் போறேன்.
அம்மா கொசு:அதுக்கு நீ யார் கையில் ஆவது சிக்கி உயிரையே விட்டு
விடலாம்.
--
கடற்படை தலைவன்:கரை தெரியுது.கரை தெரியுது.
சர்தார்:சர்ப்-எக்ஸெல் போடுங்க.அந்த கரை இந்த கரை எல்லா கரையும் போயிடும்..
--
முதியவர்:சார் என்னோட அறுபதாம் கல்யாணத்திற்கு போலிஸ் பாதுகாப்பு வேண்டும்..
போலிஸ் அதிகாரி:யாருக்கு நீங்க பயப்படுறீங்க?
முதியவர்:என்னோட 59 பொண்டாட்டிகளுக்கும் தான்!!
--
காதலி:என்கிட்ட உங்களுக்கு ரொம்ப பிடிச்சது எது?
என்னோட அழகான முகமா?
அன்பான மனமா?
பணிவான குணமா?
காதலன்:உன்னோட இந்த காமெடி தான்!!!
--
ராமு:-பஸ் ஸ்டாப்ல நின்னு மேலையே பார்த்து கிட்டு இருக்கீங்களே என்ன விஷயம்?
சோமு:-மதுரைக்கு போகின்ற பஸ் மூன்று மணிக்கு மேல வரும் என்று சொன்னார்கள் அதான்..
--
ஆசிரியர்:-மணல் அரிப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
மாணவன்:-மணலுக்கு சொரிந்து விட்டு நைசில் பவுடர் போட வேண்டும்..
--
ராமு:-டேய்,நாளைக்கு நான் சினிமாவுக்கு போரேன்..வர்ரியா?
சோமு:-முடிஞ்சா வரேன்டா..
ராமு:-முடிஞ்ச பிறகு ஏன்டா வர்ர..படம் ஆரம்பிக்கும் போதே வந்துவிடு..
--
தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.
--
மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா?
அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?
--
தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!
--
டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!
--
அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே
ஓடி போய்ட்டாங்க!!
--
ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோல உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு
பொண்ணு தெரியுமா?
பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.
------
ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொள்ளீ போடணும்!
போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொள்ளி வச்சுரவா?
--------
பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!
அவன் சிக்கினா சொல்லுங்க!
--
தத்துவம்

1. நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது.

2. ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... ஆனால் ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது.

3. என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது

4. ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு

5. என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும்.
--
மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை
காட்டி நிறுத்தசொல்றாரு!
அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு
உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?
--
பசங்க மனசு மொபைல் மாதிரி..
பொண்ணுங்க மனசு தண்ணீர் மாதிரி..
தண்ணீர்ல மொபைல் விழுந்தாலும் மொபைல்ல தண்ணீத் விழ்ந்தாலும் ஆபத்து மொபைலுக்குத்தான்..
--
கையில் 10 ரோஜாக்களோடு
கண்ணாடி முன் நில்லுங்கள்!
இப்போது நீங்கள் 11 ரோஜாக்களைக் காண்பீர்கள்!
அந்த 11ஆவது ரோஜா,
உங்கள் புன்னகை!
நீங்கள் இப்போது புன்னைப்பதை நான் அறிவேன்!

நன்றி : மோகன்ராசு -கோவை

4/11/2010

கலையாத‌ நிழல்கள்

என்னவென்று நான் சொல்ல
வழிநெடுக தோரணம்
தலைவரின் வருகையை
வரவேற்க.....

அண்ணார்ந்து பார்த்தேன்
ஏணியிலிருந்து, கீழே
கனவெல்லாம் மேலே உயர‌...

தலைவர் சென்றபின்னாலும்
சண்டை மூண்டது
அவர் உக்கார்ந்த
சேரை தூக்குவதில்..

ஆம்! ஒருசாண்
வயிற்றிலும் பலகாரம்
என்னடா என்னை
கவனிக்கவில்லையென்று..

ஏசியும் தன் வேலையை
சரியாக செய்தது..
தலைவரின் சயனத்தில்
இடையூறு இல்லாமல்..

ஆம்! கால்கள் இடம்
மாற மறுத்தன‌
கதிரவனும் தன் வேலையை
சரியாக செய்தது..
மனமோ ஸ்ப்பா என்றது..

திட்டங்கள் எல்லாம்
போட்டதும் வால்களின்
கைகளில் தஞ்சம்..

ஆம்! நாளைக்கு
கிடைக்கும் என்ற
நம்பிக்கையில்
நாளும் நாளும்...

அடுத்த தேர்தலிலும்
தலைவர்தான் வெற்றி!

யார்வந்தா என்ன‌
பணம் நிறைய
கிடைக்குமா?...(இப்படியும் மக்கள்)

4/08/2010

அண்ணா - வாய் சொல்லில் வீரனடி ....

அறிஞர் அண்ணாவின் நினைவில் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் ...காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909] - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார்.

அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா குடியரசுனாதிற்குப்பிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்றப் பெருமையுடன், அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.

தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி அதில் ஒரு பாத்திரமாக நடித்தவரும் ஆவார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடையத் திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே.

இந்த‌ வ‌கையில் பார்க்கும் போது நான் இத‌ற்கு முன் எழுதிய‌ வாய் சொல்லில் வீர‌ன‌டி என்ற‌ த‌லைப்பில் எழுதிய‌ ப‌திவை அண்ணா பதிவில் உங்க‌ள் முன் ப‌கிர்ந்து கொள்ள‌லாம் என்று நினைக்கிறேன் .
அத‌னை இங்கே மீள்ப‌திவாக‌ இட்டுள்ளேன் .


அன்பார்ந்த வலைப்பதிவு நண்பர்களே , நண்பிகளே , அன்பர்களே ,

நாம ஒரு விசயத்தை நல்லா கவனிக்கணும் . கடவுள் நம்மை படைக்கும் போது நமக்கு ஒரு அழகான உயிரையும் உடம்பையும் கொடுத்திருக்கிறார் . நம் உடம்பில் ஒவ்வொரு உறுப்பும் ரொம்ப முக்கியமானது . அதில் ஒன்று வேலை செய்யவில்லை என்றால் நாம் அம்பேல் தான் . அதில் மூளை முக்கியமானது . நம்முடைய ஒவ்வொரு உணர்ச்சியையும் வெளிப்படுத்துததும் மூளை தான் .

நாம எப்படி பேசுகிறோம் ? . நம் மூளையில் உதிக்கிற கருத்துக்களையும் எண்ணங்களையும் வாயின் மூலமாக நாக்கின் உதவியோடு பேசுகிறோம் . இது இப்ப மட்டுமல்ல , பிறக்கும் போதே குவங்க் குவங்க் .... என்று அழுகையின் மூலம் தான் .

ஒரு வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்துகிறார் . அப்போது வருகைப்பதிவு வாசிக்கப்படுகிறது .

முருகன் ,

உள்ளேன் அய்யா

சண்முக நாதன்

ஆஜர் சார்


சரி இப்ப விசயத்துக்கு வருவோம் . ஒரு வகுப்பறையில் மாணவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பதை வருகைப்பதிவு காட்டிடும் . அதே மாதிரி நாம , மத்தவங்ககிட்ட நம்மளை நாம் அடையாளப்படுத்திக் கொள்வது இந்த பேச்சின் மூலமா தான் . ஒருவர் தன்னுடைய பேச்சின் மூலமா நானும் இருக்கேன் என்பதை வெளிக்காட்டுகிறார் .

நம்ம ஆளுகளை பேச்சில மிஞ்சிக்கிட முடியாது . பேச ஆரம்பிச்சாங்கன்னா நிறுத்தவே மாட்டாங்க . நான்ஸ்டாப் . கேக்கிற ஆள் ரொம்ப கொடுத்து வைத்து இருக்க வேண்டும் . இவ்வளோ நல்லவரா அவர் ....

இன்னும் சில பேர் இருக்காங்க , பேசுவதற்கு காசு கொடுக்கனும் அவங்களுக்கு . அப்படி இருக்கும் அவங்க பேச்சு .

இதிலே சில பேர் உண்டு . பேசாமலே காரியத்தை சாதிச்சிட்டு போயிக்கிட்டே இருப்பாங்க . இந்த மாதிரி ஆளுககிட்ட உசாரா இருக்கணும் . ஒன்னுமே தெரியாத மாதிரி ரியாக்சன் காட்டுவாங்க பாருங்க . அப்பப்பா ... முடியலடா சாமி ...

சில பேர் எப்படின்னா , இரண்டு பேருக்குள்ள சண்டை இழுத்து விட்டுருவாங்க . பலே ஆளுங்கப்பா ... இதத்தான் ஊமை குசும்பாங்களோ .... நீங்க நல்லவரா கெட்டவரா ....

சில பேர் எப்படின்னா , அவங்க பேச்சிலயே நம்மளை மயக்கிப்புடுவாங்க . நாம அவங்களுக்கு அடிமையானது மாதிரி ஆகிடுவோம் . நீங்க தான் மன்மதன் பேமிலியா .... சொல்லவே இல்ல ...

இதுல இன்னொரு முக்கியமான விசயம் என்னன்னா ... ஒருத்தர் பேச ஆரம்பிச்சார்னா அருவி கொட்டோ கொட்டன்று கொட்டும் . இப்படி சில பேர் உண்டு . அவர் அங்கருந்து வரும் போதே சொல்வாங்க "ஏய் குத்தாலம் வர்றாருடா ஒதுங்கியே நில்லு , சாரலடிக்கும்" . நீங்க குத்தாலத்துல இருந்திங்களோ ....

சிலபேரை பாத்த உடனே தப்பா எடை போட்டுறக் கூடாது . உதாரணத்துக்கு சொல்லனுன்னா எனக்கு ஒரு காமெடி ஞாபகத்துக்கு வருது .

வேலைக்காரன் படத்துல ஒரு ஹோட்டல்ல வேலைக்கு சேத்து விட நம்ம சூப்பர்ஸ்டாரை செந்தில் கூட்டிட்டு போவார் . அப்போ அங்க மேனஜரா இருக்கும் நாசர் ரஜினியைப் பாத்து ஏம்பா உனக்கு இங்கிலீஷ் எல்லாம் தெரியுமான்னு கேட்பார் . உடனே பக்கத்துல இருக்கிற செந்தில் என்ன சார் அவனே இப்ப தான் கிராமத்துல இருந்து வாரான் அவனுக்கெப்படி .... என்று சிரிப்பார் . உடனே நம்ம தலைவர் இங்கிலீஷ்ல சும்மா பேசுவார் பாருங்க . அப்பப்பா ......

இப்படி எக்கசக்கமான பேர் உண்டு .... சொல்லிக்கிட்டே போகலாம் . உங்களுக்கு தெரிந்தா கொஞ்சம் சொல்லுங்க .

பேச்சு இப்ப ஆரம்பிக்கலை . மனிதன் எப்ப தோன்றினானோ அப்பவே ஆரம்பிச்சிருச்சு . சில உதாரணத்தை சொல்லனுன்னா ....

300 வருசத்துக்கு முன்னாடி நம்மளை ஆங்கிலேயன் ஆண்டு அடிமைப்படுத்தி வந்தான் . நம்மளோட சுதந்திரம் பறிபோனது . அப்போ நம்ம முன்னோர்கள் எல்லாம் சேர்ந்து குரல் கொடுத்தாங்க . நிறைய மன்னர்கள் தங்களோட கருத்தை ( சுதந்திரம் வேண்டி ) சொன்னாங்க . அதுக்கு அப்புறம் வந்த மக்கள் , தலைவர்கள் , காந்தி , ராஜாராம் மோகன்ராய் , கோபாலகிருஷ்ண கோகலே , அபுல் கலாம் ஆசாத் ராஜாஜி , முகம்மது அலி ஜின்னா , நேரு , கான் அப்துல் காபார் கான் , இப்படி நிறைய தலைவர்கள் பாடுபட்டு நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்தாங்க . இதுக்கு அடிப்படையா இருந்தது அவங்களோட பேச்சு தான் .


பேச்சுக் கலை நமக்கெல்லாம் ஒரு வரம் தான் . அதுக்கு இறைவனுக்கு தான் நாம நன்றி சொல்லணும் .

இதே மாதிரி , சுதந்திரம் அடைந்த பின்னாடியும் , அரசியல்ல சில தலைவர்கள் தன்னோட பேச்சுத் திறமையால மக்கள் மத்தியில் பிரபலம் அடைச்சிருக்காங்க . பெரியார் , காமராஜர் , அண்ணாத்துரை , கலைஞர் , எம்ஜியார் , ஜெயலலிதா , வைகோ , நெடுஞ்செழியன் , காளிமுத்து , தீப்பொறி ஆறுமுகம் , டி ராஜேந்தர் , கடைசியா நம்ம விஜயகாந்த் இப்படி நிறைய தலைவர்கள் தங்களோட பேச்சுத் திறமையை வைத்து மக்கள் மத்தியில் பிரபலமானாங்க . ..... அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா ....

இதுல இன்னொருத்தர் இருந்தார்யா .. அவர் வேற யாருமல்ல .. 1991 -1996 வரை பிரதமரா இருந்த நம்ம நரசிம்மராவ் தான் . மனுசர் 5 வருசம்மா சிரிக்கவே இல்லையே என்ன .

பட்டிமன்றத்துல எல்லாம் பேச்சு தான் முதல் . அங்க பேச்சு இல்லைன்னா நம்ம பப்பு வேகாது .

இதைத்தான் வாயுள்ள பிள்ளை பிழைத்துக்கும்னு சொல்வாங்களோ .....

சில பேருக்கு இந்த மாதிரி கோர்வையா பேச வராது . அவங்க என்ன பண்ணுவாங்க , தங்களோட எழுத்துத் திறமையைக் கொண்டு மத்தவங்களை பேச வப்பாங்க . எனக்கு படிக்கும் போது உள்ள சம்பவம் ஞாபகத்துக்கு வருது .....

எங்க  ஏரியாவில பேச்சுப் போட்டி வச்சாங்க . அதுல நானும் கலந்துகிட்டேன் . அப்ப எனக்கு கோர்வையா பேச வராது . ஏதோ பேசினேன் . அப்ப சார் கூப்புட்டு , தம்பி உன்னோட கருத்துக்கள் எல்லாம் நல்லாயிருக்கு . ஆனா பேச்சு வரல . நீ பேச நினைக்கிறதை , உன்னோட எழுத்தைக் கொண்டு மத்தவங்களை பேச வையின்னு சொன்னார் .

இப்ப அப்படிதான்னு நினைக்கிறேன் , நீங்க தான் சொல்லனும் ......

இந்த வலைப்பதிவில் நான் எழுத ஆரம்பித்ததுக்கு அப்புறம் எனக்கு நண்பர்கள் நண்பிகள் என்று நீங்க தான் கிடைத்திருக்கிறீர்கள் . அதுக்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் . உங்க அன்பால என்னை கட்டி போட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் .

நம்முடைய நட்பு எப்படின்னா , சங்க காலத்தில வாழ்ந்த கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பு மாதிரி . காணா நட்பா இருந்தாலும் ரொம்ப நெருக்க மாயிட்டோம் .

பேச்சும் எழுத்தும் லவ்வர்ஸ் மாதிரி .

ஒருத்தருக்கொருத்தர் கருத்துக்களை பரிமாறிக்கணும் . நம்முடைய எண்ணங்கள் மற்றவர்களை சென்றடையனுன்னா நம்ம எழுத்து பேசணும் .

நல்ல நல்ல விசயங்களை பத்தி நாம எழுதணும் . அது தான் நம் வாழ்க்கையில நிறைய விசயங்களை கத்துக் கொடுக்கும் .

இது என்னோட எண்ணம் ..... அப்ப உங்க எண்ணம் ......???? ..

இடுக்கை :அ.ராமநாதன்

அன்புள்ள காதலிக்கு

       நீருக்கு நிறமில்லையென்பதெல்லாம் பூக்களைப் பார்க்காதவர்கள் சொல்லி வைத்தப் பொய்கள். ரோஜாவுக்கு ஊற்றிய நீர் சிவப்பாய்… மல்லிகைக்கு ஊற்றிய நீர் வெள்ளையாய்… நீரும் பூக்குமடி! பூக்களெல்லாம் பெண்களாம். வண்டுகள் எல்லாம் ஆண்களாம். எந்த மூடன் சொன்னது? பெண் வண்டு உட்காரும் பூ ஆண் பூவாய் இருக்கலாமே! பறிக்கப் போகிறாய் என்று தெரிந்தாலும் எப்படி சிரிக்க முடிகிறது இந்தப் பூக்களால்? பறித்தப் பிறகும் நீ சூடும் போது மட்டும் மறுபடி ஒருமுறை பூக்கிறதே எப்படி? வாடாமலே இருந்து விட்டால் பூவுக்கும் உனக்கும் பெரிய வித்தியாசமில்லை! இதழ் திறந்தால் இரண்டிலும் தேன் தான்! நீயிருக்கும்போது என்ன வரம் பெற்று காதலின் சின்னமானதோ ரோஜா! ஒருவேளை முட்கள் அதிகம் இருக்கிற சாபத்தாலா? எல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டும், வருவாயா?
வாசனையுமுண்டு
வாடுவதுமில்லை
நீ பூத்தப் பூவா? ப்ளாஸ்டிக் பூவா?
நீ களைந்து எறிந்த ஆடையாய்க் கலைந்து கிடக்கிறது மேகக் கூட்டம்.உற்றுப் பார்த்தால் அதில் ஒரு மானோ, ஒரு மயிலோ, அல்லது ஓர் இதயமோ தெரியலாம்.பார்த்துக் கொண்டே இருக்கும்போது ஒரு மலரின் வடிவம், பெண் முகமாய் மாறலாம், ஏன் உன் முகமாய்க் கூட மாறலாம்.வேகமாய் செல்லும் மேகம் சூரியனை நெருங்க நெருங்க மேகத்தின் நிழல் உன்மேல் படரும். மேகத்துக்கு நன்றி.சூரியனைக் கொஞ்சி விட்டு மேகம் விலக விலக நிழல் விலகி மறுபடி வெயில் வரும். பதறிப் போவேன் நான்.மேகம் கொஞ்சி விட்டுப் போன சூரியன் முகத்தில் புதிதாய் இருக்கும் ஓர் ஒளி.
இந்த மேகத்துக்கு தான் எத்தனை வண்ணம்? வெயிலில் வெள்ளை. மழையில் கருப்பு. மாலையில் அது நடத்தும் வர்ண ஜாலம்.
எல்லாம் இருந்தும் கடைசியில் கலைந்தோ, கரைந்தோ போகிறது! காதலைப் போல…எல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டும், வருவாயா?

மழையில் நனைந்ததும்,
மேகத்தைத் துவட்டிக்
கொள்கிறாய்!


மழையை ரசிக்கத் தெரியாதவனுக்குக் காதலையும் ரசிக்கத் தெரியாது.மழையே வராமல் கிடக்கும் நிலத்தின் வெடிப்பு.
மாலை நேரத்து மெல்லிய சாரல். வெயிலோடு சேர்ந்து பொழியும் மழை.உலகத்தையே சுத்தப்படுத்தும் உன்னத மழை. மழை நின்றும் விடாத தூவானம். மழை முடிந்து வீசும் மண் வாசம்.காற்று, புயல், சூறாவளியில் சிக்கினாலும் விடாது பொழியும் மழை. பெருமழையில் அடித்து செல்லப்பட்ட வீடு.மழையின் இத்தனைப் பரிமாணங்களும் காதலிலும் உண்டு.மழையில் நனைந்து விட்டு வெயிலில் குளிர் காயலாம். காதலில் நனைந்து விட்டுக் காமத்தில் குளிர் காயலாம்.
மழையிலும் சரி, காதலிலும் சரி நனையும் வரை நஷ்டமில்லை. நனையாவிட்டால் ஒரு லாபமுமில்லை.எல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டும், வருவாயா?

மழையில் குடை…
குடைக்குள் நாம்…
நமக்குள் மழை!

(இது என்னவளுக்கு நான் எழுதியது ஆனால் என்னால் கொடுக்க தைரியம் இல்லாததால் என் டயரில் பாதுகாக்கப்பட்டது .....இப்போது )

இடுக்கை :அ.ராமநாதன்                         நாள் : 04 .07 .2006

காதல் கவிதைகள்!

நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!

இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!

குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!

உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!

எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்…

என் கனவு

அது ஓர் அழகிய நிலாக்காலம்.
கவலை வெயில் சுடாத இனிய இரவைப்போன்றது.
இரவின் மடியில் இனிய உறக்கத்தில் நான்.

என்னைத் தேடி மெல்ல வருகிறது ஒரு கனவு.
ஆனால், கலைகிற கனவுகள் எனக்குப் பிடிப்பதில்லை.
கனவைத் துரத்தி விடுகிறேன் நான்.

அதன் வருகையும் என் துரத்தலும் தொடர்கதை.
கனவைத் துரத்தி துரத்தி கடைசியில் கனவின் பின்னே நான்.
அதனை விரட்டும் முயற்சியில் தொடங்கிய என் துரத்தல்
எப்படியாகினும் அதனை பிடித்து விடுகிற முயற்சியில் முடிகிறது.

ஓர் பௌர்ணமி இரவில் அந்தக் கனவும் கை (கண்?) கூடுகிற‌து.
கனவுக்கே உண்டான இயல்போடு
அது கலைந்து விட முயலும்போதெல்லாம்
நனவாகும் ஆசைகாட்டி அதனை என்னோடு இருத்திக் கொள்கிறேன்.

இறுதியில், தான் நனவாகப் பிறக்கவில்லை
தான் கலைவதற்காக தான் பிறந்ததாக
எனக்கந்த கனவு சொல்கிற‌போது
நான் மரணிக்கிறேன்.

கலைகிற கனவுகள் எனக்குப் பிடிப்பதில்லை.
இப்போதும் என் கனவு கலையவில்லை.
கனவு காண்கையிலேயே,
எனக்கு தான் நிகழ்ந்துவிட்டது…
மரணம்!

செல்லரிக்கும் காதல்

  அர்த்தமிழந்த சொற்களை சுமக்கும்
உன் பழைய காதல் கடிதமொன்று
தன்னை அழித்துக்கொள்ள உயிரில்லாமல் தவிக்கிறது.

காதலித்து கைவிட்டதற்குப் பதிலாக
காதலிக்கவில்லையென நீ
பொய்யே சொல்லியிருக்கலாம்

நீ சொன்னபடியே
உன்னை மறந்துவிடுகிறேன்.
என்னுடன் கலந்துவிடு.

என்னை இதயத்தில் சுமந்தாய்.
உன்னை உயிரில் வைத்தேன்.
இதய மாற்று சிகிச்சை எளிது.
உயிர் மாற்று சிகிச்சை?

செல்லரித்துப் போன
உனது பழையப் படமொன்று
என் செல்லரித்துக் கொண்டிருக்கிறது.

இடுக்கை :அ.ராமநாதன் 
அன்பு நண்பர்களுக்கும்,வாசகர் அனைவருக்கும் சென்ற ஒரு வாரகாலமாக வேலை பளூ காரணமாக வெளியூர் சென்று விட்டதால் என்னால் நமது வலைப்பூவில் சரிவர அப்டெட் செய்ய முடியவில்லை என்பதனைக்கூறி அதற்கு உங்களில் ஒருவனான என்னை மன்னித்து ,மேலும் தங்களின் நல் ஆதரவை நமது வலைப்பூவுக்கு அளிக்குமாறும் அன்புடன் வேண்டும் .......கோவை ராமநாதன்

4/05/2010

காதல் வந்ததும்

நான் கமலஹாசனை போல் பயம் வந்தவானை இருக்க என்னுள் அவள் வாசம் வந்தவுடன் இப்படி புலம்பியபோது ...................நதியன் ஆழம் தெரிந்த எனக்கு
நீந்த எனக்கு பயம் !
மலையின் உயரம் தெரிந்த எனக்கு
மலையேற எனக்கு பயம் !
நிலவு எட்டிப் பிடிக்கும் உயரத்தில்
இருந்தாலும் அருகே செல்ல பயம் !
ரயில்ப்பூச்சி கடிக்காது என்று தெரிந்தாலும்
அதன் அருகே செல்ல பயம் !
வேகமாக ஓடியும் வெற்றி
இலக்கை அடைய பயம் !
பெண்ணே பெண்ணே !!
உன்னை கண்ட நாள் முதல்
இதெல்லாம் எனக்கு எளிதானதே !
இது தான் காதலின் ஆழமோ!
நீ வரும் வழியெங்கும்
பூக்களாய் பூத்திருக்க தோன்றுதே !!