தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

4/29/2012

பெண்ணே

இறந்தவர்களுடன்

பேசுவதற்கான

மாந்திரிகர்களைக்

கண்டிருக்கிறேன்

பெண்ணே

இறந்துவிட்ட

உன் இதயத்துடன்

எப்படி பேச!!!!!

4/27/2012

ஆதீனங்களின் தலைமைப் பொறுப்பு

தங்களையும், கடவுள்களின் மீதான மக்களின் நம்பிக்கைகளையும் பயன்படுத்தி உலகின் அத்தனை அயோக்கியத்தனங்களையும் செய்கிறார்கள் போலிச் சாமியார்கள். இந்த மதம், அந்த மதம் என்றில்லாமல், அனைத்து மதங்களிலும் அசிங்கங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.
ஆண்டுகள் செல்லச் செல்ல மோசடிகளும் அசிங்க செயல்களும் அரசியல், ஆன்மீக உலகில் அதிகரித்து வருகின்றனவே தவிர, கிஞ்சித்தும் குறையவில்லை.
இந்த அசிங்கங்களை துணிந்து செய்யவும், குறிப்பாக ஆன்மீகத்தை பெரும் வர்த்தகமாக்கவும் மக்களின் கண்மூடித்தனமான நம்பிக்கையையே லைசென்ஸாக உபயோகிக்கிறார்கள் அயோக்கிய ஆன்மீகவாதிகள்.
பெண் தெய்வங்களை முன்னிற்க வைத்து, அவற்றின் எதிரிலேயே நாளும் ஒரு பெண்ணுடன் காமக் களியாட்டங்கள் நிகழ்த்தும் போலிச் சாமியார்களின் சாயத்தை முற்றாக வெளுத்தாலும், மீண்டும் மீண்டும் காவிச் சாயத்தை அந்த காம வெறியர்கள் மேல் பூசி, பூஜிக்கும் ஈனத்தனம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
‘எதுவுமே தப்பில்ல…’ என்ற மனநிலைக்கு மக்கள் மாறி வெகு ஆண்டுகளாகிவிட்டதென்றே தோன்றுகிறது.
இந்தியாவின் மெகா ஊழல் செய்த பெண்மணியை முதலில் தோற்கடித்து, அடுத்த தேர்தலில் ஜெயிக்க வைக்கிறார்கள். மக்களைப் பொறுத்தவரை அந்தப் பெண்மணி பதவியில் இல்லாத இந்த 5 ஆண்டுகள்தான் தண்டனையாம். அடுத்த முறையே ஆட்சியைத் தூக்கிக் கொடுத்து அரியணையேற்றி விட்டார்கள். அந்த ஊழல் வழக்கு இன்னமும் இழுத்துக் கொண்டிருக்கிறது. அதைக் குறைந்தபட்சம் கண்டித்துப் பேசக்கூட ஒருவருக்கும் துப்பில்லை! (மனசார கண்டித்தவர்களுக்கு இந்த கடுமொழி பொருந்தாது!)
இன்னொரு பெரும் ஊழலில் பெரியவர் குடும்பம் சிக்கியது. அதற்கு தண்டனையாக திகார் சிறையில் இன்னும் கூட கம்பி எண்ணுகிறார்கள். வழக்கு, விசாரணை… குடும்ப ஆட்சி அகன்றது. இன்னும் நான்காண்டுகள் கழித்து அவர்களின் ஊழலுக்கும் கூட மன்னிப்பு கிடைக்கலாம் மக்கள் மன்றத்தில். மாற்றைப் பற்றி யார் சிந்திக்கிறார்கள்… எது சிறந்த அயோக்கியத்தனம் என்பதில்தான் போட்டியும் தெரிவும்!
ஆக மக்களே சட்டத்துக்கு விரோதமாகத்தான் இருக்கிறார்கள். ஒரு ஊழல்வாதிக்கு 5 ஆண்டுகள், அடுத்த ஊழல்வாதிக்கு 5 ஆண்டுகள் பதவி நீக்கம் மட்டுமே தண்டனை!
மக்களின் வாக்குகளை மூலதனமாக வைத்து வரும் அரசியல் அயோக்கியர்கள் இப்படி என்றால்…
மக்களின் மூட நம்பிக்கையை மூலதனமாக வைத்து ஆன்மீக வியாபாரம் செய்யும் ஃபிராடுகள் நிலை… இதைவிட ஒரு படி மேல்.
என்ன கொண்டு வந்தோம்… எதை இழக்கிறோம்… என்று அவர்கள் தத்துவம் பேசுவது ஆன்மீகத்தை மனதில் கொண்டல்ல. அவர்களை மனதில் கொண்டே. பரதேசியாய், ஓட்டாண்டியாய் காவி கட்டி அறிமுகமாகும் இந்த அயோக்கிய சிகாமணிகள் கொஞ்ச நாளில் கோடி கோடியாக காணிக்கை பெற்று தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து செங்கோல் பிடிக்கிறார்கள். கேட்க நாதியில்லை. பிச்சைக்காரனாய் திரிந்த பரதேசிக்கு ஒரு பவிசைக் கொடுத்து, கடைசியில் அவன் காலடியிலேயே விழுந்து கிடக்கின்றனர், அறிவைத் தொலைத்த மக்கள்!
மருந்தே வேண்டாம் யாக்கைக்கு, இதோ நான் தருகிறேன் நீறு என்பார்கள். வாயிலிருந்து எச்சிலைத் துப்பி இந்தாடா மருந்து என்பார்கள். தனக்கு மாரடைத்தால் மட்டும் ஆங்கில மருத்துவமனை தேடி ஓடுவார்கள். எடுத்துச் சொன்னால் எவன் கேட்கிறான்!
காலையில் பிரம்மச்சரியத்தை போதிப்பார்கள்… மாலையிலோ யாரோ ஒரு நடிகையுடன் நிர்வாண கோலத்தில் கட்டித் தழுவி சுகமாய் இருப்பார்கள். அசிங்கம் அம்பலத்துக்கு வந்து, மக்கள் காறித் துப்பினாலும் துடைத்துக் கொண்டே, அரசியல் ஆதரவு தேடிக் கொள்கிறார்கள். அத்தனை சாட்சிகள் இருந்தும், மனசார ‘நான் தவத்திலிருந்தேன்.. என்னை சல்லாபத்துக்கு பயன்படுத்திக் கொண்டார்கள்,” என்று சாதிப்பார்கள். உளவியல், களவியல், மனித உரிமையியல் என்று ஏதோ இயலைச் சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம் இவர்களுக்கு வக்காலத்து வாங்கும். உண்மையைச் சொன்னவனை உள்ளே தள்ளிவிட்டு, செக்ஸ் பார்ட்னருடன் பகிரங்கமாக குண்டலினி எழுப்பலில் மும்முரமாகிவிடுவார்கள்.
இந்தக் குறளி வித்தையைக் கைத்தட்டி ரசிக்க மீண்டும் ஒரு மூடக் கூட்டம் உருவாகும். ஆன்மீக உலகின் கயமைத்தனங்களை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்த திறமையை அங்கீகரித்து ஆதீனங்களின் தலைமைப் பொறுப்பும் வாரிசுப் பட்டமும் கிடைக்கும். அதற்கு ஆட்சி மேலிடத்தின் பகிரங்க ஆதரவும் கிடைக்கும்.
யார் கண்டது… அடுத்த சட்டமன்றக் கூட்டத்தில் புதிய ஆதீனத்தின் அருள்வாக்கிலிருந்து ஒரு பகுதியை Quotation ஆகக் கூட ஆட்சி மேலிடம் எடுத்துக்காட்டும் கேவலமும் நடக்கும்.
ஆன்மீகவாதி, ஆதீனகர்த்தா, மடாதிபதிகள் கொலை செய்கிறார்கள், கற்பழிக்கிறார்கள், கோயில் கருவறையில் காமம் புரிகிறார்கள், நாளும் ஒரு நடிகையுடன் சல்லாபித்தபடி பிரம்மச்சரியம் உபதேசிக்கிறார்கள்.
திருடர்கள், அயோக்கியர்கள், மக்கள் விரோதிகள் எந்த நியாயத்துக்கும் அடங்குவதே இல்லை. கொள்ளை, களவானித்தனத்தை மட்டுமே தகுதியாய்க் கொண்டு ஆட்சிப் பீடத்தை அலங்கரிக்கிறார்கள்.
ஆக, யோக்கியர்களுக்கு இங்கு வாழத் தகுதியில்லையப்பா… ஆட்சியிலும் ஆன்மீகத்திலும் கயவர்கள்… கயவர்கள் தயவில் கயவர்கள் ஆளும் கயவர்கள் தேசமடா!

எண்ணங்களுடன் : கோவை அ.ராமநாதன் 

4/25/2012

மாற்றங்கள்

சில நொடி பார்த்தால்
பல நொடி வாழும் மனது
காதலை சொல்லும் முன்பு
சில நொடி பிரிந்தால்
பல நொடி அழுகும் மனது
காதலை சொன்ன பின்பு
ஒரு நொடி சுட்டால்
பல நொடி வலிக்கும் உயிர்
காதலில் தோற்ற பின்பு
ஆனால் முழு நொடியும்
வாழ்கிறேன் உன் முன்னாள்
உயிர் உள்ள பொம்மையாய்
  காதல் திருமணத்தில் ….!

4/22/2012

ஊழல்

நாற்றத்தின் உடலுக்கு
நறுமணமாம் சந்தனம்
சாக்கடையின் தோற்றத்திற்கு
ஊர் மணமாம் அரசியல்
கொளுத்துகிறது வெயில்
கோமணத்துடன் விவசாயி
ஒட்டிய வயிறில் தினமும்
கொட்டிய நிலவாய் வலம்
வயிற்று பசிக்கு
மானம்கெட்ட அரசியலுக்கு
வானவிளக்கு வண்ண தோரணம்
மேள தாளம் மேடை முழக்கம்
முகப்பொலிவுடன்
முன்பின் மாறா மக்கள் கூட்டம்
பணமாம் பாசமாம் பல்லாக்கு
செல்லும் வரை
பாழாப்போன உலகத்தில்
பாடுபட வைக்கிறது பணம்
பார்த்து சிரிக்கிறது ஊழல்

4/14/2012

மனிதர் தாம் உண்டோ

இதுவரை நான் யோசித்ததில்லை...


ரோட்டோரத்தில் அரை ஆடையில் கிடக்கும்

என் அம்மா வயதுள்ளவளைப்பற்றி..!

பிளாட்பார படிக்கட்டில் அண்ணா காசு கொடு

என்ற அனாதை சிறுமியைப்பற்றி..!

தன்னையறியா நிலையில் தாயாகித் திரியும் பைத்தியக்கார

தமிழச்சியைப்பற்றி..!

அன்றொரு நாள் தண்டவாளத்தில் துண்டமாய்

கிடந்த அனாதைச் சிறுவனைப்பற்றி..!

ரோட்டோர சாக்கடைக்குழிக்குள் சுத்தம் செய்யும்

முகம் தெரிய பெரியவரைப்பற்றி

ஆனாலும் ;

சென்று கொண்டுதான் இருக்கிறோம் நாமும்..!

இப்படியாய் சுய நலமே பொது நலமாய்..!

போன வாழ்க்கையில் பிறர் நலம் தான்

நாம் காண வாய்ப்புண்டோ..!

இல்லை ;

மனிதர் தாம் உண்டோ

4/01/2012

குடி குடியை கெடுத்தது

அன்புக்கரசு நல்ல குடும்பத்தில் பிறந்தவன் B .A . பட்டாதாரி அரசாங்க வேலைக்கு தேர்வு எழுதி எந்த தேர்விலும் அவன் தேர்ந்து எடுக்கப்படவில்லை இப்படிதான் ஒருமுறை தேர்வில் வெற்றி பெற்று நேர்முக தேர்வு வரை வந்து அதில் எல்லா கேள்விக்கும் பதில் சொன்னான் ஆனால் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல முடியவில்லை ,எவ்வளவு தரமுடியும் ? அந்த கேள்வி . மனம் உடையாமல் தன் அம்மா அணிந்திருந்த காது தொங்கடத்தை வாங்கி அடகு வைத்து சின்ன பெட்டிக்கடை வைத்து அது பலசரக்கு கடையாகி மாறி வளர்த்து வருகிறான் அந்த நேரத்தில் அவனுக்கு திருமணம் முடித்து வைக்கிறார்கள் அழகான குணமுள்ள பெண் மனைவியாக வருகிறாள் ..வியாபாரமும் அதிகமாக நடக்கிறது .அன்புக்கரசுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது சந்தோஷமாக குடும்பம் வாழ்கிறது இபோதுதான் கடை உரிமையாளர்களுக்கு ஒரு பார்ட்டி கப்பெனி காரர்கள் அளிக்கிறார்கள் அதில் விளையாட்டாக ஆரம்பமான குடி ...மீண்டும் அவன் மனைவி கர்ப்பமாகிறாள் இரண்டாவது அவனின் வாரிசு ஒரு ஆண் குழந்தை பிறந்தது ...........
மறுநாள் மனம் அதை தேடியது சரி இன்னக்கி மட்டும் கொஞ்சம் குடிப்போம் ..இன்று இன்று என்று தினமும் ஆனது மதுக்கடை நண்பர்கள் அதிகமானார்கள்
அன்று சற்று போதை அதிகமானதால் தெருவில் அரை நிர்வாணமாக கிடந்தான் அதுவரை அரசல் புரசலா தெரிந்த விஷயம் ஊருக்கே தெரிந்தது ஊருக்கு தெரிந்தால் வீட்டிற்கு தெரியாமல் போகுமா ... அவனின் அம்மாவின் உசுரே போய்விட்டது பாலுட்டிய நெஞ்சு .பஞ்சு, பஞ்சு ஆனது ...மனைவின் மஞ்ச தாலி விஞ்சி விஞ்சி அழ ஆரம்பித்தது
"அம்மா இனிமேல் சத்தியமா குடிக்கமாட்டேன்" ...அடியே நம்ம குழந்தை மீது சத்தியம் இனி நான் குடிக்க மாட்டேன் "
அம்மாவிடமும் மனைவியிடமும் சத்தியம் செய்தான் ....அப்போது மகள் பள்ளியில் படிக்கும் அவள் தோழி
ஓடிவந்து "பாட்டி ,ஆண்டி உங்களை டீச்சர் பள்ளிக்கூடத்திற்கு வரச்சொன்னாங்க வாங்க" என்று மூச்சி வாங்கி சொன்னாள் .என்னமோ ஏதோ ஓடுகிறார்கள் அன்புக்கரசு, அவன் அம்மா,அவன் மனைவி பள்ளிக் கூடம் நோக்கி
"ஒன்னுமில்லங்க அவள் பெரியமனிஷியாகிட்டா கூட்டீட்டு போங்க " கிளாஸ் டீச்சர் சொன்னாங்க
சந்தோஷமாய் வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள்
அன்புக்கரசு மூன்றுநாள் நல்லாத்தான் இருந்தான் கைகள் ஆட ஆரம்பித்தது மனம் போதையை நாடியது
குடிகார நண்பர்கள் "என்னடா மச்சான் நல்ல விஷயம் உன் வீட்ல நடந்திருக்கு என்ன ட்ரீட் கொடு "குழப்பிய மனசில் போதையை விதைத்தனர் திரும்ப குடிக்க ஆரம்பித்தான் இதை பொறுக்கமூடியாத அவனின் அம்மா சரியாக சாப்பிடவிலை இதனால் நாளுக்கு நாள் உடம்பு சோர்வாகி மரணம் கொள்கிறாள் அவன் அம்மா ....
பாவம் அவன் மனைவி கடையும் பார்த்து வீட்டு வேலையும் பார்த்து முடியாமல் தன் மகளை 12 ம் வகுப்போடு நிறுத்திவிட்டால் மகன் மட்டும் பள்ளி படிப்பை அரசு பள்ளியில் படிக்கிறான் .பள்ளி விட்டு வரும்போதல்லாம் தன் புத்தக பையோடு ,போதையில் ரோட்டில் கிடக்கும் தன் அப்பாவை சுமந்துவருவான்.ஊரில் எல்லோரும் அவனை பார்த்து எப்படி இருந்த குடும்பம் இப்படி குடியால் கெட்டுபோய்விட்டது சொல்லுவார்கள் ....
தன் மாமியாரும் போய் சேர்ந்து விட்டால் புருஷனும் இப்படி ஆகிவிட்டான் கடையில் சரக்கும்மில்லை சரி இருக்கிற நகையை வைத்து தன் பொண்ணுக்கு கல்யாணத்தை முடித்து விட வேண்டியதுதான் என எண்ணி பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடுகிறாள் .....குடிகாரன் வீட்ல சம்மந்தமா வேண்டவே வேண்டாம் என்று யாரும் வரமாட்டுகிறார்கள்
இதனால் இருக்கிற பணம் காலியாகிறது இதனால் அவன் மகனின் படிப்பபை நிறுத்தி பண்ணைக்கு வேலைக்கு போகிறான் ...வறுமையிலும் வட்டிக்கு வாங்கியாவது குடிக்கிறான் அன்புக்கரசு இப்படி போகும்போது கணவன் மனைவிக்கு இடையே சண்டை பின்பு தன் மனிவியின் மீது சந்தேகம் கொள்கிறான் ....
பண்ணையில் சம்பளம் வாங்கும்போது அந்த பையனை பார்கிறார் பண்ணையார் "ஏண்டா பள்ளிக்கூடம் போகல "என்றார் நடந்த நிகழ்வுகளை சொன்னான் அந்தப்பையன் "சரி உங்க அம்மாவை என்னை வந்து பார்க்க சொல்"
வீட்டிற்கு வந்த உடன் "அம்மா உன்னை பண்ணையார் வரச்சொன்னார் "என்றான் அவன் பண்ணையாரை பார்க்கசெல்கிறாள் அன்புக்கரசுவின் மனைவி செல்கிறாள் கூட அவளின் மகளும் செல்கிறாள் ..பண்ணையார் "இந்த புள்ளைக்குதானே மாப்பிள்ளை பார்க்கிறாய் எலாம் தெரியும் உன் புருஷன் குடிகாரன் சரி விசயத்திற்கு வருகிரேன்
என் தங்கச்சி பேரனுக்கு பெண் பார்க்கிறார்கள் பண காசு எல்லாம் வேண்டாம் நல்ல பொண்ணா இருக்கணும் உன் பொண்ணு நல்லபொண்ணு அதனால அவனுக்கு கொடு "என்றார் பண்ணையார் காலில் விழுந்து வார்த்தை வராமல் அழுதாள்"சிரிப்போடும் சந்தோசமாகவும் வெளியே வருகிறாள் அன்புகரசுவின் மனைவி அப்போது அன்புக்கரசு சரியான போதையில் வருகிறான் "சந்தோகம் கொள்கிறான் .
மறுநாள் பண்ணையாரும் மாப்பிளை வீட்டாரும் அன்பரசு வீட்டில் பெண் பார்த்து கொண்டு இருக்குப்போது பண்ணையாரின் சட்டையில் பட்ட டீ கறையை சுத்தம் செய்யும்போது அன்பரசு போதையில் வந்து "கண்டபடி பேசுகிறான் "இதனால் பண்ணையாருக்கு பெருத்த அவமானமாக போய்விட்டது நல்ல தீட்டி விட்டு போய்விட்டார் .
இதனால் மனம் உடைந்த அன்புகரசின் மனைவி தான் மட்டும் இல்லாமல் தனது பிள்ளைக்கும் விஷம் கொடுத்து தானும் மாண்டுவிட்டால் இப்போது அன்புக்கரசுக்கு கல்லீரல் பாதித்து கேட்பாரற்று அனாதையாக கிடக்குறான்
குடி குடியை கெடுத்தது ......................

குறிப்பு : இது உண்மை கதை