தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

12/30/2010

காதல்...


சித்ரவதைகளை விரும்பக்
கூடியது இந்த காதல்
மட்டும்தான்


பார்க்கும் முன்பு  சில கேள்விகள்
பார்த்த பின்பு  பல கேள்விகள்

உன் அழகு உனக்கு கெபாசிட்
இதனால் நிறைய தடவை
போனது என் டெபாசிட்


கஜினி படையெடுத்தான்
கொள்ளையடித்தான்
நானும் படையெடுத்தேன்
ஆனால் நீ செருப்பு எடுத்தாய்


கத்தியெடுத்தவனுக்கு கத்தியாலே
சாவு தினமும் சாகுறேன்
உன் விழியாலே என் அருமை
விழியாளே


வாலிலே  பட்டாசு  வைத்த
காளை இந்த நிலமையில்
இப்போது என் மூளை


படிக்காமலே உன்னிடம்
நிறைய அரியர்ஸ்
நான் அனுப்பிய கடிதச் சுமை
தாங்காது திணறியது கூரியர்ஸ்


உனக்காக பொய் சொல்வேன்
சாம்பிள் ஒன்று உன் தங்கை
குறைவுதான் உன் அழகில்
கால் பங்கு

12/29/2010

அறிஞர் வாழ்வில் நடந்த அற்புதம் ...

              தேசபக்தி சி.ஆர்.தாஸ் ஒரு தடவை ஒரு வழக்கில் வாதிடுவதிற்காக
வழக்குரைஞர் என்னும் பொறுப்பில் வெளியூர் சென்றிருந்தார். அவர் வாதிட்ட வழக்கு, வெற்றி பெற்றுவிட்டது. வெற்றி பெற்ற கட்சிக்காரர்கள் சி.ஆர்.தாஸுக்குப் பெருந்தொகையை அன்பளிப்பாகக் கொடுத்தார்கள்.
       சி.ஆர்.தாஸ், புகைவண்டியில் முதல் வகுப்பில் பயணம் செய்தவாரு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவர் பயணம் செய்த அதே முதல் வகுப்புப் பெட்டியில் ஓர் அழகான இளம்பெண்ணும் பயணம் செய்து கொண்டிருந்தாள்.
     அந்த இளம்பெண் சி.ஆர்.தாஸிடம் ஏராளமாகப் பணம் இருப்பதை
அறிந்து கொண்டாள். அவள் பணத்தை எப்படியாவது அபகரித்துவிட
வேண்டுமென்று திட்டமிட்டாள். அவள் எழுந்து, சி.ஆர்.தாஸ் அருகில் சென்று
அமர்ந்துகொண்டு, காதல் பேச்சுகள் பேசி நடிக்க  ஆரம்பித்தாள்.
         ”நான் உங்களைக் காதலிக்கிறேன். நாம் இருவரும் திருமணம்
செய்துகொள்வோம்”என்று அந்த இளம்பெண் குழைந்து குழைந்து பேசினாள்.
அது, சி.ஆர்.தாஸுக்கு அருவருப்பாக இருந்தது. அதனால் அவர் ஏதும் பேசாமல்மௌனமாக இருந்தார்.
         தன் எண்ணம்  பலிக்காததால், அவள் மிரட்டலில் இறங்கினாள்.
“என் விருப்பத்திற்கு நீங்கள் இணங்காவிட்டால் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து வண்டியை நிறுத்தி விடுவேன்; பலாத்காரம் செய்ததாகப் போலீசாரிடம் புகார் சொல்லுவேன்” என்று மிரட்டினாள்.
          அந்தப் பெண், கூறியது போல் செய்தால், போலீசாரும் மற்றவர்களும்,ஒரு பெண்
என்பதால், அவள் சொல்வதைத் தான் நம்புவார்கள். அதனால், தன் நிலைமை கேலிக்கிடமாக ஆகிவிடும் என எண்ணினார், சி.ஆர்.தாஸ். அவர் தமக்குள் ஒரு திட்டம் வகுத்துக் கொண்டார்.
            பிறகு அவர், அந்த இளம்பெண்ணை நோக்கி,”அம்மா! நான் ஒரு முழுச்செவிடு.
நீ என்ன சொல்கிறாய் என்பதே விளங்கவில்லை. நீ
சொல்வதை ஒரு தாளில் எழுதிக் காட்டு. நான் படித்து தெரிந்து கொள்கிறேன்”
என்று கூறினார்.
             அந்தப் பெண் அவ்வாறே ஒரு தாளில், அவ்வளவு நேரமாகத் தான்
பேசிய விஷயங்களையெல்லாம் எழுதிக் காண்பித்தாள். அதைப் படித்துப்பார்த்த சி.ஆர்.தாஸ்,”அம்மா! நீ எழுதியுள்ள விஷயங்களைப் படித்துத் தெரிந்து கொண்டேன். ஆனால், உன் பெயரை என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. அதையும் எழுதிக் காட்டினால் தெரிந்துகொள்ள எனக்கு உதவியாக இருக்கும்” என்றார்.
அந்த இளம்பெண் தன் பெயரை அந்தத் தாளின் அடியில் எழுதினாள்.
        அந்தத் தாளைப் பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்ட சி.ஆர்.தாஸ்
சிரித்துக்கொண்டு எழுந்தார்,”அம்மா! அபாய அறிவிப்புச் சங்கிலியை இழுக்கும் சங்கடம் இனி உனக்கு வேண்டாம். அதை நானே பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறிவிட்டு அபாய அறிவிப்புச் சங்கிலியை பிடித்து இழுத்தார். வண்டி நின்றது. தம்மைச் சந்திக்க வந்த இரயில்வே போலீஸ் அதிகாரியிடம், அந்தபெண்ணையும் அவள் எழுதிய கடிதத்தையும் ஒப்படைத்தார். பிறகு, சி.ஆர்.தாஸ் தொடர்ந்து நிம்மதியாக பயணம் செய்தார்.

12/28/2010

சார் போஸ்ட்......

       என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்த போது அவருக்கு சில
 வருடங்களுக்கு   முன்னால் அவரை பாராட்டி தபால் அட்டை வந்ததாக சொன்னார் உடனே எனது மனதின் பிரதிபலிப்பு இதோ ....


கடிதம் எழுதுதல் என்பது நம்மிடையே சுத்தமாக  நின்றுவிட்டது. Communication என்பது மிகவும் துரிதமாக பல்வேறு வடிவங்களில் எளிதாக நமக்கு கிடைத்துவிட்டதால், கடிதங்கள் எழுதுதல் என்பதின் தேவைகள் குறைந்துவிட்டன.
சின்ன வயதில், அம்மா , பெரியம்மா  சொல்ல சொல்ல பல கடிதங்கள் எழுதி இருக்கிறேன். ஆசிரியர்   ஒரு முறை யாருக்கோ ஆங்கிலத்தில் கடிதம் எழுத சொல்லி தயார்  செய்தார்,. யாருக்கு என்ன விஷயம் என்பது மறந்து போயிவிட்டது. என் கையெழுத்து நன்றாக இருக்குமென, எதை எழுதவேண்டும் என்றாலும்.. என்னை அழைத்துவிடுவார்கள்.
இதில் நாங்கள், "இன்லேன்ட் கவர்" அதிகம் பயன்படுத்தியதாக இருக்கும். 
பெரியம்மா ,மாமா  எந்த கடிதம் என்றாலும் ஆரம்பிப்பது - "நலம், நலமறிய அவா. நிற்க. " என்பது தான் இருக்கும். இதை எழுதிவிட்டு, அம்மா  சொல்லு ...சொல்லு ன்னு அவங்க வேலை செய்துக்கிட்டு இருக்கும் போது கேட்டு கேட்டு எழுதுவேன். பொதுவாக அம்மா  லெட்டர் எழுத  சொல்லுவது, என் பெய்யம்மவுக்கு  ,பாட்டிக்கும்  என்று இருக்கும். அம்மாவிற்கு மாதம் ஒன்று என்பது கணக்கு. (சில நேரங்களில் தவறி விடும்)
அம்மா அதை பார்க்கும்  போது,ஒரு வேளை நாங்கள் எழுதிய கடிதத்தில் தவறுகள், வார்த்தை பிரயோகம் சரியாக இல்லாவிடில் கேட்பார்கள், திருத்துவார்கள். என் தம்பி  தான் நிறைய தப்பு செய்வான் .
              எனது பக்கத்து வீடு அப்புச்சி , அவருக்கு கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு கண் தெரியாது. இதற்கு காரணம் அவரின் இடைவிடாது மூக்குப்பொடி போடும் பழக்கம் என்று அம்மா  சொன்னார். அவர்கள் வீட்டில்  அவரின் கண் பார்வை வர எவ்வளவோ முயற்சி செய்து இருக்கிறார், முடியவில்லை.  எங்கள் வீடு அருகே பல வருடங்கள் இருந்தார். அவரும் யாருக்காவது கடிதம் எழுத வேண்டுமானால்.. என்னைத்தான் அழைப்பார்.
பிறகு, +1,+2 படிக்கும் போது, தோழிகளுக்கு கடிதம் எழுதுவேன். அவர்களும் எனக்கு திருப்பி பதில் அனுப்புவார்கள்.
       கடிதம் கதை இத்தோடு முடிந்தது என்றால் இல்லை. எனது நண்பன் ஒருவன் எனக்கு பக்கம் பக்கமாக கடிதம் எழுதுவான். அவர்களின்  கடிதங்களில்
சிறப்பு அம்சம் என்னவென்றால், இடைவெளியில்லாமல் நெருக்குமாக எழுதுவார்கள். கடிதத்தை மடிக்கும் இடத்தை கூட விட மாட்டார்கள்.
கடிதங்கள் என்று சொன்னால், முதலில் நினைவுக்கு வருவது, நேரு மாமா சிறையில் இருந்த போது இந்திராஜிக்கு எழுதிய கடிதங்கள். அடுத்து 5 ஆம் வகுப்பு படிக்கும் போது "Kannan Writes from Kanyakumari" என்ற பாடம் ஆங்கில புத்தகத்தில் இருந்தது. வகுப்பில் கண்ணன்'னு ஒரு பையன் இருந்தான், கன்யாகுமரி'ன்னு ஒரு பெண்ணும் இருந்தாள். இந்த பாடம் வரும் போது எல்லோரும் அவர்கள் இருவரையும் கிண்டல் அடித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. மற்றவர்கள் கிண்டலிலிருந்து தப்பிக்க கண்ணனும், கன்யாவும் பேசுவதையே நிறுத்தி விட்டார்கள். 5 ஆம் வகுப்பிலேயே இப்படி எல்லாம் பிள்ளைகள் கிண்டல் செய்து இருக்கிறார்கள்..ம்ம்ம்ம்.. என்ன உலகமடா இது.?
   அடுத்து கடிதத்தின் மேல் ஒட்டும் ஸ்டாம்ப். :) ஸ்டாம்ப்ஸ் கலெக்ட் செய்வதை பொழுதுப்போக்காக நிறைய குழந்தைகள் ஒரு காலத்தில் செய்து வந்தார்கள். ஸ்டாம்பை எச்சில் தொட்டு ஒட்டக்கூடாது என்று அப்புச்சி  சொல்லி இருந்தார். விளக்கம் கேட்டபோது, பின்னால் தடவியிருப்பது மயில் துத்தம்,அது விஷம் என்ற சொல்லப்பட்டது. அவர் சொன்னபடியே நடந்துக்கொள்வேன், ஸ்டாம்ஸ் 'ஐ தண்ணீர் தொட்டு, ஒட்டுவேன்.
இந்த காலத்து குழந்தைகளுக்கு கடிதம் தேவையில்லை என்றாகிவிட்டது.அடுத்துபோஸ்ட் பாக்ஸ். இக்காலத்தில் சில குழந்தைகள்  இதை பார்த்து இருக்கிறானே ஒழிய பயன்படுத்தியதே இல்லை. போஸ்ட் ஆபிஸ் போகும் வேலையே இல்லாதபடி, தடுக்கிவிழுந்தால் கூரியர் சர்வீஸ்கள் வந்துவிட்டன, அவற்றின் துரிதமான சேவை, நம்மை போஸ்ட் ஆபிஸ் செல்லவைப்பதை தடுத்து விடுகிறது. ஆனாலும் அரசு தபாலுக்கு நாம்   ஸ்பீட் போஸ்ட் ஐ இன்றும் பயன்படுத்தி வருகிறோம்   .
மணி ஆர்டர், இதன் சேவை இப்போதும் தேவைப்படுகிறது தான். ஊர் பக்கம் பலருக்கு பேங்க் அக்கவுண்ட் இருப்பதில்லை. அதற்கு மணி ஆர்டர் தான் ஒரே வழி.
 
தந்தி, ஒரு காலத்தில் தந்தி என்றால், படிப்பதற்கு முன்னமே துக்க செய்தியாகத்தான் இருக்கும் என, வீட்டு பெண்கள் அழ ஆரம்பித்து விடுவார்கள். தந்தி என்றாலே ஒரு பயம் இருக்கத்தான் செய்தது. அதுவும் இப்போது சுத்தமாக இல்லை.
தபால்துறை இனி வரும் காலங்களில் நமக்கு பயன்படாமலேயே போய் விடுமோ என்ற எண்னம் கூட வந்தது. கூரியர் சர்வீஸ் போன்று, அலுவலகங்களுக்கு - டோர் ஸ்டெப் கலெக்ஷன், அக்கம் பக்கம் இருக்கும் கடைகளிலேயே கடிதங்களை பெற்றுக்கொண்டு, டெலிவரி செய்தல் போன்ற சேவைகள் கிடைக்குமானால், தொடர்ந்து தனியார் பக்கம் போகாமல்,பழையபடி மக்கள் இவற்றை பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

12/27/2010

கடைசி ஊர்வலம் ...

 கண்கள் கூச
உறக்கம் தொலைத்தோம்
பொழுது விடிந்தது  


மீண்டும் தொடங்குகிறோம்
எங்கு செல்கிறோம்…?
எதற்காய் செல்கிறோம்…?


விடைகளற்ற வினாக்களோடு
தொடர்கிறது பயணம்
எதிரிகளின் குண்டுகள்
சுவை பார்த்த தேகம்


காட்டு வழி முள்களும்
எம்மைத் தீண்ட வெட்கித்
தலை குனியும்


கால்கள் தொலையும்
வழி தேடி
மனமும் அலையும்
பாலுக்காய் அழும்
குழந்தைகள்
இரத்தம் தாராளம்


பசியோடு அலையும்
காட்டு விலங்குகளும்
இரக்கத்தோடு பாதை விலகும்
தமிழ் குழந்தைகள்
எதிரிகளின் பயிற்சி குறிகள்


பாதையெங்கும்
பழகிய பிணவாடை
கருகிப்போன தமிழுயிர்கள்
உயிர் களைக்கும்
போதெல்லாம்
எஞ்சிய மழலைகளின்
அழுகுரல்
புத்துயிர்ப்பு


மரண ஓலங்கள்
கண்ணீர்ப் பாதைகள்
என்றாலும்
தொடர்ந்து செல்வோம்
நாளைய உதயம்
எமக்கில்லை உயிர்ப்பிரியும்
இறுதி வினாடிகளின் நப்பாசை
கிழக்குச் சூரியன் ...

இது கோவை images வார பத்திரிகைக்காக 20 .12 .2009 அன்று எழுதியது ....

12/26/2010

அன்னை தெரசா


எனது நண்பனுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து  தெரிவிக்கும் போது எனது மனதில் தோன்றிய இவரை பற்றி பதிவு போட நான் செய்த
 புண்ணியம் ....நண்பர்களே
           அன்பும் நேசமும், பாசமும் கருணையும் சேர்ந்து அத்தனைக்கும் ஒட்டு மொத்த இலக்கணமாய் வாழ்ந்தவர் இன்றும் கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர் அன்பின் மறு உருவம் அன்னை தெரசா.
          இரண்டு உலகப் போர்களை சந்தித்து விட்டோம், மூன்றாவது எப்போது வருமோ என்ற அச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தத் தருணத்தில நமக்கு அதிகம் தேவைப்படுவது பணமோ, தொழில்நுட்பமோ, இராணுவ பலமோ, விஞ்ஞானமோ அல்ல. அன்பும் நேசமும், பாசமும் கருணையும்தான். அத்தனைக்கும் ஒட்டு மொத்த இலக்கணமாய் வாழ்ந்தவர் இன்றும் கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர் அன்னை தெரசா.
             1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ந்தேதி யூகோஸ்லாவியாவில் அக்னேஸ் கோன்ச்ஹா போஜக்ஸ்ஹயு (Agnes Gonxha Bojaxhiu) என்ற குழந்தை பிறந்தது. பிற்காலத்தில் அன்பின் முகவரியாக அந்த குழந்தை விளங்கும் என்பது அதன் பெற்றோருக்கு அப்போது தெரியாது. ரோமன் கத்தோலிக்க தேவலாயத்தில் கன்னியாஸ்திரி ஆன பிறகு அவர் சகோதரி தெரசா என்று பெயர் மாற்றிக்கொண்டார். 1929 ஆம் ஆண்டு ஜனவரி 6 ந்தேதி தனது 19 ஆவது வயதில் கல்கத்தாவில் காலடி வைத்தார் அன்னை தெரசா.
               அடுத்த 68 ஆண்டுகள் அந்த அன்னையின் கருணை மழையில் நனையும் பாக்கியத்தைப் பெற்றது இந்திய மண் சுமார் 17 ஆண்டுகள் லொரட்டா கன்னிமார்களின் குழுவில் சேர்ந்து ஆசிரியராக பணியாற்றியபோது கல்கத்தாவின் நெருக்கமான தெருக்களில் வாழ்ந்தோரின் நிலையையும் ஆதரவின்றி மாண்டோரின் நிலைமையும் அன்னை மனத்தை பிழிந்தன 1946 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ந்தேதி ஓய்வுக்காக இந்தியாவின் ஜார்ஜிலிங் நகருக்கு இரயில் பயணம் மேற்கொண்டிருந்தபோதுதான் அவரது வாழ்க்கையையும் பல்லாயிரக்கணக்கான ஆதரவற்றோரின் வாழ்க்கையையும் மாற்றி அமைக்கப் போகும் ஒரு தெய்வீக அழைப்பை அவர் உணர்ந்தார்.
                  நலிந்தோருக்கும் நோயாளிக்கும் உதவ கடவுளிடமிருந்து வந்த அழைப்பாக அதனை ஏற்றுக்கொண்டு லொரட்டா கன்னிமார்களின் குழுவிலிருந்து அவர் விலகினார். கல்கத்தாவில் மிக ஏழ்மையான சேரிகளில் ஒன்றான மோட்டிஜில் சேரிக்கு 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாள் வந்து சேர்ந்தார் அப்போது அவரிடம் இருந்ததெல்லாம் வெறும் 5 ரூபாயும் மன நிறைய அன்புதான் கடுமையான ஏழ்மையில் இருந்த அந்த ஏழைகள் மத்தியில் தமது அறப்பணியைத் தொடங்கிய அன்னை தெரசா 1950ல் Missionaries of Charity என்ற அமைப்பை உருவாக்கினார்.
             1952ல் (Nirmal Hriday) என்ற இல்லத்தை திறந்தார். அந்த இல்லம்தான் பல்லாயிரக்கணக்கானோருக்கு அவர்களின் கடைசி காலத்தில் கருணை இல்லமாக செயல்பட்டது. கல்கத்தாவின் தெருக்களில் இருந்து உயிர் ஊசலாடிய நிலையில் காப்பாற்றப்பட்ட சுமார் 42 ஆயிரம் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் அந்த இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டனர். சக மனிதர்களாலேயே புறக்கணிக்கப்பட்ட அந்த ஆத்மாக்களுக்கு அதீத அமைதியை தந்தது அன்னையின் இல்லம் சுமார் 19 ஆயிரம் பேர் ஆதரவின்றி மடிந்து போயிருப்பர் ஆனால் அந்த இல்லத்திற்கு கொண்டுவரப்பட்ட அவர்கள் இறுதி நிமிடங்களில் அன்னையின் அரவனைப்பில் அன்பை உணர்ந்து மகிழ்ச்சியுடன் மரணத்தை தழுவினர்.
            ஒருமுறை ஏழைகளுக்கு உதவ அன்னை தெரசா ஒரு செல்வந்தரிடம் கையேந்தி நின்றபோது அந்த செல்வந்தர் அன்னையின் கையில் காரி உமிழ்ந்தார் அப்போது அன்னை என்ன சொன்னார் தெரியுமா கைக்குள் விழுந்த எச்சிலை கைக்குள்ளேயே மூடிக் கொண்டு இந்த எச்சில் எனக்கு போதும் என் ஏழைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்றார். திக்குமுக்காடிப்போன அந்த செல்வந்தர் அன்னையின் கால்களில் விழுந்து கதறி அழுது வாரி வழங்கினார்.
          1953ல் ஓர் அநாதை இல்லத்தையும், 1957ல் தொழுநோளிக்கான இல்லத்தையும் தொடங்கி தமது பணியை அகலப்படுத்தினார் அன்னை தெரசா. பலர் அருவறுத்து ஒதுங்கும்போது அன்னையும் அவரது சகோதரிகளும் தொழுநோயாளிகளின் ரணங்களுக்கும் உள்காயங்களுக்கும் மருந்திட்டனர். அவர்களுக்கு அன்பு எனும் விருந்திட்டனர். ஆரம்பத்தில் 12 கன்னிமார்களுடன் தொடங்கிய அவரது Missionaries of Charity அமைப்பு தற்பொழுது 500க்கும் மேற்பட்ட நிலையங்களாக விரிவடைந்து 132 நாடுகளில் இயங்கி வருகின்றன. தனது பணிக்கு விளம்பரம் தேடாத அன்னை தெரசாவை நோக்கி விருதுகளும் பட்டங்களும் படையெடுத்தன.
           1979ல் அமைதிக்கான “நோபல் பரிசு” 1980 ல் இந்தியாவின் “பாரத ரத்னா” விருது 1985ல் அமெரிக்க அதிபரின் சுதந்திர பதக்கம். அன்பென்ற மழையில் இந்த அகிலத்தை நனைய வைத்த அந்த உன்னத அன்னையின் உயிர் மூச்சு 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ந்தேதி அவரது 87 ஆவது வயதில் நின்றபோது எதற்கும் கலங்காத கண்களும் கசிந்தன. தாம் வாழ்ந்தபோது அவரிடம் இருந்த சொத்தெல்லாம் 3 வெள்ளைச்சேலைகளும் ஒரு சிலுவையும் ஒரு ஜெப மாலையும்தான். ஆனால் விலைமதிப்பற்ற அன்பை மட்டும் அவர் அமுத சுரபியாக அள்ளி அள்ளி வழங்கினார். அதனால்தான் ஒரு கவிஞர் அவரை


சாக்கடையோரச் சந்ததிக்கும்
சாமரம் வீசிய பூமரம்
என்று வருனித்தார். அன்பிற்கு அன்னை தெரசா என்ற புதிய இலக்கணத்தை இன்று இவ்வுலகம் கற்றுக் கொண்டிருக்கிறது. அன்னை தெரசா போன்றவர்களை எண்ணித்தான் “நல்லார் ஒருவர் உளறேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” என்ற பாடலை அவ்வையார் எழுதியிருக்க வேண்டும்.
              நாம் அன்னை தெரசா போல் வலிக்கும் வரை கொடுக்க வேண்டியதில்லை நமது உயிரை உருக்கி ஏழைகளிடமும் ஆதரவற்றோர்களிடமும் அன்பு செலுத்த வேண்டியதில்லை. நமக்கு வேண்டியவர்களிடமும், அருகிலிருப்பவர்களிடமும் உண்மையான அன்பு செலுத்தினாலே போதும் நமக்கும் அந்த அன்பென்ற வானம் வசப்படும்.

நாம் எல்லோரிடம் அன்பு செலுத்த முயற்சசிபோம் .....

12/25/2010

நம் மதம்

         இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் பிறக்கும் போதே ஒரு அடையாளத்துடன் தான் பிறக்கின்றோம் முதலில் நாம் அறியப்படும் போது நமது அப்பாவின் பெயராலும் அம்மாவின் பெயரால் மட்டுமே இந்த சமுதாயத்தில் நாம் அறியப்படுகிறோம் பின்னர் நாம் வளர வளர நம்மை சாதி என்கிற அடையாளத்தோடு காணப்படுகிறோம் பின்னர் மதத்தின் அடிப்படையில் அறியப்படுகிறோம் இவையெல்லாம் ஒவ்வொரு நேரத்தில் நாம் ஒவ்வொரு விதமாக நம்மை இந்த சமுதாயம் அடையாளப்படுத்துகிறது நான் இப்போது எழுதப்போவது மதம் அதாவது கடவுளை பற்றித்தான்.
           இந்த கடவுளை சுற்றித்தான் எத்தனை விதமான உருவங்கள் எத்தனை பிரிவுகள் , இந்து, கிறிஸ்து, இஸ்லாம், புத்தம் இன்னும் எத்தனை எத்தனையோ கடவுள்கள் அதில் எத்தனையோ கொள்கைகள் நான் ஒரு இந்து ஆனால் இந்த இந்து மதத்தில் தான் எத்தனை கடவுள்கள் எத்தனை விதமான வழிபாட்டு முறைகள் இருக்கின்றன அதுபோல கிறிஸ்து, இஸ்லாம் மதத்தை எடுத்துக்கொண்டாலும் அதில்தான் எத்தனை பிரிவுகள், வழிபாட்டு முறைகள் இருக்கின்றன?
         நாம் எல்லோரும் வழிபடும் முறையும் வழிபடும் உருவமும் வெவ்வேறானதாக இருக்கிறது ஆனால் ஒவ்வொரு மத புத்தகத்திலும் நமக்கு சொல்ல வருவது என்னவோ ஓரே மாதிரியான கருத்துகள் தான் என்ன இந்து மதத்தை பொருத்த வரை பகவத் கீதை எனும் நூல் இருக்கிறது இதில் பகவான் ஸ்ரீகிருஷ்ண்ர் போர்களத்தில் உபதேசிப்பதாய் உள்ளது அதை அடிப்படையாக வைத்துதான் பகவத்கீதை எழுதப்பட்டது என நினைக்கிறேன் இந்த மதமே சிந்து சமவெளி நாகரீகத்தின் வழியாக வந்ததாம் அதாவது பாரசீக மொழியில் 'ச' என்கிற எழுத்து 'ஹ' என அழைத்து அதன் வழியாக ஹிந்து என பெயர் வந்ததாக அறியப்படுகிறது இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஐரோப்பிய அறிஞர்கள், இந்து மதம் கிறிஸ்து மதம் தோன்றும் முன்பாக சுமார் 1500 வருடங்களுக்கு முந்தையதாக இருக்கலாம் என்கிறார்கள் ஆனால் வரலாற்று தகவல்களோ சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக கல்வெட்டு சாட்சி அளிக்கின்றன, பழங்கால மதங்களில் இன்னமும் அழிந்து விடாத மதமாக இருப்பது இந்து மதம் தான் அழியாமல் இருப்பதன் ஒரு காரணம் புதிய கருத்துகளை தினித்தாலும் ஏற்றுக்கொள்ளல்தான் இதன் சிறப்பு இதில் சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது அதாவது இந்து மதத்தை முன்னுக்கு பின்னான முரன்பாடன தகவல்கள் நிறைய இருந்தாலும் அவை யாவும் மக்களை குழப்புவதற்கு பதிலாக இறையுணர்வை தூண்டுவதாக இருப்பதை உணரலாம். இதில் ஒரு சாரார் மாமிசம் சாப்பிடுவதில்லை காரணம் கடவுள் பெயர் சொல்வார்கள் ஆனால் அதே நேரத்தில் பெரும்பாண்மையான் மக்கள் அதே மாமிசத்தை கடவுளுக்கு படைத்து தானும் உண்கின்றனர்.
      அடுத்ததாக கிறிஸ்து மதம் இந்த கிறிஸ்து மதத்தை அப்படி எளிதாக ஒதுக்கி விடமுடியாது காரணம் இந்த உலகை ஒரு காலவரையரைக்குள் கொண்டு வந்ததுதான் அதாவது கிறிஸ்து பிறக்கும் முன்பாக இருந்த காலத்தை கி.மு எனவும் கிறிஸ்து பிறந்த பின் உள்ள காலத்தை கி.பி எனவும் ஒரு வரையறைக்குள் கட்டுபடுத்தியிருக்கிறது இங்கே ஒரு விஷயம் யோசிக்க வேண்டியிருக்கு அப்படியானால் இயேசு பிறப்பதற்கு முன் எப்படி காலத்தை எப்படி கணக்கிட்டார்கள் என்பது பற்றி சரியான தகவல் இல்லையென்று தான் நினைக்கிறேன்.
       அதிலும் இயேசுவின் பிறப்பிற்கு முன்பே பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே தீர்க்கதரிசிகள் அறிவித்ததாக பைபிள் வழி அறியமுடிகிறது அது மட்டுமல்லாமல் வெரும் ஒரு கதையாக இல்லாமல் பல இடங்களில் வரலாற்று ஸ்தளங்களின் பெயர் இருப்பது நம்ப வைப்பதாய் இருக்கிறது. இயேசு பிறப்பார் எனவும் அவர் மக்களின் நோய் நொடிகள் தீர்ப்பார் எனவும் தீர்க்கதரிசிகள் சொன்னது போல நடந்தது என பைபிளில் பல இடங்களில் வாசகங்கள் காணப்படுகிறது மேலும் இவர் பிறந்த நாள் தான் இப்போது கிறிஸ்துமஸ் என கொண்டாடப்படுகிறது ஆனால் இதிலும் சில மாயாஜால விஷயங்கள் காணப்படுகிறது உதாரணத்திற்கு மரித்தவரை எழுப்பினார், கன்னிப்பெண் கருத்தரித்து தீர்ந்து போன உணவுகள் மலை மலையாய் குவிந்தது என இப்படியும் இதில் சில தகவல்கள் இருக்கின்றன ஆனால் இந்த மத்ததிலும் நன்மை செய்வதையும் நல்ல வழியில் நடப்பதையும் தான் அறிவுறுத்துகின்றனர். இங்கு மாமிசத்தை பொருத்தவரை தடையில்லை அதற்கு ஒரு விளக்கவும் காணப்படுகிறது நீ செய்யும் பாவங்களை நானே ஏற்றுக்கொள்கிறேன் என ஒரு வாசகம் இருக்கிறது பின்னர் எதனாலவோ பாவம் செய்தவனுக்கு நரகம் நன்மை செய்தவனுக்கு சொர்க்கம் என விளக்குவது நம்மை சிந்திக்க வைக்கிறது.
          இனி இஸ்லாம் மதம் இந்த மதத்தை பொருத்தவரை நிறைய தவறான கருத்துக்கள் இருக்கிறதென்பதை மறுப்பதிற்கில்லை, மேலும் அல்லாஹ் எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டார் அல்லது இதன் தொடக்க வரலாறு என்னவென்பதை உணர்ந்து கொள்ள கொஞ்சம் சிரமமாக இருக்கிறது காரணம் பார்த்தோமேயானால் அதிக இடங்களில் முகமது நபி என்கிற இறைதூதரை பற்றித்தான் பேசப்படுகிறது அதிலும் முகமது நபி அவர்களின் கருத்துகள் தான் முழுவதுமாய் விதைக்கபட்டிருக்கிறது சில இடத்தில் மூட நம்பிக்கைகளை அழிக்க சொல்லி சாடியிருக்கிறார் அதாவது குர் ஆனிலோ அல்லது ஹதீஸ்களிலோ இது மாதிரியான பழக்கங்களுக்கு ஆதாரம் இல்லை என அறியப்படுகிறது மேலும் இஸ்லாமில் சில நல்ல கருத்துகள் பொதிந்து கிடப்பதை மறுக்கமுடியாது அதாவது ஒரு இடத்தில் பூமியில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் உன்னிடம் அதிகம் இருக்குமேயானால் அதில் ஏழை எளியவர்களுக்கும் பங்கு இருக்கிறது அவற்றை சரியாக முறைப்படி கணக்கிட்டு கொடுக்கவேண்டும்
       மேலும் சில இடங்களில் மூட நம்பிக்கையை வளர்க்கும் விதமாக சில இடங்களில் காணப்படுகிறது அதாவது சமாதி வழிபாடு செய்வதன் மூலம் இறந்து போனவர்கள் நம்மை இறைவனை நெருங்கசெய்ய உதவுவார்கள் என நம்புகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை மேலும் சில இடங்களில் ஏழைகளுக்கு உதவுகிறவனும் பண்பாளனுக்கும் அல்லாஹ் ஆசீர்வதிப்பார் என்பதாக நல்ல விஷயங்களும் இருக்கிறது மேலும் கடவுள் என்பதை விட அடிப்படை நல்ல விஷயங்களை போதிப்பாதாகவே எனக்கு தோன்றுகிறது, சில இடங்களில் வட்டிக்கு கொடுப்பது தவறு எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது சில இடங்களில் வணக்கம் தெரிவித்தால் பதில் வணக்கம் சொல்ல அறிவுறுத்துகிறது ஒரு இடத்தில் ஒரு இடத்தில் என் சமுதாயத்தில் வருங்காலத்தில் என் பள்ளிகள் அதிகமாக இருக்கும் கூட்டம் நிரம்பி வழியும் அதே நேரத்தில் அங்கு நேர்மை இருக்கது என முகமது நபி அவர்கள் கூறுகிறார்கள் இந்த இஸ்லாம் மதம் தொடங்கும் போது வெறும் 40 நபர்களுடன் ஆரம்பித்ததாம் என்னை பொருத்தவரை மத அடிப்படையோடு சில வாழ்வியல் அடிப்படைகளையும் இனணத்தே காணப்படுகிறது.
         அடுத்து புத்த மதம் இதை பற்றி பார்ப்போமேயானால் நேரடியாக இந்து மதத்திலிருந்தே பிரிந்து போனதாக சொல்லப்படுகிறது ஆனால் இது முழுக்க முழுக்க ஒரு மனிதனை கடவுளாக சித்தரித்தது இதிலும் சில நல்ல விஷயங்கள் இருந்தாலும் இதில் மறைமுகமாக தவறான வழியில் அழைத்து சென்றதாகவும் ஒரு தகவல் அதாவது புத்தர் ஒரு ஆணாதிக்கவாதி எனவும் பெண்களை வெறுப்பவர் எனவும் அந்த வெறுப்பில் தான் துறவறம் பூண்டார் எனவும் சில இடங்களில் பெண்களுக்கான உரிமை விஷயத்தில் மறுப்பு தெரிவித்ததாகவும் கூட வரலாறு இருக்கிறது மேலும் தம்மை பின் தொடரகூட பெண்களுக்கு ஒழுக்க விதிகள் ஏற்படுத்தியாதாகவும் காணப்படுகிறது இருப்பினும் சில இடங்களில் சில நல்ல விஷயங்களையும் சொல்கிறது குறிப்பாக அடுத்தவனின் மனைவி மேல இச்சை கொல்லாதே உன் வயதுக்கும் குறைந்த பெண்களை சகோதரியாக பாவிக்கவும் உன் வயதுக்கு மேலை உள்ள பெண்களை தாயாக பாவிக்கவும் போதிக்கபடுகிறது ஒரு வேளை கிறிஸ்து, மற்றும் இஸ்லாம் இந்த இரு மதங்களும் துறவறம் என்பதை இங்கிருந்துதான் எடுத்துக் கொண்டிருக்குமோ என்ற சந்தேகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

ஆக எல்லா மதங்களுமே பார்த்தோமேயானால் முடிந்தவரை கடவுள் எனும் பெயரில் நல்ல விஷயங்களை தான் சொல்லியிருக்கிறது சில விஷயங்கள் தவறாகவும் தினிக்கபட்டிருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் அறிவோம். நாம் ஒவ்வொருவரும் நமக்கு பிடித்தமான மதத்தில் இருக்கிறோம் பிடித்தமான தெய்வங்களை வழிபடுகிறோம் நமக்கு பிடித்தமான உணவுகளை இறைவனுக்கு படைக்கிறோம் இது எல்லாமே ஒரு மூடச்செயல் போல தோன்றினாலும் இதன் பின்னே நல்ல விஷயங்கள் இருப்பதை நாம் உணரமுடியும் சாதரண ஒரு ஏழையால் அவனுக்கு பிடித்த உணவை எப்போதும் உண்ண முடியாது ஆனால் அவனுக்கும் நல்ல உணவு கிடைக்கவேண்டும் என்கிற நோக்கில் தான் தன்னை கொண்டாட சொல்லியிருக்கிறான் அவனுக்கு நல்ல உணவு கிடைக்குமே இப்படி மறைமுகமான சிந்தனைகள் நிறைய காணப்படும் நீங்களும் யோசித்து பாருங்களேன்.
         நம்முடைய ஒவ்வொரு மதத்திலும் நமக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதன் பேரில்தான் வழிபடுகிறோம் ஆனால் கடவுளை நம்பும் அளவிற்கு நாம் உண்மையாக நேர்மையாக நடக்கிறோமா என்றால் நிச்சியமாக இல்லை என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன் ஒரு சின்ன உதாரணம் பார்ப்போம். கடவுள் என்பவன் இருந்தால் நல்லவனாக தானே இருக்கமுடியும், நாம் செய்யும் தவறுகளுக்கு எல்லாம் தண்டனை கொடுத்தால் நாம் வாழ்க்கையில் கஷ்டங்களை மட்டும்தானே பார்த்துகொண்டிருபோம் ஆனால் கடவுள் என்பவன் நாம் செய்யும் பாவங்களை மன்னிப்பதால் தானே நாம் இன்னமும் பூமியில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவித்துகொண்டிருக்கிறோம் ஒருவேளே கடவுள் ஒரு சர்வாதிகாரியைப்போல இருந்தால் நமக்கு சொர்க்கம் என்ற வார்த்தையே தெரியாமல் போயிருக்கும்தானே.

12/24/2010

பொன்மன செம்மல் நினைவு தினம் .....

 இவரின் நினைவு நாளில் நான் இவரை பற்றி புதியதை சொல்ல என்னிடம் ஒன்றும் இல்லை,அவரின் அரிய புகைப்படங்கள்  எனக்கு கிடைத்தவை உங்களுக்கும் .....
12/23/2010

உன்னுடன் வாழ்த்திடுவேன் கண்ணே

எண்ணத்தில் நிறைந்த காதலியும் நீயே
என் மனக்கண்களில் தெரியும் உருவமும் நீயே
என்னுள்ளத்தல் பிரகாசிக்கும் ஞானமும்  நீயே
உன்னை தங்கத்தில் படைத்தானோ இறைவன்
உன் நெஞ்சத்தில் என்னை குடி கொள்ள வைத்தானே
அந்த இறைவன் அருகினில் இருந்து அன்று 
போல வாழ்ந்ததும் இல்லை
நம் காதலை நெஞ்சிருக்கும் வரை
உன்னை மட்டும் புஜித்துக்கொண்டு
உன்னுடன் வாழ்த்திடுவேன் கண்ணே...!

12/22/2010

'மெய்'ஞானம்


          
               மருத்துவ உலகின் புதிய பரிமாணங்களில் ஒன்றாக உறுப்பு தானங்கள் 1965 முதலே உலகில் நடைமுறையில் இருக்கிறது. உறுப்பு தானங்கள் பெற காத்திருக்கும் நோயாளிக்களில் உலக அளவில் 5 விழுக்காட்டினருக்கே அண்மைய காலம் வரையில் உறுப்புகள் கிடைத்து வந்தன. அண்மையில் இந்த விழுக்காடு மிகுந்திருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இதற்குக் காரணம் உறுப்பு தானங்கள் பற்றிய விழிப்புணர்வும் தனிமனிதர்களின் பெருந்தன்மையுமே காரணம். அண்மையில் 'பசங்க' படத்தில் காட்டப்படும் இரு சிறுவர்களின் வீடுகளிலும் ஒருவர் வீட்டில் 'இரத்தானம் செய்துள்ள குடும்பம்' என்ற பலகையும், மற்றொரு வீட்டில் 'உடல் தானம் செய்துள்ள குடும்பம்' என்று பலகையும் இருக்கும், அப்படி ஒரு காட்சியை வைத்த இயக்குனர் பாண்டியராஜை வெகுவாகப் பாராட்டலாம்.
            'உடல் மண்ணுக்கு' என்கிற பழமொழிகள் பழமையாகும். அண்மைய காலங்களில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் விபத்தில் இறந்தவர்களின் உடல் தானம் செய்யும் பெற்றொர்களின் எண்ணிக்கை மிகுந்திருப்பது மனித நேயம் வளர்ந்திருப்பதைக் காட்டுகிறது.
          உறுப்பு தானங்களுக்கு எதிராக சில கருத்துகள் இருக்கின்றன, உதாரணத்திற்கு உறுப்பு தானம் கிடைப்பது எவ்வளவு எளிதன்று ஆகையால் பணக்காரர்கள் அல்லது பணக்கார நாட்டினர் ஏழைகளைக் குறிவைத்து செயல்படுகிறார்கள், உறுப்புகளின் தேவை வாழ்வியல் ஆதாரம் என்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உறுப்புகள் விற்பனை மறைமுகமாக பெரிய தொழிலாகவே நடந்து வந்திருக்கிறது. உறுப்புகளைப் பெற சீனாவை பல நாடுகள் முற்றுகை இட்டதாகவும், மரண தண்டனைப் பெற்ற கைதிகளின் உறுப்புகள் விற்கப்பட்டதாகவும் Organ Donation (Opposing Viewpoints) என்ற ஆங்கில நூலில் படித்தேன். இந்தியாவிலும் ஏழைகளின் சிறுநீரகங்கள் மலிவு விலைக்கு சட்டவிரோதமாகப் பெற்றததைத் தொடர்ந்து, உலக நாடுகள் உறுப்பு தானங்கள் குறித்த சட்டதிட்டங்களையும், நடைமுறைகளையும், கவுன்சிலிங்க் எனப்படும் ஒப்புதல் குறித்த அனுகுமுறைகளும் ஏற்பட்டு, உறுப்பு தானங்களை முறைப்படுத்தி இருக்கிறார்கள்.
              இறந்த உடல்களில் இருந்து பெறப்படும் உறுப்புகள் அழிவதற்குப் பதிலாக மற்றொருவரைக் காப்பாற்றுகிறது என்கிற புரிதல் இருந்தும், இதற்குத் தடையாக இருப்பது ஒன்றே ஒன்று தான். மதம் !!! ஆப்ரகாமிய மத நம்பிக்கையாளர்கள் அவர்களின் உறுப்புகளை அவர்கள் தானம் செய்யத் தடையாக நினைப்பதற்கு காரணம், 'முழுக்க முழுக்க எனது வாழ்க்கைக்காக கடவுளால் கொடுக்கப் பெற்ற உறுப்புக்களை பிறருக்குக் கொடுக்கும் படி கடவுள் வேத நூல்களில் அறிவுறுத்தவில்லை, எனினும் இஸ்லாமியர்களிடையே உறுப்பு தானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதை மீறி என்னால் உறுப்பு தானம் செய்ய முடியாது' என்ற கருத்து நிலவுவதால் மேற்கத்திய நாடுகளில் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வு இருந்தாலும் மதநம்பிக்கையாளர்களிடையே அவற்றிற்கு பரவலான வரவேற்பு இல்லை, இந்த காரணங்களினால் உறுப்புகளுக்கு காத்திருக்கும் நோயாளிகளில் ஆண்டுக்கு 20 விழுக்காட்டினர்வரை இறப்பை தழுவுவதாக அந்நூலில் குறிப்பிட்டு இருந்தது.
               இந்திய சமய நம்பிக்கைகளில் மறுபிறவி பற்றிய நம்பிக்கை இருப்பதால் 'உடல் அழியக் கூடியது, உறுப்புகளை தானம் செய்வதால் தவறு இல்லை என்றும், பல்வேறு தானங்கள் இந்திய சமயங்கள் அனைத்திலுமே வழியுறுத்தப்பட்டு இருப்பதாலும் உடல் வேறு தலைவேறாக உறுப்பு அமைந்திருக்கும் கடவுள் உருவங்கள் இருப்பதாலும்' மன அளவில் உடல் தானம் செய்ய விரும்பும் இந்திய சமய நம்பிக்கையாளர்களை இந்திய சமயங்கள் தடைசெய்ய வில்லை என்றும், ஆனாலும் உறுப்புதானங்கள் பற்றிய விழிப்புணர்வு இந்தியாவிலும் குறைவாகவே இருக்கிறது என்று அந்த நூலில் சொல்லப்பட்டு இருந்தது. மத நம்பிக்கையாளர்கள் பிறமதத்தினருக்கு உறுப்பு தானம் செய்ய முன்வராவிட்டாலும் கூட, தன் மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு பொறுத்த வேண்டும் என்ற வேண்டுகோள்களுடன் தானம் செய்ய முன்வரலாம்.
              உறுப்பு தானங்கள் பற்றிய பல்வேறு மத நம்பிக்கைகளும், வரவேற்பும் பற்றிய தகவல் இங்கே (http://www.donatelifeny.org/)
          சிங்கையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொலைகாட்சியில் பணி புரிந்த காதலர்களில் காதலர் ஒருவருக்கு கல்லீரல் கெட்டுப் போனபோது, காதலி தானம் செய்து காதலரைக் காப்பாற்றினார் என்ற தகவல் பலரால் பேசப்பட்டு பாராட்டப்பட்டது. உறுப்பு தானங்களின் பயன் கருதி சிங்கப்பூர் அரசு, விபத்தில் இறக்கும் ஒருவரின் உடலில் இருக்கும் உறுப்புகள் தானம் செய்ய முன்வரவேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் அதனை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். சிங்கப்பூரில் இருக்கும் பல்வேறு மத அமைப்புகளும் அதற்கு இணங்கவே சிங்கப்பூரில் விபத்தில் மூளை சாவாக இறப்பவர்களின் உறுப்புகள் செயல்படக் கூடியது என்றால் அதை காத்திருக்கும் நோயாளிகளுக்கு பொருத்துகிறார்கள்.
          தமிழகத்தில் சென்ற பல மாதங்களில்  திருச்சியைச் சேர்ந்த ஒரு வாலிபரின் உறுப்பு பெற்றோர்களால் தானம் செய்யப்பட்டது, சேலத்தில் ஒருவாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டிருக்கிறது. விஐபிகளில் நடிகர் கமலஹாசன் ஏற்கனவே உடல் தானம் செய்தவர் என்கிற தகவல் பலருக்கும் தெரிந்திருக்கும்.
          உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது ? என்றே நினைப்போம், இறந்தபிறகும் தானம் செய்ய முடியும், இறந்த பிறகும் கொடையாளி, வள்ளல் என பெயர் அடையமுடியும்.

வாழ்க பாரதம்

12/21/2010

உணர்வுகள் -2

 முதல் பகுதியை படிக்க இதை காதல் சுகமானது கிளிக் செய்யவும்..

         காதலை பற்றி தொடர் எழுத சிந்திக்க  தொடங்கியதும் புதிதாய் காதலிப்பவர்களை போல எனக்குள்ளும் பட்டாம்பூச்சிகள் பறக்கத்

தொடங்கி விட்டது என்றால் பார்த்து கொள்ளுங்கள் காதலின் அற்புதத்தை...! காதல் என்பது வயதை, இயல்பை மறக்க செய்யும் !!

         "நாம் எதில் வேண்டாம் என்று தீர்மானமாக இருக்கிறோமோ அதை சோதிக்கவே பல காரியங்கள் இயற்கையாக நடைபெறும்" காதலுக்கும் இது ரொம்பவே பொருந்தும்.
(இந்த தொடரை மேலும் தொடருவதற்கு முன் சில விளக்கங்கள். தொடரின் முதல் பதிவிற்கு வந்த மின்னஞ்சலை பார்க்கிறப்போ காதல் வந்தால் பெத்தவங்களை விட்டுட்டு ஓடி போய்டுவாங்க, 
உண்மையான காதல் என்று ஏதும் இல்லைன்னு சொல்லி இருந்தாங்க....!!?நாட்டில காதலால் நொந்தவங்க தான் பாதி பேர் என்று நினைக்கிறேன்)
நான் இந்த தொடரில் சொல்ல இருப்பது அழகான மென்மையான காதல் உணர்வை பற்றியது மட்டும்தான். மனதை என்றும் இளமையாகவே வைத்திருக்கும் காதலை பற்றி மட்டுமே இங்கே பேசுவோமே....! காதலர்கள் செய்யும் தவறுக்கு காதல் என்ன செய்யும்....?
'காதல் ஒரு போதும் தோற்பதில்லை' 'காதலர்கள் தான் தங்களுக்குள் தோற்று போகிறார்கள் !!' (இது யாரோ சொல்லி கேட்டது)
எனக்குள் எப்போதும் இருக்கும் கர்வம் , கோபம், பிடிவாதம், வைராக்கியம், காதல் என்னை அழைத்த மறுநொடியில் அப்படியே மறைந்து விழுந்து விடும் அதன் காலடியில், எந்த நிபந்தனையும் இன்றி.......!! ஒரு முறை இரு கண்களையும் மூடி மெதுவாய் 'காதல்' என்று சொல்லி பாருங்கள்...... உடம்பில் ஒரு சிலிர்ப்பு மெதுவாய் பரவுவதை உணர முடியும்....
            இதை காமம் என்று எள்ளி நகையாடி வசைபாடுகிறது ஒரு கூட்டம். அந்த கூட்டம் ஒன்று காதலில் தோற்றவர்களாக இருக்க வேண்டும் அல்லது காதல் கிடைக்காமல் ஏங்குபவர்களாக இருக்க வேண்டும். அனைவருமே ஏதோ ஒரு சமயத்தில் காதல் வயப்பட்டு இருந்திருப்பார்கள்....! மனிதர்கள் பிறப்பதற்கு காதல் ஒரு வேளை காரணமாக இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் மனிதனாய் வாழ நிச்சயம் ஒரு காதல் வேண்டும். பலருக்கும் தங்களின் முதல்
காதல் இன்றும் ஸ்பெஷல் பொக்கிஷம் தான். அதை நினைக்கும் போதெல்லாம் மனதில் ஒரு துள்ளல் எழத்தான் செய்யும். பதின்ம வயதில் ஏற்படும் இனக்கவர்ச்சியாக இருந்தாலுமே அதிலும் கொஞ்சமாவது ஒரு காதல் இருக்கத்தானே செய்யும்.....கொட்டும் மழையும் இதம் தான், சுட்டெரிக்கும் வெயிலும் குளுமைதான்.....!
காதலை பார்க்கும் பார்வைகள் வேறு படலாம்...ஆனால் காதல் மட்டும் அதே அழகுடன், அதே துள்ளலுடன், அதே பரவசத்துடன், அதே இனிமையுடன், அதே இளமையுடன் இருக்கிறது. காதல் மனிதர்களிடம் மட்டும் இல்லை செடி கொடிகள் விலங்குகள்,பறவைகள் இனத்திலும் காதல் உண்டு. எல்லோருக்கும் தெரிந்து இருக்கலாம், இருந்த கொஞ்ச நீரையும் தன் துணை அருந்தட்டும் என்று விட்டுக்கொடுத்த 'மான்கள் கதை'யை.....!இறுதிவரை இரண்டுமே ஒன்றுக்காக ஒன்று விட்டு கொடுத்து நீர் அருந்தவில்லை. குளத்தில் இருந்த சிறிய அளவு நீரும் அப்படியே குறையாமல் இருந்தது, அவை ஒன்றின் மேல் ஒன்று வைத்திருந்த காதலால் தான் !!
" நீரில் வாழும் அன்றில் பறவைகள் இணைந்தே நீந்தும், இணைந்தே இரையுண்ணும். ஒருமுறை நீந்தும் போது நீர் பூ ஒன்று நடுவில் குறுக்கிட்டுவிட்டது. பூவின் அகலம் கொஞ்சமே, சுற்றி வர இடைப்பட்ட நேரம் ஒரு நொடியே...ஆனால் அந்த அன்றில்கள் பல ஆண்டுகாலம் பிரிந்து விட்டது போன்று வருந்தினவாம்...! " என்னே அதன் அன்பு ! அதற்குள்ளும் காதலை வைத்து இருக்கும் இயற்கையை வியக்காமல் இருக்க இயலவில்லை...!
கவிதை (படித்ததில்)
காதலன் :அன்பே !
இன்று இரவுக்குள் நான் சாகப் போகிறேன்
எனக்குத் தெரியும்  விடியலில் முதல்
ஒளிக்கீற்றாய் நீ வருவாய் !
காதலி: அன்பே !
இந்த இரவுக்குள் நீ சாகப் போகிறாய்
அந்தியின் முதல் இருளாய்
நான் வருவேன் !
இதுதான் காதலோட அழகான உண்மையான
சுத்தமான அன்பு ! 
காதல் வந்தால் கவிதை எழுதியே ஆக வேண்டும் இது காதலின் கட்டளை .
காதலில் சோகம் என்றால் கவிதைகள் இப்படி எழுதப்படலாம்...!

நேற்று  என் விழிகள் சிரித்தது
உன் இதழோர புன்னகையில்
இன்று விழிகள் நீர் வார்க்கிறது
அது ஏளன சிரிப்போ என்ற
சந்தேகத்தில் !?
நேற்று இன்று ஒரே வித்தியாசம்
நேற்று வாழ்ந்தேன் இன்று மடிந்தேன்
எனது மரணமோ உன் வருகை நாளோ
எது முன்பு வந்து என்னை அழைத்திடுமோ !
சாவின் கடைசி நொடியில் காதலி...
'வேறு யாரும் என் அளவிற்கு
உன்னை காதலிக்க முடியாது'
சாகும் போதும் கூட  எவ்வளவு நம்பிக்கை தன் காதலின் மீது...!
அந்தஸ்து, படிப்பு, வயசு, உடம்பு, அழகு இதெல்லாம் அன்புக்கு ஒரு தடை கிடையாது....!
இந்த கவிதைகள் உங்கள் மனதை தொட்டு இருந்தால் புரிந்து கொள்ளுங்கள், உங்கள் மனதின் ஓரத்திலும் சொல்லபடாத ஒரு காதல், ஒரு நேசம் ஒளிந்திருக்கலாம்.......! சொல்லி விடுங்கள்....
சொல்லி விட்டு மனதை சுத்தப்படுத்தி கொள்ளுங்கள்.....!!

பின் குறிப்பு....
நீண்ட நாள் சொல்லாமல் இருந்து கடைசியில், சொல்லி மனம் சுத்தமான 'ஒரு உண்மை காதல்' ஒன்று இருக்கிறது.....! அதை பற்றி  விரைவில்  சொல்கிறேன்....

12/20/2010

இதுதான் காதல்

காதல் அது ஒரு தான் 
தோன்றி உணர்வு
தானாகவே உருவாகும


காதல் அது
சொல்லாமல் தவிக்கும்
சொல்லிவிட்டால்   சலிக்கும்


காதல் அது கனிவாக பேசி
தனிமையில் ஊமையாகும்


காதல் அது
அன்பானவர்களுக்கு அமுதம்
அழகானவர்களுக்கு ஆபத்து


காதல் அது
விண்ணிலும் பறக்கும்
மண்ணுக்குள்ளும் புதைக்கும்


காதல் அது
பலரிடம் வாழ ஆசைப்படும்
சிலரிடம் மட்டும் வாழும்


என்னிடமும் காதல் வந்திச்சு
அதை இன்றுவரை சொல்லாமல்
சிரித்து பழகுகின்றேன்

12/19/2010

நான் பாமரன் ...

வந்து செல்வோர் ஆயிரம் பேர்...
சரித்திரத்தில்  பாதை  தெரியாமல்
அழிந்து போன மக்களின் நடுவே ...
நான் வாழ்ந்த பாதையை வெளிகாட்ட
 துடிக்கும் சாதாரண பாமரன்  ...


வாழ்க்கையில் எப்படியாவது
ஜெயித்து விட வேண்டுமென்று
தவிக்கும் சாதாரணவன் நான் ....

12/18/2010

லவ் டிக்கெட்

பஸ்சுக்குள் ஏறிய நான் (காதலன்)
 இரண்டு பயணசீட்டு கேட்டேன்
" நீ ஒருத்தன் தானப்பா" என்றார் கண்டக்டர்
"என் காதலி இதயத்தில் இருக்கிறாள்"
அவளுக்கும் என்றேன்
ஆச்சரியமாக பார்த்தான் .............!!!
இரண்டு டீ என்றேன் .....................
இரண்டு சாப்பாடு என்றேன்.............
ஊரில் இருந்து காதலி திரும்பியவுடன்
பெருமையாக சொன்னேன், இதெல்லாம்
பொறுமையாக காதலி சொன்னால்
" நாம் இருவரும் ஒன்று தானே எதற்கு இரண்டு இரண்டு என்று
கேட்டாய் நீ என்னை காதலிக்கவில்லையா" எனறாள்

12/17/2010

காதல் சுகமானது .....

        
      வாழ்க்கையில் காதலை சந்திக்காதவர்கள், அறியாதவர்கள் என்று யாரும் இல்லை. 'என் பார்வையில் காதல்' என்பதை பற்றி எழுத வேண்டும் என்று நீண்டநாளாய் ஒரு எண்ணம். அதற்கு நேரம் சரியாக அமையாததால் தான் கவிதையாக காதலை எழுதிக்  கொண்டிருந்தேன்.....!!?
           மனதிற்கு சுகமான, அதே நேரம் நினைக்கும் போதெல்லாம் மனதில் உற்சாகம் கொப்பளிக்கும் அற்புத உணர்வை வார்த்தைகளில் கொண்டு வர இயலுமா என்ற ஒரு தயக்கம் இருந்ததால் தான் இதுவரை எழுதவில்லை. இனியும் தாமதித்தால் என் மனதில் இருக்கும் காதல் 'கசங்கிவிடுமோ'
என்று தான் எழுத தொடங்கிவிட்டேன். காதல் என்றாலே அபத்தமும் அவஸ்தையும் நிறைந்ததுதான் என்று சொல்வாங்க...அது மாதிரி இந்த தொடரிலும் ஏதும் அபத்தம் இருந்தால் அழகாய் சுட்டிகாட்டுங்கள்....!
          " என் கை விரல்களுக்கு இடையே இருக்கும் இடைவெளி, உன் கை விரல்கள் கொண்டு கோர்க்க வேண்டும் என்பதுதான் " 'காதல்'
இந்த ஒரு வார்த்தையில் தான் இந்த உலகம் இன்னும் அழகாய், இளமையாய் உயிர்ப்புடன் இருக்கிறது. இன்னொரு நிலவாய் காதலியை வருணிக்க முடிகிறது........!வானமாய் மாறி அந்த நிலவை கையில் ஏந்திக்கொள்ள செய்கிறது......! காதல் வந்த பின் தான் நிலா என்ற ஒன்று வானில் இருப்பதே தெரிகிறது.....! பார்க்கும் எல்லாம் புதிதாய் , அழகாய் மாறிவிடுகிறது......
பரீட்சையில் தமிழை சொதப்பியவர்கள் கூட காதல் வந்த பின் இலக்கிய நயத்துடன் கவிதை எழுதுகிறார்கள்....பார்க்கும் அத்தனையிலும் தன் காதலி/காதலன் முகம் தேடுகிறார்கள்......!!
      உடல் ரீதியாக பார்த்தால், காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற இயல்பான ஒரு உணர்வு. அறிவியல் ரீதியாக பார்த்தால் காதல் என்பது சுரப்பிகளின் விளையாட்டு. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் அட்ரினலின் போன்ற சுரப்பிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள். பருவம் வந்த அனைவருமே காதல் வயபடுவார்கள் என்றாலும் சிலர் ரொம்ப பிடிவாதமாக விலகி இருப்பார்கள்....
       சிலர் நினைக்கலாம் புத்திசாலி ஆண்கள் / பெண்கள் காதலில் ஈடுபட மாட்டார்கள் என்று...!? ஆனால் காதல் உணர்வு சம்பந்த பட்டது. பகுத்தறிவு இங்கே வேலை செய்வது இல்லை.
      அதாவது நடப்பதை Cerebral cortex (பகுத்தறிவு மூளை ) வேடிக்கை தான் பார்க்கும். காதல் வயப்படும் ஆணும், பெண்ணும் ஒரு  வேதிப்பொருள்களே .
அவை ஈர்க்கப்படும் போது நிகழும் மாற்றங்களை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அப்போது உருவாகும் PEA (பெனைலிதிலேமைன்) என்கிற மாலிக்யூல்கள் மூளைக்குள் ஏற்படுத்துகிற சிலிர்ப்பையும் , பரவசத்தையும் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது.......இந்த நிலை ஏற்பட்டு விட்டால் புத்திசாலித்தனம் எல்லாம் காற்றில் பறந்து விடும்.
      காதல் என்பது அப்பட்டமான 'சுயநலத்தின் வெளிபாடு' என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். இது உண்மையும் கூட இந்த சுய நலம் தனக்குரியவன் தன்னிடம் மட்டும் தான் பேச வேண்டும் தன்னை  முக்கியமானவராக 
 கருத வேண்டும் என்பதை போன்றது தான். தன் காதலனை தனக்குள் முழுதும் இழுத்து வைத்து கொள்வதை போன்ற அழகான சுயநலம்.....!!

          இந்த காதலில் மூழ்கியவர்களுக்கு வெளி உலகத்தில் நடப்பதே தெரியாது. அடிக்கடி சின்ன சின்ன சண்டைகள், கோபங்கள் எல்லாமே இனிமைதான். ஊடல் மெதுவாய் விலகும் அந்த அற்புத தருணம்.... வார்த்தையில் வடிக்க இயலாது..அனுபவித்து பார்க்கவேண்டும்.....அந்த இனிமையை அனுபவிக்காதவர்கள் பாவம், கொடுத்து வைக்காதவர்கள்.....!?
       காதல் இருந்தால் கண்ணுக்கும் இமைக்கும் நடுவில் கூட வசிக்க முடியும் என்பார்கள் காதலர்கள்.....!!

உணர்வுகள் தொடரும்.....

12/16/2010

புதுமையாக பிறந்த எண்கள்

            நம்மில் பலருக்கும் கணக்கு என்றாலே கசப்புதான், எண்களைக் கண்டாலே சற்று பயம். ஆனால் எண்களை நாம் விட்டு விட முடியாது அவை நமது வாழ்க்கையில் நம்மோடு ஒன்றினைந்து விட்டன. எண்கள் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை வரவு-செலவு பார்க்கவும், எண்ணிச் சொல்லவும் சிலப் பொருட்களைக் குறிப்பிடவும் எண்கள் தேவையாகத்தான் இருக்கின்றன வேறு சிலருக்கோ எண்களோடு விளையாடுவதில் அப்படியொரு இன்பம், எண்கள் அவர்களின் பிரியாத் தோழர்கள்.(சூதாட்டகாரர்கள்)

மொழியிலும் எண்களுக்கென்று தனி இடம் உண்டு ஆங்கிலத்தில் எண்கள் இடம்பெறும் பல சொற்கள் புதுப்புது பொருளைத் தருகின்றன அவை எண்களின் உண்மையான பொருளைக் குறிக்காமல் வேறு சில விசித்திரமான பொருளைத் தருகின்றன. உதாரணமாக Eleventh hour என்றால் மணி பதினொன்று என்று அர்த்தமல்ல. ஒரு காரியத்தைச் செய்து முடிக்க வேண்டிய கடைசி நிமிடம் என்பதையே அது குறிக்கும். அந்த நேரத்தில் தோன்றும், அவசரம், பரபரப்பு, கவலை எல்லாமே . இவை மேலெழுந்தவாரியான பொருளுக்கு அப்பால் ஒரு விரிவான, அழகான, சில சமயங்களில் நறுக்குத் தெறித்தார்ப் போன்ற பொருளைத் தருகின்றன. அத்தகைய சில சொற்களைப் பார்ப்போம்:
 •  First Footer: புத்தாண்டு பிறக்கும்போது வீட்டுக்குள் நுழையும் முதல் நபர்
 • First Lady: ஒரு நாட்டின் முக்கிய அதிபரின் மனைவி
 • First String Player: மிகச் சிறந்த விளையாட்டு வீரர்
 • First Water: மிகவும் உயர்ந்த தரத்திலுள்ள களங்கமற்று ஒளிவிடும் வைரம் அல்லது முத்து
 • Oner: நிபுணர், அற்புத மனிதர் அல்லது அற்புதப் பொருள்
 • One horse Town: சிறிய பழைய கிராமம்
 • One Liner: ஒரு ஜோக், வேடிக்கையான குறிப்பு
 • Look after number one: பிறரைப் பற்றி கவலைப் படாமல் தன்னைப் பற்றி மட்டுமே அக்கறைக் கொள்ளுதல்
 • Second Banana: உதவும் நிலையிலுள்ள ஒருவர்
 • Play Second Fiddle: முக்கியத்தில் இரண்டாம் இடத்தில் இருப்பவர்
 • Second Sight: உள்ளுணர்வு, தீர்க்கத்தரிசனம்
 • Second String: மாற்று ஆள்
 • Second Wind: நீண்ட களைப்புக்குப் பின் ஏற்படும் புத்துணர்ச்சி
 • Two Faced: ஏமாற்றுகிற, பொய்யான
 • Two Way Street: வேறு இருவருடைய உதவியை நாட வேண்டிய நிலை
 • Third Degree: குற்றவாளி அல்லது சாட்சியிடமிருந்து கேள்வி மேல் கேள்வி கேட்டு உண்மையை வரவழைக்க போலீஸ் மேற்கொள்ளும் கடின முறை, சித்திரவதை
 • Third World: ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலுள்ள முன்னேறாத ஏழை நாடுகள்
 • Three ring circus: ஏகப்பட்ட வேலைகளால் ஏற்படும் குழப்பமான நிலை அல்லது இடம்
 • Three Line Whip: சட்டசபை அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்போது எப்படி வாக்களிக்க வேண்டுமென்று எழுத்து மூலம் வழங்கும் உத்தரவு
 • Fourth Dimension: காலம்
 • Fourth Estate: பத்திரிக்கை
 • Four Eyes: கண்ணாடி அணிந்தவர்
 • Four Flusher: பிறரை ஏமாற்றுபவர்
 • Fifth Column: சொந்த நாட்டிலிருந்தபடியே எதிரி நாட்டுக்காக இரகசியமாக செயல்படும் குழு
 • High Five: வெர்றியைக் கொண்டாட, வாழ்த்தைத் தெரிவிக்க தலைக்கு மேல் கைகளை உயர்த்தி அடுத்தவரின் உள்ளங்கையில் தட்டுதல்
 • To Take Five: சில நிமிடங்கள் ஓய்வெடுத்தல்
 • Sixth Sense: ஐம்பொறிகளுக்கு அப்பால் சில விஷயங்களை உணர்ந்து கொள்ளும் திறன், உள்ளுணர்வு
 • In Seventh Heaven: பெரு மகிழ்ச்சியில் இருத்தல்
 • Behind the Eight ball: மிகவும் ஆபத்தான, இக்கட்டான நிலையில் இருத்தல்
 • On Cloud nine: மிகவும் மகிழ்ச்சியோடு இருத்தல்
 • Nine day's Wonder: சில தினங்களுக்கு மட்டுமே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சி
 • Be ten a penny: மிக மலிவானது, சாதரணமானது
 • Ten Strike: பெரிய அதிர்ஷ்டம்
 • Eleventh hour: கடைசி நிமிடம்
 • Go Fifty Fifty: பதிக்குப் பாதி பகிர்ந்து கொள்ளுதல்
 • Last ditch Effort: இறுதி முயற்சி
 • Last straw that breaks the camel's back: பொறுமையின் எல்லை
 • Last Word the: மிக மிகச் சிறந்தது அதி நவீனமானது
 இவற்றில் நான் சிலவற்றை தான் அறிந்தது ,அது போல நீங்கள் அறிந்ததை என்னுடன் கருத்துகளின் மூலம் தெரிவியுங்கள். 
!

12/15/2010

இதுவெல்லாம் ஏன் நண்பா ?

1. கூட்டமா படியில தொங்கிகிட்டு போற பஸ்ஸில/ட்ரெயின்ல கெஞ்சி கூத்தாடி நிக்க இடம் கிடைச்சதும் அடுத்து ஏற வர்றவங்களுக்கு இருந்தும், இடம் கொடுக்காம மறுக்கிறோமே... அது ஏன்?


2. சினிமா தியேட்டர்ல பாக்குற ஃபிரண்ட, 'சினிமாவுக்கு வந்தியா 'ன்னு
   கேக்குறது கேணத்தனம்னு தெரிஞ்சும் கேக்குறோமே... அது ஏன்?

3. அடுத்தவன் தங்கச்சிய லுக்கு விடுற நமக்கு, நம்ம தங்கச்சிய பாக்குறப்போ மட்டும் பத்திகிட்டு எரியுதே... அது ஏன்?

4. இந்த மாதிரி கேள்வி கேட்டு ஒருத்தர் நம்ம கிட்ட கேட்ட , பதிலுக்கு நாமும் பதிவு போடலாம்னு தோணுதே... அது ஏன்?

5. இங்கிலிஷ் படம் பார்க்குறப்போ எல்லோரும் சிரிச்சா, புரியன்னாலும் நாமும் விழுந்து விழுந்து சிரிக்கிறோமே... அது ஏன்?

6. யாராவது சின்னப்பசங்க நாட்டி பண்ணுனா, அவங்களவிட நாம அதிகம் பண்ணினோம்ங்கறத மறந்துட்டு அவங்க மேல சுள்ளுனு கோவம் வருதே... அது ஏன்?

7. பரிட்சை ஒழுங்க எழுதாம சத்தியமா பாஸ் பண்ணமாட்டோம்னு
    தெரிஞ்சும் ரிசல்ட் பாஸான்னு ஆர்வமா பாக்குறோமே... அது ஏன்?


8. மகன் புத்திசாலிதனமாக கேட்கும்போது, என்னமாய் கேள்விக்கேட்குறான் என வியக்குறோமே, நாமும் நம்ம அப்பாவாவை இதே மாதிரி கேட்டதை மறந்துட்டு... அது ஏன்?

9. ஃபிரண்ட்ஸ் கிட்ட பேசும்போது, பணம் கடன் கேக்குற விஷயமா பேசும்போது மட்டும் அங்கும்/இங்கும் சரிவர கேட்பதில்லையே... அது ஏன்?

10. ஏன் லேட் என்ற கேள்விக்கு பதிலாக பெரும்பாலும் லேட்டாயிடுச்சின்னே பதில் சொல்லப்படுதே அது ஏன்?

11. ஊருக்கு போறப்போ 'ஆளு இப்போ கலராயிட்டியே'ன்னு கூசாமல் பொய் சொல்லி அடுத்து காசுக்குத்தான் மேட்டர் போடுறாங்கன்னு தெரிஞ்சும் சந்தோஷிக்கிறோமே...அது ஏன்?
இன்னும் எத்தனை நண்பர்களே .........

12/14/2010

விழித்துக்கொள் தேசமே! (மொழிபெயர்ப்பு கீதாஞ்சலி)

உள்ளமதனில் அச்சமென்னும்
உணர்விலாத தெவ்விடம்
கொள்கைகொண்டு தலைநிமிர்ந்த
கூட்டம்வாழ்வ தெவ்விடம்
கள்வர்போலே சிறையினுள்ளே
கால்விலங்குமின்றியே
வெள்ளம்போலே விரையுஞானம்
வேகங்கொள்வ தெவ்விடம்


சொந்தவீடு ஒன்றுமட்டும்
சொர்க்கமென்று எண்ணிடா
எந்தைதாயை ஈன்றநாட்டில்
இயைந்திருப்ப தெவ்விடம்
நொந்துபோக வைத்திருக்கும்
நோயையொத்த பிரிவினை
வந்திடாது மனிதர்கூடி
வாழ்ந்திருப்ப தெவ்விடம்


வாக்கிலென்றும் மெய்யறங்கள்
வாழ்ந்திருப்ப தெவ்விடம்
ஊக்கமுற்று உண்மைமாந்தர்
உயருகின்ற தெவ்விடம்
தேக்கமற்றுத் தெளியுமுண்மை
தேடுவோர்கள் எவ்விடம்
மாக்களேத்தும் பழமைநீங்கி
மனிதங்காண்ப தெவ்விடம்


விண்ணளாவும் பார்வைகொண்டு
விரியுமுள்ளமொன்று கொண்டு
எண்ணுமோர் இலக்கிலெம்மை
எவ்விடம் இருத்தினாலும்
கண்ணெனுஞ் சுதந்திரத்தைக்
கண்டுயாம் விழித்தெழுந்து
மண்மிசை இருப்பதற்கே
மனமிரங்கி யருளுமையா


Where the mind is without fear and the head is held high;
Where knowledge is free;
Where the world has not been broken up into fragments
by narrow domestic walls;
Where words come out from the depth of truth;
Where tireless striving stretches its arms towards perfection;
Where the clear stream of reason has not lost its way into the
dreary desert sand of dead habit;
Where the mind is led forward by thee into ever-widening
thought and action-Into that heaven of freedom, my Father,
let my country awake.

12/13/2010

நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் ?

நினைத்தது ஒன்று... நடந்தது ஒன்று... நம் வாழ்வில் நடந்த. நடக்கின்ற
பெரும்பாலான அம்சங்கள் - இம்மாதிரி தான் அமைகின்றன. நினைக்கின்ற எதுவும் நடப்பதில்லை அல்லது நடக்கின்ற எதையும் நாம் நினைப்பதில்லை. இது விதி 
மட்டுமல்ல. வாழ்க்கையும் கூட. இந்த முரணே வாழ்க்கையாக உள்ளது. இந்த முரண்களுக்குள்ளேயே தான், நாம் வாழ வேண்டிய அவசியமும் உள்ளது.


சரி... எதற்கு இப்படி நிகழ்கிறது. இந்த முரணை களைய முடியுமா. நாம் எதை
வேண்டுமானாலும் நினைக்கலாம். நிச்சயம்- ஒரு விஷயத்தை நினைப்பதற்கு-


எப்போதும் எந்த தடைகளும் இருப்பதில்லை. ஒன்றை நினைப்பதற்கு யாரால் தடை போட முடியும்- நம்மை தவிர. அதை சாத்தியமாக்க முனைகிற போது தான் ஆயிரத்தெட்டு தடைகள் வருகிறது.


ஒன்றை செய்து விட நினைக்கிறோம். அவைகளில் எத்தனை சதவிதம் நடப்பதற்கான சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளன என்பதை சற்றே தொலை நோக்குணர்வோடு சிந்திக்கிறோமா... சிந்தித்தோமேயானால்- நினைப்பது,
நடப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க செய்யும். நாம் அந்த வேலையை
பெரும்பாலும் செய்வதில்லை. நினைப்பதெல்லாம் நடக்க வேண்டும் என்கிற
பிடிவாத குணம் இருந்தால் மட்டும் போதாது.அதை சாத்தியப்படுத்த கூடிய
வல்லமையை பெற்றிருத்தல் வேண்டும்.


நினைப்பது நடப்பதற்கான வாய்ப்புகள் இரண்டு நேரங்களில் ஏற்படுகின்றன. நடக்கக்கூடியவைகளை மாத்திரமே நினைத்தல்... இது மிக மிக சுலபமானது. மற்றது நினைத்ததை சாத்தியமாக்கக் கூடிய மனநிலையை பெற்றிருத்தல்.


"நான்  நினைக்கிற எதுவுமே நடக்க மாட்டேங்குது" என்று சொல்கிறவர்களை நாம் நிறைய பார்க்கிறோம். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில்- தப்பித்தவறி நாமே கூட சொல்லி இருந்தாலும் சொல்லி இருப்போம். சாதாரண சின்ன விஷயத்திலிருந்து மிகப் பெரிய விஷயம் வரை இந்த முரண் இருந்து கொண்டே இருக்கிறது. இதில் ஏற்படும் அனைத்து தவறுகளுக்கும் காரணமானவர்கள் நாமே


"நாளை வேலை அதிகம் இருக்கிறது. காலை விரைவாக எழுந்து
எல்லாவற்றையும் நேரத்துக்கு முடிக்க வேண்டும்" என்ற திட்டத்துடன்
படுக்கிறோம். இது சாதாரணமான மிக சிறிய விஷயம் தான். ஆனால் காலையில் வழக்கம் போல, தாமதமாகவே எழுந்திரிக்கிறோம். "முதல் கோணல் முற்றும் கோணல் " என்பார்களே. அப்படி தான் அன்றைய தினத்தில் நாம் செய்ய நினைத்த எதையும் முழுமையாக செய்ய முடியாமல் முடிவுக்கு வரும்.


கடைசியாக இப்படி சொல்லுவோம். "இருபத்தி நான்கு மணி நேரம் பத்த மாட்டேங்குது." என்று. பார்ப்பவர்கள் நம்மை பற்றி பெருமையாக நினைக்கக் கூடும். "ரொம்ப  பிஸியானவர் " என்று. ஆனால் எதையும் முறைப் படுத்தி செய்யவில்லை என்றால் நமக்கு நாற்பத்திஎட்டு மணி நேரமும் போதாது. "நினைக்கிறது ஒண்ணு... நடக்கிறது ஒண்ணு..." என்று சொல்லி கொண்டிருக்க வேண்டிய நிலை தான் தொடரும்.


மனித வாழ்வில் எல்லாமே சங்கிலி தொடரை போல் - ஒன்றையொன்று கவ்வி கொண்டு, பின்னிக் கொண்டு தான் வரும். இயல்பிலேயே திட்டமிடுதல் என்கிற
குணாதிசயத்தை, ரத்தத்தில் ஊறிய குணமாக அமைய பெற்று விட்டால் - அனேகமாக "நாம் நினைப்பதை எல்லாம் அமைய " பெறுவோம். திட்டமிடுதல், தொலை நோக்கு போன்ற வார்த்தைகளுக்கு எல்லாம் - நாம் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். அவை நம்மை ரசிக்கக்கூடிய வார்த்தைகள்.


சில பேர் எரிச்சலுடன், "அதென்னங்க. எப்ப பார்த்தாலும் தொலை நோக்கு, தொலை நோக்குன்னு தொல்லை பண்ணுறிங்க" என்று கேட்கக்கூடும். நிச்சயம் அவர்களால், அந்த எரிச்சல் அகற்ற பட வேண்டிய ஒன்று. தொலை நோக்கு என்பது மிக மிக அவசியமான வார்த்தை. தோல்வியடைந்த நிறைய பேரின் தோல்விக்கு காரணமாக இருப்பது, தொலை நோக்கற்ற சிந்தனையே. அதன் அவசியத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.


தொலை நோக்கும் அம்சம் நம்மிடம் இருந்து விட்டால், ஒரு நாளும் "நினைத்தது ஒண்ணு... நடந்தது ஒண்ணு..." என்று சொல்ல வேண்டிய அவசியம் வராது. மனிதர்களின் குணாதிசயத்திற்கும், அவர்கள் பெறுகின்ற வெற்றிக்கும் நிறைய தொடர்பிருக்கிறது. பொதுவாக- ஏன் வெற்றியாளர்களின் நூல்களை படிக்க விரும்புகிறார்கள். அந்த நூல்களை படிப்பதன் மூலம் அவர்களின் குணாதிசயங்களை பெற்று விட மாட்டோமா என்பதற்காக தான்.


மனிதர்களின் தோல்விகளுக்கும், அவர்களின் குணாதிசயத்திற்கும் கூட நிறைய, நிறைய தொடர்பிருக்கிறது. தோல்வி அடைந்தவர்களை சற்றே எட்டி நின்று பாருங்கள். அவர்கள் எதனால் எல்லாம் தோற்றார்கள் என்ற காரணம் பிடிபடும். உங்களின் தோல்விகளுக்கும் அந்த காரணங்கள் பொருந்தி வருகிறதா என்று பாருங்கள்.

சாதாரணமாக நம் தோல்வியை ஆராய நமக்கு மனம் வராது. எல்லாமே சரியாக தானே செய்தேன் என்றே மனம் நினைக்கும். சம்பந்தமே இல்லாத மனிதனாக இருந்து பார்த்தால் பலவீனங்களை உணர முடியும். தோல்வியை விரட்ட நினைப்பவர்கள்- தங்கள் குணங்களில் தேவையான மாற்றங்களை நிச்சயம் செய்ய வேண்டும். சரியாக அந்த மாற்றங்களை செய்து விட்டோமேயானால் "நினைப்பது ஒன்று... நடப்பது ஒன்று..." என்று சொல்ல மாட்டோம்.

12/12/2010

ரவீந்திரநாத் தாகூர்
1941-ல் தமது 80-வது வயதில் காலமான ரவீந்திரநாத் தாகூர் தலைசிறந்த மகாகவி மட்டுமல்ல; சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை ஆகியவற்றையும் திறம்படப் படைத்துள்ளார். இவர் உருவாக்கிய ரவீந்திர சங்கீதம் பிரசித்தமானது. தவிர, அவர் கைதேர்ந்த வண்ண ஓவியரும்கூட. கடைசி பதினேழு ஆண்டுகாலத்தில் அவர் தீட்டிய 3,000 நவீன பாணி ஓவியங்களும், வரைந்த கோட்டுச் சித்திரங்களும் கொல்கத்தா விஸ்வபாரதி அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

1861 மே 7-ம் தேதி கொல்கத்தாவில் ஒரு செல்வந்த நிலச்சுவான்தாரின் கடைசி மகனாகப் பிறந்தவர் தாகூர். வீட்டிலேயே அறிவியல், கணிதம், இசை, ஓவியம், வடமொழி, வங்காளி, ஆங்கிலம் ஆகிய பல கலைகளைக் கற்றறிந்தார். எட்டாம் வயதில் கவிதை புனையத்தொடங்கினார். பதினைந்தாம் வயதில் அவர் எழுதிய சிறுகதை, வங்க சிறுகதைத் தொகுப்பு நூலில் வெளியாயிற்று.


வழக்கறிஞர் பட்டம் பெறுவதற்கு இங்கிலாந்து சென்ற அவர் அந்தப் படிப்புப் பிடிக்காமல் இரண்டே ஆண்டில் இந்தியா திரும்பினார். 1883-ல் திருமணம். ஆனால் 1902-ல் மனைவி மரணம். மறுமணம் செய்துகொள்ளவில்லை.


1901-ல் சாந்திநிகேதனில் ஓர் ஆசிரமப் பள்ளியை நிறுவினார். அதுவே பிற்காலத்தில் விஸ்வபாரதி பல்கலைக்கழகமாகப் பரிணமித்தது.


அவர் வங்க மொழியில் இயற்றிய ""கீதாஞ்சலி'' கவிதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1913-ல் வெளியானது. அதற்காக இலக்கிய நோபல் பரிசு அதே ஆண்டில் வழங்கப்பட்டது.

ரவீந்திரநாத் தாகூரும் மகாத்மா காந்தியும் 20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளர்களாகக் கருதப்படுகின்றனர். பல விமர்சகர்கள் அவ்விருவரையும் ஒப்பிட்டுப் பல்வேறு கோணங்களில் எழுதியுள்ளனர்.


1941 ஆகஸ்ட் 7 அன்று தாகூர் காலமானார். காந்திஜியின் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபடவிருந்த ஜவாஹர்லால் நேரு கைது செய்யப்பட்டு அப்போது சிறையில் இருந்தார். தாகூர் மறைவு பற்றித் தமது அன்றைய சிறை டயரியில் நேரு இவ்வாறு எழுதினார்:


"காந்திஜியும் தாகூரும்" ஒருவருக்கொருவர் முழுதும் மாறுபட்டவர்களாக இருப்பினும், நம் நாட்டில் தோன்றிய மகத்தான மனித வரிசையில் அவ்விருவருமே இந்தியாவின் ஆன்மாவைப் பிரதிபலிக்கின்றனர். ஏதோ குறிப்பிட்ட சீரிய பண்பு பொருந்தியவர்கள் என்றில்லாமல் இன்றளவில் உலகிலுள்ள சிறப்புமிக்க மாமனிதர்களின் பொதுத் தோற்றத்தில் காந்தியும் தாகூரும் தலைசிறந்தவர்கள் என்பதே எனது கணிப்பு. அவ்விருவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றது நான் பெற்ற பெரும் பேறு''.
காந்திஜி தார்மிகம் செறிந்த அரசியல்வாதி. ஆனால், தாகூர் அரசியலிலிருந்து விலகியே நின்றார் என்று சொல்வாருண்டு. அது அவ்வளவு சரியல்ல. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தாகூர் நேரடியாகப் பங்குகொண்டதில்லை என்றபோதிலும், 1905-ல் வைஸ்ராய் கர்ஸன் பிரபு வங்கத்தை இரு தனி மாகாணங்களாகப் பிரிவினை செய்ததை எதிர்த்து வங்க மக்கள் திரண்டெழுந்து அவ்வெழுச்சி தேசிய இயக்கமாக உருவெடுத்தபோது அப்போராட்டத்தில் ரவீந்திரநாத் தாகூர் தீவிரமாகக் கலந்துகொண்டார்.
1913-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டதை அடுத்து, பிரிட்டிஷ் உயர் அரசாங்கம் 1915-ல் தாகூருக்கு "ஸர்' பட்டம் அளித்துக் கௌரவித்தது. 1919 ஏப்ரல் 13 அன்று அமிர்தசரஸ் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் கூடியிருந்த அப்பாவி மக்களின் மீது ஆங்கிலேய ராணுவ ஜெனரல் டயர் உத்தரவின் பேரில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நிகழ்ந்து நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

நாட்டைப் பதறச் செய்த அந்தப் படுகொலையைக் கடுமையாகச் சாடிய தாகூர், தமக்கு முன்னர் அளிக்கப்பட்ட "ஸர்' பட்டத்தை உடனடியாகத் துறந்தார். ஆனால் அச்சமயம் ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து மகாத்மா காந்தி எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை; 1915-ல் தமக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட கெய்ஸர் -இ - ஹிந்த் தங்கப் பதக்கத்தையும் துறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டிஷ் அரசாட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை 1920 ஆகஸ்ட் முதல் தேதி காந்திஜி தொடங்கி வைத்தபோதுதான் தமக்கு முன்பு அளிக்கப்பட்டிருந்த கெய்ஸர் - இ - ஹிந்த் பதக்கத்தையும், தென்னாப்பிரிக்காவில் போயர் யுத்தம் மற்றும் ஜூலு புரட்சியின் போது புரிந்த ராணுவ மருத்துவ சேவைகளுக்காகவும் அளிக்கப்பட்ட பதக்கங்களையும் காந்திஜி துறந்தார்.
காந்திஜியின் மீது குருதேவ் தாகூர் தனிப்பட்ட முறையில் பெருமதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். இந்தியாவுக்கு அரசியல் ரீதியாகத் தலைமை தாங்கி மக்களை வழிநடத்திச் செல்ல காந்திஜி ஒருவர் மட்டுமே முற்றிலும் தகுதி வாய்ந்தவர். தம்மால் அது இயலாது என்று தாகூர் நன்கு அறிந்திருந்தார். 1916-ம் ஆண்டிலேயே காந்திஜியை "மகாத்மா' என்று குறிப்பிட்டு, அந்தப் பட்டத்தைப் பிரபலப்படுத்தியவரும் ரவீந்திரநாத் தாகூர்தான்.


இவ்வாறாயினும், இவ்விரு மாமனிதருக்கிடையே ஆழ்ந்த கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. அவற்றைப் பற்றி தாகூர் வெளிப்படையாகவே கண்டனம் எழுப்பினார். சுதந்திரப் போராட்டத்தில் வரம்புகடந்த தேசிய ஆர்வத்துக்கும், குறுகிய தேச பக்திக்கும் முக்கியத்துவம் அளிப்பதை தாகூர் ஏற்கவில்லை.


விஞ்ஞானி சந்திர போஸின் மனைவி அபலா போஸýக்குத் தாகூர் 1908-ம் ஆண்டில் எழுதிய கடிதத்தில், ""குறுகிய தேசிய மனப்பான்மை அல்லது நாட்டுப்பற்று நமது ஆன்மிக உயர்வின் புகலிடமாக இருக்க மாட்டாது. மானிட வர்க்கம் முழுவதுமே நமது அடைக்கலம் ஆகும். வைரத்துக்கான விலையைக் கொடுத்து வெறும் கண்ணாடிக் கற்களை நான் வாங்கத் தயாரில்லை. மானிட வர்க்கத்துக்கு எதிராகக் குறுகிய தேசபக்தி ஜெயகோஷம் போடுவதை நான் ஒருக்காலும் ஏற்க மாட்டேன்'' என்று கூறியுள்ளார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தின்போது தேசியம் என்று கூக்குரலிட்டுப் பாமர மக்களை ஆட்டுமந்தைபோல் தலைவர்கள் இட்டுச் செல்வதையும் கடுமையாகச் சாடினார்.


கைராட்டையின் பெருமையையும் நூல் நூற்பதன் அவசியத்தையும் காந்திஜி திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறி வருவதை தாகூர் கண்டித்தார். ""மாடர்ன் ரிவ்யூ'' (செப்டம்பர் 1928) இதழில் ""சர்க்கா வழிபாடு'' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் தாகூர் இவ்வாறு சாடினார்:

""கைராட்டையை அதன் குறிப்பிட்ட தகுதிக்கு மேல் உயர்த்திப் பிடிப்பதை எனது பகுத்தறிவும் மனசாட்சியும் ஏற்கவில்லை. சர்க்காவுக்கு அளவுக்கு மீறி முக்கியத்துவம் கொடுப்பதால் இந்திய மறுமலர்ச்சிக்குப் புரிய வேண்டிய அதிமுக்கிய பணிகளில் கவனம் செலுத்த இயலாமற் போய்விடும். செக்குமாடுபோல் சர்க்காவை ஒரே மந்த கதியில் சுழற்றிக் கொண்டிருப்பது சாவு போன்ற வெறுமையே ஆகும்; அது புத்தி மழுங்கச் செய்யும் காரியம் என்பதே எனது துணிபு.''


இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்து ""கவியும் சர்க்காவும்'' என்ற தலைப்பில் காந்திஜி தமது ""யங் இந்தியா'' (5-11-1925) வாராந்திரியில் எழுதிய கட்டுரையின் சாராம்ச வாசகம் இதுதான்:


""மகாகவியின் கண்டன விமர்சனம் கவிதா ரூபமாய் மிகைப்படுத்தி வர்ணிப்பது என்ற வகையில் அவரது உரிமையாம். அதனை நான் எதிர்ப்பதற்கில்லை. ஆயினும், ஒரே மாதிரியான கைராட்டையின் சுழற்சி, சாவு போன்ற வெறுமைக்கு ஒப்பானது அல்லவே அல்ல. பார்க்கப் போனால் சூரியனும் கிரகங்களும் ஒரேமாதிரியான இயந்திரகதியில்தான் இயங்குகின்றன. பாதை தவறினால் அதோ கதிதான்...


தினந்தோறும் அரைமணி நேரமேனும் ஓர் யக்ஞமாக அனைவரும் நூல் நூற்க வேண்டும் என்றுதான் கூறி வருகிறேன்; நாள் முழுதும் அல்ல. கிராமப்புறங்களில் மக்கள் வேலையின்றி சோம்பித் திரிவதை அகற்றி, ஏழைகளின் பொருளாதாரத்துக்கு ஓரளவு வருவாய் ஈட்டித்தரும் சாதனமே கைராட்டை. கிராமாந்திரங்களில் சர்க்கா நிலைபெற்றால், பொருளாதாரம், சுற்றுச்சூழல், சுகாதாரம், கால்நடை பராமரிப்பு எல்லாமே மேம்படும்'' என்றெல்லாம் காந்திஜி வாதித்தார்.


இத்தகைய கருத்து மோதல்களுக்கிடையேயும் காந்திஜியும் தாகூரும் ஒருவருக்கொருவர் பெருமதிப்புடன் கடைசிவரை நேசம் பாராட்டி வந்தனர்.


""மனிதாபிமானி காந்தி'' என்ற தலைப்பில் தாகூர் 1938-ல் எழுதிய கட்டுரையில் காந்திஜியைக் கீழ்க்கண்டவாறு புகழ்ந்துள்ளார்.


""காந்திஜி அரசியல்வாதி. சிறந்த நிர்வாகி. மக்களின் பெருந்தலைவர். தார்மிக சீர்திருத்தவாதி என்ற சிறப்புகள் ஒருபுறமிருக்க, இவற்றுக்கெல்லாம் மேலாக இவைசார்ந்த அன்னாரது நடவடிக்கைகள் எதுவுமே மானிட வர்க்கத்தின்பால் அவர் கொண்டுள்ள அன்பையும் அருளிரக்கத்தையும் கட்டுப்படுத்தவில்லை. மாறாக, அப் பேரன்பு அவரது அனைத்துச் செயல்பாடுகளுக்கும் உத்வேகம் அளிக்கிறது.''


ரவீந்திரநாத் தமது பிற்கால வாழ்வை சாந்திநிகேதன் பள்ளியையும் விஸ்வபாரதி அமைப்பையும் மேம்படுத்துவதன் பொருட்டே அர்ப்பணித்தார்.


1941 ஆகஸ்ட் 7 அன்று தாகூர் மறைந்ததையொட்டி மகாத்மா காந்தி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ""ரவீந்திரநாத் தாகூரின் மரணத்தில் நாம் இந்தச் சகாப்தத்தின் மிகச்சிறந்த கவியை மட்டும் இழக்கவில்லை; அபரிமித மனிதாபிமானியையும், ஆர்வமிக்க தேசியவாதியையும் இழந்துவிட்டோம்.


அவரது சக்திமிக்க தனித்தன்மை, தடம் பதிக்காத பொது நடவடிக்கை ஏதுமில்லை. சாந்திநிகேதனத்திலும் ஸ்ரீநிகேதத்திலும் நம் நாடு முழுவதற்கும், ஏன், இவ்வையகம் முழுவதற்கும் ஓர் மரபுரிமைச் செல்வத்தை அளித்துச் செல்கிறார்'', என்று அஞ்சலி செலுத்தினார்.


தாகூர் 1911-ல் புனைந்த ""ஜன கண மன...'' பாடல் இந்தியா சுதந்திரம் பெற்றபின் இந்திய தேசிய கீதமாக ஏற்கப்பட்டது மிகப் பொருத்தமே ஆகும். 1972-ல் கிழக்குப் பாகிஸ்தான் பங்களாதேஷ் என்ற தனிநாடாகப் பிரிந்த பின் தாகூர் முன்பு எழுதிய ""அமர் சோனா பங்களா...'' என்ற பாடல் அந்நாட்டின் தேசிய கீதமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. உலகின் இரு தனித்தனி நாடுகள் ஒரே கவியின் பாடலைத் தங்கள் தேசிய கீதமாக வரித்தது மகாகவி தாகூரின் பெருமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.