தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

5/26/2012

காதல் இறந்து விட்டது

நீயும் நானும் இரு வேறு துருவங்கள்


என்பதனை உணர

நீண்ட நேரம் எடுக்காது

என்பது உனக்கும், உனைச் சார்ந்தவர்களுக்கும் தெரியும்

ஆனாலும் உன்னை விட்டால்

சார்ந்திருப்பதற்கு வேறு வழியில்லை

எனும் தோரணையில் ஒட்டியும் ஒட்டாமலும்

உன்னோடு உறவாடியபடி நான்!


என்னையும் உன்னையும் சூழ்ந்திருந்த

அரவணைப்புக்கள் எல்லாம் நீங்கி

நாங்கள் தனி மரங்களாகி,

முதன் முதலில் சந்திந்த போதே

உன் முகத்தில் கீறல் விழுந்த

கண்ணாடியைப் போல

உடைந்து தெறித்தன ஓராயிரம் வினாக்கள்?


நீ வேறு நிறம், நான் வேறு நிறம்

நீ வேறு மொழி, நான் பேசும் மொழி வேறு

எனும் ஆதியில் தொடங்கி

அடக்கி வைக்க முடியாத திமிர் கொண்ட

உன் முன்னழகின் பார்வைகளைப் போல

என் பின் பக்கம் இருந்து

இனவாதம் பேசினாய்,

இலையான் ஒன்று இரைகிறது என்றெண்ணி

உன்னை தட்டி விட்டேன்

ஆனாலும் நீயோ விடுவதாயில்லை


என்னைப் பின் தொடர்ந்தாய்,

உன் காலடிக்குக் கீழ்

நான் அடிமையாக இருக்க வேண்டும்

என்பதற்காய் தகாத வார்த்தைகள்

கொண்டு உரசிப் பார்த்தாய்

பொறுமையின் எல்லை வரை

நிற்பது ஆண்மைக்கு அழகல்ல

எனும் வகையில் அகிம்சையில் இறங்கினேன்- ஆனால்

நீயோ என் மௌனத்தை கலைக்க

மந்த புத்தி கொண்டு பாத்திரங்களை

ஆயுதமாக்கி அக்கினி(ப்) பார்வையோடு வீசினாய்,


இனி உன்னோடு ஒரு வார்த்தை உரைப்பினும்

உணர்வின்றிப் போகும் எனும் எண்ணத்தில்

நானும் உன் வழியில் இறங்கினேன் - நீயோ

உன்னை விடத் தாழ்ந்த சாதி நான்

உனை ஆயுதம் கொண்டு ஆதிக்கம் செய்து

அடக்கிட நினைப்பதாக உறவினர்களுக்கு தகவல் அனுப்பினாய்,


கெஞ்சினேன், சிரித்தாய்;

காலில் விழாக் குறையாய் பிரிவு கேட்டேன்

என்னை விடச் சிறியவன் உனக்கேன் பிரிவு என

கேலி செய்து உதறி விட்டாய்

மீண்டும் இரங்கினேன்; படி இறங்குவாய் என;

நீயோ வாழ விரும்பின் அடிமையாய் இரு

வாழ்க்கை முழுதும் சேவகம் புரி

என வாசகம் உரைத்தாய்


நீண்ட நாள் பொறுமை கடந்தவனாய்

உன் வழியில் பதில் சொல்லி,

மௌனமாய் நீதிமன்றேகினேன் தீர்வொன்றிற்காக,

நீயோ, நீதி மன்றினூடாக பொறிக் கிடங்கில் வீழ்த்தினாய்

இனியும் சேர்ந்து வாழ்தல் முறையில்லை என்றுணர்ந்து

விவாகரத்து கேட்டேன்

நீதிபதி சொன்னார்

’கொஞ்சக் காலம் எட்ட இருங்கோ,

இப்போதைக்கு இதற்கு சமஷ்டியே தீர்வாகட்டும்’ என்றார்


எந்தன் புத்தியோ இங்கே சறுக்கியது,

சமஷ்டி என்பது சதி என்றெண்ணி

முழுமையாய் பிரிவே

முதலில் வேண்டுமென்றேன்;


அடிப் பாவி

தனி மரமாய் நின்ற என்னை

உன் உறவுகள் துணையோடு

படு குழியில் வீழ்த்த நினைத்தாய்

உன் சதியை உனர்ந்தவனாய்

நிரந்தரப் பிரிவேதும் வேண்டாம்

’இடைக்காலப் பிரிவினை

தா எனக் கேட்டென்

நீதிமன்றம் உரைத்தது,

உன் முடிவில் மாற்றம் இல்லையாம்

இப்போதைக்கு எதுவுமே இல்லை;


நீண்ட மௌனத்தின் பின்

ஆற்றங்கரையிற்கு அருகாக வைத்து

ஒரு மாலை வேளை உனைச் சீ(தீ)ண்டத் தொடங்கினேன்,

மீண்டும் நீ என்னை எதிர்க்கும்

எண்ணத்தோடு உருக் கொள்ளத் தொடங்கினாய்,

இது தான் தருணம் என எண்ணி

எனை வீழ்த்த வந்தாய்

உன் உறவுகள் எல்லோரும் உன் பக்கம் நிற்க

நானோ தனிமரமாய் நின்றேன்

ஆனாலும் முடிந்த வரை

உன்னோடு மல்லுக் கட்டினேன்

இறுதியில் நீ வேறு வழியின்றி

சூழ்ச்சி செய்தாய்

என் தலைமேல் நஞ்சு தூவிப் பார்த்தாய்

அது பலிக்கவில்லை

மெதுவாய் யோசித்தாய்

பதிலொன்று கிடைத்த நோக்கில் பட்டினி போட்டாய்,


அடியே பாதகத்தி,

அடுத்த வீட்டு அன்ரியின் துணையோடு

நீ என் அடுப்பில் நஞ்சைத் தூவினாய்

அது பற்றி எரிந்தது,

அணைக்க உதவி கேட்டேன்

அடியோடு உன்னை அழிப்பதே

தருணம் என வேரொடு கிள்ளினாய்,

நீ சூழ்ச்சிக்காரி என்றுணர்ந்தும் இன்றும்

உன்னோடு ஒட்டியும் ஒட்டாமலும் நான்.

என் காதல் இறந்து விட்டது

அது பல நாள் உன்னிடம்

பணிந்து கேட்டும்;

பதிலேதும் இன்றி சேற்றில் புதைந்து விட்டது!

5/22/2012

தமிழ்ச்சித்தர்கள் வகுத்த 64 தமிழர் கலைகள். 65வது கலை சாகாக்கலை எனும் மரணமிலாப் பெருவாழ்வு.5/17/2012

நான்……

யாரும் புரிந்து கொள்ளவியலா?


ஜடமாகவே இருந்துவிடுகிறேன்

நான்……காலம்

என் கைகளில்

திணித்துப்போன…

நிறமற்ற கனவுகள்…

எனக்குள்ளே மூழ்கிவிடட்டும்…தேவதைகள்

யாருமற்ற எனது நிலத்தில்

சருகுற்று…

பேய்கள் வசிக்கட்டும்….எப்போதேனும்…

கொலுசுகளோடு

வரும்

யாரோ ஒருத்தி

கண்டெடுக்கக் கூடும்…

சருகுகளினடியில்….

சிக்குண்டு போன…

யாரும்படிக்காத…

எனது புத்தகத்தின்…

இறுதிப் பக்கங்களை…..

மரணம்

நமது தொலைபேசி

உரையாடலை

கேட்டுக்கொண்டிருக்கின்றன

நமக்குச் சொந்தமற்ற செவிகள்.

பீறிட்டுக்கிளம்பும் சொற்கள்

பதுங்கிக் கொண்டபின்

உலர்ந்து போன வார்த்தைகளில்

நிகழ்கிறது.

நீ உயிரோடிருப்பதை அறிவிக்கும்

உன் ஒப்புதல் வாக்குமூலம்.

வெறுமனே

எதிர்முனை இரையும்

என் கேள்விகளின் போது

நீ

எச்சிலை விழுங்குகிறாயா?

எதைப்பற்றியும் சொல்லவியலாச்

சொற்களைச் சபித்தபடி

ஒன்றுக்கும் யோசிக்காதே என்கிறாய்..

உன்னிடம்திணிக்கப்பட்ட

துப்பாக்கிகளை நீ

எந்தப்பக்கமாகப் பிடிப்பாய்

வாய் வரை வந்த

கேள்வியை விழுங்கிக்கொண்டு

மௌனிக்கிறேன்.


ஒருதுளிக்கண்ணீர் புறங்கையில்


உதிர்கிறது..

தொலைபேசிகளை நிறைக்கிறது

ஒரு நிம்மதிப்பெருமூச்சு..

நீ நிம்மதியாப் போ..


நமது தொலைபேசி


உரையாடலை

கேட்டுக்கொண்டிருக்கின்றன


நமக்குச் சொந்தமற்ற செவிகள்.


பீறிட்டுக்கிளம்பும் சொற்கள்


பதுங்கிக் கொண்டபின்

உலர்ந்து போன வார்த்தைகளில்

நிகழ்கிறது.

நீ உயிரோடிருப்பதை அறிவிக்கும்

உன் ஒப்புதல் வாக்குமூலம்.


வெறுமனே

எதிர்முனை இரையும்

என் கேள்விகளின் போது

நீ

எச்சிலை விழுங்குகிறாயா?

எதைப்பற்றியும்

சொல்லவி l லாச்சொற்களைச் சபித்தபடிஒன்றுக்கும் யோசிக்காதேஎன்கிறாய்..உன்னிடம்திணிக்கப்பட்டதுப்பாக்கிகளை நீஎந்தப்பக்கமாகப் பிடிப்பாய்வாய் வரை வந்தகேள்வியை விழுங்கிக்கொண்டுமௌனிக்கிறேன்.தணிக்கையாளர்களாலும்ஒலிப்பதிவாளர்களாலும்கண்டுகொள்ளமுடியாதஒருதுளிக்கண்ணீர் புறங்கையில்உதிர்கிறது..தொலைபேசிகளைநிறைக்கிறதுஒரு நிம்மதிப்பெருமூச்சு..நீ நிம்மதியாப் போ..

5/10/2012

உறவில் உச்சம்… சில உண்மையும்!!உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது.


இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான்

அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை.


பாலுணர்வுத் தூண்டலின் போது நமது உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய அறிவு இருந்தால் தான் செக்ஸ் பற்றிய மாயைகள் விலகி அதை முழுமையாக அனுபவிக்க முடியும்.

கிளர்ச்சி அடைவது என்பது செக்ஸ் அடிப்படையில் அலசிப் பார்த்தால் அது பால் உறுப்புக்களையும், நரம்பு மண்டலத்தையும் பொறுத்த ஓர் எதிர் அலை. மூளை தான் இந்தக் கிளர்ச்சி அத்தனைக்கும் மூல காரணமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆர்கஸம் எனப்படும் கிளர்ச்சி நிலைப்பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. உறவில் சரியான உச்சக்கட்டத்தை அடைய முடியாத பெண்கள் தங்களின் துணையைப் பற்றி தவறாக எண்ணக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது.

இது உண்மையில்லை. பெண்களுக்கு உச்சகட்ட இன்பத்தை அடைய வைக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன. உறவினால் மட்டுமல்ல காதலான பேச்சுக்களினாலும் கூட பெண்ணிற்கு கிளர்ச்சியூட்ட முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

கிளர்ச்சி நிலையினால் மட்டுமே பெண்களால் முழுமையான இன்பத்தை அனுபவிக்க முடியும். கிளர்ச்சி அடைதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடுகிறது என்பது நம்பிக்கை. ஆனால் அது உண்மையில்லை. உறவைப் பொருத்தவரை இருவருக்குமே திருப்தி என்பது வேறுபடுகிறது. பெண்ணிற்கு எளிதில் திருப்தி கிடைப்பதில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன சமிக்ஞைகளும் தண்டுவடத்தின் மூலமும், நரம்பு நுனிகள் மூலமும் உடலெங்கும் பரவுகின்றன. மூளையில் இருந்து இப்படி ஒரு செயல் நடந்து கொண்டிருக்க, தோல், மற்றும் செக்ஸ் உறுப்புகள், மார்பகங்களிலிருந்து கிளம்பும் சமிக்ஞைகளும் மூளையைச் சென்றடைகின்றன.

ஆனால் உடல் உணர்ச்சிகளே தேவையின்றி சில சமயம் பாலுணர்வுக் கிளர்ச்சி என்பது தனியே மூளை மட்டும் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம். அதிலும் சில சமயங்களில் பாலுணர்வை தூண்டும் உறுப்புக்களிலிருந்து தோன்றும் இனம் புரியாத உணர்வலைகள் மிக ஆழமாக உருவாகி அதனால் மூளை என்ன உணர்ந்தது என்றே உணர முடியாமலும் போகலாம். இந்த நிலை தான் தன்னை மறந்த நிலை எனப்படுகிறது.

5/03/2012

என்னையே…! எனக்குக்…

பூமிக்கு சுழற்சியை…


கொடுத்தவள் நீதானே…!


பகலுக்கு ஒளியை…

அளித்தவள் நீதானே…!இரவிற்கு நிலவை…

இரந்தவள் நீதானே….!

நதியையும் கடலையும்….

இணைத்தவள் நீதானே…!காதலுக்குள் மோதலை…

சேர்த்தவள் நீதானே…!


காதலில் காமத்தை…

கருக்கியவள் நீதானே…!


நேர்மையை பொறுமையாய்…

எனக்குள்…!

புகுத்தியவள் நீதானே…!!


ஓய்வையும் உழைப்பாய்…

என்னுள்…!

மாற்றியவள் நீதானே…!!


என்னையே…! எனக்குக்…

காட்டியவள்…!! நீதானே…!!!