தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

7/28/2012

அழு...வாய்விட்டு அழு...

அழு...


வாய்விட்டு அழு...

கதறிக்கதறி அழு...

உன்

கண்ணீரோடு காதலும்

கரைந்து போகும்வரை

அழு...

பின்பு

உலகத்தைப் பார்...

காதலையும் மீறி

எத்தனையோ அழகுகள்...

காதல்தோல்வியும் தாண்டி

எவ்வளவோ பிரச்சனைகள்...

அழகுகளை ரசிக்கக்

கற்றுக்கொள்...

பிரச்சனைகளை தீர்க்க

பழகிக்கொள்...

வாழ்வதற்கே வாழ்க்கையென்பதை

புரிந்துகொள்...!

பெற்றவள் இறந்தாலே

கண்ணீர்தான் சிந்துகிறாய்...

காதல் இறந்ததற்கா

உயிரைச் சிந்தத்துணிகிறாய்?

காதல் புனிதமானதுதான்...

புனிதமான எதுவும்

உயிரை விலையாய் கேட்பதில்லை.

விலங்குகளை பலிகொடுத்து

கடவுளின் புனிதத்தை கெடுக்கிறோம்...

நம்மையே பலிகொடுத்து

காதலின் புனிதத்தை கெடுக்கிறோம்.

நண்பா...

காதல் தோல்வியா?

காதலியை வெறுத்திருந்தால்

தேடிச்சென்ற காதலை மறந்து

தேடிவரும் காதலை அணைத்துக்கொள்...

காதலையே வெறுத்திருந்தால்

களவைப் போல காதலையும்

கற்று மறந்ததாய் நினைத்துக்கொள்...

வாழ்க்கையென்பது வாழ்வதற்கே

என்பதைப் புரிந்துகொள்...!

7/24/2012

எனது கனவு இதுவே

சமீபத்தில் எனது விட்டருகே உள்ள பூங்காவில்  அரசு தேர்வு சம்பந்தமாக படித்துகொண்டு இருந்தேன்.அப்போது  என் அருகில் மதிக்கத்தக்க பெரிய்வர்  வந்தவர் அவர் 'தியாகி'

நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்பேன் அதற்கான பதிலை  சொல்லு பார்ப்போம்  என்றார் அதை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு 


இது நமது நாடு என ஏழை எளியோர்களை உணர வைக்க,


இந்திய மக்களில் உயர்ந்த ஜாதி மற்றும் தாழ்ந்த ஜாதி என்று எவருமில்லை.

இந்தியாவில் அனைத்து சமுதாயத்தினரும் மத நல்லிணக்கத்துடன் வாழ்வதற்குக் கடுமையாக பாடுபடுபவர்களைக் கொண்ட ஒரு இந்தியாவை உருவாக்குவதற்காக நான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

தீண்டாமை கொடுமை அல்லது மது மற்றும் போதைப் பொருட்களை உட்கொள்ளும் தீமைகள் இல்லாத ஒரு இந்தியா.

ஆண்களைப் போல பெண்களும் சம உரிமைகளை அனுபவித்தல்..

உலகின் பிற அனைத்துப் பகுதியிலும் அமைதி நிலவ நாம் பாடுபடுவது.

இந்தியாவைப் பற்றிய எனது கனவு இதுவே ஆகும்.

கனவு கண்டவர் யார் ?




நமது தேச தந்தை " மகாத்மா காந்தி" 





7/20/2012

அலுவலக மன உளைச்சல்




'போட்டி' என்பது எப்போதுமே ஓர் அருமையான விஷயம். அது விளையாட்டு, தொழில் அல்லது அலுவலகப் போட்டி என எந்தப் பிரிவைச் சேர்ந்ததாக இருந்தாலும், ஒரு வகையில் ஆரோக்கியமான அம்சம் தான்.



நமக்கு சில அருமையான போட்டியாளர்கள் இருக்க வேண்டும். அதுவே எப்போதும் நம் அடுத்த அடியை எடுத்து வைக்க செய்யும்.

ஆனால், இப்படி போட்டியாக இருப்பது, ஒரு நூலிடை அளவு பிசகினாலும், பொறாமையாக மாறி ஒட்டு மொத்த நோக்கத்தையும் திசை திருப்பி விடுகிறது.

பல சமயங்களில் இது விபரீதமான முடிவுகளையே கொடுத்து, நல்ல நட்பு முதல் உறவு வரை ஒரு நிரந்தர விரிசலை ஏற்படுத்தி விடுகிறது.


ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த (ஆய்வுக்குட்பட்ட) பணியாளர்களில் 47 பேர், 1992 ஆம் ஆண்டிலிருந்து 2003 வரையிலான காலகட்டத்தில் மாரடைப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்; அவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

இந்த பாதக நிலைக்கு அடிப்படையான காரணம், பணியிடங்களில் மேலதிகாரிகள் அல்லது உடன் பணியாற்றுவோரால் 'ஏளனமாகக் கருதப்படுவது' அல்லது 'தரக்குறைவாக நடத்தப்படுவது' தான். இதன் காரணமாக இவர்கள் மனதில் அளவுக்கு மிஞ்சிய கோபம் ஏற்பட்டு, அதில் இருந்து மீளும் வழி தெரியாததால், அது மாரடைப்புக்கு வழிவகுத்துவிட்டது.

பணியிடங்களில் வரும் மறைமுக இம்சைகளால் அதிக கோபம் கொள்வோருக்கு மாரடைப்பு வரும் அபாயம் இருக்கிறது.

ஆகவே, பணியிடங்களில் வரும் பிரச்சனைகளை நேரடியாக சந்திப்பது மிக நல்லது. அதை விடுத்து அந்தப் பிரச்சனைகளை மனதில் வைத்துக் கொண்டே பணியாற்றுவதாலும் மாரடைப்பு வருவதற்கு இரண்டிலிருந்து ஐந்து மடங்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் பணியிடங்களில் பிரச்சனை என்று வரும்போது, யாராயிருந்தாலும் வெளிப்படையாகப் பேசுதல், நேரடியாகப் போராடுதல், குறிப்பிட்ட நபரிடம் சரியான வழியில் அணுகுதல் போன்றவற்றின் மூலம் மாரடைப்பு ஏற்படுவதைக் குறைக்க முடியும் என்று வழிகாட்டுகிறது அந்த ஆய்வு.

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் அரசியலில், நம்மில் பலரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கும் "அலுவலக அரசியலுக்கு" முக்கிய இடம் உண்டு என்பது தெளிவு.

அன்று படிப்பும் வேலையும் படிப்படியாக அந்தந்த காலகட்டதுக்கு ஏற்ப வரிசையாக வந்ததால் ஒருவரின் அனுபவமும், பிரச்சனைகளை எதிர்கொண்டு சமாளிக்கும் திறமையும் அதற்கேற்றபடி சரியான வயதோடு வளர்ந்து கொண்டு வரும்.


ஆனால், இன்றோ கல்வியும் ஒரு வியாபாரமாகி விட்டது, அதே போல் வேலை முறையும் மாறிவிட்டது. வயதுக்கு மீறிய வருமானம் தரக்கூடிய தொழில் முறைகள், சிறிய வயதில் பெரிய பொறுப்புகள் என மாறிவிட்டதால், அனைவரின் வாழ்கையும் ஓர் அவசர கதியாகிவிட்டது.

இதனால், படிப்படியாக இல்லாமல், எடுத்த எடுப்பில் அகல கால் வைக்க வேண்டிய அளவில், வாழ்க்கை முறையும் பொறுப்புகளும் கூடிக்கொண்டிருக்கிறது.

அதைச் சமாளிக்க முற்பட்டு, மன உளைச்சல் அடைவது, சிறிய விஷயங்களுக்குக் கூட பெரிதாக உணர்ச்சிவசப்படுவது என ஒரு சாதாரண பிரச்சனை வந்தால் கூட, சிந்தனையை அடுத்தடுத்து கொண்டு சென்று மனதளவில் மிக பெரிதாக கலங்கிவிடுகிறார்கள், இன்றைய இளம் தலைமுறைகள்.

மேலும், இந்த அலுவலக அரசியலில், எப்போதும் நடுவராகவும் இருக்க முடியாது; பார்வையாளராகவும் இருக்க முடியாது. இருப்பது இரண்டே வழிகள் தான். 'விளையாடி வெற்றி பெரும்' அணி அல்லது 'தோற்று வேலையை அல்லது வாழ்க்கையை துறக்கும்' அணி.

இதில் இன்னொரு வியக்கத்தக்க அம்சம் என்றால், திறந்த மைதானம் போல் இந்த இரு அணிகளும் திறந்தவை தான்; யாரும் எந்த நேரத்திலும் மாற்று அணியாக மாறக்கூடும். மொத்தத்தில் தனிப்பட்ட ஒருவர் தள்ளப்படும் இடம் என்பது ஒரே ஒரு கதவு மட்டும் உள்ள ஒரு பாதையாகும்.

இப்படி வாழ்கைக்காக போராடுவதாய் நினைத்து, ஆரோக்கியமான வாழ்கையை தொலைத்து விட்டு, 'இளமையில் கொடுமை வறுமை' என்பதை மட்டும் மனதில் வைத்து ஓடி ஓடி உழைத்து, இறுதியில் வறுமை வென்று, 'இளமையில் முதுமை'யைப் பெரும் நிலைக்கு கொண்டுவந்து விட்டு விடுகிறது.

இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு, எவ்வித இடையூறுகளுமின்றி வேலையில் சிறந்து விளங்க முடியாதா?
என என் நண்பர் ஒருவரிடம் மிகவும் காரசாரமாக இதை பற்றி பேசி கொண்டு இருந்ததில்
முடியும்.



அலுவலக மன உளைச்சலைத் தவிர்க்க சில எளிய வழிகள்...



* அலுவலகத்தில் சக பணியாளர்களிடம் முகமூடி இல்லாத உங்கள் உண்மை முகத்தை மட்டும் பயன்படுத்துங்கள்.



* ஒரு போதும் நெருங்க முடியாத புதிராகவோ அல்லது விளங்காத ரகசியமாகவோ இல்லாமல், அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் திறந்த புத்தகமாய் இருங்கள்.



* உங்கள் வேலைத்திறனில் உறுதியாய் இருப்பது போல் தேவையான நேரங்களிலும், இடங்களிலும் வளைந்து கொடுங்கள்.



* பதவி அதிகாரத்தை வைத்து மட்டும் எடை போடாமல், அனைவருக்கும் சமமாக காது கொடுத்து கவனியுங்கள்.



* உங்கள் 'ஈகோ'வை ஒதுக்கி வைத்து விட்டு, மற்றவர்கள் 'ஈகோ'வை தொடுவதையும் தவிர்த்து விடுங்கள்.







* எந்த சூழ்நிலையிலும் 'வதந்திகளை' சொல்வதையும், கேட்பதையும் அறவே தவிருங்கள்.



* உங்கள் வாழ்க்கை மைல் கல் மீது மட்டும் உறுதியான நோக்கத்தையும், தெளிவான கவனத்தையும் செலுத்துங்கள்.



* உங்கள் தவறுகளுக்கு அப்போதே நியாயப்படுத்த நினைக்காமல், பின்பு சரியான நேரத்தில் மன்னிப்பு கேட்கவும் தவறாதீர்கள், தயங்காதீர்கள்.



* ஒர் அலுவலகத்தில் மாநிலம், மாவட்டம், மொழி, இன்னபிற பிரிவுகளைச் சேர்ந்தவர்களை இனம் கண்டு ஒரு வட்டத்தை அமைத்து, அதற்குள் முடங்கிவிடக் கூடாது.



(வட்டத்துக்குள் நாம் தனித்தனி வட்டமாய் இருப்பது ஒரு பலவீனம் என்றால், 'தான் மட்டும்', 'தனக்கு மட்டும்' என அரசியல் கர்வம் வந்துவிடும் போது, அது நமக்கே ஆபத்தாகிவிடும்.



மேலும் இத்தகைய தவறான அணுகுமுறையால், பல வருட நல்ல நட்பு கூட தோற்றுப் போய் விடுவது மறுக்க முடியாத யதார்த்தம்.)



இதில் என் சொந்த அனுபவத்தில் சில வரிகள்.



தெற்கை விட ஆந்திராவுக்கு மேல் காஸ்மீர் வரை "வடக்கு" எவ்வளவோ தேவலம். அவர்களுக்குள் என்னதான் உட்பூசல் இருந்தாலும், பொது என்று வரும் போது "ஹிந்தி பாத் வாலா" என்ற முறையில் ஒரு வட்டம் அமைத்து, அப்படியே குழுவாக நகர்த்தி கொண்டு செல்வார்கள்.



இதை சற்று கவனித்துப் பார்த்தால், அவர்களில் பதவி அதிகாரத்தில் உயர்வு தாழ்வு இருக்கலாமே தவிர, அலுவலக அரசியலில் அடிபட்டு போவோர்கள் யாருமே இருக்க முடியாது.



இப்படி "ஹிந்தி பாத்" இல்லாத தெற்கு என்று வந்து விட்டால், நமக்கு "ஹிந்தி பாத் வாலா" என்றால் ஒத்து வராது "தார் பூசி" விடுவோம்.



அந்த கடுப்பில் அவர்களும், என்னதான் நாம் ஒரே துறை அல்லது ஒரே அணியில் வேலை பார்த்தாலும், நம்மை கணக்கில் சேர்க்க மாட்டார்கள்.







அது போனால் போகட்டும், நாம் தெற்கு என்று வரும்போது, நமக்குள் தனியாக ஒரு "வடக்கு,தெற்கு மேற்கு கிழக்கு" என்று வந்து விடும் (தெலுகு, கன்னடா, மலையாளம் மற்றும் தமிழ்).



இவை அனைத்தும் ஒரே வட்டத்திற்குள் வருவது என்பது எவ்வளவு சாத்தியம் என்று நமக்கு ரொம்ப நன்றாகவே தெரியும்!



(இப்படித்தான் "சிங்கம்" ஸ்ஸ்ஸ்...ஸாரி..ஸாரி..."சிறுத்தை" சிங்கிளா மாட்டி "எருமை" கூட்டத்தில் மிதி படுவது.)



மேல் சொன்னபடி, இப்படி ஒரு வட்டத்திற்குள் நாம் தனித்தனி வட்டமாய் இருப்பது ஒரு பலவீனம் என்றால், "தான் மட்டும்" "தனக்கு மட்டும்" என்று ஒரு அரசியல் கர்வம் வந்துவிடும் போது, நம் மக்களே நம் மக்களை பலிகடா ஆக்கி விடுவதுதான் இதில் மேலும் சிறப்பம்சமாகி விடுகிறது.



இப்படி சாதாரணமாக ஒரு வேலைக்காக நடக்கும் அலுவலக அரசியலில், பல வருட நல்ல நட்பு கூட தோற்று போய் விடுகிறது என்பதுதான் "மறுக்க முடியாத உண்மை" மற்றும் நம் "அசைக்க முடியாத பலவீனம்".



இந்த இடத்தில் நம் மக்களிடம், "டாக்டர் அப்துல் கலாம்" அவர்களே பாராட்டிய "கவிஞர் வைரமுத்துவின்" சில வரிகளை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.



"ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் நான்கு "பந்து"களுடன் தன் வாழ்க்கை பயணத்தை தொடங்குகிறான்.



வலக்கையில் ஒரு பந்து, இடக்கையில் ஒரு பந்து, வலதுகக்கத்தில் ஒரு பந்து, இடதுகக்கத்தில் ஒரு பந்து.



இதில், ஒரு பந்துக்கு பெயர் தொழில், ஒரு பந்துக்கு பெயர் குடும்பம், ஒரு பந்துக்கு பெயர் நட்பு, ஒரு பந்துக்கு பெயர் உடல் ஆரோக்கியம்.



இந்த நான்கு பந்துகளும் கீழே விழுந்து விடாமல் கடைசி வரை கரை சேர்ப்பவனே "கடமை வீரன்".



இதில் கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால்!



தொழில் என்னும் ரப்பர் பந்து கீழே விழுந்தாலும் உடையாது, திரும்ப கைக்கு வந்து விடும்.



ஆனால், "குடும்பம், நட்பு, உடல் நலம்" என்ற மூன்றும் கண்ணாடி பந்துகள், கீழே விழுந்தால் விழுந்ததுதான்! உடைந்து சிதறி விடும்.



மனிதா!... உடைந்து போகாத ரப்பர் பந்து மீது இவ்வளவு கவனம் செலுத்துகிறாயே?



உடைந்தால் மீண்டும் கிடைக்காத மற்ற பந்துகள் மீது ஏன்! கவனம் செலுத்தக் கூடாதா?"

என்பதுதான் அந்த வரிகள்.



இதை நம் மக்கள் அனைவரும் உணர வேண்டும் என்பதுதான் இங்கு என் நோக்கம்.



சரி, நாம் இடுகையை தொடருவோம்!



இவற்றைக் கடைபிடித்தால் மட்டும் அலுவலக அரசியலைத் தவிர்த்துவிட முடியுமா? மன உளைச்சல்களில் இருந்து மீண்டு விட முடியுமா?



இப்படி நீங்கள் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.



இங்கே குறிப்பிட்டவை அனைத்தும் அடிப்படை அணுகுமுறை மட்டுமே. பொதுவாகவே, வேலை செய்யும் எல்லா இடங்களிலும் சர்வ சாதாரணமாக அனைவரும் சந்திக்க கூடியதுதான், இந்த 'அலவலக அரசியல்'. இதில் பலிகடா ஆகமால் தவிர்ப்பதற்கு, மனிதர்களைப் படிக்கப் பழக வேண்டும். அதற்கேற்ற படி, தேவையான இடத்தில் சமரசம் செய்துகொண்டும், உரிய தருணங்களில் விட்டுக் கொடுக்காமலும் பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு காணும் பக்குவத்தை அடைய வேண்டும்.



இத்தகைய அலுவலக அரசியலை சமாளிப்பதால் சிகரத்தை எட்டக் கூடிய பலன் கிடைத்துவிடும் என நினைக்க வேண்டாம்; மாறாக, இவையெல்லாம் வேலையை தக்க வைத்துக்கொள்ள மட்டுமே.



அத்துடன், மன உளைச்சல் பாதிப்புக்கு ஆளாகாமல் தன்னைத் தானே காத்துக் கொள்வதற்கே, இந்த அலுவலக அரசியல் குறித்த புரிதல் நமக்குத் தேவைப்படுகிறது.



இத்தகைய அலுவலக அரசியலை ஆரோக்கியமாய் சந்தித்து சமாளிப்பது எப்படி என்பதில், எனக்கு தெரிந்ததை பின்பு ஒரு சமயம் பகிர்ந்து கொள்கிறேன்.



7/19/2012

கலம்பகம்-என் தமிழ்



தமிழ் இலக்கியத்தில், கலம்பகம் என்பது பலவகைச் செய்யுள்களால் ஆகியதும், பல பொருள்கள் பற்றியதுமான பிரபந்தவகை இலக்கியங்களில் ஒன்றாகும். கலம்பகம் என்பது கலப்பு, அகம் என்னும் இரு சொற்களின் இணைப்பால் உருவானது. பலவகைப் பாடல்கள் ஒருங்கிணைந்து உருவாவதால் இப் பிரபந்தவகைக்கு இப் பெயர் ஏற்பட்டது.

ஒருபோகும், வெண்பாவும், முதல் கலியுறுப்பாக முற்கூறப்பெற்றுப் புயவகுப்பு, மதங்கம், அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்னும் பதினெட்டுப் பொருட் கூற்று உறுப்புக்களும் இயைய, மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம், கலித்தாழிசை, வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை, வெண்துறை என்னும் இவற்றால், இடையே வெண்பா கலித்துறை விரவ அந்தாதித் தொடையால் பாடுவது கலம்பகம்.

கலம்பகத்திலே பாடப்படுபவரின் சமூகத் தகுதிக்கு ஏற்பப் பாடல்களின் எண்ணிக்கை அமையவேண்டும் எனத் தமிழ் யாப்பியல் நூல்கள் கூறுகின்றன. இது அதிகபட்சம் 100 பாடல்களிலிருந்து 50 பாடல்கள் வரை இருக்கலாம். எனினும் 100 க்கு அதிகமாகவும், 50 க்குக் குறைவாகவும் உள்ள பாடல்களைக் கொண்ட கலம்பகங்களும் உள்ளன.

கலம்பக இலக்கியங்கள் சில

•நந்திக் கலம்பகம்

•காசிக் கலம்பகம்

•மதுரைக் கலம்பகம்

•வீரகேரளம்புதூர் நவநீதகிருட்டிணன் கலம்பகம்

•திருக்கண்ணபுரக் கலம்பகம்

•தில்லைக் கலம்பகம்

•மறைசைக் கலம்பகம்

•அருணைக் கலம்பகம்

•கதிர்காமக் கலம்பகம்

•கச்சிக் கலம்பகம்

•வெங்கைக் கலம்பகம்

•புள்ளிருக்கு வேளூர்க் கலம்பகம்

•திருவாமாத்தூர்க் கலம்பகம்
 
குறிப்பு : தமிழை தொடர்ந்து படிப்பவர்களுக்கு கலம்பகத்தின் மொத்த தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

7/17/2012

என்காதல் வலி(மை)யானது





தமிழில் புதிய எழுத்துகளை
கண்டுபிடித்தால் சொல்லுங்கள்
அதில் தேடலாம்

என் காதலின் புனிதத்தை
சொல்லும் வார்த்தைகளை...

அவள் மேல் நான் அப்படி
ஒரு காதல் செய்தேன்.
ஆனால் இப்போது


எல்லாமும் முடிந்து போயிருந்தது
என் இதயம் வெற்றிடமாய் இருக்கிறது.


அதில் நான் வடித்த
கண்ணீர் துளிகள்
ஒரு கடலையே உருவாக்கியது


எந்த அளவுக்கு 'வழியவழிய'
காதலித்தேனோ
அந்த அளவுக்கு
'வலிக்க வலிக்க' ரணங்களையும்
கொடுத்து விட்டு போனாள் அவள் .


எல்லாமும் முடிந்து போயிருந்தது.
இப்போதும் கூட


தினமும் எங்கள் தெருவில்  பார்க்கிறேன்
எதுவும் நடக்காதது போல
செல்கிறாள் அவள்
எதுவும் அறியாதவனாய் செல்கிறேன் நான்

இடுக்கை : அ.ராமநாதன்

7/14/2012

தோல்வி





      தோல்வி என்பது ஓர் அபிப்பிராயம் என்றார் ஓர் அறிஞர். தோல்வி, ஒரு வெற்றியின் தொடக்கம்தான் என்பது ஒரு வகை அபிப்பிராயம். இது ஒரு முடிவின் அடையாளம் என்பது இன்னொரு வகை அபிப்பிராயம். ஏற்பட்ட தோல்வியை, பாடமாக எடுத்துக்கொண்டு புதிதாகத் தொடங்குவதா, அவமானமாக எடுத்துக்கொண்டு ஒதுங்குவதா என்பதில்தான் வளர்ச்சிக்கான வாய்ப்பும் வாய்ப்பின்மையும் இருக்கிறது.


வெற்றி பெறவேண்டும் என்ற விருப்பம் இருக்கும் வரை எந்தத் தோல்வியும் பொருட்படுத்தத் தக்கதல்ல. சிலர் சின்ன தோல்விகளுக்கே எல்லாவற்றையும் இழந்துவிட்டதாய் எண்ணிக் கலங்குவார்கள். மனிதன் உயிருடன் இருக்கும்வரை, எல்லாவற்றையும் இழந்ததாய் சொல்லும் பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் எதிர்காலம் என்ற ஒன்று இருக்கும்வரை, இழப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஒருவர் வெற்றி நோக்கி முழு மூச்சோடு முயன்றார் என்பதற்கான ஆதாரம்தான் தோல்வி. ஒரு மனிதனை உலுக்கும் விதமாகத் தோல்வி வரும்போது எப்படித் தாங்குவது என்ற கேள்வி எழலாம். உலுக்கப்படும்போது, மரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் காய்ந்த இலைகள் விழுகின்றன. கனிந்த பழங்கள் விழுகின்றன. இலைகள், மனிதனின் பலவீனங்களுக்கு அடையாளம்.

தோல்வியில் நமது பலவீனங்களை உதிர்ப்பதும், சோதனைக் காலங்களிலும் பிறருக்குப் பயன்படுவதும் வெற்றியாளர்களின் அம்சங்கள்.

தோல்வியின் காரணத்தை உண்மையாக ஆராயும்போதே வெற்றிக்கு அடித்தளம் அமைக்கத் தொடங்கிவிட்டதாக அர்த்தம். ஒரு விஷயத்தில் தோல்வி ஏன் வருகிறது?

சிந்திக்காமல் ஒன்றைச் செய்வதாலும் தோல்வி வருகிறது. நன்கு சிந்தித்த ஒன்றைச் செய்யாமல் கைவிடுகிறபோது, ஒன்றை நன்கு சிந்திக்கவும் சிந்தித்ததை செயல்படுத்தவும் தேவையான தெளிவு வருகிறது.

ஒரு செயலின் விளைவு எதிர்மறையாக ஆகுமென்றால் அப்போதைக்கு அது தோல்வியின் கணக்கில் இருந்தாலும் அசைக்க முடியாத வெற்றிக்கு அடித்தளமாகவும் அதுவே அமைகிறது.

நெருக்கியடிக்கிற தோல்விகளின் நிர்ப்பந்தங்களால் தங்களையும் அறியாமல் தங்கள் பாதையை சீர்ப்படுத்திக்கொண்டு நிகரற்ற வெற்றியைக் குவித்த பலரையும் வரலாறு பெருமையுடன் பாராட்டி வருகிறது. எதிலாவது தோல்வி ஏற்பட்டாலோ, அல்லது தோல்வி வருமோ என்ற பயம் ஏற்பட்டாலோ பதட்டமில்லாமல் உங்கள் திட்டங்களை மறுபடி கவனமாகக் கண்காணியுங்கள். அதனை ஓர் எச்சரிக்கையாக மட்டும் எடுத்துக்கொண்டு இன்னும் தெளிவாய் இன்னும் துல்லியமாய் உங்கள் இலக்கை நெருங்குங்கள். ஏனெனில் தோல்வி என்பது அறிவிக்கப்பட்ட தீர்ப்பல்ல. ஓர் அபிப்ராயம்தான்.

7/12/2012

வாழ்க்கையை இயக்குவோம்




ஒரு இயக்குனராக..

எதிரியா! எதிரி என்று நமக்கு யாருமே வேண்டாம், யாரையும் பகையாளியாகவே நினைக்க வேண்டாம், யார் மீதும் கோபம் கொள்ள வேண்டாம், யார் என்ன சொன்னாலும் கேட்டு விட்டு அமைதியாக இருப்போம், ஆனால் எப்போதும் நம்மை யாருக்கும் விட்டுகொடுக்க வேண்டாம். அடிக்கடி ஒருவன் நம் வழியில் குறுக்கிடுகிறானென்றால் அவனிடம் பணிந்து போக கூடாது, அவனிடம் சீற வேண்டும், ஆனால் அந்த சீற்றத்தில் விஷமத்தனம் இருக்ககூடாது, அது சுய பாதுகாப்பிற்காக மட்டும் இருக்க வேண்டும்.


இவன் குட்ட குட்ட குனிவான் என்று தெரிந்தால், குட்டிக்கொண்டு தான் இருப்பார்கள். இவன் விழித்துக்கொண்டான் என்ற எண்ணம் அவர்களுக்கு வர வேண்டும். அதற்காக சற்று சீறி பார்ப்பதில் தவறில்லை, மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் சுய பாதுகாப்பிற்காக வெளியில் காட்டும் கோபம் நம்மை எதுவும் செய்து விடாது. நம்மை மட்டம் தட்டுகிறவர்களுக்கு நம்மை பற்றிய மட்டமான எண்ணங்கள் அகல வேண்டும், அதற்காக சிறிது சீறுவோம்.


பணிந்து போகின்ற அருமையான குணத்தை அதற்கு தகுதியுள்ளவர்களிடமே காண்பிக்க வேண்டும். வழியில் குறுக்கிடுகின்ற நரிகளிடமெல்லாம் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை, நாம் சுய மரியாதை உள்ளவர்கள், கடவுளின் மீதும் உண்மையின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் எந்த மனிதனுக்கும் பயப்பட தேவையில்லாதவர்கள். எனவே யாருக்கும் அஞ்சாமல் கயவர்களிடம் கர்ஜித்து நமது மரியாதையை மீட்டெடுத்துக் கொள்வோம்


ஒருவன் நம்மை சீண்டிப் பார்க்கிறான் என்றால், நரிகள் சலசலக்கிறது என்று அவற்றை விட்டுவிடலாம், பதிலுக்கு நாம் அவனை சீண்ட வேண்டாம் ஆனால் அதுவே ஒரு தலைவலியாகி போனால் என்ன செய்வது, இந்த தருணத்தில் நம் எதிர்ப்பை வேறெப்போதும் இல்லாத அளவிற்கு சற்று அதிகமாக காண்பிக்கலாம். நரிகள் இடும் சின்ன சின்ன ஊளை சத்தத்திற்கெல்லாம், காவல் நிலையம், பாதுகாப்பு அமைப்புகள் என்று போவதை விட நாமே சீறி பார்ப்பதுதான் நமக்கு மரியாதை


வன்முறையோ, அடிதடியோ நமக்கு தோழ் கொடுக்காது, அவையெல்லாம் நமக்கு எதிரானவைகளே, நமது வெளிப்பாடுகள் நியாயத்தின் வெளிப்பாடுகளாக இருக்கவேண்டும், அதில் வன்முறையின் சாயல்கள் கலந்திருக்க கூடாது, அவை சுய மரியாதையின், தற்பாதுகாப்பின் சாயல்களாகவே இருக்க வேண்டும். கொசு கடித்தால் அடிக்ககூடாது, எறும்புகளை கூட மிதிக்க கூடாது, தலையில் வளரும் பேன்களையும் கொல்ல கூடாது என்ற நியதியெல்லாம் நம்மிடம் வேண்டாம்.

எனவே எதிர்த்து வருகிறவனை சீறி அடக்கி வைப்போம். துணைக்கு தைரியத்தை பக்கத்தில் வைத்திருப்போம், சினிமா ஹீரோ எதிர்த்து வருகிறவனை பந்தாடுவதை போன்ற வெறித்தனமில்லாமல், வன்முறையற்ற சீற்றத்தை வெளிக்காட்டுவோம், எதிராளி பின்தள்ளப்படுவது நிச்சயம்.

7/10/2012

தோல்வி

காதல் தோல்வி என்பது சாதாரணமான ஒரு சம்பவம்தான் அந்த தோல்வியால் யாரும் எதையும் இழந்துவிட போவதில்லை


இழக்க முடியாத ஒன்றை இழந்து விட்டதை போன்ற உணர்வை ஏற்படுத்தும் ஒரு மன ஜாலம்தான் காதல் தோல்வி காதலுக்கு வேண்டுமானால் ஆயிரம் தோல்விகள் ஏற்படலாம் ஆனால் நம் மனதிற்கு ஏது தோல்வி நமது மனதின் ஒரு சிறு துகள்தான் காதலியால் வந்த உணர்வு அந்ததூசியை தட்டி விட்டு திரும்பவும் நீங்கள் விரும்பிய அதே வாழ்க்கையை புதிய மாற்றங்களோடு சந்திக்க ஒரு புதிய பயணத்தை நோக்கி புறப்படுவோம்

7/07/2012

தன்னம்பிக்கை=வெற்றி

வெற்றி பெற வேண்டுமென்கிற வேட்கை யாருக்குத்தான் இல்லை. வெற்றிதானே மனிதருக்கெல்லாம் மகிழ்ச்சியை அளிக்கிறது. மானுடர்க்கெல்லாம் மகிழ்ச்சிதானே மண்ணுலக வாழ்கையின் தலையாய நோக்கம்.


மகிழ்ச்சியாய் இருக்கிற மனிதர்களையெல்லாம் கேட்டுப்பார்த்தால் தெரியும் அவர்கள் வெற்றி பெற்றவர்களாக இருப்பார்கள். விரும்பியதை அடைந்தவர்கள்தானே வெற்றி பெற்றவர்கள்.

ஆழ்ந்து சிந்தித்தால் வெற்றியும் மகிழ்ச்சியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இவைகள் எப்போதும் இணைந்தே இருப்பவைகள் பிரிக்க முடியாதவைகள்.

சரி, அப்படியென்றால் வெற்றி பெறுவதற்கு என்ன தேவை? கணக்குப்பாடத்தில் கணக்குகளை செய்வதற்கு சூத்திரங்கள் (Formula) இருப்பதுபோல வெற்றியடைவதற்கு ஏதேனும் சூத்திரம் இருக்கிறதா? ஒருவேளை அதை நாம் தெரிந்துகொண்டால் வெற்றிக்கனியை சுவைப்பது சுலபமாகிவிடும் அல்லவா? ஆம்! இதோ வெற்றி சூத்திரம்.


வெற்றி என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையான ஆங்கிலச்சொல் Success. இதை ஆங்கிலத்தில் MNEMONICS (First Letter of a list of points to remember) ஆக எடுத்துக்கொண்டால் பின்வரும் செய்திகளை ஒவ்வொரு எழுத்தும் நமக்கு விரித்துரைக்கும்.

SUCCESS என்கிற வெற்றிச் சொல்லின் விளக்கமாக கீழ்க்காணும் கருத்துக்களை தொகுத்து நம் வாழ்க்கையின் வசத்துக்குக் கொண்டு வந்தால் வெற்றி நிச்சயம். வெற்றி பெறுவதற்கு இன்றியமையாத இந்த குணங்களை பெறாமல் வெற்றி பெறுவது எங்ஙனம் நிகழும்?

S – Self Confidence = தன்னம்பிக்கை

U- Understanding inter personal relationship = மனித உறவுகளை புரிந்து கொள்ளுத் மேம்படுத்திக் கொள்ளுதல்

C- Communiation Skill = சொல்வன்மை செய்திகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் திறன்

C- Creativity = படைப்பாற்றல் கற்பனை வளர்த்தை பயன்படுத்தி புதியன உருவாக்குதல்


E- Energic Attitude = உற்சாகமான மனப்பாங்கு

S-Superb Memory = மிகச்சிறந்த நினைவாற்றல்

S- Self Motivation = தன்னைத்தானே செயலூக்கப்படுத்திக் கொள்ளுதல்

7/04/2012

விவேகானந்தரின் நினைவு தினம்





இன்று சுவாமி விவேகானந்தரின் நினைவு தினம் , அவரின் கருத்துக்களை பதிவு செய்வதற்கே இந்த பதிவு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஜாதிக்கொடுமையும், அரசர் கொடுங்கோன்மையும், அன்னியர் அரசாட்சியும் உங்கள் பலத்தை எல்லாம் போக்கிவிட்டன. உங்கள் முதுகெலும்பு உடைந்து, இப்போது வெறும் புழுக்களைப் போலாகி விட்டீர்கள். அளவற்ற வலிமை தான் நமக்கு இப்போது தேவை.


இத்தகைய வலிமை பெறுவதற்கு, ” நான் சர்வசக்தி வாய்ந்தவன். சர்வ ஞானம் படைத்தவன்” என்ற இந்த அதி அற்புதமான, நம்மைக் காப்பாற்றக்கூடிய வார்த்தைகளை மீண்டும் சொல்லுங்கள், நம்மை பலவீனர்களென்று சொல்லாதீர்கள். நாம் விரும்பும் எதையும் சாதிக்க முடியும்.

சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிறது