தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/27/2012

"நான் ஒரு கைநாட்டு"

உலகிலே அதிக கையெழுத்து
போடுபவர் ஆசிரியர்
அந்த கையெழுத்து
மதிப்பீட்டின் மகுடம்

தேர்ச்சி அட்டையில்
திட்டுகளோடு கையெழுத்தை
போடுவார் அப்பா

காதலர்கள் கடிதத்தில்
பெரும்பாலும் காணப்படும்
இரத்த கையெழுத்து

பிரபலங்கள் விசிறிகளுக்கு
போடுவதோ போலி
கையெழுத்து

ஆட்சியாளர்கள், பெரியோர்கள்
கையில் சிக்கிவிட்டது
பச்சை கையெழுத்து

புத்தக கடையில்
விற்பனையாகும் கவியின்
கையெழுத்து

நிறைய பத்திரத்தில்
பதிந்திருக்கிறது
உண்மைக்கு புறம்பான
கையெழுத்து

யாரும் என்னிடம்
கையெழுத்து கேட்க வேண்டாம்!
"நான் ஒரு கைநாட்டு"

1/26/2012

63 -வது குடியரசு தின வாழ்த்துகள் .....




          நாம் இந்த நாட்டில் பிறக்க வேண்டும் என்று நினைப்பதில்லை, அது விதிக்கப்பட்டது என்று நினைத்து கொண்டாலும் சரி, தற்செயலானது என்று நினைத்து கொண்டாலும் சரி, உண்மை என்னவென்றால் நாம் பிறக்கும் போதே அந்த நாட்டின் கலாச்சாரமும், பண்பாடும் நம்மோடு சேர்ந்து ஊட்டப்படுகிறது, முன்னோர்களின் தியாகம் நம்மிடயே நாட்டு பற்றை வளர்க்கிறது!, வரலாறு மறக்கப்படும் போது நாட்டின் மேல் உள்ள பற்றும், ஆர்வமும் குறைந்து மூன்றாம் நிலம் போன்ற எண்ணம் ஏற்படுகிறது!


இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வியாபார விசயமாக ஜப்பான் செல்ல வேண்டியிருந்தது, ஒரு ரயிலில் அவர் பயணம் செய்து கொண்டிருந்த போது, எதிரில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் தீடிரென்று எழுந்து இருக்கையில் கிழிந்திருந்த கிழிசலை தைக்க ஆரம்பித்தார், இந்தியரோ அவர் இங்கே தான் வேலை செய்கிறார் போலன்னு நினைச்சிட்டார், தைத்து முடிந்த அவர் மீண்டும் இருக்கையில் அமர்ந்து கோப்புகளை எடுத்து பார்க்க ஆரம்பித்தார், இந்தியருக்கோ ஆச்சர்யம், தைத்து கொண்டிருந்தவர் கோப்புகள் பார்த்து கொண்டிருக்கிறாரே என்று!


ஐயா யார் நீங்க? என்று கேட்டார்!, ஏழெட்டு முகவரி அட்டைகள் நிரம்பிய உறை ஒன்றை தருகிறார், அத்தனைக்கும் அவர் தான் நிறுவனரும் கூட, இந்தியருக்கோ ஆச்சர்யம், பின் ஏன் ஐயா நீங்கள் இதை தைத்தீர்கள் என கேட்கிறார், ஜப்பான்காரர் சொல்கிறார், ஐயா இது என் நாடு, இங்குள்ள பொருள்கள் எமது பொருள்கள் மாதிரி தான், அதை பத்திரமாகவும் நன்றாகவும் பார்த்து கொள்ள வேண்டியது ஒவ்வோரு ஜப்பானியனின் க்டமை என்றார், அது உண்மையோ, புனைக்கதையோ அது நமக்கு தேவையில்லை, ஆனால் அம்மாதிரி கதைகள் தான் இரண்டாம் உலகப்போரில் சாம்பலாய் போன ஜப்பானை மீண்டும் உயிர்பெறச் செய்தது!

சமூக அக்கறையில் யாருக்கும் நரம்புகள் புடைக்க வேண்டும், கழுத்தில் நரம்பு தெரிந்து ரத்தம் பீரிட வேண்டும், நம்மையும், நம் சுற்றுசூழலையும் அக்கறையுடன் கவனித்து கொண்டாலே போதும், மனிதர்களுக்கு உரிய அடிப்படை கடமைகளையும், கட்டுப்பாடுகளையும் மதிக்க தவறினால் நாம் மனித உருவில் திரியும் காந்திஜி  ,நேதாஜி , போல தான்!

               அனைவருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துகள் ...

                   வாழ்க பாரதம்!    வாழ்க பாரதம்!! வாழ்க பாரதம்!!! 

மறுபதிவு 

1/24/2012

மௌனம் என்பது வரம்

வார்த்தைகள் இல்லாத புத்தகம் மௌனம். ஆனால், வாசிக்க, வாசிக்க இதற்குள் வாக்கியங்கள். மௌனம் என்பது வெளிச்சம். நம்மை நாமே இதற்குள் தரிசிக்கலாம். மௌனம் என்பது இருட்டு. எல்லாத்துன்பங்களையும் இதற்குள் புதைக்கலாம். மௌனம் என்பது மூடி! இதை தயாரித்து விட்டால் எல்லா உணர்ச்சிகளையும் இதற்குள் பூட்டி வைக்கலாம். மௌனம் என்பது போதி மரம். இதுவரை உலகம் சொல்லாத உண்மைகளை இது போதிக்கும். மனம் என்பது தவம். இதில் ஆழ்ந்தால் அமைதி நிச்சயம்.

“மௌனம் என்பது வரம்” நம்மிடம் நாமே பெறுவது. இன்பம், துன்பம் இரண்டையும் மௌனம் கொண்டு சந்தித்தால் எப்போதும் இதயம் இயல்பாக இருக்கும். இதழ்களை இறுக மூடி நாம் நமக்குள் இறங்குவோம்!”

எங்கோ, எப்பொழுதோ படித்திதயத்தை வருடிய வரிகள், உலகத்திலேயே நமக்குப் பிடித்த குரல் நமது குரல்தான். நமக்குப் பிடித்த பேச்சு நமது பேச்சுதான். அதனால் நாம் பேச ஆரம்பித்தால் மணிக்கக்காகப் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஒரு வரியில் பேச வேண்டியதை ஒன்பது வரிகளில் பேசுகிறோம். நாம் பல சமயம் யாரிடம் பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம எந்த இடத்தில் பேசுகிறோம் எனபதைப் பற்றியே சிந்திப்பதில்லை. நமக்குத் தெரிந்ததை பேச வேண்டும் என்பது, மட்டுமே நமது இலக்கு. புத்திசாலி மற்றவர்களைப் பேசவிட்டு,, மௌனம் சாதித்து, தேவையான பொழுது மட்டும் பேசி பேசுபவர்களின் நட்பைப் பெறுகிறான். பேசுவதால் நம் இருப்பை பிறர்க்கு உணர்த்துகிறோம். நாம் ஒரு நாளில் பேசுகிற பேச்சை ஒலிநாடாவில் பதிவு செய்து அதையே நாம் கேட்டால் சில நேரங்களில் வருத்தப்படுவோம். நமது நாக்கு ஈரமுடையது.

நாவின் அமைப்பைப்போல் நம் சொல்லும் இரக்கத்தில் மலர்ந்த இன்சொல்லாக இருக்க வேண்டும். நிலைபெறும் நீங்கில் என் உயிரும் நீங்கும் – வள்ளலார். எல்லா உறுப்புகளையும் இரண்டாகப் படைத்த இறைவன், நாக்கை மட்டும் ஒன்றாகப் படைத்ததில் காரணம் “வரப்புயர” என்று சுருங்கப் பேசி வாழ்வதற்காகத்தான். இரட்டை நாக்கு உடையவர்களை உலகம் நம்புவதில்லை. பொய் சொல்ல முயன்றால் சுற்றியுள்ள பற்கள் நாக்கைக் கடிக்கும். பொய் பேசியபின் பிறர் அறியாமல் நாக்கைக் கடித்துக்கொள்கிறோமல்லவா? அதிகம் பேசாதவனை உலகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை உலகம் மதிக்கிறது. பேசாத ஞானியை உலகம் தொழுகிறது.

மௌனத்தின் வெளிப்பாடுகள் பல. கல்யாணப் பெண்ணின் மௌனம் சம்மதமாகிறது. கரை கடந்த இன்பத்தில் மனிதன் மௌனிக்கிறான். துன்பத்தின் உச்சியில் மௌனமே பேசுகிறது. மௌனம் இறைவன் மொழி, அது தட்சினாமூர்த்தி த்துவம். “பிள்ளை மதி செஞ்சடையான், பேசாப்பெருமையினான்” என்று, தாயுமானவர் தன் மௌன குருவைப் பாடுவார். “நீதி நடஞ்செய், ஏரின்ப நிதி, அதை ஓதி முடியாது என்று வள்ளலார் பாடுவார்.

“சும்மா இரு சொல்லற என்றதுமே அம்மா பொருள் என அறிந்திலமே” என்று, முருகன் அருணகிரிநாதருக்கு உபதேசித்த ம்திரமொழி மௌனம் தான். கல் ஆலின் கடை அமர்ந்து மௌனித்து உடல்மொழியால் (Body Language) சின் முத்திரை த்த்துவத்தை போதித்த தட்சினாமூர்த்தியை “வாக்கு இறந்த பூரணம் சொல்லாமல் சொன்னவன்” என்று திருவிளையாடற் புராணம் வர்ணிக்கும். அமைதி வேறு. மௌனம் வேறு. போருக்கு பின் அமைதி வரும். அமைதி மேலோட்டமானது. மோனம் உள்ளிருந்து வருவது. மௌனம் என்பது வார்த்தைகளற்ற நிலையல்ல. எண்ணங்கள் அற்ற நிலை. மௌனத்தை நம் முன்னோர்கள் “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தால் உணர்த்தினார்கள்.

ஓம் என்ற பிரணவத்தை = அ+உ+ம் என பிரிக்கலாம். (அ) அறிவாக, உள்ள இறைவனை, (உ) உயிராக உணர்கிற மனிதன், (ம்) பேரின்ப நிலையாகிய மௌனத்தில் ஆழ்கிறான் என்பது பிரணவப் பொருள். “நற்பூதி அணிந்த திருவடிவம் முற்றும் தோழி, நான் கண்டேன்! நான் புணர்ந்தேன்! நான் அது ஆனேன்!” வள்ளலார்.

இது அவசர உலகம். இயந்திர கதியில் மனிதர்கள். வாய்க்கும் வயிறுக்கும் போராட்டம். நின்று, நிலைக்க நேரமில்லை, வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. வாரம் ஒரு முறை தினசரிக் காலண்டரில் ஞாயிறன்று ஆறு நாட்களைச் சேர்த்து கிழிக்கிறோம். தேவை நிம்மதி. தேவை மன அமைதி. தேவை மகிழ்ச்சி. இது மௌன தவத்தால் கிட்டும்.

உடம்பு அசையாமல் யோகநிலையில் கட்டைபோல் தன்னை வைத்திருப்பது காஷ்ட மௌனம். அதாவது இம்மௌனத்தில் உடல் பேசாது (No body language). இரண்டாவது வாக் மௌனம். வாய்மூடி மௌனமாக இருத்தல். இதைத்தான் பொதுவாக மௌன விரதம் உள்நோக்குகிறான். கடவுளோடு பேசுகிறான் என்கிறோம். இந்த மௌனத்தை மேற்கொள்ளும் சிலர் கையில் நோட்புக் வைத்துக்கொண்டு பக்கம் பக்கமாக எழுதி அறுப்பார்கள். மௌனத்திலிருந்து பெறும் அகத்தாய்வையும் அனுமதியையும் இவர்கள் இழக்கிறார்கள். அடுத்து மனோ மௌனம். இதுவே தலைசிறந்த மௌனம். இதில் மனம் அலைபாயாத விச்ராந்தியாக இருக்கும். சலனமற மனமே மோனத்தன் நிறைநிலை. இந்த மௌனத்தில் மனிதன் தன்னை உள்நோக்குகிறான். கடவுளோடு பேசுகிறான்.

மௌன தவம் செய்பவன் தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்கிறான். அவனது புறக்கதவுகள் மூடி அக்கதவுகள் திறக்கின்றன. அவன் பேசாதபொழுது அவனுள்ளிருக்கும் இறைவன் பேசுகிறான். தனது நிறை, குறைகளை அவன் ஆராய்கிறான். அவனது பேராசை நிறை மனமாகிறது. சினம் பொறைமாயக மாறுகிறது. கடும்பற்று ஈகையாகிறது. முறையற்ற பால்கவர்ச்சி கற்பாக மாறுகிறது. வஞ்சம் மன்னிப்பாகிறது. அவன் அனைத்தையும் சமன் செய்து சீர்தூக்குகிறான். அவனது தன் முனைப்பு, அகந்தை அகன்று தான் பரம்பொருளின் அம்சம் என உணர்கிறான். முடிவு வாழ்க்கை கல்வியில் தேர்ச்சி.

“தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே! ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே” வள்ளலாரின் பாடல் அவன் காதில் ஒலிக்கிறது. தான் இறைவனின் அம்சம் என்று உணர்ந்த மறுகணமே (யத்பாவம் த்த் பவதி) அவன் இறைவனது பேராற்றலையும், பேரறிவையும் பெறுகிறான். சாதனைகள் கைகூடுகிறது. அவன் மனம் நிறைகிறது.

மௌன நோன்பு இருவகைப்படும். ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்று மன உறுதியோடு சங்கற்பம் செய்து கொண்டு அவ்வேலை முடியும் வரை பேசாமல் இருப்பது. இது மனதையும், உள்ளாற்றலையும் சிதறாமல் பாதுகாக்கும். காரியம் வெற்றியுறும். இரண்டாவது ஆன்ம தூய்மைக்காக குடும்பம், பொருளாதாரம், வாணிபம் இவற்றில் விலகி நின்று நோன்பு எடுப்பது. இந்நோன்புதான் அகத்தாய்வுக்கு உதவும். அறிவின் இயக்கத்தில் சீரமைக்க உதவும் குண்டலினி யோகம், துரியாதீத தவம் போன்றவை மௌன தவமாகாது. அவை குறுகிய கால உளப்பயிற்சியாகும்.

ஜான்கேஜ் என்பவர் “மௌனம்” என்ற புத்தகத்தில் எழுதுகிறார், எந்த சப்தமும் வராத ஒரு அறையை ஆக்ஸஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கினார்கள். கேஜ் அதில் நுழைந்ததும் இரண்டு சப்தங்களைக் கேட்டார். ஒன்று இருதயம் இயங்குகிற சப்தம். அதாவது இரத்த ஓட்டத்தின் சப்தம். (Cardiac Echo) மற்றொன்று மனம் வேலை செய்கிற சப்தம். கேஜ் ஆச்சரியமாகச் சொன்னார். “இதுவரை நான் இந்த சப்தங்களைக் கேட்டதேயில்லை.”

மௌனம் அனுசரிப்பது எவ்வளவு கடினம் என்பதைப் பற்றி ஒரு கதையுண்டு. மூன்று துறவிகள் மௌனம் இருந்தனர். ஐந்து நிமிடங்கள் ஆயிற்று. முதல் துறவி மற்றொரு துறவியின் முகத்தில் கரித்தூளைக் கண்டார். “உன் முகத்தில் கரி” என்றார். இரண்டாம் துறவி “நீ பேசிவிட்டாய்” என்றார். மூன்றாம் துறவி “நான் மட்டும்தான் பேசவில்லை” என்றார். தமிழன்பனின் உள்ளொலியை மௌனமாக்க்கேளுங்கள். உன் வார்த்தைகளிலேயே மிக அழகானது எது? உதடு திறகாமல் பதில் சொன்னது மொழி. ஓசை இல்லாமல் பதில் சொன்னது மொழி, வார்த்தை இல்லாமல் பதில் சொன்னது மொழி.“மௌனம்”

இவை படித்ததில் சில வலைதள தேடல்களுடன் எனது எண்ணங்களின் வடிவமே

எனக்கும்...

எனக்கும்... 

சில நேரங்களில் லட்சியங்கள் தோன்றும்*
பெரிய எழுத்தாளனாகவேண்டுமென்றும். ..

பெரிய கவிஞனாகவேண்டுமென்றும்...*
என்ன செய்வது?

இதோ...கிளம்பிவிட்டேன்...*
காலையில் வேலைக்குபோனால் தானே

நாளைக்கு சாப்பிட முடியும்..!

1/22/2012

நம் கொள்கை .....

 கொள்கை என்பது ஒரு இலக்கை அடைவதற்கு பின்பற்றப்படும் வழிமுறையையும் ஒழுக்க விதிகளையும் குறிக்கும். இந்த சொல் அரசு, நிறுவனங்கள், குழுக்கள், தனிநபர்கள் என வெவ்வேறு நிலைகளில் பயன்படுகிறது. காந்தியின் அகிம்சைக் கொள்கை ஆகியவை கொள்கைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

இழப்பது லட்சம் ஆகட்டும் 
அடைவது லட்சியம் என்போம் 

உண்மையாய் இருப்பாய் 
வாழ்வில் உயர்வாய்

நீ யாராயினும்  -உலகில் 
அனைவரும் நாமென நினை 

எதுவும் உன் மதமல்ல
யாவும் நம் மதம் 

எந்த  மொழி தெரிந்தாலும் 
நம் மொழி தமிழ் எனக்கொள்வோம் 

இவையாவும் யாவரும் நம் 
கொள்கை எனக்கொள் ............

1/21/2012

ஒர் ஏழை தமிழனாக ...!!!


தஞ்சை பெரிய கோயிலை - என்னுடன்
சுற்றினான் ஒரு வெள்ளையன்
அவன் எந்நாடு என்று நானறியா - இருந்தும்
என்னாட்டுக் கலை கண்டு வாய்ப்பிளந்த போது
எனக்குள் ஒரு இராஜராஜன் பெருமிதத்தோடு ...
வானுயர்ந்த கோபுரம் போல் என்னாடே உயர்ந்தது 
என்றுதலைநிமிர்ந்து திரும்பினேன் ...

கோயில் தலைவாசலில் - அந்த
அந்நியனைச் சுற்றி ஒரு கூட்டம்
இரு கைகள் எந்தி யாசகம் கேட்டு ...
சற்று முன்தலைக்கேறிய தலைக்கணத்தில்
தலைக் கவிழ்ந்து நடந்தேன் ...


ஒர் ஏழை தமிழனாக ...!!!

மின்னஞ்சலில் வந்தது .....

1/20/2012

கதை சொல்வதில் இந்தியர் பேர் போனவர்கள் - 3

3.  தியானத்தில் வந்த புலி
புத்த குருவை நாடி முதன் முதலாக ஐரோப்பாவிலிருந்து வந்த பெண்மணி, தியானம் பயின்றார். தியானத்தை முறைப்படிப் பயின்றதுடன் ஒருநாள் தவறாமல், மணி தவறாமல் தியானத்தைக் கடைப் பிடித்தார்.
குருவின் ஆசிரமத்திலிருந்து காட்டினுள் சென்று (camp or picnic) சில நாள்கள் கழிக்கப் பலர் சேர்ந்து புறப்பட்டனர். இப் பெண்மணியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். அவர்கள் போகும் இடம் புலி யுள்ள இடமானதால், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
ஒருநாள் இப் பெண்மணியின் தியான நேரம் வந்தது. மற்றவர் காட்டினுள் செல்லப் புறப்படும் பொழுது, இப் பெண் தியானத்தை மேற்கொள்ள விரும்பினார். புலி வரும், தனியாக இருக்கக் கூடாது என்ற எச்சரிக்கையைப் புறக்கணித்தார்.
ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்தார். புலி வந்தது. தியானம் கலைந்தது. புலி எதிரில் நின்றது. "இதுவே என் முடிவானால் ஆகட்டும். நான் தியானத்தை நடுவில் நிறுத்தப் போவதில்லை'' என மீண்டும் கண்ணை மூடினார். ஆழ்ந்த தியானம் மீண்டும் அமைந்தது. புலி நினைவில்லை. தானாக தியானம் கலைந்தது. புலியைக் காணவில்லை. மனம் அமைதியிலி ருந்து மீளச் சற்று நேரமாயிற்று. புலி நினைவில் வர நெடு நேரமாயிற்று.

1/18/2012

கதை சொல்வதில் இந்தியர் பேர் போனவர்கள் - 2


2. தீட்சை
ஜூனுன் என்று ஒரு மகானிருந்தார். அநேகம் பேர் அவரை நாடி வருவது வழக்கம். யூசப் என்ற இளைஞன் ஆவலுடன் அவரிடம் வந்தான். அவனை எதுவும் விசாரிக்காமல் அவனை அங்கேயே இருக்கச் சொன்னார். நான்கு வருஷம் கழிந்தது. ஒரு நாள் அவனைக் கூப்பிட்டு மகான் விசாரித்தார். "எதற்காக வந்தாய்?'' என்று கேட்டார். "தீட்சை பெற வேண்டி தங்களிடம் வந்தேன்'' என்றான்.
அங்கிருந்த ஒருவரை அழைத்து ஒரு பெட்டியை எடுத்து வரச் சொன்னார். அதை யூசப்பிடம் கொடுத்து வெகுதூரத்தில் ஒரு விலாசம் கொடுத்து, "அங்குள்ள ஒருவரைச் சந்தித்து இப்பெட்டியை அவரிடம் சேர்த்து விடு. திரும்பி வந்தவுடன் தீட்சை அக்கிறேன்'' என்றார்.
அந்த ஊரை நோக்கி யூசப் நடந்தான். வெயிலில் களைத்து ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். நடக்கும்பொழுது அவன் மனம் நடை மீதிருந்தது. பெட்டியைப் பற்றி நினைவில்லை. அது பூட்டப்பட வில்லை என்பதையும் அவன் கவனிக்கவில்லை. உட்கார்ந்தவுடன் மனம் வேலை செய்ய ஆரம்பித்தது. ஏன் இந்தப் பெட்டியை என்னிடம் கொடுத்தார். எளிதில் திறக்கலாம் போலிருக்கின்றதே? இதனுள் என்ன இருக்கும்? பார்க்கலாமா? பார்த்தால் என்ன தவறு? என்று மனம் நினைத்தபொழுது, "அது தவறு. குரு இட்ட ஆணை. அவர் பேச்சை மீறக் கூடாது. எது இருந்தால் எனக்கென்ன?'' என்று மனத்தைச் சமாதானம் செய்தான். சிறிது நேரம் கழித்து மனம் மீண்டும் அதே கேள்விகளைக் கேட்டது. மீண்டும் அமைதியடைந்தான். பல போராட்டங்களுக்குப் பின், அவன் தோற்று விட்டான். அவன் மனம் வெற்றியடைந்தது.
பெட்டியைத் திறந்தான். திடீரென ஒரு சுண்டெலி குதித்தோடியது. யூசப் வருத்தப்பட்டான். மீண்டும் பிரயாணத்தைத் தொடர்ந்து, அந்த விலாசத்தைத் தேடிப் போனான். அவரும் ஒரு மகான். அவரிடம் பெட்டியைக் கொடுத்தான். திறந்து பார்த்தார். அவன் முகத்தையும்
ஏறிட்டுப் பார்த்தார். நடந்தது முழுவதும் அவருக்குத் தெரிந்தது. அவனுக்கு உபதேசம் செய்தார். "உன் குரு உன்னை நம்பவில்லை. மனோதிடத்தைச் சோதிக்க இதைச் செய்திருக்கின்றார். நீ தோற்றுவிட்டாய். இது தவறு'' என்றார்.
வருத்தத்துடன் குருவை நாடி வந்து செய்த தவற்றையும், நடந்தவை அனைத்தையும் யூசப் சொன்னான். "உன்னால் ஒரு சுண்டெலியைக் காப்பாற்ற முடியவில்லை. பெரிய ஞானத்தை உன்னை நம்பி எப்படிக் கொடுக்க முடியும்?'' என்றார். யூசப் தன்னிருப்பிடம் சென்றான். மனோதிடத்தை வளர்க்கப் பாடுபட்டு வெற்றி கண்டான். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் குருவிடம் வந்து தீட்சை பெற்றுப் பெரிய மகானாக வாழ்ந்தான்.

1/16/2012

கதை சொல்வதில் இந்தியர் பேர் போனவர்கள்


கதை சொல்வதில் இந்தியர் பேர் போனவர்கள் என்று மேலை நாடுகளில் சொல்வார்கள். மேலை நாடுகளில் கதைகள் சொல்வதில்லை, உதாரணத்தால் விளக்குவதில்லை. அவையில்லாமல் புரிந்து கொள்ளும் திறனுடையவர்கள் அவர்கள். பேசும்பொழுது ஒரு விஷயத்தை உதாரணத்தால் விளக்க முயன்றால் அவர்களுக்குப் பிடிக்காது. அவர்களை நாம் அறிவில்லாதவர்கள் என நினைப்பதாகக் கருதி வருத்தமடைவார்கள். உதாரணம் தேவையில்லை என்பார்கள். அன்னை  இந்தியாவுக்கு வந்த புதிதில் அவரிடம் பேசுபவர்கள் கதை சொல்வதைக் கேட்டு வியந்தார்கள். அன்னை கதை சொல்வதில்லை. குழந்தைகளுக்காக அன்னை சொல்லிய கதைகள் "Tales of Long Ago'' பழங்காலத்துக் கதைகள் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கின்றன. அது தவிரவும் அன்னை சொல்லிய சில கதைகளை இக் கட்டுரையில் சுருக்கமாக எழுதுகிறேன்.
1. மனிதனைவிட அறிவுள்ள குரங்கு
ஆப்பிரிக்காவில் ஒருவர் குரங்கு வளர்த்தார். அதை மனிதர்கள் செய்வனவெல்லாம் செய்யும் அளவுக்குப் பழக்கியிருந்தார். சாப்பிடும் பொழுது மேஜையைச் சுற்றிவிருந்தினர் உட்கார்ந்திருக்கும்பொழுது,அக்குரங்கும் ஒரு நாற்காயில் உட்கார்ந்து மனிதனைப் போல் சாப்பிடும். ஒருநாள் அதுபோல் அனைவரும் உட்கார்ந்த பொழுது, சாப்பாட்டுக்கு முன் (wine) திராட்சை ரசம் பரிமாறி னார்கள். குரங்குக்கு ஒரு டம்ளர் கொடுத்தார்கள். குரங்கு குடித்தது. அதற்கு மயக்கம் வந்து போதை மீறியது. முதல் முறை போதைப் பொருள் சாப்பிடுபவர் படும் அவஸ்தை குரங்குக்கு வந்தது. நாற்காலியிலிருந்து கீழே விழுந்தது. தரையில் விழுந்து புரண்டு, மரணத்தின் வாயிலை எட்டியது. எப்படியோ பிழைத்துக் கொண்டது. பலநாள் கழித்து நடந்த ஒரு விருந்தில் குரங்கையும் உட்கார வைத்தனர். மீண்டும் திராட்சை ரசம் பரிமாறினார்கள். குரங்குக்கு ஒரு டம்ளர் கொடுத்தனர். குரங்கு அதைக் கையில் எடுத்தது. ஆவேசமாகக் கோபத்துடன் கொடுத்தவர் தலையில் டம்ளரை அடித்தது. மனிதனுக்கில்லா இந்த அறிவு குரங்குக்கு இருக்கின்றது என்கிறார் அன்னை.

1/14/2012

பொங்கலோ பொங்கல்



  
பொங்கலோ பொங்கல்


கரும்பின் தித்திப்பு மனதில் ஒரு மத்தாப்பு


இயற்கையை வணங்கும் எளிய மக்கள்


மற்றவர் பெருமைக்காக நடுத்தர மக்கள்


வியாபாரமாகிறது பொங்கல்


நாலு காசுக்கு விற்றது இன்று நாற்ப்பது காசுகள்


விற்று பணத்தை அள்ளும் வியாபாரிகள்


மனமே இல்லாமல் வாங்கும் மக்கள் அதிகம்


அழுது வாங்கி அமுதமாக சாப்பிடும் மக்கள்


பாதி பேருக்கு நீரழிவு 


பாழாய் கிடக்கிறது கரும்பு கழிவாய்


வயலில் விளைந்ததை 

விளைய வைத்தவன்


பெருந்துணை பெருஞ்சுரியனுக்கு


நன்றி செலுத்தும் நாள் இந்த பொங்கல்


புத்தரிசி குத்தி பாயசம் வைத்து


சூரியனுக்கு படைப்பது பொங்கல்


ஆனால் இன்றோ விளை நிலம் காணோம்


உயர்ந்து விட்ட கட்டிடங்கள்


விளையும் பயிரோ விசத்தின் தீட்டு


விசத்தை வாங்கி விழுங்கும் மனிதா


உண்மை பொங்கலை உற்சாகமாக


கொண்டாடு ..பொங்கலோ பொங்கல்

பொங்கல்  &  தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்


புதுக் கவிதை

நமக்கு ஊக்கமளிக்கும் வகையில் புதுக் கவிதை ஒண்ணு தந்த எனது நண்பரும் , வலைதள ஆர்வலரும் ஆன திரு.ரஜினிகாந்த் –திருப்பூர் அவர்களுக்கு நன்றியுடன் ,தங்களின் மேலான ஆதரவை நாடும் தமிழ் உலகம்



அவர் சம்ர்பித்த புதுக் கவிதை உங்களுக்காக !!.....



அன்பை பரிமாறி கொள்வோம்
        ஆங்கில புத்தாண்டில்
நாம் யார் என்பதை அறிந்து கொள்ள
       கூடி கொண்டாடிடுவோம் !!!
தை முதல் நாள் -தமிழ் புத்தாண்டு


                                                            ரஜினிகாந்த்-

என் தமிழ்




















உலகம் முழுவதும் தமிழர்கள் வாழுகிறார்கள் என்று நமக்குத் தெரியும். ஆனால் அவர்களின் சரியான எண்ணிக்கையை அந்த நாட்டு மக்களின் வழி பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல் இது. மின் அஞ்சலில் வந்த பட்டியலை வலை பார்வையாளர்களுக்காக அப்படியே தருகிறேன்,


India: 63,000,000
Sri Lanka: 3,600,000
Malaysia: 1,500,000
Burma: 500,000
Canada: 300,000
Singapore: 250,000
United Kingdom: 150,000
Mauritius: 130,000
Rளூunion: 126,000
Italy: 100,000
United States: 100,000
Germany: 60,000
South Africa: 60,000 True figure 500,000
France: 60,000
Switzerland: 35,000
Australia: 30,000 True figure 100,000
Norway: 12,000
Denmark: 10,000
Sweden: 8,000


அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

1/12/2012

சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் ...





"திருவளர் வாழ்க்கை, கீர்த்தி, தீரம், நல்லறிவு, வீரம்
மருவுபல்கலையின் சோதி, வல்லமையென்பவெல்லாம்
வருவது ஞானத்தாலே வையக முழுதும் எங்கள்
பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞானபாநு!"


சுவாமி விவேகாநந்தரின் வாக்கு!




"உண்மையில் இருக்கும் ஒரே கடவுளை, நான் நம்புகிற ஒரே கடவுளை, எல்லா ஜீவர்களின் கூட்டுத் தொகையுமான கடவுளை வழிபடுவதற்காக நான் மீண்டும் மீண்டும் பிறந்து ஆயிரமாயிரம் இன்னல்களை அனுபவிப்பேனாக!
தீயோர்களாக நிற்கும் என் கடவுளை, துயரமுற்றோராக நிற்கும் என் கடவுளை, உலகம் எங்கும் ஏழைகளாக நிற்கும் என் கடவுளை, வழிபடுவதற்காக நான் திரும்பத் திரும்ப ஜனனமெடுப்பேனாக!"
"கிழிந்த ஆடையைக் களைவது போல் இந்த உடலை எறிந்துவிட்டு வெளிக்கிளம்புவது நல்லதென எனக்குத் தோன்றக்கூடும். ஆனால் உடலுக்கு வெளியே சென்றாலும் நான் சேவை செய்வதை நிறுத்த மாட்டேன். எங்கெங்குமுள்ள மக்களை நான் ஆன்மீகத்தில் தூண்டிக் கொண்டே இருப்பேன். தான் ஆண்டவனோடு ஒன்றுபட்டிருப்பதாக உலகம் அறியும் வரை நான் சேவை செய்வேன்."




சேவை செய்யும் கோடிக்கணக்கான சேவகர்களுக்கு வழிகாட்டியாய் விளங்கும் விவேகானந்தரின் பிறந்தநாளில் விவேகானந்தரின் வழியைப் பின்பற்றி நாட்டையும், மக்களையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.




வந்தேமாதரம் ! வந்தேமாதரம் !! வந்தேமாதரம் !!!


-மறுபதிவு -

1/11/2012

யார் இந்த பசுபதி பாண்டியன் ?

 


தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவரான பசுபதி பாண்டியன் தனது வாழ்நாள் முழுவதும் கொலை அச்சுறுத்தலிலேயே வாழ்ந்து வந்தவர். காரணம், 16 வயதிலேயே அவர் கொலை வழக்கில் சிக்கியவர் என்பதால்.

50 வயதான பசுபதி பாண்டியன் தூத்துக்குடி மாவட்டம் அலங்கார திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் இவருக்குப் படிப்பு ஏறவில்லை. இதனால் 11வது வகுப்பு வரை மட்டுமே அவரால் படிக்க முடிந்தது. அதன் பிறகு அவர் வன்முறைப் பாதைக்கு மாறினார். முதன் முதலில் இவர் கொலை வழக்கில் சிக்கினார். அப்போது இவருக்கு வயது 16தான்.

ஆரம்பத்தில் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மோதலில் ஈடுபட்ட பசுபதி பாண்டியன் பின்னர் சமூக விரோதி என்று பெயரெடுக்கும் அளவுக்கு மாறினார்.

அதன்பிறகு கொலை, கொலை முயற்சி, கட்டப் பஞ்சாயத்து, தாக்குதல் என ஏகப்பட்ட வழக்குகளில் சிக்கினார். அவர் மீது எட்டு கொலை வழக்குகள் சுமத்தப்பட்டன. அதில் முக்கியமானதுதான மூ்லக்கடை பண்ணையார் கொலை வழக்கு. இந்தக் கொலைக்குப் பிறகுதான் பசுபதி பாண்டியன தென் மாவட்டங்களில் பிரபலமானார்.

இந்தக் கொலைக்குப் பிறகு பசுபதி பாண்டியன் பெரும் பிரபலமடைந்ததைப் போல அவருக்கு எதிரிகளும் அதிகரித்து விட்டனர். இதனால் ஆங்காங்கு பசுபதி பாண்டியன் ஆதரவாளர்களுக்கும், அவரது எதிரிகளுக்கும் ரத்தக்களறிச் சண்டை நடந்தபடி இருந்தது. பசுபதி பாண்டியனைக் குறி வைத்து பலமுறை கொலை முயற்சிகள் நடந்துள்ளன. அத்தனையிலும் அவர் தப்பினார். இந்த மோதல்களில் தாமோதரன், கண்ணன், பீர் முகம்மது என பலரும் உயிரிழந்தனர்.

இப்படியாக போய்க் கொண்டிருந்த பசுபதி பாண்டியன், பின்னர் பாமகவில் திடீரென சேர்ந்தார். தென் மாவட்டங்களில் காலூன்ற அடிப்படையே இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த பாமகவுக்கு பசுபதி பாண்டியன் வந்தது பெரிய விஷயமாக அமைந்தது. ஆனாலும் சேர்ந்த வேகத்திலேயே அதிலிருந்து விலகினார் பசுபதி. அதன் பிறகு தேவேந்திர குல இளைஞர் பேரவையைத் தொடங்கினார்.

இந்த சமயத்தில்தான் திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெசிந்தாவை மணம் புரிந்தார் பசுபதி பாண்டியன். தனது கணவர் பல்வேறு வழக்குகளில் சிக்கும்போதெல்லாம் அவரை மீட்பதே ஜெசிந்தாவுக்கு வேலையாகப் போனது. இறுதியில் 2006ம் ஆண்டு அவரும் கொடூரமாக கொல்லப்பட்டார். அந்த தாக்குதல் உண்மையில் பசுபதி பாண்டியனுக்கு வைக்கப்பட்ட குறியாகும். ஆனால் அவர் தப்பி விட்டார், ஜெசிந்தா பலியானார்.

நேற்று படுகொலையாவதற்கு முன்பு நான்கு முறை கொலை முயற்சியிலிருந்து தப்பியுள்ளார் பாண்டியன். தூத்துக்குடி மார்க்கெட்டில் வைத்து இவரை ஒருமுறை வெட்டினர். அப்போது அவர் தப்பி விட்டார். நெல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருமுறை தப்பினார்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக ஜாங்கிட் இருந்தபோது பசுபதி பாண்டியனுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். இனி்மேல் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டால் சுட்டுக் கொல்லப்படுவீர்கள் என்று அவர் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து நெல்லைக்கு இடம் பெயர்ந்தார் பசுபதி பாண்டியன். அதன் பிறகு திண்டுக்கல்லுக்கு வந்து சேர்ந்தார். தற்போது அங்கேயே தனது மரணத்தையும் சந்தித்துள்ளார்.

கொலை மிரட்டல்களும், எதிரிகளும் அதிகமாக இருந்து வந்த காரணத்தால் முன்பு போல ஆர்ப்பாட்டமாக சுற்றாமல் அமைதியாகவும், ரகசியமாகவும் செயல்பட்டு வந்தார் பசுபதி பாண்டியன். இருப்பினும் எதிரிகள் நேற்று பசுபதி பாண்டியனை கொடூரமாக கொலை செய்து விட்டனர்.

நன்றி  :பதிவு நண்பரே