தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/31/2010

தமிழா

அடங்கி அடங்கி
தமிழா உனக்கு அழுத்து போனதா ?

அடக்கம் என்ற சொல்லே
இன்று மறந்து போனதா ?

மானம் மரியதை
இன்று காற்றில் பறந்தது
மனம் கேட்ட பொழப்பு- இது
ஊரே நாருது !

காதல் எரிமலை

எரி மலையாய் இருந்த என்னை
பனி மலையாய் மாற்றிய - நீயே
கோடைக் கால வெயிலை போல் -ஏன்
என் மனத்தை சுட்டு விட்டாய் !

பற்றி எரியும்
மெழுகு வர்த்தியாய்
என் கண்களை உருக வைத்தாய்

உன் மனம் சிலை போல்
அழகானது என்று நினைத்தேன்
சிலை அழகனாலும் - அது
கல் என்று நிருபித்து விட்டாய்

உயிரில் ஊருவதுதான் காதல் !

காதல் மனதில் முளைப்பதில்லை
மனதின் முடிவில்தான்
காதல் தொடங்குகிறது !

மனம் ஆசைகளை உருவாக்கும்
கருவி மட்டுமே
அதையும் தாண்டி
உயிரில் ஊருவதுதான் காதல் !

புகைப்பதை கை விடுங்கள்

இனிய இளஞர்களே...
புகைப்பதை கை விடுங்கள்

இதயம் கெட்டுவிடும்
இதயம் முலுவதும்
புகையாகும்.........

உங்கள்
இதயத்தில் வாழும்
உன் காதலிக்கு
மூச்சு முட்டும்
துன்ப படுவாள்

அதனால்
புகைப்பதை கை விடுங்கள் !

உன்னை நேசிக்கிறேன்

கவியில் ஆடும்
உன் அழகே
என்னை ம‌யக்கையில்
நானோ எட்டி நின்றேன்
உன்னை ரசிக்க !!

ஒரு தடவை தரிசனம்
தருவாயா என் அன்பே
வரும் வழியில் ஆயிரம்
தடைகளும் தூசியாகுமா ..
உன் தரிசனம் கிடைக்குமா
எட்டி நின்று தான் உன்னை
காண வேண்டுமாம்
சொல் என்னுயிரே !!! .

உன் மேல் உள்ள
காதல் அவர்களுக்கு
தெரிய வாய்ப்பில்லையே
ஆயினும் நான்
ரசித்தேனே உன்னை
ஆனந்தமாய் யாரும்
அறியாமலே !!
உன் இடத்துக்கு
நான் வராமலே !! .

என்னருகில் உன்னை
கண்டேனே அதுவே
எனக்கு பேரின்பமானதே
யாரும் அனுபவிக்க
வாய்ப்பில்லையே
இப்படி ஒரு
தரிசனத்தை !!!

என்னை பாட
வைத்து கேட்டாயே
உன்னை பத்தி
பாடத்தான் தெரியும் எனக்கு
வேறொன்றும் நான்
அறியேனே !!

நான் போகும் அழகே
கண்டு ரசித்தாயே !!
நான் தைரியமானேனே
நீ என்னோடு
இருக்கையிலே !!! .

என்னில் ஒவ்வொரு
அசைவிலும்
என்னுள் கலந்தாயே
இயங்கினேன்
வெற்றியை நோக்கி ...

நான் இன்னும் பல
சாதனைகள் படைப்பேன்
நீ தரும் நம்பிக்கையிலே ...

உன்னை நேசிக்கிறேன்
என் இறைவா ...
நேர் வழியில்
என்னை செலுத்துவாயே ....

1/30/2010

வாருங்கள் வரவேற்கிறோம்..வாழ்த்துங்கள் வளர்கிறோம்.......

கற்பூரத்தை விட காற்றில் விரைவாக கரையும் தன்மை வார்த்தைகளுக்குத்தான் உண்டு. வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தை அடுத்தவரின் காதுகளில் சரியாக சென்றடைவதைப் பொறுத்தே அந்த வார்த்தைக்கு மதிப்பு. நம் பெரியவர்கள் அடிக்கடி 'நான் சொன்னதை காத்துல பறக்க விட்டுட்டான் பார்'ன்னு சொல்லக்கேட்டிருக்கிறேன் அது இதனால் தான் போலும்.

பேச்சு வழக்கிற்கும் எழுத்துக்கும் உள்ள அடிப்படை வித்தியாசமே இதுதான் போலும். நம் வாய் வழியே வரும் வார்த்தைகளை விட கை வழியே வரும் வார்த்தைகள் அதன் திடத்தன்மையை இழப்பதில்லை அதனால்தான் இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் திருக்குறள் இன்றும் இருக்கிறது.

எழுத்துக்கள் மிகப்பழமையானவை ஆனால் அவை எழுதப்படும் போது அதன் அர்த்தங்கள் ரோஜா மொட்டு மலர்வதைப் போன்று புதிதாகவே இருக்கின்றான.

அதனால்தான் அனைவருக்கும் படிக்க,படிக்க எழுத்தின் மீதான காதல் கூடிக்கொண்டே போகிறது. புதிது புதிதான தேடுதலும் தொடர்கிறது.

அது என்னை மட்டும் விட்டு விடுமா என்ன. தீவிர இலக்கிய ஆர்வம் இல்லாவிட்டாலும், சிறுவர்மலர், வாரமலர், ஆனந்த விகடன், குமுதம், சுஜாதா, வலைத்தளம் என்று எழுத்தை நேசிக்கும் அனைவரைப்போலவும் எனது வாசிப்பனுபவமும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

நண்பர்களாகிய நீங்கள் கொடுத்த உற்சாகமும் ஆதரவும் வாசகனாக இருந்த என்னை பதிவராக்கி இன்று 25 வது இடுகையும் போட வைத்துள்ளது.
500 இடுகைகளை கடந்து அமைதியாக‌ எழுதிக்கொண்டிருப்பவர்கள் மத்தியில் இந்த கொண்டாட்டம் சற்று அதிகமாக தோன்றினாலும், ஆயிரம் மைல் தூரத்தை கடப்பது முதல் அடியிலிருந்தே ஆரம்பமாகிறது என்பதால் குழந்தைக்கு ஐஸ்க்ரீம் கிடைத்தால் ஏற்படும் சந்தோசத்தை நான் இப்போது உணர்கிறேன்.

நான் இதுவரை எழுதிய மொக்கைகளையும் , சில நல்ல பதிவுகளையும் (அது எங்க இருக்கு) வாசித்து என்னை உற்சாகப்படுத்தும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

பின்னூட்டமிட்டு ஆதரவளித்து வரும் நண்பர்களுக்கும், தமிழ் உலகத்தில் வோட்டு போட்ட (இனி போட விருக்கும்) நண்பர்களுக்கும், பிரத்யோகமாக நன்றி சொல்ல நான் கடமை பட்டிருக்கிறேன் ( ஏன்னா அதுக்கு பெயர், கடவுச்சொல் கொடுத்து எழுதுறதுக்கு ஒரு இடுகை எழுதி விடலாம் ).

வாழ்க்கை என்பது போட்டி போடுவது அல்ல அது பரிட்சை எழுதுவது போல், போட்டியில் எவ்வளவு முயன்றாலும் ஒருத்தர்தான் வெற்றி பெற முடியும். பரிட்சையில் முயற்சி செய்யாதவர் மட்டுமே தோல்வியடைவார். போனதேர்வை விட இந்த தேர்வில் உங்களை நீங்கள் முந்தினால்
அதுதான் உண்மையான வெற்றி என்று சொல்லி போட்டி மனப்பான்மையோடு சென்று கொண்டிருந்த எங்கள் கல்லூரி வாழ்க்கையை மற்றுமல்லாது வருங்காலத்தையும் இனிமையாக‌ மாற்றிய எங்கள் மூதாதையருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இவர்களைப் பற்றி பின்பு தனி இடுகையில் சொல்கிறேன்.

அதிலிருந்துதான் நாம் ஜெயிக்க வேண்டியது நம்மைதான் வெளியில் உள்ளவர்களை அல்ல என்பதை உணர்ந்து கொண்டேன். ஆமாம் நண்பர்களே இறைவன் நாடினால் எனது முந்தைய இடுகைகளை விட சிறந்த இடுகைகளை உங்களுக்கு நான் அளிப்பேன். அதுதான் நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கு நான் செய்யும் கைமாறு.

எல்லா புகழும் இறைவனுக்கே. ஜெய் பாரதம் !

அனுபவ கதை - உறவுகள் முறியும்

போனை ஆன் பண்ணினான் பாஸ்(பெயர் மாற்றம்). அதிசயமாக அன்று சுக்குவிடமிருந்து(பெயர் மாற்றம்) ஒரு SMS வந்திருந்தது. சுமார் 1 வருடத்திற்குப் பிறகு! இப்போது அவளுக்கு திருமணமாகி 1 1/2 வருட காலமாகிவிட்டது.

இனிமேலும், ஏன் அவளை கல்யாணம் செய்துக்க முடியவில்லை? ஏன் கல்யாணம் செய்யமுடியாது என்று தெரிந்துகொண்டே அவளை காதலித்தோம்? என்று நினைத்து நினைத்து வருந்தி வருந்தி, தன்னைத்தானே நொந்துகொள்ள இஷ்டமில்லை அவனுக்கு. "கதம் கதம்" என்று அதைப்பற்றி யோசிக்காமல் விட்டு விட முடிவு செய்துவிட்டான், பாஸ். இப்பொழுதெல்லாம் சுக்குவை ஒரு வழியாக மறக்க, அவள் எண்ணங்களால் தன் மனநிலை பாதிக்கப்படாமல் வாழக்கற்றுக்கொண்டான், பாஸ்.

அவளிடம் இருந்து வந்த SMS நிதானமாக வாசித்தான். அது வழக்கம் போலதான் இருந்தது

Hi boss!

How are you doing? I hope you are doing good! It has been long time. I am doing fine. I am busy with my family and, of course happy. I think about you sometime and miss you sometime!

Bye-சுக்கு

திருமணத்திற்கு பிறகும் நண்பர்களாக இருக்கலாம் என்று இருவரும் பேசியிருந்தார்கள். ஆனால் அது முடியவே முடியாத காரியம் என்று தெரியாது இருவருக்கும். அது மட்டுமல்ல, முன் அனுபவம் இல்லாததால் நெறைய விசயங்கள் இருவருக்குமே தெரியாமல் இருந்தது. இப்போதுதான் அனுபவித்த பிறகு தங்கள தவறு, முட்டாள்தனம் எல்லாம் புரிந்தது. அறியாமையால், அனுபவமில்லாமல் செய்த "ப்ராமிஸ்" எல்லாம் எப்படி காப்பாத்த முடியும்? அதை காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்ந்தான் இப்போது.

நட்புனா என்ன? சும்மா SMS ல்ல "ஹாய்" சொல்லிக்கொள்வதா? சும்மா பிறந்த நாள் வாழ்த்துச்சொல்லிக்கொள்வதா? இல்லைனா சும்மா நியு இயர் க்ரீட்டிங்ஸ் சொல்லிக்கொள்வதா? அதெல்லாம் சும்மா ஃபார்மாலிட்டிக்கு ரெண்டுபேர் சொல்லிக்கொள்வது. நட்பு என்பது சம்பத்தைப்பொறுத்த வரையில் வேறு. ரெண்டு பேருக்கும் இடையில் எந்தவிதமான "பேரியர்ஸ்"ம் இருக்கக்கூடாது! எதையுமே இதை சொல்லுவோமா வேணாமானு யோசிக்கக்கூடாது! சண்டை போட்டுக்கொண்டாலும் அதில் அந்த "உரிமை" இருக்கனும். அதுதான் அவனைப்பொறுத்தவரையில் நட்பு! அதுதான் நண்பர்களிடம் அவன் எதிர்பார்ப்பது! அந்த நட்புடன் முன்னால் காதலியான சுக்குவுடன் இருக்கமுடியுமா என்ன ? அதுவும் அவள் இன்னொருவரை மணந்தபிறகு?அவள் இன்னொருவருக்கு தன்னை முழுமையாகத் தந்த பிறகு? இன்னொருவரிடம் தன் இன்ப துன்பங்களை சமமாக பகிர்ந்து கொண்ட பிறகு? அதெப்படி முடியும்? நிச்சயம் முடியாது! என்று தெரிந்து இருந்தும், ஏன் முடியாது? என்று நினைத்தான் அன்று! தன் முட்டாளதனத்தை நினைத்து தனக்குத்தானே சிரித்துக் கொண்டான் பாஸ், இன்று.

பொதுவாக திருமணம் ஆனபிறகு அவளிடம் இருந்து வரும் மெயில்கள் எல்லாமே இப்படித்தான் இருந்தன. அதாவது, ஏதோ பேருக்கு ஒரு மெயில்! எந்தவிதமான பிடிப்பும் இல்லாமல். ஏதோ கடமைக்கு இவனுக்கு ஒரு மெயில் அனுப்பனுமே என்று அனுப்புவது போல! அதுவும் ஏதோ பயங்கர கில்ட்டி காண்ஸியண்ஸுடன் அவள் எழுதுவதுபோல அவனுக்குத் தோனும்! அது அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. எதுக்காக அவளை இப்படி கஷ்டப்பட்டு மெயில் அனுப்ப வைக்கனும்? எதுக்காக அவளை நட்பு என்கிற பெயரில் அவன் தொடர்ந்து கஷ்டப்படுத்தனும்? என்று வருந்துவான்,

அவன் யோசிப்பதுண்டு! பேசாமல் பதில் எழுதாமல் நிறுத்திவிடுவோமா? அதுதான் இரண்டு பேருக்குமே நல்லது. இப்படியெல்லாம் பலமுறை யோசித்துவிட்டு அவள் SMSக்கு நாகரீகமாக பதில் அனுப்புவான். ஆனால் அவளிடம் இருந்து அதன்பிறகு பதிலே வராது. பதில் வந்தாலும் அதில் இவன் அனுப்பியதை அவள் படித்ததாகவே தோனாது. இவன் அனுப்பிய SMS எல்லாம் குப்பைத் தொட்டியில்(Delete Box) போடுவது போல இவன் SMS போகும். எதுக்கு இதெல்லாம்? தேவையே இல்லாத ஒருவரை ஒருவர் கஷடப்படுத்திக் கொள்வது தேவையா ? வேஸ்ட் ஆஃப் டைம்! தேவையில்லாத மனக்குழப்பம். அவளை நிம்மதியா வாழவிட்டால்தான் என்ன? அதுதானே உண்மையான ஜெண்டில்மேனுக்கு அழகு? மரியாதையாக SMS பதிலே எழுதாமல் இருப்பதுதான் நல்லது என்று எத்தனையோ தடவை நினைத்து இருக்கான். ஆனால் அவனால் முடியாது! அப்படி இருப்பது அவளை கஷ்டப்படுத்தும் என முட்டாள்த்தனமாக நம்பினான். அவனுடைய திருப்திக்காக அவளை கஷ்டப்படுத்தக்கூடாது என்று நினைத்து பதில் எழுதுவான். இவன் எழுதுவதை அவள் படிப்பதே இல்லை என்பது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விளங்கியது. அவனுக்கு எல்லாமே மெதுவாகத்தான் புரியும். அவள் என்றுமே எல்லாவற்றிலுமே அவனைவிட ஸ்மார்ட் தான்.

Bossக்கு பெரிய ஈகோ உண்டு. ஆனால் அதை அவளிடம் க்ளோசாக இருக்கும்போது அவன் காட்டியதில்லை. அவளிடம் பேசிக்கொண்டு இருந்தால் ஈகோ எல்லாம் பறந்து போயிடும். இப்போ அவள் பேசுவதில்லை என்பதால் அவன் SMSகளை இக்னோர் பண்ணுவதைப்பார்த்துப் பார்த்து அவன் ஈகோ தலை விரித்தாடியது. Boss இன்று கொஞ்சம் சீரியஸாகவே யோசித்தான். தர்க்க ரீதியாக. திறந்த மனதுடன்! எதுக்காக இவளிடம் இப்படி ஒரு காண்டாக்ட்? எதுக்காக இவள் சொல்லும் "ஹாய்"க்காக சும்மா நான் வரிந்து வரிந்து SMS அனுப்பனும்? என்று சீரியஸாக யோசிக்க ஆரம்பித்தான். சப்போஸ் சுக்குவிடம் காண்டாக்ட் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தான். அப்படி இருப்பது அவனுக்கு நிச்சயமாக பெட்டராக தோன்றியது. அவளிடம் இருந்து வரும் SMS கள் எந்தவிதமான பிடிப்பும், அன்பும் எதுவுமே இல்லாமல்தானே வரும் . அது அவள் தப்பு இல்லைதான்! அவன் தப்புனே இருக்கட்டுமே! யார் தப்பு என்பதை விட்டுவிட்டு இப்போ அந்த மாதிரியான ஒரு தொடர்பு எதுக்கு? என்று யோசித்தான். அவசியமே இல்லை! ஒண்ணே ஒண்ணு மட்டும்தான் அவளிடம் இருந்து வரும் SMS ல்ல இருந்து அவன் புரிந்து கொள்வது. அவள் உயிரோடு நல்லா இருக்கிறாள் என்பது மட்டும்தான்!

சரி, இன்றைய அவர்கள் நிலையில், BOSS உயிரோடு இருந்தால்தான் என்ன? இல்லை செத்தால்தான் அவளுக்கென்ன? எந்த வகையில் சுக்குவை
இவன் இருப்பும், இறப்பும் பாதிக்கும் ? சப்போஸ் அவளுடைய அப்பா, அம்மா, அண்ணன், தம்பிக்கு ஏதாவது ஒன்றென்றால் அவளை நிச்சயம் அது பாதிக்கும். அவளுக்கு அல்லது அவள் கணவன், கணவன் வீட்டிலுள்ளவர்கள், அவள் தோழிகள், வேலையில் உள்ள கலீக்ஸ் போன்றவர்களுக்கு உடல்நலம் குன்றினால் அவளை பாதிக்கும். ஆனால் பாஸ் செத்தால்கூட எந்தவகையிலும் அவளை பாதிக்காது என்பது அவனுக்கு தெளிவாக விளங்க ஆரம்பித்தது.

என்றும் போலில்லாமல் ஒர் தெளிவான மனதுடன் சுக்குவிடம் இருந்து வந்த அந்த SMSயை டெலீட் செய்துவிட்டு. போனை க்ளோஸ் பண்ணினான். சுக்குவிடம் இருந்து வந்த SMS யை பாஸ் இப்படி டெலீட் செய்வது இதுதான் முதல் முறை. பாஸ் முட்டாள் போல வாழ்க்கையில் கடந்த காலத்தையே திரும்பிப்பார்க்காமல், முன்னால் வருங்காலத்தைப் பார்க்க ஆரம்பித்தான். தன் இன்ப துன்பங்களை யோசிக்க ஆரம்பித்து, தன் மனநிலை முக்கியம் என்று சுயநலமாக மாற ஆரம்பித்தான். தனக்கும் சுயமரியாதை இருக்கு என்று தன்னுடைய பெரிய ஈகோவை சொல்லிக்கொண்டான்.

அடுத்தநாள் மீட்டிங்க்கு அவன் செய்ய வேண்டிய ப்ரெசெண்டேசன்ல வேலை செய்ய ஆரம்பித்தான். அவனுக்குத் தெரியும், அவன் பதில் எழுதவில்லை என்றால் சுக்கு இனிமேல் அவனை தொந்தரவு செய்ய மாட்டாள் என்று. அவளை நிம்மதியாக வாழ வழிசெய்த திருப்தியில் அன்று இரவு நிம்மதியாக தூங்கினான். சில உறவுகள் தொடரும். சில உறவுகள் முறியவும் செய்யும்!

1/24/2010

உன்னைக் கண்டதும் காதல் வந்தது.

காதல் வந்தது...
உன்னைக் கண்டதும்.
கண்கள் கண்டது....
உந்தன் புன்னகை.
உலகம் உருண்டது....
உன்னைத் தேட.
என்னுருவம் குலைந்தது.....
உன்வாசம் அடைய.

இமைகள் மூடுதே புயற் காற்றில்.
புருவம் உயருதே உனைப் பார்த்து.
விழிகள் பேசுதே உனை நோக்கி.
வார்த்தை மயங்குதே உன்நடை கண்டு.
உன் பாதம் பட்ட பூமி இது
வைரக்கல்லாய் மாறும் நேரமிது.
உன் பாசம் பட்ட பார்வை இது
உன்னை நோக்கி நகரும் நேரமிது.

அமைதி தேடுதே கடல் அலைகள்.
அகிலம் போற்றுதே உன் அதிசயங்கள்.
அழகே அழகு உன் அழகு.
அடிமை ஆனது இவ் உலகு.
நீ பேசும் மொழிகள் எல்லாம்
நீந்திப் போகுது நிலவிற்கு.
மழையாய் விழும் உன் கவித்துளிகள்
மண்ணில் மயங்குது மதுவாய்.

மனிதம் (சொன்னது பாதி....)

தொலைக் காட்சி பார்த்துக் கொண்டிருந்தோம். செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது.
சாதாரணமாகவே செய்திச் சேனல்கள் உணர்ச்சியைத் தூண்டி விடுவதில் நல்ல சேவை புரிந்து வருகின்றன. ஆனாலும்...


பார்த்துக் கொண்டிருந்த என் நண்பன் ஒரு சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்தான். 1997 ஆம் ஆண்டு. மதுரையில் ஒரு கல்லூரி. பரீட்சை எழுத வேண்டி கல்லூரிக்கு சென்ற போது நடந்தது. பரீட்சை ஹால் மாடியில்...கல்லூரியைச் சேர்ந்த ஊழியர் அந்த ஹாலை திறக்க வேண்டி செல்ல, உடன் என் நண்பனும் சில மாணவர்களும்...அந்தக் கல்லூரியில் மராமத்துப் பணிகள் முடிந்திருந்த நேரம்...கதவின் மீது கூட பெய்ன்ட் அடித்து கண்ணாடிக் கதவு என்று உணர முடியாத படி செய்து வைத்திருந்த கதவைத் திறக்க முயன்ற அந்த ஊழியர் இரண்டு முறை தள்ளிப் பார்த்திருக்கிறார்...திறக்க வரவில்லை, ஏதோ தடுக்கிறது என்ற உடன் கதவை வலுவுடன் தள்ளி இருக்கிறார்.


என்ன நடந்தது என்று உணரும் முன்னே நடந்து விட்டது. என் நண்பன் பார்த்த காட்சி..... உள்ளே நுழைந்த நிலையில் அந்த ஊழியரின் கை. ரத்தம் நீரூற்று போல உயரமான அந்தக் கட்டிடத்தின் மேல் சுவர் வரை பீச்சி அடித்தது. நண்பன் சட்டை எல்லாம் கூட ரத்தம். கையை வெளியே இழுத்த அந்த ஊழியர் ரத்தக் களரியான தன் கையைப் பார்த்து மயக்கமானார். சாதாரண மனிதர்களுக்கே இருக்கக் கூடிய உள்ளுணர்வுடனும், மனிதாபிமானத்துடனும் நண்பனும் இன்னும் சிலரும் உடனடியாக கொஞ்சமும் தாமதம் செய்யாமல் சட்டையைக் கிழித்து ரத்தம் ஊற்றும் கையின் மீது கட்டி, மாடியிலிருந்து மயக்கமாகி விட்ட அவரைத் தூக்கி கொண்டு கீழே இறங்கி ஓடி வந்தனர். அப்போதுதான் ஒரு பேராசிரியர் வந்து இறங்கிய ஆட்டோவில் உடனடியாக அவரை ஏற்றி சாலையிலிருந்து தள்ளி இருக்கும் அந்தக் கல்லூரியிலிருந்து மெய்ன் ரோடை அடைந்து, விரைவாக அருகிலிருந்த ஹாஸ்பிடலில் சேர்த்தனர்.


அவரை கவனித்த மருத்துவர்கள் நிலைமை 'கிரிடிகல்' என்று கூறி ரத்தப் போக்கை எடுத்துக் காட்டி, பின்னர் காப்பாற்றியவுடன் சொன்னது..."இன்னும் ஒரு எட்டு பத்து நிமிடங்கள் தாமதமாக வந்திருந்தால் கூட ரத்தமிழந்ததால் இவரை காப்பாற்ற முடியாமல் போய் இருக்கும்.."


பிறகு நண்பன் அந்தப் பரீட்சையை எழுத மனமில்லாமல், முடியாமல், மற்றவர்களின் வற்புறுத்தலுக்காக எழுதி பாசும் ஆனது தனிக் கதை. ஆனால்,


மருத்துவத்துறை சேராத மனிதனாய் இருந்தும் நிலைமையின் அவசரம், விபரீதம் உணர்ந்து எதைப் பற்றியும் கவலைப் படாமல் செயலில் இறங்கிய மனிதத்தை என்னென்பது...


யாரையாவது அழைத்து உதவி செய்யுங்கள், வண்டி கொண்டு வர ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லாமல் தூக்கிக் கொண்டு ஓட வைத்த அறிவு...மனிதம்.


எந்த அதிகாரமும் இல்லாத சாதாரண பொது மக்களில் ஒருவனாய் இருந்தாலும் கிடைத்த வண்டியில் ஏற்றி, காலத்தின் அருமையை உணர்ந்த, வீணாக்காத புத்திசாலி நிமிடங்கள்...


உயிர் காக்கும் நிமிடங்கள்..


மனிதம். தங்க வரிகள்.

செய் / செய்யாதே!

தினமும் காலையில் கேஸை நேரடியாகப் பற்ற வைக்கப் போகாமல், ஜன்னல் கதவுகளைத்திறந்து வைத்து சற்று நேரம் கழித்து பற்றவைக்கும் பழக்கம் வைத்துக் கொள்ளலாம்.
எந்த சுவிட்சும் ஆன்/ஆஃப செய்யும் முன்பு காஸ் வாசனை வருகிறதா என்று பார்த்தல் மிகவும் நலம். If you smell gas, do not light anything or switch on / off anything in that area.
நறுக்கவேண்டிய பொருட்களை முன்னரே தயாராக நறுக்கி தயாராக வைத்துக் கொண்டும், தாளிதப் பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டும் அடுப்பு பற்ற வைக்கலாம்.
குழிவான குறுகிய பாத்திரங்களை அடுப்பில் வைப்பதைவிட அகலமான பாத்திரங்கள் வைப்பதால் எளிதில் சூடாகி, எரிபொருளை மிச்சப்படுத்தும். அடுப்பில் என்றால் குழிவான குறுகிய வாய் உடைய பாத்திரங்கள் கை சுடுவதைக் கட்டுப்படுத்தும். கொதிக்கும்பொழுது கன்வெக்ஷன் முறையில் கிளறிவிட வேண்டிய அவசியம் குறையும். மின் அடுப்பு காஸ் இவற்றுக்கு அகலப் பாத்திரங்கள்தான் சரி. அம்மாவிடம் சொல்லிப் பாருங்கள் "அவ்வளவு அகலச் சட்டியில் வடை போடணும்னா எவ்வளவு எண்ணெய் செலவாகும் தெரியுமா?" என்பார். சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி தேர்ந்தெடுங்கள்.
ஈயச் சொம்பு ரசம் என்றால் தனி ருசிதான். இன்னமும் என் பாட்டி ஈயச் சொம்பில் ரசம் வைக்கிறார். ஆனால் ஒன்று, கவனமில்லாமல் சீரியல் பார்க்கப் போய் விட்டாலோ, தொலை பேசிக் கொண்டிருந்தாலோ திரும்பி வந்து பார்க்கும் போது சொம்பே உருகி காணாமல் போய் இருக்கும். ( ஈயச் சொம்பை குக்கருக்குள் வைத்து ரசம் பண்ணிப் பாருங்களேன்.)
வேலை முடிந்தவுடன் கேஸ் சிலிண்டர் ரெகுலேடர் வால்வ் மூடி வைத்துவிடுதல் நலம்.
வெந்நீர், பால் போன்றவற்றுக்கு, ஏன் இட்லிக்குக் கூட induction stove வும், திரும்பச் சூடு படுத்தும் வேலைகளுக்கு microwave oven உம உபயோகித்தால் எரிபொருள் மிச்சப் படுத்தலாம்.
Induction stove இல் அதிக பட்ச சூட்டில் வைக்காமல் சற்றுக் குறைவான அளவில் வைத்து உபயோகப் படுத்தினால் load shedding தவிர்க்கலாம். ( ஆம். திரவப் பொருள்களைக் கொதிக்கவைக்கும் எந்த சமையலுக்கும் induction stove மிகவும் பொருத்தம். Induction stove இல் அதிக பட்ச சூட்டில் வைக்காமல் சற்றுக் குறைவான உஷ்ண நிலை அளவில் வைத்து உபயோகப் படுத்தினால் மின்செலவு குறைக்கலாம்.)

நான் எப்பவுமே ஃபிரிட்ஜ் பால் பாக்கெட் வைக்கும்பொழுது, பாக்கெட்டின் வெளிப்புறம் நன்றாகக் கழுவி, ஏற்கெனவே இருக்கும் பால் பாக்கெட்டுகளை, பிராண்ட் பெயர் மேலே வரும் வகையில் - திருப்பி வைத்து, புது பாக்கெட்டின் நிறமில்லா வெள்ளைப் பக்கம் மேலே வரும்படி வைப்பேன். இதன் மூலம், பால் பாக்கெட்டை, ஃபிரிட்ஜிலிருந்து எடுக்கும்பொழுது, பழைய பால் பாக்கெட் எது, புதியது எது என்று ஈசியாகத் தெரியும்.
ஃப்ரிஜ்ஜில் வைத்திருப்பதை நேரடியாக அடுப்பில் ஏற்றாமல் சற்று நேரம் வெளியில் வைத்திருந்து பின்னர் அடுப்பில் வைத்தால் எரிபொருள் மிச்சமாகும். ( ஃ ப்ரீசரிலிருந்து எடுக்கப் பட்ட பொருட்கள் மைக்ரோவேவ் ஓவனில் வைக்கும்பொழுது உள்ளிருந்து சூடாவதால், வெடித்துச் சிதற வாய்ப்பிருக்கிறது. பலாக்கொட்டையை சூடாக்கிப் பின் படாத பாடு பட வேண்டி வந்தது ஓவனை சுத்தம் செய்ய!)
ஃபிரிஜ், கேஸ் ஸ்டவ் அருகருகே இருக்கக் கூடாது. ஃ பிரிஜ் என்றில்லை. மின் பொறி உண்டாக்கக்கூடிய எந்த உபகரணமும் காஸ் அடுப்பு அருகிலோ அல்லது காஸ் அடுப்புக்குக் கீழோ கட்டாயம் இருக்கக்கூடாது.

1/22/2010

உங்க பெர்சனாலிட்டிக்கு சூப்பர் பொண்ணு கிடைக்கும் பிரதர்,

செல்போன் வந்த எல்லோரும் உபயோகப்படுத்த ஆரம்பிக்காத ஒரு சிலரே வைத்திருந்த தருணம், பேசுவதற்கும், எவராவது அழைத்தால் பதில் சொன்னாலும் காசு தான் என்ற சமயம்.

பொள்ளாச்சி தங்கை வீட்டுக்கு போய்விட்டு வீடு திரும்பும்போது, கோவை செல்லும் பஸ்ஸில் மணி வந்து கொண்டிருந்தான். அளவான கூட்டம், நான்கைந்து பேர் மட்டும் படியில் இரு பக்கங்களிலும் நின்றிருக்க, நன்கு படியினை விட்டு தள்ளி உள்ளே நின்றிருந்தான்.

அப்போதுதான் நல்ல மப்பில் இருந்த ஒரு சக பயணிக்கு ஒரு அழைப்பு வர கலாட்டா ஆரம்பமானது.

'ம்... சொல்லுடா மாப்ளே, அந்த தே...பையன் அப்படி சொல்லிட்டான்டா, அவன உண்டு இல்லன்னு பண்றேன். குளோஸ் தான், வேற வழியே இல்ல'... தொடர்பு துண்டித்துப்போக, திரும்ப இவர் அழைத்தார்.

'டேய் தே... மவனே, ஏன்டா கட் பண்ணினே? அவ்வளவு பெரிய ஆளா, உன்னையும் குளோஸ் பண்ணிடுவேன்.... இந்த கதைல்லாம் விடாதே, எனக்கு தெரியும். என்னது கோவப்படாதவா... அத சொல்ல நீ யாரு... வெக்காத, அந்த நாயி என்ன சொன்னான் தெரியுமா?'... மறு முனையில் வைத்துவிட சற்றும் தளறாமல் திரும்பவும் அழைத்தார்.

'டேய், இந்த டகால்டியெல்லாம் எங்கிட்ட வெச்சிக்காத. என்னுதுல காசு இல்ல... அலோ..அலோ.....'

சப்தம் அதிகமாயும், அச்சேற்ற முடியாத அருவருப்பான வார்த்தைகளாலேயே அவர் பேச எல்லோருக்கும் அருவறுப்பு. சொல்வதற்கோ கண்டிக்கவோ அவரது நிலையைப் பார்த்து எல்லோருக்கும் தயக்கம். பேசும்போதெல்லாம் வெட்டு கொலை என்றுதான் அதிகமாய் வந்துகொண்டிருந்தது.

திரும்பவும் அவர் அழைக்க ஆரம்பிக்க, எல்லோருக்கும் தெரிந்தது அவர் ஒரு வெத்து வேட்டு என. அவரது வாயாலேயே பேலன்ஸ் இல்லை என சொல்லி விட்டபடியால், சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தோம். பத்துநிமிடப் பேச்சின் பிறகு எதிர்புறம் இல்லாமல் இவர் துண்டித்தார்.

மீண்டும் யாருக்கோ அழைத்த அவரின் வார்த்தைப் பிரவாகம் அதிகமாய் போக, மணி ரொம்பவும் கோபத்துடன் அருகே வந்த கண்டக்டரிடம் 'என்ன சார் இப்படி பேசிகிட்டு வர்றார் கண்டிக்க மாட்டீங்களா' எனக் கேட்க அவருக்கு வந்தது ஒரு வேகம்.

அந்த நபரின் சட்டையினை பிடித்து உலுக்கி செவட்டில் ஓங்கி ஒரு அறை விட, அவரின் போதையெல்லாம் சட்டென இறங்கி போனை பாக்கெட்டில் பாக்கெட்டில் போட்டு வாயை மூடிக்கொண்டார். டிரைவர் நிறுத்தி என்ன விஷயம் எனக்கேட்க 'ஒன்னுமில்ல வண்டிய எடு போலாம்' என கண்டக்டர் சொன்னவுடன்,

மணி 'சார் இந்த ஆளை இங்கேயே இறக்கிவிட்டுட்டு போனாத்தான் புத்தி வரும்' என மறுத்து சொன்னான்.

'அட விடுப்பா, அதான் அடிச்சவுடனே அடங்கிட்டான்ல' ஒரு பெரியவர் சொல்ல வண்டி கிளம்பியது.

மணி மாட்டிவிட்டுட்டியே என்ற ஒரு பார்வையை பார்த்துக்கொண்டே வர, அவனுக்கு கிலி கிளம்பியது.

கோவை வந்ததும், உக்கடம் பஸ் ஸ்டாப்பில் அந்த ஆள் இறங்குவாரா என பார்க்க.. இறங்கவில்லை. மாறாக, காலியான சீட்டில் சட்டென மணி உட்கார, அவரும் அவனுக்கு அருகிலேயே முறைத்தபடி உட்கார இன்னும் டரியலானது.

உன்னை கவனித்துக்கொள்கிறேன் என்பதுமாதிரியான பார்வை. சரி இன்று சங்குதான் என எண்ணியபடி பயந்து பழைய பஸ்ஸ்டாண்ட்ல இறங்கி நடந்து போயி இருகூர் பஸ்ஸை பிடித்துக்கொள்ளலாம் என எண்ணி, உயிரை கையில் பிடித்தபடி இருக்க, அப்போதுதான் அந்த எதிர்ப்பாராத சம்பவம் நடந்தது.

திடீரென அந்த நபர் மணி கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தார்.

'அந்த தே.. பையன் நம்ப வெச்சி கழுத்த அறுத்திட்டான், அவளை எப்படி லவ் பண்ணினேன் தெரியுமா?' என தேம்பி தேம்பி அழ

அப்புறம்தான் எல்லாம் தெரிந்தது. அவர் திட்டியதெல்லாம் அவரது தாய்மாமனை. பெண்ணை தர முடியாதுன்னு சொல்லிவிட்டாராம்.

ஐந்து நிமிடம் தோளில் சாய்ந்து அழுதவண்ணம் வர, அவரை ஒருவாறு சமதானப்படுத்த முயல அவரின் அழுகை அதிகமானவண்ணம்தான் இருந்ததேயொழிய குறையவே இல்லை.

'விடுங்க பிரதர், உங்க பெர்சனாலிட்டிக்கு சூப்பர் பொண்ணு கிடைக்கும்' என மணி சமாதானப்படுத்தினான்.

பஸ் ஸ்டான்ட் வந்தவுடன் ரொம்பவும் தெளிவானவர் போல் மலர்ச்சியுடன், 'ரொம்ப தேங்க்ஸ் பிரதர், வாழ்க்கையில மறக்கவே மாட்டேன்' என சொல்லி விட்டு செல்ல அவன் மனதை ஏதோ செய்தது.

இது கற்பனையே இவன்;கோவை ராமநாதன்

வாழறதும் சாவறதும் உன் வார்த்தையில...

கருத்த உடம்புக்காரி
கனிவான பேச்சுக்காரி
பொறுத்தமா நானிருக்க
புடிக்காம போனதென்ன

தெருவிலென்ன பாத்துபுட்டா
வாடிப்போன பூவாட்டம்
சிரிச்சிட்டே வந்தாலும்
சிடுமூஞ்சா மாத்திக்கிற

பொறுத்தமெலாம் பாத்துபுட்டு
புகளூரு சோசியனும்
சிறப்பா இருக்குதுன்னு
சிலிர்த்திடவே சொல்லிபுட்டான்.

வருகிற தைமாசம்
ஊரையெல்லாம் சேர்த்தழச்சி
திருமணத்த செஞ்சிடத்தான்
தினமும் நான் ஏங்கையில

வருத்தியென்னை நோவுசேரும்
வழியெனக்கு காட்டி நீயும்
வருத்தம் மட்டும் தந்துயென்ன
வாட்டத்தில விடுறியே

இரும்பான உடம்பிருந்தும்
இளகுன மனசெனக்கு
கரும்புனக்கு புரியலையா
காள மனம் தெரியலையா?

கண்ணுக்குள்ள உன்ன வெச்சி
காதலையும் பேசி பேசி
ஆணிமுத்தே உன்ன நானும்
அணுவணுவா நேசிக்கிறேன்

திண்ணையில தூங்கயில
தெருவோரம் போகையில
மண்ண விண்ண பாக்கையில
மாலையில காலையில

எல்லாமா நீயிருக்க
இது உனக்கு தெரியலையா
பொல்லாத உயிரதயும்
பொத்திவெச்சி காத்திருக்கேன்

நல்ல பதில் சொல்லிபுட்டா
நா வணங்கும் சாமிக்கு
எல்லா சிறப்பு செஞ்சி
ஊரெல்லாம் மெச்சும்படி

கலகலன்னு செஞ்சிடுவேன்
கவலையெல்லாம் விட்டிடுவேன்
நிலை குலஞ்ச எம்மனசும்
நெறைஞ்சி தெளிஞ்சிடுவேன்

வாழறதும் சாவறதும் உன்
வார்த்தையில தாயிருக்கு நல்
சொல்லதயும் சொல்லிநீயும்
சொர்க்கமத காட்டு புள்ள...

சந்தேகப் பிராணிகள் [நான் படித்த ஒன்று]

'வளர்ப்புப் பிராணிகள்' பற்றி என் அபிப்பிராயம் கேட்டார்கள்.என்னவென்று சொல்ல..

டிவியில் ஓடி வரும் குட்டி நாய் பார்த்தால் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. தெருவில் செயின் கட்டி நடந்து வரும் நாய் சகித நண்பர்களைப் பார்த்தால்.. 'சற்றே விலகி இரும் பிள்ளாய்' என்று ஒதுங்கிப் போகத் தோன்றுகிறது.

அது போகட்டும்.. எனக்குத் தெரிந்ததெல்லாம் "சந்தேகப் பிராணிகள்தான்" என்றேன்.

நண்பர் முறைத்தார்.என் அலுவலகத்தில் தனது மேஜையை பூட்டி விட்டு இழுத்து.. இழுத்து.. இழுத்து.. பார்க்கும் ஒரு நண்பரைப் பற்றி சொன்னேன். "அவர் இழுக்கிற வேகத்துல பூட்டியிருந்தாக் கூட டிராயரே வெளியே வந்திரும்போல.."

இதில் அவருக்கு நம்பிக்கை குறைந்து.. பூட்டியபின் அதன் சாவித் துவாரத்தை திருப்பி அமைப்பது.. ஒரு நூல் எடுத்து சுற்றி வைப்பது.. என்றெல்லாம் ஆரம்பித்தார்.

இன்னொரு நண்பர் ரொம்ப மும்முரமாய் எதையோ சந்தேகத்துடன் தேடிக் கொண்டிருந்தார்.பாவமாய் இருந்ததால் அருகில் போய் "என்ன காணோம்" என்றேன்.

"அதான் மறந்து போச்சு.. இருந்தாலும் தொடர்ந்து தேடிக் கொண்டே இருந்தால் ஞாபகம் வந்துரும்னு.."

இன்னொரு தம்பதிகள். இரண்டு பேருமே எங்கள் அலுவலகம்தான். வெவ்வேறு பகுதிகளில் பணி. மனைவி சற்று லேட்டாக வீடு திரும்பி விட்டால் போச்சு. வீட்டு வாசல் கதவைப் பூட்டி விடுவார். என்ன கெஞ்சினாலும் திறக்க மாட்டார்.

சக (பெண்) அலுவலகருக்குக் குழந்தை பிறந்திருந்தது. பெயர் சூட்டு விழாவிற்கு வற்புறுத்தி அழைத்துப் போனோம். வரும் வழியெல்லாம் அவர் புலம்பல். 'இன்னிக்கு என்ன ஆகுமோ'

அதே போலத்தான் நடந்தது.. கதவைப் பூட்டி கணவர் உள்ளே. பக்கத்து வீடுகளில் வேடிக்கை பார்க்க இவர் அவமானத்தில் நெளிய.. ஒருவழியாய் இவர் மன்னிப்பு கேட்டு 'இனிமேல் எங்கேயும் போக மாட்டேன்' என்று வாக்குறுதி கொடுத்தபின் கதவைத் திறந்து உள்ளே அனுமதிக்கப்பட்டார். மறு நாள் நாங்கள் மன்னிப்பு கேட்டோம் அவரிடம். வற்புறுத்தி அழைத்துப் போனதற்காக.

கிளைமாக்ஸ் என்னவென்றால்.. இருவரும் ஓய்வு பெற்று விட்டார்கள் இப்போது. கணவர் நடக்க முடியாமல் படுக்கை. மனைவி சிச்ரூஷை! எதற்கும் அவர் தயவில்!

இயற்கை தன் விதியை சுலபமாய் எழுதி வைத்திருக்கிறது.

எனக்கு ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவிற்கு மாற்றல் கிடைத்ததே ஒரு சந்தேகப் பிராணியால்தான்.

நானும் என் இம்மீடியட் பாஸும் ஏதோ ஒரு சம்பவத்தை பற்றி பேசி சிரித்துக் கொண்டிருந்தோம்.

எங்கள் பகுதி மேலாளர் உடனே என்னை மட்டும் அழைத்தார்.

"இப்ப என்னைப் பார்த்துத் தானே சிரிச்சே"

என்ன மறுத்தும் நம்பவில்லை. வேறு நபர்களும் எனக்கு ஒத்தாசைக்கு வரவில்லை. என் பாஸ் உள்பட.

திகைத்துப் போயிருந்தார்கள்.

எனக்கு அழுகையே வந்து விட்டது.

வடிவேலு காமெடி போல சரமாரியாக அவர் ஆங்கிலத்தில் திட்ட அதற்கு அர்த்தம் வேறு பாதி புரியாமல்.. 'யெஸ்.. யெஸ்.. நோ.. நோ..' என்று சமாளித்து முடிவில் சொல்லிவிட்டேன்.

"ஸார்.. இஃப் யூ டோண்ட் பிலீவ் மீ.. ஐ காண்ட் ஹெல்ப்.. யூ டு வாட் யூ விஷ்"

எனக்குக் கோபத்தில் சுமாராய் இங்க்லீஷ் வரும்!

உடனே என்னை மாற்றி விட்டார்கள், இவர் சொன்னதால்.

அதுவும் அடுத்த பகுதி மேலாளர் இதைக் கேள்விப்பட்டு.. ' நான் அவரை எடுத்துக்கறேன் ' என்று சொன்னாராம்.

அப்புறம் என்ன.. ஒரு சந்தேகப் பிராணியிடமிருந்து தப்பிய எனக்கு சகாக்கள் வந்து வாழ்த்தி விட்டு போனார்கள்.

ஆமா .. ஒரு சந்தேகம் ..

சந்தேகப் பிராணிகள் எல்லாம் எந்த காட்டைச் சேர்ந்தவை?!

1/21/2010

இது நம்ம ஊரு நல்ல ஊரு

கோவை ஒரு பார்வை

இது தொழில் வளர்ச்சியிலும் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும் மேம்பட்ட நிலையில் உள்ள நகரமாகும் முன்னாடி தென்னிந்தியாவின் மான்சிஸ்டர் .. இப்ப ப்ளாட்ஸ்.டிராப்கிஸ் அதெல்லாம் சரி. ஊருக்குள்ள வந்தாலேஒரு நிம்மதி ஃபீல் பண்றீங்களான்னு கேட்டா நூத்துக்கு 99 பேர் யெஸ்னு சொல்வாங்க.

என்ன பியூட்டின்னா முன்னை விட இப்பல்லாம் நிறைய தொந்திரவுகள். பர்ஸ்ட் கொசு.. கொசுப்படைன்னே சொல்லலாம்.

மருந்து அடிக்க கார்ப்பரேஷனுக்கு மறதி. ஆனா மறக்காம இனவிருத்தி பண்ற கொசு!

கதவை எல்லாம் மூடி வச்சாக்கூட ஹேங்கர்ல தொங்கற சட்டையை ஆட்டினா 100 கொசு பறக்கும்.

அப்புறம் மழையே இல்லை!

காவிரிக்கு அந்தப் பக்கம் அடிக்கற மழை கூட இந்தப் பக்கம் சொட்டு சொட்டா தெளிச்சுட்டு போவுது. வருஷத்துல 6 மாசம் வெய்யில். மீதி 6 மாசம் கடுமையான வெய்யில்.

பருத்தி பூமிடா இதுன்னு எதிர் வீட்டு பாட்டி சொல்றப்ப 'ஆன்னு' வாயைத் திறந்துகிட்டு கேட்டது ஞாபகம் வருது.

அதுக்காக பன்மாடிக் குடியிருப்புகள் விற்பனை குறையுதான்னா 'நோ'

பூமி பூஜை போடறப்பவே எல்லா வீடும் புக் ஆயிருது.

லிப்ட் இருக்கா.. கார் பார்க்கிங்க் இருக்கா.. ஹாஸ்பிடல் வசதி பக்கத்துல இருக்கானு வயசான கூட்டம் ஒண்ணு வந்து செட்டில் ஆயிருக்கு.

வருஷம் முழுக்க பட்டீஸ்வரர் (பேரூர்),முருகர்(மருதமலை) இவங்க ரெண்டு பேரும் முழுக்க கவர் பண்ணிடறாங்க. அத்தனை பேரும் அவர் பின்னாடி மந்திரிச்சு விட்ட மாதிரி தெருவுல போகறதைப் பார்த்தா ஸம்திங்க் இருக்குன்னு தோணுது.

கடவுள் இல்லைன்னு சொல்ற கூட்டம் கூட நாலு தெருவையும் விடியற்காலையில சுத்தி வரதைப் பார்க்கலாம்!

ஸோ கால்டு கழகக் கண்மணிகள்!

டாக்டர் அட்வைஸ். டிராபிக் ரோட்டுல போனா அடிபட்டுக்குவோம்னு பயமோ.. இல்ல.. பொல்யூஷன் பிரச்னையோ.. சித்திரை வீதி.. உத்திரை வீதில ஜாம் ஜாம்னு நடக்கலாம்.

வாக்கிங்க் ப்ளஸ் புண்ணியம்னு ஆத்திகக் கூட்டம் கணக்கு போடற மாதிரி நாத்திகக் கூட்டமும் நாசூக்கா நடக்குது.

மழையே வராதுன்னு கார்ப்பரேஷன் முடிவு கட்டிட்ட மாதிரி தெருவுல மண்ணே இல்லாம காங்கிரீட் ரோடு போட்டாச்சு.

மழை நீர் சேகரிப்புன்னு கண்டு பிடிச்ச நல்ல விஷயத்தையும் ஊத்தி மூடியாச்சு.

திடீர்னு ஏதோ ஒரு பேர்ல கூண்டு வச்சு செடி வளர்த்து மரமாக்கி அப்புறம் ஏதோ காரணம் சொல்லி வெட்டிப் போடற வித்தை மனுஷங்களுக்குத்தான் சாத்தியம்.

வீதிகள்ல இந்தக் கொடுமை அரங்கேறினதைப் பார்க்கறப்ப 'வளர்ப்பானேன்.. வெட்டுவானேன்னு' தோணும்.

இவ்வளவும் மீறி எப்பவோ தீர்மானிச்ச சட்ட திட்டங்கள் முருகர் காப்பாத்துது இன்னமும்னு நினைக்கறப்ப (அதுக்கும் அப்பப்ப சவால் வருது) ஒரு பெருமூச்சு ரிலீஸ் ஆகறதைத் தடுக்க முடியல.

அப்படின்னா கோவை பத்தி நல்ல விஷயமே இல்லியான்னு நினைச்சிராதீங்க. நான் சொல்ற இந்த கம்ப்ளெயிண்ட்ஸ் எல்லா ஊருக்கும் பொதுதானே!

அப்பப்ப கோவை பத்தி பேசுவோம்...

எழுத்து :அ.ராமநாதன்

கோபம் வராமல் இருக்க என்ன வழி ?

கோபம் வராமல் இருக்க..
நான் எதுவும் வழி சொல்லப் போவதில்லை.. ஏன்னா.. எனக்கே பயங்கரமா கோபம் வரும். அதனால என் அன்பு நண்பர்களே.. நண்பிகளே.. உங்களுக்கு ஏதாச்சும் வழி தெரிஞ்சா சொல்லுங்க..

அதுக்கு முன்னால.. சமீபத்துல பல் வலின்னு டாக்டர்கிட்ட போனேன்.. 'ரொம்ப கோவம் வருமா'

எனக்கு ஆச்சர்யம்.

"எப்படி ஸார் கண்டு பிடிச்சீங்க?"

"பல்லை இந்த அளவு கடிச்சு தேய்ச்சு வச்சிருக்கீங்க"

பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் எல்லாப் பல்லுக்கும் கேப் போட்டு விடறேன்னார்.

"அப்புறம் பிரச்னை இருக்காதே"

"இனிமே கோபம் வந்தா பல்லை மட்டும் கடிக்காம இருங்க"

என்னால் அது மட்டும் முடியாதுன்னு பத்தாயிரத்தை பத்திரமா எடுத்துகிட்டு வந்தாச்சு.

ஒரு எம்டிகிட்ட போனேன்.

"ஏன் கோபம் வருது"

"அது என்னவோ தெரியல டாக்டர்..ஒரே விஷயத்தை யாராச்சும் ரெண்டு தடவை கேட்டா கோவம் வருது.. முதல் தடவை சொல்லும்போதே காதுல வாங்கறதில்லயான்னு"

"புரியல.. என்ன சொல்றீங்க"

"யோவ்.. ஒரு தடவை சொன்னா புரியாதா.."

கத்திட்டேன். டாக்டர் அவர் பக்கத்தில் இருந்த நர்ஸ் ஓடப் போவதை குறிப்பால் உணர்ந்து ஜாடை காட்டி ஊசி எடுக்கச் சொன்னார்.

"டேபிள் மேல ஏறி குப்புற படுங்க"

"இப்ப எனக்கு எதுக்கு டாக்டர் ஊசி எல்லாம்"

"உங்களை அமைதிப்படுத்தத்தான்"

"டாக்டர்.. எனக்கு எந்த வியாதியும் இல்ல..உங்களுக்கு இப்ப பேஷண்ட்டும் இல்ல.. நாம கொஞ்சம் பேசலாமா.. அப்புறம் முடிவு பண்ணுங்க.. ஊசி போடலாமா வேண்டாமான்னு"

"சொல்லுங்க"

"நாட்டுல கஷ்டப்படறவன் கஷ்டப் பட்டுகிட்டுதான் இருக்காங்க.. கோடி கோடியா சேர்த்து வச்சிருக்கறவங்க பத்தி யாரும் கவலைப்படல.. எந்த நாட்டுல யார் அடிச்சுகிட்டு செத்தாலும் ஒரு கூட்டம் கவிதை எழுதிட்டு அப்புறம் வேற வேலைய பார்க்கப் போயிருது.. அரசியல் 'வியாதிக்கு' உங்ககிட்ட மருந்தே இல்லியா"

டாக்டர் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டார்.

"உங்க கோபம் நியாயமானதுதான்" என்றார் அப்புறம்.

நீங்களே சொல்லுங்க.. கண் எதிரே நடக்கிற எந்த அநியாயத்தையும் தடுக்க முடியல.. மேகசினை / பேப்பரைப் பிரிச்சு படிச்சாலே ஒரு தப்பை எப்படி விலாவரியா செய்ய முடியும்னு வகுப்பு எடுக்கற மாதிரி நியூஸ்.. அப்புறம் கடைசில சாமி கண்ண குத்தும்னு முடிச்சிடறது.. சினிமால எல்லாமே டூ மச்.. இந்த அநியாயங்களை எதிர்க்கற ஹீரோ நிஜத்துல பொலிடிஷியன் கிட்ட சரண்டர்!..

நற,,நற..

ப்ளீஸ்.. என் கோபத்தை அடக்க ஒரு வழி சொல்லுங்க.. என் அன்பு நண்பர்களே.. நண்பிகளே..

நன்றி :ரிஷபன்

நான் படித்த கதையில் ஒன்று -நீங்கள் பேசினால்

'உங்கள் எதிர்காலம் உங்கள் கையில் ' என்றது போர்டு. பெரிய கை ரேகைப் படம். பக்கத்தில் அவன். ஒரு லென்சுடன். எதிரில் கையை நீட்டிக் கொண்டு ஒருவர்.

".. குரு மேடு நன்கு உச்சம் பெற்று அமைந்து இருக்கிறது.. . வியாபாரத் துறையில் நல்ல முன்னேற்றம்.. அதிக லாபம்.." என்று சொல்லிக் கொண்டே போனான்.

லக்ஷ்மி கைக்குழந்தையுடன் சற்று தள்ளி நின்று வேடிக்கை பார்த்தாள்

விழித்துக் கொண்டு சிணுங்கிய குழந்தைக்கு 'ஊம்..ஊம்..' என்று அவள் வாய் ராகம் பாடியது.

உடல் கசகசத்தது. மனப் புழுக்கம் அதற்கு மேல். ஜோசியன் இதற்குப் பதில் சொல்வானா?

தாலி கட்டியவன் ஒரு மாதமாய் அவளுடன் பேசவில்லை. சின்ன விஷயம். சொல்லி விட்டு போன வேலையை செய்து வைக்கவில்லை. மாலையில் வந்தவன் கேட்டான். பேசாமல் மனசாட்சி உதைக்க தலை குனிந்து நின்றாள்.

அவனுக்கு முணுக்கென்றால் கோபம் வரும். வார்த்தைகள் இரையும்...ஒருமுறை.. மறுமுறை பட்டினி கிடப்பான். அன்று பேசாமல் போய் விட்டான்.

பிறகுதான் அன்று அவன் விதித்த தண்டனை புரிந்தது. ஒரு மாதமாகிறது அவளுடன் பேசி.

'கோபமா .. எதிரே கூப்பிடு .. நன்றாகத் திட்டு. ரெண்டு அடி வை. பேசாமல் என்னைப் பலவீனப் படுத்தாதே.' என்று கண்களால் கெஞ்சினாள்.

அவன் குறிப்பறிந்து தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குள் அந்த ஒரு மாத காலத்திலேயே உருக் குலைந்து போனாள்.

கடவுளே இந்தக் கஷ்டம் .. இந்த தண்டனை எப்போது தீரும்.. மறுபடியும் எப்போது மனம் மாறிப் பேசுவான்.. கசகசத்துப் போன ரூபாய் நோட்டுகளைப் பிரித்து நீவி விட்டாள்.

பத்தே நிமிடத்தில் எதிர்காலம் தெரிந்து கொணடவன் விலகிப் போக லக்ஷ்மி அவனெதிரே போய் நின்றாள்.

நிமிர்ந்தவன் அவளைப் பார்த்ததும் திடுக்கிட்டு போனான்.

கையை நீட்டினாள்.

"பலன் சொல்லுங்க.. புருசன் அன்பா நடந்துக்குவாரா.. வாழ்க்கை நல்லபடியா இருக்குமா.. உங்க மனைவியா வரல.. பலன் கேட்கிறவளா வந்திருக்கேன்.. பேசுங்க.. ஏதாவது பேசுங்க.. என்று குரல் உடைந்து அழ ஆரம்பித்தாள்.

மீண்டும் விழித்துக் கொண்ட கைக் குழந்தை இருவரையும் பார்த்து சிரித்தது.

அவாஸ்ட் அண்டி வைரஸ்ஸின் புதிய பதிப்பு

அவாஸ்ட் அன்டி வைரஸ்ஸின் புதிய பதிப்பான 5.0.377 கடந்த 19 ஜனவரி 2010 இல் வெளியாகியுள்ளது. மிகவும் நீண்ட காலத்திற்குப் பின் வெளிவந்த அவாஸ்டின் ஒரு பதிப்பு இதுவாகும். புதிய லோகோ மற்றும் இன்டர்பேஸ் உடன் வந்திருக்கும் இதை வீட்டுப் பாவனைக்கு இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி ! வெற்றி !! வெற்றி !!!

முன்னேற்றத்தை நோக்கி செல்லும் போது அது எவ்வளவு
சிறிதாயிருந்தாலும் பரவாயில்லை,அடி எடுத்து வையுங்கள்

சிந்தனையும் செயலும் ஒன்றாகிவிட்டால் வாழ்க்கையில்
வெற்றியை எளதில் பெற்று விடலாம்.

விடுகதை















ஒரு ஹெலிக்கொப்டர் சில விலங்குகளை ஏற்றிக்கொண்டு ஒரு காட்டிலிருந்து வேறொரு காட்டிற்கு செல்கிறது. அப்போது ஒரு மிகப்பெரிய குளத்தை கடக்கும் பொது ஒரு குரங்குக்குட்டி தவறி கீழே விழுந்து விடுகிறது. விழுந்த குரங்குக்குட்டி குளத்தின் நடுவே இருந்த ஒரு சிறிய மரத்தில் தாவிப்பிடித்துக்கொள்கிறது. ஹெலிக்கொப்டரில் இருந்தவர்களுக்கு குரங்குக்குட்டி கீழே விழுந்தது தெரியாது.மிக ஆழமான குளம்,மக்கள் நடமாட்டம் எதுவுமில்லை,எந்தவிதமான கடற்போக்குவரத்துமில்லை,குரங்குக்குட்டிக்கு நீச்சல் தெரியாது. குளத்தின் கரையை அடைய எந்த உதவியும் குரங்குக்குட்டிக்கு இல்லை எப்படி அந்த குரங்குக்குட்டி கரையை அடையும்?
விடை தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் இந்த வரிக்கு கீழுள்ள Mail Id க்கு கேள்வியுடன் அனுப்புங்கள், விடை அடுத்த நிமிடத்தில் பதில் வரும்.

இதுதான் ரஜினி...

இதுதான் ரஜினி...





எந்திரனின் இறுதிக்கட்ட நடவடிக்கைகளில் ரஜினி மும்மரமாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் புதிய படங்களை பார்ப்பதை மறக்கவில்லை . இந்தவகையில் கடந்த வாரம் ரஜினி பார்த்த படங்கள் 'ஆயிரத்தில் ஒருவன் ' மற்றும் 'குட்டி ' என்பனவாகும். இதில் ஆயிரத்தில் ஒருவனை தயாரிப்பாளர் ரவீந்திரனின் அழைப்பின் பேரிலே பார்த்த ரஜினி கார்த்தியையும், செல்வாவையும் வழமைபோல வியந்து பாராட்டியுள்ளார். நல்லவேளை இந்தத்தடவை ரஜினி படத்தை பாராட்டி கடிதம் வழங்கவில்லை , இல்லாவிட்டால் ரஜினியால்தான் படம் ஓடுவதாக ஒரு தரப்பு கூற, இதுதான் சாட்டென்று ரஜினிக்கு எதிரான குரூப்பு ரஜினியை இஸ்ரத்துக்கு விமர்சித்திருக்கும். தலைவா கிரேட் எஸ்கேப்.....

அடுத்து ரஜினி 'குட்டி ' படத்தை பார்த்தது அவர் சன் மியூசிக்கிற்கு போன் பண்ணியதாலேயே தெரியவந்தது, தனுஸ் பங்குபற்றிய ஒரு நேரடி நிகழ்ச்சியை தொகுப்பாளர் அடம்ஸ் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். வழமை போல தனுஸ் தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார். திடீரென் ஒரு அழைப்பு வந்தது, அழைத்தவர் " நான் ரஜினி பேசிறன் 'குட்டி' படம் பார்த்தேன் , நல்லாயிருக்கு , வணிகரீதியாக படம் வெற்றியடையும், தனுஸ் நன்றாக நடித்திருக்கிறார், பாராட்டுக்கள்" என்றார். தொகுப்பாளருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை அவரது படபடப்பு அதிகரித்தது, அந்தநேரம் பார்த்து ரஜினி " அடம்ஸ் உங்க புரோகிராம் எல்லாம் பார்ப்பேன் , நல்லா பண்றீங்க வாழ்த்துக்கள் " என்றார். அடம்ஸ் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடினார்.

தனக்கு ஆஸ்கார் கிடைத்ததைவிட மகிழ்ச்சி என்கிறார், தான் ரஜினியின் தீவிர ரசிகர் என்கிறார், ரஜினியின் குரல் சிம்மக்குரல் என்கிறார் , இன்னும் என்னென்னவோ எல்லாம் சொல்கிறார். இப்படியே உளறிக்கொண்டிருந்த அடம்ஸ்சிற்கு தொடர்பிலிருந்து ரஜினி சென்ற பின்னர் ஒரு பாடல் ஒளிபரப்பிய பின்னரும் உளறல் அடங்கவில்லை. இதெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தனுஸ் கூறினார் "இதே போலத்தான் எனக்கும் 'காதல் கொண்டேன்' படத்தை பார்த்துவிட்டு ரஜினி என்னை அழைத்து அரை மணிநேரம் பேசும்போதும் இருந்தது, அப்போது நான் யாரென்றே அவருக்கு தெரியாது, அதே போல அந்த அரைமணி நேரம் அவர் என்ன பேசினார் என்பதும் எனக்கு தெரியாது, நீங்கள் இப்போது உள்ளது போலத்தான் நான் அப்போது இருந்தேன் " என்றுகூறி சிரித்தார். இதுதான் ரஜினி

1/19/2010

நாம் மின்னஞ்சல் கணக்கில் வேறு யாராவது விளையாடுகிறார்களா?

ஜிமெயில் பயனாளர்கள் பலர் ஒரு கணினியில் மட்டுமல்லாது பல கணினிகளில் ஜிமெயிலில் பணி புரிகிறார்கள். உதாரணமாக Browsing Centre, அலுவலக கணினி, வீட்டிலுள்ள கணினி, நண்பர்கள் அல்லது உறவினர்களின் கணினி போன்றவற்றில் மின்னஞ்சல் பணிகளை முடித்த பிறகு ஞாபகமறதியால் Sign out செய்யாமல் வந்து விடுகிறார்கள். இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். மொத்தமாக நாம் பணி செய்த அனைத்து கணினிகளிலிருந்தும் ஒரே நேரத்தில் sign out செய்ய இயலுமா?

மேலும் நமது மின்னஞ்சல் கணக்கில் வேறு யாராவது விளையாடுகிறார்களா? என்பதையும் நாம் அறிந்து கொள்ள ஜிமெயிலில் வசதி தரப்பட்டுள்ளது.

உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழையுங்கள். Inbox இன் கீழே உள்ள Last account activity என்பதற்கு நேராக உள்ள Details என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள்.





இனி திறக்கும் Activity Information விண்டோவில் உங்களது கடைசி ஐந்து லாகின் விவரங்கள் தரப்பட்டிருக்கும். இதிலிருந்து உங்கள் ஜிமெயில் கணக்கு பாதுகாப்பாக உள்ளதா என்பதை உறுதி செய்ய இயலும்.






மேலும் இதிலுள்ள Sign out all other sessions என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக மாற்ற கணினிகளிலிருந்து ஒரே சமயத்தில் Sign out செய்து விட முடியும்.

என் மனதில் முத்தமிழே

கவிதை எழுதினேன்
தப்பும் தவறுமாய்
அர்த்தமே இல்லாமல் ..
கேட்டால் காதலுக்காக !!!

பேசினேன் உன்னிடம்
ஏதேதோ கொச்சையாய்
நீயும் பதிலுக்கு பேசினாய்
அர்த்தமே இல்லாமல் !!

வீண் விவாதங்கள் எல்லாம்
உன்னாலே செய்தேன் ..
உனக்கு விருப்பமானதுக்கு !!!.
என்னில் ஆயிரத்தெட்டு
குறைகளை வைத்துக்கொண்டு
கேட்டால் முற்போக்குவாதியாம் ...

முத்தமிழே முழுமையாய்
என் மனதில் எப்போ ? ..

தாகத்துக்கு தண்ணீர் கேட்டேன்
தராமல் சென்றாய் என்னை
பார்த்துக் கொண்டே
என் உயிர் போகும்வரை !!
நீயா பேசுகிறாய்
மனித நேயத்தை பத்தி ? ..

ஆன்றோரும் சான்றோரும்
என்னிடம் கேட்டால்
என்ன சொல்வேன் ..
இதை பத்தி !!
விழி மூடி யோசிக்கிறேன் ..!!! .

முத்தமிழே முழுமையாய்
என் மனதில் எப்போ ? ...

ஏக்கம்

பெட்டைக் குயிலோசைக்கு
எசபாட்டாய் ஒற்றைக் குயிலோசை
மரங்களெல்லாம் தாண்டி
மனம் மாற்றிக் கொண்டன..

ஏனோ இப்போதெல்லாம்
ஒற்றைக் குயிலின்
உரத்த ஓசையில்
மற்றக் குயில் அடங்கியே போகிறது

எப்போதேனும்
சேர்ந்து கூவினும்
சுருதி ஏனோ
பேதமாகவே ஒலிக்கிறது!

1/18/2010

வணங்குகிறேன் ஜோதிபாசு அவர்களை

கடந்த சில வருடங்களாக நீங்கள் அதிகம் செய்திகளில் வலம் வந்ததில்லை, காரணம் நீங்கள் ஓய்வுபெற்ற அரசியல்வாதி. முதுமையைக் காரணம் காட்டி ஓய்வு பெற்ற பெருமை கொண்டவர் நீங்கள். ஆனால் உங்களைப் பின்பற்ற ஓரிருவரைத் தவிர, வேறு அரசியல்வியாதிகளுக்கு இன்னும் அந்த மனப் பக்குவம் வரவில்லை...





உங்களைப் பற்றி ஆழமாக நான் ஏதும் வாசித்ததில்லை, ஆராய்ந்ததில்லை. நீங்கள் மிகச்சிறப்பாக ஆட்சி செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். எளிமை, சிறந்த நிர்வாகம், தொடர்ச்சியாக 23 ஆண்டுகள் முதல்வராக இருந்த பெருமை என ஒரு நேர்மையான தலைவருக்கான சிறந்த அடையாளமாகவே நீங்கள் இருந்திருக்கிறீர்கள். மிகச் சிறப்பாக பணியாற்றி... உண்மையான உதாரணமாக இருந்து மிக அற்புதமான ஒரு சரித்திரத்தை, தாக்கத்தை ஏற்படுத்தி விட்டுத்தான் வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறீர்கள்.

கடந்த சில நாட்களாக நீங்கள் மிகக்கடுமையான உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததினால் செய்திகளில் அவ்வப்போது உங்களைக் காண நேர்ந்தது. 95 வயதை கடந்த உங்கள் முதுமை, உங்களை உடல் நலக் குறைவிலிருந்து மீட்க உதவாது என்பதாகவும் மனதிற்கு பட்டது. ஒருவேளை நீங்கள் இறந்தால் உங்கள் கண்கள் தானமாக அளிக்கப்பட்டால் நன்றாக இருக்குமே என்றும் கூட நினைத்தேன். இன்று அது நடந்ததை நினைக்கும் போது, மனதிற்கு நிறைவாக இருக்கிறது.
இந்த தேசத்து மக்களுக்கு எத்தனையோ நல்லது செய்த நீங்கள், இறந்த பின்னும் கூட தொடர்ந்து இந்த தேசத்தை பார்த்து மகிழ உங்கள் இரண்டு கண்களை தானம் செய்துவிட்டதை அறியும் போது, நீங்கள் இருந்த திசை நோக்கி வணங்கத் தோன்றுகிறது.

நீங்கள் அளித்த கண்களிலிருந்து பெறப்பட்ட கருவிழிகள் பார்வையில்லாத இரண்டு நபர்களுக்கு தலா ஒன்று வீதம் அளிக்கப்படும் என்பதை அறிவேன். அந்த இரண்டு நபர்களின் வாழ்க்கையில் இருந்த இருட்டை முற்றிலும் உங்கள் விழிகள் துடைத்து எடுக்கும். நீங்கள் தானமாக அளித்த விழிகள் மூலம் அவர்கள் இன்னும் பற்பல ஆண்டுகள் வெளிச்சத்தை, வண்ணங்களை, இருளை, நிலாவை, நட்சத்திரங்களை இதையெல்லாம் தாண்டி சக மனிதர்களை, தன் உறவுகளை பார்த்து மகிழ முடியும்.

இன்னும் பல ஆண்டுகளுக்கு

நீங்கள் செய்த நல்ல காரியங்களும்...

நீங்கள் வகுத்த நல்ல கொள்கைகளும்...

வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்...

........கூடவே உங்கள் இரண்டு விழிகளும் மிகப் பிரகாசமாக.

குறிப்பு: ஜோதிபாசு அவர்களின் உடலும் பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்கப்படவுள்ள செய்தி மனதை நெகிழச் செய்கிறது. இந்த தேசத்தில் தன்னுடைய உடலையும் தானமாகக் கொடுத்த தலைவர் இவராகத்தான் இருப்பார் என நினைக்கிறேன்.


மிகவும் கவனிக்கப்படவேண்டியவை :நான் கம்யூனிசவாதி அல்ல,

எனக்கு பெருமை : இவரைப் பற்றி நினைத்தவுடன் என் நினைவுக்கு வந்தது என் பள்ளி நாட்களில் நடந்த பொதுஅறிவு போட்டியில் எனது அணி வெற்றி பெற நான் சொன்ன கடைசி விடை இவரைப்பற்றி தான்

நச்சென்று கதை எழுதுவது எப்படி?

அல்லது கதை எழுதுவதைப் பற்றிய கதை எழுதுதல்)

நேற்று சாலையில் ஒரு விபத்தைப் பார்த்தேன். சுமார் முப்பது வயது இளைஞனாகத் தெரிந்த ஒருவன் பேருந்தில் அடிபட்டு இறந்து விட்டான். இதைக் கதையாக எழுதினால் என்ன?

அவன் சட்டையை இன் செய்திருந்தான். டையும் அணிந்திருந்தான் - கால்களில் ஷூ பளபளப்பாக இருந்தது. அதனால் அவனை ஒரு பன்னாட்டு வங்கியின் வேலை செய்பவனாகவோ அல்லது மெடிக்கல் ரெப்பாகவோ ஆக்கிவிடலாம் கதையில். பிரச்சனையில்லை.

இதில் சில கதாபாத்திரங்களைச் சேர்க்க வேண்டும். ஒரு கதையில் அதிகபட்சம் மூன்று கதாபாத்திரங்களுக்கு மேல் வேண்டாம் என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். அவனுக்கு ஒரு அழகான மனைவியும் இரண்டு வயதில் ஒரு குழந்தையும் இருப்பதாக எழுதிவிடலாம். முந்திய தின இரவோ அல்லது அன்று அதிகாலையிலோ அவனுக்கும் மனைவிக்குமான நெருக்கத்தைக் கொஞ்சம் விவரமாக எழுதினால் கிளுகிளுப்பாக இருக்கும். ஆனால் இதைக் கதையின் ஆரம்பத்திலேயே எழுதிவிடவேண்டும். அப்போது, சுஜாதாவின் ஒரு சிறுகதை, சிவாஜி படப் பாடல் ஒன்று என அவற்றுடன் நம் கதையை ஒப்பிட்டு, செக்ஸிற்கும் மரணத்திற்குமான உறவைப் பற்றி யாராவது ஆய்வு செய்வார்கள். இது அதிகப்படியான போனஸ்தான்.

சரி, இப்போது அடுக்க வேண்டிய சம்பவங்கள். மரணம் என்பது எப்போதுமே துயரமானது. படிப்பவர்கள் மனதில் ’ஐயோ பாவம்’ உணர்ச்சியைக் கொண்டு வந்துவிட்டால் போதும்.

அதிகப்படியான சம்பவங்கள் இருக்கக்கூடாது என்றும் யாரோ ஒரு புண்ணியவான் சொல்லியிருக்கிறார். அதனால் சம்பவங்களைக் குறைவாக வைத்துக் கொள்வோம். சிறுகதைக்கு அடிப்படையான முரணைக் கொண்டு வரப் பார்ப்போம்.

எந்த ஒரு சிறுகதைக்கும் மிக முக்கியமானது ஆரம்ப வரிகள்தான். கதையின் ஆரம்பமே வாசகனை மேலும் படிக்கத் தூண்ட வேண்டுமாம்.

இப்போது மெர்க்குரிப் பூக்கள் நாவலை பாலகுமாரன் அரம்பித்தது போல் ஆரம்பிக்கலாம்.

மேக மூட்டமற்று ஆகாசம் நிச்சலனமாக இருந்தது. அவனது மனைவி துர்க்கா வாசனையாக அவனை எழுப்பினாள். (இப்போது பாருங்கள் இந்த வாசனை என்ற வார்த்தையே படிப்பவனின் தொடைகளை நீவி விட்டு கதைக்குள் சுண்டி இழுத்துவிடும்). அவன் சிணுங்கியபடி, கைகளை நீட்டி அவளது இடுப்பைக் கவ்வி தன்பால் இழுப்பதோ அல்லது வேறு ஏதாவது செய்வதோ உங்கள் திறமையைப் பொறுத்தது.

அவர்களுக்கு இருக்கும் பணப் பிரச்சனைகள் (குழந்தையின் ஸ்கூல் ஃபீஸ், அப்பாவின் மருத்துவம் இன்னபிற) குறித்தும், அலுவலகத்தில் அவனுக்குக் கிடைக்கப் போகும் ப்ரமோஷன் மூலம் அதை ஈடுகட்டலாம் என்றும் கதையின் போக்கில் சொல்லிச் செல்லலாம்.

கதையை முடிவு வரிகளாக இதை வைத்துக் கொள்ளலாம் : அவனுக்குக் கடைசியாக நினைவு வந்தது - தான் கட்ட மறந்த இன்ஷூயரன்ஸ் டியூ. இதைத் திடுக் திருப்பமாக ஏற்றுக் கொள்வார்களோ என்று சந்தேகமாக இருக்கிறதா.. சரி இப்படி முடிக்கலாம் - அப்போது அவனது கைப்பையிலிருந்து எட்டிப் பார்த்த அவனது ப்ரமோஷன் கடிதம் காற்றில் படபடத்தபடி அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. இதுவும் வேண்டாமா, சரி, இப்படி முடிக்கலாம் :

அப்போது கீழே விழுந்திருந்தவனின் உடலில் சலனம் தெரிந்தது. கடவுளே! உயிருக்கிறது இன்னமும்! ஆனாலும் கதை எழுதத் தீர்மானித்து விட்டதாலும், பரிசுத் தொகை ஒரு சமூக சேவை நிறுவனத்திற்குச் செல்ல இருப்பதாலும், அவனைக் கொலை செய்ய முடிவு செய்துவிட்டேன். இப்போது அடுத்த சிக்கல் :

எப்படிக் கொலை செய்வது?

(இது நச்சென்று கதை எழுதுவதற்கான பாடம். இதையே இச்சென்று கதை எழுதுவதற்கு உபயோகிக்கக் கூடாது. அதற்குத் தனிப் பாடம் உண்டு)
நன்றி :தமிழிஷ் நண்பர்கள்

1/15/2010

இது வரைக்கும் தமிழ் சினிமா பார்க்காதது

இது வரைக்கும் தமிழ் சினிமா பார்க்காதது..இது ரொம்ப புதுசு என்பார்களே..அது இந்தப் படத்துக்கு ஓரளவு பொருந்தும்.ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள், காதில் பூ வைக்கும் சமாச்சாரங்கள் என்று நிறைய இருந்தும் படம் 3 மணி நேரம் நம்மை கட்டிப் போட்டு விடுகிறது."துள்ளுவதோ இளமை" வந்த பிறகு அது மாதிரி 30 குப்பைகளாவது வந்திருக்கும். ஆனால் ஆயிரத்தில் ஒருவன் மாதிரி ஒரு 5 படம் வந்தால் சந்தோஷமாயிருக்கும்

1/12/2010

இது நம் தேசம்

நீ நேசித்தவரை யாருக்கு வேண்டுமானாலும் விட்டு கொடு ஆனால்
உன்னை தேசத்தை யாருக்காகவும் விட்டு கொடுக்காதே

என் அன்பு தோழிக்கு

உதிர்ந்த பூக்களையும் தன் கால்கள் படாமல்
தாண்டிச்செல்லும் இளகிய மனம் படைத்தவள் ..........
சிறகுகள் அடித்து பறவைகள் செத்துப் போவதில்லை.................
இவளிடம் நட்பு கொண்ட எவரும் வீழ்ந்து போவதில்லை............
அலைகள் அடித்து கடற்பரப்பு காயப்படுவதில்லை........
இவளிடம் அன்பு கொண்டு எவரும் அழிந்து போவதில்லை

ஒ நண்பா

நண்பர்களாக பழக வேண்டிய கட்டாயம் இல்லை....

நட்புக்கு அது தேவையும் இல்லை...

எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்

இங்கே சந்தித்துக்கொண்டோம்....

காலங்கள் போடும் கோலத்தில் நாமும் ஒரு புள்ளியாக..

நம்மை இணைக்கும் (நட்பு)பாலமாத நாமே இருக்கிறோம்..

இறுதிவரை தொடருமா என்று நமக்கே தெரியாது...

இருந்தும் உறவாடினோம்...

பிரிந்தாலும் எங்கோ எப்போதோ சந்திதுகொள்வோம்...

அப்போ நலம் விசாரிக்க மட்டுமே நேரம் கிடைக்கும்..

அவரவர் பாதையில் அவரவர் பயணத்தை தொடருவோம்...

மனதில் ஒரு வலி மட்டும் இருக்கும்...ஏன் என்று தெரியாது...

இது நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை...(உங்களுக்கு தெரியுமா)

நட்பு

உன் அன்பை தேடி: நீயும்
என்னருகில் இல்லை..
நானும்
உன்னருகில் இல்லை...
நீயும்
என்னை பார்த்ததில்லை..
நானும்
உன்னை பார்த்ததில்லை...
நீயும்
என்னிடம் எதையும் பகிர்ந்ததில்லை..
நானும்
உன்னிடம் எதையும் பகிர்ந்ததில்லை...
நீயும்
என் சந்தோஷங்களை கண்டதில்லை..
நானும்
உன் சந்தோஷங்களை கொண்டாடியதில்லை...
நீயும்
என் வருத்தங்களில்
என் கைகளை பிடித்து கொண்டதில்லை..
நானும்
உன் வருத்தங்களில்
உன் கைகளை பிடித்து கொண்டதில்லை...
நீயும்
எந்த மழை நாளிலும்
என்னோடு நடந்ததில்லை..
நானும்
எந்த மழை நாளிலும்
உன்னோடு நடந்ததில்லை...
நம்மிடம்
இருப்பதெல்லாம்
நாம்
என்று நம்மை சொல்லவைக்கும்
ஒரு சின்ன நட்பு மட்டுமே..
அது
நான் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று
உன்னையும்,
நீ சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று
என்னையும்
நினைத்துக்கொள்ள செய்கிறது
en ineya tamil makkaluku pongal nal valthukkal