தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

9/30/2011

‘ஒரு தோசை இரண்டானது ’




மூட நம்பிக்கைகள் நமக்கு ஒன்றும் புதியவை அல்ல. சமூகத்தில் பரவியிருக்கும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட மூடநம்பிக்கைகள் பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம். இதன் ஒருவகை வெளிப்பாடு தான் ‘ஒரு தோசை இரண்டானது ’ ஊர்மக்கள் நம்பிய நிகழ்வுமாகும்.
கடந்த இருவாரங்களாக எங்கள் ஊரில் உள்ள பொது மக்களிடம் ஒரு செய்தி அவர்கள் இல்லத்திற்கு இனிப்பாக மாறி இன்றுவரை பரபரப்பு கிளம்பி வேகமாக பக்கத்து ஊர்கள் வரை ஏன், சில மாநிலங்களில் இப்போது இந்த பரபரப்பு கிளம்பி இருக்கிறது.

இந்த செய்தி பரவியபோது ஒவ்வொரு வீடாக சென்று விடாமல் துரத்தி அவர்களிடம் இந்த விஷய்த்தை கேட்டு வருகிறேன்.ஒரு பதிவாளன் என்ற முறையில் தான். நான்கூட ஒரு ஆன்மீகவாதியாக இருக்கலாம் என நீங்கள் எண்ணினால் இன்றுவரை, நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது, அதன் பெயர் இறைவன் என்று நினைப்பவன். இஸ்லாமியர்களுக்கு அவன் பெயர் அல்லா, கிறிஸ்துவர்களுக்கு அவன் ஏசு, இந்துவுக்கோ பல பெயர்கள் என்று நினைப்பவன். அவ்வளவுதான் எனது ஆன்மீக அறிவு. அலகு குத்துதல், மொட்டையடித்தல், காவடி எடுத்தல், நான் இதைத் தருகிறேன்.. நீ அதைத்தருகிறாயா என்று கடவுளிடம் பேரம் பேசுவது எனக்குப் பிடிக்காத விஷயங்கள். சாமியின் பெயரைச் சொல்லி இந்த மனிதர்கள் தமக்குள் கத்தியை எடுத்து வெட்டிக் கொல்வதும்... பாபர் செத்த இடமா.. இல்லை ராமர் பிறந்த இடமா என்று அடித்துக் கொள்வதும் எனக்கு சுத்தமாகப் பிடிக்காத விஷயங்கள்.

பார்ப்பனர்களின் சூழ்ச்சியாலும், அறியாமையாலும், பத்(க்)தி முத்திப்போய் மூட நம்பிக்கையை நம்பியிருக்கும் மக்களிடம் போய் நமக்குத் தெரிந்த கொஞ்ச நஞ்ச அறிவியல் விஷயங்களைச் சொன்னால் அவர்கள் ஏற்று கொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லை !
ஆனால் என்னால் நான் கண்ட செயலை சொல்லாமலும் இருக்க முடியவில்லை!
இதைப்போன்று கீழே உள்ள எளிமையான (அவர்கள்) செய்(த) முறைகளைச் செய்து பார்த்து கொள்ளுங்கள்....
1. ஒரு HOT BOX (ஆறாமல் வைத்திருக்கும் பாத்திரம்) -ல் சிறுதளவு சர்க்கரை தண்ணீரில் ஒரு தோசையை மிதக்க வைத்திருக்கிறார்கள்.
2. தொடர்ந்து எட்டு நாட்கள் மிதக்க விடவேண்டும், (மூடியபடி)
3. காலை, மாலை இரு வேளைகளிலும் இறைவனுக்கு தீபமேற்றி சாமி கும்பிட வேண்டும்.
4. இதைப் பற்றி யாரிடமும் எக்காரணம் கொண்டு சொல்லாமல் இருக்க வேண்டுமாம்
5. இடையில் திறந்து பார்க்கவே கூடாதாம்.
6. நமது இல்லத்திற்கு நல்ல விஷயம் ஒன்று நடக்க போகிற்து என்ற நம்பிக்கையுடன் வழிபாட வேண்டுமாம்
7. எட்டு நாட்கள் கழித்து அந்த் ஒரு தோசை இரண்டாக தனிதனியாக மாறியுள்ளது. (அவர்கள் கண்ட உண்மை)
8. அந்த இரண்டு தோசைகளை ஒவ்வொன்றாக இரண்டு வீட்டிற்கு பிரித்து கொடுத்தால் நம்க்கு நல்ல செய்தி ஒன்று வீடு தேடி வருகிறதாம்.


இதை அவர்கள் செய்து நல்ல செய்தி வரவிருக்கிறதாம், என காத்து கொண்டிருக்கிறார்கள் .
இது மூடநம்பிக்கையில்லை என எண்ணி அவர்கள் நம்பி செய்து வருகின்றனர். எது எப்படியோ நாமும் முயற்சிசெய்து பார்ப்போம்..

புராணக்கதையில் படித்ததைப்போல பாம்பு வில்வதலைக் கொண்டு சிவனுக்கு அர்ச்சனை செய்ததையும்,கோமாதா சிவனுக்கு பாலபிஷேகம் செய்தததையும் ந்ம்பிய நாம் இவற்றையும் நம்பி முயற்சிப்போம்.

இறைவனால் நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் நல்லது நடக்குமானால் ,நம் சமுதாய்ம் நல்ல இருக்குமானால் கண்டிப்பாக இதை செய்து பார்ப்போம் என்பதே எனது பதிவின் நோக்கம்...
இறைவனுக்கு நன்றி, நன்றி,

எண்ணங்களுடன் : கோவை அ. ராமநாதன்

கருத்துகள் இல்லை: