தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/01/2012

பிரச்சனையும் தீர்வுகளும்…நமது வாழ்க்கையும் பணிச்சூழலும் பிரச்சனைகளால் நிரம்பியவை. உண்மையில் அவை நமது வாழ்க்கையை அர்த்தமாக்க அவசியமானவை கூட. நீ உனது பயணத்தில் எந்த பிரச்சனையையும் சந்திக்கவில்லை என்றால் தவறான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறாய் என்று அர்த்தம் என்ற வாசகத்தை எங்கோ படித்த ஞாபகம் வருகிறது
பிரச்சனையை தீர்ப்பதில் எப்போதும் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அந்த பிரச்சனையை ஆதாரமாக வைத்து தீர்வை நோக்கிப் பயணித்தல், மற்றொன்று தீர்வை ஆதாரமாகக் கொண்டு பிரச்சனையை சந்தித்தல். எடுத்துக்காட்டாக கீழே கொடுக்கப்பட்ட நிகழ்வை கவனியுங்கள்:
முதன்முதலில் நாசா நிறுவனம் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் போது விண்வெளி நிகழ்வுகளை காகிதத்தில் பதிவு செய்யும் பணியில் சிக்கலை சந்தித்தனர். அப்போதிருந்த பேனா, வெற்றிடத்தில் ஈர்ப்பு விசை இல்லாத்தால் வேலை செய்யாது. விண்வெளியின் வெற்றிடத்திலும் வேலைசெய்யும் பேனாவினை கண்டறிவதில் பெரிய தொழில்நுட்பம் தேவைப்பட்டது.
 பிரச்சனை மையத் தீர்வு: நாசா ஏறக்குறைய 120 இலட்சம் டாலர்கள் செலவு செய்து 10 வருட கால இடைவெளியில் வெற்றிடத்திலும் வேலை செய்யும் பேனாவினை கண்டறிந்தனர். அந்த வகைப் பேனா வான்வெளி, ஆழ்கடல் என எல்லா நிலையிலும் வேலை செய்யும்.
தீர்வு மையத் தீர்வு: இதே பிரச்சனையை ரஷ்யர்கள் சந்தித்தபோது அவர்கள் கண்டறிந்த உடனடியான மற்றும் எளிமையான தீர்வு… “பென்சிலை உபயோகித்தல்…”
பெரும்பாலான மேலாண்மைத் தத்துவங்கள், இரண்டாவது முறையை வலியுருத்துகின்றன. நாம் பிரச்சனையை மையமாகக் கொண்டியங்கும் போது தீர்வினை எளிமைப்படுத்தாமல் சிக்கலாக்கிக்கொள்கிறோம். ஆனால் தீர்வினை மையங்கொண்டு இயங்கும் போது, மாற்று வழிகளில் நமது சிந்தனை செயல்படச்செய்கிறது. உண்மைதானே!

கருத்துகள் இல்லை: