தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

5/22/2010

முதல் விந்திலேயே தொடங்கி விடுகிறதா தற்கொலை எண்ணம்?

கொடைக்கானல் SUICIDE FALLS

எல்லோருக்கும் எப்போதாவது, ஏதாவது ஒரு சந்தர்ப்பத்திலாவது தற்கொலை எண்ணம் தோன்றியிருக்கலாம்.
உதாரணத்திற்கு காந்தியடிகள் ´சத்திய சோதனை´ என்னும் புத்தகத்தில் தான் தற்கொலை செய்து கொள்ள முயன்ற நிகழ்ச்சியை குறிப்பிட்டு கூறும் போது, "அதை இப்போது நினைத்தாலும் நகைச்சுவையாக இருக்கிறது" என்பார்.

அவரைப்போல் தான் நம் அனுபவமும், இப்போது நினைத்தாலும் சிரித்துவிட்டு போகிறோம்.
நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகளா? அல்லது கோழைகளா? தற்கொலைக்கு முயன்று வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் தங்கள் காரியத்தில் சாதித்து வெற்றி கொண்டவர்களா? என்ற ஆராய்ச்சியும் எனக்கு அடிக்கடி வருவது உண்டு.

தற்கொலை என்னும் போது வாழத் துப்புக்கெட்டவன், தோல்வியைத் தாங்காதவன் என்ற கண்ணோட்டத்திலேயே தற்கொலைகளைப் பற்றிய விமர்சனங்கள் வைக்கின்றோம்.
எனக்கும் அப்படித்தான் தற்கொலை பற்றிய விமர்சனம் முதலில் இருந்தது. ஆனால் பக்குவப்பட்ட மனத்திடத்துடன் காரண காரியங்களை ஆராயும் போது, வரலாற்று நிகழ்வுகளை அலசிப்பார்க்கும் போது, தற்கொலை செய்து கொண்டவர்களின் உணர்வுகளை விவரிக்க முடியாததாகவே இருக்கிறது.

இரண்டாம் உலகப் போரில் தோற்றதும் ஜப்பானிய ராணுவத் தளபதிகள் பலர் தற்கொலை செய்துகொண்டனர். அது தோல்வியின் தாக்கமா? தேசீய உணர்வின் தாக்கமா? என்ற கேள்வி எழுகின்றது.(நான் கேள்விப்பட்டு தெரிந்தது )

‘சில்வியா ப்ளாத்’ மிகச் சிறந்த பெண் கவிஞர்.
அவரின் கவிதைகளில் வரும் வரிகளும் ஒவ்வொன்றும் தன்ணுணர்ச்சி உடையவை. மிகுந்த வீரியத்துடன் சிதறடிக்கும் சொற்கள். ஆனால் வாழ்க்கையில் அவர் தேர்ந்தெடுத்த கொடூரமான முடிவு தற்கொலை செய்து கொண்டது.
அந்த தற்கொலையைக் கூட வித்தியாசமான முறையில் செய்திருந்தார். தன் தலையை oven-க்குள் வைத்துத் தற்கொலை செய்துகொண்டார்.(இவரை சமீபத்தில் போட்டோவில் பார்த்து தெரிந்துகொண்டேன் )

இன்னொரு நிகழ்வும் நினைவுக்கு வருகிறது...
சில வருடங்களுக்கு முன் நண்பரின் உறவினர் வீட்டுக்கு  சென்றிருந்த போது  வீட்டில் இளம்பெண் போட்டோவுக்கு மாலை போடப்பட்டிருந்தது. எப்படி இறந்தார் என்ற போது அவர்கள் சொன்ன காரணம் அதிர்ச்சியாக இருந்தது.

21- வயதுடைய அந்த பெண் ஜன்னலில் நின்று வேடிக்கை பார்த்திருக்கிறார். அவரின் அண்ணன் திட்டி உள்ளே போகச் சொல்லி இருக்கிறார். அவர்களுக்குள் நடந்த வாக்குவாதத்தில் அந்த பெண் பாத்ருமில் தாழ்போட்டுக் கொண்டு மண்ணென்னையை ஊற்றி தீ வைத்துக் கொண்டுவிட்டார்.

தீயில் கருகி கதறி துடித்த அவரை கதவை உடைத்துக் கொண்டு உள்ளே போவதற்குள் உடல் முழுவதும் தீயில் கருகி போய் இருந்ததாம். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, டாக்டரிடம் அந்த பெண்,
´என்னைக் காப்பாற்றுங்கள்´ என்று கதறியிருக்கிறார். ஏதோ கோபத்தில் சட்டென இப்படி செய்துவிட்டதாக போலீசில் வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார். அதன்பின் 6-மணிநேரத்திற்குள் இறந்திருக்கிறார்.

அதே போல் மற்றொரு சம்பவம். 85-வயது மதிக்கத்தக்க வயதான பெண்மணி. தன் கணவரின் பென்சன் பணம் வந்தவுடன் மொத்தமாக பிடுங்கிக் கொள்ளும் மருமகள். மகனின் அலட்சியம் தன் சொந்த வீட்டிலேயே ஒருமுலையில் முடக்கப்பட்ட கொடூரம்.
மருமகளிடம் மோசமான வார்த்தைகளில் அர்ச்சனை. அடிக்கடி திட்டு வாங்கிக் கொண்டு ஒருவேளை சாப்பாட்டுக்காக அவமானப்பட்டுக் கொண்டிருந்தார்.

வழக்கம் போல் காலையில் அதே சண்டை. அளவு கடந்த அவமரியாதையில் வாழப்பிடிக்காத அவர் "இப்படி இருப்பதை விட செத்து போய்விடலாம்" என்று சொல்ல...
மருமகள், "உனக்கு அவ்வளவு சீக்கிரத்தில் சாவு வராது, நீயே ஏதாவது செய்து கொண்டால் தான் உண்டு என்று சொல்ல..."
மாமியார் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.(நாள்தாளில் ஒன்றில் படித்தது)

´சில்வியா ப்ளாத்´ மரணம் மிக திட்டமிட்டு நிதானமாக செய்திருக்கிறார் என்கிறார்கள். மாமியாரின் தற்கொலை மனஉளைச்சல். பிறரை சார்ந்து இருக்க வேண்டிய நிலையின் இயலாமையில் எடுத்த முடிவாக இருக்கிறது.
இளம் பெண்ணின் மரணம் தான் சடாரென ஏற்பட்ட கோபத்தில் எடுத்த முடிவு.

சில நொடிகளில் தடுமாறும் உணர்வுகள் என்னென்ன விளைவுகளை நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களும் பாதிப்பை கொடுத்துவிடுகிறது!

தங்கள் உயிரை அழித்துக் கொள்ளும் உரிமை யாருக்கும் இல்லையென சட்டம் சொல்கிறது. ஆனால் இவர்களின் சூழல்களை ஏற்றுக் கொள்ளவோ, அதை தாங்கும் வலிமை இல்லாமல் இருக்கும்போதோ, நிதானமாக எடுக்கும் தற்கொலை முடிவுகளையும், அதை விமர்சிக்கும் உரிமையும் நமக்கில்லை என்று தான் தோன்றுகிறது.

ஆம், மனிதனுக்கு எங்கே இருந்து வருகிறது தற்கொலை எண்ணம்?
"முதல் விந்திலேயே தொடங்கி விடுகிறதா தற்கொலை எண்ணம்?"

இடுக்கை : அ.ராமநாதன்

2 கருத்துகள்:

iqbal சொன்னது…

hello sir . unga karuthukal super a eruku sir .unmeyavea nalla eruku sir . ungala pathi solla varthigal illa sir .ALL THE BEST

iqbal சொன்னது…

naa suma than intha page a open panean sir,but ipa intha page close panna manasu varala sir, intha mathir karuthukal nna keatadum ila enaku yarum sonnadu illa sir............. IQBAL