திருப்பூரிலிருந்து சுமார் 270 -350 கிமீ தொலைவில் அழகானதொரு கோவிலை
சுற்றியுள்ள நகரம், நாங்கள் சென்ற தனியார் பேருந்து சொன்னபடி சரியாகஅங்கு 5.30
மணிக்கே இறக்கி விட்டுவிட்டார்கள் , இறங்கியவுடன் அருமையான டிகி ரி காபி.
காலை 7 மணிக்கு நண்பரின் திருமண நிகழ்ச்சி என்பதால் திட்டமிட்ட படி
சரியாக கிளம்ப வேண்டிய சூழல் . மண்டபத்திற்கு சென்றவுடன் காலை உணவு
முடித்து நிகழ்ச்சி நிரலுக்கு 8.45 மணி ஆகிவிட்டது. புதுமையான திருமண நிகழ்ச்சி
ஒரு சமயத்தை சார்ந்தவர்கள் பெரியவர்கள் வழியில் நடந்திருப்பது மிகவும்
நல்ல விடயமாகும் . ஆனால் முழுமையான நிகழ்ச்சியை பார்க்க இயலவில்லை
என்பது சற்று வருத்தமே .கண்டிப்பாக அதை முழு நீள வீடியோ பதிவையும்,
சார்ந்த புத்தகங்களை பார்க்க வேண்டும் என்பது எனது ஆவல்.
மாயவரம் அதனை சுற்றியுள்ள கோவிலுக்கு செல்ல திட்டமிடருந்தாலும் ,
நண்பர்களின் உ.பா ஆசையால் எங்களது பயணம் பக்கத்து மாநிலமான (புதுச்சேரி)
காரைக்காலை நோக்கி செல்ல வேண்டியதாயிற்று. மாயவரம் புதிய பேருந்து
நிலையத்திலிருந்து (நம்புங்க அதுவும் பஸ் வர இடமுங்க) 1 மணி நேர பயணம்.
இறங்கியவுடன் இரவு பயணத்திற்காக பயணச்சீட்டை தேடி அலைய
வேண்டியாதாயிற்று. ஒருவழியாக யுனிவர்சல் (பேரு மட்டும் தான்) டிக்கெட்
போட்டவுடன் , உ.பா கடைகளை தேடி (அனைவ்ரும் புதியவர்கள்) ஒரு சின்ன
கடையை நோக்கி சென்று கையில் இருக்கும் தொகைக்கு ஏற்ற மாதிரி
கு(டி)த்து முடித்து விட்டு (திருப்தியில்லாமல்),மதிய உணவை அருகிலே
சாப்பிட்டு, கடற்கரையை நோக்கி பயணம் இனிதே ஆரம்பமானது
கடற்கரை நினைத்தபடி திருப்தியில்லை என்றாலும் , வெயிலின் கொடுமை ,
தண்ணீரின் ஆரவாரம் மனதில் சில மாற்றங்களுடன் ,குழந்தைகளாக
4 மணி நேரத்திறகு மேலாக (தண்ணி)ரிலே மாலைவரை பொழுதை
கழித்து வந்தோம்.
அவ்வப்போது சிலர் தண்ணிரில் சிக்கி கொள்வதால் ,காக்கியின் எச்சரிக்கை நடந்து கொண்டிருந்தது .
கடலில் சரியான இடைவெளியில் படகு செல்வதை பார்க்கும் போது அருமையாக தான் இருந்தது.
காக்கியின் வசூல் வேட்டை அருமையாக நடந்து கொண்டுதான் உள்ளது
கடற்கரைக்கு உண்டான சில்மிஷங்களும், மிகவும் சர்வசாதரமாக அரங்கேறி வருகிறது
இதை கண்டிப்பதற்கு யாருமில்லை,கண்டிப்பவர் களியாட்டமாடினால் (அதங்க காக்கி)
எப்படி நாம் குடும்பத்துடன் செல்ல நினைக்க முடியும் என்பது தான் சற்று கவலை தரக் கூடிய விஷயமாகும்.
சுனாமி தாக்குதலுக்கு பிறகு கடற்கரை அழகு ,மக்களின் வருகை எல்லாம் குறைந்துவிட்டதாக வசிப்பவர்கள் சொல்ல அறிந்து கொண்டோம்.
ஒரு வழியாக பயணம் இனிதே முடிவடைந்து இரவு உணவையும் முடித்து ,
பேருந்தில் பயணிக்க தீர்மானமானோம். அந்த பயணம் மிகவும் மோசமாக
அமைந்ததுமட்டுமல்லாமல் மறக்க முடியாதாதாகும் .பஸ்ஸின் வேகத்தால் ,
பயணத்தின் எல்லை முடியாமாலே பாதியிலே காங்கயம் இறங்கி காலை
கடன்களை முடித்து திருப்பூரை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம்.
வந்து இறங்கியவுடன் நண்பர்கள் பிரிந்து ,அலுவலக பணிக்கு செல்வதால்
உடனடியாக விடைப் பெற்றுக் கொண்டோம்.
மொத்தத்தில் இன்ப சுற்றுலாப் போல இல்லாமல் இருந்தாலும் அனைவரையும்
இன்முகத்துடன் ஒன்றினைய வைத்த நண்பரின் திருமண நிகழ்ச்சி என்பது
தான் உண்மை . அவர்களை வாழ்த்தி ,பங்கேற்ற நண்பர்களுக்கும் நன்றி
கூறினால் தான் இப்பதிவு முழுமை பெறும்.
குறிப்பு: இதுவரை பல பதிவுகள் எழுதி இருந்தாலும், உரையாடல்கள்
எல்லாம் எழுதி படிப்பவர்களைக் கொட்டாவி விட வைக்கும் மோசமான
பதிவாகவே எழுதி இருக்கிறேன். சுற்றுலாப் பயணங்கள் பற்றிய முதல்
பதிவு என்பதால் இப்படி இருக்கிறது அடுத்தவர்கள் பிரமிக்க வைக்கும்
வகையில் அற்புதமாக ஒரு பதிவாவது வாழ்வில் எழுத வேண்டும் என்ற
எண்ணத்தின் முதல் முயற்சி இந்தப் பதிவு. [நல்ல இருந்தால் சொல்லுங்க .)
எண்ணங்களுடன் :கோவை அ . ராமநாதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக