"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! கோவை அ.ராமநாதன்
6/29/2010
(என் பாரத தாய்க்கு) ஒரு துரோகம்....
பல்லாயிரம் ஆண்டுகளாய் நன்றாகதான் இருந்தாய்
ஏனிப்படி ஒரு தவறு செய்தாய் இயற்கைதாயே
ஆறாவது அறிவு படைத்தாய் உன் குழந்தைக்கு
அது படுத்தும் பாடு இப்போது நீ அறிவாய்.
கடைசி குழந்தையாய் மனிதன் நீ படைத்தாய்
சிறப்பாய் இருக்க பகுத்தறிவும் கொடுத்து வைத்தாய்
இன்று உனை அழிக்க உன் குழந்தை விளைய
பெற்றெடுத்த தாயே இப்போ நீ என் செய்வாய்.
மனிதன் காடழித்தான் கைதொழில் புரடசி என்றான்
கரியமில வாயு கொண்டு உன் காற்றுமண்டலம் நிரப்பினான்
தொழில்நுட்ப புரட்சி என்றான் விணவெளிக்கு சென்று வந்தான்
அந்த அறிவு கொண்டே அணுகுண்டும் படைத்து வைத்தான்.
அதிகமாக ஒரு ஆறறிவு நீ கொடுத்தாய்
முன்பிருந்த ஓர் அறிவை மனிதா நீ தொலைத்தாய்
காட்டுமிராண்டி என்று சொல்லி நீ பழிக்கிறாய்
நாட்டுமிராண்டி தனமாய் நீ வாழ்ந்து தொலைக்கிறாய்.
வயிற்று பசிக்கே விலங்குகள் உயிர் கொல்லும்
ஆசைப்பசி கொண்டு உன்னையே நீ கொல்லு
பிணந்தின்னும் விலங்குகள் எத்தனையோ மேல் மனிதா
மனம் கொன்று தின்று வாழும் மடையா உன்னை விட.
உன் இருப்போ சமநிலையில் இயறகைத்தாயே
அவனிருப்போ உன் நிலையில் அறிவாய் நீயே
பகுத்தறிவு கொண்டு உனை அழிக்கும் மனிதனையே
நீ அழித்து உனை நிலை நிறுத்த முயல்கிறாயே.
இதை அறிந்தும் நாங்கள் இன்னும் திருந்த மாட்டோம்
தாயே உனைப்பற்றி நாங்கள் என்றும் வருந்த மாட்டோம்
செவ்வாயில் வீடு கட்ட திட்டமிடுகிறோம்
இங்கிருக்க எதுவுமின்றி தொலையப்போகிறோம்.
{இந்த நடை ஒரு கவிதையிருந்து திருடினேன் நன்றாக இருக்கிறது உங்களுக்கு பிடித்திருந்தால் சந்தோசம் அந்த கவிதையை அடுத்த பதிவில் தருகிறேன்.)
குறிப்பு : இந்த கவிதையை சென்ற வாரம் தினமலர் நாளிதலுக்கு அனுப்பியுள்ளேன் அட! சத்தியமாக நம்புங்க .....
உருவாக்கம் & இடுக்கை :அ.ராமநாதன்
நீ வேண்டும்...!
இரவு நேரத்து பவுர்ணமி போல்
இதய தேசத்தில் நுழைந்தவளே...
ஒற்றை அன்றில் பறவை என்னை
உறவு கொடுத்து முழுமைபடுத்தியவளே...
வேஷங்கள் நிறைந்த இவ்வுலகில் எனக்கு
வெளிச்ச புள்ளியாய் வந்தவளே.
குழந்தையாய் மாறும் கடைசி காலங்களிலும்
கூடி நீ என்னோடு தவழ வேண்டும்
உன் வாய் ஒழுகும் சிறு உணவெடுத்து
உன்னோடு உண்டு நான் மகிழவேண்டும்...
இருப்பதெல்லாம் ஒன்றும் வேண்டாம்
இல்லையென்ற உன் அன்பு வேண்டும்.
என் வாழ்க்கை முடியும் வரை
என்னில் பாதியாய் இல்லை
எனக்குள் முழுமையாகவே நீ வேண்டும்...!
மனித மனம்.....
மலருக்கு கோபம் வண்டுகள்
மலர்விட்டு மலர்தாவுகின்றனயென்று
வானத்துக்கு கோபம் மேகங்கள்
இடம் விட்டு இடம் மாறுகின்றனயென்று
ஆரறிவு படைத்த மனிதனே
மனம்விட்டு மனம் மாறுகையில்
பாவம்
மலர்களும் மேகம்களும்
என்னதான் செய்ய முடியும்...!
பள்ளிநாட்கள்
விட்டுச்சென்ற
பள்ளி நாட்களை
எண்ணியென்னி
நித்தமும் விடுகின்ற
என் ஏக்கபெருமூச்சுகளை
மொத்தமாய் சேர்த்தெடுத்தால்
பெரும்புயலாய்மாரி
இந்நாடே அழிந்திருக்கும்.
ஆயிரம்வருடங்கள்
அழுதுதவமிருந்தாலும்
அந்த நாட்களில்
ஒரு நிமிடம் கூட
கிடைக்கப்போவதில்லை....
ஓய்வு நேரங்களில்லை
அரட்டைவாத்தைகளால்
அலங்கரித்த நாட்களவை....
எங்கள் சோகங்களை
சொல்லிச்சொல்லி
பங்கிட்டுக்கொண்ட நாட்கள்.
பாடங்களுக்கு மட்டும்
கூடிய நாட்களல்ல
பாசங்களையும்
பரிமாரிக்கொண்ட
பண்பின நாட்களது.
பாடங்களுக்கு மட்டும்
இது மலரும் நினைவுகள் தொடரும்
இடுக்கை :அ.ராமநாதன்
விட்டுச்சென்ற
பள்ளி நாட்களை
எண்ணியென்னி
நித்தமும் விடுகின்ற
என் ஏக்கபெருமூச்சுகளை
மொத்தமாய் சேர்த்தெடுத்தால்
பெரும்புயலாய்மாரி
இந்நாடே அழிந்திருக்கும்.
ஆயிரம்வருடங்கள்
அழுதுதவமிருந்தாலும்
அந்த நாட்களில்
ஒரு நிமிடம் கூட
கிடைக்கப்போவதில்லை....
ஓய்வு நேரங்களில்லை
அரட்டைவாத்தைகளால்
அலங்கரித்த நாட்களவை....
எங்கள் சோகங்களை
சொல்லிச்சொல்லி
பங்கிட்டுக்கொண்ட நாட்கள்.
பாடங்களுக்கு மட்டும்
கூடிய நாட்களல்ல
பாசங்களையும்
பரிமாரிக்கொண்ட
பண்பின நாட்களது.
பாடங்களுக்கு மட்டும்
இது மலரும் நினைவுகள் தொடரும்
இடுக்கை :அ.ராமநாதன்
காதல்
பனித்துளிபோல் தூய்மையானது
விஷத்துளிபோல் ஆபத்தானது...
தென்றலைப் போல் இதமானது
புயலைப்போல் கொடுமையானது....
உனக்காக மட்டும்.....
என் உணர்வில் என்றென்றும்
உன் நினைவே
என் உயிரில் என்றென்றும்
உன் உருவமே
என் விழிகளில் என்றென்றும்
உன் முகமே
என் உச்சரிப்பில் என்றென்றும்
உன் குரலே
என் மூச்சில் என்றென்றும்
உன் சுவாசமே
எத்தனை ஆயிரம் உறவுகள்
என்னுடனிருந்தும்
என் உயிர் தேடும்
ஒரே உறவாக
உன்னை மட்டுமே காண்கிறேன்
நான் என்றும் உன்னையே
நினைத்துக்கொண்டிருக்கிறேன்
உன்னை நினைப்பதற்காக மட்டுமே
நான் இன்றும் இருக்கிறேன்
இல்லை என்றால்
என்றோ இறந்திருப்பேன்...!
அது மட்டும்தான் நாம்
பண்பும் பணிவும்
நம்மை நல்லவனாக்கும்
அடக்கமும் ஒழுக்கமும்
நம்மை சிறந்தவனாக்கும்
உண்மையும் உழைப்பும்
நம்மை உயர்ந்தவனாக்கும்
ஆர்வமும் முயற்சியும்
நம்மை வெற்றியாளனாக்கும்
திறமையும் அறிவும்
நம்மை சாதனையாளனாக்கும்
ஆனால்
அன்பும் கருணையும்
நம்மை மனிதனாக்கும்....!
இடுக்கை :அ.ராமநாதன்
பனித்துளிபோல் தூய்மையானது
விஷத்துளிபோல் ஆபத்தானது...
தென்றலைப் போல் இதமானது
புயலைப்போல் கொடுமையானது....
உனக்காக மட்டும்.....
என் உணர்வில் என்றென்றும்
உன் நினைவே
என் உயிரில் என்றென்றும்
உன் உருவமே
என் விழிகளில் என்றென்றும்
உன் முகமே
என் உச்சரிப்பில் என்றென்றும்
உன் குரலே
என் மூச்சில் என்றென்றும்
உன் சுவாசமே
எத்தனை ஆயிரம் உறவுகள்
என்னுடனிருந்தும்
என் உயிர் தேடும்
ஒரே உறவாக
உன்னை மட்டுமே காண்கிறேன்
நான் என்றும் உன்னையே
நினைத்துக்கொண்டிருக்கிறேன்
உன்னை நினைப்பதற்காக மட்டுமே
நான் இன்றும் இருக்கிறேன்
இல்லை என்றால்
என்றோ இறந்திருப்பேன்...!
அது மட்டும்தான் நாம்
பண்பும் பணிவும்
நம்மை நல்லவனாக்கும்
அடக்கமும் ஒழுக்கமும்
நம்மை சிறந்தவனாக்கும்
உண்மையும் உழைப்பும்
நம்மை உயர்ந்தவனாக்கும்
ஆர்வமும் முயற்சியும்
நம்மை வெற்றியாளனாக்கும்
திறமையும் அறிவும்
நம்மை சாதனையாளனாக்கும்
ஆனால்
அன்பும் கருணையும்
நம்மை மனிதனாக்கும்....!
இடுக்கை :அ.ராமநாதன்
6/28/2010
ராவணன் - என் பார்வையில்
ராவணன் திரைப்படத்தின் முதல் காட்சியை நேற்று கே ஜி திரையரங்கில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.
வழமையான முதல் நாள் படம் பார்க்கும் கூட்டம்.
பரபரவென ஆரம்பிக்கும் ஆரம்ப காட்சிகள்.. எதுவித ஆர்ப்பட்டமும் இல்லாமல் நாயகன் விக்ரமின் அறிமுகம்.ஐஸ்வர்யாவை அழகைக் காட்டும் காமரா முதல் காட்சியிலேயே மனதைப் பறிக்கிறது.
பெயரோட்டம் ஆரம்பிக்கும் போதே விக்ரம்,ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு பலத்த கரகோஷங்கள்.
ஆச்சரியமாக பின்னர் ப்ரியாமணி, ரஞ்சிதாவின் பெயர்கள் தோன்றியபோதும் விசில் ஆரவாரங்களும் கூட..
ரஞ்சிதாவின் பெயர் பார்த்ததுமே நித்தி,நித்தி என்ற கூச்சல்களும் கேட்டது ரஞ்சிதாவிடம் 'நிறைய' எதிர்பார்க்கிறார்கள் எனப் புரிய வைத்தது.
பின்னர் வழமைபோலவே ரஹ்மானுக்கும் மணிரத்னத்துக்கும் பெருவாரியான கரகோஷங்கள்.
வீரா பாடலுடன் எழுத்துக்கள் திரையில்..
வசனம் சுகாசினி.. அட..
அது தான் சில வசனங்களில் சுஹாசினியின் சித்தப்பா கமலும் எட்டிப் பார்க்கிறார்..
'உங்கள் கடவுள் அப்பழுக்கில்லாதவரா?அழகானவரா?'
மணியின் வழமையான,ஆஸ்தான ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இணைந்திருப்பது படத்துக்கு ஒரு தனியான உயர்ச்சியைக் கொடுக்கிறது.
ஈரமான,குளுமையான,அழகான,உயரமான இடங்களிலெல்லாம் நாம் உலவுவது போல ஒரு உணர்வை ஒளிப்பதிவு தருகிறது.
சந்தோஷ் சிவனுக்கே உரிய ட்ரேட் மார்க்கான முகில்களும்,பச்சைப் பசேல் பின்னணியும் படத்தின் முக்கிய அம்சங்களாகின்றன.
இசைப்புயல் ரஹ்மான் படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் உயிர்க்கிறார்;ஜொலிக்கிறார்.
மெல்லிய உணர்வுகளை மீட்டும் இசையாகட்டும்,அதிரடி இசையாகட்டும்.. ரஹ்மான் மின்னுகிறார்.
அதிலும் சண்டைக்காட்சிகளின் பின்னணியில் வரும் கலிங்கத்துப் பரணி அருமை.
எங்கேயாவது தேடி எடுத்து மீண்டும் கேட்கவேண்டும்.
படத்தின் இறுதியில் வரும் "நானே வருவேன்" இருக்கையிலிருந்து எழுந்து விடாமல் செய்தது. இன்னும் காதில் ரீங்கரிக்கிறது.
இந்த இரு பாடல்களையும் யாராவது தேடி எடுத்துத் தாங்களேன்.
மணிரத்னத்தின் படங்களில் அதிக சண்டைக் காட்சிகள் இடம் பெற்ற படமாக ராவணனையே கருதமுடியும் என நினைக்கிறேன். விக்ரமினாலும் ரஹ்மானாலும் அந்த சண்டைக் காட்சிகளெல்லாம் அனல் பறக்கின்றன. அலுப்படிக்கவும் இல்லை.
இனி நடிக,நடிகரைப் பற்றிப் பார்க்க முன், கதை....
நவீன ராமாயணமே..
அப்படியே எடுத்து தந்தால் ராவணனுக்கு பத்து தலை வேண்டுமே என்று சில,பல வசனங்கள்,சில உருவக எடுத்துக்காட்டுக்கள்,சம்பவங்கள்,சில பாத்திரங்களின் குணவியல்புகள் மூலமாக சித்தரிக்கிறார் இயக்குனர்.
அவற்றுள் சில அடடா போட வைத்தாலும், மேலும் சில சலிப்பூட்டுவதையும் தவிர்க்க முடியவில்லை.மணிரத்னம் படத்தில் என்பதால் மேலும் உறுத்துகிறது.
தன் தங்கையைப் பலியெடுத்த போலீஸ் அதிகாரியைப் பழிவாங்க அவரது அழகு மனைவியைக் கடத்தி செல்லும் தாழ் குடியைச் சேர்ந்த ஒரு முரடனுக்கும் போலீஸ் அதிகாரிக்கும் இடையிலான மோதலே திரைக்கதை.
இடையிலே அந்த முரடன் (தன் மக்களுக்கு அவன் கடவுள் போல) கடத்தி வந்த மாற்றான் மனைவி மீது காதல் கொள்கிறான்.மனைவியை மீட்கப் படையெடுத்து வரும் போலீஸ் அதிகாரிக்கும் வீரையாவுக்கும் இடையிலான மோதலில் இந்த ஒரு தலைக் காதலும் கலக்கிறது.
ராவணன் விக்ரம்.. மனிதர் நடிப்பில் ஒரு ராட்சசனே தான்.. பலத்திலும் உடல் கட்டுக் கோப்பிலும் கூட..சீதையாக ஐஸ்வர்யா ராய்.. என்ன ஒரு அழகு.. கொஞ்சமும் மாசு மறுவற்ற முகம்.. பேசும்,மிரளும்,காதலிக்க அழைக்கும் கண்கள்..
ராமனாக - மிடுக்குடன் ப்ரித்விராஜ். தமிழர் நோக்கில்,ராவணனை ஹீரோவாக்கியதால் ராமனின் நல்ல இயல்புகளைக் குறைத்து வில்லனாக மிகைப்படுத்தியிருக்கிறார்.
அப்படியே கும்பகர்ணன் போல பிரபு(உடல் பருமனும் துணை வந்துள்ளது),விபீஷனனாக முன்னா,சூர்ப்பனையாக முத்தழகு ப்ரியா மணி என்று பரவலாக மூலக் கதை ராமாயணத்தில் கை வைக்காமல் பாத்திரங்களைப் பொருத்தி உலாவிட்டுள்ளார் இயக்குனர்.
அனுமார் யார் என்று எல்லாம் எம்மை சிரமப்படுத்தவில்லை . கார்த்திக் தன் அறிமுகக் காட்சியிலேயே அங்கும் இங்கும் குரங்கு போலத் தாவியும் சேஷ்டைகள் செய்தும் அனுமன் யானே என்று காட்டி விடுகிறார்.
அதற்காக ஐஸ்வர்யாவைத் தேடி சென்று அனுமன் போலவே கணையாழி போல அடையாளம் கட்ட முற்படுவது எல்லாம் மணிரத்னத்தின் தரத்துக்கு சிறுபிள்ளைத் தனம் போல இருக்கிறது.
விக்ரம் - ஆவேச இராததன்.அக்ஷன் காட்சிகளில் யாராலும் அடிக்கமுடியாத ஆஜானுபாகுவாக மிரட்டுகிறார். முறுக்கேறிய கட்டான உடம்பும்,முறுக்கு மீசையும் உஷ்ணப் பார்வையுமாக வீரையாவாக வாழ்ந்திருக்கிறார்.
ஆவேசப்பட்டு 'கப கப' எனும் போதும் சரி, தாபம்,காதலோடு இங்கேயே இருந்துருங்களேன் என்று கெஞ்சும்போதும், கம்பீரமாக எதிரியை தப்பிக்க அனுப்பும் கண்ணியத்திலும் நடிப்பில் மின்னுகிறார்.
பாத்திரங்களாக இக்கால நடிகர்களில் வாழ்பவர் இவரும் சூர்யாவும் மட்டுமே.
அடுத்த கமல் என்று அடித்து சொல்கிறேன்.
ஐஸ்வர்யா - அழகு.உருகுகிறார்.உருக வைக்கிறார்.சில இடங்களில் ஏங்கவும் வைக்கிறார்.கள்வரே பாடலில் வாவ்.. என்னாமாய் உடலை வளைத்து நடனமாடுகிறார்.நடன அமைப்பு ஷோபனாவாம். அப்படியே ஷோபனா ஐஸ்வர்யாவுக்குள் புகுந்தது போல ஒரு தத்ரூபம்.கண்களால் பேசும் இடங்களும் அருமை.
"எப்போ வருவீங்க?எனக்கு உண்மையில் துணிச்சலில்லை" என்று தனியே புலம்புவதிலும் பின் கடவுள் சிலை முன்னாள் உருகுவதிலும் நெகிழ வைக்கிறார்.
ப்ருத்விராஜ் - கம்பீரமான ஒரு போலீஸ் அதிகாரி.அழகாக ஹிந்தி நடிகர்கள் போல இருக்கிறார். மணிரத்னப் பட வாய்ப்பு மேலும் பொலிவைத் தந்துள்ளது.விக்ரமின் கம்பீரம் இல்லாவிடினும் சில இடங்கிலாவது ஈடு கொடுக்கிறார்.வசன உச்சரிப்புக்களும் பார்வையினால் மாறுதல் காட்டுவதும் அருமை.
ஐஸ்வர்யாவுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கையில் அபிஷேக் பச்சனே எரிச்சல் பட்டிருப்பார்.
பிரபு - கம்பீரமான அண்ணன்.வெயிட்டான பாத்திரம்.தாங்குகிறார்.
கார்த்திக்- பிரபுவை விடக் கொஞ்சம் பெரிய பாத்திரம்.சிரிக்கவும் வைக்கிறார். அனுமார் என்பதால் சேஷ்டைகள் விடுகிறார். இவரை தமிழ் சினிமா கதாநாயகனாக இழந்துவிட்டதே என ஏங்கவும் வைக்கிறார்.
ப்ரியா மணி - கொஞ்ச நேரமே வந்தாலும் ஒரு மினி சூறாவளியாக வந்து போகிறார்.அவரது கட்டிக் குரலுக்கேற்ற ஒரு வீரப் பெண் பாத்திரம்.
அரவாணியாக வையாபுரியும்,போலீஸ் அதிகாரியாக 'ஓரம்போ' புகழ் ஜோன் விஜயும் ஏனைய குறிப்பிடத்தக்க பாத்திரங்கள்.
இயக்குனராக மணிரத்னத்தை முன்பு எல்லாத் திரைப்படங்களிலும் வியந்ததையும் ரசித்ததையும் இத்திரைப்படத்திலும் அவர் காப்பாற்றுகிறார்.
முதல் காட்சியில் கம்பீரமாகப் பெரிய படகில் விக்ரம் வந்து ஐஸ்வர்யாவைக் கடத்துவது..மலையிலிருந்து ஐஸ்வர்யா அதலபாதாலத்திளிருந்து குதிக்கும் பிரம்மாண்டம். (ஆனால் அதை மீண்டும் மீண்டும் ஸ்டன்டாகக் காட்டியது தேவையில்லைப் போல் இருந்தது)அந்தத் தெப்பக் காட்சி.. சுழலும் காமராவும் விக்ரமின் முகபாவங்களும் கவிதை.
கடைசிக் காட்சியில் விக்ரம்-ஐஸ்வர்யா உரையாடல்களும் இடையிடையே flashbackஆக வரும் தொங்குபாலக் காட்சிகளும்..
கலிங்கத்துப் பரணியை மிகப் பொருத்தமாக இரு இடங்களில் கையாள்வது class.
ஐஸ்வர்யாவின் ஆடைகளாலேயே கணவரையும் காதலரையும் காதல் பிரிவிலும் தவிப்பிலும் உணர்த்துவதும் கவிதையே.
அருமையான காட்டு சிறுக்கி பாடலை படத்தில் ஏனோ வைக்கவில்லை. அதற்குப் பதில் ஒரு அடர் குரலில் விருத்தமாக மட்டும் ஐஸ்வர்யா-விக்ரம் இடையிலான ஊடல் சண்டையாகக் காட்டுகிறார்.ராமர் மனைவி ராவணனோடு டூயட்டா என்று யாரும் கேட்டு விடக் கூடாது என்பதற்கா?
படம் முழுவதும் இருவருமே தொட்டுக் கொள்ளாமலே நடிப்பதும் ஒரு புதுமையே.
கடவுள் சிலையருகே விக்ரம் கொஞ்சம் தாபம்,கொஞ்சம் வேதனை,கொஞ்சம் கெஞ்சலோடு ஐஸ்வர்யாவிடம் கேட்கும் கேள்விகளும்,பின்னர் செய்யும் காதல் பிரகடனமும் மனசில் நிற்கின்றன..இங்கேயே பதிவிட்டால் உங்களுக்கு அந்த சிலிர்ப்புக் கிடைக்காது..பார்த்து உணருங்கள்..உருகுங்கள்.
ஆனால் படப்பிடிப்பு நடந்த இடங்களின் தேர்வு மிக அருமை.சாதாரணர் நாம் எல்லாம் நினைத்தும் பார்க்க முடியா இடத் தேர்வுகள்.இந்த இடங்களின் குளுமையை அனுபவிக்கவும் காமராக் கோலங்களை ரசிக்கவும் மட்டும் மீண்டும் ஒருமுறை ராவணன் பார்க்கலாம் என்று இருக்கிறேன்.
இடுக்கை :அ.ராமநாதன்
6/18/2010
செம்மொழி மாநாடு அழைப்பிதழ்
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதாவது எங்கும்
காணோம் " - பாரதி பாடிய தமிழுக்கு
" தமிழ் எங்கள் இளமைக்குப் பால் " என்று பாவேந்தர் பாடிய
தமிழுக்கு -
வலிவும் பொலிவும் சேர்த்து - வையத்தோர் வழங்கும்
வாழ்த்துக்களைக் குவித்திட -குமணனை ஒத்த
வள்ளல்கள் வாழ்ந்த கொங்கு மண்டலத்தில்
விழா எடுக்கிறோம்
ஆம் தமிழுக்கு திருவிழா
ஆம்; தமிழுக்கு விழா! தமிழ் இனம் அழியாமல் இருக்க விழா!.
அந்த விழாதான் தமிழா! " உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு! "
அயல் நாட்டு அறிஞர் பெருமக்கள்,மொழி வல்லுநர்கள்
அனைவருமே கொங்கு மண்டலம் நோக்கி ....................
நாகரிகத்தை, தம் கலையை, கலாச்சாரத்தை, பண்பாட்டை,
பழக்கவழக்கங்களை, இனிய தமிழ்ச் சொற்களை,
இலக்கியநயமிக்க கவிதையைப் பருகிடவும்,அவற்றின்
இனிமை கண்டு உருகிடவும், தமிழ்ச் சான்றோர்
வருவது மட்டுமல்ல;அவர்களில் தமிழ்ப் புலமை மிக்கார்,
மொழிப்புலமை மிக்கார் எடுத்துரைக்கும் வாதங்களைக் கேட்டிடவும்,
தாயின் மார்பில் குடித்த தமிழ்ப் பால் அளித்த வலிமை கொண்டு,
வெற்றி பல கண்ட, எங்கள் தமிழ் வென்ற வரலாறு எழுதுவதற்கு
இங்கு வந்த தமிழரெல்லாம்; நெஞ்சம் நிமிர்த்தி நிற்கின்றார்
என்பதனை அனைத்து நாடும் அறிவதற்கு- என் தமிழன்னைக்கு
வலிவு சேர்த்து- உலக மொழிகளிலே அன்றும் இன்றும்- இனி என்றும்-
இதுவே முதல் மொழி எனும் புகழ் கொடி தூக்கிப் பிடிக்க வாரீர்! வாரீர்!
என்று தமிழகத்துச் சிங்களை நாங்கள் அழைக்கின்றோம், கோவை மாநகருக்கு!
காட்டில் வேட்டையாடும் சிங்கமன்றோ நீ?. அத்தகைய களத்திற்கு நான்
உன்னை அழைக்கவில்லை; புலவர் பெருமக்களும்- அறிஞர் பெருமக்களும்-
கவிஞர் பெருமக்களும்- அமர்ந்து இருக்கின்ற அழகுமிகு, அறிவு
நிறை அரங்குகளுக்கு நண்பா! உன்னை நாங்கள் அழைக்கின்றோம்!.
ஓர் நண்பனுக்கு மற்றோர் நண்பன் எழுதும் மடல்-நானே நேரில்
வர முடியாமல் இந்த மடலை -அனுப்பி வைக்கின்றேன்!. மடலிலே
உள்ளத்தைப் பறி கொடுத்து விடாமல்- பயணம் புறப்படு, பாசமிகு தோழா!.
உன் ஊரில் திருவிழா என்றால் உனக்கும் ,எனக்கும்
மட்டும் தான் மகிழ்ச்சி........
நம் தமிழுக்கு திருவிழா என்றால் "உலகத் தமிழன்"
அனைவருக்கும் மகிழ்ச்சி.....
இடுக்கை :அ.ராமநாதன்
6/15/2010
எனது பார்வையில் தமிழ்த்தாய் வாழ்த்து ... .
என்ன எங்கேயோ கேட்ட மாதிரி இருக்க ? நல்ல நினைவுபடுத்தி பாருங்க, நாம படிக்கும் போது எல்லோரும் பாடும் போது (இறைவழிபாடு) பாடும் பெயரில் வாயை அசைக்கும் வாழ்த்து பாடல்......................
தமிழ்த்தாய் வாழ்த்து
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே!
உன் சீரிளமை திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
- மனோண்மணீயம் பெ.சுந்தரனார்
நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு
அழகு மிளிரும்சிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்தியக் கண்டத்தில்
தென்னாடும்,
அதில்சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும்
பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும்
அதிலிட்ட மணம்வீசும்திலகமாகவும் இருக்கின்றன.
அந்த திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல ...
அனைத்துலகமும் இன்பம்பெறும்வகையில்
எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருந்த..இருக்கின்ற
பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே!
இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து
எங்கள் செயல்களை மறந்து உன்னை
வணங்குவோமே!
வணங்குவோமே!
வணங்குவோமே!
தமிழ்த்தாய் வாழ்த்து
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே!
உன் சீரிளமை திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
- மனோண்மணீயம் பெ.சுந்தரனார்
நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு
தென்னாடும்,
அதில்சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும்
பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும்
அதிலிட்ட மணம்வீசும்திலகமாகவும் இருக்கின்றன.
அந்த திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல ...
அனைத்துலகமும் இன்பம்பெறும்வகையில்
எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருந்த..இருக்கின்ற
பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே!
இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து
எங்கள் செயல்களை மறந்து உன்னை
வணங்குவோமே!
வணங்குவோமே!
வணங்குவோமே!
இடுக்கை : அ.ராமநாதன் படங்கள் : வசந்த்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










