தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

6/15/2010

எனது பார்வையில் தமிழ்த்தாய் வாழ்த்து ... .

என்ன எங்கேயோ கேட்ட மாதிரி இருக்க ?  நல்ல நினைவுபடுத்தி பாருங்க, நாம படிக்கும் போது எல்லோரும் பாடும் போது (இறைவழிபாடு) பாடும் பெயரில் வாயை அசைக்கும் வாழ்த்து பாடல்......................

தமிழ்த்தாய் வாழ்த்து

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே!
உன் சீரிளமை திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! 
                             
                                           - மனோண்மணீயம் பெ.சுந்தரனார்

நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு

அழகு மிளிரும்சிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்தியக் கண்டத்தில்


தென்னாடும்,
 
அதில்சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும்


பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும்
அதிலிட்ட மணம்வீசும்திலகமாகவும் இருக்கின்றன.


அந்த திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல ...


அனைத்துலகமும் இன்பம்பெறும்வகையில்
எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருந்த..இருக்கின்ற
பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே!
இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து
எங்கள் செயல்களை மறந்து உன்னை

                                                         
                                                                 வணங்குவோமே!

                                                               வணங்குவோமே!


                                                                வணங்குவோமே!

இடுக்கை : அ.ராமநாதன்                                             படங்கள் : வசந்த்

கருத்துகள் இல்லை: