தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

6/18/2010

செம்மொழி மாநாடு அழைப்பிதழ்

        "யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதாவது எங்கும்
காணோம் " - பாரதி பாடிய தமிழுக்கு

       " தமிழ் எங்கள் இளமைக்குப் பால் " என்று பாவேந்தர் பாடிய
தமிழுக்கு -

     


    
      வலிவும் பொலிவும் சேர்த்து - வையத்தோர் வழங்கும்
      வாழ்த்துக்களைக் குவித்திட -குமணனை ஒத்த
      வள்ளல்கள் வாழ்ந்த கொங்கு மண்டலத்தில்
      விழா எடுக்கிறோம்

ஆம் தமிழுக்கு திருவிழா

ஆம்; தமிழுக்கு விழா! தமிழ் இனம் அழியாமல் இருக்க விழா!.

அந்த விழாதான் தமிழா! " உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு! "

அயல் நாட்டு அறிஞர் பெருமக்கள்,மொழி வல்லுநர்கள்

அனைவருமே  கொங்கு மண்டலம் நோக்கி ....................

           நாகரிகத்தை, தம் கலையை, கலாச்சாரத்தை, பண்பாட்டை,

பழக்கவழக்கங்களை, இனிய தமிழ்ச் சொற்களை,

இலக்கியநயமிக்க கவிதையைப் பருகிடவும்,அவற்றின்

இனிமை கண்டு உருகிடவும், தமிழ்ச் சான்றோர்

வருவது மட்டுமல்ல;அவர்களில் தமிழ்ப் புலமை மிக்கார்,

மொழிப்புலமை மிக்கார் எடுத்துரைக்கும் வாதங்களைக் கேட்டிடவும்,

தாயின் மார்பில் குடித்த தமிழ்ப் பால் அளித்த வலிமை கொண்டு,

வெற்றி பல கண்ட, எங்கள் தமிழ் வென்ற வரலாறு எழுதுவதற்கு

இங்கு வந்த தமிழரெல்லாம்; நெஞ்சம் நிமிர்த்தி நிற்கின்றார்

என்பதனை அனைத்து நாடும் அறிவதற்கு- என் தமிழன்னைக்கு

வலிவு சேர்த்து- உலக மொழிகளிலே அன்றும் இன்றும்- இனி என்றும்-

இதுவே முதல் மொழி எனும் புகழ் கொடி தூக்கிப் பிடிக்க வாரீர்! வாரீர்!

என்று தமிழகத்துச் சிங்களை நாங்கள் அழைக்கின்றோம், கோவை மாநகருக்கு!

           காட்டில் வேட்டையாடும் சிங்கமன்றோ நீ?. அத்தகைய களத்திற்கு நான்

உன்னை அழைக்கவில்லை; புலவர் பெருமக்களும்- அறிஞர் பெருமக்களும்-

கவிஞர் பெருமக்களும்- அமர்ந்து இருக்கின்ற அழகுமிகு, அறிவு

நிறை அரங்குகளுக்கு நண்பா! உன்னை நாங்கள் அழைக்கின்றோம்!.

ஓர் நண்பனுக்கு மற்றோர் நண்பன் எழுதும் மடல்-நானே நேரில்

வர முடியாமல் இந்த மடலை -அனுப்பி வைக்கின்றேன்!. மடலிலே

உள்ளத்தைப் பறி கொடுத்து விடாமல்- பயணம் புறப்படு, பாசமிகு தோழா!.

          உன் ஊரில் திருவிழா என்றால் உனக்கும் ,எனக்கும்
மட்டும் தான் மகிழ்ச்சி........

          நம் தமிழுக்கு திருவிழா என்றால் "உலகத் தமிழன்"
அனைவருக்கும் மகிழ்ச்சி.....


இடுக்கை :அ.ராமநாதன்          

கருத்துகள் இல்லை: