தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

6/29/2010

(என் பாரத தாய்க்கு) ஒரு துரோகம்....


பல்லாயிரம் ஆண்டுகளாய் நன்றாகதான் இருந்தாய்
ஏனிப்படி ஒரு தவறு செய்தாய் இயற்கைதாயே

ஆறாவது அறிவு படைத்தாய் உன் குழந்தைக்கு
அது படுத்தும் பாடு இப்போது நீ அறிவாய்.


கடைசி குழந்தையாய் மனிதன் நீ படைத்தாய்
சிறப்பாய் இருக்க பகுத்தறிவும் கொடுத்து வைத்தாய்

இன்று உனை அழிக்க உன் குழந்தை விளைய
பெற்றெடுத்த தாயே இப்போ நீ என் செய்வாய்.


மனிதன் காடழித்தான் கைதொழில் புரடசி என்றான்
கரியமில வாயு கொண்டு உன் காற்றுமண்டலம் நிரப்பினான்

தொழில்நுட்ப புரட்சி என்றான் விணவெளிக்கு சென்று வந்தான்
அந்த அறிவு கொண்டே அணுகுண்டும் படைத்து வைத்தான்.


அதிகமாக ஒரு ஆறறிவு நீ கொடுத்தாய்
முன்பிருந்த ஓர் அறிவை மனிதா நீ தொலைத்தாய்

காட்டுமிராண்டி என்று சொல்லி நீ பழிக்கிறாய்
நாட்டுமிராண்டி தனமாய் நீ வாழ்ந்து தொலைக்கிறாய்.


வயிற்று பசிக்கே விலங்குகள் உயிர் கொல்லும்
ஆசைப்பசி கொண்டு உன்னையே நீ கொல்லு

பிணந்தின்னும் விலங்குகள் எத்தனையோ மேல் மனிதா
மனம் கொன்று தின்று வாழும் மடையா உன்னை விட.

உன் இருப்போ சமநிலையில் இயறகைத்தாயே
அவனிருப்போ உன் நிலையில் அறிவாய் நீயே

பகுத்தறிவு கொண்டு உனை அழிக்கும் மனிதனையே
நீ அழித்து உனை நிலை நிறுத்த முயல்கிறாயே.

இதை அறிந்தும் நாங்கள் இன்னும் திருந்த மாட்டோம்
தாயே உனைப்பற்றி நாங்கள் என்றும் வருந்த மாட்டோம்

செவ்வாயில் வீடு கட்ட திட்டமிடுகிறோம்
இங்கிருக்க எதுவுமின்றி தொலையப்போகிறோம்.{இந்த நடை ஒரு கவிதையிருந்து திருடினேன் நன்றாக இருக்கிறது உங்களுக்கு பிடித்திருந்தால் சந்தோசம் அந்த கவிதையை அடுத்த பதிவில் தருகிறேன்.)

குறிப்பு : இந்த கவிதையை சென்ற வாரம் தினமலர் நாளிதலுக்கு அனுப்பியுள்ளேன்  அட! சத்தியமாக நம்புங்க .....

உருவாக்கம் & இடுக்கை :அ.ராமநாதன்


கருத்துகள் இல்லை: