தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

6/29/2010                 நீ வேண்டும்...!


இரவு நேரத்து பவுர்ணமி போல்
இதய தேசத்தில் நுழைந்தவளே...


ஒற்றை அன்றில் பறவை என்னை
உறவு கொடுத்து முழுமைபடுத்தியவளே...


வேஷங்கள் நிறைந்த இவ்வுலகில் என‌க்கு
வெளிச்ச புள்ளியாய் வ‌ந்த‌வ‌ளே.


குழந்தையாய் மாறும் கடைசி காலங்களிலும்
கூடி நீ என்னோடு தவழ வேண்டும்

உன் வாய் ஒழுகும் சிறு உண‌வெடுத்து
உன்னோடு உண்டு நான் மகிழவேண்டும்...


இருப்பதெல்லாம் ஒன்றும் வேண்டாம்
இல்லையென்ற உன் அன்பு வேண்டும்.

என் வாழ்க்கை முடியும் வரை
என்னில் பாதியாய் இல்லை
எனக்குள் முழுமையாகவே நீ வேண்டும்...!                   மனித மனம்.....

மலருக்கு கோபம் வண்டுகள்
மலர்விட்டு மலர்தாவுகின்றனயென்று

வானத்துக்கு கோபம் மேகங்கள்
இடம் விட்டு இடம் மாறுகின்றனயென்று

ஆரறிவு படைத்த மனிதனே
மனம்விட்டு மனம் மாறுகையில்

பாவம்
மலர்களும் மேகம்களும்
என்னதான் செய்ய முடியும்...!

கருத்துகள் இல்லை: