தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

11/18/2011

நான் பிடித்த முயலுக்கு மூணு கால் ?




               ஆம்,இப்படி இருப்பவர் வேறு யாருமல்ல இன்றைய முதல்வர் அவரை எதிர்க்க எதிர்க்கட்சியும் இல்லை , ஆலோசனை சொல்ல நல்ல அமைச்சர்களும் தமிழகத்தில் இல்லை அவரை எதிர்க்க பதிவாளன் என்ற முறையில் கண்டன பதிவாக இதை பதிவு செய்துள்ளேன்


பேருந்து கட்டணங்களையும், பால் விலையையும் கடுமையாக உயர்த்தி ஓர் இரவில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது தமிழக அரசு. எவ்வளவு நியாயங்களைப் பேசினாலும் சராசரி மக்களின் பொருளாதார வாழ்வில் ஏற்றப்பட்டுள்ள இந்தச் சுமை ஏற்கத்தக்கதல்ல. மாறாக, நம்பிக்கையுடன் வாக்களித்த மக்களுக்கு துன்ப அதிர்ச்சி அளித்திருப்பது அநியாயமானதாகும்.


சென்னை உள்ளிட்ட நகரங்களில் பேருந்து போக்குவரத்துக் கட்டணம் 50% உயர்த்தப்பட்டுள்ளது. புறநகர் பேருந்துகளில் இக்கட்டணம் 60% உயர்த்தப்பட்டுள்ளது. தொலைத்தூர இடங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் கட்டணம் 60% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு எந்த அளவிற்கு அதிர்ச்சியானது என்பதை அறிய வேண்டுமெனில், இதுவரை கோவையிலுருந்து திருப்பூர் செல்ல வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.13இல் இருந்து ரூ.24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவை நகர மக்களை மட்டுமின்றி, தமிழ்நாட்டின் மற்ற நகரங்களில் இருந்து 100, 200 கி.மீ. தூர பயணத்தை பணி நிமித்தம் அடிக்கடி மேற்கொள்ளும் பயணிகளுக்கு பெரும் சுமையாகும்.



பால் விலையை 25% உயர்த்தியுள்ளது தமிழக அரசு. பால் குழந்தைகளுக்கான முக்கிய உணவு, ஏழை, எளிய குடும்பங்களின் அத்யாவசிய உணவு. அதன் விலையை இந்த அளவிற்கு உயர்த்தியிருப்பது, ஏற்கனவே உணவுப் பொருட்களின் விலை உயர்வால் கடும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் சராசரி மக்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. “உள்ளாட்சித் தேர்தல் முடிந்திருக்கலாம், வரட்டும் நாடாளுமன்றத் தேர்தல்” என்று மக்கள் கருவத் தொடங்கியுள்ளனர்.


இப்படிப்பட்ட விலையேற்றம் தவிர்க்க முடியாதது என்பதற்கு தமிழக முதல்வர் கூறிய நீண்ட விளக்கத்தில், முந்தைய அரசின் ஆட்சிமையையும், அதனால் ஏற்பட்ட கடன் சுமையையும், அதில் இருந்து பொதுத் துறைகளை மீட்க போதுமான கடனை மத்திய அரசு தர மறுத்திருப்பதையும் சுட்டிக்காட்டி, “நான் வேறு எங்கு சென்று உதவி கேட்க முடியும்? தவிர்க்க முடியாத இந்த உயர்வுகளை ஏற்றுக்கொண்டு அரசுக்கு முழு ஒத்துழைப்புத் தர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


தமிழக முதல்வர் கூறிய காரணங்கள் மறுக்க முடியாதவை என்பது உண்மையே. அதே வேளையில் பேருந்து போக்குவரத்துத் துறையையும், ஆவின் பால் நிறுவனத்தையும், அதிகக் கடனில் மிதந்துக்கொண்டிருக்கும் மின் கழகத்தையும் காக்க (மின் கட்டணம் யூனிட்டிற்கு ரூ.1.50 உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது) இப்படி ஒரே அடியாக மக்களின் தலையில் தாங்க முடியாத அளவிற்கு சுமையை ஏற்ற வேண்டுமா? இதை குறைந்த அளவிற்குச் செய்ய முடியாதா? என்ற வினாக்களுக்கு பதில் தேடுவது அவசியமாகிறது.


இந்த த்ருணத்தில் கவிஞர் இரா.இரவி எழுதிய கவிதை என்னை போன்றவர்களுக்கு பொருந்துமோ...


விலைவாசி ஏற்றம்


ஊதியத்தில் இல்லை மாற்றம்


வேதனையில் தனியார் பணியாளர்கள்ட்


பாதிக்கப்பட்ட ஆயிரம் பேரிலும்


தனியாகத் தெரிந்தது என் விழிகள்


கட்டண உயர்வின் வலியால்


மேற்கண்ட பதிவில் தங்களின் கண்டனத்தை தெரிவிக்க நினைத்தால் நம்து வலைப்பூவில் கண்டனத்திற்கான வாக்குபதிவு துவங்கியுள்ளேன் அதில் வாக்குகளையும் ,க்ருத்துக்களையும் பதிவு செய்ய வேண்டுகிறேன்...

8 கருத்துகள்:

மறத்தமிழன் சொன்னது…

“இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்”னு கத்தத் தோணுது..........

பெயரில்லா சொன்னது…

இந்த மாதிரி விலையை ஏற்றினால் அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் சந்தேகமே இல்லை

raju venga சொன்னது…

இனிமே டிரைவர் கண்டக்டர் களுக்கு ஒசி சாப்பாடு போடுர ஒட்டல்ல பஸ்சு நிக்குமா? நிக்காதா?...

radha சொன்னது…

உன்னோட கருத்து சிதறல்களை (பிதற்றல்களை) நாங்க தாங்கறோம். இதை தாங்க மாட்டோமா?...

mamabalu சொன்னது…

ஆமா, யார் வந்தாலும் நம்ம கஷ்டம் சத்தியமாக விடிய வாய்ப்பே இல்லை. வேறு என்னதான் வழி? இந்தமாதிரி கருத்து எழுதி மனச ஆத்திக்கவேண்டியதுதான். புண்பட்ட மனச புகைவிட்டு ஆத்துற மாதிரி!...

கும்புடுறேன் சாமி சொன்னது…

பால் விலை சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்................!!!! பஸ் கட்டணம் விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.!!!!!!! மின் கட்டணம் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........!!!!!!!!!! தமிழன் குடும்பம் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..!!!!! ஒரே சமயத்துல 3 அட்டாக்..!! நடுத்தரக் குடும்பங்களுக்கு நடு மண்டையில் ஓங்கி அடிச்ச புரட்சித் தலைவி..!!

கந்தசாமி - சொன்னது…

கடந்த ஆறு மாதங்களாக, மக்கள் கசப்புறும் வகையில் எவ்வித முடிவுகளையும் எடுக்காமல், பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் ஜெயலலிதா.......... அண்ணே நல்லா இருக்குன்னே .... (1 ) புதிய சட்ட சபை மாற்றம் (2 ) சம சீர் கல்வி - உயர் நீதிமன்றம் கொட்டு...... (3 ) அண்ணா நூலகம் மாற்றம் (4 ) பரமக்குடி காவு (5 ) 13000 பேர் வேலை நீக்கம் (6 ) மீனவர் பிரச்சனையில் - கடிதம் மட்டுமே வரைதல் (7 ) 3 பேர் தூக்கு தண்டனையில் - இரட்டை நிலைப்பாடு ..... இத்தனை மாதங்களாக, மக்கள் கசப்புறும் வகையில் எவ்வித முடிவுகளையும் எடுக்காமல்....... மக்களுக்கு கசப்பு மட்டுமே பிடிக்கும் என்று இப்போ நல்ல பெரிய கசப்பா கிடைச்சிருக்கு

santhosh gopal சொன்னது…

விவசாய துறையில் புரட்சி செய்யாமல் விலை உயர்வில் புரட்சி செய்யும் புரட்சி தலைவி அவர்களே மக்கள் புரட்சி வெடிக்கும் காலம் வெகு தொலைவில்........................... இல்லை