தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/19/2010

இப்படி ஒருவர் இருந்தாரா..!





வருஷத்தில் ஒரே ஒரு தினம்தான் நாம் காந்தியடிகளை நினைவு கூர்கிறோம். அவர் சமா திக்கு மலர் வைக்கிறோம். அதே வைஷ்ணவ ஜனதோ, அதே கதர்க்குல்லாய், அதே ராட்டை, அதே நூல். இந்தக் காலத்து இளைஞர்கள் காந்தியைப் பார்ப் பது ரூபாய் நோட்டுக்களில் மட்டுமே! அவர் வாழ்ந்த வாழ்வையும் செய்த தியாகங்களையும் இப் போது சொன்னால், ஐன்ஸ்டைன் கூறியதுபோல, இப்படி ஒருவர் இருந்தாரா என்பதை நம்ப மறுப்பார்கள்.

இப்போது காந்தியை நம் எல்லா உபாதைகளுக்கும் குற்றம் சொல்வது ஒரு கெட்ட பழக்கமாகிவிட்டது.

42-ஏ பஸ் குறித்த நேரத்தில் வராவிட்டாலும் கூட காந்திமீது பழிபோடுகிறோம். அவருடைய கிராமப்புறம் சார்ந்த பொருளாதாரம் நடைமுறைக்கு ஒவ்வாது என்று சொல்லி, கிராமங்களில் அநாவசியமான நுகர்பொருள் ஆசைகளை வளர்த்தி ருக்கிறோம். அவர்களுக்கெல்லாம் வேலை வாய்ப்புத் தராமல் நகரத்துக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.

அடுத்த வேளை சோற்றுக்கு ஏற்பாடு செய்யாமல், ஷாம்பூ எளிதாகக் கிடைக்கும்படி செய்திருக்கிறோம். இன்றும், சரியாகப் படித்துப் பார்த்தால் காந்தியின் கிராமப்புறம் சார்ந்த பொருளாதாரம்தான் நம் ஏழ்மையைப் போக்குவதற்கு ஒரே மார்க்கம்!

அடுத்த முறை நூறு ரூபாய் நோட்டிலோ, ஐந்நூறு ரூபாய் நோட்டிலோ காந்தியின் புன்னகை முகத்தைப் பார்க்கும்போது ஒரே ஒரு வைராக்கியம் எடுத்துக் கொள்ளுங்கள். அதைச் செலவழித்து உங்கள் சொந்தக் கிராமத்துக்கு ஒருமுறை சென்று வாருங்கள். அங்கு ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்துவிட்டு வாருங்கள்.

‘இன்று நபிகள் நாயகம் இந்தியாவுக்கு வந்தால், என்னைத்தான் நிஜமான முஸ்லிம் என்று ஏற்றுக்கொள்வார். உண்மையான கிறிஸ்தவர்கள் மேற்கே இல்லை. இருந்திருந்தால் உலக யுத்தங்கள் வந்திருக்காது’ என்று காந்தி ஒரு கடிதத்தில் எழுதினார்.

இத்தகைய ஆழமான கருத்துக்களையாவது நினைவுகூரலாம்.”

-காந்தி தரிசனம் கட்டுரையிலிருந்து…

கருத்துகள் இல்லை: