தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/19/2010

புயலானவள்...

நான் புயலை ரசிப்பவன்..
ஊடலினூடே வரும்
என்னவளின்
சுவாசம்தானே எனக்குப் புயல் !?
ரசிக்கவே அவளை
ஊடலாய் சீண்டுபவன் நான்..

நான் தென்றலையும் ரசிப்பவன்..
என்னவளின்
சந்தோஷ சுவாசம்தான் அது !?
அதை ரசிக்க
ஊடலில்
தோற்பவனும் நானே...

என்னவளை
தென்றலாய்
நேசிக்கப் பலருண்டு
பாசத்திலும் நட்பிலும்..
புயலாயினும்
அவளை நேசிப்பது
நான் மட்டுமே
காதலில்..

தென்றலானவள் புயலாக
காரணமாயிரம்..
அப்புயலை
தென்றலாய் வீழ்த்தும்
காதலாயிரம்
புரியும் உரிமை
எனக்கு மட்டுமே...

என்னால்
காதலிக்கப்பட்டு
தென்றலாய் வீழவே
புயலாவாள் என்னவள்..

கருத்துகள் இல்லை: